Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு.

Featured Replies

யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பு.

srike
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா ஆகியோர் தொடர்பில் அவதூறான செய்திகளை இணையத்தளமொன்று செய்திகள் வெளியிட்டு வருவதனை கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் வியாழக்கிழமை  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

குறித்த இணையத்தளத்தில் கிளிநொச்சி நீதிபதி தொடர்பாகவும் , கிளிநொச்சி நீதிபதியையும் ,  யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரை தொடர்பு படுத்தியும், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி தொடர்பாகவும் அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தள செய்தி தொடர்பில் ,  யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று புதன்கிழமை  கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர். அதன் முடிவில் நாளை வியாழக்கிழமை  யாழ் மாவட்டத்துக்குட்பட்ட சகல நீதிமன்றங்களிலும் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/3646

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

இணையத்தளமொன்று செய்திகள்

எந்த இனையத்தளமென்று சொன்னா நாங்களும் வாசித்து விமர்சிக்கலாமல்லோtw_tounge_wink:

  • தொடங்கியவர்
சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு: நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு

 

article_1476946093-IMG_3399-%281%29%281%

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.றொசேரியன் லெம்பேட்

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றச் சட்டத்தரணிகள் இன்று  வியாழக்கிழமை  (20) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்றங்கள், நீதவான்கள், சட்டத்தரணிகள் தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விசமத்தனமான செய்திகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி, வடமாகாண சட்டத்தரணிகள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,  நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்களில் இவ்வாறு அவதூறான செய்திகள் வெளியாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காது, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்,  மன்னார் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைகளுக்கு வந்த மக்கள் திரும்பிச் சென்றதோடு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகள், மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் நீதிமன்றத்தில் இன்று இடம்பெறவிருந்த சகல வழக்கு விசாரணைகளும் மற்றுமொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

http://www.tamilmirror.lk/184364/சட-டத-தரண-கள-பண-ப-பக-ஷ-கர-ப-ப-ந-த-மன-ற-நடவட-க-க-கள-ப-த-ப-ப-

இளஞ்செழியனுக்கு அவதூறு ஏற்படுத்திய இணையதளங்கள்! - யாழில் சட்டதரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு

யாழ், நீதி மன்றத்தின் முன்பாக நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட இணையதளங்களை கண்டித்து சட்டதரணிகள்பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த பணிப்பகிஸ்கரிப்பு சற்று முன்னர் யாழ், மாவட்ட சட்டதரணிகள் குழுவின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மை காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது நீதிபதிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் கூறியுள்ளனர்.

மேலும், இன்றைய தினம் யாழ் நீதி மன்றிற்கு வருகை தந்த பொது மக்கள் மீண்டும் வீடு திரும்பி வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மன்னாரிலும் சட்டத்தரணிகளால் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்திற்கு இன்று வழக்கு விசாரனைகளுக்கு வந்த மக்கள் திரும்பிச் சென்றதோடு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்காக அழைத்து வரப்பட்ட கைதிகள் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/121633?ref=youmaylike1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.