Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன?

Featured Replies

அர­சியல் தீர்வு விட­யத்தில் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு என்ன?

hak-6381adbd6b200231d10273f444734443e7246c73.jpg

 

முஸ்­லிம்­களின் எதிர்­காலம் குறித்­து­ மு­தலில் அச்­ச­மூ­கத்தில் உள்ள சிவில் அமைப்­புக்கள், அர­சியல் கட்­சிகள், புத்­தி­ஜீ­விகள் சிந்­திக்க வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தைப் பற்றி சிந்­திக்­காது அமைப்பு, கட்சி, தொழில் உள்­ளிட்ட விட­யங்­க­ளுக்குள் தமது நட­வ­டிக்­கை­களை சுருக்கிக் கொண்டு செயற்­ப­டு­வது முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கா­லத்தை சூனி­ய­மாக்கி விடுமோ என்று அச்சங்கொள்ள வேண்­டி­யுள்­ளது.

தற்­போது முஸ்லிம் சிவில் அமைப்­புக்கள் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்கு தம்மால் முடிந்த காரி­யத்தை செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால், அர­சியல் கட்­சி­களும் அவற்றின் தலை­வர்­களும், புத்­தி­ஜீ­வி­களும் இன்னும் தம்மை திருத்திக் கொள்­ள­வில்லை.

கடந்த இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் சாய்ந்­த­ம­ருது பரடைஸ் மண்­ட­பத்தில் கிழக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளையும், அபி­ப்பிரா­யங்­க­ளையும் கேட்­ட­றிந்து கொள்ளும் கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை தேசிய ஷுறா சபை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. இதில் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர்கள், வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­டார்கள்.

இவர்­களில் கிழக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஒரு சிலரே கருத்­துக்­களை முன் வைத்­தார்கள். சிலர் தமது பிர­தே­சத்தின் பிரச்­சி­னை­களைக் கூறி­னார்கள். 99வீத­மான புத்­தி­ஜீ­விகள் வெறும் பார்­வை­யா­ளர்­க­ளா­கவே இருந்­தார்கள். இவ்­வாறு முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் செயற்­பட்டால் சமூ­கத்தின் எதிர்­காலம் நல­மாக அமை­யு­மென்று எதிர்­பார்க்க முடி­யாது.

இன்று முஸ்லிம் சமூ­கத்­தினர் அர­சியல், பொரு­ளா­தார, சமூக விழு­மி­யங்­களில் நலி­வ­டைந்து கொண்­டி­ருக்­கின்­றன. சமூகம் புத்­தி­ஜீ­வி­களின் வழி காட்­டல்­க­ளுக்­காக ஏங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால், முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களில் மிகக் கூடு­த­லா­ன­வர்கள் சமூ­கத்தின் மீது அக்­கறை இல்­லா­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர். அதே வேளை, சமூகம் தங்­களை உயர்­வான இடத்தில் வைத்­தி­ருக்க வேண்­டு­மென்றும் எதிர்­பார்க்­கின்­றார்கள்.

முஸ்லிம் கட்­சித்­த­லை­வர்­களோ அபி­வி­ருத்­திகள் மூல­மாக சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். சமூக உறுப்­பி­னர்­களும் தமது கட்சி, தலைவர் என்ற வரை­ய­றை­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதனால், சமூ­கத்­திற்­காக குரல் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­ற­வர்­களை கட்­சிக்கும், தலை­வ­ருக்கும் எதி­ரா­ன­வர்­க­ளாக கணிப்­பீடு செய்­துள்­ளார்கள். முஸ்லிம் அர­சியல் அரங்கில் போலி­க­ளுக்கே அதிக செல்­வாக்கு இருந்து கொண்­டி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.

இலங்­கைக்கு 10 நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்த சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யாவை முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் சந்­தித்து முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் பற்றி எடுத்துக் கூறி­யுள்­ளார்கள்.

இச்­சந்­திப்பின் போது ரவூப் ஹக்கீம் இலங்­கையில் வாழ்­கின்ற சிறு­பான்­மை­யின மக்­களின் பிரச்­சி­னை­களை ஆராய்ந்து தீர்வு காணும் ஆணைக்குழு ஒன்­றினை அமைப்­ப­தற்கு இலங்கை அர­சாங்­கத்­திடம் பரிந்­து­ரைக்­கு­மாறு கேட்­டுள்ளார். றிசாத் பதி­யுதீன் நாட்டில் நடை­பெ­ற­வுள்ள அர­சியல் நகர்­வு­களில் முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­படக் கூடா­தென்று கேட்­டுள்ளார்.

இவற்­றோடு முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை அர­சாங்­கமும், சர்­வ­தே­சமும் கணக்கில் கொள்­வ­தில்லை என்றும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளினால் சுட்டிக் காட்­டப்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்தில் பங்­காளிக் கட்­சி­க­ளாக முஸ்லிம் காங்­கி­ரஸும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் இருக்­கின்­றன.

இக்­கட்­சிகள் அர­சாங்­கத்­திடம் சமூகம் சார்ந்த அர­சியல் தீர்­வுகள் எத­னையும் கேட்­ப­தில்லை. முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் பற்றி அர­சாங்­கமும், சர்­வ­தே­சமும் கருத்திற்கொள்­ளா­தி­ருப்­ப­தற்கு முஸ்லிம் அர­சியல் கட்­சி­கள்தான் கார­ண­மாகும். அர­சியல் தீர்வு விட­யத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் பொடு­போக்­கா­கவே இருந்து வரு­கின்­றது. இக்­கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தமது கட்­சியின் சமூகம் சார்ந்த நட­வ­டிக்­கைகள் திருப்­தி­யாக இருக்­கின்­றதா என்று தங்­களின் மனச்­சாட்­சி­யிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். இதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்­களும் கேட்டுப் பார்க்க வேண்டும்.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை முஸ்லிம் கட்­சிகள் சர்­வ­தேச மயப்­ப­டுத்­த­வில்லை. காலத்­திற்கு காலம் அர­சாங்­கத்தை அமைக்கும் தரப்­பி­ன­ருடன் இணைந்து அமைச்சர் பத­வி­களை பெற்றுக் கொண்­டமையைத் தவிர, சமூகம் சார்ந்த அர­சி­யலை முஸ்லிம் கட்­சிகள் செய்­ய­வில்லை. பொதுத் தேர்­தலின் போதும், வர­வு -­- செ­லவு திட்­டங்­களின் போதும் அர­சாங்­கத்­திடம் பேரம் பேசு­வ­தையே முஸ்லிம் கட்­சிகள் செய்து கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு மூடி மறைத்து அர­சாங்­கத்­திடம் நற்­சான்­றி­தழ்­களைப் பெற்றுக் கொண்­ட­மையை மறந்து முஸ்லிம் சமூ­கத்தை சர்­வ­தேசம் கவ­னத்தில் கொள்­ள­வில்லை என்று ரீட்டா ஐசாக் நதே­யா­விடம் சொல்­லி­யுள்­ளார்கள்.

இலங்­கைக்கு சர்­வ­தேச பிர­தி­நி­திகள் வருகை தந்த போதெல்லாம் அவர்­களை சந்­திப்­ப­தற்கு முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் முயற்­சி­களை எடுக்­க­வில்லை. இப்­பி­ர­தி­நி­திகள் வருகை தந்த வேளையில் கொழும்­புக்கு வெளி­யேயும், வெளி­நா­டு­க­ளிலும் காலத்தை கழித்துக்கொண்­ட­வர்­கள்தான் இன்று முஸ்லிம் சமூ­கத்தின் அர­சி­யலை கைக­களில் வைத்­துள்­ளார்கள்.

இலங்­கை­யி­லுள்ள சிறு­பான்­மை­யி­னரின் பிரச்­சி­னை­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸும் அதிக பொறுப்­புக்­களை சுமந்­துள்­ளன. அந்த வகையில் முஸ்லிம் காங்­கிரஸ் தமது பொறுப்பை சரி­யாக செய்­கின்­றதா என்­பது கேள்­விக்­கு­ரி­யாகும்.

இன்­றைய நல்­லாட்சி அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நகர்­வு­களை மேற்­கொண்­டுள்­ளது. உலக முஸ்­லிம்­களின் சொத்­தாக மதிக்­கப்­படும் பைத்துல் முகத்தீஸ் யூத மதத்­திற்கும், வர­லாற்றின் அடிப்­ப­டை­யிலும் இஸ்­ரே­லுக்­கு­ரி­ய­தல்ல என்ற பிரே­ரணை ஒன்று யுனெஸ்­கோவில் கொண்டு வரப்­பட்­டது. 58 நாடு­களில் 26 நாடுகள் ஆத­ர­வா­கவும், 26 நாடுகள் நடு­நி­லை­யா­கவும் இருந்­துள்­ளன.

அமெ­ரிக்கா, பிரிட்டன், நெதர்­லாந்து, லத்­து­வே­னியா, எஸ்­டோ­னியா, ஜேர்மன் ஆகிய 06 நாடு­களும் எதி­ராக வாக்­க­ளித்­துள்­ளன.

இலங்கை இவ்­வாக்­க­ளிப்பில் நடு­நி­லையை கடைப் பிடித்­துள்­ளன. இதன் மூல­மாக முஸ்­லிம்கள் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் கொள்­கையை புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. 

நாட்­டிற்­குள்ளும், நாட்­டிற்கு வெளி­யேயும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சக்­தி­க­ளுடன் கைகோர்த்துக் கொண்­டி­ருக்கும் நல்­லாட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­காது. முஸ்லிம் சமூகம் சார்ந்த விட­யங்­களில் அர­சாங்கம் நழுவல் போக்­கையே கடைப் பிடித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. அர­சாங்­கத்தின் இந்த போக்­கிற்கு அமை­வாக முஸ்லிம் கட்­சி­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

ரீட்டா ஐசாக் நதே­யா­விடம் பல குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்­துள்ள முஸ்லிம் கட்­சிகள் அர­சியல் தீர்வில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எவ்­வா­றான தீர்­வுகள் அமைய வேண்­டு­மென்­பதைத் தெரி­விக்­க­வில்லை. அர­சியல் தீர்வு என்­பது வடக்கு, கிழக்­கிற்­கு­ரி­ய­தாகும். இங்கு வாழும் சிறு­பான்­மை­யினர் பெற்றுக் கொள்ளும் உரி­மை­களும், அதி­கா­ரங்­க­ளும்தான் ஏனைய மாகா­ணங்­களில் உள்ள சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாது­காப்பை வழங்கும். அர­சியல் தீர்வு நாட்டில் வாழும் மூவின மக்­க­ளையும் பெரும்­பாலும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக அமைய வேண்டும்.

அர­சியல் தீர்வு விட­யத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு முக்­கி­ய­தொரு இடத்­தினை வகித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்,மற்றும் தேசிய கட்­சி­களில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கிழக்கு மாகா­ணத்தை வடக்­குடன் இணைக்கக் கூடா­தென்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

 இவ் விட­யத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் இன்னும் தமது உண்­மை­யான நிலைப்­பாட்டை வெளி­யி­ட­வில்லை.

இக்­கட்சி தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு ஒரு முகமும், முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு முகமும் காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றது. வடக்கு, கிழக்கு இணைப்பை நிபந்­த­னையின் அடிப்­ப­டையில் ஏற்றுக் கொள்­வ­தாக முன்னர் தெரி­வித்த முஸ்லிம் காங்­கிரஸ் தற்­போது வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு சம்­மதம் தெரி­விக்­க­வில்லை என்று தெரி­வித்­துள்­ளது.

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு சம்­மதம் தெரி­விக்­க­வில்லை என்று முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்துக் கொண்­டாலும், கிழக்கு மாகாணம் தனி­யாக பிரிந்­தி­ருக்க வேண்­டு­மென்றும் தெரி­விக்­க­வில்லை.

 இதே வேளை, முஸ்­லிம்­க­ளுக்கு எத்­த­கைய அர­சியல் தீர்வு தரப்­பட வேண்­டு­மென்றும் ரவூப் ஹக்கீம் கேட்­க­வில்லை. வெறு­ம­னமே மொட்­டை­யாக அர­சியல் தீர்வு முஸ்­லிம்­களை பாதிப்­ப­த­மாக அமையக் கூடா­தென்று சொல்லிக் கொள்­ளு­கின்றார். அத்­தோடு, முஸ்­லிம்­க­ளுக்கு சரி­யான தீர்வு கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கை­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

முஸ்­லிம்­க­ளுக்கு சரி­யான தீர்வு கிடைக்­கு­மென்றால் அது எத்­த­கை­யது என்­பது தெரி­விக்­கப்­பட வேண்டும். நல்­லாட்சி அர­சாங்கம் முஸ்­லிம்­களின் மத­வி­ழு­மி­யங்­க­ளுக்கும், காணி பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களை பெற்றுத் தரு­மென்று முஸ்­லிம்கள் நம்­பி­னார்கள். இந்த நம்­பிக்­கையை முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும், அர­சாங்­கமும் ஊட்­டி­யது. ஆனால், மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்­திற்கும், இன்­றைய அர­சாங்­கத்­திற்கும் எந்த மாற்­றத்­தையும் முஸ்­லிம்­க­ளினால் காண முடி­ய­வில்லை.

முஸ்லிம் கட்­சி­களும் தலை­வர்­களும் மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் இருந்­தமை போன்றே இருந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். மௌன­மாக இருப்­பது ஒரு சமூ­கத்தின் விடி­வுக்கு வழியை தேடித் தராது. ஆதலால், முஸ்லிம் காங்­கிரஸ் வடக்கு, கிழக்கு விட­யத்தில் தமது நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்த வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு சம்­மதம் தெரி­விக்­க­வில்லை என்­பது சிங்­கள பௌத்த கடும் போக்­கா­ளர்­க­ளையும் சந்­தோ­சப்­ப­டுத்­தாது. தமி­ழர்­க­ளையும் சந்­தோ­சப்­ப­டுத்­தாது. முஸ்­லிம்­க­ளையும் சந்­தோ­சப்­ப­டுத்­தாது. பௌத்த கடும் போக்­கா­ளர்கள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அர­சியல் அதி­கா­ரங்கள் வழங்­கவே கூடாது என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ளார்கள். இவர்கள் மாகாண சபை முறை­மையை இல்­லாமல் செய்ய வேண்­டு­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமி­ழர்கள் வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும். இதற்கு முஸ்­லிம்கள் தடை­யாக இருக்கக் கூடா­தென்று கேட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு சம்­மதம் தெரி­விக்­க­வில்லை என்­பது தமி­ழர்­களின் அபி­லா­சை­க­ளுக்கு எதி­ரான ஒன்­றாகும். அதே வேளை, கிழக்கு பிரிய வேண்­டு­மென்று சொல்­லாது தமி­ழர்­க­ளுக்கு இன்­னு­மொரு முகத்தை ரவூப் ஹக்கீம் காட்­டு­வ­தாக உள்­ளது. உரிமை விட­யங்­களில் இரட்டை வேடம் போட முடி­யாது. அது உரி­மைக்­கான போராட்ட வழி முறை­யு­மல்ல.

கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் கடந்த கால கசப்­பு­ணர்­களின் அடிப்­ப­டையில் கிழக்கு மாகாணம் பிரிந்­தி­ருக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டையே கொண்­டுள்­ளார்கள். வடக்கும், கிழக்கும் இணை­வ­தற்கு சம்­மதம் தெரி­விக்­க­வில்லை என்று ரவூப் ஹக்கீம் கூறி­னாலும் கிழக்கு மாகாணம் பிரிந்­தி­ருக்க வேண்­டு­மென்று அவரின் சாணக்­கியம் சொல்­ல­வில்லை. கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்­டு­மென்று சொல்­லா­ம­ருப்­பதே சாணக்­கியம் என்று அவர் கரு­து­கின்றார்.

ஆகவே, அர­சியல் தீர்வு விட­யத்தில் சரி­யான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தா­த­தொரு கட்­சி­யாக முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டுமே உள்­ளது. ஏனைய கட்­சிகள் சரி, பிழை­க­ளுக்கு அப்பால் தமது நிலைப்­பாட்டை சொல்­லி­யுள்­ளன. ஆனால், 30 வருட கால இனத்­துவ அர­சி­யலில் தம்மை வளர்த்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்குரிய அரசியல் தீர்வு எவ்வாறு இருக்க வேண்டுமென்பதில் தெளிவற்றதொரு நிலையில்தான் ரீட்டா ஐசாக் நதேயாவை சந்தித்துள்ளது.

இச்சந்திப்பில் கூட சிறுபான்மையினரின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை தருவதற்கு ஆணைக் குழு ஒன்று அவசியம் என்று ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளாரே அன்றி, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகள்தான் இதுதான் என்று தெரிவிக்கவிலலை.

இலங்கையில் எத்தனையோ ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகள் எதுவும் அதன் நோக்கத்தை நிறைவேற்றவிவ்லை. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் அஸ்ரப்பின் மரணம் குறித்து விசாரணை செய்வதற்கும் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இன்னும் இந்த ஆணைக் குழுவின் அறி;க்கை வெளியிடப்படவில்லை.

ஆணைக் குழுக்கள் அமைப்பதன் நோக்கம் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான ஒரு வழி முறையே அல்லாமல் தீர்வுகளை தருவதற்குரிய ஒன்றல்ல. ஆணைக் குழக்கள் மூலம்தான் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்குமென்றால் இலங்கையின் இனப் பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்க வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடாக கருதப்படும். ஆதலால், முஸ்லிம் காங்கிரஸ் சமாளிப்பு அரசியலிருந்து விடுபட்டு உண்மை அரசியலுக்குள் காலடி வைக்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-23#page-3

  • கருத்துக்கள உறவுகள்

இனன்களே.. திருடன் கள்ளன் என்று சண்டை பிடிக்கினம்.....பிறகு என்ன்வென்று தீர்வு கதை கதைக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.