Jump to content

டச் பேனலுடன் வருகிறது ஆப்பிள் மேக்புக் ப்ரோ


Recommended Posts

பதியப்பட்டது

டச் பேனலுடன் வருகிறது ஆப்பிள் மேக்புக் ப்ரோ

வரும் 27-ம் தேதி ஆப்பிளின் நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு ஆப்பிளின் புதிய மேக்புக் பரோ லீக்கானது. macOS Sierra 10.12.1 ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு கொடுத்த அப்டேட்டில் புதிய மேக்புக் ப்ரோவின் படங்கள் இருந்ததை நெட்டிசன்கள் பார்த்துவிட்டார்கள். 

 

macbookprotouchid_07049.jpg

 

புதிய மேக்புக் ப்ரோவில் OLED டச்பேனல், TouchID தொழில்நுட்பங்கள் உள்ளன. ஃபங்ஷன் பட்டன்கள் இருக்கும் இடத்தில் இப்போது டச்பேனல் வந்துள்ளது. ஸ்பீக்கர்கள் பக்கவாட்டில் உள்ளன. நாளை 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகமாகும் வாய்ப்பும் அதிகம்.

http://www.vikatan.com/news/information-technology/70537-apple-leaks-macbook-pro-with-touchid.art

Posted
புதிய மேக்புக் புரோ ; ஆப்பிள் நிறுவனம் வெளியீடு
 
 
கலிபோனியா: தொழிற்நுட்பத்தில் ஆண்டுதோறும் பல புதிய புரட்சிகளை ஏற்படுத்தி வரும் முக்கிய நிறுவனங்களின் முதன்மையான நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவன தயாரிப்புகளாக ஆப்பிள் கம்யூட்டர், ஐ- போன் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
 
 

மேக்புக் புரோ

 

 

அந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் மேக் புக் எனப்படும் லேப்டாப் கம்யூட்டர்களையும் தயாரித்து வருகிறது. சுமார் 25 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் மேக்புக் லேப்டாப் கம்யூட்டர்களின் புதிய தயாரிப்பான மேக்புக் புரோ புதிய வெர்சன் அறிமுக விழா இன்று நடந்தது. மேக்புக் புரோவை ஆப்பிள் நிறுவன தலைவர் டிம்குக் வெளியிட்டார்.

சிறப்பம்சங்கள்

 


மேக்புக் புரோ 13 மற்றும் 15 இன்ச் அளவுகளின் கிடைக்கும், சில்வர், மற்றும் கிரே நிறங்களில் வெளியாகியது. புதிய மேக்புக் புரோவை விரல் ரோகை (finger print authentication)மூலம் திறந்து பயன்படுத்தலாம், இந்த கம்யூட்டர் இன்டெல் i5/i7 புராசசர்களை கொண்டு இயங்குகிறது. கம்யூட்டர் திரை 5K RESOLUTION கொண்டது. டச் பார் என்ற புதிய வசதி மூலம் கம்யூட்டரை எளிமையாக இயக்க அப்பிள் நிறுவனம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறை எடை மற்றும் thinest லேப்டாப் கம்யூட்டராக இது வெளியாகிறது.
இப்படி பல சிறப்பம்சங்களை இந்த புதிய மேக்புக் லேப்டாப் கம்யூட்டர் கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கம்யூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1636674

Posted

ஆப்பிளின் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்களின் சிறப்பம்சங்கள்

                     1_11370.jpg

நேற்று ஆப்பிளின் தலைமையகமான கூப்பர்டினோவில் சிறப்பு அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் தனது லேப்டாப்களான மேக்புக் ப்ரோக்களின் மாடல்களில் பல்வேறு புதிய சிறப்பம்சங்களோடு அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்னர் மேக்புக் ப்ரோ லேப்டாப்புகளை 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

“ஹலோ அகைன்” என்று பெயரிடப்பட்டிருந்த நேற்றைய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு தகவல்களை காணலாம்.

1. ஆப்பிள் டிவிக்கு புதிய ஆஃப்:

                   2_11094.png

ஆப்பிள் டிவிக்கு ஏற்கெனவே எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆஃப்கள் அதன் பிரத்யேக ஸ்டோரில் உள்ள நிலையில் மேலும் ஒரு புதிய ஆப் சேர்க்கப்பட்டுள்ளது. வெறும் “டிவி” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் மூலம் நீங்கள் ஆப்பிளின் பல்வேறு தயாரிப்புகளில் பார்க்கும் நிகழ்ச்சிகளின் தகவல்கள் சேமித்துவைக்கப்பட்டு உங்களுக்கு தெரிவிக்கப்படும். அதே போன்று நேரலையாக பார்க்கும் நிகழ்ச்சி குறித்த கருத்துக்களை அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டே ட்விட்டரில் தெரிவிக்கும், உரையாடும் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆப்பிளின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டான ‘சிறி’யின் பயன்பாடுகள் மேலும் துல்லியப்படுத்தப்பட்டுள்ளது.

2. ஐபோன் 7 பிளசில் சிறந்த போர்ட்ரைட் புகைப்படங்கள்:  

                   3_11349.jpg

ஐபோன் 7 பிளசில் சிறந்த போர்ட்ரைட் புகைப்படங்களை எடுக்கும் வகையில் அதற்கான பிரத்யேக ஆப்சன் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபரை புகைப்படம் எடுக்கும்போது அவரின் பின்னால் உள்ள் உருவங்களை Blur செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. புதிய மேக்புக் ப்ரோ மடிக்கணினிகள்:

                 4_11083.jpg

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு வகையான 13”  மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ப்ரோ 15” மாடல் லேப்டாப்புகள் வெளியிடப்பட்டன. இந்த புதிய மேக்புக் ப்ரோக்களின் ஹைலைட்டான தகவலே கடந்த 45 ஆண்டுகளாக கணினிகளில் இருந்து வந்த “Function Key”க்களை ஆப்பிள் நீக்கியுள்ளது என்பதுதான்! இதற்கு பதிலாக அந்த இடத்தில் OLED தொடு திரையுடன் கூடிய “Touch Bar” மற்றும் பிங்கர் பிரிண்ட் ஆகிய புதிய வசதிகளை சேர்த்துள்ளது. லேப்டாப்புகள் சில்வர் மற்றும் ஸ்பேஸ் க்ரே நிறங்களில் கிடைக்கும்.

4. புதிய 13” மேக்புக் ப்ரோக்கள்:

              5_11298.png

13” மேக்புக் ப்ரோக்களை பொறுத்தவரை அதிலும் இரண்டு மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்று புதிய “Touch Bar” மற்றும் “Fingerprint” வசதிகளுடன் கூடிய 2.9GHz dual-core i5 பிராஸசர் மற்றும் 8GB RAM கொண்டது. முந்தைய மேக்புக் மாடலை ஒப்பிடும்போது 17% மெலிதாகவும், 23% எடை குறைவாகவும் இருக்கும். நான்கு USB-C வகை போர்ட்களை உடைய இதன் தொடக்கவிலை $1,799 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வகையாக 13” மேக்புக் ப்ரோ புதிய “Touch Bar” மற்றும் “Fingerprint” வசதிகள் இல்லாமல் 2.0GHz dual-core i5 ப்ரோசிஸோர் மற்றும் 8GB RAM உடன் $1,499 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5. புதிய 15” மேக்புக் ப்ரோ:

15” மேக்புக் ப்ரோ  “Touch Bar” மற்றும் “Fingerprint” வசதிகளுடன் கூடிய 2.6GHz dual-core i7 ப்ரோசிஸோர் மற்றும் 16GB RAM கொண்டது. முந்தைய மாடலை ஒப்பிடும்போது 67% பிரகாசமான திரையும், இரண்டு மடங்கு வேகமாகவும், சிறந்த ஸ்பீக்கர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு USB-C வகை போர்ட்களை உடைய இதன் தொடக்கவிலை $2,399 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6. புதிய “Touch Bar” வசதிகள்:

              6_11146.png

உதாரணமாக நீங்கள் ஒரு பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது இந்த “டச் பாரில்” அந்த மியூசிக் ஆஃப் சார்ந்த அனைத்து  ஷார்ட் கட்டுகளும் இருக்கும். இதே போன்று நாம் பயன்படுத்தும்  சஃபாரி, போட்டோஷாப், போட்டோஸ், ஈ-மெயில், பைனல் கட் புரோ போன்ற பல்வேறு ஆஃப்களில் அது சார்ந்த முக்கியமாக ஆப்சன்கள் அந்த டச் பாரில் இருக்கும். போர்டில் இருக்கும் Function என்னும் கீயை அழுத்தும்போது பழைய function கீக்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

7. புதிய “Fingerprint” மூலம் எளிதாக ஷாப்பிங் செய்யலாம்:

                   7_11401.jpg

புதிய பிங்கர் பிரிண்ட் வசதியின் மூலம் பாஸ்வேர்ட் இல்லாமல் மேக்புக்கில் உள்நுழைய முடியும் என்பதோடு மற்ற பல சிறப்பம்சங்களும் உள்ளன. ஏற்கெனவே “Apple Pay” என்னும் எவ்வித வங்கி சார்ந்த நேரடி அட்டைகள் இல்லாமல் வெறும் பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் செலுத்தும் வசதி ஜப்பான் போன்ற நாடுகளில் அமலில் உள்ளது. எனவே இனி மேக்புக் ப்ரோ மடிக்கணினிகளிலும் இவ்வாறு எளிதாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

8. புதிய மேக்புக் ப்ரோக்களின் பிளஸ்:

 முந்தைய மாடல்களைவிட வேகமானது, மெலிதானது, பிரகாசமானது.
  அனைத்து போர்ட்டுகளும் USB-C வகையிலானது என்பதால் எந்த போர்டிலும் எளிதாக சார்ஜ் செய்ய முடியும்.
  ஹெட்போன் ஜாக்கை ஆப்பிள் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9. புதிய மேக்புக் ப்ரோக்களின் மைனஸ்:

 முழு திரையும் தொடு திரையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் “Touch Bar” மட்டும் சேர்க்கப்பட்டிருப்பது   ஏமாற்றமாகும்.
 கேமெராக்களில் எடுக்கும் புகைப்படங்களை கணினியில் சேமிக்க பயன்படுத்தும் SD Card போர்ட் நீக்கப்பட்டுள்ளது. புதியதாக ஒரு அடாப்டரை வாங்குவதைவிட இனி வேறு வழியில்லை.
 எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு புதிய சிறப்பம்சங்கள் இல்லை என்றாலும் மேக்புக்குகளின் விலை மட்டும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் வகை மடிக்கணினிகளுக்கு புதிய மேக்புக் ப்ரோக்கள் கடும் போட்டியளிக்கும் என்று எதிர்பார்க்கப்ட்ட நிலையில் ஆப்பிளின் அறிவிப்புகள் சிறிது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/70780-apple-releases-new-macbook-pro-laptops.art

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.