Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் 71 மீனவர்கள் கைது 13 படகுகளும் பறிமுதல்

Featured Replies

மன்னாரில் 71 மீனவர்கள் கைது 13 படகுகளும் பறிமுதல்
 
 
மன்னாரில் 71 மீனவர்கள் கைது 13 படகுகளும் பறிமுதல்
மன்னார் – முத்தரிப்புத்துறைகடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 71 மீனவர்களை  சிலாவத்துறை  கடற்படையினர் கைது செய்து ள்ளதுடன்,  13 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
 
இன்று  காலை 7 மணிக்கு குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது   காப்புறுதி பற்றுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பிரதி ஆகியவற்றை  பரிசீலித்த சிலாவத்துறை  கடற்படையினர் அவை இல்லையெனத் தெரிவித்து  குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.    
 
நறுவிலிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 60 பேரும், வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரும், சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேருமே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  
 
அத்துடன், நறுவிலிக்குளம் மீனவர்களின்  9 படகுகளையும், வங்காலை மீனவர்களின் 1 படகு மற்றும்  சிலாவத்துறை மீனவர்களின் 3 படகுகள்  ஆகியவற்றை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 
 
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் சிலாவத்துறை கடற்படை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்த நிலையில், தம்மை விடுவித்தால் கைதுசெய்யப்பட்ட அனைத்து மீனவர்களின்  காப்புறுதி பற்றுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பிரதிகளை எடுத்துவர முடியும் என மீனவர் ஒருவர் கடற்படையினரிடம் கேட்டபோது, இதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். 
 
கடந்த காலங்களில் பாஸ் நடைமுறை  இல்லாமல் தாம் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும், தற்போது கடற்படையினரின் கெடுபிடி களுக்கு முகம்கொடுப்பதாகவும்  தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள  மன்னார் - நறுவிலிக்குளம்  மீனவர் சங்க செயலாளர்  அ.எப்ரோம்  தெரிவித்தார்.
 
கடந்த 18 ஆம் திகதி முத்தரிப்புத்துறை கிராம மக்களால் கடற்படை அதிகாரிகள்  தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர்  முத்தரிப்புத்துறையை அண்டிய பகுதிகளில்  தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள்  தினமும் கைதுசெய்யப்படுவதுடன்,  அவர்களின் படகுகளும்  பறிமுதல் செய்யப்படுகின்றன. இவ்வாறான  சம்பவங்களினால்  மன்னார் மாவட்ட மக்கள்  மத்தியில்  அச்சமான சூழல் உருவாகியுள்ளது. 

http://onlineuthayan.com/news/19429

  • கருத்துக்கள உறவுகள்

களவு எடுக்க வந்த கடற்படையை ஏன் மீனவர்கள் தாக்கினவையள்?சிறிலங்கா கடற்படைக்கு கடல் சொந்தம்,தரைப்படைக்கு தரை சொந்தம்,ஆகாயம் ஆகாயப்படைக்கு சொந்தம்......இதை தமிழர்கள் அறிந்து நடக்கவேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

களவு எடுக்க வந்த கடற்படையை ஏன் மீனவர்கள் தாக்கினவையள்?சிறிலங்கா கடற்படைக்கு கடல் சொந்தம்,தரைப்படைக்கு தரை சொந்தம்,ஆகாயம் ஆகாயப்படைக்கு சொந்தம்......இதை தமிழர்கள் அறிந்து நடக்கவேண்டும்....

என்ன புத்தா.. இந்தளவோட நிறுத்திட்டியள்.

அவைக்கு... களவெடுக்கிற உரிமை சொந்தம். தமிழனை சுட்டுக்கொல்லுற உரிமை சொந்தம். காணி பிடிப்பது சொந்தம். புத்த கோவில் கட்டுவது சொந்தம்.. கஞ்சா விக்கிற உரிமம் சொந்தம். வாள் வெட்டுக்குழுக்கள் நடத்திற உரிமை சொந்தம்... பெண்கள் மீதான வன்முறைக்கு மொத்த உரிமமும் சொந்தம்.. இப்படி இன்னோரென்ன.. சொந்தங்கள் அவைக்கு இனாமாக வழங்கப்பட்டுள்ளன.

அதிலும்.. புலிகளை பயங்கரவாதிகள் என்று உச்சரிக்க தெரிந்த எம் சில அரசியல்வாதிகளுக்கு 70,000 சொந்த மக்களைக் கொன்றவனை.. நல்லிணக்கம்.. நல்லாட்சி... நல்லெண்ணம்.. என்ற பதங்களால்.. கெளரவிக்க முடியுது பாருங்க. அங்க நிற்கிறம் நாங்கள்.. ஒரு எதிர்கட்சி தலைவர் பதவி காணும் எங்களுக்கு.. அம்மணமா நிற்க. அப்படி இருக்க.. எப்படி.. இவை எல்லாம் நமக்கு சொந்தமாகும். 

எல்லாம் தமிழனின்... மொக்குத்தனத்தால்.. வந்தவை. tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.