Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் கொலை வழக்கினை சிறப்பு ஜுரி சபையின் முன்னிலையில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

ரவிராஜ் கொலை வழக்கினை சிறப்பு ஜுரி சபையின் முன்னிலையில் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் விசாரணையை  சிறப்பு ஜுரி சபையின் முன்னிலையில் எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

asd1.jpg

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27)பிறப்பித்துள்ளது.

http://www.virakesari.lk/article/12810

  • தொடங்கியவர்
ரவிராஜின் கொலை வழக்கு சிங்களம் பேசும் சிறப்பு ஜூரிகள் முன்னிலையில் விசாரிக்கப்படும்: கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவிப்பு:
2016-10-28 12:24:56

(எம்.எப்.எம்.பஸீர்)

 

20267_42323442_ravifinal.jpgயாழ். மாவட்ட முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் படு­கொலை வழக்கை சிங்­களம் பேசக்­கூ­டிய சிறப்பு ஜூரிகள் சபை முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ள­வுள்­ள­தாக கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­லக நேற்று அறி­வித்தார்.

 

ரவிராஜ் படு­கொலை  சம்­பவம் தொடர்பில் கடற்­படை உத்­தி­யோ­கத்­தர்கள் மூவர் உள்­ளிட்ட 6 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட மா அதி­ப­ரினால் வழக்குத் தொட­ரப்­பட்­டி­ருந்­தது.  

 

இதில் இருவர் இல்­லாத நிலையில் ஏனை­யோ­ருக்கு எதி­ராக பயங்­க­ர­வாத தடை சட்டம் மற்றும் தண்­டனை சட்டக் கோவை­களின் விதி­வி­தா­னங்­க­ளுக்கு அமை­வாக ஐந்து குற்­றச்­சாட்­டு­களின் கீழ் இந்த வழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது.

 

 இந்­நி­லையில் பிர­தி­வா­திகள், தம்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை சிங்­களம் பேசும்  ஜூரிகள் முன்­னி­லையில் விசா­ரணை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்­வைத்­தனர்.

 

 எனினும், இதனை பாதிக்­கப்ப்ட்ட தரப்பின் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா கடு­மை­யாக எதிர்த்தார். அரச தரப்பில் ஆஜ­ரான பிரதி சொலி­சிற்ரர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய சிறப்பு ஜூரிகள் சபை முன்­னி­லையில் விசா­ரணை செய்ய ஆட்­சே­பனை  இல்லை என அறி­வித்தார்.

 

இத­னை­ய­டுத்து இது தொடர்பில் தீர்­மா­ன­மொன்றை எடுத்து மூன்று தரப்­பி­ன­ரும் வெவ்­வே­றாக எழுத்து மூல வாதங்­களை சமர்­ப்பிக்க கால அவ­காசம் அளிக்­கப்பட்­டது.

 

அதன்­படி  ஜூரிகள் சபை முன்­னி­லை­யிலா அல்­லது தனி நீதி­பதி முன்­னி­லை­யிலா விசா­ரணை செய்­வது என்­பது குறித்த தீர்ப்பு நேற்று அறி­விக்­கப்ப்ட்­டது.

 

 அதன்­படி சிங்­களம் பேசும் சிறப்பு ஜூரிகள் முன்­னி­லையில் அந்த வழக்கை விசாரிப்பது என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

 

இதன்படி இந்த வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

http://www.metronews.lk/article.php?category=news&news=20267

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:
 அதன்­படி சிங்­களம் பேசும் சிறப்பு ஜூரிகள் முன்­னி­லையில் அந்த வழக்கை விசாரிப்பது என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 

சிங்­களம் பேசும் சிறப்பு ஜூரிகள்  download3.jpeg

  • தொடங்கியவர்

ரவிராஜ் படுகொலை வழக்கு ; சிங்கள ஜூரிகள் முன்னிலையில் நவ. 22 முதல் விசாரணைக்கு

 

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவி ராஜ் படுகொலை தொடர்பிலான வழக்கினை சிங்களம் பேசும் சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

 

 ரவி ராஜ் படுகொலை விவகாரம் தொடர்பிலான விசாரணைகள்  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இதனை அறிவித்தார். ஏற்கனவே ரவி ராஜ் விவகாரத்தை சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரணை செய்ய  மேல் நீதிமன்றம் தீர்மானித்த நிலையில் இன்று வழக்கானது அது தொடர்பிலான விடயங்களை அறிவிப்பதற்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இவ்வழக்கை சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்த நீதிபதி அன்ரைய தினம் அனைத்து சாட்சியாளர்கலையும் மன்றில் ஆஜராக அழைப்பாணை விடுத்தார்.

http://www.virakesari.lk/article/12977

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.