Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்பிள், ஆன்ட்ராய்டுக்கு சவால் விடுமா விண்டோஸ் அப்டேட்ஸ்?

Featured Replies

ஆப்பிள், ஆன்ட்ராய்டுக்கு சவால் விடுமா விண்டோஸ் அப்டேட்ஸ்?

ப்பிள், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் சாம்சங் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இடையே நிலவும் கடுமையான தொழில்நுட்ப  போட்டியில் சிறிது காலம் தனித்திருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் வருங்கால தொழில்நுட்பத்தில் தாங்கள் மற்ற நிறுவனங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை தனது புதிய தயாரிப்புகள் மற்றும் அடுத்த விண்டோஸ் அப்டேட் பற்றிய தகவல் மூலம் பதிலளித்துள்ளது.

                          Windows-10-creators-update-main_13359.jp

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வெளியீடு, கூகுள் ஈவன்ட் போலவே பிரபலமானது மைக்ரோசாஃப்ட் ஈவன்ட். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் அறிமுக நிகழ்ச்சி நியூயார்க்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெள்ளா மற்றும் பல்வேறு தொழில்நுட்ப பிரிவு தலைவர்கள் கலந்துகொண்டு புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தினர். அதில் கேமிங் பிரியர்களுக்காக சில புதிய தொழில்நுட்பங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.  3D உலகத்திற்கு செல்லும் விண்டோஸ் 10ன் அடுத்த அப்டேட்:

     உலகிலுள்ள 150 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஓ.எஸ்-ஆன விண்டோஸ் தனது அடுத்த அப்டேட்டை அறிவித்துள்ளது. “விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்” என்று பெயரிப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் மூலம் விண்டோசின் முக்கிய சாப்ட்வேர்களான MS Word, Powerpoint மற்றும் MS Paint போன்ற பல சாப்ட்வேர்கள் 3D வடிவத்திற்கு மாறுகின்றன. அதாவது பிரத்யேக ஆப் ஒன்றின் உதவியோடு நீங்கள் மொபைலில் எடுக்கும் ஒரு புகைப்படத்தை புதிய விண்டோஸ் 10 இயங்கும் கணினிக்கு அனுப்பி அதை MS Paint சாப்ட்வேரில் 3D வடிவத்தில் பார்த்து, வரைந்து 3D பிரிண்ட் எடுக்கும் வசதியை அளிக்கிறது. இது போன்ற 3D படைப்புகளை மற்றவர்களிடையே பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒரு புதிய இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. இதே போன்று அட்டகாசமான 3D Powerpoint Presentation-களையும், Microsoft Edge பிரௌசரின் 3D அனுபவத்துடன் இன்னும் பிற வசதிகளையும் அளிக்கும். இந்த அப்டேட் அனைத்து விண்டோஸ் 10 பயனாளர்களுக்கும் இலவசமாக வரும் மார்ச் மாதம் முதல் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. விண்டோஸ் இன்சைடர்ஸ் பயனாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2. புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் ஹோலோ லென்ஸ்:

                         0feb7a56-f8c1-45e1-a412-a7edf8141f4e_132

  விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்தான் இனி உலகத்தை ஆட்டிப்படைக்கப் போகிறது. இதனால் ஆப்பிள், சாம்சங், கூகுள், மைக்ரோசாப்ட் என அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு அதற்கான கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியும் மற்றும் ஆக்மெண்டெட் ரியாலிட்டியான ஹோலோ லென்ஸ் பற்றிய புதிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது. இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டின் விலை $299 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. கேமிங் பிரியர்களுக்கு இனி கொண்டாட்டம்:

                         Screen%20Shot%202016-10-27%20at%209.56.3                                                                                                                                                  
மைக்ரோசாப்ட்டின் Xbox என்னும் விளையாட்டு கருவியை ஏற்கனவே விண்டோஸ்-10 உபயோகிக்கும் பயனாளர்களுக்கும் கிடைக்கும். அதன்படி இனி ஒரு கேம் விளையாடும்போது அதை எளிதாக மற்றவர்களுடன் நேரலையில் ஒளிபரப்பும் வசதியையும் அளிக்கிறது. மேலும் Xbox-ல் 4K வீடியோக்களையும், நெட்பிலிக்ஸின் சேவையுடன், DOLBY-ATMOS ஒலிக்கான மேம்பாட்டையும் அளிக்கிறது.

4. விருப்பமானவர்களுடன் தகவல்களை பகிர்வது இனி மேலும் எளிதாகிறது:

                        windows-10-social-copy_13182.jpg

நீங்கள் அடிக்கடி தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நபர்களுடன் தொடர்புகொள்வதை இந்த புதிய விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட் மேலும் எளிதாக்குகிறது. நீங்கள் விருப்பப்படும் ஐந்து நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தொடர்பு கொள்வதற்கான ஷார்ட்-கட்டை டாஸ்க் பாரில் வைத்துக்கொள்ளமுடியும். உதாரணமாக ஒரு புகைப்படத்தை அவர்களில் ஒருவரிடம் பகிரவேண்டுமென்றால் அந்த படத்தை வெறும் ட்ராக் செய்து அக்குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்ப முடியும். இதே போன்று மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்ற பலவற்றை விரைவாக மேற்கொள்ள முடியும்.

5. மைக்ரோசாப்ட்டின் புதிய லேப்டாப் - Surface Book i7:

                03_Devices_Landing_Post_Feature_ImagePri

    ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் லேப்டாப்புகளுக்கு கடும் போட்டியாளராக விளங்கும் மைக்ரோசாப்ட்டின் தொடு திரையுடன் கூடிய சர்பேஸ் வகை லேப்டாப்பின் அடுத்த பதிப்பாக Surface Book-ஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று இன்டெல் நிறுவனத்தின் i7 பிராசெசர், முந்தைய மாடலை விட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ், 16 மணிநேர பாட்டரி திறன், வெப்பத்தை குறைக்க இரண்டு காற்றாடிகள், சிறந்த கேமிங் மற்றும் பல்வேறு வசதிகளுடனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் தொடக்க விலையாக $2,399 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

6. மைக்ரோசாப்ட்டின் முதல் மேசை கணினி - Surface Studio அறிமுகம்:

                      03_Devices_Landing_Post_Feature_Center_1

இதுவரை மடிக்கணினிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த மைக்ரோசாப்ட் முதல் முறையாக Surface Studio என்னும் புதிய மேசை கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. 28” தொடு திரையுடன் கூடிய இந்த கணினி பல்வேறு நிலைகளில் நகர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது 4K திரையைவிட மிகவும் துல்லியமாக தெரியும். இந்த கணினி முற்றிலும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.


எளிதாக படங்களை வரையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கணினியில் Surface Pen-ஐ பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. படைப்புத்திறனை வெளிப்படுத்துவதில் புதுமையை புகுத்தும் முயற்சியாக Surface Dial என்னும் ஒரு வித புதிய கருவியும் இத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி துல்லியமான நிறங்களை தேர்ந்தெடுத்து விரைவாக 3D மற்றும் 2Dயில் படங்களை வரைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கணினியின் தொடக்க விலை $2,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

                             c934f81c5916d41e0b4dd8ca51597a2b58218eb0

    தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பின் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, "அடுத்த 10 வருடங்களில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அனைத்து துறைகளிலும் உட்சபட்ச நிலையை அடையும். அப்போது ஒவ்வொரு தனி மனிதனும், நிறுவனமும் அவர்களின் தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உதவிபுரிவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றும்" என்றார்

மீண்டு(ம்) வரும் மைக்ரோசாப்ட்:

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நேற்று அறிமுகப்படுத்திய அனைத்து தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அதன் போட்டியாளர்களிடையே பெரும் தாக்கத்தையும், தொழில்நுட்ப பயன்பாட்டாளர்களிடையே ஆச்சரியத்தையும் உருவாக்கியுள்ளது. வீழ்ச்சி பாதையில் செல்வதாக எதிர்பார்க்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் எதிர்கால தொழில்நுட்பங்களை வெளியிட்டு தான் 30 வருடங்களாக இருக்கும் அதே உயரத்தை தக்க வைக்க முயல்வதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

http://www.vikatan.com/news/information-technology/70685-will-windows-compete-android-and-apple-with-its-new-update.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.