Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் முதலீட்டை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்த பலாலி விமான தளம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படவேண்டும்- சரவணபவன் எம்.பி வலியுறுத்து

Featured Replies

வடக்கில் முதலீட்டை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்த பலாலி விமான தளம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படவேண்டும்- சரவணபவன் எம்.பி வலியுறுத்து
 
 
வடக்கில் முதலீட்டை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்த  பலாலி விமான தளம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படவேண்டும்- சரவணபவன் எம்.பி வலியுறுத்து

வடக்கு மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்றுவிக்கும் நடவடிக்கைகளை அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும். அதற்கு வெளிநாட்டு முதலீடுகளை வடக்குக்கு பெற்றுக்கொள்ள பலாலி வானூர்தித் தளத்தை, பன்னாட்டு வானூர்தி நிலையமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். தற்போது உள்ள பலாலி வானூர்தித் தளம், பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாற்றுவதற்கு போதுமானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வானூர்தித் தள விரிவாக்கத்துக்கு மக்களின் காணிகளை மேலதிகமாக அபகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது.1477824058_download%20%286%29.jpg

இவ்வாறு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். துறைமுக, வானூர்தி நிலைய அபிவிருத்தி அறவீடு திருத்தச் சட்டவரைவு கடந்த வியாழக்கிழமை   நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தெரிவித்ததாவது,

உலகின் இன்றைய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் அவசியம். இன்றைய உலகின் பொருளாதார சுபீட்சத்திலோ, அபிவிருத்தி நடவடிக்கைகளிலோ ஏற்றுமதி, இறக்குமதி என்பவை முக்கிய பங்கை வகிக்கின்றன. சீரான, தடங்கலற்ற, மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் இருந்தால் மட்டுமே ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய முடியும். முதன்மை வீதிகள் எவ்வாறு உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்கின்றனவோ, அதே போன்று பன்னாட்டு வர்த்தகத் துறை முகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்ற போர் காரணமாக தமிழ் மக்களின் வாழ்வு முற்றாகவே சீர்குலைக்கப்பட்டது. வடக்கு மாகாண மக்கள் பொருளாதார நிலையில் மிகவும் நலிந்த நிலையிலும், அபிவிருத்தியில் பின்தங்கிய நிலையிலும் உள்ளனர். அபிவிருத்திப் பாதையில் நாம் முன்செல்ல எமது வானூர்தி நிலையமும், துறைமுகங்களும் நவீன மயப்படுத்தப்பட்டு, பன்னாட்டுத் தொடர்புகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட வேண்டியவையாக உள்ளன.

வடக்கிலுள்ள ஒரேயொரு தரமான வானூர்தித் தளம் பலாலி வானூர்தி நிலையமாகும். அது ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இரு நோக்கங்களின் அடிப்படையில் இந்தத் தேவையமைந்துள்ளது. ஒன்று பன்னாட்டு முதலீட்டாளர்கள் வந்து செல்வதற்கும், தமது உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவும், தமது உற்பத்திகளை வெளிநாடுளுக்கு ஏற்றுமதி செய்யவும் இப்படியொரு பன்னாட்டு வானூர்தி நிலையம் அவசியமாகின்றது.

அதேபோன்று எமது தேசிய உற்பத்திகளை இந்த வானூர்தி நிலையம் மூலம் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும். இன்னொரு புறம் இப்படியான வசதிகள் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு வாய்ப்புக்களை அதிகரிக்கும். அதே நேரம் எமது மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கணிசமான பங்கை ஆற்ற முடியும்.

அண்மையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து இங்கு வந்திருந்த முதலீட்டாளர்களைச் சந்தித்தபோது, வடக்குக்கு வந்து போவ தென்றால் கொழும்புக்கு வந்து, பின்பு தரைவழிப் பாதையாகவே பயணம் செய்ய வேண்டியுள்ளதால் தமக்கு நேரவிரயம் உட்படப் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்தனர். இன்று இந்தியா உலகின் பொருளாதார வல்லரசாக உயர்ந்து வருகின்றது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானதாகும். வடக்குக்கும் இந்தியாவுக்குமான போக்கு வரத்துக்கள் நவீனமயப்படுத்தப்படுமானால் இந்திய முதலீட்டாளர்கள் தாமாகவே இங்கு வந்து முதலீடு செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவுடனான எமது கலாசார ஆன்மீக உறவுகளை மேம்படுத்தவும் ஓர் வானூர்தி நிலையம் அவசிய மாகி ன்றது.

எனவே, பலாலி விமான நிலையத்தை பன்னாட்டு வானூர்தி நிலையமாக தரம் உயர்த்தும்படி சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் நான் இந்த உயரிய சபையில் கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றேன். பலாலி வானூர்தி தள விரிவாக்கத்தை எமது மக்கள் எதிர்க்கின்றார்கள் என்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதை நான் அறிவேன். ஆனால் வடக்கிலுள்ள எந்தவொரு குடிமகனும் பலாலி வானூர்தி நிலையம் விரிவாக்கப்படுவதை எதிர்க்கவில்லை. வானூர்தி நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் மக்களின் காணிகள் மேலும் அபகரிக்கப்படுவதையே அவர்கள் எதிர்க்கின்றனர்.முன்னர் பலாலி வானூர்தி நிலையம் மக்களின் பாவனை க்காக இருந்தது.ஆனால் தற்போது அது விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதனை மீளவும் பொதுமக்களுக்கான வானூர்தி தளமாக மாற்றியமைக்கவேண்டும்.அத்துடன் அருகிலுள்ள இந்தியாவிற்கு செல்வதற்கு   விமானச்சீட்டாக குறைந்தளவு கட்டணமே அறவிடப்படுகிறது.ஆனால் பலாலியிலிருந்து கொழும்பு செல்வதற்கு 29ஆயிரம் அறவிடப்படுகிறது. எனவே இந்த கட்டணங்களும் குறைக்கப்படவேண்டும்.

மயிலிட்டி உட்பட வடக்கின் பல மீன்பிடித் துறைமுகங்கள் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மீன்பிடி இறங்கு துறைகள் சில இடங்களில் மட்டுமே அமைக்கப்பட முடியும். அவை இன்று பாதுகாப்பின் பெயரால் அபகரிக்கப்பட்டுள்ளன. மீன்பி டித்துறைமுகங்களை அபிவிருத்தி செய்து எமது பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும்படி உயரிய இந்த சபையை கேட்டு க்கொள்கிறேன்.

மட்டக்களப்பில் போருக்கு முற்பட்ட காலத்தில் வானூர்தி நிலையமாக வலையிறவு என்னும் கிராமத்தில் அமைந்திருந்தது. போர்க் காலத்தில் பெரியளவில் வானூர்தி தளத்திற்காக நிலம் சுவீகரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்தியத் துணைதூதரகத்திற்கு பொறுப்பான நடராஜன் அவர்களால் 60 தொழிலதிபர்கள் வரவழைக்கப்பட்டு என்ன தொழில்களை தாங்கள் இங்கு செய்யலாம் என்று எம்முடைய இலங்கை வர்த்தக மன்றத்தின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் ஓன்று இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து வந்த தொழிலதிபர்கள் என்றைக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக பலாலி வானூர்தி நிலையத்தில் தாங்கள் வந்து இறங்க முடியுமோ அன்று தாங்கள் இங்கு வந்து எங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என ஓர் உத்தரவாதம் செய்திருந்தார்கள். பலாலி வானூர்தி நிலைய விரிவாக்கம் பற்றி பல வருடங்களாக பேசப்பட்டு வருகின்றது. முன்னரெல்லாம் இந்த வானூர்தி தளம் மக்களுக்காகவே இருந்தது. மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை.

ஆனால் இந்த அரசு அதில் நாட்டம் செலுத்தவில்லை என்று தான் தெரிகின்றது. இந்த நல்லாட்சி அரசு நல்லிணக்கத்தை கொண்டு வருவதாக இருந்தால் எமது மக்கள் இழந்தவற்றில், அவர்களால் செய்யக் கூடியவற்றை முதலில் செய்து கொடுக்க வேண்டும். எமது மக்கள் இன்னமும் வீதிகளில் பயமின்றி போக முடியாத நிலைதான் காணப்படுகிறது என்பதனை இந்த நல்லாட்சி அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அங்குள்ளவர்கள் அவசர தேவைகளுக்கு கூட ஆகாய மார்க்கமாக கொழும்புக்கு வர முடியாத நிலைதான் காணப்படுகிறது. எமது மக்கள் இன்றும் கூட முக்கியமான தேவைகள் எல்லாவற்றையும் கொழும்பிற்கு வந்துதான் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு போக்குவரத்து மிக முக்கியமானதாகவுள்ளது. ஆகவே, இதனை கருத்தில் எடுத்து உடனடியாக பலாலி வானூர்தி நிலையத்தை சீரமைத்து வடக்கு மக்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று இந்த இடத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்

http://onlineuthayan.com/news/19551

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தால் நல்ல விடையம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.