Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்ராம்பின் வெற்றி புதிய உலக மரபு ஒன்றை உருவாக்கும் – மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் தெரிவானமை புதிய உலக மரபு ஒன்றை உருவாக்கும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக ட்ராமப்பிற்கு வாழ்த்து கூறி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ராம்;ப்பின் தெரிவானது அனைத்து நாடுகளினதும் இறைமைக்கு முக்கியத்துவம் அளித்து நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத ஓர் உலக மரபினை உருவாக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க குடியரசுக் கட்சி அரசாங்கம் ஆதரவு வழங்கியதாகவும் அதற்கு நன்றி பராட்டுவதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/archives/6560

8 hours ago, பிழம்பு said:

ட்ராமப்பிற்கு வாழ்த்து கூறி வெளியிட்ட கருத்து தொடர்பில்

 

8 hours ago, பிழம்பு said:

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க குடியரசுக் கட்சி அரசாங்கம் ஆதரவு வழங்கியதாகவும் அதற்கு நன்றி பராட்டுவதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்

இனப் படுகொலையாளர்களுக்கும்   மக்கள் பணத்தை கொள்ளையடித்த கும்பல்களுக்கும் போர்க் குற்றவாளிகளுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி உதவுவார் என இலங்கையிலுள்ள போர்க்குற்றவாளிகளான ராஜபக்ச கும்பல் கருதுகிறது.

ட்ராம்ப் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய மாட்டார்!- மஹிந்த

அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ராம்ப் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய மாட்டார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது வாழ்த்துச் செய்தியில்…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் தெரிவானதன் பின்னர் புதிய உலக மரபு ஒன்று உருவாகும் என நம்புகின்றேன்.

உங்களது தெரிவின் ஊடாக அனைத்து நாடுகளினதும் இறையாண்மை சமனிலை மற்றும் அரசாங்கங்களின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாமை போன்ற அடிப்படை கொள்கைகளை பின்பற்றும் ஓர் புதிய உலக மரபினை நாம் எதிர்ப்பார்கின்றோம்.

மேலும் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு குடியரசுக் கட்சி எமக்கு ஆதரவு நல்கியிருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/123967?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் கூட்டு சேர்ந்து , அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தும் என்று ஐயா கனவு காண்கிறார் போலும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.