Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடராஜா ரவிராஜ் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

Featured Replies

நடராஜா ரவிராஜ் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

15032908_551950428344737_1974683094873831844_n

2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அவர்களது 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் கந்தர்மடம் மணல்தரை வீதியில் உள்ள அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் கட்சியின் பொருளாளர் ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் ஆங்கில ஆசிரிய பயிற்றுவிப்பாளர் கோபாலகிருஸ்ணன் ஆசிரியர், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ரவீந்திரன் ஆகியோர் நினைவுச் சுடர்களை ஏற்றினர்.

கட்சியின்  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்ததுடன்  கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்களும் மாமனிதருக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மற்றும்  அரசியல் ஆய்வாளர் சி.ஜோதிலிங்கம்  ஆகியோர்  சிறப்புரை நிகழ்த்தினர். கட்சியின் நல்லூர் கோட்ட இளைஞர் அணித்தலைவர் மயூரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வு மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி 6.30 மணியளவில் நிறைவு பெற்றது.

14937198_551950311678082_1248729188987877476_n14938239_551950565011390_3480478638407561675_n14955926_551952115011235_875972771075505252_n14963162_551950665011380_3071446192652822915_n  15027785_551950611678052_3386189456223383623_n15032908_551950428344737_1974683094873831844_n15036672_551952075011239_8154910821645364238_n

You may also like

http://globaltamilnews.net/archives/6664

  • தொடங்கியவர்

உயர்ந்த மனிதர்களை மரணம் அழித்துவிடாது

Sp06-399287ecefb152540240b447a4345aa8e7d1ce8f.jpg

 

“சத்­திய இலட்­சி­யத்­துக்­காக வாழ்ந்த உயர்ந்த மனி­தர்­களை மரணம் என்றும் அழித்து விடு­வ­தில்லை”. சரித்­திர நாய­கர்­க­ளாக எமது தேசத்தின் ஆன்­மாவில் அவர்கள் என்றும் வாழ்­வார்கள். ஜன­நா­யகப் போரா­ளி­யாகத் தடம் பதித்­தவர் அமரர் நட­ராஜா ரவிராஜ் 

இளந் தலை­மு­றையின் விடிவு தேடி கள­மி­றங்கி வீறு நடை­போட்ட ஓர் இளம் அர­சியல் தலை­வ­னான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சட்­டத்­த­ரணி நட­ராஜா ரவிராஜ் காவி­ய­மாகி இன்­றுடன் ஒரு தசாப்­தம் நிறைவு பெறு­கின்­றது. இப்­போது ரவிராஜ் உயி­ரோ­டி­ருந்தால் வடக்கு அர­சியல் தலை­மைக்கு வீரியம் சேர்த்­தி­ருப்பார். நல்­ல­தொரு அர­சியல் தலை­மையை வழங்­கி­யி­ருப்பார் . ஏனெனில் இறுக்­க­மான அர­சியல் சூழ்­நி­லை­யிலும் தமிழ் மக்­களின் உரி­மை­களை வென்­றெ­டுக்கும் பாதையில் இயல்பை யதார்த்­தத்தை ஏற்­றுக்­கொண்டு தனக்­கே­யு­ரித்­தான ஆளு­மை­யுடன் ஒரு ஜன­நா­யகப் போரா­ளி­யாகத் தடம் பதித்து, போராடும் வல்­ல­மையை அவர் கொண்­டி­ருந்தார்.

நட­ராஜா ரவிராஜ் தென்­ம­ராட்சி மண்ணை உல­குக்கே தெரியப்படுத்­திய ஒருவர் என்­றால்­ மி­கை­யா­காது. நட­ராஜா, மங்­க­ளேஸ்­வரி எனும் நல்­லா­சி­ரி­யர்­க­ளுக்கு, ஆசி­ரிய தம்­ப­தி­யி­ன­ருக்கு மக­னாகப் பிறந்தார் ரவிராஜ். சாவ­கச்­சேரி டிறிபேக் கல்­லூ­ரி­யிலும், பின் யாழ்ப்­பாணம் பரி­யோவான் கல்­லூ­ரி­யிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்­லூ­ரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்­டத்­

 

த­ர­ணி­யாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங்­கினார்.

ரவிராஜின் தந்­தையார் நட­ராஜா மாஸ்டர் மாவிட்­ட­பு­ரத்தை சேர்ந்­தவர். ஆனால் தென்­ம­ராட்­சியில் சாவ­கச்­சேரியில் திரு­மணம் செய்­தவர் என்­பது பல­ருக்கு தெரி­யாது. நட­ராஜா மாஸ்­டரும் சாவ­கச்­சே­ரியார் ஆகி­விட்டார் .

சட்­டத்­த­ரணி ரவிராஜ் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் அரச சட்­ட­வா­தி­யாக சில ஆண்­டுகள் பணி­யாற்­றினார். இக்­காலம் சிங்­கள மொழி­ய­றிவை இயன்­ற­ளவு பெற்­றுக்­கொண்டார். இதுவும் பின்­னாளில் அர­சி­ய­லுக்கு உத­வியாய் அமைந்­தது.

சட்­டத்­த­ர­ணி­யாக இருந்து அர­சி­யலில் பிர­வே­சித்தார் . 1984 முதல் 1990 வரை­யிலும் 1993 முதல் 1997 வரை­யிலும் அவ­ருடைய தந்­தை­யாரின் சகோ­தரர் சட்­டத்­த­ரணி மாவிட்­ட­புரம் .கணே­ச­லிங்­கத்தின் மனித உரி­மைகள் இல்­லத்­தி­னூ­டாக கைது செய்­யப்­பட்டு, சிறை­யி­ல­டைக்­கப்­பட்டு சித்­தி­ர­வதைக்குள்­ளான அப்­பாவித் தமிழ் இளை­ஞர்­களை மீட்­ப­தற்கு தனது சட்­ட­து­றையை பயன்­ப­டுத்­தினார். த .வி கூட்­ட­ணித்­த­லைவர் வழக்­கு­ரைஞர் மு சிவ­சி­தம்­பரம் இப்­ப­ணியில் இவர் ஈடு­பட ஆலோ­சனை வழங்­கினார். 1987 இல் தமிழர் விடு­தலைக் கூட்டணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்­கட்­சியின் மத்­திய குழு உறுப்­பி­ன­ரானார்.

அப்­பாவித் தமி­ழர்கள் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட இளைஞர், யுவ­தி­களின் கைது விட­யத்தில் ஓர­ள­வேனும் வழக்­கு­களை எடுத்து விடு­தலை பெற்­றுக்­கொடுக்க ஆர்­வ­முடன் செயற்­பட்டார்.

இதனை விட அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வழி­காட்­டு­வ­திலும் கொழும்பில் முன்­னின்று பாடு­பட்டு வந்தார். இப்­ப­ணியில் அவர் பெற்ற கசப்­பான அனு­ப­வங்கள் யாவும் இயல்­பா­கவே இனப்­பற்று மிகுந்­தி­ருந்த அவ­ரது உள்­ளத்தை மேலும் உர­மாக்­கின.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யிட்டு இரு­மு­றை­யும் ­வெற்றி பெற்றார்.

போராட்­டத்­தையும், அதற்­கான நியா­யங்­க­ளையும் மக்கள் அனு­ப­வித்­து­வந்த சொல்­லொணாத் துன்­பங்­க­ளையும் சிங்­கள மக்­க­ளுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மும் மொழி­க­ளிலும் தேர்ச்சி பெற்­றி­ருந்தார். அவர் அவற்­றினை மிக லாவ­க­மாகக் கையாண்டு தனது கருத்­துக்­களைக் கேட்போர் மனதில் உறைக்­கவும், உண­ரவும் வைத்தார். தமிழர் பிரச்­சி­னை­களை வெளிக்­கொ­ணர்­வதில் உள்­நாட்டு, வெளி நாட்டு ஊட­கங்­களைச் செம்­மை­யான முறையில் பயன்­ப­டுத்­தினார். குறிப்­பாகச் சிங்­கள ஊட­கங்­களை மிகச் செம்­மை­யான முறையில் பயன்­ப­டுத்தி தமிழர் போராட்­டத்தின் நியா­யங்­க­ளையும், தமிழர் தாய­கத்தின் உண்மை நிலை­மை­க­ளையும் உட­னுக்­குடன் சிங்­கள மக்­க­ளிடம் எடுத்துக் கூறினார். ஆத­லினால் சிங்­கள ஊட­கங்கள் இவரைத் தமது நிகழ்ச்­சி­களில் இணைத்­துக்­கொண்­டன. உண்­மையை சிங்­கள உலகம் அகி­லமும் அறிந்து கொள்­வது இரா­ணு­வத்­துக்கும் அர­சிற்கும் தலை­யி­டியாய் அமைந்­தது. இவ­ரது இந்தப் பணிதான் அவ­ரது உயிரைப் பறிப்­ப­தற்­கு­ரிய முதன்மைக் கார­ணி­யாக இருந்­தது எனக் கரு­தப்­பட்­டது. உயர் பாது காப்பு பிர­தேச அவ­லங்கள் அக்­கா­லத்தில் அவர் இடித்து உரைத்த ஒரு­முக்­கிய விடயம்.

தமி­ழர்கள் வெள்­ளைவான் நபர்­க­ளினால் கடத்­தப்­பட்டு, காணாமல் போய்க்­கொண்­டி­ருந்த கால கட்­டத்தில் 2006 செப்­டெம்பர் மாதம்­ முதல் தலைநகர் செயற்­பா­டு­க­ளிலும் ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் ரவி­ராஜும் இணைந்து கொண்டார் வழ­மைபோல் முன்­ன­ணியில் இணைந்து தலைமை கொடுத்து செயற்­பட்டார். .

இவ­ரது இப் பணியும் அவ­ரது உயிரைப் பறிப்­ப­தற்­கு­ரிய கார­ணி­யாக இருந்­தது என கரு­தப்­பட்­டது. ஆனாலும் அவ­ரது ஒலி­ப­ரப்பு ஒளி­ப­ரப்பு விவா­தங்­க­ளி­லான ஆணித்­த­ர­மான கருத்­துக்கள் சிந்­த­னைத் ­தெ­ளி­வுள்ள சிங்­கள மக்கள் புரிந்­து­கொண்­டார்கள். அடிப்­படை இன­வா­தி­களால் புரிந்துகொள்­ள முடி­ய­வு­மில்லை . ஆனால் அவர் தமிழ் மக்­களின் வாழ்வின் துன்­பத்தை அர­சியல் ஆக்­கி­ர­மிப்­புக்­களை யதார்த்­த ­நி­லை­மை­களை உல­குக்கு உன்­னத மொழி­களில் எடுத்துச் சொன்­னதை ஜீர­ணிக்க முடி­யாத சக்­திகள் தன் அவரை இல்­லாமற் செய்ய முன்­னின்­றி­ருக்க முடியும்.

“சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை மரணம் என்றும் அழித்து விடுவ தில்லை”. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப்பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.

கலா­நிதி ந. கும­ர­கு­ரு­பரன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-10#page-4

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.