Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகாம்களில் இருந்தது போன்றே தற்போதும் உணருகிறோம் ; நல்லிணக்கபுரம் மக்கள் தெரிவிப்பு

Featured Replies

முகாம்களில் இருந்தது போன்றே தற்போதும் உணருகிறோம் ; நல்லிணக்கபுரம் மக்கள் தெரிவிப்பு

 

 

(ஆர்.வி.கே. )

நல்லிணக்கபுரமென்ற பெயரில் கிராமத்தை உருவாக்கியிருக்கின்ற போதும் வீடுகள் பலவும் இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாது, அடிப்படை வசதிகள், தண்ணீர் வசதிகள் போன்றன ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அங்கு குடியிருக்கும் மக்கள் பெரும்கவலை வெளியிட்டுள்ளனர்.

unnamed-_32_.jpg

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் பொது மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற நிலையில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது காணிகளை விடுவித்து தங்களை தமது சொந்த காணியில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி வந்தனர்.

 

இந் நிலையில் அந்தப் பகுதி மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு நேரடியாகச் சென்ற ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்ட ஆறு மாத காலத்திற்குள் இந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அனைவரும் சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என வாக்குறுதியளித்திருந்தார்.

unnamed-_35_.jpg

எனினும் ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிக் காலம் கடந்த நிலையில் அந்த மக்களுடைய காணிகளை வழங்கி சொந்த நிலத்தில் அவர்களைக் குடியேற்றாது மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் இராணுவத்தின் உதவியுடன் கீரிமலையில் இருந்த அரச காணியில் சுமார் நூறு குடும்பங்களை உள்ளடக்கியதாக அவர்களுக்கு காணிகளையும் வழங்கி வீடுகளை அமைத்து அந்தப் பகுதியில் நல்லிணக்கபுரம் என்ற புதுப்பெயருடன் கிராமமொன்றையும் உருவாக்கியுள்ளனர். 

unnamed-_30_.jpg

முகாம்களில் தற்போதும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் குறிப்பிட்ட நூறு குடும்பங்களுக்காக அமைக்கப்படும் இந்த நல்லிணக்கபுரம் குடியேற்றத்தை வைத்து அனைவரும் குடியமர்ந்துவிட்டதாக வெளியுலகிற்குகக் காட்டுவதற்காக கடந்த சில வாரங்களிற்கு முன்னர் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளையும் கையளித்திருந்தார்.

unnamed-_31_.jpg

இவ்வாறு அரசினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் ஒவ்வொன்றினுள்ளும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இராணுவத்தினரின் படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அத்தோடு அந்த புதிய கிராமத்தில் இராணுவத்தினர் காவலரண் அமைத்து காவல் இருந்து அங்கு செல்பவர்களையும் கண்காணித்து வருகின்றனர்.

unnamed-_33_.jpg

நல்லிணக்கபுரமென்ற பெயரில் அவசர அவசரமாக வீடுகளை உள்ளடக்கி கிராமத்தை உருவாக்கியிருக்கின்ற போதும் இங்கு அமைக்கப்பட்ட வீடுகள் பலவும் இன்னமும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. மேலும் அங்கு குடியமர்நதுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.  குறிப்பாக அங்கு தண்ணீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அம் மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

அதாவது வீடுகளில் தண்ணீர் தாங்கிகள் வைத்தும் வீடுகளுடன் இணைந்ததாக குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள போதும் தண்ணீர் வழங்கப்படாததால் இவை அனைத்தும் பயனற்றதாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் இரண்டு மூன்று நாளைக்கு ஒரு தடவை தான் தண்ணிர் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்ட மக்கள் முகாமில் கூட தாம் இவ்வாறு தண்ணீர் இல்லாமல் இருந்ததில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

 

மேலும் ஒரு வெட்ட வெளியில் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ள போதும் அதற்கான வேலிகள் எவையும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் தாமும் வேலிகளை அமைக்க இராணுவத்தினர் அனுமதிக்கின்றனர் இல்லை என்றும் தமது வாழ்வாதாரத்திற்கான தொழில் வசிதிகள் எவையும் இதுவரையில் அரசாங்கத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் அம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  

 

இதேவேளை அரசினால் அமைக்கப்பட்ட இந்த நல்லிணக்கபுர கிராமமும் கீரிமலை செம்பொன்வாய்க்கால் மயானமும் ஒன்றாக அருகருகே காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சுடலை என்பதை எட்டத்தேயே வைத்திருப்பார்கள். இங்கு என்னவென்றால் சுடலைக்கருகிலேயே தாம் இருப்பதாகவும் சுடலைக்கும் தமது வீடுகளுக்கும் ஒரு வேலி கூட இல்லாமல் எல்லாம் ஒன்றாகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/13463

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

unnamed-_30_.jpg

இப்படியான குடியமைப்பு திட்டங்கள் பணக்கார வர்க்கத்துக்குரியது.
ஏழை மற்றும் அன்றாட வாழ்வுக்காக போராடும் மக்களுக்குரியதல்ல.

16 hours ago, நவீனன் said:

unnamed-_32_.jpg

வீடுகளில் போர்க்குற்றவாளிகள் படங்களை தொங்கவிட்டு அராஜகம் புரியும் சிங்கள-பௌத்த நல்லாட்சி அரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.