Jump to content

Recommended Posts

Posted (edited)

கனடா

1. கனடாவின் தலைநகரம் எது?

ஒட்டாவா

2. கனடாவின் மிகப்பெரிய மாகாணம் எது?

குபெக்

3. குனடாவின் இரண்டாவது பெரிய மாகாணம் எது

ஒன்ராரியோ

4. கனடா நாட்டின் தேசியச் சின்னம் எது?

மேப்பிள் இலை

5. ஒன்ராரியோ மாகணத்தின் சனத்தொகை என்ன?

ஏறத்தாள 12,541,400.

6. வடஅமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகள் எவை? இவற்றில் எத்தனை ஏரிகள் ஒன்ராரியோ மாகாணத்திலுள்ளன?

சுப்பிரீயர் ,மிச்சிகன் ,ஹ+ரோன் ,எரி, மற்றும் ஒன்ராரியோ.

இவற்றில் சுப்பிரீயர், ஹ+ரோன், எரி மற்றும் ஒன்ராரியோ ஆகிய நான்கு ஏரிகளும் ஒன்ராரியோ மாகாணத்திலமைந்துள்ளன.

7. கனடாவில் எத்தனை மாகணாங்களுள்ளன? அவை எவை?

10 மாகாணங்களும் 3 ரெறிற்ரோறிஸ்ஸ் களையும் உள்ளடக்கியது கனடா.

மாகாணங்கள்

ஒன்ராரியோ

அல்பேட்டா

பிரிட்டிஸ் கொலம்பியா யுக்கொன்

மனிற்றோபா

பிறின்ஸ் எட்வட் ஐலன்ட்

நோவா ஸ்கொஸியா

நியு ப்ரவுண்ஸிக்

குபெக்

சஸ்ஹச்சுவன்

ரெறிற்ரோறிஸ்

நோர்த்வெஸ்ற்

நுனவுட்

யுக்கொன்

8. கனடாவில் எத்தனை தேசியப்ப+ங்காக்கள் உள்ளன?

38

9. கனடாவின் நீளமான ஆறு எது? அதன் நீளம் என்ன?

மக்கென்சி ஆறு : நீளம் - 4241 km

10. கனடாத் தேசிய கீதம் எப்போது யாரால் எழுதப்பட்டது? அதற்கு இசையமைத்தவர் யார்?

1880 ல் பிரன்ச் மொழியில் அடோல்பே பாஸ்லியால் எழுதப்பட்டு கலிக்ஸா லவாலேவால் இசையமைக்கப்பட்டது.

11. கனடாத் தேசிய கீதத்தின் தற்போதுள்ள ஆங்கில வரிகளை எழுதியவர யார்?

றோபட் ஸ்டான்லி.

12. கனடாவின் மக்கள் தொகை என்ன?

33 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்

13. உலகிலேயே நீளமான பெருந்தெரு எந்த நாட்டிலுள்ளது? அதன் நீளம் என்ன?

கனடாவிலுள்ளது : நீளம் - 7 604 km

14. கனடாவின் தேசிய விளையாட்டு எது

ஹொக்கி

15. கனடாவின் தற்போதைய முதலமைச்சர் யார்?

ஸ் ரீபன் ஹார்ப்பர்

16. கனடாவின் முதலாவது முதலமைச்சர் யார்?

சேர்.ஜோன்.மக்டோனல்ட்

17. கனடா வரலாற்றில் முதலமைச்சராகவிருந்த ஒரேயொரு பெண் யார்?

கிம் காம்பெல்

18. கனடாவின் மிகப்பெரிய நகரம் எது?

ரொரன்ரோ

19. கனடா வாழ் மக்களில் எத்தனை வீதமானோர் ஆங்கில மொழியைப் பேசுகிறார்கள்? எத்தனை வீதமானோர் பிரெஞ்சு மொழியைப் பேசுகிறார்கள்?

ஆங்கிலம் -59.3%

பிரெஞ்சு - 23.2ம%

ஏனையவை - 17.5%

20. கனடா தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது?

யூலை முதலாம் திகதி

21. கனடாவில் எத்தனை தொலைக்காட்சி நிலையங்கள் உள்ளன? எத்தனை வானொலி நிலையங்கள் உள்ளன?

தொலைக்காட்சி - ஏறத்தாள 80

வானொலி AM 245

FM 582

22. கனடாவில் வாழும் 33 மில்லியன் மக்களில் எவ்வளவு பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்?

ஏறத்தாள 22 மில்லியன் மக்கள

23. கனடாவில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன?

1337

24. கனடா இராணுவ சேவையில் எத்தனை வீதமான பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள்?

15 %

25. கனடாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எத்தனை பேர்? இதுவரை எய்ட்ஸ் ஆல் இறந்தவர்கள் எத்தனை பேர்?

பாதிக்கப்பட்டுள்ளோர்கள்: 56,000

இதுவரை இறந்தவர்கள் : 1,500

Edited by Snegethy
Posted (edited)

சந்திரனை நோக்கிய பயணங்கள்

78589055fb7.jpg

1) சந்திரனை சென்றடைந்த முதல் ஆளில்லாத விண்கலம் (Crash Landing) எது?

Luna - II (Lunik - II) -

2) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

Russia

3) எத்தனையாம் ஆண்டு சென்றடைந்தது (Crash Landing) ?

12 - September - 1959.

Note:-

சந்திரன் பற்றிய ஆராட்சிகள் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் சந்திரனில் தரையிறக்கப்படவில்லை மாறாக அந்த விண்கலம் சந்திரன் மீது மோதவிடப்பட்டது (Crash Landing). பல விதமான விஞ்ஞான ஆய்வு உபகரணங்கள், கமராக்கள் பொருத்தப்பட்ட விண்கலமானது சந்திரனை படம் பிடித்து கட்டளை மையத்துக்கு அனுப்பியவாறு சென்று சந்திரனில் மோதி அழிந்துவிடும். விண்கலமானது சந்திரனில் மோதும் இறுதி நொடிகளில் கட்டளை மையத்துக்கு அனுப்பிய படங்களில் சந்திரனின் மேற்பரப்பு, தரைத்தோற்றம் போன்றவற்றை அவதானித்த விஞ்ஞானிகள் அவற்றை பதிவு செய்து பின்னர் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்பரப்பை படம் பிடித்தவாறு சென்று சந்திரனில் மோதுவதற்காக 02 - January - 1959 முதன் முதலில் ரஷியாவினால் அனுப்பப்பட்ட Luna - I (Lunik - I) (சந்திரனை சென்றடையவில்லை) விண்கலம் நேரக்கணிப்பு பிழைத்தமையால் சந்திரனில் மோதாமல் சந்திரனை தாண்டி சென்றுவிட்டது.

அதனை தொடர்ந்து 12 - September - 1959 அனுப்பப்பட்ட Luna - II (Lunik - II) விண்கலம் கமராக்கள் உற்பட 391 Kg விஞ்ஞான உபகரணங்களை சுமந்து சென்று வெற்றிகரமாக சந்திரனில் மோதியது (Crash Landing). அதன்போது படங்கள் உற்பட சந்திரனின் Atmosphere சம்மந்தமான தகவல்களையும் கட்டளை மையத்துக்கு அனுப்பியது.

4) சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட (Soft Landing) முதலாவது ஆளில்லாத விண்கலத்தின் பெயர் என்ன?

Luna - 9

5) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

Russia

6) எத்தனையாம் ஆண்டு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது (Soft Landing)?

03 - February - 1966

Note:-

விஞ்ஞானத்தில் ஏற்ப்பட்ட வளர்ச்சியினால் சந்திரனில் தரையிறங்கக்கூடிய ஆளில்லாத விண்கலத்தினை வடிவமைத்து அனுப்பிய ரஷியா விஞ்ஞானிகள் பல தடவைகள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தனர் ஆனால் அவர்களின் விடா முயற்சியால் 03 - February - 1966 அன்று ஆளில்லாத விண்கலமான Luna - 9 முதன் முதலாக சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது (Soft Landing).

7) சந்திரனை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கு மனிதர்களுடன் அனுப்பப்பட்ட முதல் விண்கலத்தின் பெயர் என்ன?

Apollo 8

(Apollo 8 சந்திரனில் தரையிறங்கவில்லை - சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் (Moon's Orbit) பயணம் செய்தது)

8) அந்த விண்கலத்தை அனுப்பிய நாடு எது?

USA

9) எத்தனையாம் ஆண்டு அனுப்பப்பட்டது?

21 - December - 1968

Note:-

21 December 1968 அன்று Apollo 8 விண்கலத்தில் Frank Borman, James Lovell, William Anders ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சந்திரனை நோக்கிய முதலாவது பயணத்தை மேற்கொண்டனர். புறப்பட்டு ஆறு நாட்களின் பின் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையை (Moon's Orbit) சென்றடைந்த விண்கலமானது 20 மணித்தியாளங்கள் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரனை வலம் வந்தது. அதன் போது விண்கலத்தினுள் இருந்த விஞ்ஞானிகள் சந்திரனின் மேற்பரப்பினை புகைப்படங்கள் பிடித்தனர்.

10) சந்திரனில் காலடி வைத்த முதல் இரு மனிதர்கள் யார்?

Neil Armstrong

Edwin Aldrin

apollo11yf9.jpgneil2pu7.jpg

11) எந்த ஆண்டில் காலடி வைத்தனர்?

21- July - 1969

12) அவர்கள் பயணம் செய்த விண்கலத்தின் பெயர் என்ன?

Apollo 11

neil1sd4.jpg

Note:-

Neil Armstrong , Edwin Aldrin ஆகிய இருவரும் 21 மணித்தியாளங்கள் சந்திரனில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில் இரண்டரை மணித்தியாளங்கள் சந்திரனின் மேற்பரப்பில் நடந்து திரிந்து மண், கற்பாறை ஆகியவற்றின் மாதிரிகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Neil Armstrong , Edwin Aldrin ஆகிய இருவம் சந்திரனில் தரையிறங்கிய நேரம் அவர்களுடன் சென்ற விண்வெளி வீரரான Michael Collins (Comand Mocule Pilot) என்பவர் சந்திரனின் மேற்பரப்புக்கு (Moon's surface) மேல் கிட்டத்தட்ட 100 Km உயரத்தில் சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் (Moon's Orbit) தனியாக சந்திரனை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தார்.

apolloorbiternk8.jpg

13) சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய இரண்டாவது விண்கலத்தின் பெயர் என்ன?

Apollo 12

14) எப்போது தரையிறங்கியது?

19 - November - 1969

15) Apollo 12 விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர்களின் பெயர் என்ன?

Pete Conrad

Alan Bean

Richard Gordon

Note:-

Apollo 12 விண்கலத்தில் சந்திரனை நோக்கிய இரண்டாவது பயணத்தை மேற்கொண்ட Pete Conrad, Alan Bean, Richard Gordon ஆகிய மூவரில் Pete Conrad, Alan Bean ஆகிய இருவரும் சந்திரனில் தரையிறங்கி 3-1/2 மணித்தியாளங்கள் சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மூன்றாவது விண்வெளி வீரர் Richard Gordon (Comand Mocule Pilot)

மேலதிக விபரங்கள்:-

@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம்:

Apollo 13

Apollo 11, Apollo 12 விண்கலங்களை தொடர்ந்து 11 - April - 1970 இல் ஏவப்பட்ட Apollo 13 விண்கலம் 14 - April சந்திரனில் தரையிறங்கியது மனிதர்களுடன் சந்திரனில் தரையிறங்கிய மூன்றாவது விண்கலம் இதுவாகும்.

இந்த விண்கலத்தில் பயணித்த James Lovell, Fred Haise, John Swigert ஆகிய மூன்று விண்வெளி வீரர்களில் James Lovell, Fred Haise ஆகியோர் சந்திரனில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மூன்றாவது விண்வெளி வீரரான John Swigert (Comand Mocule Pilot) என்பவர் சந்திரனின் மேற்பரப்புக்கு (Moon's surface) மேல் கிட்டத்தட்ட 100 Km உயரத்தில் சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் (Moon's Orbit) தனியாக சந்திரனை சுற்றி வலம் வந்துகொண்டிருந்தார்.

@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய நான்காவது விண்கலம்:

Apollo 14

31- January - 1971 அன்று சந்திரனுக்கு அனுப்பப்பட்ட Apollo 14 விண்கலத்தில் பயணம் செய்த Alan Shepard, Edgar Mitchell, Stuart Roosa ஆகிய விண்வெளி வீரர்களில் Alan Shepard, Edgar Mitchell ஆகிய இருவரும் சந்திரனில் தரையிறங்கி இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர்.

6 - February - 1971 அன்று Alan Shepard, Edgar Mitchell ஆகிய இருவரும் சந்திரனில் Golf விளையாடியது வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய ஐந்தாவது விண்கலம்:

Apollo 15

26 - July - 1971 அன்று Apollo 15 விண்கலத்தில் சந்திரனை நோக்கி பயணம் செய்த David Scott, James Irwin, Alfred Worden ஆகிய விண்வெளி வீரர்களில் David Scott (Commander), James Irwin (Lunar Module Pilot) ஆகிய இருவரும் 30 - July அன்று சந்திரனில் தரையிறங்கினர். Alfred Worden (Comand Mocule Pilot)

இந்த பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் முதன் முறையாக ஜீப் போன்ற நான்கு சக்கரங்களையுடைய வாகனத்தையும் தங்களோடு கூட கொண்டு சென்றனர். அந்த ஜீப் வாகனத்தில் சந்திரனின் மேற்பரப்பில் பிரயாணங்களை மேற்கொண்ட வீரர்கள் அவர்கள் தரையிறங்கிய இடத்திலிருந்து 12 வேறுபட்ட பகுதிகளுக்கு சென்று பல்வேறுபட்ட ஆராட்சிகளில் ஈடுபட்டனர்.

அந்த வேளையில் சிறிய மலை போன்ற கற்பாறை ஒன்றினை கண்ணுற்ற விண்வெளி வீரர்கள் துளைப்பானின் உதவியுடன் அந்த கற்பாறையை துளையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

07 - August பூமிக்கு திரும்பிய Apollo 15 விண்வெளி வீரர்கள் மேலதிக ஆராட்சிக்கென 77 Kg கற்பாறைகளின் மாதிரிகளை சேகரித்து வந்தனர்.

@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய ஆறாவது விண்கலம்:

Apollo 16

பயணம் செய்த விண்வெளி வீரர்கள்:

John Young (Commander)

Charles Duke (Lunar Module Pilot)

Thomas Mattingly (Comand Mocule Pilot)

பயணம் செய்த திகதி:16 - April - 1972

@ சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய இறுதி விண்கலம்:

Apollo 17

பயணம் செய்த விண்வெளி வீரர்கள்:

Eugene Cernan (Commander)

Harrison Schmitt (Lunar Module pilot)

Ronald Evans (Command Module pilot)

பயணம் செய்த திகதி: 07 - December - 1972

Edited by யாழ்வினோ
  • Like 1
  • 2 weeks later...
Posted (edited)

யாழ் பொது நூலகம்

11ti5.jpg

சமுதாயத்தின் மேல் மிகவும் அக்கறை கொண்ட K-M செல்லப்பா என்பவர் அனைத்து சமூகத்தினரும் கல்வி அறிவினை இலகுவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் 1933 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் அனைவரும் பயன் பெறக்கூடிய வகையில் இலவச நூலகம் ஒன்றினை ஆரம்பித்தார். அவரது இந்த நல்ல சிந்தனையை வரவேற்ற அவரது நண்பர்கள் சிலர் அவருடைய முயற்சிக்கு மதிப்பளித்து அவருக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தனர். செல்லப்பாவின் வீட்டிலுள்ள நூலகத்தில் தினமும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதை உணர்ந்த செல்லப்பாவும் அவருடைய நண்பர்களும் அனைவரும் பயன் பெறும் வகையில் யாழ் நகரில் நூலகம் ஒன்றை நிறுவுவதற்காக நிர்வாகக் குழு ஒன்றை உருவாக்கினார்கள்.

09 - 06 - 1934 இல் நடை பெற்ற முதலாவது நிர்வாகக் குழு ஒன்று கூடலின் போது நூலக நிர்வாகக் குழுவுக்கு தலைவராக அந்த காலப்பகுதியில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஐசக் - தம்பிஐயா என்பவரும் செயலாளராக செல்லப்பாவும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகக் குழுவினரது அயராத உழைப்பினால் 01 - 08 - 1934 இல் யாழ் வைத்தியசாலை வீதியில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஒரு சிறிய கட்டடத்தில் யாழ் நூலகம் உதயமானது. அந்த சமயத்தில் நூலகத்தில் 844 புத்தகங்களும் 30 பத்திரிகைகளும் சில சஞ்சிகைகளும் இருந்தன அவற்றில் சிறுவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை அனைவரும் பயன் பெறக்கூடிய நூல்கள் அடங்கியிருந்தன.

காலப்போக்கில் யாழ் நூலகம் பிரபல்யம் அடையத் தொடங்கியது, நூல்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, இட நெருக்கடியும் ஏற்பட்டது அதனால் 1935 ஆம் ஆண்டு தை மாதம் நிர்வாகத்தினர் நூலகத்தை யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சற்று பெரிய வாடகை கட்டடம் ஒன்றுக்கு இடம் மாற்றம் செய்தனர். பின்னர் 1936 இல் நூலகம் யாழ் மாநகர சபை கட்டடத்துக்கு அருகில் உள்ள நகர மண்டபத்துக்கு (Town Hall) இடம் மாற்றம் செய்யப்பட்டு அங்கு நீண்ட காலமாக இயங்கி வந்தது.

1953 ஆம் ஆண்டு நூலக நிர்வாக உறுப்பினராக இருந்த யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் வண பிதா லோங் அடிகளாரின் சிந்தனையின் படி யாழ் நூலகத்துக்கு என தனியான ஒரு கட்டடம் (தற்போதைய யாழ் பொது நூலகக் கட்டடம்) அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. அதே நேரம் நூலகக் கட்டடத்துக்கான நிதி திரட்டும் வேலையும் அனைவரினதும் ஒத்துழைப்புடன் மிகவும் உற்சாகமாக நடைபெற்று வந்தது.

யாழ் பொது நூலகத்தை சர்வதேச தரம் வாய்ந்த நூலகமாக உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட வண பிதா லோங் அடிகளார் (யாழ் பொது நூலக வளர்ச்சிக்காக மிகுந்த அற்பணிப்புடன் அயராது உழைத்த வண பிதா லோங் அடிகளார் நூலகம் எரிக்கப்பட்ட செய்தியை கேட்டதும் மாரடைப்பு வந்து மரணமானார்) நூலகக் கட்டடத்துக்கான கட்டட வரைபடத்தை உருவாக்குவதற்கு இந்தியாவின் புகழ் பெற்ற கட்டட நிர்மாணக் கலை நிபுணர் K - S நரசிம்மனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து மிகவும் சிறப்பான முறையில் கட்டட வரை படத்தை உருவாக்கினார். அத்துடன் நூலக நிர்வாகத்தினருக்கு நூலகம் சம்மந்தமான மேலதிக ஆலோசனைகளை வழங்குவதற்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் S - R ரங்கநாதன் என்பவரும் வரவழைக்கப்பட்டார்.

யாழ் மக்கள் மட்டுமன்றி நாட்டின் பிற மாவட்டங்களில் வாழும் தமிழர்களும் மற்றும் சில தமிழ் நாட்டை சேர்ந்தவர்களும் வழங்கிய பெருந்தொகையான நிதியை கொண்டு 29 - 02 - 1953 அன்று நூலகக் கட்டடத்துக்கான அத்திவாரம் இடப்பட்டது. தொடர்ந்து பல பொது அமைப்புக்களும் நிறுவனங்களும் மனம் சலிக்காமல் உதவிகளை வழங்கி வந்ததினால் 1959 இல் நூலகக் கட்டடத்தின் முதல் கட்ட வேலைகள் பூர்த்தியடைந்தன.

யாழ் பொது நூலகக் கட்டடத்தை 11 - 10 - 1959 இல் அந்த நேரத்தில் யாழ் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா வைபவ ரீதியில் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 03 - 11 - 1967 இல் சிறுவர்களுக்கான பிரத்தியேகமான பகுதி உருவாக்கம் பெற்றது. அது மட்டுமன்றி முதலாவது மாடியில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் வாரந்தோறும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்குகளும், கலாச்சாரம் சம்மந்தமான விரிவுரைகளும் நடைபெற்று வந்தன.

இவ்வாறு படிப்படியாக வளர்ந்து வந்த யாழ் பொது நூலகம் 1933 ஆம் ஆண்டு K-M செல்லப்பா காலத்தில் இருந்து சேகரித்து பாதுகாத்து வந்த 150 வருடங்கள் பழமை வாய்ந்த அரிய நூல்கள் உற்பட கிட்டத்தட்ட 97,000 நூல்கள் மற்றும் ஏராளமான பழமை வாய்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பன மக்களின் பயன்பாட்டிற்கென வைக்கப்பட்டு தென்னாசியாவில் மிகப்பெரும் நூலகமாக விளங்கியது.

தமிழர்களின் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக விளங்கிய யாழ் பொது நூலகம் 31 - 05 - 1981 நள்ளிரவு 12 மணியளவில் சீருடை அணிந்த இலங்கை பொலிஸ் மற்றும் சிங்கள காடையர்களினால் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டது. காலம் காலமாக சேகரிக்கப்பட்டு பாதுகாத்து வந்த பழமை வாய்ந்த நூல்களும் உலக நாடுகள் பலவற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட கிடைத்தற்கரிய நூல்களும் எரிந்து சாம்பலாகியது.

தமிழர்களின் வரலாற்றில் கறை படிந்த நிகழ்வாக கருதப்படும் இந்த பொது நூலக எரிப்பின் போது அனைத்து பெறுமதி மிக்க நூல்களும் எரிந்து நாசமாகிய காரணத்தினால் நூலக நிர்வாகத்தினர் நூலகத்தை புனரமைக்கும் எண்ணத்தை கைவிட்டனர். ஆனால் அந்த காலப்பகுதியில் யாழ் மேயராக இருந்த விஸ்வநாதன் என்பவர் நூலகத்தை புனரமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு யாழ் மாநகர சபைக்கு உத்தரவிட்டார்.

library7og8.jpg

யாழ் மாநகர சபையுடன் சகல தமிழ் அமைப்புகளும், பொது அமைப்புகளும் சில வெளிநாட்டு தூதரகங்களும் கைகோர்த்தன மீண்டும் நிதி சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1982 வைகாசி 15 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை "யாழ் பொது நூலக வாரம்" என்று பெயர் சூட்டப்பட்டு நூலக புனரமைப்பிற்கென நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டும் நடவடிக்கையில் பெருந்தொகையான பணமும் நூல்களும் சேகரிக்கப்பட்டது.

இந்த நிதி சேகரிப்புக்கு யாழ் சமூகம் குறிப்பாக பொது அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் மிகப்பெரும் பங்களிப்பை செய்திருந்தன அத்துடன் பிற மாவட்டங்களில் வாழும் தமிழர்களும் பெரும் பங்களிப்பை செய்திருந்தார்கள், தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான நூல்கள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நூலகத்தை புனரமைக்கும் முதற்கட்ட வேலைகள் 01 - 06 - 1982 இல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக நடை பெற்று வந்த வேளையில் 1983 இல் யுத்தம் தீவிரமடைந்தது அந்த சமயத்தில் நூலகக் கட்டடத்தின் மீது விமானங்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட காரணத்தினால் கட்டடம் பலத்த சேதமடைந்தது அதனால் மீள் கட்டுமாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.

இப்படி காலம் காலமாக தொடர்ந்து அழிவுகளை சந்தித்து வந்த யாழ் பொது நூலகம் தற்போது பல கோடி ரூபா செலவில் மீண்டும் புனரமைக்கப்பட்டு சகல நவீன வசதிகளுடன் இயங்கிவருகின்றது.

Edited by யாழ்வினோ
Posted

வனு-அற்று

1) உலகில் சந்தோசமாக வாழும் மக்கள் யார் என்று சென்ற வருடம் ஜ. நாவினால் சொல்லப்பட்ட மக்கள் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்கள்? வனு-அற்று

2)வனு-அற்று எங்கே அமைந்துள்ளது? தென்பசுபிக் நாடான வனு-அற்று அவுஸ்திரெலியாவுக்கு வட மேற்கில் அமைந்துள்ளது.

3) இந்த நாட்டின் தலை நகரம் எது? போட் விலா

4) இன்னாட்டில் எத்தனை மொழிகள் பேசப்பட்டுவருகின்றன?110 மொழிகள் பேசப்பட்டு தற்பொழுது 109 மொழிகள் பேசப்படுகின்றன

5) இன்னாட்டின் அரச மொழி என்ன? ஆங்கிலம், பிரெஞ்சு, பிஸ்லாமா

6)பிஸ்லாமா மொழி வனு-அற்றினைத் தவிர வேறு எந்த நாட்டில் பேசப்படுகிறது ? அருகில் உள்ள நியூ கலிடோனியாவில் பேசப்படுகிறது

7)இன்னாடு எப்பொழுது யாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது? பிரித்தானியா, பிரான்சினால் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு உட்பட்டு 1980ல் சுதந்திரம் அடைந்தது.

8)இங்குள்ளவர்கள் வணங்கும் சமயம் எது? 92 வீதமானவர்கள் கிறிஸ்தவத்தினையும், மற்றையவர்கள் கற்கால கடவுள்களையும் வணங்குகிறார்கள்

9)இங்குள்ளவர்களின் பெரும்பாலானவர்களின் தொழில் என்ன? விவசாயம். சிலர் மீன்பிடித் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள்.

10)இன்னாட்டில் உள்ளவர்களின் சராசரி ஆயுள் காலம் என்ன?61 வயது

11)இன்னாட்டின் பணத்தினை எவ்வாறு அழைப்பார்கள்? வாற்று

12)இன்னாட்டின் தேசியக் கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதனைக் குறிக்கும்? சுதந்திரப் போரில் ஒடிய குருதியினைக் குறிக்கும்

13)இன்னாட்டின் பாராளுமன்றம் எந்த அரசினால் கட்டப்பட்டுள்ளது? சீனா

14)இன்னாட்டில் கிரமத்தலைவர்கள் எவ்விடத்தில் இருந்து தீர்ப்பினை வழங்குவார்கள்? ஆழமரம்

15) உலகில் நீருக்கு அடியில் உள்ள ஒரே ஒரு தபால் நிலையம் எங்கே உள்ளது?வனு-அற்றில் உள்ள கைடவே தீவில் உள்ளது

16)இன்னாட்டில் கல்யாணத்தின் போது மணமகனுக்கு பெண்வீட்டார்கள் வழங்கும் சீதனம் எது? பன்றி

மேலதிகமாக வனு-அற்றினைப்பற்றி அறிய விருப்பம் இருந்தால் எனது வனு-அற்று பயணத்தொடரினை வாசித்துப் பார்க்கலாம்

http://www.yarl.com/forum3/index.php?showt...=12184&st=0

Posted (edited)

ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்

1) தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?

Galileo Galilei, Italy, 1593.

2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?

Wright Brothers, America, 1903.

3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?

Macmillan, Scotland, Year ?.

4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கியை கண்டுபிடித்தார்?

Michael Faraday, England, 1831.

5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?

Alfred Nobel, Sweden, 1867.

6) ஒக்சிஜனை (Oxygen) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?

Joseph Priestley on 01 - August - 1774.

7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?

John Logie Baird, England, 1926. (Born in Scotland)

8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?

Alexander Graham Bell, 1876.

9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்?

Henry Mill, England, 1714.

10) பென்சிலினை (Penicillin) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?

Allen Fleming, Scotland, 1928.

11) மின்மாற்றியை (Transformer ) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?

Michael Faraday, 1831 -- William Stanley, 1885 (Modern Transformer)

12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?

Anastasio Volta , Italy, 1807.

13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?

William Harvey, 1628.

14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?

Isaac Newton, England, 1687.

15) Transistor இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு Transistor இனை கண்டுபிடித்தார்?

மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- John Bardeen, Walter Brattain, William Shockley, 1947.

16) கணனியை (Automatic Calculator) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?

Wilhelm Schickard , German, 1623.

17) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?

Junko Tabei, Japan, 16 - May - 1975.

18) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசினை பெற்றார்கள்?

Frederic Joliot & Irene Curie, France, 1935.

19) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில் வட துருவத்தை சென்றடைந்தார்?

Robert Edwin Peary, American, 06 - April - 1909.

20) துணைக்கோள்களற்ற (Moons) இரண்டு கோள்கள் எவை?

Mercury, Venus.

21) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?

Robert Oppenheimer, America, 1945.

22) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின் விளக்கை கண்டுபிடித்தார்?

Thomas Alva Edison, America, 1879.

23) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?

Horace Short, Britain, 1900.

24) நுணுக்குக்காட்டியை (Microscope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்தார்?

Janssen, Netherlands, 1590.

25) பக்ரீரியாவை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?

Leeuwenhock, Netherlands, 1683.

26) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?

Robert Wilhelm Bunsen, Germany, 1855.

27) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?

Henry Bessemer, England, 1856.

28) Benzene இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு Benzene இனை கண்டுபிடித்தார்?

Michael Faraday, England, 1825.

29) X - ray இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு X - ray இனை கண்டுபிடித்தார்?

Wilhelm Conrad Rontgen, German, 1895.

30) X - ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?

1901 ஆம் ஆண்டு (First Nobel Prize for Physics In History)

@ பரடேயின் விதியை (Faraday's Low) கூறுக?

(I) அயன்களின் (Ions) எடைகளும் மின்னோட்டத்தின் சக்தியும் நேர்விகிதத்தில் உள்ளன.

(II) அயன்களின் (Ions) எடைகளும் மின்னோட்டம் செலுத்தப்படும் நேரமும் நேர்விகிதத்தில் உள்ளன.

@ ஓமின் விதியை (Ohm's Low) கூறுக?

ஒரு மின் சுற்றில் செல்லும் மின்னோட்டம் அந்தச் சுற்றிலுள்ள மின் இயக்கத்திற்கும் மின் தடைக்கும் உள்ள விகிதத்திற்குச் சமனாகும்.

@ போயிலின் விதியை (Boyle's Low) கூறுக?

மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட பொருள் திணிவுள்ள வாயுவின் கன அளவு அதன் அழுத்தத்திற்கு எதிர் விகிதத்தில் மாறுகின்றது.

@ ஆர்கிமிடிசின் தத்துவத்தை (Archimede's Principles) கூறுக?

ஒரு திடப்பொருள் முழுவதும் ஒரு திரவத்தினுள் மூழ்கியிருக்கும் போது அதற்கு ஏற்படும் தோற்ற எடை நஷ்டம் அப் பொருளின் கன அளவுள்ள திரவத்தின் எடைக்குச் சமன்.

@ Gay Lussac's இன் விதியை கூறுக?

மாறாத அழுத்தத்தின் பொழுது ஒரு குறிப்பிட்ட எடையுள்ள வாயுவின் கன அளவு அதன் வெப்பநிலைக்கு நேர் விகிதத்தில் மாறும்.

@ பஸ்காலின் விதியை (Pascal's Low) கூறுக?

ஓர் அசைவில்லாத திரவத்தில் ஏதேனும் ஒரு பாகத்தில் அழுத்தம் ஏற்படுத்தினால் அந்த அழுத்தமானது திரவத்தின் மற்றைய எல்லா பாகங்களுக்கும் அதே அளவில் செலுத்தப்படுகிறது.

@ அவொகற்றோவின் விதியை (Avogadro's Low) கூறுக?

மாறாத வெப்பநிலை அழுத்தத்தின் பொழுது ஒரே கன அளவுள்ள வாயுக்களின் மூலக்கூறுகள் சமனாகும்.

@ கூக்கின் விதியை (Hook's Low) கூறுக?

முழு மீட்சி எல்லைக்கு உட்பட்ட வரையில் தகைவு (Stress) என்பது விகாரத்திற்கு (Strain) நேர் விகிதத்தில் உள்ளது.

@ ஹிரகமின் விதியை (Graham's Low) கூறுக?

வெப்பநிலையும் அழுத்தமும் மாறாமல் இருக்கும் பொழுது வாயுக்கள் பரவும் வேகம் அவற்றின் அடர்த்தியின் வர்க்கமூலத்திற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.

Edited by யாழ்வினோ
  • 2 weeks later...
Posted (edited)

தகவல் துளிகள்

01) உலகின் மிக நீளமான நதி எது?

நைல் நதி.

02) நைல் நதியின் நீளம் என்ன?

6695 Km.

03) நைல் நதி எங்கே உள்ளது?

ஆபிரிக்கா.

04) அமேசன் நதியின் நீளம் என்ன?

6400 Km.

05) அமேசன் நதி எங்கே உள்ளது?

தென் அமெரிக்கா.

06) ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?

Charlotte Cooper.

07) Charlotte Cooper எந்த நாட்டை சேர்ந்தவர்?

England.

08) Charlotte Cooper எத்தனையாம் ஆண்டு தங்க பதக்கத்தை பெற்றார்?

1900.

09) Charlotte Cooper எந்த விளையாட்டில் தங்க பதக்கம் வென்றார்?

Tennis.

10) உலகின் மிக ஆழமான ஆழி எது?

மரியானா ஆழி.

11) மரியானா ஆழியின் ஆழம் என்ன?

10900 மீற்றர்.

12) மரியானா ஆழி எந்த சமுத்திரத்தில் உள்ளது?

பசுபிக் சமுத்திரம்.

13) உலகின் மிக பெரிய பாலை வனம் எது?

சகாரா பாலை வனம்.

14) சகாரா பாலை வனத்தின் பரப்பளவு என்ன?

9,000,000 சதுர கிலோமீற்றர்.

15) சகாரா பாலை வனம் எங்கே உள்ளது?

ஆபிரிக்கா.

16) உலகின் மிக உயரமான மலைச் சிகரம் எது?

எவறஸ்ற் சிகரம்.

17) எவறஸ்ற் சிகரத்தின் உயரம் என்ன?

8848 மீற்றர்.

18) எவறஸ்ற் சிகரம் எங்கே உள்ளது?

நேபால் - திபெத்.

19) எவறஸ்ற் சிகரத்தை முதலில் சென்றடைந்தவர் யார்?

Edmund Hillary and Tenzing Norgay.

20) Edmund Hillary and Tenzing Norgay எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தனர்?

29 - May - 1953.

21) உலகப் புகழ் பெற்ற மொனா லிசா ஓவியத்தை வரைந்தவர் யார்?

Leonardo da Vinci.

22) Leonardo da Vinci எந்த நாட்டை சேர்ந்தவர்?

Italy.

23) Leonardo da Vinci எத்தனையாம் ஆண்டு மொனா லிசா ஓவியத்தை வரைந்தார்?

1503 - 1507.

24) காலஞ்சென்ற பாப்பரசர் John Paul II எந்த நாட்டை சேர்ந்தவர்?

Poland

25) Pope John Paul II எத்தனையாம் ஆண்டு பிறந்தார்?

18 - May - 1920.

26) Pope John Paul II இன் இயற் பெயர் என்ன?

Karol Jozej Wojtyla.

27) Pope John Paul II எத்தனை வருடங்கள் பாப்பரசராக இருந்தார்?

26 வருடங்கள்.

28) Pope John Paul II எத்தனையாவது வயதில் மரித்தார்?

84 வயதில்.

29) ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?

பதினாறாவது.

30) John Kennedy அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?

முப்பத்து ஐந்தாவது.

31) ஐக்கிய நாடுகள் சபை எப்போது உதயமானது?

24 - October - 1945.

32) ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகமாக பதவி வகித்தவர்களின் பெயர்களையும் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதையும் கூறுக?

1st - Trygve Lie (1946) - Norway.

2nd -Dag Hammarskjold (1953) - Sweden.

3rd - Thant (1961) - Burma.

4th - Kurt Walgheim (1972) - Austria.

5th - Peres De Cuellar (1982) - Peru

6th - Boutros Ghali (1992) - Egypt.

7th - Kofi Annan (1997) - Ghana.

8th - Ban Ki-moon (2007) - South Korea.

33) சீனப் பெருஞ் சுவரின் நீளம் என்ன?

6352 km (3948 miles).

நீளம் அதிகரிக்கப்பட்ட பின் சீனப் பெருஞ் சுவரின் நீளம் அண்ணளவாக 6700 km (4160 miles).

கிளைகளுடன் சேர்த்து சீனப் பெருஞ் சுவரின் நீளம் அண்ணளவாக 7,300 km (4,500 miles).

தகவல்கள் தொடர்சியாக இணைக்கப்படும்...

Edited by யாழ்வினோ
  • 1 month later...
Posted (edited)

கிரெகொரியின் நாட்காட்டி

கிரெகொரியின் நாட்காட்டி என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது யூலியின் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோசியஸ் லிலியஸ் என்பவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய பாப்பரசரான 13வது கிரெகரியினால் உத்தியோகபட்சமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இநாட்காட்டிக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இதன்படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன, மேலும் இக்காகப்பகுதி "எம் ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6வது நூற்றாண்டில் உரோமை பாதிரியார் ஒருவரால் ஆரபிக்கப்பட்ட முறையாகும்.

கிரெகொரியின் நாட்காட்டியானது யூலியின் நாட்காட்டி சராசரி ஆண்டைவிட நீளமக காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள் நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதை திருத்துவதற்காக முன்கொனரப்பட்டது. மேலும் உயிர்த்த ஞாயிறு தினதை கணிப்பிடப் பயன்பட்ட சந்திர நாட்காடியும் பல கோளாறுகளை கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.

கிரெகோரியின் நாட்காட்டி

இன்று பரவலாக பயன்பாட்டில் உள்ள கிரெகொரியின் நாட்காட்டியானது பிப்ரவரி மாதத்துக்கு கூடுதலான 29வது நாளை, நான்கால் வகுபடும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது. எவ்வாரெனினும் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே இது சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1600, 2000 என்பன நெட்டாண்டுகளான அதேவேலை 1700, 1800, 1900 என்பன நெட்டாண்டுகளில்லை.

இதற்கான காரணம் வருமாறு:

கிரெகோரியின் நாட்காட்டியானது இளவேனிற் சம இராப்பகல் நாள் மார்ச் 21 க்கு அருகாமையில் வருமாறு வடிவமைக்கப்பட்டதாகும். இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு நாளானது (மார்ச் 21 அல்லது அதற்கருகில் வரும் சந்திரனின் 14வது நாளுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும்) இளவேனிற் சம இராப்பகல் நாள் சார்பாக்க சரியாக இருக்கும்.

சம இராப்பகல் நாள் ஆண்டானது தற்சமயம் சுமார் 365.242375 நாள் நீளமானது. கிரெகோரியின் நெட்டாண்டு விதியானது சராசரி ஆண்டுக்கு 365.2425 நாட்களை கொடுக்கிறது. 0.0001 சற்று மிகையான கூடுதல் சேர்ப்பு காரணமாக 8000 ஆண்டுகளில் நாட்காட்டியானது ஒரு நாள் பிந்தி காணப்படும். ஆனால் 8000 வருடங்களில் சம இராப்பகல் நாள் வருடமானது முன்மொழியப்படமுடியாத அளவினால் சிறியதாக காணப்படும். எனவே கிரெகோரியின் நாட்காட்டி போதுமான அளவு துல்லியம் கொண்டுள்ளது.

Gregory%20XIII.jpg

கிரெகரி

நெட்டாண்டு

நெட்டாண்டு என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கொண்ட ஆண்டாகும். எடுத்துக்காட்டாக பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டை குறிப்பிடலாம். பருவங்களும் வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை. எனவே, ஒரே அளவு நாட்களைக் கொண்ட நாட்காட்டி, காலப்போக்கில் அது நடக்கவேண்டிய பருவத்தில் இருந்து நகரும். இந்த நகர்வை ஓர் ஆண்டின் ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கூடுதலாக இணைப்பதன் மூலமாக சரிசெய்யலாம். நெட்டாண்டு அற்ற ஒரு வருடம் சாதாரண வருடம் என அழைக்கப்படுகிறது

விக்கிபிடியாவில் சுட்டது

Edited by வானவில்
Posted

விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா. 1929ம் ஆண்டு இதற்கென ஒரு செட் சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டது.

*அமெரிக்காவில் உள்ள கூர்லி இயந்திர நிறுவனத்தினர் 1907ம் ஆண்டு துணி துவைக்கும் இயந்திரத்தினைக்(வாஷிங் மெசின்) கண்டு பிடித்தனர்.

*பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப் பட்டது.

*அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ், அலெக்சாண்டர், ரிமன் கியோர் 1850ம் ஆண்டு குளிர்சாதனப் பெட்டியைக்( ப்ரிட்ஜ்) கண்டு பிடித்தனர்.

*இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்கோனி என்பவர் 1895ம் ஆண்டு வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

*இங்கிலாந்தைச் சேர்ந்த பெயர்டு என்பவர் 1926ம் ஆண்டு தொலைக் காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்

பீகார் மாநிலத்தை முன்பு மரக நாடு என்று அழைத்தார்கள்.

*பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்தான். கதையின் பெயர் டேவிட் காப்பர் ஃபீல்டு.

*சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்தம். இதனைத் தொகுத்தவர் அர்ஜன் தேவ் என்பவர். இவர் ஐந்தாவது குரு.

*பிரிட்டீஷ் இந்திய காலத்தில் இந்தியாவின் கோடைகாலத் தலைநகர் சிம்லா.

*இந்தியாவின் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் ஐ.என்.எஸ் சக்ரா என்பதாகும்.

*விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா. 1929ம் ஆண்டு இதற்கென ஒரு செட் சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டது.

*கிரேக்க புராணத்தில் அட்லஸ் என்பவன் சொர்க்கத்தைப் பாதுகாக்கும் பெரும் வீரன். தற்போது பல்வேறு நிலவியல் வரைபடங்களின் தொகுப்பே "அட்லஸ்."

*செய்க்கன் -இது ஜப்பானின் ஹோன்ஷூ மற்றும் ஹொக்காய்டோ தீவுகளை இணைக்கும் சுரங்கப் பாதை. 53.85கி.மீ நீளமுடைய இச்சுரங்கத்தின் 23.3கி.மீ பாதை கடலுக்குக் கீழே 100மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

*பிரபல அமெரிக்க நகைச்சுவை நடிகர் பாப் ஹோப்பின் ஐந்து லட்சம் நகைச்சுவை துணுக்குகள் "லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்"- இல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பலவும் பயன்படுத்தப்படாதவை. பாப் ஹோப் 2003 ஜூலையில் காலமானார்.

*சீனாவில் குழந்தைகளின் வயதை அவர்கள் தாயின் வயிற்றில் உருவானதில் இருந்து கணக்கிடுகிறார்கள்!

*எத்தகைய கோடையிலும் அசோக மரத்தில் இலைகள் முழுமையாக உதிர்ந்து விடுவதில்லை!

*முள்ளங்கி என்பது கிழங்கு அல்ல, செடியின் வேர்!

*பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது!

*சென்னையில் 1876-ஆம் ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய ஆளுநர் பக்கிங்ஹாம் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக அடையாற்றையும் கூவம் ஆற்றையும் இணைக்கும் கால்வாய் ஒன்றை வெட்டினார். அவர் நினைவாக இது பக்கிங்ஹாம் கால்வாய் என்றழைக்கப்படுகிறது.

*எட்டாம் எண்ணின்மீது சீனர்களுக்குப் பெரும் பிடிப்பு உண்டு. சீனர்கள் 8-ஐ ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒரு சீன விமான நிறுவனம் “88888888” என்ற தொலைபேசி எண்ணைப் பெற செலவிட்ட தொகை 2,80,723 அமெரிக்க டாலர்கள்.

*எழுத்தாளர் கல்கிக்கு அப்பெயர் எப்படி ஏற்பட்டது தெரியுமா? திரு.வி.கவிடம் கொண்ட ஈடுபாடு காரணமாக ‘கல்யாணசுந்தரம்’ என்ற அவர் பெயரில் உள்ள “கல்”லுடன் தனது பெயரான 'கிருஷ்ணமூர்த்தி’ யின் முதல் எழுத்து சேர்த்து “கல்கி” என்று புனைபெயர் சூட்டிக் கொண்டார்.

*ருத்ராட்சக் கொட்டைக்கு அப்பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? ருத்ரன் என்றால் சிவன். அட்சம் என்றால் கண். சிவனுடைய கண் போன்ற மணி என்ற புனிதப் பொருளிலேயே ருத்ராட்சத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது.

_________________

Posted

உலகின் முக்கிய தீவுகள்,அமைந்துள்ள இடங்கள், பரப்பளவு (சதுரமைல்)

1.கிரீன்லாந்து வட அட்லாண்டிக் கடல் 8.40,000

2.பாபுவா நியூகினியா கிழக்கு இந்தியப்பெருங்கடல் 3,06,000

3.போர்னியோ கிழக்கு இந்தியப்பெருங்கடல் 2,80,100

4.மடகாஸ்கர் கிழக்கு இந்தியப்பெருங்கடல் 2,26,658

5.டாஃபின் ஆர்க்டிக் கடல் 1,95,928

6.சுமத்திரா இந்தியப் பெருங்கடல் 1,65,000

7.ஹான்ஷு பசிஃபிக் பெருங்கடல் 87,805

8.பிரிட்டன் வடகடல் 84,200

9.விக்டோரியா ஆர்ட்டிக் கடல் 83,897

10.எலியஸ்மேர் ஆர்ட்டிக் கடல் 75,767

11.செவிபஸ் இந்தியப் பெருங்கடல் 69,000

12.ஜாவா இந்தியயப் பெருங்கடல் 48,900

13.கியூபா கரீபியன் கடல் 44,218

14.வடக்கு நியூசிலாந்து பசிஃபிக் பெருங்கடல் 44,035

15.நியூ ஃபவுண்லாந்து வடஅட்லாண்டிக் கடல் 42,031

Posted (edited)

உலகின் பெரிய பாலைவனங்கள்,அமைந்துள்ள நாடு,பரப்பளவு (சதுரமைல்)

1.சகாரா வடஆப்பிரிக்கா 35,00,000

2.கோபி மங்கோலிய-சீனா 5,00,000

3.படகோனியா தெற்கு அர்ஜெண்டீனா 3,00,000

4.லெஹாரி தென் ஆப்பிரிக்கா 2,25,000

5.கிரேட்சாண்டி மேற்கு அவுஸ்ரேலியா 1,50,000

6.சிஹுவாஹுவான் மெக்சிகோ 1,40,000

7.தக்லிமாகன் சீனா 1,40,000

8.கராகும் துருக்மேனிஸ்தான் 1,20,000

9.தார் இந்தியா 1,00,000

10.கிஸில்கும் கஜகஸ்தான்-உஸ்பெக்கிஸ்தான ் 1,00,000

Edited by வானவில்
Posted

உலகின் உயரமான சிகரம், அமைந்துள்ள நாடுகள், உயரம் (அடி)

1.எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.

2.காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.

3.கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.

4.மகாலு நேபாளம்-தீபெத் 27,824.

5.தவளகிரி நேபாளம் 26,810.

6.மெக்கன்லி அமெரிக்கா 20,320.

7.அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.

8.கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.

9.மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.

10.வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

11.குக் நியூசிலாந்து 12,340.

Posted

உலகின் நீளமான நதிகள்,அமைந்துள்ள நாடுகள்,நீளம் (மைல்கள்)

1.நைல் வட ஆப்பிரிக்கா 4160.

2.அமேசன் தென் அமெரிக்கா 4000.

3.சாங்சியாங் சீனா 3964.

4.ஹுவாங்கோ சீனா 3395.

5.ஒப் ரஷ்யா 3362.

6.ஆமூர் ரஷ்யா 2744.

7.லீனா ரஷ்யா 2374.

8.காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.

9.மீகாங் இந்தோ-சீனா 2600.

10.நைஜர் ஆப்பிரிக்கா 2590.

11.எனிசேய் ரஷ்யா 2543.

12.பரானா தென் அமெரிக்கா 2485.

13.மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.

14.மிசெளரி ரஷ்யா 2315.

15.ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.

Posted

உலகில் உள்ள கடல்களும், அவற்றின் பரப்பளவும் (சதுரக் கி.மீ )

1.தென் சீனக் கடல் --- 29,64,615.

2.கரீபியன் கடல --- 25,15,926.

3.மத்திய தரைக் கடல --- 25,09,969.

4.பேரிங் கடல் --- 22,61,070.

5.மெக்சிகோ வளைகுடா --- 15,07,639.

6.ஜப்பான் வளைகுடா --- 10,12,949.

7.ஒக்கோட்ஸ்க் கடல் --- 13,92,125.

8.ஹட்சன் வளைகுடா --- 7,30,121.

9.அந்தமான் கடல் --- 5,64,879.

10.கருங்கடல் --- 5,07,899.

11.செங்கடல் --- 4,52,991.

12.வடகடல் --- 4,27,091.

13.பால்டிக் கடல் --- 3,82,025.

14.கிழக்கு சீனக்கடல் --- 12,52,180.

15.கலிஃபோர்னியா வளைகுடா --- 1,61,897.

16.அரபிக் கடல் --- 2,25,480.

17.ஐரிஸ் கடல் --- 8,650.

18.செயிண்ட் லாரன்ஸ் வளைகுடா --- 2,28,475.

Posted

உகலகிலேயே மிகப் பெரியவை

1.உலகிலேயே மிகப் பெரிய மலர் -- ரப்ஃலீசியா டக்வீட்.

2.உலகிலேயே மிகப் பெரிய பூங்கா -- யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா.

3.உலகிலேயே மிகப் பெரிய துறைமுகம் -- நியூயார்க்கில் உள்ளது.

4.உலகிலேயே மிகப் பெரிய நகரம் -- ஷங்காய்.

5.உலகிலேயே மிகப் பெரிய விமான் நிலையம் -- அரசர் கலீத் பன்னாட்டு விமான நிலையம். (சவூதி அரேபியா)

6.உலகிலேயே மிகப் பெரிய திரையரங்கு -- ராக்ஸி. (நியூயார்க்)

7.உலகிலேயே மிகப் பெரிய மசூதி -- உமய்யாத் மசூதி,டமாஸ்கல்.(சிரியா)

8.உலகிலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகம் -- எம்.வி.யூனிவர்சிட்டி.(ரஷ்ய ா)

8.உலகிலேயே மிகப் பெரிய ஏரி -- கால்பிஸ்கோயைமோரி. (கஸ்பியன் கடல்)

9.உலகிலேயே மிகப் பெரிய பெருங்கடல் -- பசிபிக் பெருங்கடல். (ஆழம் 12,925 அடி)

10.உலகிலேயே மிகப் பெரிய தீபகற்பம் -- அரேபியா.(1,250,000 சதுர மைல்)

Posted

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [sCUBA--self Cointained Underwater Breathing Apparatus]

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

Posted

நிலவு பற்றி

1.சூரியமண்டலத்தில் ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும்.

2.மனிதன் நிலவில் இறங்கிய நாள் ஜீலை21,1969.

(முதன் முதலில் இறங்கியவர் நீல் ஆம்ஸராங். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். இறங்குவதற்கு உதவிய ஏனியின் பெயர் "ஈகிள்." முதன் முதல் இவர் இடது காலை நிலாவில் எடுத்து வைத்தார். இரண்டாவாதாக இறங்கினவரின் பெயர் ''எட்வின் ஆல்ட்ரின்.''

நீல் ஆம்ஸ்ராங் இறங்கும்போது எட்வின் ஆல்ட்ரினும், கொலின்ஸ்சும் கூட இருந்தவர்கள்.)

3.நிலவிலிருந்து எடுத்த பாறையின் வயது 425 மில்லியன் ஆண்டுகள்.

4.நிலவை முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ.

5.நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட்.

6.நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான்-வுட்ரோபர்.

7.நிலவின் விட்டம் 3475 கி.மீ.

8.நிலவின் சராசரி அடர்த்தி 3.342.

9.நிலவு, பூமியிலிருந்து 384,403 கி.மீ தூரத்தில் உள்ளது.

10.நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3680 கி.மீ.

11.நிலவு தன்னைத் தானே சுற்றிவரும் காலம் 29 1/2 நாட்கள்.

12.நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.

13.நிலவின் பெரிய பள்ளம் பெய்லீ ஆகும்.

14.நிலவின் கனம் பூமியனுடையதில் 8ல் ஒன்று..

15.நிலவின் ஈர்ப்பு சக்தி பூமியினுடையதில் 6ல் ஒன்று.

16.சூரிய ஒளி சந்திரனில் மேற்பரப்பில் பட்டு நிலா பிரதிபலிக்கின்றது.

17.சந்திரனில் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிரினம் ''பட்டானி.''

18.சந்திரனில் முதன் முதல் கொல்ஃவ் விளையாடினவர் ''ஆலன் செப்பர்டு''

19.விண்வெளியில் இருந்து பார்த்தால் வானம் கருப்பாக தெரியும்.

20.அர்மகோலைட் (Arma Colite) என்பது நிலவில் மட்டுமே கிடைக்கும் பொருள் ஆகும்.

21.அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கிய இடத்திற்குப் பெயர் ''ஸீ ஆஃப் ட்ரான்க்யுலிட்டி'' (Sea of Tranquility)

Posted

கேப்டன் எட்பீச் என்ற அமொரிக்கர் இருபத்தாறாயிரத்து எழுநூற்றி இருபது மூன்று நாட்டிகள் மைல் தூரத்தை நீர்முழ்கிக் கப்பல் மூலம் உலகத்தை 60 நாள் 21 மணிநேரத்தில் எந்த ஒர் இடத்திலும் நிற்காமல் தொடர்ச்சியாக பயணம் செய்து உலகச் சாதனையைப் புரிந்தார்.

*************

கை கழுவப் பயந்த மன்னர் யார் தொரியுமா? இங்கிலாந்து மன்னர் முதலாம் கிங்ஜேம்ஸ் ஆவார். இவர் 22 (1566-1625) ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் கூட தனது வலக்கையை கழுவியது இல்லை. ஏனெனில் அவ்வாறு கழுவினால் தம் கைகள் சொர சொரப்பாகிவிடும் என்று பயந்து தினமும் காலை வேளையில், வலக் கை விரல்களின்நுனிப் பகுதியை மட்டும் ஈரத்துணியில் துடைத்துக் கொள்வார்.

*************

கொரியா முத்துக்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று. கொரியாவில் செஜீ தீவுக்கு அருகிலேயே உற்பத்தியாகின்றன. முத்துக்கள் வட்ட வடிவமாகத் தான் இருக்க வேண்மு என்பதில்லை. சிதைந்தும் உருமாறியும் இருக்கலாம். கொரியா ஆண்டுக்கு 5 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள முத்துக்களை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்கிறது.

*************

உலகில் மிகப் பொரிய நாடும், மிகச் சிறிய நாடும் ஒரே கண்டத்தில் தான் அமைந்திருக்கின்றன. அது ஐரோப்பாக் கண்டம் தான். அந்த நாடுகள் ரஷ்யவும், வாட்டிகனும், ரஷ்யாவின் சில பகுதிகள் ஆசியாக் கண்டத்திலும் அமைந்திருக்கின்றன எனவே ரஷ்யா ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த நாடு என்று சிலர் சொல்வது தவறு. இது ஐரோப்பாக் கண்ட நாடுகள்.

*************

மஞ்சள் நிற ஆடைகள் வெப்பத்தை தக்க வைத்திருக்கும் தன்மையைக் கொண்டதால் குளிர் காலத்தில் மஞ்சள் நிற ஆடைகளை அதிகம் அணிந்தால் குளிர் உறைக்காது.

*************

இரவில் படுக்கும் முன் வெங்காயத்தை தோல் உரித்து இலோசகத் தட்டி இரண்டு கைகளிலும்தேய்த்து மூக்கினால் கைகளை முகர்ந்து விட்டுப் பிறகு படுத்து விட்டால் இரவில் நல்ல தூக்கம் வந்து விடும்.

*************

எண் கூட்டு எண்ணெய் என்ற ஒரு வகை மூலிகை எண்ணெய் உடம்பு முழுவதும் தேய்த்து மஸாஜ் செய்து வந்தால் முழுங்கால் வலி, இடுப்பு வலி, பாரிவாதம், மூட வாதம் போன்ற நோய்களை குணப்படுத்தலாம். இவ்வாறு மஸாஜ் செய்த பிறகு நீராவிக் குளியல் அல்லது வெந்நீர்க் குளியல் செய்து வர வேண்டும் என்கிறார்கள். ஆயுர்வேத சித்த வைத்தியர்கள்.

*************

பூவரசம் பூவை தனது தேசியச் சின்னமாக வைத்துள்ள இரண்டு நாடுகள் எது தொரியுமா? அந்த நாடுகள் ஹங்கோரியும். ருமேனியாவும்.

*************

கொரியா நாட்டில் திருமணத்தின் போது மண மகள் கண்களை மூடிக் கொண்டு திருமணச் சடங்குகளில் ஈடுபடவேண்டும். தப்பி தவறி மணப்பெண் கண்களைத் திறந்துவிடக் கூடாது என்பதற்காக பிளாஸ்திரி போட்டுக் கண்களை மூடிவிடுவதும் உண்டு.

*************

நம் தலையில் சுமார் 75 ஆயிரம் தலைமுடிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு தலை முடியும் ஆண்டுக்கு 5 அங்குலம் விதமே வளர்ச்சி அமைகின்றன.

*************

பலூனை கொண்டு முதன் முதலில் வான் படையாக அமைத்த பெருமை பிரான்ஸ் நாட்டைத்தான் சேரும். 1793-ம் ஆண்டு முதன் முதலில் அமைத்தது.

*************

ஐரோப்பாவில் கி.பி.1657 இல் தேனீர் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை கண்டு பிடித்தவர்கள் சீனர்கள் என்றாலும் இதை முதன் முதலில் பயன்படுத்தியவர் இந்தியரும், ஜப்பானியரும் தான்.

*************

அர்ஜென்டினா நாட்டு மக்கள் மற்ற நாட்டு மக்களை விட மீன், கோழி போன்றவற்றை மிகக் குறைவாகவும், ஆடு, மாடு, பன்றி இவற்றின் இறைச்சியை மட்டும் அதிக அளவில் சாப்பிடுகின்றனர்.

*************

இங்கிலாந்தில் உலகிலேயே மிகப் பழமையான இரயில் நிலையம் உள்ளது. மான்செஸ்டா¢ல் உள்ள லிவர்பூல் ஸ்டேஷன் என்ற இந்த இரயில் நிலையம் 1830-ம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.

*************

உலகிலேயே அமொரிக்காவில் உள்ள புகழ் பெற்ற சுதந்திரச் சிலைக்குதான் வாய் அகலமாக அமைந்துள்ளது. இந்தச் சிலையின் வாய் அகலம் மூன்று அடி.

*************

உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகம் என்ற பெருமை 1683 -ம் ஆண்டு, ஆக்ஸ்போர்டிலுள்ள ஆஷ்மொலியன் அருங்காட்சியத்துக்குத் தான் உண்டு.

*************

பச்சைநிற ஆடைகளை தொடர்ந்து அணிந்து வந்தால் எப்போதும் இளமைத் துடிப்புடனும் நம்பிக்கையுடனும் செயல்பட முடியும் என்று முன்செல் என்ற அமொரிக்கர் கூறுகிறார்.

*************

முதல் பெண் நாவலாசிரியர் மிஸஸ் ஆப்ரா என்ற பிரிட்டன் பெண்மணி, இவர் எழுதிய நூலின் பெயர் தி அன்பார்சனேட் பிரைடு.

*************

ஸ்பர்ம் வேல் என்ற திமிங்கலத்துக்கு கடல் ஆழத்தை அறியவல்ல சவ்வுத்தோல் இதன் கண்களின் அருகே இருக்கிறது. தரையை அல்லது பாறையை மோதும் அளவுக்குத் தரைப் பகுதியை அடைந்ததும் இந்தச் சவ்வு மூளைக்கு எச்சாரிக்கை கொடுக்கும். உடனே இத்திமிங்கலம் சாரியான உயரத்திற்கு போய்விடும்.

*************

ஆஸ்திரேலியா கண்டத்தில் ஒடும் ஒரே ஆற்றின் பெயர் முர்ரே. 2550 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ஆற்றைத் தவிர வேறு எந்த ஆறும் இங்கு இல்லை. இதன் முக்கிய துணை ஆற்றின் பெயர் டார்லிங்

*************

ரேடியக் கதிர்கள், சூரியக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள் சம்பந்தப்பட்ட சாதனங்களுக்கு இடையில் பணிபுரிபவர்களும், நிலக்காரி சாயப் பொருள்கள் தார் தொடர்புள்ள வேலை செய்பவர்களையும் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது.*************

கென்யா நாட்டின் ஆரம்ப காலப் பொய் மாலிண்டி. இது பலருக்குத் தொரியாது.

*************

ஜார்ஜ் வாஷிங்கடனும், பெஞ்சமின், பிராங்க்ளினும் நீச்சலை அதிகம் நேசித்தார்கள். உடல் அழகும், ஆரோக்கியமும், உறுதியும் பெய வேண்டுமானால் ஒவ்வொரு பள்ளியிலும் கண்டிப்பாக நீச்சல் பயிற்சி வகுப்புகளும், அதற்காக ஒரு நீச்சல் குளமும் பள்ளி, கல்லூரிகளில் இருக்க வேண்டும் என்று புத்தகங்களில் எழுதினார்கள். அங்கங்கே இது பற்றிப் பேசியுமிருக்கிறார்கள். இவர்களுடைய புத்தகங்களைப் படித்த இங்கிலாந்து நாட்டுக் காரர்கள் தாம் முதன் முதலில் நீச்சல் கலையையும் ப்ளளியில் ஒரு பாடமாக சேர்த்தனர். அதன் பிறகே இவர்களின் சொந்த நாடான அமொரிக்காவிலும் நீச்சலும் ஒரு பாடமாக ஆக்கப்பட்டது.

*************

பூமியின் சுற்றளவைப் போல சுமார் 400 மடங்கு அதிகச் சுற்றளவு கொண்டது சூரியன். அதே போல பூமியிலிருந்து சந்திரன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அதைப் போல் 400 மடங்கு தூரத்தில் சூரியன் உள்ளது. இதனால் தான் சூரியனும், சந்திரனும் ஏற்ககுறைய ஒரே அளவு உள்ளவை போல் நமக்குத் தோன்றுகின்றன.

*************

நல்ல பாம்புக்கு பழிவாங்கும் குணம் உண்டென்பது உண்மையா? நல்லபாம்புக்கும் பழிவாங்கும் குணம் உண்டு என்பது நம் நாட்டில் பரவலாகக் காணப்படும் நம்பிக்கையாகும். இது அறிவியல் பூர்வமான ஆதாரம் அற்றது.

பொதுவாக எந்த பாம்பும் யாரையும் தாமாக வந்து தாக்குவதில்லை. அவற்றைத் தொ¢ந்தோ தொ¢யாமலோ மனிதன் சீண்டும் போது தான் அவை தற்காப்புக்காத் தான் தாக்குகின்றன. வயல் வெளியிலோ தோட்டங்களிலோ ஒரு மனிதன் நடந்து செல்லும்போது அவன் பார்வையில் ஏதோ ஒரு நேரமே பாம்புகள் தென்படுகின்றன. மாறாக தம் மறைவிடங்களில் இருந்து மனிதனை பார்க்கும் வாய்ப்பு பாம்புகளுக்கு அதிகம் உண்டு. எனினும் அவை ஒடிவந்து அவனைத் தாக்குவதில்லை. தற்காப்புக்காக மட்டுமே அவனைத் தாக்கும்.

*************

உமிழ் நீர் (எச்சில்) வரக் காரணமென்ன? அவை எவ்வாறு உண்டாகிறது. இதனை கீழே துப்புவது தவறு என்கிறார்களே, ஏன்? உமிழ்நீர் சுரப்பிக்கான மையம் மூளையில் முகுளத்தில் அமைந்துள்ளது. வாயில் உணவு உமிழ்நீருடன் கலந்து சுவைக்கப்பட்டு, உணவு குழலினுள்ள தள்ளப்படுகிறது. உணவு அல்லது அதன் மணமும், சில சமயங்களில் அருவறுக்கத்தக்க தூண்டல்கள் உமிழ் நீர் மையத்தைத் தூண்டி. அதைச் சுரக்க செய்கிறது. உமிழ்நீரில் சொரிமான என்ஸைம் டையலின் அல்லது உமிழ்நீர் ஆல்·பா அமிலேஸ், மியூசின் போன்றவை உணவு சொரிமானத்திற்குக் காரணமாக உள்ளன.

ஆனால், உமிழ் நீரைக் கீழே துப்பவுவது தவறு. ஏனெனில், முதலில் அது ஒர் ஆபாசமான பழக்கம். மற்றது, நோய்வாய்ப்பட்ட சிலாரின் உமிழ்நீரில் கிருமிகள் வெளிப்பட்டு தரையில் விழுந்து, மற்றவர்களுக்கு நோய் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

*************

எதனால் இருதயம் என்லார்ஜ் ஆகிறது? இதை உடற்பயிற்சியின் மூலம் சாரி செய்ய இயலுமா? இருதயம் என்லார்ஜ் ஆவதை கார்டியோ-மெகாலி என்றோ, கார்டியோ மையோபதி என்றே அழைப்பர். இதற்கு மிகப் பல காரணங்கள் (பரம்பரை அம்சம். வைரஸ். பாக்டீரியா. ரிக்கட்சியா. நாளமில்லா சுரப்பி வியாதிகள், நீரிழிவு நோய், தவறான மருந்துக்கள், எக்ஸ் கதிர்வீச்சு இன்னபிற உள்ளன. உடற்பயிற்சியைவிட, யோகாசனங்கள் ஒரளவு இதமளிக்கலாம் என நம்பப்படுகிறது. இது பற்றி எனக்குத் தொரியாது.

.*************

உடலில் இரத்தம் எவ்வளவு வேகத்தில் ஒரு உறுப்பிலிருந்து மற்றொரு உறுப்பிற்குச் செல்கிறது.

70 கிலோ ¦டையுள்ள மனிதனில் சுமார் 5600 மில்லி மீட்டர் இரத்தம் உள்ளது. இந்த இரத்தம் சுமார் 90,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்கள் வழியாக நிமிஷத்துக்கு 70, 72 தடவை செல்கிறது. இடது வெண்ட்¡¢க்கிள் சுருங்க அதனுள் உள்ள சுத்த இரத்தம் உடலின் பல பகுதிகளை அடைய 3/10 வினாடி ஆகிறது.*************

நம் கால்களில் (தோல் பகுதியில்) அடிபட்டு விட்டால் இரத்தம் ஒழுகிய இடங்களில் இரத்தம் நின்றுவிட்டவுடன் ஒருவித நீர்இருக்கிறதே, ஏன், அது எதனால்? அது தீமையா' காலில் அடிபட்டவுடன் ஒழுகும் இரத்தம் உறையப் பல பொருள்கள் இரத்தத்தில் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இரத்த உறைவை ஏற்படுத்துகிறது. இரத்த உறைவு முடிந்தவுடன் எஞ்சியுள்ளது செல்கள் இல்லாத இரத்த வடி நீர் தான் அது. அதனால் எந்தவித தீமையும் கிடையாது.

*************

Posted

இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது? ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள் மின்னின் வீ¡¢யம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீ¡¢யத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.

*************

மின்சாரக் கசிவு எதன் காரணமாக ஏற்படுகிறது? இதைத் தடுத்து விபத்திலிருந்து மீளுவது எப்படி? மின் கம்பிகளின் மேலுள்ள் இன்சுலேட்டர் சேதமடைந்து கம்பி ஏதாவது மின் கடத்துகிற பொருளின் மேல் படுவதால் மின் கசிவு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் கையில் ஒரு டெஸ்டரை வைத்துக் கொண்டு சந்தேகப் படுகிற இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்து அங்கங்கே இன்சுலேஷன் சா¢யாக உள்ளதா என்று சோதித்து விட வேண்டும்.

*************

குடிநீரை ஒரு சி¡¢ஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் என்ன நிகழும்? குடிநீரை ஒரு சி¡¢ஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் நிகழ்வது நீ¡¢ன் தன்மையைப் பொருத்து உள்ளது. கொதிக்க வைக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட, சுத்தமான நீராக இருந்தால், இரத்தத்தில் கிரகிக்க்பட்டு சிறு நீ¡¢ல் வெளியேறி விடுகிறது. அசுத்தமான நீர் உட்செலுத்தப்பட்டால் சீழ்கட்டி உண்டாகும். பெரும்பாலான ஊசி மருந்துகள் நீ¡¢ல் கலக்கப்படடே கொடுக்கப்படுகின்றன.

*************

ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையபக நிற்கிறது இது எப்படி? அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள் தகவமைப்புகள் என்ன? ஹெலிகாப்டா¢ன் மேலே உள்ள விசிறி காற்கைக் குடையும் போது மேலே இழுக்கப்படுகிறது. திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா? அதேபோல திருகு வடிவத்தில் காற்றைக் குடையும் படி அந்த விசிறிகள் அமைந்திருக்கும். விசிறிகள் மேலே தூக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். ஆனால் இவ்வாறு மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டா¢ன் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும்.

*************

தாமரை இலையில் தண்ணீரை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒட்டவே ஒட்டாது. முத்து முத்தாகத் தண்ணீர் உருண்டு ஒடும். அது போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டாது.

*************

ஒட்டகம் போல் தண்ணீர் உணவு ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழக் கூடிய இன்னொரு பிராணி எது தொ¢யுமா? காட்டு ஆடு.

*************

பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகளே கிடையாது.

யானையின் துதிக்கையிலே 40000 தசைகள் உண்டு. ஆனால் ஒர் எலும்புக் கூட கிடையாது.

*************

இரண்டு மனிதர்களை சுமந்து கொண்டு குதிரையைப் போல வேகமாக ஒடவல்ல சக்தி வாய்ந்தது, தீக்கோழி.

*************

உடம்பில் சிலருக்குத் திட்டுத் திட்டாக தேமல் முகம், உடம்பில் படரும். இதை நீக்க ஒரு புதிய மருந்து: ஹைபோ உப்பைச் சுடுநீ¡¢ல் கரைத்து ஒரு பஞ்சினால் தடவி வ்நதால் தேமல் மறைந்து விடும். ஹைபோ உப்பு என்பது பிலிம் நெகடிவ்களைக் கழுவ உதவும் ஒர் இரசாயனப் பொருள்.

*************

அதிக அளவில் ரப்பரை உற்பத்தி செய்து வரும் நாடு மலேசியா.

*************

நீ¡¢லும் விண்ணிலும் நன்கு செயல்படக் கூடிய திறனுடைய விமானப்படகு இப்போது இங்கிலாந்தில் தயா¡¢க்கப்பட்டுள்ளது. யுத்த நேரங்களில் இது பொ¢தும் உதவும் என்பதால் இங்கிலாந்திடம் இது பொ¢தும் உதவும் என்பதால் இஙகிலாந்திடம் ஒரு மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க பல நாடுகளும் வா¢சையில் நிற்கின்றனவாம். உலகில் இத்தகைய இரகப்படகு இது ஒன்றுதான். இந்த படகின் பெயர் என்ன தொ¢யுமா? சுந்தர் லேண்ட்

*************

பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வாகனம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன? பூமியின் மேல் உள்ள காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தொ¢கிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.

*************

நம் உடம்புக்கு சிறிதளவு அயோடின் என்ற இராசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இது உணவின் மூலம் கிடைக்காவிட்டால் காய்டர் கட்டிகள் உண்டாகின்றன. அயோடின் கடல்மீன், கடல் பாசிகளில் அதிகம் இருக்கிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் அயோடின் இருப்பதால் இவற்றைச் சாப்பிடுகிறவர்களுக்கு காய்டர் கட்டிகள் உண்டாவதில்லை. கடற்கரைக் காற்றில் அயோடின் கலந்து வருவதால் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகலாம்.

*************

ஜெருசலம், இதற்கு சிட்டி ஆப்பீஸ் (அமைதி நகரம்) என்றே பெயர். இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்நகரம் மூன்று மதத்தினா¢ன் புனிதப் பகுதிகள் உள்ளன. புரப்பட் முகமத் மசூதி என்ற முஸ்லிம் இனத்தார்கள் தங்கக் கோபுரம் கொண்ட மசூதி. பூதர்கள் புனிதமாக என்னும் வெய்லிங்வால் என்ற உயர்ந்த சுவர். ஏசுகிறிஸ்து பிறந்த இடம் ஆகியவையே இவை.

*************

உலகிலேயே பாராசூட் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஈடுபடும் வீரர்கள் ரஷ்யாவில் தான் இருக்கிறார்கள். இந்த விளையாட்டில் செய்யப்பட்ட 63 உலக சாதனைகளுள் 50 சாதனைகளை ரஷ்ய வீரர்கள் தாம் செய்துள்ளனர். எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள இது சம்பந்தமான பயிற்சியில் பங்கு கொள்கின்றனர்.

*************

உலகிலேயே கென்யா நாட்டில் தான்அதிக அளவில் பிறப்பு விகிதம் அதிகமாகிறது. 1000 பேர்களுக்கு 55 குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளது. மிகப் பொ¢ய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு இது. பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆப்பி¡¢க்க நாடுகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் எல்லோரும் விவசாயிகள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். அதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.

*************

மனித இனம் முழுக்க முழுக்கத் தாவர வகையைச் சேர்ந்த இனமே என்று பி¡¢ட்டன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதற்காக மனிதர்களின் உணவுத் திட்டத்தை ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளனர். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் மிருகங்களை உணவாகப் பயன்படுத்தியதால் ஆயிரக்கணக்கான புதிய நோய்களைச் சம்பாதித்துக் கொண்டுள்ளான். மிருக உணவு மென்மையான தாவர இனத்தைச் சேர்ந்த மனிதனை பலவீனமாக்கி, உடலில் குறைகளையும், நோய்களையும் ஏற்படுத்திவிட்டது. ''இனி மனித இனம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமு. எனவே சைவ உணவுத் திட்டத்தையே அனைவரும் பின்பற்ற வேண்டும்'' என்று குரல் கொடுத்துள்ளனர். இந்நாட்டு விஞ்ஞானிகள்.

*************

ஆசியாவிலேயே மிகப் பொ¢ய காற்றாலை மின்சார நிலையம் இந்தியாவில் தான் உள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் தயா¡¢க்கும் திறனுடைய இந்த மின்சார நிலையம் குஜரத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள லம்பா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

*************

டெலஸ்கோப் எவ்விதம் செயல்படுகிறது? பொ¢ஸ்கோப்பில் இரண்டு சமதள கண்ணாடிகள் ஒன்றுக்கொன்று இணையாக 4 சாய்வில் பொருத்தப்பட்டிருக்கும். மேலேயுள்ள பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் முதல் ஆடியில் பட்டு ஆடி 45 சாய்வில் உள்ளது. 90 யில் பிரதிபலித்து கீழே உள்ள அடியில் படும் அந்த அடி 45 சாய்வில் உள்ளதால் 90 யில் பிரதிபலித்து ஒளிக்கதிர் பார்ப்பவருடைய கண்ணை வந்தடையும். இந்த பொ¢ஸ்கோப்பைப் பயன்படுத்தி கடலுக்கடியில் மூழ்கியிருந்தபடியே கடலின் மேலே கப்பல் வருவதையும், குகைகளில் பதுங்கிக் கொண்டே வெளியில் வருகின்ற அபாயக்களையும் அறிந்து கொள்ள முடியும்.

*************

பாம்பு எவ்விதம் ஒடுகிறது? அதற்குக் கால் உண்டா? பாம்புக்குக் கால்கள் கிடையாது. அடிப்புறச் செதில்களாலேயே பாம்பு தரையைப் பற்றி ஒடுகிறது. செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகரும் போது செதில்கள் தரையில் மோதிக் கொள்வதால் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது.

*************

பல்லி தலை கீழாகக் கூட எப்படி நடக்க முடிகிறது? பல்லியின் கால் பாதங்களில் உட்குழவு இருக்கும். தன் பாதங்களினால் முதலில் சுவர் அல்லது தரையில் பதிய வைக்கும். பிறகு பாதத்தைச் சுருக்கும்போது உட்குழிவுகளில் வெற்றிடம் உண்டாகிறது. வெற்றிடம் உண்டாவதால் அதனை நிரப்ப வெளிக்காற்று அங்கு வரும். அதனால் பாதம் பிடிப்பை விடாது. இவ்விதம் பல்லி தலை கீழாக நடக்க முடிகிறது.

*************

இரததம் உறைதல் என்றால் என்ன? உடலில் ஏதேனம் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் ·பைப்¡¢னோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.

*************

பயத்தினால் சிலருக்கு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிந்து இறந்து விட நோ¢டுவது எதனால்? பயத்தின் போது இதயம் மிக வேகமாகச் சுருங்கி வி¡¢கிறது. அப்போது திடீரென இரத்தம் அதிக அழுத்தத்தில் இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தத்துடன் இரத்தம் இவ்வாறு இரத்தக் குழாய்களின் வழியே செல்லும்போது திடீரென சில வேளைகளில் இரத்தக் குழாய் வெடித்து விடும். அதனால் இரத்தம் வெளியேறி வாய், மூக்கு வழியாக வடியும், அதனால் மனிதன் இறந்து விடக்கூடும்.

*************

வெற்றிலை போடும் பழக்கம் நல்லதா கெட்டதா? வெற்றிலை போடும் பழக்கம் ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிகமாகப் போடக் கூடாது, கட்டாயமாகப் புகையிலை சேர்கக்க் கூடாது.

வெற்றிலை ஜீரணத்திற்கு தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து நாம் உட்கொள்கிற சுண்ணாம்பில் கால்ஷியம் இருப்பதால்நம் உடலுக்குக் கால்ஷியம் சத்து கிடைக்கிறது.

*************

இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்? கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீ¡¢ன் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.

ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள வீதம் நீ¡¢ன் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.

*************

மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்? மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீ¡¢லிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீ¡¢ன் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.

*************

ஒர் இரும்புக் குண்டை கடலில் போட்டால் மூழ்கிவிடும். அதே இரும்பு தட்டையாக, தகடாக கடலில் போடப்பட்டால் மூழ்குவதில்லை. காரணம் என்ன தொ¢யுமா? தண்ணீ¡¢ல் போடப்படும் பொருளின் எடையை விட அது வெளியேற்றும் நீ¡¢ன் எடை அதிகமாக இருந்தால் அது மிதக்கிறது. எனவே தட்டையான இரும்பு மிதக்கிறது.

*************

Posted

*வியர்வை நம் உடலில் இருந்து வெளியேறும்போது காற்றினால் அதன் ஆவியாகும் தன்மை அதிகரிக்கிறது. வியர்வை நீர் வியாகும்போது உடலில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பத்தால் நமது உடல் குளிர்ச்சியாகிறது. எனவேதான் காற்று வீசும்போது நமது உடல் குளிச்சியை உணர்கின்றது!

*சிங்கம், புலி, போன்ற ஊனுண்ணிகள் உப்பை விரும்புவதில்லை. ஏனெனில், இவை அடித்துத் தின்னும் விலங்குளின் இறைச்சியில் போதுமான அளவு உப்பு உள்ளது. ஆனால், தாவர உண்ணிகளுக்கும் மனிதனுக்கும் உப்பு மிகவும் அவசியமாகிறது. எனவே, அவை உப்பைப் பெரிதும் விரும்புகின்றன. வீட்டில் நாய், வளர்ப்பவர்கள் அதற்கு உணவாக அளிக்கும் இறைச்சியில் உப்பு சேர்க்காமல் சமைப்பதன் காரணம் இதுதான்.

*சிங்கத்தின் பாலை தங்கக் கிண்ணத்தைத் தவிர வேறு எதில் வைத்தாலும் கெட்டு விடும்.

பிரான்ஸ் நாட்டில் 16ம் லூயி மன்னனின் அரண்மனையில் வாழ்ந்த அரச குடும்பத்துப் பெண்கள் அனைவரும் வெறும் சூப் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தனர்! அதிக அளவு உணவை கடித்து சாப்பிட்டால் விரைவில் முகத்தில் சுருக்கம் விழுந்துவிடும் என்று அவர்கள் கருதினார்கள்!

*ஜப்பான் நாட்டுக்கு அந்த பெயரை வைத்தவர்கள் சீனர்கள். சீன மொழியில் ஜப்பான் என்றால் சூரியன் உதிக்கும் நாடு என்று பொருள்.ஜப்பானியர் தங்கள் நாட்டை நிப்பான் என்பார்கள். இதற்கும் அவர்கள் மொழியில் சூரியன் உதிக்கும் நாடு என்றுதான் பொருள்! உலகின் கீழ்க்கோடியில் இருக்கும் ஜப்பானில்தான் நாள்தோறும் சூரியன் முதன்முதலில் உதிக்கிறது.

*நீலத் திமிங்கிலம் பிறக்கும்போது அதன் எடை சுமார் 3000கிலோ. இது முழு வளர்ச்சியடைந்த ஒரு யானையின் எடைக்குச் சமமாகும்! னால் பிறந்து இரண்டு வருடங்களில் குட்டித் திமிங்கிலம் அடையும் எடை சுமார் 26,000கிலோவாகும்.

*தவளைகளை பாம்புகள் இரையாகப் பிடித்து உண்பது உண்டு. னால் பாம்பைத் தவளைகள் பிடித்து உண்பது தெரியுமா உங்களுக்கு? அப்படி ஒரு தவளை இருக்கிறது. அதன் பெயர் கோலியாத் தவளை. ப்பிரிக்காவில் அதிகமாகக் காணப்படும் இந்த தவளை 4அடி நீளம் வரை வளர்கின்றன.

*சூப்பர்சானிக் வேகம் என்பது கடல் மட்டத்தில் காற்றில் பரவும் ஒலியின் வேகத்தை விடவும் அதிகமான வேகமாகும். அதாவது மணிக்கு சுமார் 1,216 கி.மீக்கும் அதிகமாகும். இந்த மிகையொலி வேகத்தை மாக் எனும் அளவால் குறிப்பிடுவார்கள்.

*மும்பை நகரில் உள்ள மே.இ.எம் மற்றும் சேத் ஜி.எஸ் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் புராதன சுஸ்ருதா மருத்துவரின் முறைப்படி கெட்ட ரத்தத்தை நோயாளிகளின் உடம்பில் இருந்து உறிஞ்சி எடுக்க அட்டைப் பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர்.

*உலகின் மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம் 859-ல் மொரோக்கோ நாட்டின் கருயின் நகரில் ஆரம்பிக்கப் பட்டது.

*இந்தியாவில் மேற்கத்திய பாணியில் ஏற்பட்ட முதல் கல்லூரி 1817ம் ஆண்டு கல்கத்தாவில் தொடங்கப்பட்ட "பிரசிடென்சி" கல்லூரிதான்.

*இந்தியாவிலேயே 192 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா பல்கலைக் கழகம்தான் மிகப்பெரிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஆகும்.

*இங்கிலாந்து நாட்டினரால்தான் முடி வெட்டிக் கொள்ளும் பழக்கம் தோன்றியது.

*முதன்முதலாக 1853ல் லண்டனில் மீன் காட்சிச் சாலை அமைக்கப்பட்டது.

*செவரன் பிரிட்டனின் நீளமான ஆறு ஆகும்.

*31.12.1999ல் பனாமா கால்வாயை பனாமா நாட்டிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. பனாமா கால்வாயை ஒப்படைக்கும் விழா பனாமாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதன்மூலம் பனாமா முழு சுதந்திரம் அடைந்தது.

*உலகில் அதிகமானோரால் பேசப்படும் மொழிகள் மொத்தம் 10. அவை மாண்டரின்(சீனம்), ஸ்பானிஷ், ஆங்கிலம், வங்காளம், இந்தி, போர்ச்சுகீசிய மொழி, ரஷ்யன், ஜப்பானிய மொழி, ஜெர்மன், சீனம் ஆகிய பத்து மொழிகள் ஆகும். உலகில் மொத்தம் 2,796 மொழிகள் உள்ளன.

*பாண்டிச்சேரியில் மொத்தம் 52மொழிகள் பேசப்படு கின்றன. இது இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசும் மாநிலமாகும்.

*14.4.1944 முதல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி தீயணைப்பு தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது.

*தேநீர் சீன நாட்டவரால் தோன்றியது. அதேபோல சீட்டாட்டம் தோன்றியதும் சீனாவில்தான்.

*காப்பி அரபு நாட்டவரால் கண்டுபிடிக்கப் பட்டது

*அமெரிக்கா என்ற பெயர் இடம்பெற்ற முதல் உலக மேப் 1507ம் ஆண்டு மார்ட்டின் வால்ட்ஸ் முல்லரால் வரையப்பட்டது. அந்தப்படம் அதிக விலைக்கு கிறிஸ்டி நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.

*ஆங்கிலத்தில் முதலைகளை 'குரோக்கடைல்' என்றும் 'அலிகேட்டர்' என்றும் இரண்டு வகையாகக் குறிப்பிடுகின்றனர். இரண்டுக்கும் உருவத்திலும் நிறத்திலும் அதிக வேறுபாடுகள் உள்ளன. குரோக்கடைல் எனப்படும் முதலையின் தாடை(வாய்) அகலமானதாகவும் அலிகேட்டரின் தாடை குறுகலாகவும் இருக்கும். வாயை மூடியபிறகும் குரோகடைலின் 4வது பல் வெளியே தெரியும். அலிகேட்டருக்கு வெளியே தெரியாது. பொதுவாக குரோக்கடைல்கள்தான் நீளமாக இருக்கும்

Posted

*மெக்டொனால்ட் நிறுவனம், மாதத்திற்கு சராசரியாக 110,000 ஐஸ்கிரீம் கோன்களை விற்பனை செய்கிறது.

*திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருமானம் 530 கோடி ரூபாய்கள். இதுவே இந்தியாவில் அதிக வருமானம் கொண்ட டிரஸ்ட் ஆகும்.

*இரண்டு நாளைக்கு ஒருமுறை மீன் இறைச்சியை சாப்பிட்டால் மாரடைப்பு வருவது 30சதவீதம் குறையும் என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

*காற்று வீசும் திசைக்கு எதிராகத் தனது மூக்கு இருக்கும்படியாகவே நாய் எப்போதும் படுக்கும். எதிரி வருவதை மோப்பத்தால் சுலபமாக உணரவே இவ்வாறு செய்கிறது.

*ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வகை சிலந்திகள், மீன் பிடித்து உண்ணுகின்றன. நீர் நிலைகளின் அருகே இரண்டு கால்களில் நின்றபடி மற்ற ஆறு கால்களையும் மீனைப் பிடிக்கத் தயாராக வைத்திருக்கும். சிறு மீன்கள் கரை ஓரமாக வரும் போது பாய்ந்து பிடித்துக் கொள்ளும்.

*விமானத்தில் பயணம் செய்யும் போது, சாக்லேட் கொடுக்கின்றனர். ஏன் தெரியுமா? சில பயணிகளுக்குத் தலைச் சுற்றல், மயக்கம் போன்றவை விமானப் பயணத்தின் போது ஏற்படும். சாக்லேட்டில் உள்ள குளுகோஸ் இவை வராமல் தடுக்கிறது. அது மட்டுமல்ல... சாக்லேட்டின் வாசனையும், சுவையும் பயணிகளுக்கு வாந்தி வராமல் தடுக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்கள் உணவு விஷயத்தில் ஆர்வமின்றி இருப்பர். இவர்களின் சுவையையும், சக்தியையும் அதிகரிக்க இவர்கள் சாக்லேட் அல்லது புளித்த சுவை கொண்ட மிட்டாய் போன்றவற்றை சாப்பிடலாம். தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு சாக்லேட்டைமென்றால், சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக எழுத முடியும்.

*மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை மடிப்புகள் மிகவும் அபாரமானவை. இவை கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன் அதி அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால்தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கின்றனர் நரம்பியல் அறிஞர்கள்.

*நமது நாட்டில் 5 வயது சிறுவனாக இருந்தபோதே "ரவிகிரண்' என்பவன் 60க்கும் மேற்பட்ட ராகங்களைப் பிரித்து அறியவும், பின்னர் பாட்டு இசைக்கவும் அறிந்திருந்தான். அதிகமாகப் பாடங்களை கிரகித்து அறிந்து, பின் தேர்வில் மிகச் சிறப்பாக எழுதிவிடும் அற்புத மூளை படைத்த சிறுவர்களும் இருக்கின்றனர். இவர்களது மேதா விலாசத்தைக் கட்டிப்போட முடியாது.

இந்நிலையில்தான் பிரிட்டனில் உள்ள "கிளாஸ்கோ' பல்கலைக் கழகத்தில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த "வில்லியம் தாம்ஸன்' என்ற சிறுவன் பேராச்சரியப் படத்தக்க அறிவாற்றலுடன் விளங்கி, தேர்வுகளில் முதல் தர மதிப் பெண்களைப் பெற்றமையால் அவனுக்கு 10 வயதிலேயே பல்கலைக் கழக பட்டம் வழங்கப்பட்டது. இச்சிறப்பினை வேறு எவரும் பெற்றதே இல்லை. இவனே பிற்காலத்தில் "லார்ட் கெல்வின்' என்று அழைக்கப்பட்டு பிரிட்டனின் சிறந்த பேரறிஞனாக விளங்கி வந்தான். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது எத்தனை உண்மை பாருங்கள்!

*தேள் முட்டையிடுவதில்லை. குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகள் தாங்களாகவே நடமாடும் பருவமடையும் வரை, தாய்த்தேள் தன் மார்பிலேயே அவைகளை வைத்துக் கொண்டிருக்கும்.

*சிங்கத்தின் வாலிலே இருக்கும் மயிர்க் கற்றையை விலக்கிப் பார்த்தால், முனையில் ஆணி போல் கடினமான ஒரு நகம் இருக்கும்.

*சுண்டெலிகள் பாடுகின்றன! மிகவும் உச்சஸ்தாயியில் பாடுவதாலேயே நாம் அதைக் கேட்க முடிவதில்லை. சில சமயங்களில் பாட்டின் ஒரு பகுதி கீழ்ஸ்தாயிக்கு இறங்கும் போது கேட்க முடிகிறது. ஆராய்ச்சியில் கண்ட உண்மை இது.

*ஆமைக்கு பல் கிடையாது. கனத்த ஈறு போன்ற அமைப்பாலேயே அது உணவுகளைச் சுவைத்து விழுங்குகிறது.

*முதலைக்கு மூக்கிலும் பல் உண்டு. முட்டைக்குள் உள்ள முதலைக்குட்டி மூக்கில் உள்ள பல்லால் உடைத்துக் கொண்டுதான் வெளியே வரும்.

*பிறக்கும்போது 1 பவுண்டு எடையுள்ள கரடிக்குட்டி ஒரு வயதை அடையும் போது அதன் எடை 100 பவுண்டாகி விடுகிறது.

*உணவு, நீர் எதுவும் இன்றி 15 நாட்கள் தாக்குப்பிடிக்கும் சக்தி குதிரைக்கு உண்டு.ஒரு வருடத்தில் தன் எடையைப் போல் பத்து மடங்கு உணவை குதிரை உட்கொள்கிறது.

*பெருங்குடல் புற்றுநோய் காரணமாக அமெரிக்காவில் 2003ல் 57,000பேர் இறந்தனர். இதே காலத்தில் இந்த நோயினால் 150,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்த இடத்தை இந்த நோய் பெறுகிறது.

*முன்னைய பிரிட்டீஷ் பிரதமர் சர்ச்சில் வளர்த்த கிளி ஒன்று இன்றும் உயிரோடு உள்ளது. சார்லி என்ற பெயருடைய அதற்கு 104 வயதாகிறது.

*பிரிட்டனைச் சேர்ந்த சோதனைச்சாலை தொழில்நுட்ப நிபுணரான ஜூலிவார்ட் என்ற 40வயது பெண்மணிக்கு முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் இரண்டு குழந்தைகளும் மூன்றாவது பிரசவத்தில் மூன்று குழந்தைகளும் பிறந்தன.

*மனோரஞ்சிதப் பூவுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் வழங்கப்படும் பெயர் "யாங்- யாலாங்". அதாவது 'பூக்களில் இதுவே பூ' என்று பெயர்.

*குவைத் என்றால் அரபி மொழியில் "சின்னக் கோட்டை".

*நமது நகம் சராசரியாக நாளொன்றுக்கு 1/250அங்குலம் வளர்கிறது.

*பிரான்ஸ் நாட்டில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்றில் எடை பார்க்கும் எந்திரம் ஒன்று இருக்கிறது. ரொம்பவும் குண்டான பெண்கள் ஏறிநின்றால், "மன்னிக்கவும், தங்கள் எடை......" என்ற சீட்டு வருகிறது.

*அமெரிக்காவில் வெஸ்ட் ரஞ்சு நகரில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நினைவுக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே அவர் விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிய நோட்டுப் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். மொத்தம் 25,000 நோட்டுப் புத்தகங்கள்.

*மேற்கிந்தியத் தீவுகளில் முன்பெல்லாம் கீரிப்பிள்ளை கிடையாது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வளர்த்தார்கள். எதற்குத் தெரியுமா? பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அவற்றை ஒழிக்க

Posted

உலகில் மொத்தம் 180 வகையான குதிரைகள் இருக்கின்றன. மிகக் குட்டையான வகைக் குதிரையின் பெயர் பாலபெல்லா. இதன் உயர் 75 செ.மீட்டர். மிகப்பெரிய குதிரையின் பெயர் ஷயர். இதன் எடை 910கிலோகிராம். குதிரைக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. இன்பமான நிகழ்வு அல்லது மிகவும் துன்பமான நிகழ்ச்சி நடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரும் அதை நினைவில் வைத்திருக்குமாம் குதிரைகள்

*அண்டார்டிக் பகுதியில் காணப்படும் நீலத் திமிங்கலத்துக்கு ஒரு நாளைக்கு பத்து லட்சம் கலோரி சத்து தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு தேவை 2,500 கலோரிதான். இதற்காக நீலத் திமிங்கலம், கிரில் எனப்படும் கடற்பாசியை விழுங்கி விடுகிறது. இந்தக் கடற்பாசியில் 56 சதவீதம் புரதச் சத்து இருக்கிறது.

******************************

*உலகெங்கும் ஏப்ரல் முதல் தேதியை எல்லாநாடுகளும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடுகின்றன. ஆனால் பிரான்ஸ் நாட்டில் மட்டும் அன்றைய நாள் மீன்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

********************************

*பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே அவை நெடுநேரம் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் வியர்த்துக் கொட்டுவதில்லை.

********************************

*பென்சிலின் என்னும் உயிர் காக்கும் மருந்து பென்சிலியம் என்னும் பூஞ்சையிலிருந்து எடுக்கப்படுகிறது.

பெனிசிலியம் அழகிய அங்ககப் பொருட்களின் மீது வளரும்.

பாலினம் இல்லாத இனப் பெருக்கத்தின் மூலம் புதிய பெனிசிலியம் உருவாக்கப்படுகிறது.

பெனிசிலியம் ஆல்கா பிரிவினத்தைச் சார்ந்ததாகும்.

பெனிசிலியம் பாலாடைக் கட்டி தயாரிக்க பயன்படுகிறது.

பெனிசிலியம் எக்ஸ்பேன்சம் என்னும் பூஞ்சை ஆப்பிள், திராட்சையில் அழுகலை ஏற்படுத்தக் கூடியவை.

*******************************

*இந்தியாவில் முதன் முதலில் தபால் தலை 1852-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்தியத் தபால் தலைகள் வட்டவடிவில் இருந்தன.

*******************************

முள்ளம் பன்றி காட்டுப்பிராணி. இதன் உடம்பு முழுவதும் விரைப்பாக நிறுத்தும் சக்தியை இதன் தசைகள் பெற்றுள்ளன. இவை பகல் நேரங்களில் புதர்களிலும் மரப் பொந்துகளிலும் ,பாறை இடுக்கு களிலும் மறைந்திருக்கும். இரவு நேரங்களில் வெளிப் பட்டு இரை தேடச் செல்லும். பகை மிருகங்கள் தாக்க வந்தால் உடம்பிலுள்ள முட்களை விரைப்பாக நிமிர்த்தி, பந்து போல் உருண்டையாக்கிக் கொள்ளும். பாம்புக்கடி விஷம் முள்ளம் பன்றியை ஒன்றும் செய்யாது. இது சுண்டெலி, தவளை போன்ற பறவைகளின் முட்டைகளைத் தின்னும்.

***

காண்டா மிருகம் மிகவும் பெரிய உருவமுடையது. 1.7 மீட்டர் உயரமும், 2 ஆயிரம் கிலோ எடையும் கொண்டது. 50 சென்டி மீட்டர் நீளமுள்ள ஒற்றைக் கொம்பை உடையது. (இரட்டைக் கொம்பு கொண்ட காண்டா மிருகங்களும் உண்டு) இதன் தோற்றம்தான் பயமுறுத்துவதாக இருக்கிறதே தவிர இது சாந்தமான மிருகம். சைவப் பிராணி. தழையையும் புல்லையுமே உணவாகக் கொள்கிறது. இதன் கொம்பு அடர்த்தியான ரோமங்களால் ஆனவை. இந்த கொம்பு எதிரிகளை விரட்டவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது. காண்டா மிருகத்துக்கு கால்களில் மூன்று விரல்கள் உள்ளன.

***

பறவை இனத்தில் மூன்றில் ஒரு பகுதி பாடக் கூடிய பறவைகள். அவைகளில் வானம்பாடி, இரவுப் பறவை ஆகியவை சிறந்த பாடும் பறவைகளாகும். ஐரோப்பாவில் பல வகையான பாடும் பறவைகள் உள்ளன.

பாடும் பறவைகள் பொதுவாக மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவே பாடுகின்றன. வழி தவறிச் சென்ற பறவைகளை அழைப்பதற்காகவும் சில பறவைகள் பாடுகின்றன. தன் எல்லைக்குள் மற்ற பறவைகள் வரக் கூடாது என எச்சரிக்கை விடுப்பதற்காகவும் சில பறவைகள் பாடுகின்றன.

***

விலங்குகள், பூச்சிகள், ஒரு வித வாசனையை வெளிப்படுத்தி அதன் மூலம் செய்திகளைத் தெரிவிக் கின்றன. இந்த வாசனைப் பொருளை `பெரமோன்'கள் என்றழைக்கிறார்கள்.

மான்கள் இனத்தில் ஒன்றான சிவப்பு மான், தன் கண்களுக்கு அருகே சுரக்கும் ஒரு வித நீரை புதர்கள் மீதும், மரங்களின் மீதும் வீசித் தெளித்து அதன் மூலம் அவற்றின் எல்லையை வரையறுத்துக் கொள்கின்றன.

***

குழந்தைகள் இனிப்பை விரும்பிச் சாப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக உடல் நலமாக உள்ள குழந்தைகள் எப்போதும் துருதுருவென்று இருக்கும். தூங்கும் நேரம் தவிர, எஞ்சிய வேளைகளில் ஓடியாடி விளையாடிக் கொண்டும் வேறு ஏதாவது செய்து கொண்டும் இருக்கும்.இவ்வாறு சுறுசுறுப்பாக இயங்கும்போது மிகுந்த ஆற்றல் செலவாகிறது. இதனை ஈடு செய்ய எளிதாக ஆற்றலையளிக்கும் சர்க்கரைப் பொருட்கள் தேவைப்படுகிறது. சுவை மிகுந்த இனிப்புப் பண்டங்களில் கார்போஹைடிரேட் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இவற்றை பெரிதும் விரும்புகின்றன.

***

பாபா வெஸ்ட்ரே ஐலண்ட் என்கிற அமெரிக்கப் பயணிகள் விமானம் வெஸ்ட்ரே ஐலண்டுக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையிலுள்ள ஒன்றரை மைலுக்காக பறக்கிறது. பயண நேரம் இரண்டே நிமிடங்கள்தான்.

***

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு வகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் டாலிம் என்ற பொருள் சர்க்கரையை விட 5 ஆயிரம் மடங்கு இனிப்பானது.

***

தெருவிளக்கைக் கண்டு பிடித்தவர், முதன் முதலில் அரசியல் கார்ட்டூன் வரைந்தவர், வாடகை நூலகத்தை ஆரம்பித்தவர், ஆடும் நாற்காலி, ஸ்டவ், இடிதாங்கியைக் கண்டுபிடித்தவர், செய்தித்தாளை தபாலில் அனுப்பும் முறை, தெருவை சுத்தம் செய்யும் பிரிவை துவக்கியவர், நவீன தாபல்நிலையத்திட்டத்தை உருவாக்கியவர்- இப்படி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர், பெஞ்சமின் பிராங்க்ளின்.

***

இத்தாலியிலுள்ள ரெல்ரேன்கோ என்னும் சிறு நகரத்தில் ஒரு நாய் ஆறு குட்டிகளைப் போட்டது. அவற்றில் 5 கருப்பு வெள்ளை நிறத்தில் இருந்தன. ஒன்று மட்டும் பச்சை நிறத்தில் இருந்தது. இதுதான் உலகின் முதல் பச்சை நிற நாய்க்குட்டி. 25 நாட்களுக்குப்பின்னர் நாய்க் குட்டியின் நிறம் தனி பச்சை நிறமாகவே மாறிவிட்டது.

***

இந்தியாவில் புகை பிடிக்கும் பழக்கத்தை போர்ச்சுகீசியர்கள்தான் அமெரிக்காவிலிருந்து 17-ம் நூற்றாண்டு வாக்கில் கொண்டு வந்தனர்.

அது மட்டுமல்ல, போர்ச்சுகீசியர்கள் பொடி போடும் பழக்கத்தையும் தங்களுடன் கொண்டு வந்தனர். புகையிலைச் செடியும் அமெரிக்காவிலிருந்துதான் இந்தியாவிற்கு வந்தது.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு சுவாசப்பை புற்று நோயும், பைப் பிடிப்பவர்களுக்கு உதட்டுப் புற்று நோயும், சுருட்டு பயன்படுத்துபவர்களுக்கு நாக்கில் புற்றுநோயும் ஏற்படும்.

***

Posted

*இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

*கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

*கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.

*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.

*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...

அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.