Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினர் கொடுக்கும் வீடு எனக்குத் தேவையில்லை! சுட்டுக்கொல்லப்பட்ட சுலக்சனின் தந்தை

Featured Replies

படுகொலை செய்யப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நாங்கள் வீடு ஒன்றிற்காக அமைச்சரை சந்திக்க வரவில்லை என சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் தந்தையார் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கஜன், சுலக்சனின் பெற்றோருக்கு இராணுவத்தின் உதவியுடன் வீடமைத்து வழங்கப்படுமென அமைச்சர் சுவாமிநாதன் இன்றைய தினம் யாழ்.பல்கலையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில்அமைச்சரிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிசாரின் துப்பாக்கிசூட்டு பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் பெற்றோர்களை மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்துக்கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலின்போது, பெற்றோர்களிடத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர், கஜன் மற்றும் சுலக்சனின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இன்று நான் வந்திருப்பது எதற்கென்றால் உடனடியாக சில நிவாரணங்களை வழங்குவதற்காகவே..

படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரினதும் பெற்றோர்களுக்கு வீடு ஒன்றினைக் கட்டிக் கொடுப்பதற்கு இராணுவத்து டன் கலந்தாலோசித்திருந்தேன்.

இராணுவத்தினர் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். என்னுடைய அமைச்சின் ஊடாக அதற்குரிய பணத்தினை பெற்றுக்கொடுப்பேன்.

கஜனுடைய குடும்பத்தினருக்கு நிலம் இருப்பதால் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டிகொடுக்கப்படும் சுலக்சனுடைய குடும்ப த்தினருக்கு நிலம் இல்லாத காரணத்தினால் பிரதேச செயலரிடம் கலந்தாலோசித்துவிட்டு அவர்களுக்கும் வீட்டினைக் கட்டிக் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்

மேலும் இந்தியன் வீட்டுத்திட்டத்தை விட விசாலமான வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கப்படும்.

இரண்டு வாரத்துக்குள் இரு குடும்பத்தினருக்கும் நஷ்டஈடு கொடுப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்

இந் நிலையில் மாணவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று என்னிடம் கேட்டுக்கொண்டார்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் சகோதரர்களுக்கு அவர்களின் கல்வித் தகைமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

முன்னதாக நான் கடந்த முறை மாணவத் தலைவர்களை சந்தித்தபோது உடனடியாக இழப்பீடு வழங்குவதாகக் கூறியி ருந்தேன்.

இதற்காகவே இன்றைய தினம் யாழ் வந்தபோது பல்கலைகழக மாணவர்களை சந்தித்துள்ளேன். என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுலக்சனின் தந்தை

படுகொலை செய்யப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். நாங்கள் வீடு ஒன்றிற்காக அமைச்சரை சந்திக்க வரவில்லை.

எனது ஒரு மகன் காணாமல் போக செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது எனது மற்றைய மகன் சுலக்சனும் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்டிருகின்றார்.

இந் நிலையில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் வீடு எனக்கு தேவையில்லை.

தனது ஐந்து பிள்ளைகளையும் நான் ஒருவனாக நின்றே வளர்த்துள்ளேன் . சுலக்சன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் அடுத்து எனது மகளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

படுகொலை செய்யப்பட்டஎங்களுடைய பிள்ளைகளுக்கு நீதி வேண்டும். இராணுவத்தினர் கட்டிக்கொடுக்கும் வீட்டினைப் பெறநான் இங்கே வரவில்லை என்றார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/security/01/125399?ref=editorpick

  • கருத்துக்கள உறவுகள்

மானமுள்ள தமிழன். மானமிழந்த தமிழனின் அன்பளிப்புக்கு தலைவணங்க மறுத்து நீதியை கேட்டு வலியுறுத்தியுள்ளார். பாவம் தன்னைப்போல், தனயனை இழந்த தந்தையையும் கணக்குப்போட்டு விலைக்கு வாங்க எண்ணியிருப்பார் இந்தப் பெரிய மனிசன்.

  • தொடங்கியவர்

கண் துடைப்பு நட்ட ஈடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. குறைந்தது ரூபா 10 கோடியை (ரூபா 100 மில்லியனை) நட்ட ஈடாக உடனடியாக கொடுக்க வேண்டும்.   

அவர்கள் படித்து வேலைக்கு போயிருந்தால் தமது 35 வருட தொழில்செய் வாழ்வில் குறைந்தது ரூபா 25.2 மில்லியனும் கூடியது ரூபா 56.7 மில்லியனும் உழைத்திருப்பார்கள். மேலும் குடும்பவாரிசுகள் உருவாக்கமும் அழிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மனவேதனை, அவர்களை உருவாக்க பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு படுகொலை செய்த சிங்கள அரச பயங்கரவாத இயந்திரம் குறைந்தது ரூபா 10 கோடியை (ரூபா 100 மில்லியனை) நட்ட ஈடாக உடனடியாக கொடுக்க வேண்டும்.   

மேலும் படுகொலை செய்த சிங்கள போலீஸ் பயங்கரவாதிகளுக்கு அதிகபட்ச (20  வருடங்கள்) சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.

யாழ் நூலகத்தை எரித்த, இனக்கலவரங்களை அரங்கேற்றிய, தமிழர் சொத்துக்களைக் கொள்ளையடித்த, தமிழினப் படுகொலைகளை செய்துவரும்  சிங்களப் படுகொலைகாரக் கும்பல்களின் நீண்டகால ஏஜென்ட் சுவாமிநாதன் வெறும் 10 இலட்சத்துடன் குடும்பத்தை ஏமாற்ற முனைவது கடும் கண்டனத்துக்கு உரியது.

  • தொடங்கியவர்

வீடுகள் தேவையில்லை ; பிள்ளைகளை கொன்றவருக்கு தண்டனை பெற்றுக்கொடுங்கள் (வீடியோ இணைப்பு)

aa.jpg

வீட்டுக்காக நாங்கள் இங்க வரவில்லை தமது பிள்ளைகளை கொலைசெய்தவர்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமெனவும் அமைச்சர் சுவாமிநாதனிடம் யாழில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று  விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அண்மையில் யாழில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜனின் பெற்றோரையும் பல்கலையின் உபவேந்தர் உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது கடந்த விஜயத்தின்போது தாம் கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பாக கலந்துரையாடியதோடு பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர்களால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

குறிப்பாக உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு இராணுவத்தின் உதவியுடன்  வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்றும் மாணவர்களின் குடும்பத்தாருக்கு உரிய தகைமைகள் இருக்கும் பட்சத்தில் வேலையாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்தைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவன் சுலக்ஷனின் தந்தை தமக்கு எவ்வித சொத்துக்களோ வீடுகளோ வேண்டாம் என்றும் குற்றமிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.virakesari.lk/article/13712

  • தொடங்கியவர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.