Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீரியல் கில்லர்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வெள்ளிக்கிழமை நல்ல மழை பெய்கிறதே என்று விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தேன். தொலைக்காட்சியில் காலையிலிருந்தே தொடர்கள் ஓடிக்கொண்டே இருந்தன. நான் எப்போதுமே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என்பதால் அதன் வீரியம் எனக்கு இது வரை உறைக்காமல் போனதில் ஆச்சரியமில்லை. அன்றைக்கு ஹாயாக சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சித் தொடர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

எல்லா சீரியல்களிலும் ஏதாவது ஒரு மனைவி தன்னுடைய கணவனை இன்னொருத்திக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். திருமணம் செய்து வைத்ததோடு நின்று விடாமல் அவரும் மனைவியாகவே தொடர்கிறார். அல்லது கணவனின் குடும்பத்தில் வேலைக்காரியாகவோஇ கொடுமைகளைச் சகித்துக் கொள்ளும் இயலாமை நிறைந்த பெண்ணாகவோ சித்தரிக்கப்படுகிறார். போதாக்குறைக்கு ‘உங்களைப் பாத்துட்டே இருந்தா போதும்’ என்பன போன்ற வசனங்கள் வேறு. அடக்கடவுளே !!

சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தொலைக்காட்சித் தொடர்கள் செய்து விடமுடியும் என்பதை வீட்டுக்கார அம்மாக்களின் கவலை தோய்ந்த உரையாடல்களே எடுத்துக் காட்டுகின்றன. ‘அபிக்கு என்ன ஆகும்’ என்பதே தற்காலத் தாய்மார்களின் தலைபோகும் விவாதக்களமாகி விட்டது. பெரும்பாலான வீடுகளில் சாப்பிடும் நேரத்தையும்இ கடைக்குச் செல்லும் நேரத்தையும்இ இன்ன பிற வேலைக்கான நேரங்களையும் தொலைக்காட்சி தொடர்களே நிர்ணயம் செய்கின்றன. ‘வாங்க.. சீக்கிரம் போய் ரேஷன் வாங்கிட்டு வருவோம்… ஆரம்பிச்சுடப் போவுது சீரியலு..’

இந்த தொடர்கள் எல்லாம் என்ன சொல்ல வருகின்றன ? மனைவி தன்னுடைய கணவனை இன்னொருத்திக்குத் திருமணம் செய்து வைப்பது தியாகத்தின் சின்னமென்றா ? அல்லது கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தால் அது சாதாரணம் என்றா ? திருமணத்துக்கு முன்னால் உறவு கொள்வதும்இ தாய்மை அடைவதும் தவறில்லை என்றா ? அல்லது இதெல்லாம் ரொம்ப சகஜம்இ இப்படி உங்கள் வீட்டில் நடந்தாலும் கவலைப்படாதீர்கள் என்றா ? இந்த தொடர்கள் வளர்ந்து வருகின்ற இளைஞர்களின் மனதில் அல்லது இளம் பெண்களின் மனதில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன என்று நினைத்தால் திகிலடிக்கிறது.

முன்பெல்லாம் ஒரு சில இயக்குனர்களின் திரைப்படங்களில் அதிர்ச்சி தரும் திருப்பங்களுக்காக இப்படி ஏதேனும் கலாச்சார மீறல்கள் இடம்பெறும். இப்போதோ அதுவே கலாச்சாரம் என்று மக்களை நம்பச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவோ என்று பயமாக இருக்கிறது. எந்த தொடரிலாவது ஒரு கணவனுக்கு இரண்டு மனைவியரோ அல்லது கொச்சையான ஒரு உறவோ இல்லாமல் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்ததில் பதில் என்னவாயிருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.

‘பியூனுக்கு பத்து ரூபாய் குடுத்தா வேலை முடியும்’ என்று பேசப்பட்டு வந்த ஒரு விஷயம்இ இன்றைக்கு ‘பியூனுக்கு காசு குடுக்காம எப்படி முடியும்’ என்று மாறி விட்டிருக்கிறது. லஞ்சம் என்பது ஒரு கட்டாயக் கடமை போலவும்இ சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டு நீதிபதிகளால் அங்கீகரிக்கப் பட்டது போலவும் தான் இப்போது பேசப்படுகிறது. இதே நிலமை நாளை உறவுகள் சார்ந்த உரையாடல்களிலும் நிகழும் அபாயம் இருக்கிறது. குறைந்த பட்சம் ‘ஊர் உலகத்துல இல்லாததையா செஞ்சுட்டான்’ என்றாவது விவாதங்கள் எழும் காலம் தொலைவில் இல்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்றும்இ குடும்ப உறவு என்றும்இ ஆணாதிக்கம் இல்லாத பெண்களுக்கு உரிமை கொடுக்கும் சமுதாயம் என்றும் நம்முடைய சமுதாயத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணங்களையெல்லாம் இந்த தொலைக்காட்சித் தொடர்கள் சின்னாபின்னமாக்கி விடுகின்றன. மாறாக புதிய ஒரு அபாயகரமான கலாச்சாரத்தைக் குடும்பத்தின் உள்ளே சத்தமில்லாமல் விதைத்துச் செல்கின்றன

மேல்நாட்டுத் திரைப்படங்களால் நம்முடைய கலாச்சாரம் கெட்டு விட்டது என்று தயவு செய்து இனிமேல் யாரும் கொடிபிடிக்காதீர்கள். தொலைக்காட்சித் தொடர்களால் கெட்டுப் போகாத எதையும் மேல்நாட்டுத் திரைப்படங்கள் கெடுக்கவில்லை. அவர்கள் திரைப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘இது அவர்கள் கலாச்சாரம்’ என்று சொல்லும் நாம் நம்முடைய தொடர்களைப் பார்க்கும்போது இது தான் நமது கலாச்சாரம் என்று சொல்ல முடிகிறதா ?

காதலித்துத் திருமணம் செய்து கொண்டவனைஇ இன்னொருத்திக்குக் கட்டி வைத்து விட்டு தன் கணவன் என்று சொல்லிக் கொண்டு ஒரு பாத்திரம் நடமாடஇ ஒருத்தியைத் திருமணம் செய்துவிட்டு பழைய காதலியுடன் சுற்றிக் கொண்டு ஒரு பாத்திரம் சுழலஇ முதல் மனைவி மூலமாகப் பிறந்த மகளுக்கு இரண்டாவது மனைவி மூலமாகப் பிறந்த மகன் தொல்லை கொடுக்க என்று சுழலும் ‘கோலங்கள்’ தொடர் உறவுகளின் மீது நாம் வைத்திருக்கும் மரியாதையை ஒரேயடியாக உடைத்து எறிகிறது. அது இன்றைக்கு தமிழகத்தின் நம்பர் ஒன் தொடர் என்று அறியும்போது உண்மையிலேயே அதிர்ச்சியாய் இருக்கிறது.

கோலங்கள் என்றல்ல கணவருக்காகஇ மலர்கள்இ கஸ்தூரி என்று எந்த தொடரை எடுத்தாலும் இதே நிலமை தான். அலுவலகத்தில் வேலை செய்யும் கணவன் மீது வீணான சந்தேகத்தைக் கூட இந்த தொடர்கள் பலவேளைகளில் கொளுத்தி விடுகின்றன என்பதே நெஞ்சைச் சுடும் உண்மை.

தொடர்களை எடுக்கும் இயக்குனர்களுக்கு ஒரு தரமான தொடரைத் தரவேண்டும்இ சமுதாயத்துக்குத் தேவையான செய்திகளைச் சொல்லவேண்டும் என்னும் அடிப்படை மனித சிந்தனை இல்லாமல் போவது தான் இப்படிப்பட்ட தரமிழந்த தொடர்கள் வருவதற்கான முக்கிய காரணம். அவர்களுடைய எண்ணமெல்லாம் பார்க்கும் தாய்மார்களையெல்லாம் உச்சுக் கொட்ட வைக்கவேண்டும் என்பதும்இ பரிதாபப்பட வைக்க வேண்டும் என்பதும் தான். அதன் தாக்கம் வீடுகளில் எந்த அளவுக்கு விழுதிறக்குகிறது என்பதைப்பற்றிய அக்கறை அவர்களுக்கு அறவே இல்லை.

பெரிய திரையில் எப்போதேனும் இதே கருத்துடன் ஒரு திரைப்படம் வந்தால்இ ‘உயிர்’ திரைப்படம் போலஇ கொந்தளித்து எழும் ஊடகங்களும்இ அமைப்புகளும்இ பொதுமக்களும் சத்தமில்லாமல் நம்முடைய வாசலுக்குள் வந்து கலாச்சார மீறல் செய்யும் இந்த தொடர்களை ஆரத்தி எடுத்து வரவேற்பது ஏனென்பது எனக்கு விளங்கவே இல்லை. இருபது நாள் ஓடும் ஒரு திரைப்படத்துக்கே இந்த எதிர்ப்பு எனில் இரண்டு வருடங்கள் இழுத்தடித்துஇ சொல்ல வரும் சாக்கடைக் கருத்தை ஆர அமர சொல்லி விட்டுப்இ போகும் தொடர்களுக்கு எவ்வளவு பெரிய ஒரு எதிர்ப்பு எழுந்திருக்க வேண்டும் ! ஆனால் எழவில்லையே !

ஆபாசத் திரைப்படங்களோஇ வன்முறைத் திரைப்படங்களோ சமுதாயத்தில் ஏற்படுத்தி விடாத தாக்கத்தை இந்த தொடர்கள் செய்து விட முடியும். நட்ட பின் ஒரு வருடம் வேர்களை மட்டுமே வளர்த்துக் கொள்ளும் மூங்கில் மரம் போல இந்த விஷ விதைகள் நம்முடைய சமுதாய மக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது. குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையேல் அறுவடை காலத்தில் அவதிப்பட்டே ஆக வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல விசயமும் காட்டுறாங்க சார்.பெண்களுக்கு பெண்களே வில்லியா வாறாங்க சார். அது பெரிய மாற்றம் தானே சார். ஆளுக்காள் குத்திக்கிட்டு அழிஞ்சிடுவாங்கல்ல. :icon_idea:

ஆனா ஒன்றுசார் படிச்சது முதல் கிழவி வரை சீரியல் என்றா கண் வெட்டாமல் பார்குதுகள். அதுக்கென்றே ஆயிரக் கணக்கில செலவு செய்து தொலைக்காட்சி சனல்களையும் வரவழைக்கினம். பலருக்கு சொந்த நாட்டில நடக்கிறது தெரியாது. சீரியலில எது எப்ப நடந்தது என்று கேளுங்க கதாசிரியரை விட அழகா காது மூக்கு பல்லு வாய் வைச்சிச் சொல்லுவினம். :P :lol:

ஒரு மனைவி தன்னுடைய கணவனை இன்னொருத்திக்கு கல்யாணம் செய்து வைப்பது சின்னத்திரையில் ஒரு சிம்பிளான விடயம். தமிழ் நாட்டினர் இதைத் தியாகமாக நினைக்கின்றார்கள் என நினைகின்றேன். அல்லது புருசனின் துரோகத்தனங்களை உபத்திரங்களை தாங்க முடியாது மற்றவர்களின் தலையில் கட்டிவிடுகின்றார்களோ தெரியாது. இவ்வாறான பாத்திரங்களில் நடிப்பதில் நடிகை ராதிகாவுக்கு இணை ராதிகாவேதான். இதைவிட எனது ஆராய்ச்சிகள் மூலம் நான் கண்டுபிடித்த உண்மை, இப்படியான பாத்திரங்களில் நடிப்பவர்கள் தமது நிஜ வாழ்க்கையிலேயே ஆண்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஆகக்குறைந்தது ஒரு முறையாவது வாழ்க்கையில் விவாகரத்து எடுத்தவர்கள். உதாரணத்திற்கு ராதிகா, சுகன்யா, நளினியை குறிப்பிடலாம்.

ஒரு நல்ல விசயமும் காட்டுறாங்க சார்.பெண்களுக்கு பெண்களே வில்லியா வாறாங்க சார். அது பெரிய மாற்றம் தானே சார். ஆளுக்காள் குத்திக்கிட்டு அழிஞ்சிடுவாங்கல்ல. :)

உமக்கு ஆள் வச்சு அசிட் அடிச்சா தான் திருந்துவீர் போல! :angry:

லண்டன் மாநகரில் வசிக்கும் ஜனங்களே, முக்கியமாக எம் தாய்குலங்களே!

இந்த Misogyny நொடுக்கு நெடுக்காலபோறவரக்கு முடிவு கட்ட வேண்டும்...இதை செய்பவர்களுக்கு தகுந்த சன்மானங்களும் மேலும் பல விருதுகளும், பட்டங்களும், பரிசுகளும் காத்திருகின்றன. :D

உங்கள் உதவி அவசரமாக தேவை படுகிறது...கீழுள்ளவற்றில் உங்களுக்கு வசதியானதை தெரிவு செய்யலாம். :P

1. அசிட் முட்டை அடிப்பது

2. Sniper அடிப்பது

3.பிஸ்டல், ஏ.கே 47 கூட பாவிக்கலாம், தெரிவு உங்களுடையது

4.ஆளை வெட்டி போடலாம்( உங்களுக்கு பிடித்த ஆயுதத்தை பாவிக்கலாம், உதாரணதிற்க்கு கத்தி, அரிவாள்)

5. இவரின் வீட்டிற்க்குள் ஊடுரிவி இவரின் மனைவியை கையுக்குள் போட்டு, நஞ்சூட்டி கொல்லலாம்.

6.வேலைத் தளத்தினுள் ஊடுறுவி அங்கேயும் உங்கள் கைவரிசையை காட்டலாம்...

7. இவரின் காருக்குள் குண்டை பொருத்தி விடலாம்..

8. கிளைமோர் வைத்து வாகனத்துடன் ஆளை மேலுக்கு அனுப்பலாம்

9. கைக்குண்டு தாக்குதலும் செய்யலாம்..

மேலும் பல தாக்குதல் யுக்திகள் காத்திருகின்றன..அவை இராணுவ இரகசியங்கள் என்பதால், தனிமடலில் தொடர்பு கொண்டு தாக்குதல் திட்டத்தை தெரிந்து கொள்ளவும். உங்கள் தாக்குதல் முறையை தெரிவு செய்த பின் உங்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கபடும்! :P :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவேறவா அசிட் அடிக்க முடியாது. அதுதான் முகமூடி போட்டிருக்கமே. துப்பாக்கியால் சுட முடியாது காரணம் சன்னம் எம்மை அணுகவே முடியாது. கிளைமோர் வைக்க முடியாது. எங்க போறம் எங்க வாறம் என்றது யாருக்குமே தெரியாது. கத்தி பொல்லு போத்தல் மெற்றல் பார் பிஸ்ரல் ரமிழ் காங்ஸிடம் இருக்கு. நாம் தானே காங்குக்கே கோலா வேண்டிக் கொடுக்கிறவங்களாச்சே..! :)

இப்படி அடிமட்டமா திட்டம் போட்டு முடி கொட்டப் போகுது மூக்கி. எதுக்கும் ஆளுக்காள் அடிபட்டு நீங்களே அழிஞ்சிடுவிங்க. நமக்கேன் உயிர்ப் பாவம். :lol::D

Edited by nedukkalapoovan

இதுவேறவா அசிட் அடிக்க முடியாது. அதுதான் முகமூடி போட்டிருக்கமே. துப்பாக்கியால் சுட முடியாது காரணம் சன்னம் எம்மை அணுகவே முடியாது. கிளைமோர் வைக்க முடியாது. எங்க போறம் எங்க வாறம் என்றது யாருக்குமே தெரியாது. கத்தி பொல்லு போத்தல் மெற்றல் பார் பிஸ்ரல் ரமிழ் காங்ஸிடம் இருக்கு. நாம் தானே காங்குக்கே கோலா வேண்டிக் கொடுக்கிறவங்களாச்சே..! :)

இப்படி அடிமட்டமா திட்டம் போட்டு முடி கொட்டப் போகுது மூக்கி. எதுக்கும் ஆளுக்காள் அடிபட்டு நீங்களே அழிஞ்சிடுவிங்க. நமக்கேன் உயிர்ப் பாவம். :lol::D

நான் மொட்டையா போனாலும் பரவாயில்லை...அதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.ஆனால்

உமக்கு குழி பறிக்காமல் விட மாட்டோம்...எங்கள் புலனாய்வு பிரிவு தனது பணியை ஏற்க்கனவே ஆரம்பித்து விட்டார்கள்!...இங்கே குறிப்பிட்டவை மிக சில தாக்குதல் முறைகளே!...

முடிந்தால் உம்மை காப்பாத்தி கொள்ளும்! :P

  • கருத்துக்கள உறவுகள்

நான் மொட்டையா போனாலும் பரவாயில்லை...அதெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை.ஆனால்

உமக்கு குழி பறிக்காமல் விட மாட்டோம்...எங்கள் புலனாய்வு பிரிவு தனது பணியை ஏற்க்கனவே ஆரம்பித்து விட்டார்கள்!...இங்கே குறிப்பிட்டவை மிக சில தாக்குதல் முறைகளே!...

முடிந்தால் உம்மை காப்பாத்தி கொள்ளும்! :P

சீரியல் பாணில சொன்னா.. முடிஞ்ச முடிச்சுக்காட்டுங்க சும்மா சவுண்டு விடுறதுண்ணா காக்கா குருவியும் தான் விடும். பெண்கள் நீங்க ஊளையிடுவது நரிக்குத்தான் கோவத்தை உண்டு பண்ணும்..! இன்னும் மூக்கால வழியிற இரத்தம் நிக்கல்ல. இரத்தம் ஓடி ஓடியே கோமாக்குப் போகப் போறீங்க அதுக்கு முதல் மங்காத்தா மகமாயிட்ட வேண்டிக்குங்க. பத்திரமா போய் சேரனுண்ணு..! :D:)

சீரியல் பாணில சொன்னா.. முடிஞ்ச முடிச்சுக்காட்டுங்க சும்மா சவுண்டு விடுறதுண்ணா காக்கா குருவியும் தான் விடும். பெண்கள் நீங்க ஊளையிடுவது நரிக்குத்தான் கோவத்தை உண்டு பண்ணும்..! இன்னும் மூக்கால வழியிற இரத்தம் நிக்கல்ல. இரத்தம் ஓடி ஓடியே கோமாக்குப் போகப் போறீங்க அதுக்கு முதல் மங்காத்தா மகமாயிட்ட வேண்டிக்குங்க. பத்திரமா போய் சேரனுண்ணு..! :lol::)

நாங்கள் எப்பவோ செயலில் இறங்கி விட்டோம்..நீங்க தான் பயத்தில் சவுன்ட் விட்டு கொன்டிருக்கிறிங்க... :D

நீங்கள் எல்லோரும் என் 'விழுபுண்ணால் வழிந்தோடும் குருதியை' கிண்டல் பண்ணுவதால், எனது படத்தை மாத்தலாம் என்று முடிவு பண்ணியுள்ளேன். :lol:

அப்புறமா, நெடுக்க்ஸ், எனக்கு நீண்ட நாளாவே ஒரு சந்தேகம்..நீங்களும் இப்ப காக்கா குருவி என்றவுடன் தான் எனக்கும் ஞாபகத்துக்கு வந்திச்சு...உங்களை ஏன் எல்லோரும் 'குருவி, குருவி' என்று கூப்பிடுறாங்க? :P :P

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எப்பவோ செயலில் இறங்கி விட்டோம்..நீங்க தான் பயத்தில் சவுன்ட் விட்டு கொன்டிருக்கிறிங்க... :)

நீங்கள் எல்லோரும் என் 'விழுபுண்ணால் வழிந்தோடும் குருதியை' கிண்டல் பண்ணுவதால், எனது படத்தை மாத்தலாம் என்று முடிவு பண்ணியுள்ளேன். :lol:

அப்புறமா, நெடுக்க்ஸ், எனக்கு நீண்ட நாளாவே ஒரு சந்தேகம்..நீங்களும் இப்ப காக்கா குருவி என்றவுடன் தான் எனக்கும் ஞாபகத்துக்கு வந்திச்சு...உங்களை ஏன் எல்லோரும் 'குருவி, குருவி' என்று கூப்பிடுறாங்க? :P :P

விழுப்புண்ணல்ல.. அடி விழுந்த புண்.

காக்கா குருவி என்றது பேச்சில பொதுவாக எல்லாரும் சொல்லுறது. இங்க குருவி என்றது அது யாரோ ஒருத்தர் முன்னாடி இருந்தவராம். அவர் கூட சிலருக்கு பிரச்சனையாம். அவரை எல்லாரும் சேர்ந்து துரத்தி அடிச்சம் என்று முரசு வேற கொட்டினாங்களாம். அதுதான் குருவி திரும்பி வந்திடுமோ என்ற பயத்தில வாறவன் போறவனை எல்லாம் குருவி குருவி என்று பயங்காட்டுறாங்க. நீங்க தான் பயப்பிடாத பொண்ணாச்சே. எதுக்கும் மூக்கால வழில இரத்ததைத் துடையுங்க. அடிவாங்கினது அப்படியே தெரியுது. :lol::D

விழுப்புண்ணல்ல.. அடி விழுந்த புண்.

காக்கா குருவி என்றது பேச்சில பொதுவாக எல்லாரும் சொல்லுறது. இங்க குருவி என்றது அது யாரோ ஒருத்தர் முன்னாடி இருந்தவராம். அவர் கூட சிலருக்கு பிரச்சனையாம். அவரை எல்லாரும் சேர்ந்து துரத்தி அடிச்சம் என்று முரசு வேற கொட்டினாங்களாம். அதுதான் குருவி திரும்பி வந்திடுமோ என்ற பயத்தில வாறவன் போறவனை எல்லாம் குருவி குருவி என்று பயங்காட்டுறாங்க. நீங்க தான் பயப்பிடாத பொண்ணாச்சே. எதுக்கும் மூக்கால வழில இரத்ததைத் துடையுங்க. அடிவாங்கினது அப்படியே தெரியுது. :(<_<

ஓ..குருவிக்குள்ள இத்தனை விசயம் இருக்குதா? :lol:

உம்மளுக்கு ஒரு நாளைக்கு தலைகுள்ள கூவேக்க தெரியும்..நாங்கள் யார் என்று..அதுவரை நீரும் மகிந்தர் மாதிரி பினாத்தி கொண்டிரும்,, :P

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..குருவிக்குள்ள இத்தனை விசயம் இருக்குதா? <_<

உம்மளுக்கு ஒரு நாளைக்கு தலைகுள்ள கூவேக்க தெரியும்..நாங்கள் யார் என்று..அதுவரை நீரும் மகிந்தர் மாதிரி பினாத்தி கொண்டிரும்,, :P

கூவும் கூவும்.. நெடுக்ஸுக்கு கூவேக்க உங்களுக்கு இப்ப மூக்கால ஓடுறது அப்புறம் வாயாலும் காதாலும் சிவிறியடிக்கும்..! :(:lol:

கூவும் கூவும்.. நெடுக்ஸுக்கு கூவேக்க உங்களுக்கு இப்ப மூக்கால ஓடுறது அப்புறம் வாயாலும் காதாலும் சிவிறியடிக்கும்..! :lol::lol:

அதைப்ப்ற்றி நீர் கவலை படாதையும்..எமது உயிரை விட உமக்கு சங்கு ஊதுறது தான் எமக்கு முக்கியம்... :angry:

நீர் இப்படியே பேக்கு மாதிரி Tom & Jerry பாத்துகொண்டிரும்..எங்கட Recce Group ஏற்க்கனவே உமது வீட்டிற்க்குள் நுழைந்து வெளியேயும் வந்து விட்டார்கள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.