Jump to content

செம டேஸ்ட்... ரோகினி சிக்கன்!#WeekendRecipe


Recommended Posts

பதியப்பட்டது

செம டேஸ்ட்... ரோகினி சிக்கன்!#WeekendRecipe

                                                            சிக்கன்

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறைரோகினி சிக்கன் நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ரோகினி சிக்கன்  அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:
சிக்கன் - அரை கிலோ    
காய்ந்த மிளகாய் - 5 கிராம் 
கசகசா - 10 கிராம்
முந்திரிப் பருப்பு - 10 கிராம் 
பெரிய வெங்காயம் - 50 கிராம்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 10 பல்
புளித்த தயிர் - 100 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தயிரை கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும். சிக்கனை மீடியம் சைஸ் பீஸ்களாக நறுக்கி, நன்கு கழுவி சுத்தம்செய்து கொள்ளவும். 

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பொன்நிறமாக வதக்கிக்கொள்ளவும். 

காய்ந்த மிளகாய், கசகசா, முந்திரிப் பருப்பு, பொன்நிறமாக வதக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் மற்றொரு வாணலி வைத்து 20 மில்லி எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சிக்கன் துண்டுகளைச் சேர்த்து லேசான பொன்நிறமாகும்வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.  

அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்துச் சூடானதும், அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். 

பச்சை வாசனை நீங்கி மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அதில் வறுத்து வைத்திருக்கும் சிக்கன் மற்றும் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு கலவையை வேகவிடவும்.

சிக்கன் பாதி வெந்தவுடன், கட்டியில்லாமல் கலக்கி வைத்துள்ள  தயிரை குழம்பில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். 

சிக்கன் நன்கு வெந்ததும், கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கிவிடவும். கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

சாதம், புலாவ் மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு ரோகினி சிக்கன் சுவையான சைடு டிஷ் ஆக இருக்கும்.

ரோகினி சிக்கன் ரெசிப்பியின் செய்முறையை வீடியோ வடிவில் காண, கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்:

 

குறிப்பு:
வெறும் சிக்கனை எண்ணெயில் வறுப்பதால், சிக்கன் உள்புறத்தில் சாஃப்டாகவும், வெளிப்புறத்தில் க்ரிஸ்பியாகவும் இருக்கும். கூடுதல் சுவையும் கிடைக்கும்.

http://www.vikatan.com/news/health/73486-tasty-rogini-chicken-recipe-for-weekend.art

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஸ்வினி ,சுவாதி , ரேவதி எல்லாம் விட்டு விட்டு ரோகிணியை தேர்ந்தெடுத்த ரீஸன் என்ன .....!

எந்தப் பெயரால் அழைத்தாலும் ரோஜா மணக்கும் , சிக்கன் சுவைக்கும்....! tw_blush:

Posted
4 hours ago, suvy said:

அஸ்வினி ,சுவாதி , ரேவதி எல்லாம் விட்டு விட்டு ரோகிணியை தேர்ந்தெடுத்த ரீஸன் என்ன .....!

அட பாவியளா சிக்கனுக்கு ஏன்னடாப்பா நட்ச்சத்திரங்கள் பெயரை வைக்கிறீங்கள்? நான் சினிமா நட்ச்சத்திரத்தை சொல்லல்ல - நம்ம ஜோதிட நட்ச்சத்திரங்களை சொன்னனான்.

அவங்களாவது பெயரை வைக்கிறாங்களே எண்டு பாத்தால் சுவியரும் அதையே மறுபடியும் கேட்க்கிறார்.

ஏன் சுவி மிருகசீரிட சிக்கன், புனர்பூச சிக்கன், திருவாதிரை சிக்கன் எண்டு பெயர் வைச்சால் பிசினஸ் பிச்சுக் கொண்டு போகுமெல்லோ. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தப் பெயர் வைத்தவர் பேராசிரியர் கௌசிக் , வழிமொழிந்தவர் நவீனன்....!  tw_blush:

Posted
4 hours ago, suvy said:

அஸ்வினி ,சுவாதி , ரேவதி எல்லாம் விட்டு விட்டு ரோகிணியை தேர்ந்தெடுத்த ரீஸன் என்ன .....!

எந்தப் பெயரால் அழைத்தாலும் ரோஜா மணக்கும் , சிக்கன் சுவைக்கும்....! tw_blush:

சும்மா ஒரு பன்பலுக்குதான்...tw_blush:

மற்றவர்களும் வரிசையில் வருவார்கள்.. நீங்கள் தேடிய அஸ்வினி ,சுவாதி , ரேவதி ..:grin:

25 minutes ago, ஜீவன் சிவா said:

அட பாவியளா சிக்கனுக்கு ஏன்னடாப்பா நட்ச்சத்திரங்கள் பெயரை வைக்கிறீங்கள்? நான் சினிமா நட்ச்சத்திரத்தை சொல்லல்ல - நம்ம ஜோதிட நட்ச்சத்திரங்களை சொன்னனான்.

அவங்களாவது பெயரை வைக்கிறாங்களே எண்டு பாத்தால் சுவியரும் அதையே மறுபடியும் கேட்க்கிறார்.

ஏன் சுவி மிருகசீரிட சிக்கன், புனர்பூச சிக்கன், திருவாதிரை சிக்கன் எண்டு பெயர் வைச்சால் பிசினஸ் பிச்சுக் கொண்டு போகுமெல்லோ. :grin:

:grin::grin:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.