Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு நீதி வழங்கக் கோருகிறார் டக்ளஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவனந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவனந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

   

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கேரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஊடகத்துறையானது அதற்குரிய அடிப்படைப் பண்புகளை இழந்து நிற்பதாகவும் அளவுக்கதிகமாக ஊடக சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருவதாக பலதரப்பினரும் குற்றம்சுமத்தி வருகின்றனர். சில ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்பட்டுவருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படாது உடனுக்குடன் உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும். அது மக்களை நேர்வழிப்படுத்த வேண்டும்.

தகவலை சந்தைப்படுத்துவதன் ஊடாக அதன் விற்பனைப் பெறுமதியை அதிகரிக்க முடியும் எனக் கருதும் ஊடகங்கள் மக்களை அச்சத்துடனும் பதற்றத்துடனும் வைத்துக்கொள்ளும் நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. இவ்வாறான சில ஊடகங்கள் உறுதிப்படுத்தல்கள் இன்றி நுகர்வுச்சந்தையை மாத்திரம் கருத்திற்கொண்டு செய்திகளை வெளியிடுவதால் எது உண்மை எது பொய் என்பதை அறியமுடியாத நிலையில் தமிழ் மக்கள் கைவிடப்படுகின்றனர். ஊடகங்கள் இந்தநிலையிலிருந்து விடுபட்டு மக்களுக்கு பொறுப்புக்கூறும் களமாக செயற்பட வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் ஊடக அமைச்சர் தலைமையில் தென்னிலங்கையிலிருந்து வட பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர்கள் குழு, வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு வீட்டுத்திட்டங்களை வழங்குவதாக தெரிவித்தனர். அங்கு 4 ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியில் வீடுகள் அமைத்து தருவதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு வீட்டுக்காக அடிக்கல்லும் நாட்டப்பட்டது. அந்த நிலைமை தொடர்ந்து எவ்வாறு இருக்கின்றது என்பது குறித்து தெரியவில்லை.

தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப்போன்று வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு மடிக்கணிணி, கைத்தொலைபேசி போன்ற சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களது நிலைமையைக் கருத்திற்கொண்டு கடன் அடிப்படையின்றி வரிச்சலுகைகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட வேண்டும்.

பிரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவது போன்று ஏனைய கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதலுக்கு இலக்கான ஊடக நிறுவனங்கள் குறித்து விரிவான நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

யுத்தத்தால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமைக்கு நன்றி. அரைகுறை உயிருடன் தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அத்துடன் அரச தமிழ் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தேசிய கீதத்தை தமிழில் ஒலி, ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=170701&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா...

நிமல்ராஜன் ???

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் சில ஜென்மங்களை ஏன்  இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கான் .. சில ஜென்மங்களை பார்த்து நாம் நாமாக விலக வேண்டும் என்பதற்காக !!

டிஸ்கி :

தொழில்  ( அரசியல் ) என்று வந்த பிறகு எதுவும் செய்ய இயலாது .. ஒன்றுக்கு ஒன்று மாற்றி முரணாக  பேசத்தான் செய்யும்..  உண்மையில் இந்த ஆள் டக்ளஸ் சென்னை கோர்ட்டில் ஆஜாராக வேணும் ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கடவுள் சில ஜென்மங்களை ஏன்  இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கான் .. சில ஜென்மங்களை பார்த்து நாம் நாமாக விலக வேண்டும் என்பதற்காக !!

டிஸ்கி :

தொழில்  ( அரசியல் ) என்று வந்த பிறகு எதுவும் செய்ய இயலாது .. ஒன்றுக்கு ஒன்று மாற்றி முரணாக  பேசத்தான் செய்யும்..  உண்மையில் இந்த ஆள் டக்ளஸ் சென்னை கோர்ட்டில் ஆஜாராக வேணும் ...

ஒரு கிளட்டுப்புலி ஓடியாடி வேட்டையாட முடியாத வயதில் தருப்பை காப்பை பிடித்தபடி அரச மரத்தின் கீழ் கண்ணைமூடி பாசாங்கு செய்து அமர்ந்திருந்ததாம். அருகில் சென்ற விலங்குகளை அழைத்து, நான் இப்ப மாறி விட்டேன், கொலையெல்லாம் செய்வதில்லை,  கடவுளை தியானிப்பதும்,  உங்களைபோன்றவ ர்களை ஆசீர்வாதம் செய்வதுமே  எனது பணி என்றதாம். முட்டாள் விலங்குகள் அதை நம்பி ஆசீர்வாதம் பெற அருகில் செல்ல, இருந்த இடத்திலேயே அடித்துக் கொன்று தின்றதாம். இவரால் எத்தனை ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என்பது இவருக்குமட்டுமல்ல எல்லாருக்கும் தெரியும். தான் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது புரிந்து விட்டது . அதுவே கருணா பாணியில் முந்திக்கொள்கிறார். விசாரணை, தண்டனை, விடுதலை என்னென்னவோ புலம்புகிறார். சட்டம் ஏமாந்து  போனாலும், தர்மம் என்றோ ஒருநாள் இவரைபோன்றோரை   பழிவாங்கியே தீரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.