Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விகிதாசார முறைமையில் நடத்துக

Featured Replies

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விகிதாசார முறைமையில் நடத்துக

 

ஐ.தே.க., ஜே.வி.பி., மு.கா., பொது எதிரணி கோரிக்கை; அமைச்சர் பைசர் நிராகரிப்பு

ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களும் கலைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான தேர்­தலை இம்­முறை மாத்­திரம் விகி­தாசார முறை­மையின் கீழ் நடத்­து­மாறு ஐ.தே.க., ஜே.வி.பி., ஒன்­றி­ணைந்த எதி­ரணி, மு.கா. நேற்று சபையில் வலி­யுறுத்தியுள்ளன.

எனினும் மக்­க­ளுக்கு அளித்த  வாக்­கு­று­தியின் பிரகாரம் அனை த்து தேர்­த­லையும் பொது­ வான முறைமை ஒன்றில் நடத்த வேண்டும். ஆகையால் மேற்­ 

கு­றித்த கட்­சி­களின் கோரிக்­கை யை அமைச்சர் பைசர் முஸ் ­தபா நிரா­க­ரித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று

 சனிக்­கி­ழமை 2017 வரவு- செல வுத் திட்­டத்தின் உள்­ளூ­ராட்சி, மாகாண சபைகள், நீர்­வ­ழங்கல், பாரிய மாந­கர, மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்­சுக்­களின் செல­வின தலைப்­புகள் மீதான குழு­நிலை விவா­தத்தின் போதே இவ்­வாறு வலி­யு­றுத்­தப்­பட்­டது.

குழு­நிலை விவா­தத்தை ஆரம்­பித்­து­வைத்துப் பேசிய ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசா­நா­யக்க பேசு­கையில்;

தற்­போது புதிய தேர்தல் முறை­மையின் பிர­காரம் தேர்தல் நடத்­து­வது குறித்து பேசப்­பட்­டாலும் கட்சி உட்­பூ­சலை மூடி­ம­றைப்­ப­தற்­காக தேர்தல் தாமதம் செய்­யப்­ப­டு­கின்­றது. இதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. கட்சி உட்­பூசல் மூல­மாக மக்­களின் வாக்­கு­ரி­மையை பறிக்க வேண்டாம்.

எனினும் புதிய தேர்தல் முறைமை தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த வேலைத்­திட்­டத்தில் சிக்­கல்கள் உள்­ளன. ஆகையால் தேர்தல் முறைமை தாம­த­மாகும். அவ்­வா­றாயின் உள்­ளூ­ராட்சி தேர்­தலை மாத்­திரம் விகி­தா­சார முறை­யி­மையின் பிர­காரம் நடத்த வேண்டும். ஏனைய தேர்­தல்­களை புதிய முறை­மையின் கீழ் நடத்­து­வ­தற்கு இணக்கம் என்றார்.

இந்த சந்­தர்ப்­பத்தில் பொது­எ­தி­ரணி எம்.பி. டலஸ் அழ­கப்­பெ­ரும பேசு­கையில்;

அனுர குமார திசா­நா­யக்க முன்­வைத்த கோரிக்­கையை நாம் ஏற்றுக் கொள்­கிறோம். உள்­ளூ­ராட்சித் தேர்­தலை மாத்­திரம் விகி­தா­சார முறையின் கீழ் நடத்த வேண்டும் என்றார்.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் பேசு­கையில்;

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை மாத்­திரம் விகி­தா­சார தேர்தல் முறை­மையின் கீழ் நடத்த வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக உள்ளோம் என்றார்.

அதே­போன்று ஐ.தே.க எம்.பி ஆனந்த அளுத் கமகே பேசுகையில்;

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதம் அடைவதனால் அரசின் அபிவிருத்தி வேலைதிட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகையால் உடன் தேர்தலை நடத்த வேண்டும் என்றார். 

ஆராய்­வ­தற்குத் தயார் அர­சாங்கம் அறி­விப்பு

 

ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

விகி­தா­சார முறை­மையின் பிர­கா ரம் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை மாத்­திரம் நடத்­து­வ­தற்கு அனைத்துக் கட்­சி­களும் இணக்கம் தெரி­விக்­கு­மாயின் இது குறித்து ஆராயத் தயார் என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்­டத்தின் உள்­ளூ­ராட்சி, மாகாண சபை, பாரிய மாந­கர மேல்­மா­காண அபி­வி­ருத்தி, நீர் வழங்கல், நகரத் திட்­ட­மிடல் அமைச்­சு­களின் செல­வின தலைப்­பு­களின் குழு­நிலை விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜே.வி.பி, பொது எதி­ரணி, மு.கா. ஆகிய கட்­சி­யினர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லை­யா­வது விகி­தா­சார முறை­மையின் கீழ் உட­ன­டி­யாக நடத்த வேண்­டு­மென வலி­யு­றுத்­தினர்.

இதற்குப் பதி­ல­ளித்து பேசும் போது, உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை மாத்­திரம் விகி­தா­சார தேர்தல் முறை­மையின் பிர­காரம் நடத்­து­வ­தற்கு எதி­ரணி உட்­பட அர­சியல் கட்­சிகள் இணக்கம் தெரி­வித்தால் எமக்கு பிரச்­சினை இல்லை. இது தொடர்பில் அனைத்துத் தரப்­பு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி ஆராய தயார் என்றார்.சினை இல்லை. இது தொடர்பில் அனைத்துத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஆராய தயார் என்றார்.   

பிர­தான கட்­சி­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அனு­ம­தியோம்

 

இரத்தம் சிந்தும் நிலை ஏற்­படும்; சபையில் ஜே.வி.பி. தலைவர் எச்­ச­ரிக்கை

ஆர்.ராம். எம்.எம்.மின்ஹாஜ்

இரு கட்­சி­க­ளுக்கு சாத­க­மான புதிய தேர்தல் முறை­மையின் கீழ் தேர்தல் நடத்­தப்­பட்டால் மக்கள் விடு­தலை முன்­னணி தேர்­தலைப் புறக்­க­ணிக்கும். மேலும் நாட்டில் இரத்தம் சிந்தும் நிலை யும் ஏற்­படும் என ஜே.வி.பி. தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­ மான அனு­ர­கு­மார திஸா­நா­யக்க எச்­ச­ரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு -– -செலவுத் திட்­டத்தின் உள்­ளூ­ராட்சி, மேல்­மா­காண,  

பாரிய மாந­கரம், நீர்­வ­ழங்கல் அமைச்சு ஆகி­ய­வற்றின் செல ­வின தலைப்­பு­களின் மீதான குழு­நிலை விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் காலம் முடி­வ­டைந்­து­விட்­டது. எனினும் இது­வரை தேர்தல் நடத்­தப்­ப­ட­வில்லை. தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு பணியின் தேர்தல் முறைமை தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. எனினும் ஏற்­க­னவே 2012 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அடிப்­ப­டையில் தேர்தல் நடத்த இட­ம­ளிக்க முடி­யாது. அது இரு­கட்­சி­க­ளுக்கும் சார்­பா­னது. சிறிய கட்­சி­களை விரட்டி இரு கட்சி ஆதிக்கம் செலுத்தும் தேர்தல் முறை­மை­யாகும். இது முன்­னைய ஆட்­சியின் போது சுதந்­தி­ரக்­கட்சி தொகுதி அமைப்­பா­ளர்­களின் வீட்டில் தயா­ரிக்­கப்­பட்­டது. 

எனினும், புதிய அர­சி­ய­ல­மைப்பின் கீழ் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பேச்சு நடத்­தப்­பட்டு வரும் நிலையில் இரு­கட்­சி­க­ளுக்கு சார்­பான முறையின் கீழ் தேர்­தலை நடத்த அமைச்சர் திட்­ட­மிட்­டுள்ளார். சுதந்­திரக் கட்சி தற்­போது இரண்­டாகப் பிள­வு­பட்­டுள்­ளது. கட்சி உட்­பூசல் கார­ண­மாக இம்­மு­றை­மையின் கீழ் தேர்தல் நடத்த சூட்­சுமம் வகுக்­கப்­ப­டு­கின்­றது. இது தவ­றாகும். இரு கட்­சிகள் சார்ந்த தேர்தல் முறை­மையின் கீழ் தேர்தல் நடத்­தினால் இரத்தம் சிந்தும் நிலைமை ஏற்­படும். அவ்­வா­றாயின் ஜே.வி.பி. அந்த தேர்தலை புறக்கணிக்கும் என்பதனைக் கூற விரும்புகிறேன். 

கட்சி உட்பூசல் காரணமாக தேர்தலைப் பிற்போட முடியாது. இது நாட்டு மக்களின் வாக்குரிமையை மீறும் செயலாகும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2016-12-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.