Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் உரையில் உள்ள யதார்த்தம்

Featured Replies

ஜனாதிபதியின் உரையில் உள்ள யதார்த்தம்

 

புரை­யோ­டிப்­போயுள்ள தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு காணப்­ப­டுமா? என்ற கேள்வி கடந்த பல தசாப்த கால­மாக தமிழ் மக்கள் மத்­தியில் நிறைந்து போயுள்­ளது. பத­விக்கு வந்த அர­சாங்­கங்­களும் அர­சியல் தலை­வர்­களும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு காணப்­படும் என்று பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்த போதிலும், அவை எதுவும் நிறை­வேற்­றப்­ப­டா­மையே வர­லா­றாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இதனால் தமிழ் மக்கள் மிகுந்த விரக்­திக்கும் வேத­னைக்கும் முகம் கொடுத்­த­மைக்­கப்பால், நிறைந்த நம்­பிக்­கை­யீ­னங்­க­ளுக்கும் ஆளா­னார்கள். இன்­று­வரை அந்­த­ வி­த­மான நிலை­மை­களே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ்­பேசும் மக்­களின் நியா­ய­மான அர­சியல் அபி­லா­ஷை­க­ளுக்குத் தீர்வை முன்­வைக்க முயன்றால், பெரும்­பான்மைச் சிங்­கள மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைத்த நிலைக்கு ஆளா­கி­வி­டு­வோமோ என்ற அச்­சமே சிங்­கள அர­சியல் தலை­வர்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது.

அதற்குப் பிர­தான காரணம் பேரி­ன­வாத அர­சியல் தலை­வர்­களும் கடும் போக்­கா­ளர்­களும் சிங்­கள மக்கள் மத்­தியில் மேற்­கொண்­டு­வரும் தவ­றான பிர­சா­ரங்­க­ளே­யாகும். அர­சியல் வங்­கு­ரோத்து நிலைக்குத் தள்­ளப்­பட்ட அர­சி­யல்­வா­திகள், இந்தவித­மாக இன­வாத சக்­தி­க­ளையும் கடும் போக்­கா­ளர்­க­ளையும் தமது வலைக்குள் வீழ்த்தி மக்­களைத் தூண்­டி­விடும் காரி­யங்­க­ளி­லேயே தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

அது மாத்­தி­ர­மின்றி, தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­த­ரத்­தீர்வு தொடர்பில் இது­வரை பதவி வகித்த "தேசி­யத்­த­லை­வர்கள்" என்று கூறிக்­கொள்வோர் போலி­யான ஒப்­பந்­தங்­க­ளையும் வாக்­கு­று­தி­க­ளையும் மேற்­கொண்டு வந்­த­மையும் சர்­வ­தேச சமூகம் அறிந்த ஒன்­றாகும். குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு பதின்­மூன்று பிளஸ் தீர்வை முன்­வைப்­ப­தாக இந்­தியா உட்­பட சர்­வ­தேச நாடு­க­ளிடம் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார்.

இறு­தியில் அவ­ரது வாக்­கு­றுதி எவ்­வாறு "காற்றில் பறந்­தது" என்­பது உல­க­றிந்த விடயம். தற்­பொ­ழுது அவரே, நாட்டை பிரிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சித்து வரு­வ­தாக பகி­ரங்­க­மாக மேடை­களில் கூறி­வ­ரு­கிறார். இதன்­மூலம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு இதய சுத்­தி­யுடன் தீர்­வு­காண அவர் எந்­த­ள­வு­தூரம் சித்­த­மாக இருந்­துள்ளார் என்­ப­தையும் கணித்­துக்­கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.

அர­சி­யல்­வா­தி­களும் சரி, அர­சியல் தலை­மைத்­து­வங்­களும் சரி அதி­கார மோகத்­துக்கும் சுய­இ­லா­பங்­க­ளுக்கும் மக்­களை ஏமாற்­றிப்­பி­ழைக்கும் கைங்­க­ரி­யங்­க­ளி­லேயே அன்று தொட்டு இன்­று­வரை ஈடு­பட்டு வரு­கின்­றமை யதார்த்­த­மாகும். ஆளுந்­த­ரப்பில் இருக்­கும்­போது ஒன்றைக் கூறு­வதும் பின்னர் அதனை தலை­கீ­ழாக மாற்றிக் கூறு­வதும் அவர்­க­ளுக்குக் கைவந்த கலை என்­பதை மக்கள் நன்கு உணர்ந்து வைத்­துள்­ளனர். இன்று தேசிய இனப்­பி­ரச்­சினை உள்­நாட்டு யுத்தம் வரை சென்று இறு­தியில் பல்­வேறு இழப்­பு­க­ளுடன் முடி­வுக்கு வந்­துள்­ள­மைக்கு இந்த நாட்டின் அர­சி­யல்­வா­தி­களே காரணம் என்றால் அதனை எவ­ராலும் மறுக்­க­மு­டி­யாது. இன்­றும்­கூட அதற்குத் தீர்வைக் காண­மு­டி­யா­த­வாறு முட்­டுக்­கட்­டை­களைப் போடு­ப­வர்­களா­கவே பல்­வேறு அர­சி­யல்­வா­தி­களும் காணப்­ப­டு­கின்­றனர்.

இருந்­த­போ­திலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள அழைப்பு இன்­றைய காலத்தின் தேவை என்­பதை சகல தரப்­பி­னரும் உணர்ந்து கொள்­வது அவ­சி­ய­மாகும். 'வட்ட மேசையில் ஒன்­று ­கூடி தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு அனை­வரும் முன்­வா­ருங்கள்' என புத்­தி­ஜீ­விகள், மதத் தலை­வர்கள் உட்­பட அனை­வ­ருக்கும் அழைப்பு விடுத்­துள்ளார்.

மீளவும் அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற, மஹிந்த ராஜபக் ஷ நாட்டைப் பிரிப்­ப­தாகக் கூறு­வ­தா­னது இலங்­கைக்கே துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பகி­ரங்­க­மாகக் குற்றம் சாட்­டி­யுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழ­னன்று நடை­பெற்ற வரவு --- செலவுத் திட்­டத்தின் நல்­லி­ணக்கம், தேசிய கலந்­து­ரை­யாடல் அனர்த்த முகா­மைத்­தவ அமைச்சு மீதான குழு நிலை விவா­தத்தின் போதே, ஜனா­தி­பதி இந்த அழைப்பை விடுத்­துள்ளார்.

இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை என்­பது புதி­ய­தல்ல. 1930 ஆம் ஆண்டு முதல் 8 தசாப்­தங்­க­ளுக்குள் சிங்­கள – முஸ்லிம், சிங்­கள,- தமிழ் ஆகிய இனக்­க­ல­வ­ரங்கள் பல தட­வைகள் நடந்­தே­றி­யுள்­ளன. இதன் கார­ண­மாக நாட்டு மக்­க­ளி­டையே குரோ­தமும், சந்­தே­கமும், பீதியும் மேலோங்கியதுடன் நாட்டின் முன்­னேற்­றத்தை தகர்த்­தெ­றிந்து விட்­டன. இதனால் பொரு­ளா­தாரம் சீர்குலைந்­துள்­ளது என்று தனது ஆதங்­கத்தை வெளி­யிட்­டுள்ளார்.

சுதந்­தி­ரத்தின் பின்னர் எமது தலை­வர்கள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு வழங்­கு­வ­தற்கு முனைந்த போதும், நிறை­வே­ற­வில்லை என்று கூறிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பண்டா -- செல்வா ஒப்­பந்­தத்தின் மூல­மாக தீர்வு வழங்க முனைந்­த­போது பிக்­குகள் ஒன்­று­கூடி எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்­டார நாயக்­கா­விடம் ஒப்­பந்­தத்தை கிழித்­தெ­றிய வேண்­டு­மெனக் கோரிய போது, அவர் தனது பைக்குள் இருந்த " லைட்­டரை" எடுத்து ஒப்­பந்­தத்தை எரித்தார். அதே­போன்று டட்லி--- செல்வா ஒப்­பந்­தம் கிழித்தெறியப்பட்டது. இதன் பின்னர் கொடூ­ர­மான யுத்­தத்­துக்கே முகம் கொடுக்க நேரிட்­டது என்று கடந்த கால சம்­ப­வங்­களை நினை­வூட்­டி­யுள்ளார்.

1983 கறுப்பு ஜுலை கல­வரம் பிர­பா­க­ரனுடன் யுத்தம் செய்­ய ­வழி வகுத்­தது. யுத்தம் தெற்­கு­வரை சென்­றது. பின்னர் தலதா மாளிகை வரை வந்­தது. ஆர். பிரே­ம­தாஸா முதல் பல பிர­மு­கர்கள் கொல்­லப்­பட்­டனர். இன்று தோட்டா சத்தம் ஓய்ந்­தாலும் நிலை­யான சமா­தானம் ஏற்­ப­ட­வில்லை என்று ஜனா­தி­பதி யதார்த்தபூர்­வ­மான தனது கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் ஜனா­தி­பதி தனது கவ­லையை வெளி­யிட்­டுள்ளார். உண்­மை­யி­லேயே இனப்­பி­ரச்­சினை கடந்த கால அர­சியல் தலை­மைத்­து­வங்­க­ளினால் இழுத்­த­டிக்­கப்­பட்­ட­துடன் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­துக்கள் முன்வைக்­கப்­பட்­டதன் விளை­வா­கவே அது தேசியப் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­த­துடன் எல்லை தாண்டி சர்­வ­தே­சத்தின் கத­வு­க­ளையும் தட்­டி­விட்­டுள்­ளது என்­ப­தை­ அ­ர­சியல் தலை­மைத்­து­வங்கள் உணர்­வது அவ­சி­ய­மாகும்.

அது­மாத்­தி­ர­மன்றி, தமிழ்­பேசும் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் மற்றும் அர­சியல் ரீதி­யான நெருக்­க­டி­களை ஒரு சில சிங்­கள, ஆங்­கில ஊட­கங்­களும் அவர்­களால் நடத்­தப்­படும் ஊட­கங்­களும் திரித்துக் கூறு­வ­திலும் மிகைப்­ப­டுத்­து­வ­திலும் தவ­றான கருத்­துக்­களை பரப்­பு­வ­திலும் கடந்த பல தசாப்த கால­மாக முன்­னின்று உழைக்­கின்­றன. இதனால் உண்மை நிலைமை சாதா­ரண சிங்­கள மக்­க­ளுக்குத் தெரி­யாது போவ­துடன், அவர்கள் தமிழ் மக்­களை விரோ­தி­க­ளா­கவே பார்க்­கின்­றனர். இந்த நிலைமையை மாற்­றி­ய­மைக்க ஜனா­தி­பதி முன்­வ­ர­வேண்டும். அதன்­மூ­லமே உண்­மை­யான நல்­லி­ணக்­கத்­தையும் புரிந்­து­ணர்­வையும் இனங்­க­ளி­டையே உரு­வாக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

மாறாக, இதே நிலைமை தொடருமானால் அது இந்த நாட்டையும் பெரும்பான்மை சிங்கள மக்களையும் தவறானதோர் மாயைக்குள் சிக்க வைப்பது மாத்திரமின்றி, சர்வதேசத்திலிருந்தும் அந்நியப்படுத்தவே வழிவகுப்பதாக இருக்கும் என்பதையும் மறந்துபோகக்கூடாது.

மேலும், இந்­நாடு சக­ல­வி­த­மான நெருக்­க­டி­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க பிர­தான காரணம் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சிகள் சிதைக்­கப்­பட்­ட­மையும் ஒப்­பந்­தங்கள் கிழித்­தெ­றி­யப்­பட்­ட­மை­யு­மாகும் என்ற யதார்த்­தத்தை இனி­மேலும் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் சரி­வர உணரத் தவ­று­மே­யானால் அது நாட்டின் சாபக்­கே­டா­கவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

குறைந்தபட்சம் ஜனாதிபதியின் இந்த அழைப்புக்கேனும் செவிசாய்க்க வேண்டியது இந்த நாட்டை உண்மையாக நேசிக்கும் அனைவரதும் கடப்பாடு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.