Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவக தாக்குதல் வழக்கு விசாரணைகள் பூர்த்தி! - புதனன்று தீர்ப்பு

Featured Replies

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இழுபறி நிலையில் இருந்த நாரந்தனை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் 15 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது.

நாளையதினம் வழக்கு தொடுனர் மற்றும் எதி ரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரை இடம்பெற்று நாளை மறுதினம் தீர்ப்பு வழங்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மன்றில் தெரிவித்தார்.

யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பி யினர் 2001/11/28அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கு விசாரணையில் இன்றைய தினம் எதிரிகளின் சாட்சிகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்தன.

அந்த வகையில் இன்று இவ்வழக்கில் 3ம் மற்றும் 4 ம் எதிரிகளாக குற்றம் சாட்டப்பட்ட வர்கள் சார்பான சாட்சிகள் பதிவு செய்யப்பட்டு. இதில் இன்று முதலாவதான 4ம் எதிரியான கருணாகரமூர்த்தி சார்பான மேலதிக சாட்சி பதிவு செய்யப்பட்டது.

இதில் சம்பவம் நடந்த அன்றைய தினம் வேலணைப் பிரதேச சபைச் செயலகத்தில் சாரதியாக கடமையாற்றிய கந்தையா மகேஸ்வரன் தனது சாட்சியத்தில் அன்றைய தினம் பிரதேச சபைத் தவிசாளராக இருந்த கருணாகரமூர்த்திக்கு தானே வாகனச் சாரதியாக கடமையாற்றியதாக தெரிவித்தார்.

அத்துடன், சம்பவம் நடந்த அன்றைய தினம் தான் சாரதியாக இருக்கும் பச்சை பிக்கப் வாகனம் தனது கட்டுப்பாட்டில் நின்றதாகவும், அச் சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்ட கருணாகரமூர்த்தி அவர்கள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டதனால் தான் அவரை வாகனத்தின் பின்னாசனத்தில் இருத்தி சென்றதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னர் ஒலிபெருக்கி சாதனம் பொருத்தப்பட்ட ஆட்டோ ரயர் வெடித்த நிலையில் காணப்பட்டதாகவும். அந்த சந்தர்ப்பத்தில் கருணாகரமூர்த்தி அந்த சாரதியுடன் இறங்கி பேசினார். அப்போது அந்த சாரதி சம்பவம் நடந்த இடத்தில் இனி எவரும் இல்லை என அறிந்து கொண்டதை அடுத்து தாம் மீண்டும் அலுவலகத்தை நோக்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

தாம் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லவும் இல்லை, சிவாஜிலிங்கத்தை அன்றைய தினம் காணவே இல்லை எனவும் கூறினார்.

இதனை அடுத்து 3ம் எதிரி ஜீவனின் சார்பிலான மேலதிக சாட்சி பதிவு செய்யப்பட்டது. இதன் போது எதிரியின் மனைவியான அன்ரன் ஜீவராஜன் சதாவதானி சாட்சியம் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில் சம்பவம் நடந்த நாள் தான் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும். மருத்துவ பரிசோதனை ஒன்றிற்காக அன்றைய தினம் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு தனது கணவர் ஜீவனுடன் சென்றதாகவும். ஜீவன் தன்னுடன் காலை 10:15 மணி வரை வைத்தியசாலையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

அப்போது தான் சந்தைக்கு சென்று மீன் வேண்டி வருமாறும், வீட்டில் சமையலுக்கான ஆயத்தங்களை செய்யுமாறும் பணித்து அனுப்பியதாக தெரிவித்தார்.

பின்னர் தான் 12 மணியளவில் முச்சக்கர வண்டியில் வீடு வந்த போது ஜீவன் வீட்டில் சோறு சமைத்து இருந்ததாகவும், சமயலுக்காக வெங்காயம் மிளகாய் துப்பரவு செய்து வைத்ததுடன், தேங்காய் துருவி பால் பிழிந்து வைத்திருந்ததுடன் மீன் வெட்டிகொண்டிருந்தனையும் தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த நேரத்தில் ஜீவன் வீட்டிலேயே சமையல் வேலையில் இருந்தபடியால் அவர் அந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவில்லை என ஊகம் தெரிவித்தார்.

இந்த இரு சாட்சிகளையும் பதிவு செய்த பின்னர் இவ் வழக்கின் வழக்கு விசாரணைகளும் நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர் இவ்வழக்கு தொடர்பில் பேசிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்கள் 15 வருடமாக இழுபறியில் இருந்த இவ் வழக்கு விசாரணைகள் 15 நாட்களில் நிறைவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட இருக்கின்றது.

இதற்காக கடுமையாக உழைத்து ஒத்துழைப்பு வழங்கிய அரச, எதிர்தரப்பு சட்டத்தரணிகள், சாட்சி வழங்கியவர்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அத்துடன் நாளைய தினம் இரு தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைகளும் நாளைய மறுதினம் இவ் வழக்கின் தீர்ப்பும் வழங்கப்படும்.

அதுவரை இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளில் இதுவரை காலமும் கலந்து கொண்ட 3ம், 4ம் எதிரிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியலும், சமூகமளிக்காமல் இருக்கும் 1ம், 2ம் எதிரிகளுக்கு தொடர்ந்து சர்வதேச பிடியாணை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/politics/01/127166?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.