Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்

Featured Replies

ஜீப் ­மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­யவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்

Sp06-199f19ce84c2165ed83dd5c07d7768d56837170d.jpg

 

முன்னாள் எம்.பி. ரவிராஜ் கொலையை நேரில் கண்ட விமான சேவை உத்­தி­யோ­கத்தர் சாட்சி
(எம்.எப்.எம்.பஸீர்)

 நார­ஹேன்­பிட்டி மாதா வீதியில் இருந்து பிர­தான பாதையை நோக்கி வேக­மாக மரூன் நிற ஜீப் வண்டி (ரவி­ராஜின் ஜீப்) வந்­தது. அந்த பகுதி வளைவைக் கொண்­டது. இதன் போது நான் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த வேனின் வேக­மா­னது சடுதியாகக் குறைக்­கப்­பட்­டது.  

 பாதை­யோ­ரத்தில் கறுப்பு நிற பையுடன் ஒருவர் நின்­றி­ருந்தார். மறு கணமே அந்த மரூன் நிற ஜீப் மீது அந் நபர் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்தார். அதன்­போது அந்த ஜீப் வண்டி சிறிது தூரத்­துக்கு இழுத்து செல்­லப்­பட்­டது. அடுத்த சில கண பொழு­து­களில் துப்­பாக்­கி­தாரி மோட்டார் சைக்­கி­ளொன்றில் ஏறி தப்பிச் சென்றார் என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி­ராஜின் கொலையை நேரில் கண்ட ஒரே சாட்­சி­யான விமான சேவை ஊழியர் அஞ்­சலோ நேற்று கொழும்பு மேல் நீதி­மன்ரில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

மேலும் அதன் போது அவ­ரது கையில் எவ்­வித ஆயு­தங்­களும் இருப்­பது தெரி­ய­வில்லை. நான் உட­ன­டி­யாக சார­திக்கு கூறி அந்த தப்பிச் செல்லும் மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்தை குறித்து வைத்­துக்­கொண்டேன். பின்னர் குற்றப் புல­னா­யவுப் பிரிவில் உள்ள எனது உற­வி­ன­ருக்கும் 119 அவ­சர தொலை­பேசி இலக்­கத்­துக்கும் அழைத்து துப்­பாக்கிப் பிர­யோகம் தொடர்பில் அறி­வித்தேன். அதன் பின் தெஹி­வ­ளையில் உள்ள எனது வீட்­டுக்கு சென்ற போதே அந்த மரூன் ஜீப்பில் பய­ணித்­தவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் என அறியக் கிடைத்­தது என்றும் அவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­திய தில­கவின் மேற்­பார்­வையில் சிறப்பு ஜூரிகள் சபையின் முன்­னி­லையில் இடம்­பெறும் சாட்சி விசா­ர­ணை­களின் நேற்­றைய விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­திய அரசின் சிரேஷ்ட பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரி­யவின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளித்­த­வாறு சாட்­சி­ய­ம­ளிக்கும் போதே அவர் இதனை வெளிப்­ப­டுத்­தினார்.

 இதன் போது அவர் வழங்­கிய சாட்­சியம் வரு­மாறு:

கேள்வி: கடந்த 2006.11.10 ஆம் திகதி பிர­யா­ணத்தின் இடை நடுவே ஒரு விஷேட சம்ப்­வத்தை கண்­ட­தாக கூறினீர். நீர் எங்­கி­ருந்து எங்கு பய­ணித்­துக்­கொண்­டி­ருந்தீர்?

பதில்: விமான நிலை­யத்தில் இருந்து வீட்­டுக்கு சென்­று­கொண்­டி­ருந்தேன்.

கேள்வி: அப்­ப­டி­யென்றால்?

பதில்: கட்­டு­நா­யக்­கவில் இருந்து தெஹி­வ­ளையில் உள்ள வீட்­டுக்கு சென்­றுக்­கொண்­டி­ருந்தேன்.

கேள்வி: நீர் கண்­ணுற்ற சம்­பவம் பதி­வாகும் போது நேரம் என்ன?

பதில்: காலை 9.00 மணி இருக்கும்

கேள்வி: அப்­போது நீர் எந்த இடத்தால் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்தீர்?

பதில்: பொரளை தாண்டி நார­ஹேன்­பிட்டி நோக்கி பய­ணித்­துக்­கொன்­டி­ருந்தேன்.

கேள்வி: அது நீர் வழ­மை­யாக பய­ணிக்கும் பாதையா? இல்லை எனில் ஏதா­வது நிலை­யான பாதை ஏதும் உள்­ளதா?

பதில்: இல்லை. அப்­படி நிலை­யான பதைகள் எதுவும் இல்லை.

கேள்வி: அப்­போது நீர் பய­ணித்த பகு­தியில் வாகன நெரிசல் காணப்­பட்­டதா?

பதில்: ஞாப­கத்தில் இல்லை.

கேள்வி: நீர் எந்த வாக­னத்தில் பய­ணித்தீர்?

பதில்: வேனில் பய­ணித்தேன்.

கேள்வி: நார­ஹேன்­பிட்டி பகுதி ஊடாக பய­ணிக்கும் போது ஏதும் விஷேட சம்­பவம் ஞாப­கத்தில் உள்­ளதா?

பதில்: ஆம் ஜீப் வண்­டி­யொன்று வேக­மாக பிர­தான பாதையை நோக்கி வந்­தது.

கேள்வி: எங்­கி­ருந்து எங்கு வந்­தது? அப்­போது என்ன நடந்­தது?

பதில்: அது ஒரு மரூன் நிற ஜீப். நாம் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த பக்­கத்­தி­லேயெ உள்ள மாதா வீதியில் இருந்தே அந்த ஜீப் பிர­தான பாதையை நோக்கி வந்­தது. வேக­மாக வந்­ததால் எமது வேன் வேகத்தை குறைத்­தது.

கேள்வி: அப்­போது என்ன நடந்­தது?

பதில்: அந்த ஜீப் தொடர்ந்து முன்­னோக்கி சென்­றது. அப்­போ­துதான் அங்கு வளைவில் நின்­றி­ருந்த ஒருவர் அந்த ஜீப் வண்டி மீது துப்­பா­ககிப் பிர­யோகம் செய்­வதை கண்டேன்.

கேள்வி: எத்­தனை பேர் சுட்­டனர்?

பதில்: ஒருவர் தான்

கேள்வி: அவர் ஆணா?

பதில்: ஆம்

கேள்வி: எந்த திசையில் சுட்­டனர்?

பதில்: ஜீப்பை நோக்­கியே சுட்­டனர்

கேள்வி: அந்த துப்­பாக்கி சூட்­டுக்கள் ஜீப்பை தாக்­கு­வதைக் கண்­டீரா?

பதில்: ஆம்

கேள்வி: எதனால் சுட்­டனர்?

பதில்: ஆயு­தத்தால்

கேள்வி: என்ன ஆயு­தத்தால் சுட்­டனர் என கண்­டீர்­களா?

பதில்: இல்லை

கேள்வி: ஏன் அதனை உங்­களால் பார்க்க இய­ல­வில்லை?

பதில்: அந்த ஆயுதம் கறுப்பு பை ஒன்­றினுள் இருந்­தது. ஆயு­தத்தின் ஒரு சிறு பகுதி மட்­டுமே வெளியில் தெரிந்­தது.

கேள்வி: அப்­ப­டி­யானால் சுட்­டவர் எவ்­வாறு அந்த பையை ஏந்­தி­யி­ருந்தார்?

பதில் எனக்கு அது மிகச் சரி­யாக விளக்கத் தெரி­ய­வில்லை. எனினும் அந்த பை அவ­ரது தோளில் தொங்­க­வி­டப்­பட்­டி­ருந்­தது. அவர் ஏந்­தி­யி­ருந்த முறை­மையை வரைந்து காட்­டலாம்.

கேள்வி: பையின் வெளியே என்ன தெரிந்­தது?

பதில்: ஆயு­தத்தின் முனைப்­ப­குதி

கேள்வி: எவ்­வ­ளவு நேரம் சுட்­டனர்?

பதில்: இந்த சூடு திடீ­ரென இடம்­பெற்­றது. சில கணப் பொழு­து­களில் அனைத்தும் நடந்­தே­றி­விட்­டன.

கேள்வி: அந்த பை ஞாபகம் உள்­ளதா? எப்­படி இருந்­தது? அதன் நீளம் அகலம் ஆகி­ய­வற்ரை குறிப்­பிட முடி­யுமா?

பதில்: அது ஒரு பிர­யாண பையை ஒத்­தி­ருந்­தது. நீளம் அகலம் எல்லாம் குறிப்­பிடும் அள­வுக்கு ஞாப­க­மில்லை.

கேள்வி: அப்­பையின் விஷேட இலட்­ச­னைகள் ஏதும்?

பதில்: ஞாபகம் இல்லை

கேள்வி: துப்­பாக்கிச் சூட்டை அடுத்து ஜீப்­புக்கு என்ன நடந்­தது?

கேள்வி: அந்த ஜீப்பை துப்­பாக்கி சன்­னங்கள் துளைத்­தன. எனினும் அந்த வண்டி முன்­னோக்கி தொடர்ந்து சென்­றது.

கேள்வி: ஜீப் எப்­படி நின்­றது? என்­பதைக் கண்­டீரா?

பதில்: இல்லை

கேள்வி: துப்­பாக்கி சூட்டை நடத்­தி­யவர் எங்கு நின்­றி­ருந்தார்?

பதில்: அவர் மாதா பாதை பிர­தான பாதை­யுடன் சேரும் வளைவில் நின்­றி­ருந்தார்.

கேள்வி: துப்­பாக்கிச் சூட்டின் பின்னர் அவர் என்ன செய்தார்?

கேள்வி: ஓடிச் சென்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றார்.

கேள்வி: நீர் அந்த மோட்டார் சைக்­கிளைக் கண்­டீரா?

பதில்: ஆம்

கேள்வி: நிறம் என்ன?

பதில்: ஞாபகம் இல்லை.

கேள்வி: ரகம் என்ன?

பதில்: நிறம் ரகம் உட்­பட எல்லா விப­ரங்­க­ளையும் நான் ஏற்­க­னவே தெரி­வித்­துள்ளேன். தற்­போது எனக்கு ஞாபகம் இல்லை.

கேள்வி: துப்­பாக்கி தாரிக்கும் ஜீப்­புக்கும் இடையில் எவ்­வ­ளவு தூரம் இருக்கும்?

பதில்: சரி­யாக கூறத் தெரி­ய­வில்லை.

கேள்வி: தப்பிச் செல்ல பயன்­ப­டுத்­தப்­பட்ட பைக் எங்கு நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.?

பதில்: பாதையின் இடது பக்­கத்தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

கேள்வி: அதில் யாரேனும் இருந்­த­னரா?

பதில்: ஆம்

கேள்வி: அவரை கண்­டீரா?

பதில்: இல்லை. அவர் தலைக்­க­வசம் அணிந்­தி­ருந்­ததால் அவரைத் தெரி­ய­வில்லை.

கெள்வி: துப்­பாக்­கியால் சுட்­ட­வரின் முகத்தை கண்­டீரா?

பதில்: ஆம்.

கேள்வி: அவர் எப்­படி இருப்பார்? அவ­ரது உயர் என்ன? என்ன நிறம்?

பதில்: தற்­போது எனக்கு அது குறித்து ஞாபகம் இல்லை. முன்­ன­தா­கவே அது குறித்து வாக்கு மூலங்­களில் கூறி­யுள்ளேன்.

கேள்வி: துப்­பாக்கிச் சூட்­டை­ய­டுத்து துப்­பாக்கி தாரி என்ன செய்தார்?

பதில்: மோட்டார் சைக்­கிளை நோக்கி ஓடினார்.

கேள்வி: எவ்­வ­ளவு தூரம் ஓடி இருப்பார்?

பதில்: நாமும் வேனில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்­ததால் சரி­யாக கூறத் தெரி­ய­வில்லை.

கேள்வி: ஓடிச் சென்று என்­ன­செய்தார்?

பதில்: ஓடிச் சென்று மோட்டார் சைக்­கிளில் ஏறினார். அதன் பின்னர் அங்­கி­ருந்து தப்பிச் சென்றார்.

கேள்வி: எந்த திசையில் சென்றார்?

 பதில்: எதிர்த் திசையில்

கேள்வி: இதன் போது நீர் என்ன செய்தீர்?

பதில்: உடனே தப்பிச் செல்லும் மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்தை சார­தியின் உத­வி­யுடன் பதிவு செய்­து­கொண்டேன். விட­யத்தை குற்றப் புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்றும் எனது உற­வி­ன­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தினேன். பின்னர் 119 அழைத்து கூறினேன். அதன் பின்னர் முன்­னோக்கி பய­ணிக்­கையில் பொலிஸ் போக்­கு­வ­ரத்து பிரிவின் முன் கட­மையில் இருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரிடம் விட­யத்தை கூறி மோட்டார் சைக்கிள் இலக்­கத்­தை­யும்­கொ­டுத்­து­விட்டு சென்றேன்.

கேள்வி: அந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரிடம் என்ன சொன்னீர்?

பதில்: துப்­பாக்கிச் சூடு ஒன்று நடந்­த­தாக கூறினேன். சந்­தேக நபர்கள் மோட்டார் சைக்­கிளில் தப்பிச் செல்­வ­தாக கூறினேன்.

கேள்வி: அதன் பின்னர் என்ன நடந்­தது?

பதில்: நான் வீட்­டுக்கு சென்றேன். அப்­போது அங்கு வந்த பொலிஸார் என்­னிடம் வாக்கு மூலம் பதிவு செய்­தனர்.

கேள்வி: சுட்­டவர் யாரை சுட்டார் என்­பதை நீர் அறிந்­தி­ருந்­தீரா?

பதில்: இல்லை. எனினும் வீட்­டுக்கு வந்த போது அறிந்­து­கொண்டேன்.

கேள்வி: யார் அவர்?

பதில்: பாரா­ளு­மன்ர உறுப்­பினர் ரவிராஜ்

கேள்வி: ஆயுதம் இருந்த பையை மீளக் காட்­டினால் அடை­யாளம் கண முடி­யுமா?

பதில்: முடி­யாது

கேள்வி: சுட்­ட­வரை மீளக் கண்டால் அடை­யாளம் காண்­பீரா?

பதில்: முடி­யாது.

இத­னை­ய­டுத்து அவ­ரது சாட்­சி­யத்தின் மீது குறுக்கு விசா­ர­ணை­களை சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்ன மட்டும் முன்­னெ­டுத்தார்.

கேள்வி: ரவிராஜ் கொலையை நேரில் கண்ட ஒரே சாட்சி நீர் மட்­டு­மே­யாகும். கொலையின் பின்னர் பொலிஸ் விசா­ர­ணை­களின் போது உம்மை சந்­தேக நபர்­களில் கொலை­யாளி அல்­லது துப்­பாக்­கியால் சுட்­டவர் உள்­ளாரா என்­பதை அடை­யாளம் காட்ட அடை­யாள அணி­வ­குப்பு ஒன்­றுக்கு அழைத்­த­னரா?

பதில் : இல்லை

 இத­னை­ய­டுத்து சாட்சி இலக்கம் 5 ஆன குறித்த விமான சேவை ஊழியர் பய­ணித்த வேனைச் செலுத்­திய சார­தி­யான நிசங்க சாட்­சி­ய­ம­ளித்தார். அவரும் அஞ்­ச­லோவின் சாட்­சி­யத்தை உறுதிச் செய்யும் வித­மாக சாட்­சி­ய­ம­ளித்தார். இதன் போது தன் பயணப் பாதை மற்றும் பயணிப்போர் குறித்து பதிவிடும் பதிவுத் தாளில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை பதிவிட்டமை தொடர்பில் கூறி அதனை அடையாளம் காட்டினார்.

 இதனையடுத்து சம்பவ தினம் நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையில் இருந்த சம்பவத்தை நேரில் கண்டோர் அது தொடர்பில் முறையிட்ட பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தார். அவர் நேரில் கண்ட சாட்சியாளர் தம்மிடம் முறையிட்டதை தனது சட்டப் பை புத்தக பதிவுகளுடன் நிரூபித்து சாட்சியமளித்தார். அவர்களிடம் குறுக்கு கேள்விகள் எதுவும் கேட்கப்படாத நிலையில் வழக்கானது அடுத்த கட்ட சாட்சி விசாரணைகளுக்காக இன்றைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-06#page-2

  • தொடங்கியவர்
ரவிராஜ் படுகொலை வழக்கு ஒத்திவைப்பு
 
06-12-2016 03:15 PM
Comments - 0       Views - 2

article_1481017612-dds.jpgபேரின்பராஜா திபான்

நடராஜா ரவிராஜ் எம்.பியின் படுகொலை வழக்கின் 16ஆவது சாட்சியாளர் நீதிமன்றில் ஆஜராகாததையடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக, வழக்கை நாளை புதன்கிழமை வரை ஒத்திவைத்தார்.

16ஆவது சாட்சியாளரை, மன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், சாட்சியாளர், ஆஜராகவில்லை என நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்தே, நீதிபதி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்ததுடன், சாட்சியாளருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/187567/ரவ-ர-ஜ-பட-க-ல-வழக-க-ஒத-த-வ-ப-ப-#sthash.xZGCvffP.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.