Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயாவுக்கு ஜனாதிபதி மைத்திரி இரங்கல்

Featured Replies


ஜெயாவுக்கு ஜனாதிபதி மைத்திரி இரங்கல்
 
 

article_1480999397-ad.jpgதமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கிலேயே அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது மக்கள் நேசிக்கும் ஒரு தலைவராக இருந்தார். அவர் நேசித்த அன்புக்குரியவர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துகொள்கின்றேன் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/187516/ஜ-ய-வ-க-க-ஜன-த-பத-ம-த-த-ர-இரங-கல-#sthash.DudH97ML.dpuf
ஜெயாவுக்கு நாமல் ராஜபக்ஷ இரங்கல்
 
06-12-2016 09:40 AM
Comments - 0       Views - 51

article_1480999684-zzz.jpgதமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவருமான நாமல் ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கிலேயே அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கின்றேன். அரசியலில் ஒதுக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் துயரங்களை துடைப்பதற்கு அவர் ஒரு வலுவான குரலாக இருந்தார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/187515/ஜ-ய-வ-க-க-ந-மல-ர-ஜபக-ஷ-இரங-கல-#sthash.HCrchGcL.dpuf
  • தொடங்கியவர்
அம்மாவுக்கு டக்ளஸூம் இரங்கல்
 

அழகன் கனகராஜ்

தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த செல்வி ஜெயலலிதாவுக்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகவும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தன்னுடைய இரங்கலை தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/187536/அம-ம-வ-க-க-டக-ளஸ-ம-இரங-கல-#sthash.Us0iMXdH.dpuf

 

 

ஜெயாவுக்கு மஹிந்த இரங்கல்
 

தமிழ்நாட்டு முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கிலேயே அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, இந்திய தமிழ் மக்களின் இதயங்களை வென்றவர். அவரது மறைவினால் துயரப்பட்டுள்ள அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/187535/ஜ-ய-வ-க-க-மஹ-ந-த-இரங-கல-#sthash.A3403LX4.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
எதிர்கட்சித் தலைவரின் இரங்கல் செய்தி
 

article_1462687077-index.jpg'தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளை, அரவணைத்து, அவர்களுக்கு தனது அரசின் மூலம் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கி, அவர்களை வாழவைத்த, செல்வி ஜெயலலிதாவை, இவ்வேளையில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் சார்பிலும், த.தே.கூ.வின் சார்பிலும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்  என்ற வகையிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்'

என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/187553/எத-ர-கட-ச-த-தல-வர-ன-இரங-கல-ச-ய-த-#sthash.QbukJ7Yp.dpuf

 

 

 


'தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு'
 
 

article_1481011885-1.jpg“தமிழக வரலாற்றில் சாதனைகள் படைத்தவர்கள் பலர் அதிலும் ஒரு பெண்ணாக தனித்து நின்று சாதனை படைத்த தமிழத்தின் 8 கோடி மக்களாலும் அம்மாவாக போற்றப்பட்ட தமிழ் நாட்டு முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் இழப்பு தமிழ் மக்களுக்கு  பேரிழப்பாகும்” என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  இன்று வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
“அமரர் செல்வி ஜெயலலிதா இலங்கையில் யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த காலத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு கூறியிருந்தார். யுத்தத்தை நிறுத்துமாறு பல தடவைக்கள் தொலைக்காட்சி ஊடாக தெரிவித்திருந்தார். 

அவ்வாறு எந்த நாட்டிலும் எந்த மக்களானாலும் அதிகமாக தமிழ் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கடும் துயரங்கள் ஆகியவற்றிற்கு குரல் கொடுத்து உதவிகள் செய்து வந்த ஒருவர்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரின் இழப்பினை ஈடுசெய்ய முடியாமல் தமிழகம் தவிக்கும் ஒருபக்கம் தமிழக மக்கள் ஆழ்ந்த சோகத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
 
செல்வி ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த அ.தி.மு.க கட்சி இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை  ஆட்சியைப்பிடித்ததில் தமிழகத்தில் 5 முறை செல்வி ஜெயலலிதா முதலமைச்சராகவிருந்து இரும்புப் பெண்ணாக ஆட்சி நடாத்திக்காட்டினார். அத்துடன் அதிகமுறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
 
செல்வி ஜெயலலிதா திரைப்பட நடிகையாக கலை உலகில் இருந்து ஒரு நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்கு திறமைமிக்க தலைவியாக வாழ்ந்து காட்டிய பெருமை பெண் இனத்துக்கே பெருமையாக இருக்கிறது.
 
இவரின் இழப்பு இந்திய தமிழகம் மாத்திரமன்றி உலக வாழ் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்”  என தனது அனுதாப செய்தியில் இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/187555/-தம-ழர-கள-க-க-ம-ஏற-பட-ட-ப-ர-ழப-ப-#sthash.6aLfNUrZ.dpuf

 

 

அம்மாவின் மறைவுக்கு இ.தொ.கா இரங்கல்
 
 

article_1481002245-z.jpgஎஸ்.கணேசன்

“தனக்கென குடும்பம் ஒன்றை அமைத்துக் கொள்ளாது செல்வியாக வாழ்ந்து 8 கோடி மக்களும் அம்மாவாக போற்றப்பட்ட தமிழ் நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் இழப்பு பேரிழப்பாகும்" என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்..

அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“எந்த நாட்டிலும் எந்த மக்களுக்கும் அதிகமாக, தமிழ் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கடும் துயரங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அந்த உன்னத அம்மாவின் குரல் அடங்கிவிட்டது.

திரைப்பட நடிகையாக கலை உலகில் அனைவரும் விரும்பத்தக்க ஒரு நடிகையாக இருந்து, ஒரு நாட்டை ஆட்சிசெய்யும் அளவுக்கு திறமைமிக்க தலைவியாக வாழ்ந்து காட்டிய செல்வி ஜெயலலிதா ஜெயராம்,  இலங்கைத் தமிழ் மக்களுக்காகவும் குரல்கொடுத்து வந்தவர்.  

இன்று அவ்வாறான ஒருவரை தமிழ் நாட்டு மக்களும் தமிழ் நாட்டோடு ஒட்டிப்பிறந்த இலங்கை மக்களும் இழந்து ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்னனர். இவரின் இழப்பு தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

- See more at: http://www.tamilmirror.lk/187538/-அம-ம-வ-ன-மற-வ-க-க-இ-த-க-இரங-கல-#sthash.XYNlH7QG.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.