Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி கறி காய்ச்சித் தின்ற இந்திய இராணுவம்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பதிவு ஜனனி!

எனது கருத்துக்கு வலு சேர்க்கிறது. அத்தி பூத்தப் போல் களத்திற்கு வருகிறீர்கள்.

இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான இந்தப் பதிவில் தோளாடு தோள் நிற்கும் முகமறியாத் தமிழ் நாட்டுத் தோழிக்கு எனது இதயங் கனிந்த நன்றிகள்.

  • Replies 119
  • Views 16.9k
  • Created
  • Last Reply

நல்ல பதிவு ஜனனி!

எனது கருத்துக்கு வலு சேர்க்கிறது. அத்தி பூத்தப் போல் களத்திற்கு வருகிறீர்கள்.

எனக்கு தமிழ் டைப்பிங் அவ்வளவா வராது அதனால எனது கருத்துக்கள் குறைவா இருக்கு. ஆனால் இங்கு நடக்கும் விவாதங்களை அடிக்கடி படிப்பேன். எல்லா விவாதங்களும் ரொம்ப நல்லா போகுது.

இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான இந்தப் பதிவில் தோளாடு தோள் நிற்கும் முகமறியாத் தமிழ் நாட்டுத் தோழிக்கு எனது இதயங் கனிந்த நன்றிகள்.

மனச தொட்டுட்டீங்க இளங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்!

ஏழை மீனவரின் ஆட்டைத் திருடி ......... என்ற எனது பதிவில் இந்திய அரசின் வல்லாதிக்கத்தைதான் நான் எதிர்த்து எழுதுகிறேன். ஆனால் நீரோ நான் அந்நாட்டு மக்களுக்கு எதிராக எழுதுவதாக புதுக் கரடி விடுகிறீர். இந்தியாவின் பல மானிலங்களிலும் மக்கள் பல் வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். நான் அந்த மக்களைப் பற்றி கவலைப் படுகிறேன்.

80 மக்களை அன்றாடங் காய்ச்சிகளாகவும் சோற்றுக்கு கையேந்துபவர்களாகவும் வைத்துக் கொண்டு அப்துல் கலாம் அமரிக்காவோடு அணு ஆயுத ஒப்பந்தம் போடுகிறார். இதெல்லாம் ஒரு கொள்கையா!

கஷ்மீரில் இந்திய அரசின் வல்லாதிக் வெறியால் அந்நாட்டு மக்கள் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள். இவ்வளவு தூரம் ஜனநாயகம் பேசும் இந்திய அரசு அங்கு ஒரு Plebscite ஏன் இன்று வரைக்கும் வைக்கவில்லை. இது பற்றி சிந்திக்க உமது இந்துத்துவ வெறி இடம் கொடுக்காது.

ஆதிக்க வெறி எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எந்தச் செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டோம்

பெரியாரின் பேரர்களாக, வள்ளலாரின் சீடர்களாக, அம்பேத்காரின் தொண்டர்களாக, மார்க்சின் மாணவர்களாக நாங்கள் கற்றுக் கொண்ட முதல் பாடம் இதுதான்.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பற்றிய விமர்சனம் சரியானதா என்பதை உமக்குகு நான் தவிர்ந்த மற்றவர்கள் சொன்ன பதில்களில் இருந்து புரிந்து கொள்வீராக.

இந்திய மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடும். தப்பில்லை. ஆனால் ஈழத்தைப் பற்றிய பதிவு ஒன்றில் அதையும் எழுதிக் குழப்ப வேண்டாம் என்பதே. நீர் தனிப்பட்ட தலைப்புக்களில் கதைப்பது பற்றி எனக்கு அறிவுரை கூறி எழுதியது, உமக்குத் தேவைப்படுகின்ற அறிவுரையாகும்.

இந்தியாவில் இவ்வளவு தேர்தல் முறைக்கு கூட எனக்கு வெறுப்பு உண்டு. இத் தேர்தல்களால் செலவளிக்கும் பணத்தை நாட்டின் முதலீட்டுக்கு கூடப் பாவிக்கலாம். ஆனால் அரசியல்சட்டம் எழுதிய அம்பேத்காரை பெளத்தவெறி பிடித்தவர் என்று இதற்காக வைய முடியாது.

நீர் சொன்ன, அம்பேத்காராகட்டும், அப்துல் கலாமாகட்டும், இந்து மதமே இல்லாதபோது, எதற்கெடுத்தாலும் இந்து வெறி, இந்து வெறி என்று நீர் கத்துவதன் அர்த்தம் என்ன? உண்மையில் பெரியாருக்கு கூட, இப்படி வெறி இருந்திருக்குமோ, என்பது சந்தேகம் தான். உங்களைப் பார்த்து அந்த மனிதரை அதிகமாக எடை போட்டு விட்டோமோ என்றும் தோன்றுகின்றது.

முதலில் எதற்கெடுத்தாலும், இந்து மதம், மதவெறி என்று கூச்சல் போடுவதை நிறுத்துங்கள். அது ஆரோக்கியமான விவாதத்துக்கு அடையாளமல்ல.

80 மக்களை அன்றாடங் காய்ச்சிகளாகவும் சோற்றுக்கு கையேந்துபவர்களாகவும் வைத்துக் கொண்டு அப்துல் கலாம் அமரிக்காவோடு அணு ஆயுத ஒப்பந்தம் போடுகிறார். இதெல்லாம் ஒரு கொள்கையா!

...

ஆதிக்க வெறி எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எந்தச் செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டோம்

பெரியாரின் பேரர்களாக, வள்ளலாரின் சீடர்களாக, அம்பேத்காரின் தொண்டர்களாக, மார்க்சின் மாணவர்களாக நாங்கள் கற்றுக் கொண்ட முதல் பாடம் இதுதான்.

வறுமை அமெரிக்காவிலும் இருக்கு சீனாவிலும் இருக்கு. ஏன் தமிழீழததில் கூட வறுமை இருக்கு. அதற்கு புலிகள் கவனம் செலுத்தாமல் ஏன் செய்மதி தொலைக்காட்சி வானொலி நடத்துகிறார்கள் ஆயுதம் வேண்டுகிறார்கள் விமானம் வேண்டுகிறார்கள் ஏன் அலெக்சான்றா மாளிகையில் தேசத்தின் குரலிற்கு இறுதி அஞ்சலி ஒழுங்கு செய்யப்பட்டது என்று மனநோயாளிகள் போல் கேள்வி கேக்க முடியுமோ?

அதுபோல் தான் வறுமை இருந்து இந்தியா அணுகுண்டு விண்வெளி என்று பல துறைகளில் ஆராச்சி அபிவிருத்திக்கு பல மில்லியன் டொலர்களை வருடா வருடம் செலவு செய்கிறது. எமது தேசியத்திற்கு இருப்பிற்கு பலப்படுத்தலிற்கு பாதுகாப்பிற்கு என்னென்ன தேவை என்று தூர நோக்கு சிந்தனையோடு சில வேலைத் திட்டங்கள் முன்னுரிமை கொடுத்து செய்கிறோமோ அதே போல் தான் இந்தியாவும் அதன் நிலையில் அதற்கேற்ற அளவில் (அது எமக்கு பிரமாண்டமாகத் தெரியலாம்) தனது எதிர்கால இருப்பு பலப்படுத்தல்களிற்கு ஏற்ப திட்டங்களை நடை முறைப்படுத்துகிறது.

இதுவரை எத்தனை ஆதிக்க வெறிகளை எந்தெந்த வடிவத்தில் கண்டிருக்கிறீர் எங்கு கண்டீர் எதிர் கொண்டீர் அதை எப்படி செருபாலை அடித்தனீர் என்று தயவு செய்து கொஞ்சம் எழுத முடியுமா? இல்லை சினிமா பாணியில் எழுதும் பஞ் டயலக் தான் உமது பகுத்தறிவா? இந்தக் கேவலத்தில பெரியாரின் கொள்கைகளை நன்கு விளங்கியவர் என்று சுயவிளம்பரம் வேறை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நியாயங்களை எடுத்துக் கூறினால் இங்கு உள்ள இந்து இந்திய பற்றாளர்களுக்கு கலை வந்து விடுகிறது.

இந்தியாவை எந்த லட்சணத்தில் சீனாவோடு ஒப்பிடுகின்றீர்கள்? அதன் வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி. இன்று அமரிக்கா சீனாவின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்துதான் அஞ்சுகிறது. இந்தியா அமரிக்காவின் இன்னொரு மாநிலமாக மாறி வருகிறது.

அணு ஆயுதம் என்பதே உலகை அழிக்க வந்தது. போட்ட போட்டுக்கொண்டு அணு ஆயுத உற்பத்தி செய்கிறார்களே அதைப் பாவிக்க முடியுமா ???? அப்படி அதைப் பாவிக்கத் தொடங்கினால் உலகம் இருக்குமா. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடியது போன்று அவரவர் நாட்டல் அவரவர் வாழ்க அடுத்தவர் நாட்டை சுரண்டுதல் அடியோடு வீழ்க என்று இருந்தால் என் இந்த நிலை!

இந்தியா நமக்கு முதுகில் குத்தியும் இங்குள்ள சிலருக்கு அடிவருடித்தனம் போகவில்லை.

தமிழக மீனவர்களின் துயரம் தீர்ந்த பாடில்லை

கிராமங்களை முன்னேற்றும் நோக்கம் இல்லை

நதி நீர்ச் சிக்கல்கள் தொடர்கின்றன

ஏழைமக்கள் ரத்தக் கண்ணீர் விடும் அளவுக்கு வறுமை வாட்டுகிறது

அனால் வல்லாதிக்க வெறிகொண்ட இந்திய அரசுக்கு இவைகள் பிரச்சனைகள் அல்ல.

மக்கள் அவர்கள் எந்த நாட்டவர்களாயிருந்தாலும் நேசிப்போம். அதுதான் மாந்த நேயம். அதைவிடுத்து பேயரசுக்கு அதரவு தருவது அல்ல.

பெரியாரை நாங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறோம். ஓகஸ்ட் 15 ஐ துக்க நாளாக அறிவித்தவர் அவர். இந்தியாவின் வரைபடத்தை அஞ்சாமல் எரித்த புரட்சிக்காரர் அவர். நான் தமிழ் நாட்டிற்குப் போனால் தங்குவதே பெரியார் திடலில்தான். அதுதான் எனது சொந்த வீடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை எத்தனை ஆதிக்க வெறிகளை எந்தெந்த வடிவத்தில் கண்டிருக்கிறீர் எங்கு கண்டீர் எதிர் கொண்டீர் அதை எப்படி செருபாலை அடித்தனீர் என்று தயவு செய்து கொஞ்சம் எழுத முடியுமா? இல்லை சினிமா பாணியில் எழுதும் பஞ் டயலக் தான் உமது பகுத்தறிவா? இந்தக் கேவலத்தில பெரியாரின் கொள்கைகளை நன்கு விளங்கியவர் என்று சுயவிளம்பரம் வேறை.

நான் இங்கு சுயவிளம்பரம் செய்யவில்லை. பொதுவாக பெரியார் கொள்கையாளர்களையே அவ்வாறு கூறியிருந்தேன். பல நேரங்களில் எனது தனிப்பட்ட கருத்துக்களையும் அனுபவங்களையும் சொல்ல வேண்டிவருவதால் நான் என்ற பதத்தை பயன் படுத்த வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தான் நடக்கமாட்டதா சுண்டெலி விளக்குமாறைத் தூக்கிக் கொண்டு நடந்ததாம். சிங்கள அரசின் கொடுமைகளுக்கு போராடவேண்டிய நேரத்தில் அயல்நாட்டின் உள்விவாகாரங்களில் தேவையா உமக்கு!..

இந்திய விவாகாரங்களில் தலையிட்டது நீர் தான். அதனால் இந்திய சீனா பற்றி நீர் தான் கவலைப்பட வேண்டும். இந்தியா அமெரிக்கா நட்புறவைப் பற்றிக் கவலைப்படுகின்றீர் என்றால், உமது தலைவரான அம்பாத்கார் எழுதிய அரசியல் திட்டத்தால் தான் இத்தனை வினை என்பது குறித்தும் கவலைப்பட்டாக வேண்டும். ஜனநாயக நாடு என்று சட்டத்தை வகுத்து, மத்திய அரசையும் சரி, மாநில அரசையும் சரி தழம்பல் நிலையில் வைக்கச் செய்தவர் அம்பேத்தாரே! சீனாவில் இந்தப் பிரச்சனையில்லாதபடியால், அதில் ஆட்டம் இல்லை.

அணுகுண்டு தயாரிப்பு என்பது தேவையான ஒன்றே. குறுக்காலபோவன் பாதுகாப்புத் தொடர்பாக அளித்த விளக்கம் பற்றி கொஞ்சமாகவது கணக்கில் கொள்ளாமல், திரும்பித் திரும்பி விளக்கம் கெட்டத்தனமாக கதைப்பது பிடிச்சிறாவிக் குணம் எண்டு ஊரில் சொல்வார்களே! அந்தக் குணம் தான்.

இந்தியாவிற்கு எதிரி நாடுகள் எல்லாம், அணு குண்டை கையகப்படுத்தி வைத்திருக்கும்போது, அவர்களிடம் இருந்து பாதுகாக்க அது அவசியம் தான். அது பாவிப்பது எண்டு அர்த்தமல்ல. அப்படி வைத்திருந்தால் எவரும் போர் சிந்தனையோடு இந்தியா மீது அணுகமாட்டார்கள் என்பதற்காகவே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா மீது தந்தை செல்வா முதல் அனைவரும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தவர்கள்தாம். ஆனால் நடந்தது என்ன? தற்போது நடப்பது என்ன?

நாங்கள் அனைவரும் காட்டிய அன்புக்கு இந்தியா எங்களை வஞ்சித்ததுதான் மிச்சம்

Edited by இளங்கோ

நீங்க சொல்றது உண்மைதான்

இதையெல்லாம் படிக்கும்போது இந்தியன்னு சொல்லிக்கொள்ளவே எனக்கு வெட்கமாயிருக்கு.

அது IPKF தான் ஆனால் Indian Peace Keeping Force கிடையாது அது

Innocent People Killing Force

நாம் இந்தியன் என்பதால் பெறுமிதம் கொள்வோம், ஈழத்தமிழனவோ *************** சொல்லுவானுங்க அதுகளை கண்டுக்காதீங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இந்தியன் என்பதால் பெறுமிதம் கொள்வோம், ஈழத்தமிழனவோ ************* சொல்லுவானுங்க அதுகளை கண்டுக்காதீங்க.

rmsachitha!!!!!!!

வார்த்தையை அளந்து பேசுங்கள்

உண்மை உங்களைச் சுடுகிறது. அதற்கு பதிலனிக்க துப்பில்லாத நீங்கள் ஈழத்தமிழரைப் பற்றிக் கதைக்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு.

இந்தியன் இந்தியன் என்று சொல்லி தமிழ்நாட்டுத் தமிழனை சிந்திக்க விடாமல் செய்ததுதான் மிச்சம்.

இன்று தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கறதென்றால் ஈழத்தமிழர்கள்தான் காரணம்.

உங்களின் படு கேவலமான கீழ்த்தரமான வரிகள் நீங்கள் ஒரு கழிசடை என்பதைக் காட்டிவிட்டது. யாழ் எங்களின் தளம் உங்களுக்கு இங்கு வேலையில்லை.

மோகன் அண்ணா இந்த கீழ்த்தரமான இந்தியனை உடனடியாக நீக்குங்கள்.

நாம் இந்தியன் என்பதால் பெறுமிதம் கொள்வோம், ஈழத்தமிழனவோ Censored!!!!! Please Mind your language அதுகளை கண்டுக்காதீங்க.

எனக்கு அந்த பெருமை கிடையாது. எதை வச்சு பெருமைப் பட சொல்றீங்க. ஸ்ரீலங்கா ஒரு குட்டி நாடு. அதோட ராணுவம் நம்ம மீனவர்களை சுட்டுத் தள்ளுதே அதைத் தட்டிக் கேட்காது பார்த்துண்டு இருக்குதே அதை நினைச்சா?!

நான் இந்தியவைப் பார்த்து பெருமைப் படல ஆனா தமிழீழத்தைப் பார்த்து பெருமைப் படுறன். நடு ராத்திரில ஒரு பெண்ணால அங்கு சுதந்திரமா போக முடியும்னு அங்கு போய் வந்தவங்க சொல்றாங்க. நம்ம இந்தியாவில அது முடியுமா? நம்ம காந்தி அதைத்தான் உண்மையான நாடு என்றார்

எங்க இந்தியவில காந்திகள் இப்போ இல்ல கோட்சேக்கள்தான் அதிகமகிக்கிட்டு வர்றாங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி, சரி விட்டுத் தள்ளுங்கோ. இந்திய இராணுவம் தமிழரின் சொத்துக்களை தின்று ஏப்பமிட்ட செய்தியை நாம் எல்லோரும் அறிவோம். இது தெரிந்தும் எங்களில் சிலபேர் இந்திய இராணுவம் திரும்பவும் தமிழீழத்துக்குள் வரவேண்டும் என்று சொல்லி ஒடித்திரியிரீனம். இந்த துரோகக்கூட்டங்களை நினைத்தாத்தான் ஊரிலுள்ள எனது வீட்டு கால்நடைகளும் களவு போயிடுமோ என்று நினைத்து கவலையா இருக்கு.

:):blink::) :)

எனக்கு அந்த பெருமை கிடையாது. எதை வச்சு பெருமைப் பட சொல்றீங்க. ஸ்ரீலங்கா ஒரு குட்டி நாடு. அதோட ராணுவம் நம்ம மீனவர்களை சுட்டுத் தள்ளுதே அதைத் தட்டிக் கேட்காது பார்த்துண்டு இருக்குதே அதை நினைச்சா?!

நான் இந்தியவைப் பார்த்து பெருமைப் படல ஆனா தமிழீழத்தைப் பார்த்து பெருமைப் படுறன். நடு ராத்திரில ஒரு பெண்ணால அங்கு சுதந்திரமா போக முடியும்னு அங்கு போய் வந்தவங்க சொல்றாங்க. நம்ம இந்தியாவில அது முடியுமா? நம்ம காந்தி அதைத்தான் உண்மையான நாடு என்றார்

எங்க இந்தியவில காந்திகள் இப்போ இல்ல கோட்சேக்கள்தான் அதிகமகிக்கிட்டு வர்றாங்க.

கோட்ச்சே இருந்ததாலதான் இந்தியா துண்டாகமல் தடுக்கப்பட்டது. பொதுவாக பெண்களுக்கு பிறந்த வீடு புகுந்த வீடு என்று இருக்கும். பெண்கள் சுதத்திரமாக நடக்கிறார்கள் என்றாள் அவர்களின் சட்டம் கடுமையாக இருக்கிறது. தமிழ் நாட்டில் இருக்கும் மகளிர் காவல் நிளையங்கள் அழகு நிலையமாக இருக்கிறது. சரி அது போகட்டும் மும்பையில் பெண்கள் நடு ராத்திரியில கூட நடந்து போவதாக படித்து இருக்கிறேன். நீங்கள் மந்துக்குள் வேண்டுமானால் பெறுமிதம் கொள்ளுங்கள், ஆனால் நான் வெளிபடையாக பெருமிதம் கொள்கிறேன் இந்தனாக.

rmsachitha!!!!!!!

வார்த்தையை அளந்து பேசுங்கள்

உண்மை உங்களைச் சுடுகிறது. அதற்கு பதிலனிக்க துப்பில்லாத நீங்கள் ஈழத்தமிழரைப் பற்றிக் கதைக்க உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு.

இந்தியன் இந்தியன் என்று சொல்லி தமிழ்நாட்டுத் தமிழனை சிந்திக்க விடாமல் செய்ததுதான் மிச்சம்.

இன்று தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கறதென்றால் ஈழத்தமிழர்கள்தான் காரணம்.

உங்களின் படு கேவலமான கீழ்த்தரமான வரிகள் நீங்கள் ஒரு கழிசடை என்பதைக் காட்டிவிட்டது. யாழ் எங்களின் தளம் உங்களுக்கு இங்கு வேலையில்லை.

மோகன் அண்ணா இந்த கீழ்த்தரமான இந்தியனை உடனடியாக நீக்குங்கள்.

மன்னிக்கவும், வார்த்தை அளந்துதான் பேசுகிறேன் ஆனால் பாருங்கள் இந்த தளத்தில் உள்ள ஈழத்தமிழர்களில் சிலர் ஒரு தாயைபற்றி கேவலமாக பேசுகிறார்கள் அதை சரி என்கிறீர்களா.

என்னை வெளியில் போகச்சொல்லுவதற்க்கு நீங்கள் இந்ததளத்தின் நிர்வாகியா?

முதலில் கீழ்த்தரமாக இந்த தளத்தில் எழுதும் ஈழர்தமிழர்களை களைந்து கொண்டு வாருங்கள் பிறகு இந்தியனை கீழ்த்தரமானவன் என்று கூறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும், வார்த்தை அளந்துதான் பேசுகிறேன் ஆனால் பாருங்கள் இந்த தளத்தில் உள்ள ஈழத்தமிழர்களில் சிலர் ஒரு தாயைபற்றி கேவலமாக பேசுகிறார்கள் அதை சரி என்கிறீர்களா.

என்னை வெளியில் போகச்சொல்லுவதற்க்கு நீங்கள் இந்ததளத்தின் நிர்வாகியா?

முதலில் கீழ்த்தரமாக இந்த தளத்தில் எழுதும் ஈழர்தமிழர்களை களைந்து கொண்டு வாருங்கள் பிறகு இந்தியனை கீழ்த்தரமானவன் என்று கூறலாம்.

அப்படி யார் பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் அது தவறு என்று நான் உமக்கு பதிலளித்து விட்டேன். ஆனால் நீரோ மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களிடம் வம்பை விலைக்கு வாங்கப் பார்க்கிறீர். நான் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க துப்பில்லா ஆள் நீர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோட்ச்சே இருந்ததாலதான் இந்தியா துண்டாகமல் தடுக்கப்பட்டது.

கோட்சேயின் பேரனுக்கு இந்த பெரியாரின் பேரன் ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகிறான்.

அண்ணல் காந்தியடிகள் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்டவர். இந்து வெறியர்களான சாவர்க்கார், திலகர், அரவிந்தர் போன்றவர்களின் தீவிரவாதப் போக்குத்தான் பிரிவினைக்குக் காரணம். பச்சைப் பாசிச வெறியனான கோட்சேக்கு நீர் வக்காலத்து வாங்குகிறீர்.

ஜின்னாவும் தொடக்கத்தில் காங்கிரஸ்காரராக இருந்தவர்தான். சாரே ஜகான்சே அச்சே என்ற இந்தியாவின் தேசப் பற்று பாடலை எழுதிய கவிஞர் இக்பால் ஒரு இஸ்லாமியர். பின் அவர் பாகிஸ்தானியராக மாறினார். இந்து வெறியரான திலகர் மூட்டிய தீ தான் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வளர்த்தது. இந்துக்களே இந்நாட்டின் குடிமக்கள் என்று கூறி வகுப்புவாத வெறியை விதைத்தது அவர்கள்தாம்

நீங்கள் மந்துக்குள் வேண்டுமானால் பெறுமிதம் கொள்ளுங்கள், ஆனால் நான் வெளிபடையாக பெருமிதம் கொள்கிறேன் இந்தனாக.

எது உண்மையோ அதுதான் வரலாறு.

உம்மிடம் ஒரு கேள்வி. கார்கிலுக்காக தென்கோடியிலுள்ள ஒவ்வொரு தமிழனும் கவலைப் பட்டானே!! கச்சதீவுக்காக எந்த வடநாட்டானாவது கவலைப்பட்டானா?????????

ஏன் தமிழன்தானும் கவலைப் பட்டானா?

இதுதான்இந்தியத் தேசியத்தின் போலித்தனம்.

பெண்கள் சுதத்திரமாக நடக்கிறார்கள் என்றாள் அவர்களின் சட்டம் கடுமையாக இருக்கிறது. தமிழ் நாட்டில் இருக்கும் மகளிர் காவல் நிளையங்கள் அழகு நிலையமாக இருக்கிறது. சரி அது போகட்டும் மும்பையில் பெண்கள் நடு ராத்திரியில கூட நடந்து போவதாக படித்து இருக்கிறேன்.

ஜனனி சரியாகத்தான் சொல்லியிருக்கிறா.

உங்கள் மும்பையும் எங்கள் ஈழமும் ஒன்றல்ல. அது பண்பாட்டுச் சீரழிவு. இது பண்பாட்டின் சிகரம். அண்ணல் காந்தியடிகளின் கனவு ஈழத்தில்தான் நிறைவேறியுள்ளது.

http://www.geocities.com/tamiltribune/200703.html#two2

இதைப் படிச்சுப் பாருங்கோ!

இதுக்கப்புறமும் எந்த மானமுள்ள மனுஷாளும் தன்னை இந்தியன்னு சொல்ல மாட்டாள்

Edited by ஜனனி

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ

காந்தியடிகள் மீது மரியாதை நிறையவே உண்டு. அவரைக் கொன்ற கோட்சே மன்னிக்க முடியாதவன் தான். ஆனால் இந்தியா இந்துக்களுக்காகத் தான் என்ற கொள்கையால் தான், பாகிஸ்தான் பிரியவில்லை.

அன்று இந்தியா சுதந்திரம் பெற்றால், தனக்கு தலைவர் கிடையாது என உணர்ந்து கொண்ட, ஜின்னா தான் முஸ்லீம் அடிப்படை வாதத்தைத் தூண்டி பிரிக்கச் செய்தார். இன்று வரைக்கும் பாகிஸ்தான் இந்திய எதிர்ப்பை வைத்தபடி தான், பிழைப்பை ஓட்டுகின்றது.

தவிர, காந்தியடிகள் ஜின்னா இப்படிச் செய்த பின்னரும் கூட, பாகிஸ்தானுக்கு இந்தியா 300 கோடி ரூபா பணம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தான், கோட்சே , மகாத்மா இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுகின்றார் என்று அவரைக் கொலை செய்தார். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தியா வகுப்புவாத அடிப்படையில் இல்லாதபடியால் தான், மகாத்மா பாகிஸ்தானுக்கு பண உதவி கொடுக்க வேண்டும் என்றார். கோட்சே போன்றவர்கள் சிந்தனை வேறு விதமாக இருந்தது.

இருக்க, இன்றைக்கு கூட இந்தியாவில் எவரும் எந்தப் பதவிக்கும் வரமுடியும். ஆனால் பாகிஸ்தானில் முடியாது.

--------------------------------

இங்கே இந்தியன் என்று அடிக்கடி ஒருவர் தன்னை அடையாளம் காட்டுவதில் நிறையவே சந்தேகம் உண்டு. அவரின் நோக்கம் தமிழர்களைப் பிரிப்பதாகவே உணர முடியும். அதற்குள் மாட்டுப்படாது இருப்போம்.

rmsachithவின் கருத்துக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர் நினைத்த நேரம் வருவார். ஒரு வரியில் அல்லது இரண்டு வரியில் வாய்க்கு வந்ததை எழுதுவார். பின்பு ஆளைக் காணக் கிடைக்காது.

பின்பு இரண்டு நாள் கழித்து வந்து மீண்டும் ஒரு வரியில் ஏதாவது ஒன்றை எழுதுவார்.

இவருடைய கருத்துக்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

அப்படி யார் பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் அது தவறு என்று நான் உமக்கு பதிலளித்து விட்டேன். ஆனால் நீரோ மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களிடம் வம்பை விலைக்கு வாங்கப் பார்க்கிறீர். நான் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்க துப்பில்லா ஆள் நீர்

நீங்கள் கூறுவது சரிதான் என்றாளும் அது முன்பு கூறியது இது நேற்று நடந்தது கிலாடியேட்டர் படத்தின் கதானாயகன் பெயறை கொண்டவர் அப்படி கருத்து பதிந்து இருந்தார். அது பற்றி நிர்வாகியிடமும் புகார் கூறி இருந்தேன் பிறகு அதை நீக்கிவிட்டார்கள்.

இவர்கள் அப்படி பேசுவது ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவர்களை போல கீழ்த்தரமான கருத்துக்களை பதிப்பவர்களை யாழ் தளம் கண்டிப்பாக ஏற்க்கக்கூடாது. கருத்துகளில்தான் மோதல் இருக்கலாம் தவரே ஒருவனை எப்படி திட்டுவது என்பதுபற்றி யோசிக்ககூடாது என்பதே என் அவா என்று கூறி இத்துடன் இந்த தலைப்பில் இருந்து விடை பெறுகிறேன் நன்றி. வாழ்த்துக்கள்

Edited by rmsachitha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கோ

காந்தியடிகள் மீது மரியாதை நிறையவே உண்டு. அவரைக் கொன்ற கோட்சே மன்னிக்க முடியாதவன் தான். ஆனால் இந்தியா இந்துக்களுக்காகத் தான் என்ற கொள்கையால் தான், பாகிஸ்தான் பிரியவில்லை.

அன்று இந்தியா சுதந்திரம் பெற்றால், தனக்கு தலைவர் கிடையாது என உணர்ந்து கொண்ட, ஜின்னா தான் முஸ்லீம் அடிப்படை வாதத்தைத் தூண்டி பிரிக்கச் செய்தார். இன்று வரைக்கும் பாகிஸ்தான் இந்திய எதிர்ப்பை வைத்தபடி தான், பிழைப்பை ஓட்டுகின்றது.

தவிர, காந்தியடிகள் ஜின்னா இப்படிச் செய்த பின்னரும் கூட, பாகிஸ்தானுக்கு இந்தியா 300 கோடி ரூபா பணம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தான், கோட்சே , மகாத்மா இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுகின்றார் என்று அவரைக் கொலை செய்தார். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தியா வகுப்புவாத அடிப்படையில் இல்லாதபடியால் தான், மகாத்மா பாகிஸ்தானுக்கு பண உதவி கொடுக்க வேண்டும் என்றார். கோட்சே போன்றவர்கள் சிந்தனை வேறு விதமாக இருந்தது.

இல்லை தூயவன்!

இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டு. பாரதி பாடியது போல் கங்கை நதிப் புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்ற அடிப்படையில் அளைத்து தேசிய இனங்களுக்கும் மதிக்குக் கொடுத்து அதில் ஒரு தேசிமான தமிழனத்தின் உரிமைகளை மதித்து. கடல் கடந்த ஈழத்தை ஆதரித்து உண்மையான ஜனநாயகத்தை அது பேணியிருந்தால் நாம் இந்தியாவை நேசித்திருப்போம். பாரதியோ, வ.உ.சியோ நேதாஜியோ, பகத்சிங்கோ கனவு கண்ட இந்தியா அல்ல தற்போது இருப்பது. திலகர், அரவிந்தர், மதன் மோகன் மாளவிகா, சாவர்க்கர் போன்ற இந்து வெறியர்களின் கனவுத் தேசமாகத்தான் இது உருவாகியுள்ளது.

அதுதான் தற்போது ஆர்.எஸ்.எஸ்.,விசுவ இந்து பரிசத், சிவசேனாஇ, பஜ்ரங்தள் போன்ற மதவெறி இயக்கங்களாக வளர்ந்து நிற்கின்றன. இவர்களின் பாரதப் பண்பாடு என்பது பார்ப்பனப் பாசிச கருத்துருவாக்கமே. இவர்களின் ‘அகண்ட பாரதக் கனவு’ என்பது, ஜெர்மனியைச் சுற்றியிருந்த ஆஸ்திரியா, போலந்து, அங்கேரி போன்ற நாடுகளைக் கைப்பற்றி, தேசிய இனங்களை அழித்து, ஜெர்மனிய வல்லரசைக் கட்டி எழுப்ப முயன்று ஐரோப்பாவையே இரத்த வெள்ளத்தில் மூழ்க வைத்த பாசிச இனவெறியர் இட்லர் கண்ட கனவுக்கு ஒப்பானது என்பது தெளிவாகிறது.

அதனால்தான் இவர்கள் மொழிவழித் தேசியத்தை எதிர்க்கிறார்கள். தமிழீழத்தை எதிர்ப்பதற்கும் இதுதான் காரணம்.

ஜின்னா மதவெறியர்தான் அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவரே அதைத் தவிர்த்து மானில சுயாட்சியை ஏற்கத் தயாராக இருந்தார் இந்தியப் வெறித் தலைவர்களின் இந்துத் தீவிரவாதப் போக்கினால் அவர் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது என்ற உண்மையை அன்றைய காலகட்டத்தில் இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த மௌலான ஆசாத் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது கடிதத்தை நான் வாசித்தேன் .

இங்கே இந்தியன் என்று அடிக்கடி ஒருவர் தன்னை அடையாளம் காட்டுவதில் நிறையவே சந்தேகம் உண்டு. அவரின் நோக்கம் தமிழர்களைப் பிரிப்பதாகவே உணர முடியும். அதற்குள் மாட்டுப்படாது இருப்போம்.

அட! இந்த விழிப்புணர்வு உமக்கு எப்போது வந்தது. உமது பாதையில் முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியோ, வ.உ.சியோ நேதாஜியோ, பகத்சிங்கோ கனவு கண்ட இந்தியா அல்ல தற்போது இருப்பது. திலகர், அரவிந்தர், மதன் மோகன் மாளவிகா, சாவர்க்கர் போன்ற இந்து வெறியர்களின் கனவுத் தேசமாகத்தான் இது உருவாகியுள்ளது.

அதுதான் தற்போது ஆர்.எஸ்.எஸ்.,விசுவ இந்து பரிசத், சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற மதவெறி இயக்கங்களாக வளர்ந்து நிற்கின்றன. இவர்களின் பாரதப் பண்பாடு என்பது பார்ப்பனப் பாசிச கருத்துருவாக்கமே. இவர்களின் ‘அகண்ட பாரதக் கனவு’ என்பது, ஜெர்மனியைச் சுற்றியிருந்த ஆஸ்திரியா, போலந்து, அங்கேரி போன்ற நாடுகளைக் கைப்பற்றி, தேசிய இனங்களை அழித்து, ஜெர்மனிய வல்லரசைக் கட்டி எழுப்ப முயன்று ஐரோப்பாவையே இரத்த வெள்ளத்தில் மூழ்க வைத்த பாசிச இனவெறியர் இட்லர் கண்ட கனவுக்கு ஒப்பானது என்பது தெளிவாகிறது.

தமிழர்களுக்கு இந்தியாவில் மரியாதையில்லை என்பதற்கும், இந்துமதத்திற்கும் முடிச்சுப் போடுவது சரியானதாகத் தெரியவில்லை. அது வட இந்திய-தென்னிந்தியப் பிரச்சனை. அங்கே மூஸ்லீமாக இருந்தால் கூட தென்னிந்தியனை மதிப்பதில்லை.

இருக்க, இந்துவெறியர்களின் கனவு என்று எவ்வகையில் அடையாளம் கொடுக்கின்றீர் என்று புரியவில்லை. சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கார் பெளத்தர். காந்தியடிகளும் சரி, நேரு போன்றவர்கள் மதப்பிரிவுகளுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல. அன்று இந்தியா இருந்தநிலை வட ஆதிக்க நிலை என்று சொல்லலாமே தவிர, இந்து மதத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை. அம்பேத்கார் கூட உம் கருத்தை எடுத்துக் கொண்டால் வட, ஆதிக்க நிலையில் இருந்திருப்பார் என்றே கோள்ள வேண்டும்.

ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹந்து பரிசத், அல்லது அனைத்து இந்து அமைப்புக்களின் மீதும் எனக்கு மரியாதையிருக்கின்றது. மற்றவர்கள் சொல்லுவது போல, தமிழர்களின் மனங்களில் தூண்டிவிடுவது போல அவர்கள் வெறியர்கள் இல்லை. அவர்கள் சொல்வது எல்லாம் ஒன்று தான். எம் மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும், பண்பாட்டுரீதியாக இந்தியனானவே இருங்கள் என்று. அதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைக்குத் தூயதமிழ்சொற்களுக்கு நாம் போராடுகின்ற நிலை போன்றதே அது.

அதனால்தான் இவர்கள் மொழிவழித் தேசியத்தை எதிர்க்கிறார்கள். தமிழீழத்தை எதிர்ப்பதற்கும் இதுதான் காரணம்.

இன்றைக்கு காங்கிரஸ் தமிழீழத்தை எதிர்க்கின்ற அளவிற்கு கூட, அல்லது கம்னுசியவாதிகள் தமிழீழத்தை எதிர்க்கின்ற அளவிற்கு கூட, ஆர்எஸ்எஸ் அல்லது அதன் சார்ந்த அமைப்புக்கள் ஏதும் தமிழீழப் போராட்டத்தை எதிர்த்ததில்லை. சில வருடங்களுக்கு முன்னர் கூட, சிவசேனைத் தலைவர் விடுதலைப்புலிகளுக்கு தான் ஆதரவாளராகக் காட்டிக் கொண்டார். அவர்களைப் பொறுத்தவரைக்கும் பாகிஸ்தானே, முக்கிய எதிரியாக இருப்பதால், அவர்கள் மற்றய விடயங்களில் கவனிப்புச் செய்வதில்லை. மற்றும்படி, என்றைக்கு தாங்கள் தமிழீழத்தை எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டதில்லை. அல்லது தலைவரைப் பற்றி கேவலமாகப் பேசியதுமில்லை.

ஒரு விடயத்தை உங்களுக்குச் சொல்லலாம். வட இந்திய அரசியல் ஆதிக்கத்துக்கும், இந்துமதத்திற்கும் முடிச்சுப் போடாதீர்கள். அது வட - தென் பிரச்சனையே தவிர, அங்கே மதம் முக்கியமில்லை.

ஜின்னா மதவெறியர்தான் அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவரே அதைத் தவிர்த்து மானில சுயாட்சியை ஏற்கத் தயாராக இருந்தார் இந்தியப் வெறித் தலைவர்களின் இந்துத் தீவிரவாதப் போக்கினால் அவர் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது என்ற உண்மையை அன்றைய காலகட்டத்தில் இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த மௌலான ஆசாத் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது கடிதத்தை நான் வாசித்தேன் .

வழமை போல இந்து மத முடிச்சைப் போடுகின்றீர்கள். ஏற்கனவே சொன்னது போன்று மதங்கள் அங்கே ஆக்கிரமிப்புச் செய்யவில்லை. மேலும், ஆசாத் சுட்டிக் காட்டிய விடயத்தில் மிகத் தவறு ஒன்று இருக்கின்றது. மானித சுயாட்சியைத் தரமறுத்த இந்தியா, தனிநாடாக முஸ்லீம்மக்கள் பிரிய அனுமதித்திருக்கும் என்பது புத்திசாலித்தனமான பதிலாகத் தெரியவில்லை.கஸ்மீரத்தைப் போல, அது பிரிவதைத் தடுப்பது அதற்கு கஸ்டமாக இருந்திருக்காது. அப்படியிருக்க பாகிஸ்தானுக்கு சுயஆட்சி தர மறுத்துவிட்டு, நாடு பிரிய அனுமதித்தது என்று சொல்வது பொருத்தமாக இருக்கின்றதா?

நாட்டின் தலைவராக ஜின்னா விரும்பியதால், ஜின்னா அப்படி ஒரு முடிவு எடுத்தார் என்பது தான் உண்மை. ஆனாலும் கூட, இந்தியா பிரிய அனுமதித்ததோடு, நிதியுதவி அளிக்கவும் முன்வந்திருந்தது.

அட! இந்த விழிப்புணர்வு உமக்கு எப்போது வந்தது. உமது பாதையில் முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்

யாழ்களத்தின் வரலாறே உமக்குத் தெரியாது போலும். இங்கே லக்கிலுக், போன்றவர்களுடன் இந்தியாவைக் காரசாரமாக விவாதித்தவர்களில் நானும் ஒருவன் என்பதை நீர் அறியவில்லை. இங்கே குறித்த நபர், பிரிவினையைத் தூண்ட முயல்கின்றார் என்று புரிந்தவுடன், அவர் எதிர்பார்ப்பது போல, இந்தியாவோடு பகையுணர்வைத் தூண்டுவதை விலத்துவதே உண்மையான புத்திசாலித்தனம். அதை நான் செய்கின்றேன். ஆனால் நீர்......

வெளிநாடுகளில சில தமிழர் அல்லாத இந்திய சனம் எங்களை இன்னமும் இந்திய தமிழ்நாட்டுகளில் இருந்து இங்கால வந்த அகதிகள் போல கருதுவதாக எனக்குப்படுகிறது. எனது கம்பனியில வேலைக்கு யாரும் ஆசியர்கள் வந்தா என்னுடைய பொஸ் என்னிடம் விடுவார் முதலில் கதைக்க அப்ப பார்க்கோணும் அவர்களின் ஈழத்தமிழனுக்கு எப்படியான ஆதரவினை கொடுத்துவந்திருகிறார்கள் என்று. அனால் வேலையில சேர்ந்தபின் இவர்கள் வெள்ளைகளுடன் சேர்ந்து எம்மைப்பற்றி எம் அறிவினைப்பற்றியும் தம் அறிவினைப்பற்றியும் தாம் தான் எமக்கு பிரச்சனை நேரத்தில் அரிசி மூட்ட்டைகள் பிளேனில போட்டதாக அடிக்கும் வார்த்தைகள் இருக்கின்றதே அப்படி கதைக்க அவர்களினால் தான் முடியும். இந்திய தமிழனையும், இலங்கைத் தமிழனையும் தங்கள் அடிமைகள் போல கணிக்கும் மதிக்காத இக்கழுதைக்கூட்டம் தான் இந்தியன் ஆமியாக அப்ப வந்தது. ஆகவே இந்திய தமிழர்கள் எங்களுக்கு உதவினார்களே தவிர குளிதோண்டப்பார்க்கவில்லை. இப்ப அவர்களுக்கு அரசியல் அழுத்தம் அப்படி கதைக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பேத்கார் கூட உம் கருத்தை எடுத்துக் கொண்டால் வட, ஆதிக்க நிலையில் இருந்திருப்பார் என்றே கோள்ள வேண்டும்.

அம்பேத்கார் சட்டத்தை மாற்றியமைக்க முன் மனுதர்ம அடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் இருந்தது. அம்பேத்கார் அரசியல் சட்டத்தை அமைத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகே பௌத்தத்தைத் தழுவுகிறார். தூயவன் வரலாற்றுப் பிழையான செய்திகளை தருகிறார்

மேலும், ஆசாத் சுட்டிக் காட்டிய விடயத்தில் மிகத் தவறு ஒன்று இருக்கின்றது. மானித சுயாட்சியைத் தரமறுத்த இந்தியா, தனிநாடாக முஸ்லீம்மக்கள் பிரிய அனுமதித்திருக்கும் என்பது புத்திசாலித்தனமான பதிலாகத் தெரியவில்லை.கஸ்மீரத்தைப் போல, அது பிரிவதைத் தடுப்பது அதற்கு கஸ்டமாக இருந்திருக்காது. அப்படியிருக்க பாகிஸ்தானுக்கு சுயஆட்சி தர மறுத்துவிட்டு, நாடு பிரிய அனுமதித்தது என்று சொல்வது பொருத்தமாக இருக்கின்றதா?

மௌலானா ஆசாத்தின் கூற்று மிகச் சரியானது. அதே நேரம் அது மட்டும் அவரது கூற்றை வலுப்படுத்தவில்லை. ஜின்னாவின் பல பேச்சுக்கள் அவர் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் பற்றாளராக இருந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. திலகர் போன்றவர்கள் இந்துத்துவத்தையும் முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புவாத வெறியையும் வளர்த்தார்கள் என்பது மறைக்க முடியாத வெளிப்படையான உண்மை.

ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹந்து பரிசத், அல்லது அனைத்து இந்து அமைப்புக்களின் மீதும் எனக்கு மரியாதையிருக்கின்றது. மற்றவர்கள் சொல்லுவது போல, தமிழர்களின் மனங்களில் தூண்டிவிடுவது போல அவர்கள் வெறியர்கள் இல்லை. அவர்கள் சொல்வது எல்லாம் ஒன்று தான். எம் மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும், பண்பாட்டுரீதியாக இந்தியனானவே இருங்கள் என்று. அதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைக்குத் தூயதமிழ்சொற்களுக்கு நாம் போராடுகின்ற நிலை போன்றதே அது.

மனிதநேயம் சிறிதளவும் அற்ற மதவெறி இயக்கங்களுக்கு தூயவன் வக்காலத்து வாங்குகிறார்.

அயோத்தியில் ராமர் கோவிலை இடித்தது. ஆவுஸ்திரேலியா நாட்டு கிருஸ்தவ பாதிரியாரையும் அவரது இரண்டு மகன்களையும் உயிரோடு எரித்தது. குஜராத்தில் அப்பவி முஸ்லீம்களை நூற்றுக்கணக்கா படுகொலை செய்தது, ஒரிசாவில் கிருஸ்தவக் கள்ளியாஸ்திரிகளை பாலியல் வல்லுறவு கொண்டது. ஆதே ஒரிசாவில் பள்ளிவாசல் ஒன்றில் புகுந்து 6000 இற்கும் மேற்பட்ட (சரியான எண்ணிக்கைதான்) முஸ்லீம்களை வெட்டிப் படுகொலை செய்தது. இது போன்று இன்னும் எத்தனையோ உள்ளன.

இன்றைக்கு காங்கிரஸ் தமிழீழத்தை எதிர்க்கின்ற அளவிற்கு கூட, அல்லது கம்னுசியவாதிகள் தமிழீழத்தை எதிர்க்கின்ற அளவிற்கு கூட, ஆர்எஸ்எஸ் அல்லது அதன் சார்ந்த அமைப்புக்கள் ஏதும் தமிழீழப் போராட்டத்தை எதிர்த்ததில்லை. சில வருடங்களுக்கு முன்னர் கூட, சிவசேனைத் தலைவர் விடுதலைப்புலிகளுக்கு தான் ஆதரவாளராகக் காட்டிக் கொண்டார்.

கம்யுனிஸ்டுகளின் கதை கழுதை தேய்ந்து கட்டேறும்பான கதை. காங்கிரஸ் என்றைக்கும் மிதவாதக் கட்சிதான் நாங்கள் அவற்றை ஆதரிக்க வில்லை. சிவசேனாத் தலைவர் வாயால் சொல்லிவிட்டு அதற்குப் பின் அவர் பாட்டுக்கு இந்துத்துவத்தை வளர்க்கப் போய்விட்டார். இன்று தமிழீழ விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் ஐயா நெடுமாறன், திருமாவளவன், கொளத்தூர் மணி போன்றவர்கள் அனைவரும் இந்துத்துவத் தீவிர எதிர்ப்பாளர்களே. இவர்களின் ஆதரவு எங்கே?! பால்தக்ரேயின் ஆதரவு எங்கே?!

இங்கே லக்கிலுக், போன்றவர்களுடன் இந்தியாவைக் காரசாரமாக விவாதித்தவர்களில் நானும் ஒருவன் என்பதை நீர் அறியவில்லை. இங்கே குறித்த நபர், பிரிவினையைத் தூண்ட முயல்கின்றார் என்று புரிந்தவுடன், அவர் எதிர்பார்ப்பது போல, இந்தியாவோடு பகையுணர்வைத் தூண்டுவதை விலத்துவதே உண்மையான புத்திசாலித்தனம். அதை நான் செய்கின்றேன். ஆனால் நீர்......

நான் இங்கு எதிர்ப்பது இந்திய அரசின் வல்லாதிக்க போக்கைத் தானேயன்றி மக்களை அல்ல. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள் பிற மாநிலங்களிலும் இருக்கிறார்கள். இந்திய வல்லாதிக்க ஒடுக்கு முறை பல மாநிலங்களிலும் உள்ளது

Edited by இளங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.