Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறான தகவல்களைப் பரப்பும் இணையதளங்களை மக்கள் நம்பிவிடுகின்றனர்.!

Featured Replies

தவ­றான தக­வல்­களைப் பரப்பும் இணை­ய­த­ளங்­களை மக்கள் நம்பிவிடு­கின்­றனர்.!

 

கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து ரொபட்அன்­டனி

sri_0.jpg

மீண்டும் நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்­ப­டாமல் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நாங்கள் பாடு­பட்டுக் கொண்டி­ருக்­கும்­போது நாங்கள் நாட்டை பிரிக்­கப்­போ­வ­தா­கவும் இரா­ணு­வத்தைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும் பொய்யான பிர­சா­ரங்­களை சிலர் மேற்­கொண்­டு­ வ­ரு­கின்­றனர் என்று  ஜனா­தி­பதி மைத்­ திரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

அவ்­வாறு இணை­ய­த­ளங்­களில் வரு­கின்ற தக­வல்­களை வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள் நம்­பி­வி­டு­கின்­றனர். ஆனால் அவை  பொய்­யான தக­வல்­க­ளாகும் என்றும் ஜனா­தி­பதி  சுட்­டிக்­காட்­டினார். 

மலே­ஷி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம்  ஒன்றை மேற்­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  கோலா­லம்­பூரில்  பிரிக்பீல்ட் என்ற இடத்தில் அமைந்­துள்ள  பௌத்த மகா விஹா­ரையின் மலே­ஷிய பிர­தான சங்க தேரர் கிரிந்தே தம்­ம­ரத்­னவை நேற்றுக் காலை சந்­தித்து  உரை­யா­டி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கிரிந்தே தம்­ம­ரத்ன தேரரும்  சிறிது நேரம் சுமு­க­மான கலந்­து­ரை­யாடல்  ஒன்றை நடத்­தினர். 

இதன்­போது ஜனா­தி­பதி மேலும் குறிப்­பி­டு­கையில்  

வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள்  இணை­ய­த­ளங்கள் ஊடா­கவே  அனைத்து விட­யங்­க­ளையும் பார்க்­கின்­றனர். அவற்றில் இலங்கை தொடர்பில் வரு­கின்ற அனைத்து விட­யங்­க­ளையும்  உண்மை என்றும்  வெளி­நா­டு­களில் உள்ள மக்கள் நம்­பு­கின்­றனர். 

வேறு வழியி;ல் தக­வல்கள் வரு­வ­தில்லை.  இணை­ய­த­ளங்கள் ஊடா­கவே தக­வல்கள் வரு­கின்­றன.  உடனே அதில் உள்­ள­வற்றை உண்மை என நம்­பு­கின்­றனர். அதுதான் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. 

நாங்கள் நாட்டைப் பிரிக்­கப்­போ­வ­தா­கவும்  இரா­ணுவ முகாம்­களை அகற்­றப்­போ­வ­தா­கவும்  தவ­றான தக­வல்க  ளை பரப்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். இரா­ணு­வத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தா­கவும்  கூறி­வ­ரு­கின்­றனர்.  இவைதான் இணை­ய­த­ளங்­களில் தற்­போது பதி­வேற்­றப்­ப­டும்­வி­ட­யங்­க­ளாக உள்­ளன. 

இவை பாரிய பொய்­யான  பிர­சா­ரங்­க­ளாகும். நாங்கள் எவ்­வாறு நாட்டை முன்­னேற்­று­வது என்­பது குறித்து பாடு­பட்­டு­வ­ரு­கின்றோம். மீண்டும்  யுத்தம்  ஒன்று ஏற்­ப­டாமல்  நாட்டை கட்­டி­யெ­ழுப்ப பாரிய செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்ளோம்.  

இங்கும் சிலர் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கின்­றனர்.  எவ்­வ­ள­வா­வது பணத்­தைத்­தே­டிக்­கொள்­ளவே இவ்­வாறு  கூச்­ச­லி­டு­கின்­றனர்.  ஒரு­சிலர் ஒன்­றி­ணைந்து சத்­தம்­போட்­டு­விட்டு  அதனைப் புகைப்­படம் எடுத்து  டொலர்­களை பெற்­றுக்­கொள்­வதே இவர்­களின் நோக்­க­மாகும் என்றார்.   

இதன்­போது மலே­ஷிய பிர­தான சங்க தேரர் கிரிந்தே தம்­ம­ரத்ன கருத்து வெளி­யி­டு­கையில், நாங்கள் இங்கு என்ன செய்­ய­வேண்டும் என்று கூறுங்கள்.  எங்­களால் முடிந்­ததை நாங்கள் செய்­கின்றோம்.  இப்­போ­தைய காலத்தில் இணை­ய­த­ளங்­களில் நல்­ல­தைப்­போன்று  தீமை­யான விட­யங்­களும் இடம்­பெ­று­கின்­றன என்றார். 

கிரிந்தே தம்­ம­ரத்­தன தேர­ருடன் கலந்­து­ரை­யா­டிய பின்னர்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  விஹா­ரையில் நடை­பெற்ற  மத வழி­பாட்டு நிகழ்­விலும் கலந்­து­கொண்டார்.

மலே­ஷி­யா­வுக்கு மூன்­றுநாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தைக் கடந்த 15 ஆம் திகதி ஆரம்­பித்த ஜனா­தி­பதி  நேற்று முன்­தினம்    மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரப்­ஸாக்­குடன் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­தினார். மலே­ஷிய பிர­தமர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற  இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் ஐந்து புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­களும் கைச்­சாத்­தி­டப்பட்;டன.  

மலே­ஷிய பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  சர்­வ­தேச மேடை­களில் மலே­ஷியா இலங்­கைகு வழங்­கி­வரும் ஆத­ர­வா­னது பெறு­ம­திக்­கு­ரி­ய­தாகும் என்று குறிப்­பிட்டார். 

மேலும் எனது அர­சாங்கம் நல்­லி­ணக்கம் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற இரண்டு விட­யங்­க­ளை­யுமே பிர­தா­ன­மாக கொண்டு செயற்­ப­டு­கின்­றது.  பொரு­ளா­தா­ரத்தை  கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­விடின் நல்­லி­ணக்­கத்தில் வெற்­றி­பெற முடி­யாது. எனவே  நல்­லி­ணக்கம் மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற இரண்டு விட­யங்­க­ளிலும் அர்ப்­ப­ணிப்­புடன் இலங்கை அர­சாங்கம் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.   

அத்துடன் கடந்த  15ஆம் திகதி ஜனாதிபதி கோலாலம்பூரில் நடைபெற்ற  இலங்கை மலேஷிய வர்த்தக மாநாட்டிலும் கலந்துகொண்டார். 

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் பிரதி அமைச்சர்களான பாலித்த தேவரப்பெரும, மனுஷ்ய நாணயக்கார   மற்றும் முன்னாள் கொழும்பு மாநகர  சபை மேயர் முஸம்மில்  ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். 

இதேவேளை மலேஷியாவுக்கான தனது உத்தயோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நாடு திரும்ப ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.