Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார்குடி ரீவைண்ட் ஜாதகம்

Featured Replies

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 51 - நடராசன் - ஆர். எம். வீரப்பன் பனிப்போர்!

 

 

கூவத்தூர் கும்மாளத்துக்கான ஒத்திகை, 28 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் மறைந்தபோதே அரங்கேறிவிட்டது. அப்போது கற்றுக்கொண்ட யுக்திகளையும் வித்தைகளையும் ஜெயலலிதா இறந்தபோது கச்சிதமாக நடத்தியது சசிகலா குடும்பம்.

எம்.ஜி.ஆர். மறைந்த உடனேயே சீனியர் அமைச்சரான நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக்கப் பட்டார். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் ‘முதல்வர் யார்?’ என்கிற போட்டியில் அ.தி.மு.க இரண்டாக உடைந்தது.

எம்.ஜி.ஆர்  இறந்த ஐந்தாவது நாள், முதல்வர் தேர்தலில் போட்டியிடப் போவதாக நெடுஞ்செழியன் அதிரடியாக அறிவித்ததுமே பிரச்னை வெடித்தது. அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கும் அந்த ஆசை இருந்தது. பிறகு ஜானகி அம்மாளை முன்நிறுத்தி பின்னால் இருந்து இயங்க ஆரம்பித்தார். கவர்னர் குரானாவைச் சந்தித்த ஆர்.எம்.வீரப்பன், ‘ஜானகி அம்மாளுக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. முதல்வர் தேர்தலில் அவர் போட்டியிடுவார்’ எனச் சொல்லிவிட்டு வந்தார். 1987 டிசம்பர்  31-ம் தேதி ஜானகி வெளியிட்ட அறிக்கையில் ‘கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு இணங்க முதல்வர் பதவியை ஏற்க சம்மதிக்கிறேன். நெடுஞ்செழியன் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். 

p14a.jpg

எம்.ஜி.ஆர் இருக்கும்போதே துணை முதல்வராகிவிட ராஜீவ் காந்தி வரையில் தூபம் போட்டவர் ஜெயலலிதா. அவரும் எம்.ஜி.ஆர் இறந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முதல்வராகிவிட துடித்தார். அதற்காகவே ராஜாஜி ஹாலில்
எம்.ஜி.ஆரின் தலைமாட்டில் போய் நின்றார். பக்கவாட்டில் ஜானகி நின்றுகொண்டிருந்தார். அதனால் கேமரா பிரேமில் ஜானகிகூட வராமல் போனார். ஆனால், தலைமாட்டில் நின்ற ஜெயலலிதாவை கேமரா தவிர்க்கவே முடியாது. ஜெயலலிதா நின்ற பொசிஷனை பார்த்தால் அவர் ஏதோ ஒரு உறுதியோடுதான் நின்றதுபோலத் தெரியும். கேமராவின் ஒளிவெள்ளத்தில் ஜெயலலிதா ஒதுங்கி விடக்கூடாது என்கிற கவலை நடராசனுக்கு இருந்தது.

ஜானகியை, ஆர்.எம்.வீரப்பன் முன்னிலைப்படுத்தியதால் ஜெயலலிதாவின் ஆசையில் முட்டுக்கட்டை விழுந்தது. வேறு வழியில்லாமல் நெடுஞ்செழியனை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமசந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், உள்ளிட்டோர் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலத்திலேயே அவர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருச்சி செளந்தரராஜன் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களாகவே இருந்தார்கள். அதற்கான பிளாட்பார்மை நடராசன் போட்டிருந்தார். இவர்கள் ஜெயலலிதாவைச் சந்திப்பதாக இருந்தால் நடராசன் மூலம்தான் சந்தித்தார்கள். ஜெயலலிதா சொல்லும் தகவல்கள் அனைத்தும் சசிகலா மற்றும் நடராசன் வழியாகத்தான் இவர்களுக்குப் போய்க்கொண்டிருந்தன. அதனால் திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் இருவரும் நடராசனுக்கு ‘படா தோஸ்த்’ ஆனார்கள். அந்த வகையில்தான் ஜெயலலிதாவைப் பொதுச் செயலாளராக அவர்கள் முன்னிலைப்படுத்தினார்கள். ‘கட்சிக்கு ஜெயலலிதா. ஆட்சிக்கு நெடுஞ்செழியன்’ என்பதை ஜானகி ஆதரவாளர்கள் ஏற்கவில்லை.

p14.jpg

1984 சட்டமன்றத் தேர்தலின்போது எம்.ஜி.ஆர்  அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அதனால் காங்கிரஸுடன் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என அனைத்துமே ஆர்.எம்.வீரப்பன் மேற்பார்வையில்தான் நடைபெற்றன. அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பிய பிறகு, ஜெயித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களெல்லாம் அவரைப் போய்ப் பார்த்தார்கள். அப்போது வளர்மதியும் அவர்களோடு போயிருந்தார். ‘‘ஏய்... நீ என்ன இந்தப் பக்கம் வந்திருக்க?’’ என எம்.ஜி.ஆர். அவரைப் பாத்துக் கேட்க... ‘‘அண்ணே நான் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ-ண்ணே’’ எனச் சொல்ல, அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளர் பட்டியலில் தனக்கு வேண்டப்பட்டவர்களைச் சேர்த்திருந்தார் ஆர்.எம்.வீரப்பன். வளர்மதி... ஆர்எம்.வீரப்பனின் சிஷ்யை. அப்படிதான் வளர்மதியும் எம்.எல்.ஏ ஆனார். அதனால் எம்.எல்.ஏ-க்கள் பலரும் ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு அவர்கள் ஆர்.எம்.வீரப்பனுக்காக ஜானகியை ஆதரித்தார்கள்.

ஜெயலலிதா அ.தி.மு.க-வுக்கு என்ட்ரி ஆனது முதலே அவரை ஆர்.எம்.வீரப்பனுக்குப் பிடிக்க வில்லை. அவரைத்  தூக்கிப்பிடிக்கும் நடராசனையும் வெறுத்தார். ஆர்.எம்.வீரப்பனிடம் இருந்த செய்தித் துறையில்தான் நடராசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  நடராசனின் புரோமோஷனுக்காக வலம்புரி ஜான், ஆர்.எம். வீரப்பனிடம் சிபாரிசுக்குப் போனபோது ‘‘நடராசனுக்கு உதவி செய்வதும் நாகப்பாம்புக்குப் பால் வார்ப்பதும் ஒன்றுதான்’’ எனச் சொன்னார். அப்போதே நடராசனின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்துவிட்டு ‘நடராசனின் வளர்ச்சியை வீக்கம்’ என்றார் ஆர்.எம்.வீரப்பன். நடராசன் - ஆர்.எம்.வீரப்பன் பனிப்போர், நேரு சிலை திறப்பு விழா வரைக்கும் தொடர்ந்தது. ஜெயலலிதாவை அந்த விழாவில் பங்கேற்க வைப்பதற்காக ராஜீவ் காந்தி வரையில் போராடியது, நேரு சிலை திறப்பு விழாவில் தனியாக ஜெயலலிதா பெயரைப் போட்டு இரண்டாவது அழைப்பிதழ் அச்சடித்து என நடராசனின் நாடகத்தை அறிந்தவர் என்பதால் கட்சியிலும் ஆட்சியிலும் ஜெயலலிதா ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது என்பதில் ஆர்.எம்.வீரப்பன் கறாராக இருந்தார்.

ஜானகிக்கு ஆதரவாக, கவர்னர் குரானா முன்பு எம்.எல்.ஏ-க்களை நிறுத்தினார் ஆர்.எம்.வீரப்பன். அப்படி நிறுத்தப்பட்டவர்களை குரானா எண்ணிப்பார்த்தபோது 97 பேர் இருந்தார்கள். அதன்பின் என்ன நடந்தது?

(தொடரும்) 

http://www.vikatan.com

  • Replies 79
  • Views 26.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 52 - ஜானகி ஆட்சியைக் கவிழ்க்க சதி!

 

 

ல்லறையின் ஈரம் காய்வதற்கு முன்பே பதவிச் சண்டை தொடங்கிய வரலாறு, எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து ஜெயலலிதா வரைக்கும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர் மறைந்தபோது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பலம் 131. இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர், அதாவது 97 பேர் ஆதரித்ததால் ஜானகியை ஆட்சி அமைக்க அழைத்தார் கவர்னர் குரானா. எதிர்முகாமில் கடும் வெப்பம். எம்.ஜி.ஆர் இருந்தபோதே கோஷ்டிகளாகப் பிரிந்து கிடந்தவர்கள், அவர் மறைவுக்குப் பிறகு வெளிப்படை யாகவே மோதிக்கொண்டார்கள். ராஜாஜி ஹாலிலேயே அது ஆரம்பமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் தலைமாட்டில் ஜெயலலிதாவைச் சசிகலா குடும்பம் நிறுத்தியபோதே பிரச்னை வெடித்தது. கணவரை இழந்த அதிர்ச்சியில் வீட்டிலேயே இருந்த ஜானகியை, ‘‘டி.வி-யில் ஜெயலலிதா மட்டும்தான் தெரிகிறார். உடனே வந்து பக்கத்தில் அமருங்கள்’’ என்று வற்புறுத்தி அழைத்து வந்தார்கள். அவரை வைத்தே ஆர்.எம்.வீரப்பன் தரப்பு அரசியல் செய்ய ஆரம்பித்தது.    

p22a.jpg

முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதாக ஜானகி அறிவித்ததுமே ‘ஜானகி மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், அவருக்கு அரசியல் தெரியாது. முதல்வர் போட்டியில் இருந்து விலக மாட்டேன்’ என அறிக்கை விட்டார் நெடுஞ்செழியன். குரானா முன்பு ஆதரவு            எம்.எல்.ஏ-க்களை நிறுத்துவதற்கு முன்பு, சட்டமன்றக் குழுத் தலைவராக ஜானகியைத் தேர்வு செய்யும் வைபவம் நடைபெற்றது. அதே நேரம் நெடுஞ்செழியன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்னொரு பக்கம் கூடியது. அதில் அ.தி.மு.க-வின் புதிய பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். நெடுஞ்செழியன் ஆட்சியில் அமர ஆசைப்பட்டதால், கட்சியில் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் நடராசன் வெற்றி பெற்றார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில்தான் நடைபெற்றது. பிரஸ் மீட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். அப்போது எம்.ஜி.ஆரின் அம்மா சத்யாவின் படத்தைக் காட்டி, ஜெயலலிதா நிருபர்களிடம் பேசினார். ‘‘நான் அரசியலைவிட்டு விலக நினைத்தபோது ‘அரசியலைவிட்டுப் போகக் கூடாது’ என ஆணையிட்டு அன்னை சத்யா படத்தின் மீது எம்.ஜி.ஆர் சத்தியம் வாங்கினார்’’ எனச் சொன்னார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் இருந்தபோதே துணை முதல்வர் ஆகிவிட ஜெயலலிதா முயன்றார். அதுபற்றிய விஷயங்கள் கசிய ஆரம்பித்த நிலையில்தான், அவர் மீதான இமேஜைத் தூக்கி நிறுத்த அன்னை சத்யா படத்தை ஜெயலலிதா கையில் திணித்தது சசிகலா தரப்பு.
அந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, ‘‘70 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்’’ என்றது ஜெயலலிதா தரப்பு. ஆனால், உண்மையில் அவர்கள் பக்கம் இருந்தது 29 பேர் மட்டுமே. ‘‘ஜெயலலிதா தேர்வு செல்லாது’’ என்றது ஜானகி தரப்பு. 97 பேர் ஆதரவு இருந்ததால் ஜானகியைப் பதவி ஏற்க அழைத்தார் குரானா. உடனே ஜெயலலிதா, ‘நெடுஞ்செழியனுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தராதது, மெஜாரிட்டியை நிரூபிக்க ஜானகிக்கு அதிக நாள் கொடுத்தது’ பற்றி குரானாவுக்கு எழுதிய கடிதத்தில் கோபத்தைக் கொட்டினார். அதையெல்லாம் மீறி, 1988 ஜனவரி 6-ம் தேதி ஜானகி அமைச்சரவை பதவியேற்றது. ஜனவரி 28-ம் தேதி மெஜாரிட்டியை ஜானகி நிரூபிக்க வேண்டும். அதற்குள் அணி தாவி விடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்த முயன்ற நடராசன், அவருடைய மறைவுக்குப் பிறகு முன்பைவிட வேகமாக  செயல்பட்டார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது ராஜீவ் காந்தி வரைக்கும் மூவ் செய்த ஜெயலலிதாவும், அதற்கு உறுதுணையாக நின்ற நடராசனும் அதே அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்தார்கள். ஜானகி ஆட்சி நீடித்துவிடக் கூடாது என, உடனே அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க டெல்லி சென்றார் ஜெயலலிதா. ‘‘சட்டசபையில் ஜானகி மெஜாரிட்டியை நிரூபிக்கும்போது எங்கள் அணியை ஆதரிக்க வேண்டும்’’ என ராஜீவ் காந்தியிடம் கேட்டுக் கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியில் 61 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். அந்த எம்.எல்.ஏ-களின் ஆதரவைச் சேர்த்தாலும் 90 பேர்தான் வருவார்கள். ராஜீவ் காந்தியோ, ‘‘ஒன்றுபட்ட அ.தி.மு.க-வைத்தான் ஆதரிக்க முடியும்’’ எனச் சொல்லிவிட்டார். வேறுவழியில்லாமல் இரண்டு அணியினரும் மோதிப் பார்த்துவிடத் துடித்தார்கள்.

(தொடரும்) 


மக்கள் குரலை மாற்றினார்!

ஜெயலலிதாவுக்கு ‘மக்கள் குரல்’ பத்திரிகை ஆதரவு கொடுத்து வந்தது. ஆனால், ஆரம்பகாலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ‘மக்கள் குரல்’ கொண்டிருந்தது. அப்போது அதன் நிர்வாகியான ஜீவா ராமமூர்த்தியிடம் நடராசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அந்த பத்திரிகை எடுத்ததற்கு நடராசன் காரணமாக இருந்தார். அதன்பிறகு அந்தப் பத்திரிகை அலுவலக நிகழ்ச்சிகளிலெல்லாம் ஜெயலலிதா தவறாமல் பங்கேற்றார்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 53 - கவிழ்ந்தது ஜானகி ஆட்சி!

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த கவர்னர் குரானா, மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லியிருந்தார். அதற்குக் குறிக்கப்பட்ட நாள், 1988-ம் ஆண்டு ஜனவரி 28. கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆனது.

97 பேரின் ஆதரவை வைத்திருந்த ஜானகிக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 21 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதைத் திரட்ட களமிறங்கினார். ஜெயலலிதாவைப் போலவே ராஜீவ் காந்தியைச் சந்தித்து ஆதரவு கேட்டார் ஜானகி. அவருக்கு, ‘‘ஒன்றுபட்ட அ.தி.மு.க-வைத்தான் ஆதரிக்க முடியும்’’ என்று பதில் வந்தது. 24 எம்.எல்.ஏ-க்களை வைத்திருந்த தி.மு.க-வின் ஆதரவை நாடினார்கள். அவர்களும் கையை விரித்தனர். வேறு வழியில்லாமல் அடுத்த அஸ்திரத்தை வீசினார் ஜானகி. ‘ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வேறுபாடுகளை மறந்து தன்னை ஆதரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். இதனால் அவர்கள் தாவி விடுவோர்களோ என்ற கலக்கம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது.

p16.jpg

எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நடராசன் மேற்கொண்டார். கே.கே.எஸ்.எஸ்.ஆர், செளந்தரராஜன், திருநாவுக்கரசர் ஆகியோரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தார் நடராசன். கே.கே.எஸ்.எஸ்.ஆர் அதைப் பிரதானமாகச் செய்தார்.

ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அடையாறு பார்க் ஹோட்டலிலும், ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பிரசிடென்ட் ஹோட்டலிலும் ‘பாதுகாப்பில்’ வைக்கப்பட்டனர். அடிக்கடிவந்து எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்து ஆலோசனை செய்தார் ஜெயலலிதா. இந்த ஃபார்முலாவை அன்றைக்குப் போட்ட நடராசன்தான், இன்றைய கூவத்தூருக்கும் சூத்திரதாரி. அன்றைக்கு ஜெயலலிதாவைப் பார்க் ஹோட்டலுக்கு அனுப்பியவர், இன்றைக்கு சசிகலாவைக் கூவத்தூருக்கு அனுப்பிவைத்தார்.

 p16a.jpg

‘ஜானகியின் ஆலோசகர்’ என ஆர்.எம்.வீரப்பனின் பெயர் அன்றைக்கு மீடியாவில் அடிபட ஆரம்பித்தது. அதேபோல ‘ஜெயலலிதா வின் அரசியல் ஆலோசகர்’ என நடராசனின் பெயரைக்கட்டி எழுப்பியிருந்தார்கள். ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பிறகு வட மாநிலங்களில் டூர் அடித்துவிட்டு, கேரளா வழியாகத் தமிழகத்துக்குள் நுழைந்தார்கள். அவர்களைத் தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு அழைத்துச்சென்று, அங்கே ஒரு நூற்பாலையில் தங்கவைத்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சட்டசபை கூடும் நாளில் சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.

இதற்கிடையே, ‘ஜனவரி 13-ம் தேதி செயற்குழு கூடும்’ என அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் அ.தி.மு.க அலுவலகத்தை ஜானகி கோஷ்டி முந்தைய நாளே பூட்டிவிட்டது. நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், பண்ருட்டி ராமச்சந்திரன் புடைசூழ வந்த ஜெயலலிதா, தடையை மீறி நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதனால் அ.தி.மு.க அலுவலகம் எதிரில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார் ஜெயலலிதா. 

அடுத்தடுத்து பரபரப்புகள் அதிகரிக்க, ஜனவரி 28-ம் தேதி காலையில் சட்டசபை கூடியது. அரசின் நம்பிக்கைத் தீர்மானத்தையே முதலில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், ‘‘ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகத் தொலைபேசியில் சொன் னார்கள்’’ எனச் சொல்லி அவையை 12 மணிக்குத் தள்ளிவைத்தார். பி.ஹெச்.பாண்டியன், ஜானகிக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மீண்டும் அவை கூடியதும், கட்சித்தாவல் தடை சட்டப்படி ஜெயலலிதா அணியைச் சேர்ந்த நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம். கே.கே.எஸ்.எஸ்.ஆர், செளந்தரராஜன், திருநாவுக்கரசர் ஆகியோரின் பதவி பறிக்கப்பட்டதாக அறிவித்தார். இதனால் சட்டசபையில் கலவரம் வெடித்தது. மைக்குகள் உடைக்கப்பட்டன. சோடா பாட்டில்கள், செருப்புகள் பறந்தன. வரலாறு காணாத அளவுக்கு ரணகளமானது.

p16b.jpg

இப்படியான சூழலில், 33 எம்.எல்.ஏ-க்களைப் பதவி நீக்கம் செய்திருப்பதாகச் சொன்ன பி.ஹெச்.பாண்டியன், ‘‘ஜானகி கொண்டுவந்த நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறிவிட்டது’’ என அறிவித்தார். ஆனால், சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜானகி ஆட்சியை ஜனவரி 30-ம் தேதி கலைத்தது மத்திய அரசு. ஜனாதிபதி ஆட்சி அமல் ஆனது. சட்டசபை கலைப்பை ஆதரித்து ஜெயலலிதா அறிக்கை விட்டார். ‘‘என் கணவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியவர்களே என் அரசைக் கவிழ்க்க முயல்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை’’ என்றார் ஜானகி.

ஜெயலலிதா வெற்றி பெற்றார்; பின்னால் இருந்த நடராசனும்!

(தொடரும்) 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 54 - பூனைப் படை உதயம்!

 

 

ஜானகி ஆட்சி  கவிழ்ந்த பிறகு சட்டசபைக்கு உடனடியாகத் தேர்தல் நடைபெறவில்லை. சுமார் ஓர் ஆண்டு கவர்னர் ஆட்சிதான் நடைபெற்றது. ஜெயலலிதா அணியில் பிளவு ஏற்பட்டு ‘நால்வர் அணி’ ஒன்று உதயமானது. சசிகலா குடும்பம் ஜெயலலிதாவை அதிகாரம் செலுத்தும் அளவுக்கு உயர்ந்ததெல்லாம் இந்த காலகட்டத்தில்தான்.

அப்போது ஜெயலலிதாவைச் சுற்றி பாதுகாப்புப் படை  ஒன்று வளையம் அமைத்திருந்தது. சாம்பல் நிற சபாரி சூட் அணிந்த முரட்டு இளைஞர்கள் அதில் இடம்பெற்றிருந்தார்கள். வி.ஐ.பி-க்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் ‘கறுப்புப் பூனைப் படை’, பிரபலம் ஆகிக் கொண்டிருந்த நேரம் அது. பூனையின் வண்ணமான சாம்பல் நிற உடையில் சபாரி அணிந்திருந்த படைக்கு ‘பூனைப் படை’ எனப் பெயர் வந்தது. இந்தப் பூனைப் படையின் பிதாமகன் நடராசன். பூனைப் படை உருவாகக் காரணம், ஜெயலலிதாவின் பாதுகாப்பு மட்டுமல்ல; தங்களைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை நெருங்கிவிடக் கூடாது என்கிற அச்சமும்தான்.

கட்சியைப் பலப்படுத்த டூர் கிளம்பினார் ஜெயலலிதா. சட்டசபைக் கலவர நேரத்தில் மதுரையில் நடப்பதாக இருந்து ரத்து செய்யப்பட்ட கூட்டத்துக்கு 1988 பிப்ரவரி 9-ம் நாள் தேதி குறித்தார்கள். மதுரையில் இருந்து தேர்தல் போருக்குத் தயாரானார் ஜெ.

p26.jpg

தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்துக்கு ‘எம்.ஜி.ஆர் மறைவு இரங்கல் கூட்டம்’ எனப் பெயர் சூட்டியிருந்தாலும், வான வேடிக்கைகள் முழங்க மகிழ்ச்சிக் கொண்டாட்டமாகத்தான் நடந்தேறியது. மதுரை மாவட்டச் செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

மேடையில் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், எஸ்.டி.எஸ் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

எம்.ஜி.ஆருடன் மோதல் ஏற்பட்டு அ.தி.மு.க-வை விட்டு விலகி, எம்.ஜி.ஆருக்கு எதிராக கவர்னரிடம் ஊழல் பட்டியல் கொடுத்தவர் எஸ்.டி.எஸ். அவரை நடராசனுக்குப் பிடிக்காது. நடராசனின் சொந்த மாவட்டமான தஞ்சையைச் சேர்ந்தவர்தான் எஸ்.டி.எஸ். எல்.கணேசனுடன் நடராசன் நெருக்கமாக இருந்தபோது, எஸ்.டி.எஸ்ஸும் அரசியல் செய்து கொண்டிருந்தார். 1967-ம் ஆண்டு சட்டசபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சேர்த்துதான் தேர்தல் நடைபெற்றது. ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் தி.மு.க சார்பில் எல்.கணேசன் போட்டியிட்டபோது, அந்தத் தொகுதியை உள்ளடக்கிய தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் எஸ்.டி.எஸ்ஸை வேட்பாளராக நிறுத்தியிருந்தார் அண்ணா. அப்போதே
தி.மு.க-வினர் சிலர், ‘‘மேல் ஓட்டை (எம்.பி தேர்தல்) எப்படி வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். கீழ் ஓட்டை (எம்.எல்.ஏ தேர்தல்) எல்.கணேசனுக்குப் போட்டுவிட வேண்டும்’’ என்றார்கள். இது தெரிந்ததும் எஸ்.டி.எஸ் வருத்தப்பட்டார். ‘‘அப்படியெல்லாம் நடக்காது. இரண்டு பேருமே ஜெயிப்பீர்கள்’’ என எல்.கணேசனுக்கு தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருந்த நடராசன் சொன்னார். அந்தத் தேர்தலில் இருவரும் ஜெயித்தார்கள்.

ஆனால், அதன்பிறகு நடராசனுக்கும் எஸ்.டி.எஸ்-ஸுக்கும் மனக்கசப்புகள் ஏற்பட்டன. அண்ணா காலத்தில் மாணவர் அணியின் தலைவராக இருந்தார் எஸ்.டி.எஸ். அண்ணா முதல்வராக இருந்தபோது மாணவர்கள் குழு அவரைச் சந்தித்தது. அப்போது அவரிடம், ‘‘எத்தனை நாளைக்கு எஸ்.டி.எஸ் மாணவர் தலைவராக இருப்பார். இளைஞரை நியமியுங்கள்’’ என நடராசன் கேட்டார். ‘‘நானும் பதவி விலகும்படி சொல்லிவிட்டேன். எஸ்.டி.எஸ், பேரப்பிள்ளை எடுக்கும் வரை மாணவர் தலைவராக நீடிக்க விரும்புகிறார் போல’’ என்றாராம் அண்ணா.

அப்படிப்பட்ட எஸ்.டி.எஸுக்கு மதுரை கூட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டதை எரிச்சலோடு பார்த்தார்கள். ‘‘இவருக்கு எதற்கு முன் வரிசையில் இடம்?” என அவர் காதுபடவே பேசினார்கள். எஸ்.டி.எஸ் பேசும்போது மேடையிலே முணுமுணுப்புகள் கேட்க ஆரம்பித்தன. நெடுஞ்செழியனுக்கும் இதே நிலைதான். எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு முதல்வர் போட்டியில் முன்னிலைப்படுத்தப்பட்ட நெடுஞ்செழியனையும் பேசவிடாமல் கூச்சல் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவை ‘‘புரட்சித் தலைவி’’ எனப் பலரும் சொல்லிக் கொண்டிருந்தபோது, நெடுஞ்செழியன் மட்டும் ‘‘புரட்சிச் செல்வி’’ எனச் சொன்னதும், அவர் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்ப காரணமானது.

கூட்டத்தில் இப்படியான சலசலப்புகள் ஏற்பட்டபோது ஜெயலலிதா கண்டுகொள்ளவே இல்லை. மேடையில் முதல் வரிசைக்குப் பின்புறம் நிறைய நாற்காலிகள் போட்டிருந்தார்கள். பூனைப் படையினர் அந்த நாற்காலிகளை எல்லாம் அகற்றி, அதில் உட்கார்ந்திருந்தவர்களை வெளியேற்றினார்கள்.  அந்த இடத்தைப் பூனைப் படை ஆக்கிரமித்துக் கொண்டது. மேடையேறிய நிர்வாகிகளை எல்லாம் பாய்ந்து தள்ளிவிட்டது பூனைப்படை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா பேசிய முதல் மேடையையே கிட்டத்தட்ட சுற்றி வளைத்துக் கொண்டது சசிகலா குடும்பம்.

எழுதி வைத்துத்தான் கூட்டத்தில் பேசினார் ஜெயலலிதா. அந்தப் பேச்சைத் தயாரித்தது சசிகலா குடும்பம். ‘‘எம்.ஜி.ஆர் இறந்ததற்குப் பிறகு நான் அநாதை ஆகிவிட்டேன். உடன்கட்டை ஏற நினைத்தேன்’’ என்ற அதிரடியான பேச்சை ஜெயலலிதா இந்தப் பொதுக்கூட்டத்தில்தான் உதிர்த்தார். எம்.ஜி.ஆர் உடலை எரிக்கவில்லை; புதைத்தார்கள். எப்படி உடன்கட்டை ஏற முடியும் என்பது எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்!

(தொடரும்)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 55 - பூனைப் படையின் அட்ராசிட்டி!

 

 

எம்.ஜி.ஆருக்கும் தொண்டர்களுக்கும் இடையே இரும்புத் திரை என்ற ஒன்று இருந்ததே இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் கைக்கு கட்சி போன பிறகு, சீனப் பெருஞ்சுவரையே கட்டியெழுப்பினார்கள் சசிகலா குடும்பத்தினர். ஜெயலலிதா முதன்முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பே அது நடந்தேறிவிட்டது. ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த காலகட்டத்திலேயே ஜெயலலிதாவை மறைத்து திரை எழுப்பிவிட்டார்கள் புதுப் பூசாரிகள்!

p16.jpg

ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டபோது ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ‘தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த 23 நாள் குருக்ஷேத்திர யுத்தத்தில் அதர்மம் வீழ்ந்தது. இருள் விலகி ஒளி பிறந்தது’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையின் ஆரம்பத்திலேயே, ‘நெடுஞ்செழியன் தலைமையில் புரட்சித்தலைவரின் ஆட்சி தொடர்ந்து இருந்திருக்குமேயானால், அ.தி.மு.க-வின் பெரும்பான்மை பலம் அப்படியே இருந்திருக்கும்’ எனச் சொல்லியிருந்தார். ஆனால், நாள்கள் நகர ஆரம்பித்த பிறகு நெடுஞ்செழியன் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மங்க ஆரம்பித்தது. ‘ஜெயலலிதாவே வருங்கால முதல்வர்’ என்ற முடிவுடன் புதுப் பூசாரிகள் கோஷம் எழுப்பினார்கள்.

அரசியலில் ஆத்திச்சூடிகூட தெரியாத சசிகலா குடும்பம், நெடுஞ்செழியன், எஸ்.டி.எஸ் போன்ற சீனியர்களையே விரட்ட நினைத்தது. ஜெயலலிதா கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில்தான் சசிகலா, ஜெயலலிதாவோடு ஒட்ட ஆரம்பித்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு என ஒரு பெண் செயலாளர் தேவைப்பட்ட நேரத்தில், எஸ்.டி.எஸுக்கு வேண்டப்பட்ட சசிகலாதான் நியமிக்கப்பட்டார். அந்த எஸ்.டி.எஸ்-ஸை பிறகு சசிகலா குடும்பம் வளரவிடவில்லை.

புதுப் பூசாரிகளின் வரவால் கார்டனில் அதுவரை வேலை பார்த்தவர்கள் விரட்டப்பட்டார்கள். சசிகலாவின் உறவினர்களே சுற்றி நின்றனர். ‘வருங்கால முதலமைச்சர்’, ‘தெய்வத்தாய்’, ‘நிரந்தரப் பொதுச்செயலாளர்’ என்றெல்லாம் துதி பாடி, ஜெயலலிதாவைக் கடவுளாக்கி, போயஸ் கார்டனை கோயிலாக்கி, சந்நிதியை மூடினார்கள் அடாவடிப் பூசாரிகள். இவர்களின் அருள் பெற்றவர்களே ஜெயலலிதாவுடன் பேச முடியும். சசிகலா குடும்பம் உருவாக்கிய ‘பூனைப் படை’, போயஸ் கார்டனின் கதவைத் தொட்ட தொண்டர்களை உருட்டித் தள்ளியது. பண்ருட்டியார், அரங்கநாயகம் போன்றவர்கள்கூட காத்துக் கிடந்துதான் ஜெயலலிதாவையே பார்க்க முடிந்தது. முக்கியமான வி.ஐ.பி-க்களும் இன்டர்காமில்தான் பேச முடியும்.

மதுரை கூட்டத்துக்கு வந்த ஜெயலலிதா, அசோகா ஹோட்டலில்தான் தங்கியிருந்தார். அங்கேயும் ‘பூனைப் படை’ பாதுகாப்பு போட்டிருந்தது. அங்கே ஜெயலலிதாவைச் சந்திக்கச் சென்ற கட்சியின் சீனியர்கள், பத்திரிகையாளர்கள் பந்தாடப்பட்டனர். மதுரை கூட்டத்துக்குப் பிறகு அடுத்த கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. அங்கேயும் பூனைப் படை தன் வேலைகளை காட்டியது. தொடர் ஓட்டம் மூலம் ‘ஜோதி’ ஒன்றைக் கொண்டு வந்த நிர்வாகியை மேடையிலேயே தாக்கியது. பண்ருட்டி ராமச்சந்திரனின் உதவியாளரையும் விட்டு வைக்கவில்லை.

1988 பிப்ரவரி 14-ம் தேதி ஜெயலலிதா அணியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஜெயலலிதா வந்தபோது, தொண்டர்களை மூட்டைகள் போல் தூக்கி எறிந்தார்கள். தலைவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

ஒரு கூட்டத்தில் நெடுஞ்செழியனையும் வயிற்றில் இடித்துத் தள்ளினார்கள். வலி தாங்க முடியாத நெடுஞ்செழியன் பூனைப் படை வீரர் ஒருவரை கோபத்தில் அடித்தே விட்டார்.

(தொடரும்)


‘‘என் ஜாதகத்தைக் கணிக்க முடியாது!’’

சிறு வயதில் நடராசன் படுசுட்டி. சமாளிக்க முடியாமல் பள்ளியில் சேர்க்க நினைத்தார் தாய் மாரியம்மாள். அந்தக் காலத்தில் ஆறு வயது நிரம்பியவர்களைத்தான் பள்ளியில் சேர்த்துக்கொள்வார்கள். நான்கு வயது நடராசனுக்கு ஆறு வயது எனப் பொய் சொல்லி சேர்த்தனர். இதனால், பள்ளி சான்றிதழில் நடராசனின் பிறந்த நாள் 1942 அக்டோபர் 23-ம் தேதி என்று இருக்கும். தன்னுடைய உண்மையான வயது என்ன என்பதை அறிந்தகொள்ள அம்மாவிடம் பலமுறை கேட்டும் அவர் சொல்லவில்லை. வற்புறுத்திக் கேட்டால், ‘‘வீட்டு எறவாணத்தில் உன் ஓலைக் குறிப்பை சொருகி வச்சிருந்தேன். புயல் வந்தப்ப பறந்து போச்சு’’ என்பார் மாரியம்மாள். ‘‘ஓலைதான் பறந்துபோச்சு. என் பிறந்த நேரத்தையாவது சொல்லு’’ எனக் கேட்டிருக்கிறார் நடராசன். அதற்கு ‘‘ஒன்பது பேரைப் பெத்த எனக்கு, நீ பொறந்த நேரம் ஞாபகத்தில் இல்ல’’ எனப் பதில் வந்ததாம்.

‘தான் பிறந்த நேரம் எது’ என்பதை அறிந்துகொள்ள நடராசன் முயன்றது இருக்கட்டும். அவரின் உண்மையான பிறந்த தேதியை அறிந்து, ஜாதகத்தைக் கணிக்க சிலர் முயன்றார்களாம். அப்போது நடராசன் சொன்ன பதில் இது. ‘‘என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும், என்னை ஆபத்தாக எண்ணி அஞ்சுகிறவர்களும், என் ஜாதகத்தைக் கணிக்க முடியாமல் தவிக்கிறார்கள். எவராலும் என்னையும் என் ஜாதகத்தையும் கணிக்க முடியாது.’’

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 56 - ‘உதையும் தாங்கும் உடல் வேண்டும்!’

 

 

திர்காலத்தில் கிளைகளாக முளைக்கும் என அஞ்சப்பட்ட களைகள் எல்லாம் கருவறுக்கப்பட்டன. ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் பட்டியலை ரெடி செய்ய ஆரம்பித்தது சசிகலா குடும்பம். எம்.ஜி.ஆர் இருந்தபோதே ‘ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள்’ என வர்ணிக்கப்பட்ட சேலம் கண்ணன், கருப்பசாமி பாண்டியன் போன்றவர்களைக்கூட ‘வேண்டாதவர்கள் பட்டியலில்’ சேர்த்தனர்.

அனுமதி கிடைக்கிறதோ, இல்லையோ... போயஸ் கார்டனுக்குள் கால் பதித்துவிட்டு வருவார்கள் சீனியர்கள். அவர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களைக் கேள்விப்பட்ட நெடுஞ்செழியன், கார்டன் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. சசிகலா குடும்பத்தின் பிடியில் ஜெயலலிதா இருக்கிறார் என்பதை நெடுஞ்செழியன் உணரத் தொடங்கியிருந்தார். 1988 பிப்ரவரி 14-ம் தேதி நடந்த ஜெயலலிதா அணியின் பொதுக்குழுவில், ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டது. அதில் இருந்தவர்களின் பெயர்களைப் பார்த்துப் பலருக்கும் அதிர்ச்சி. சீனியர்கள் அமர்ந்து முடிவு செய்த பல பெயர்கள் அந்தப் பட்டியலில் இல்லை. அந்தப் பெயர்களை எல்லாம் கலைத்துப் போட்டிருந்தார்கள், கார்டனின் புதுப் பூசாரிகள். தேர்தலில் யார் யாருக்கு சீட் தரலாம் என்பதை முடிவு செய்வது ஆட்சி மன்றக் குழுதான். ‘வேண்டப்பட்டவர்களுக்கு சீட் தருவதில் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது’ என்கிற முன்யோசனையோடு, ஆட்சி மன்றக் குழுவில் வேண்டப்பட்டவர்களைப் போட்டிருந்தார்கள். ஜெயலலிதாவின் அறிக்கைகள், பேச்சுக்கள் வரையில் அவர்களின் ஆதிக்கம் நிரம்பியிருந்தது.

p22a.jpg

ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தபோது இரண்டு தரப்பினரும் மேடைகளிலும் அறிக்கைகளிலும் மோதிக் கொண்டிருந்தனர். ஜானகி அணியை எதிர்த்து பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘அரசியலில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொன்னார். உதையும் தாங்கும் உடல் வேண்டும் என்பது இன்றைய அரசியலில் தேவையாகிவிட்டது’ எனச்  சொல்லியிருந்தார். ஆனால், அது ஜெயலலிதா அணிக்கே சரியாகப் பொருந்தியிருந்தது. சசிகலா குடும்பம் உருவாக்கிய ‘பூனைப் படை’யின் அடாவடிகளால் சொந்தக் கட்சியினரே ஆங்காங்கே அடி வாங்கினார்கள். கார்டனிலும், கட்சி அலுவலகத்திலும் ‘வாக்கி டாக்கி’களோடு பூனைப் படையினர் ‘‘அம்மா ரெடி ஆகி விட்டார்கள்... ஓவர்! இதோ, வந்து கொண்டிருக்கிறார்கள்... ஓவர்” என்றெல்லாம் பந்தா காட்டி, தொண்டர்களைப் பந்தாடினார்கள். ‘‘ஜானகி, அரசியலில் தலையிட்டதால், புரட்சித் தலைவர் ஆட்சியே கவிழ்ந்து போனது;  அ.தி.மு.க தலைமைஅலுவலகம் மூடப்பட்டது; மக்களைச் சந்திக்கும் வாய்ப்பே எனக்கு இல்லாமல் போய்விட்டது’’ என அப்போது ஜெயலலிதா சொல்லியிருந்தார். மக்களைச் சந்திக்கவிடாமல் ஜெயலலிதாவை யார் தடுத்தார்கள் என்பது அவருக்கே தெரியும்.

ஜானகி ஆட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், டெல்லி சென்று பிரதமர் ராஜீவ் காந்தியை ஜெயலலிதா சந்தித்தார். ‘‘ஜானகி ஆட்சி மெஜாரிட்டியை நிரூபிக்க காங்கிரஸ் ஆதரவு தரக்கூடாது’’ என ராஜீவ் காந்தியிடம் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இந்தச் சந்திப்பை ஊதிப் பெரிதாக்கினார்கள்.  ‘எண்பது நிமிடங்கள் பிரதமருடன் ஜெயலலிதா பேசினார்’ எனப் பத்திரிகைகளுக்குச் செய்தி தந்தார்கள் புதுப் பூசாரிகள். உண்மையில் சந்திப்பு நடந்தது, வெறும் பத்து நிமிடங்கள்தான். இப்படித்தான் ஜெயலலிதாவின் 40-வது பிறந்த நாள் விழாவிலும் அரசியல் செய்தார்கள்.

1988 பிப்ரவரி 24-ம் தேதி, ஜெயலலிதாவின் பிறந்த நாளின்போது அவர் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். கட்சி வேறுபாடு இல்லாமல் எம்.பி-க்கள் அனைவருக்கும் அவர்களின் பிறந்த நாளையொட்டி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்புவது வழக்கம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து எல்லா எம்.பி-களுக்கும் போவது போலவே, ஜெயலலிதா பிறந்த நாளன்றும் வாழ்த்துச் செய்தி வந்தது. அப்பாவித் தொண்டர்களைப் பிரமிக்க வைக்க, ஏதோ தனிப்பட்ட முறையில் பிரதமர் வாழ்த்து அனுப்பியது போல, அந்தச் செய்தியைப் பெரிதாக்கினார்கள்.

(தொடரும்)


p22.jpg

நடராசனை வாழ்த்திய ஒபாமா!

‘ஜாதகத்தை எதிரிகள் கணித்துவிடுவார்கள்’ என்பதால் தனது பிறந்த நாளை வெளிப்படையாகக் கொண்டாட மாட்டார் நடராசன். வீட்டிலேயே கேக் வெட்ட, நெருக்கமானவர்கள் மட்டும் வந்து வாழ்த்து சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் 2012-ம் ஆண்டு நடராசனின் பிறந்த நாள் வெளியுலகம் அறிய அமர்க்களப்பட்டது. காரணம், அந்த ஆண்டு நடராசனுக்கு 70-வது பிறந்த நாள். பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரம், தடபுடல் விருந்து, கச்சேரி, கவியரங்கம்,  வாண வேடிக்கை எனப் பிறந்த நாளை பிரமாண்டப்படுத்தி விட்டார்கள். 

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவே(?) தன் கைப்பட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருந்தார். இந்தியாவில் இருக்கிற பெரிய அரசியல் புள்ளிகளின் பிறந்த நாளுக்குக்கூட இப்படி வாழ்த்துகள் வந்தது இல்லை. ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்குக் கிடைக்காத அமெரிக்க அதிபரின் வாழ்த்துகூட நடராசனுக்குக் கிடைக்கிறது என்றால், கடல் கடந்தும் நடராசனின் ஆதிக்கம் விரிந்திருக்கிறது என அர்த்தம்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 57 - ‘நடனமாடும் நங்கை வீட்டிலா நாவலர்?’

 

 

ஜானகி ஆட்சி கவிழ்ந்த பிறகு, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. கவர்னர் அலெக்சாண்டர்தான் ஆட்சி நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க-வில் ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகள், காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர் இருக்கும்போதே ஜெயலலிதாவைத் ‘துணை முதல்வர்’ ஆக்கிவிட துடித்தவர்கள், இப்போது முதல்வர் ஆக்கிவிட முண்டாசு கட்டினார்கள். ஜெயலலிதா முதலமைச்சர் ஆகிவிட்டதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் புதுப் பூசாரிகள். நெடுஞ்செழியன் முதல்வர் வேட்பாளர் என்பதை மாற்றி ‘ஜெயலலிதாதான் முதல்வர்’ எனச் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.

ஜெயலலிதா அணியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கலாம் என்ற நிலை இருந்தது. ஜெயலலிதாவை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்று பூசாரிகள் விரும்பினார்கள். அதற்காக டெல்லி காங்கிரஸோடு பாதை போட முயற்சிகள் நடந்து வந்தன. இந்த நிலையில்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்ட அன்றைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவை பெங்களூரில் சந்தித்து ஜெயலலிதா நன்றி சொன்னார். அங்கு வி.பி.சிங்கையும் சந்தித்தார். இருவரும் காங்கிரஸுக்கு எதிரிகள் என்ற நிலையில், ஜெயலலிதா அவர்களைச் சந்தித்ததை காங்கிரஸ் ரசிக்கவில்லை. கூட்டணிக்கு காங்கிரஸை மிரட்டிப் பணிய வைக்க, புதுப் பூசாரிகள் போட்ட பாதையில் இப்படி ஜெயலலிதா பயணிக்கத் தொடங்கியிருந்தார். தமிழக காங்கிரஸை அலட்சியப்படுத்திவிட்டு, டெல்லியில் நேரடியாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்படியான விஷயங்கள் அனைத்தையும் செய்தது சசிகலா குடும்பம்.

p20a.jpg

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையே அறிக்கைப் போர்கள் நடைபெற்றன. ‘‘நாங்கள் எங்கள் தரப்பைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். அதுபோல காங்கிரஸ் மேல்மட்டமும் கூட்டணி வேண்டும் என்றால் அறிக்கைகள் வெளிவராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது தேர்தலின்போது மோசமான விளைவை ஏற்படுத்தும்’’ என ஜெயலலிதா பகிரங்கமாகவே எச்சரித்தார்.

கூட்டணி உரசல்கள் இப்படி நடந்து கொண்டிருந்த நேரத்தில், ஜெயலலிதா அணியிலும் புகைச்சல்கள். நெடுஞ்செழியன், க.ராசராம், அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகிய சீனியர்களுடன் சசிகலா குடும்பம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தது. பண்ருட்டி ராமச்சந்திரனைத் தங்களுடைய அமைச்சரவையில் சேர்த்துவிட்டு, கவலைப்பட்டு மிரட்சியுடன் கண்காணித்தவர்கள் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும். காரணம், அவரின் ராஜதந்திரம் பற்றிய பயம்தான். முதல்வர் எம்.ஜி.ஆரின் டெல்லி விசிட்டின்போது பண்ருட்டியார் கட்டாயம் இருப்பார். டெல்லியில் நடந்த பல கூட்டங்களுக்குத் தன் பிரதிநிதியாக அவரை எம்.ஜி.ஆர் அனுப்பியிருக்கிறார். இதனால் இந்திரா காந்தியுடனும் ராஜீவ் காந்தியுடனும் அவர் நெருக்கமானார். ஜானகியை ஆர்.எம்.வீரப்பன் முதல்வர் நாற்காலிக்குக் கொண்டு வந்தபோது, உடனே காயை நகர்த்தி ஜெயலலிதாவைக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கியதில் பண்ருட்டியாருக்கு முக்கிய ரோல் உண்டு. ஜானகி ஆட்சியைச் சரிய வைத்ததிலும் தன் டெல்லி செல்வாக்கைக் காட்டினார் பண்ருட்டியார். ஜெயலலிதா அணிக்கும், காங்கிரஸுக்கும் பாலமாக இருந்த பண்ருட்டி, எங்கே கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஸ்கோர் செய்துவிடுவாரோ எனப் பயந்தார்கள். காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை பண்ருட்டியார் முன்னெடுத்துக் கொண்டிருந்தபோது, ஹெக்டே மற்றும் வி.பி.சிங் சந்திப்புகள், காங்கிரஸுக்கு எதிராக அறிக்கைகள் என அடுத்தடுத்து புதுப் பூசாரிகளின் அமர்க்களங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.

‘‘ஜெயலலிதாவை நான் தலைவியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை என்னுடைய மகளாக ஏற்றுக்கொண்டுள்ளேன்’’ என 1988 மார்ச்சில் சொன்னார், நாவலர் நெடுஞ்செழியன். உடனே ஜானகி அணியைச் சேர்ந்த காளிமுத்து ‘‘தகப்பனுக்கு மகள் கட்டளையிடுவதா...மகளுக்குத் தகப்பன் கட்டளையிடுவதா?’’ எனக் கேட்டார். ‘நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர், நடனமாடும் நங்கை வீட்டிலா இருப்பது’ என்று கேலி பேசினார்கள். இதைக் குறிப்பிட்ட நெடுஞ்செழியன், ‘‘நானா ஜெயலலிதா வீட்டுக்குப் போனேன். போயஸ் கார்டனுக்கு நான் போவதே கிடையாது’’ என்றார்.

சுய லாபத்துக்காக இப்படி காங்கிரஸ் கூட்டணியிலும் கட்சிக்குள்ளும் உரசலை உண்டாக்கிக்கொண்டிருந்தார்கள் புதுப் பூசாரிகள்.

(தொடரும்)


‘‘ஆண்டவனுக்குத் தெரிகிறது. ஆள்பவர்களுக்குத் தெரியவில்லையே!’’

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நடராசனின் 70-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை, பெரியார் திடலில் நடந்த விழாவில் ‘பூலித்தேவனை நெஞ்சில் நிறுத்திய புலிப்படைத் தலைவா’, ‘தமிழர்களின் இதயக்கனி’, ‘தமிழினத்தின் முகவரி’ என்றெல்லாம் பேனர்கள் வைத்து அசத்தினார்கள். ‘இந்த இதயம் துடிப்பது...’ என்ற தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் நடராசனுக்குப் புகழாஞ்சலிகள் வேறு.

p20.jpg

‘‘ஆனந்த நடராசனின் பலம் தெரியவில்லை. படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றையும் செய்யும் ஆண்டவனுக்குத் தெரியும் நீ செய்யும் தொண்டு. ஆனால், ஆள்பவர்களுக்குத் (ஜெயலலிதா) தெரியவில்லையே’’ என பஞ்ச் வைத்தார் கவிஞர் நந்தலாலா. கவிஞர் கிருதியாவோ, ‘‘உன் வீட்டில் எப்போதும் ‘ஜெ.ஜெ’ எனக் கூட்டம் களைகட்டும். அப்படி வருகிறவர்களைக் காப்பாற்றும் புத்த தேவன் நீ. உன்னைச் சீண்டுவோருக்குப் பூலித்தேவன்’ எனச் சீறினார். ‘ஏ.டி.எம் எந்திரம் நீ. உன்னைச் சொருகுகிறவர்களுக்குக்கூட பணத்தைத் தருகிறாய்’ என்றார் கவிஞர் இனியவன்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 58 - எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மரணங்கள்!

‘‘நிகழ்காலக் குழப்பவாதி பைத்தியங்களுக்கு எதிர்காலத் தேர்தல்தான் வைத்தியம் செய்யவேண்டும்’’ - ஜெயலலிதா

‘‘ஜெயலலிதா எப்படியோ அப்படித்தான் ஜானகியும். நடிகைகள் ஒழுக்கத்தைப் பற்றி ஆராய முடியுமா?’’ - நெடுஞ்செழியன்

- இவை 1988 மார்ச் மாத அரசியல் முழக்கங்கள்.

நெடுஞ்செழியனோடு ஜெயலலிதாவுக்கு மோதல் உண்டான தருணம் அது. ஜெயலலிதா அணிக்குப் பலம் சேர்த்த நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், சேலம் கண்ணன் போன்றவர்களுக்கு, நடராசன் - சசிகலா ஆதிக்கத்தால் மரியாதை குறையத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே ‘ஜெயலலிதா ஆதரவாளர்’ எனப் பெயரெடுத்தவர் சேலம் கண்ணன். ஜெயலலிதாவோடு எம்.பி-யாக இருந்தபோது டெல்லியில் ஜெயலலிதா புராணம் பாடிய கண்ணனை எம்.ஜி.ஆர் ஓரம் கட்டினார். அப்படிப்பட்ட ஜெயலலிதா விசுவாசியான கண்ணனைப் பந்தாடினார்கள். ஜெயலலிதாவோடு யாரும் நெருக்கமாகிவிடக் கூடாது என்ற அச்சத்திலேயே பலரையும் வேரறுத்தார்கள். அதில் கண்ணனுமே தப்பவில்லை. கண்ணனுக்கு சேலத்திலேயே அவமரியாதை நடந்தது. மாவட்டச் செயலாளரான கண்ணனிடம் சொல்லாமலே அங்கே கூட்டம் போட்டார்கள். 1988 ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவோடு மேடையில் இருந்த கண்ணனை யாருமே மதிக்கவில்லை. அவரோடு ஜெயலலிதா பேசவில்லை. அவரின் பெயரையும் உச்சரிக்கவில்லை.

p30.jpg

இதே நிலைதான் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்த அவர் டெல்லியில் மூவ் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில்தான், சசிகலா குடும்பத்தினரால் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இதனால் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் முடங்கிப் போயின. உடனே அதைச் சமாளிக்க நினைத்தார் ஜெயலலிதா. டாக்டர் பட்டம் பெற்றதற்காக அரங்கநாயகத்துக்குப் பாராட்டுக் கூட்டம் (1988 ஏப்ரல் 6), சென்னை பனகல் பூங்காவில் நடைபெற்றது. அதில் பேசிய ஜெயலலிதா, ‘‘பண்ருட்டி ராமச்சந்திரனை டெல்லிக்கு நான்தான் அனுப்பினேன்’’ என்றார். ‘‘கருணாநிதியை எதிர்ப்பதில் நம்மோடு ஒத்த கருத்தைக் கொண்டிருக்கிற காங்கிரஸோடு உறவு விட்டுப் போய்விடக் கூடாது என நாங்கள் நினைக்கிறோம்’’ என இறங்கிப் பேச ஆரம்பித்தார் ஜெயலலிதா.

தனது ஆட்சியைக் காப்பாற்ற உதவி செய்யாதபோதும், கருணாநிதியை ஜானகி பாராட்டிப் பேசியிருந்தார். இதுவும் பனகல் பார்க் கூட்டத்தில் எதிரொலித்தது. ‘‘புரட்சித் தலைவரின் எதிரியான கருணாநிதியை ஜானகி அம்மாள் பாராட்டிப் பேசுகிறார். ராமாவரம் தோட்டத்தை மீட்பதற்கு இது ஒன்றே போதும்’’ எனப் பேசிய ஜெயலலிதா அதோடு நிற்கவில்லை. அதன்பிறகு அவர் பேசிய பேச்சுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘‘இன்னும் ஓராண்டு உயிரோடு இருப்பார் என்று டாக்டர் ப்ரீட்மென் சொன்ன மூன்றாவது நாளே புரட்சித் தலைவர் மரணமடைந்தார். ஜானகி அம்மையாருக்கு வேண்டிய டாக்டர்கள்தான் அவருக்குச் சிகிச்சை அளித்தனர். அவர் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. இதனுடைய சூத்திரதாரி யார்? சூழ்ச்சிக்காரர் யார்? ஈரோட்டில் இருந்த கருணாநிதிக்கு முதலில் தகவல் சொன்ன கருங்காலி யார்? எம்.ஜி.ஆரின் பெயரில் போலி கையெழுத்துப் போட்டது யார்? புரட்சித் தலைவரின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை மக்கள் அறிய விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அதனை அமைக்காவிட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் அமைப்போம்’’ என வீராவேசமாக கொதித்தார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மரணத்துக்கு அன்று நியாயம் கேட்ட ஜெயலலிதாவின் மரணமே மர்மம் நிறைந்ததாகிவிட்டது. எம்.ஜி.ஆரின் மரணம் பற்றி ஜெயலலிதா எழுப்பிய கேள்விகள், அப்படியே அவருடைய மரணத்துக்கும் பொருந்தின. ஜெயலலிதாவின் அதிகாரத்தைச் சுவைத்து சொத்துக்களை வாங்கிக் குவித்த சசிகலா குடும்பம், ஜெயலலிதாவின் மரணம் குறித்த ‘கொலைப் பழி’யை சுமந்து நிற்கிறது. அப்போலோவில் யாரையும் விடாமல் ராஜாஜி ஹாலில் உடலைச் சுற்றி அரண் அமைத்து, ஜெயலலிதா போல் மேக்கப் போட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் மகுடம் சூட்டி, கூவத்தூரில் திட்டம் தீட்டி, ஆட்சியில் அமர நடத்திய வித்தைகள்... சாணக்கியனின் இன்னொரு அர்த்த சாஸ்திரம்.

(தொடரும்)


‘‘நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை!’’

‘‘சி
லர் (ஜெயலலிதா) யாரையும் முழுவதுமாக நம்புவதில்லை. ஏன்... அவர்கள் அவர்களையே நம்புவதில்லை. நான் யாரை எதற்காகச் சொல்கிறேன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று எழுதப்படாத சட்டத்தைப் போடுகிறார்கள். பெரயார் பிறந்த மண்ணில், நவீனத் தீண்டாமை, கட்சிகளின் பெயரால் நடக்கிறது. என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. என்னை நம்பியவர்களுக்காக உயிரைக் கொடுத்து உழைத்து இருக்கிறேன். என்னை நம்பி இருந்தவர்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் வருத்தப்பட்டு இருக்கிறேன். இங்கே வந்தால் வம்பு வந்துவிடும் என்பதால் வீட்டில் வந்து பார்த்தவர்களின் பெயர்களை எல்லாம் இங்கே சொல்லக்கூடாது. போனில் வாழ்த்திய கவர்னர்களும் இருக்கிறார்கள்’’ - தனது 70-வது பிறந்த நாள் விழாவில் நடராசன் பேசியது இது.

http://www.vikatan.com/juniorvikata

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 59 - கழுத்தைச் சுற்றும் பாம்பு!

 

 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்த நேரத்தில், ஜெயலலிதா அணிக்குள்ளேயே புகைச்சல்கள் கிளம்பின. பிளவுபட்டுப் பிரிந்து வந்த ஜெயலலிதா அணியே இன்னொரு பிளவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அதற்கு முன்பு வரையில் காங்கிரஸ் கூட்டணிக்கு வீராப்பு காட்டிக் கொண்டிருந்த ஜெயலலிதா, காங்கிரஸ் தயவுக்காக வேறுவழியில்லாமல் காத்திருந்தார். இந்த எல்லாக் குழப்பங்களுக்கும் காரணகர்த்தா நடராசன்.

‘‘ஜேப்பியார், காளிமுத்து போன்றவர்களுக்கு ஜெயலலிதா வீட்டு வாட்ச்மேன் ஆகக்கூடத் தகுதியில்லை’’ என ஜெயலலிதா அணியின் பிரமுகர் ஒருவர் சொல்ல... ‘‘ஆமாம். எங்களுக்கு அந்தத் தகுதியெல்லாம் கிடையாது. அதெல்லாம் வாட்ச்மேனுக்கு ஏற்ற தோற்றப் பொலிவு கொண்ட நெடுஞ்செழியன், அரங்கநாயகம் போன்றவர்களுக்குத்தான் உண்டு’’ எனப் பதிலடி கொடுத்தார் ஜானகி அணியில் இருந்த காளிமுத்து.

இப்படியான வார்த்தைப் போர்களில் ஜெயலலிதா அணியின் நெடுஞ்செழியன் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது.

20p11.jpg

‘‘எம்.ஜி.ஆர் அமெரிக்கா சென்ற போதெல்லாம் நான் முதலமைச்சராக இருந்தேன். அப்போ ஏத்துக்கிட்டவங்க, சகிச்சுகிட்டவங்க, அவர் மறைந்தவுடனே ‘ஜானகிதான் முதல்வர்’ என்று கூறுகிறார்களே? நீங்கள் உருப்படுவீர்களா? நாடு உருப்படுமா?’’ எனக் கொதித்தார்.இந்தக் கொதிப்பு ஜானகி அணியின் மீது என்றாலும், ‘ஜெயலலிதாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்களே’ என்கிற ஆதங்கமும் அடங்கியிருந்தது. ஜெயலலிதா அணியில், முதல்வர் வேட்பாளராக ஆரம்பத்தில் பேசப்பட்ட நெடுஞ்செழியன், பிறகு சசிகலா குடும்பத்தினரால் புறந்தள்ளப்பட்டார். அந்த ஆதங்கத்தைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தார் நெடுஞ்செழியன்.

ஜானகி ஆட்சி கவிழ்ந்த பிறகு மாவட்டங்களுக்கு டூர் போய்க் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவை தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களாக மாறின. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டார்கெட் தொகை நிர்ணயித்தார்கள். ‘‘நிதி குறைவாகத் தரும், அல்லது தராத மாவட்டங்களுக்கு ஜெயலலிதா வர மாட்டார்’’ என அடித்துச் சொன்னார் நடராசன். 1988 மார்ச் 23-ம் தேதி திருச்சி கூட்டத்துக்குத் தேதி குறித்திருந்தார்கள். பத்து லட்ச ரூபாய் நிதி தர முடியாத காரணத்தால் ஜெயலலிதா, அந்தக் கூட்டத்துக்குப் போகவில்லை. பேரம் முடிந்தபிறகே ஏப்ரல் 4-ம் தேதி, ஜெயலலிதா போனார். திருச்சி ஒத்தக்கடையில் நடந்த பொதுக் கூட்டம், அடிதடி, போலீஸ் தடியடி எனக் களேபரத்துடன் முடிந்தது. அதற்கு முன்பு தூத்துக்குடி பொதுக் கூட்டத்தில் ஆறே நிமிடங்கள்தான் ஜெயலலிதா பேசினார். இதனால் தொண்டர்கள் வெறுத்துப் போனார்கள்.

மாவட்டங்கள் விசிட்டில் கெடுபிடிகள், தகராறு, மாவட்டச் செயலாளர்களுடன் மோதல் என ஜெயலலிதா அணியில் நிறைய குழப்பங்கள் சசிகலா குடும்பத்தினரால் ஏற்பட்டன. சேலம் கண்ணனைப் பழிவாங்க, சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ, அதை மீண்டும் ஒன்றாக்கி சேலம் கண்ணனை மாவட்டச் செயலாளராக நியமித்தனர். இந்தச் சமயத்தில்தான் மாவட்டச் செயலாளர்களுடன் ஜெயலலிதா கூட்டம் போட்டார். அதில், ‘‘யாரும் ஒழுங்காக தேர்தல் நிதியைத் தருவதில்லை. கட்சிக்குப் பணம் தருவதில் மட்டும் பாரபட்சம் காட்டுகிறீர்கள். ஆனால், சொத்துக்களை மட்டும் லட்சக்கணக்கில் வாங்கிக் குவிக்கிறீர்கள். இனிமேல் மாவட்டங்களுக்கு நான் வருவதாக இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் அட்வான்சாகத் தர வேண்டும்’’ எனக் கறாராகச் சொன்னார் ஜெயலலிதா. பண விஷயத்தில் இப்படி ஜெயலலிதா கிடுக்குப்பிடி போட்டதற்குக் காரணமே சசிகலா குடும்பம்தான். ‘‘தேர்தல் நிதியைத் திரட்டிக் கொடுத்துவிடலாம். ஆனால் ஜெயலலிதா வருகைக்காக  மாவட்டங்களில் ஆடம்பர ஏற்பாடுகளைச் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள்.அதற்கு எங்கே நிதி திரட்டுவது’’ என நொந்து கொண்டார்கள் மாவட்டச் செயலாளர்கள்.

காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னையில் மனக்கசப்போடு இருந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்த பண்ருட்டியார் சொன்ன ஆலோசனைகள் ஏற்கப்படவில்லை.அதனால் அவர் ஒதுங்கியிருந்தார்.இத்தனைக்கும் காரணம் நடராசன். டெல்லியில் செல்வாக்குக் கொண்ட பண்ருட்டியாரை டெல்லிக்கு அனுப்பி, காங்கிரஸ் கூட்டணியை பேட்ச்அப் செய்ய நினைத்தார் ஜெயலலிதா. ‘‘பண்ருட்டி ராமச்சந்திரனை டெல்லிக்குப் போகச் சொல்லுங்கள்’’ என நடராசனிடம் ஜெயலலிதா சொன்னார். நடராசனோ, பண்ருட்டியாரை நேரில் சந்திக்க விரும்பாமல் இன்னொரு தூதரை அனுப்பி, தகவல் சொல்லியிருக்கிறார். இது பண்ருட்டியாருக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது.

‘‘அன்று பாம்புக்குப் பால் வார்த்தார் எம்.ஜி.ஆர்; இன்று அது படம் எடுத்து ஆடுகிறது. எம்.ஜி.ஆரின் கழுத்தில் கிடந்த பாம்பு ஜெயலலிதா, காலடியில் கிடந்த பாம்பு பண்ருட்டி ராமச்சந்திரன்’’ என அப்போது (ஏப்ரல் 1988) சொன்னார் ஆர்.எம்.வீரப்பன். அந்தக் காலடி பாம்பு, ஜெயலலிதாவின் கழுத்தைச் சுற்ற காலம் பார்த்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 60 - ட்ரைடென்ட் ஹோட்டலும் செலவுக் கணக்கும்!

 

 

சென்னை விமான நிலையம் எதிரே அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்தது, ‘ட்ரைடென்ட்’ என்கிற ஸ்டார் ஹோட்டல். அங்கே ஒரு அறையை நிரந்தரமாக புக் செய்திருந்தது சசிகலா குடும்பம். ஜெயலலிதா அணியின் பொருளாளர் திருநாவுக்கரசர் என்றபோதிலும், கட்சியின் வரவு செலவுகளைச் சசிகலா குடும்பம்தான் பார்த்துக் கொண்டிருந்தது. மாவட்டந்தோறும் திரட்டப்பட்ட தேர்தல் மற்றும் கட்சி நிதி எல்லாம் சசிகலா குடும்பத்தினரால்தான் நிர்வகிக்கப்பட்டன.

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தையும், அவர்கள் சொல் பேச்சு கேட்டு நடக்கும் கிளிப் பிள்ளையாக ஜெயலலிதா மாறியதையும், நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், சேலம் கண்ணன் போன்ற சீனியர்கள் ரசிக்கவில்லை. அதனால், இவர்களை ஓரம் கட்டும் பணிகளையும் சத்தமில்லாமல் செய்து கொண்டிருந்தது சசிகலா குடும்பம். இந்தநிலையில் கட்சி நிதி தொடர்பாகவும் பிரச்னைகள் முளைத்தன.

‘‘நாம் ஒரு சட்டத்தை வகுத்துவிட்டால் பண்ருட்டியாக இருந்தாலும் சரி, திருநாவுக்கரசராக இருந்தாலும் சரி, செல்வி ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எச்சிலைக் கீழே துப்பியாச்சு. இனி என்ன செய்ய முடியும்?’’ என நொந்து போய்ச் சொன்னார் நெடுஞ்செழியன். முதல்வர் பதவியில் இருந்த தன் பேச்சையே ஜெயலலிதா கேட்கவில்லை என்பதுதான் நாவலர் நெடுஞ்செழியனின் பேச்சில் எதிரொலித்தது.

p16.jpg

இந்த நிலையில்தான் 1988 ஜூன் 21-ம் தேதி, ஜெயலலிதா அணியின் அரசியல் விவகாரக் குழுவைக் கூட்டுவதற்குத் தேதி குறித்திருந்தார்கள். ‘‘தேர்தலில் காங்கிரஸ் உறவு நிச்சயம் தேவை’’ என சீனியர்கள் சொல்லி வந்தநிலையில், அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் ‘காங்கிரஸ் கூட்டணி கிடையாது’ என்பதை அறிவிக்க ஜெயலலிதா முடிவு செய்திருந்தார். ‘காங்கிரஸ் கூட்டணி தேவையில்லை’ என்பது சசிகலா குடும்பத்தின் முடிவு. அதில் அரசியலும் பொதிந்திருந்தது. ‘கூட்டணி சேர்த்தால் காங்கிரஸுக்குப் பெரும்பாலான தொகுதிகள் போய்விடும். கட்சி வேட்பாளர்களிடம் பணம் வசூலிக்க முடியாது, முதல்வர் வேட்பாளர் உரிமை காங்கிரஸுக்குக் கை மாறும்’ என்கிற அச்சங்கள் எல்லாம் அவர்களுக்கு இருந்தது. அதனால் ஜெயலலிதாவைப் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருந்தார்கள். ‘‘சீனியர்கள் பலரும் ‘காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டும்’ என வற்புறுத்துவது, உங்கள் செல்வாக்கையும் புகழையும் மட்டம் தட்டுவதாக ஆகிவிடும்’’ என ஜெயலலிதாவிடம் தூபம் போட்டார்கள். 

இந்த மோதலில்தான் தேர்தல் நிதியில் கணக்கு கேட்கும் கேள்விகளும் எழுந்தன. எப்படி கணக்குக் கேட்டு தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தாரோ, அதுபோலவே நாவலர் உள்ளிட்ட சீனியர்கள் ஜெயலலிதாவிடம் நிதி தொடர்பான கணக்கைக் கேட்க ஆரம்பித்திருந்தார்கள். இதில் முக்கியமானது, நடராசனால் உருவாக்கப்பட்ட பூனைப் படைக்கான செலவுகள். ஜெயலலிதாவைப் பாதுகாக்க உருவான பூனைப் படைக்கு டிரஸ், தங்கும் இடம், அசைவ உணவு என லட்சங்களில் செலவு பில் எழுதியிருந்தார்கள். இது சீனியர்களைக் கொதிக்க வைத்தது.

‘‘ட்ரைடென்ட் ஸ்டார் ஹோட்டல் அறை எல்லாம் தேவையில்லாத செலவு. எம்.ஜி.ஆர் காலத்தில்கூட இப்படி செலவுகளை நாம் செய்தது கிடையாது. அதுவும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காகக் கட்சியின் பணம் விரயமாவதை அனுமதிக்கவே முடியாது’’ எனச் சீறினார்கள். கட்சியின் பொருளாளராக இருந்த திருநாவுக்கரசருக்குச் செலவு தொடர்பான எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அவரின் சம்மதமும் பெறவில்லை. பொருளாளருக்குத் தெரியாமலேயே செலவுகள் செய்யப்பட்டிருந்தன. கட்சிக்கு என்று அலுவலகம் தனியாக இருக்கும்போது, ஜெயலலிதாவின் ஆலோசகராக பட்டம் சூட்டிக்கொண்ட நடராசன், ட்ரைடென்ட் ஹோட்டலில்தான் கட்சிக்காரர்களைச் சந்தித்தார் எனப் புகார்கள் கிளம்பின. அரசியலில் பழம் தின்று கொட்டைப் போட்ட நெடுஞ்செழியன் போன்ற சீனியர்களைத் தொடரவிட்டால் ஆபத்து என எண்ணினார் நடராசன். அவர்களாகவே வெளியேற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவர்கள் அவமதிக்கப்பட்டனர்.

இப்படியான கருத்து மோதலில், ஜெயலலிதா அணி பிளவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அரசியல் விவகாரக் குழுவில் மொத்த விவகாரமும் வெடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் மறைவால், அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெறவில்லை. ‘அரசியல் விவகாரக் குழுவில் கல்யாணசுந்தரத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’ என, நடக்காத கூட்டத்தை நடத்தியது போல பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பினார்கள். இந்த ஏமாற்று வேலையைப் பார்த்துக் கொதித்தார்கள் சீனியர்கள். இதனால் அரசியல் விவகாரக் குழுவையே மாற்றி அமைத்தார் ஜெயலலிதா. சீனியர்களை நீக்கிவிட்டு ஜெயலலிதாவுக்கு... சாரி, நடராசனுக்கு ‘ஆமாம்’ போடுகிறவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அரசியல் விவகாரக் குழுவின் தலைவர் நெடுஞ்செழியன். தலைவரை மீறி ஜெயலலிதா அந்தக் கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்தது நெடுஞ்செழியனைக் கோபம் அடைய வைத்தது. நாவலர் தலைமையில் நால்வர் அணி உருவானது!

(தொடரும்)  

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 61 - “தி.மு.க-வின் கையாள் நடராசன்” - திருநாவுக்கரசர் திகுதிகு!

 

 

‘நால்வர் அணி’ என்கிற நாமகரம் தமிழக அரசியல் வரலாற்றில் சூட்டப்பட்டதற்கு சூத்திரதாரி நடராசன். நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர், அரங்கநாயகம் ஆகியோர் ஜெயலலிதாவிடம் இருந்து விலகி ‘நால்வர் அணி’யாக இயங்க ஆரம்பித்ததற்கு விதைப் புள்ளி சசிகலா குடும்பம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு இரண்டாக இருந்த அ.தி.மு.க, இவர்களால் மூன்றாக உடைந்தது.

அரசியல் விவகாரக் குழுவைக் கலைத்தது, பண்ருட்டியாருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியது, கட்சி நிதியில் மோசடி என ஜெயலலிதா அணியில் ஏற்பட்ட குழப்பங்களால் ‘நால்வர் அணி’ உதயமானது. அதற்கு முன்பே கட்சியில் பிளவு ஏற்பட்டுவிடுமோ என ஜெயலலிதா பயந்தார். சமரச முயற்சியாக நெடுஞ்செழியனை வீடு தேடிச் சென்று பார்த்தார். 1988 ஜூன் 30-ம் தேதி வியாழக்கிழமை அந்தச் சந்திப்பு நடைபெற்றது. ‘சசிகலா குடும்பத்தினரால்தான் பிரச்னை ஏற்பட்டது’ என்பதை அறிந்த ஜெயலலிதா, அவர்களின் பேச்சுகளைப் புறந்தள்ளிவிட்டு தன் ஈகோவையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நெடுஞ்செழியன் வீட்டுக்குப் போனார். அவருடன் மற்ற தலைவர்களோ, உதவியாளர்களோ யாரும் வரவில்லை. குறிப்பாக அவரது நிழல் போல வலம் வரும் பூனைப் படையினர் கூட இல்லை. தனி ஆளாக நெடுஞ்செழியன் வீட்டுப் படியேறிப் போய்ப் பார்த்தார் ஜெயலலிதா. அதாவது, நடராசனின் ஆட்கள் யாரும் ஜெயலலிதாவைப் பின்தொடரவில்லை. 15 நிமிடங்கள் வரை நெடுஞ்செழியனோடு தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்.  எப்படியும் சமரச உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நிலையில் குட்டையைக் குழப்பினார்கள் சசிகலா குடும்பத்தினர். விளைவு... ‘நால்வர் அணி’ பிறந்தது.

p20.jpg

நெடுஞ்செழியன் - ஜெயலலிதா சந்திப்பு நடந்த அடுத்த நாள் திருநாவுக்கரசர் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. ‘‘நெடுஞ்செழியனை ஜெயலலிதா சந்திப்பதற்கு முன்பே எங்களிடம் எஸ்.டி.எஸ். போன்ற தலைவர்கள் நேரில் சந்தித்து சமரசம் பேசினார்கள். எங்கள் பிரச்னைகளை ஜெயலலிதாவிடம் அவர்கள் சொல்கிறார்களா எனத் தெரியவில்லை. எங்களிடம் சமரசம் பேசுகிறவர்கள், அதற்கான தீர்வு எதையும் சொல்வதில்லை’’ எனச் சொன்னார் திருநாவுக்கரசர். அதாவது, சமரசப் பேச்சுவார்த்தை விவரங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு போகவிடாமல் சசிகலா குடும்பம் தடுத்தது. திருநாவுக்கரசர் அளித்த அந்தப் பேட்டியில்தான் முதன்முறையாக நடராசனைப் பற்றி திருவாய் மலர்ந்தார்.

‘‘எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி தி.மு.க-வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதுதான் எங்கள் மூவரின் (நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர்) லட்சியம். இதுவே தொண்டர்களின் நோக்கம். இந்த லட்சியத்துக்குத் தடையாக இருப்பவர் நடராசன்தான். தி.மு.க-வின் கையாளாகச் செயல்படும் நடராசன்தான் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். விடுப்பில் இருக்கும் அரசு அதிகாரியான அவர், தி.மு.க-வுடன் சேர்ந்துகொண்டு இந்த இயக்கத்தைப் பிளவுபடுத்தத் திட்டமிடுகிறார்’’ என்று பகிரங்கமாக திரி கொளுத்திப் போட்டார் திருநாவுக்கரசர். அப்போது நடராசன், தமிழக அரசில் மக்கள்தொடர்பு அதிகாரியாக இருந்தார்.

ஜெயலலிதாவின் தான்தோன்றித்தனமான பேச்சுகள், அறிக்கைகள், பேட்டிகள் அனைத்தும் காங்கிரஸ் கூட்டணியை உடைத்துப் போட்டதோடு, தொண்டர்களையும் எரிச்சல் அடைய வைத்திருந்தது. ‘‘காங்கிரஸுடன் கூட்டணி வைக்காவிட்டால் தி.மு.க எளிதில் ஜெயித்துவிடும்’’ என நெடுஞ்செழியன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனால், ஜெயலலிதாவும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் கேட்கவில்லை. இப்படியான சூழலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் ஜெயலலிதா. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் ஆகியோர் அதைப் புறக்கணித்தனர்.

ஜெயலலிதாவால் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானத்தை, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் முன்மொழிந்தார். ‘ஜெயலலிதாவை முதல்வராக ஏற்க ஒப்புக்கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி. இது தொடர்பாகப் பேசும் அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கிறது’ எனச் சொன்னது அந்தத் தீர்மானம். அதாவது, ‘பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்துப் பேசும் அதிகாரம் பெற்றவர் ஜெயலலிதாதான்’ என மறைமுகமாக உணர்த்தியது. ‘நான்’, ‘எனது’ என்கிற அதிகாரத் தோரணையோடு எழுதப்பட்டிருந்தது தீர்மானம். அதை யார் எழுதியிருப்பார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் அறிந்திருந்தார்கள். 1988-ம் ஆண்டு ஆரம்பித்த ‘நான்’, ‘எனது’ என்கிற மமதை, ஜெயலலிதாவின் மரணம் வரையில் தொடர்ந்தது.

கட்சிக்காக வசூலிக்கப்பட்ட பணம் தொடர்பான சர்ச்சையும் எழுந்ததால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தயாராக அதற்கும் கணக்கு காட்டினார்கள். ‘‘பொருளாளர் திருநாவுக்கரசர், கட்சிக்குக் கோடிக்கணக்கில் பணம் சேர்ந்துவிட்டது போல பேசுகிறார். மொத்தம் சேர்ந்த தொகையே 22 லட்சம் ரூபாய்தான்’’ எனச் சொன்னார் ஜெயலலிதா. பிறகு நடந்த பிரஸ்மீட்டில், ‘‘கூட்டத்துக்கு வராத மூவரிடமும் விளக்கம் கேட்கப்படும்’’ என்றார் ஜெயலலிதா. ‘‘கட்சிக்கு நிதி திரட்டியதில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறதே...’’ எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘வெளியே குரைக்கும் நாய்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை’’ எனக் காட்டமாகச் சொன்னார் ஜெயலலிதா.  

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 62 - “நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்!” - ஜெயலலிதா ஸ்டேட்மென்ட்

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

 

நெடுஞ்செழியன் - ஜெயலலிதா சந்திப்புக்குப் பிறகு ஜெயலலிதா மாறிவிடுவார் எனப் பலரும் நினைத்தார்கள். ஆனால், போயஸ் கார்டன் புதுப் பூசாரிகள், சமரசத்துக்குச் சம்மட்டி அடி கொடுத்தார்கள்.

ஜெயலலிதாவிடம் சமரசம் பேசப் போனவர்களையும் சந்திக்க விடாமல் தடுத்தார்கள்.   கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருச்சி செளந்தரராஜன், எஸ்.டி.உக்கம்சந்த் என நிர்வாகிகள் யாரும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை. நெடுஞ்செழியன் - ஜெயலலிதா சந்திப்பில் வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கை, ‘கிச்சன் கேபினெட் கலைக்கப்பட வேண்டும்’ என்பதுதான். தங்களுக்கே உலை வைக்க நினைப்பவர்களைச் சசிகலா குடும்பத்தினர் விட்டுவைப்பார்களா? ஜெயலலிதாவையே கரைத்தார்கள். ‘நால்வர் அணி’க்கு வழி வகுத்தார்கள். ‘‘வெளியே குரைக்கும் நாய்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை’’ என்கிற ஆக்ரோஷத்தை ஜெயலலிதா காட்டியதற்குக் காரணமே சசிகலா குடும்பம்தான். இந்த ‘நாய் பேச்சு’தான் நாவலரைக் கொதிக்கவைத்து ‘நால்வர் அணி’யை உருவாக்கக் காரணமாக அமைந்தது.

இப்படி நடராசனின் ஆதிக்கம்  ஜெயலலிதாவிடம் மேலோங்கி இருந்ததற்கு ஆதாரமாக அமைந்தது, அப்போது ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை. கட்சியில் நடராசனின் தலையீடு பற்றி திருநாவுக்கரசர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, ‘தி.மு.க-வின் கையாள் நடராசன்’ எனப் பரபரப்பைக் கிளப்பினார். அதற்குப் பதிலடி கொடுப்பது போல இருந்தது ஜெயலலிதாவின் அறிக்கை. நெடுஞ்செழியன் - ஜெயலலிதா சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. (தமிழக அரசியலில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அதிகார மையமான) சசிகலா குடும்பத்தைப் பற்றி முதன்முறையாக அந்த அறிக்கையில்தான் ஜெயலலிதா மனம் திறந்தார். 1988 ஜூலை 2-ம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் ஜெயலலிதா அப்படி என்னதான் சொல்லியிருந்தார்?   

p26a.jpg

‘நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள். இவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது கட்சியின் கொள்கை விவகாரம் அல்ல. என் சொந்த விஷயம். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. நடராசனும் சசிகலாவும் எம்.ஜி.ஆர் காலத்திலேயே அவருடைய பூரண ஆதரவுடன் எனக்கு உதவியாக இருந்தவர்கள். இதில் எவரும் தலையிடவோ, என்னை நிர்பந்திக்கவோ முடியாது. நடராசனைப் பற்றி திருநாவுக்கரசர் சொல்லியிருக்கும் விஷயங்கள் என்னைத் தாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை’ எனச் சீறியிருந்தார் ஜெயலலிதா.

இந்த அறிக்கைக்கு எதிர்வினை ஆற்றினார் திருநாவுக்கரசர். 1988 ஜூலை 4-ம் தேதி கூட்டிய பிரஸ் மீட்டில் திருநாவுக்கரசர் தீ கங்குகளை வீசினார். ‘‘விடுப்பில் இருந்தபடி கட்சி நடவடிக்கையில் தலையிடும் அரசு அதிகாரி நடராசன் மட்டும் போதுமா? அல்லது கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் வேண்டுமா?’’ எனக் கேள்வி எழுப்பிய திருநாவுக்கரசர், ‘‘ஜெயலலிதாவின் மாவட்டச் சுற்றுப் பயணங்களின்போதும் பொதுக் கூட்டங்களின்போதும் தி.மு.க-வுடன் தொடர்புள்ள நடராசன் உடன் வந்தார். கட்சி நிர்வாகிகள் நியமன அறிவிப்பை எங்களுக்குத் தொலைபேசி மூலம் அவர்தான் தெரிவித்தார். சிவாஜி கணேசனின் கட்சியில் இருந்து வெளியேறிய எம்.பி.சுப்பிரமணியத்தை இரண்டு முறை சந்தித்து, இந்த இயக்கத்துக்கு வருமாறு நடராசன்தான் அழைப்பு விடுத்தார். அந்த அளவுக்கு நடராசனின் தலையீடு கட்சியில் இருந்தது. எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது எனக்குத் தெரிந்து ஜெயலலிதாவின் வீட்டுக்கு நடராசன் சென்றதில்லை. நடராசனின் மனைவி சசிகலா, எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்போதே ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்திருக்கலாம். நடராசன், தன்னை ‘ஜெயலலிதாவின் குடும்ப நண்பர்’ என்ற அளவில் நிறுத்திக் கொண்டிருந்தால் பிரச்னைகளே ஏற்பட்டிருக்காது.

பொதுச் செயலாளரின் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்க வேண்டும். பொதுச் செயலாளரே இன்னொருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் கழகத் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். பொதுச் செயலாளருக்கு மேல் இன்னொரு தலைமை இருப்பதைப் போலக் கருதிக்கொண்டு நடராசன் இயக்கத்தை நடத்த முயற்சி செய்வதும், அரசியல் ஆலோசனைகளை வழங்க முயல்வதும், வேட்பாளரைத் தேர்வுசெய்வதும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அபத்தமான காரியங்கள்.
நடராசன் தனது சம்பளத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத வகையில் ஆடம்பரச் செலவுகளை மேற்கொள்வதும் கூத்தாநல்லூரில் மருத்துவமனை விரிவாக்கப் பணிகளைச் செய்வதும் எப்படி சாத்தியமாகும்? (சசிகலாவின் அண்ணன் விநோதகன், கூத்தாநல்லூரில் ஏற்கெனவே நடத்திக்கொண்டிருந்த மருத்துவமனை அது) கட்சியின் பொதுச் செயலாளரை அந்த ஊருக்கு அடிக்கடி அழைத்துச் செல்வது நடராசனுக்குப் பெருமை தரலாம். ஆனால், கட்சியின் தலைமைக்கு எவ்வளவு கெட்ட பெயர் என்பதை நடராசன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

P26.jpg

நடராசனைப் பற்றி நான் சொன்ன விஷயங்கள் தன்னைத் தாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே புண்பட்ட எங்கள் இதயத்தை இது மேலும் புண்படுத்துகிறது. நாங்கள் ஜெயலலிதாவைத் தாக்க வந்தவர்கள் அல்ல... காக்க வந்தவர்கள். பொதுச் செயலாளர் என்ற நிலையை ஜெயலலிதா அடைய நாங்கள் பல வகையான கஷ்ட நஷ்டங்களைக் கடந்து தியாகங்களைச் செய்திருக்கிறோம். பொதுச் செயலாளர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து நல்ல முடிவை எடுக்க வேண்டும்’’ எனத் திருநாவுக்கரசர் சொன்னார்.

அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு, ‘‘அரசுப் பணி நன்னடத்தை விதிகளின்படி நடராசன் மீது கவர்னரிடம் (அப்போது தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்தது) புகார் தெரிவிப்பீர்களா?’’ எனக் கேட்டனர். அதற்கு திருநாவுக்கரசர், ‘‘அப்படி எந்த வேண்டுகோளும் வைக்க விரும்பவில்லை. எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைத்தான் சொல்லியிருக்கிறேன். ‘நடராசனைத் தாக்கி, பின் தம்மைத் தாக்க வருகிற முயற்சி’ என்று ஜெயலலிதா வருத்தப்படும் சூழ்நிலை இருக்கிறபோது ‘நடவடிக்கை எடுங்கள்’ என்று நான் எப்படிக் கேட்க முடியும்? அது என்னுடைய வேலை அல்ல’’ எனச் சொன்னார். இந்தப் பேட்டியைத் திருநாவுக்கரசர் கொடுத்தபோது அவருக்கு அருகே, சினிமா தயாரிப்பாளர் ஆர்.எஸ்.சோமநாதனும் முன்னாள் அமைச்சர் ரகுபதியும் சாட்சிகளாக இருந்தார்கள்.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 63 - “நமது எம்.ஜி.ஆருக்கு நடராசன் குடும்பத்தினர்தான் உரிமையாளர்கள்!”

 

‘நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்’ என ஜெயலலிதா ஜெயபேரிகை கொட்டியதும் கட்சியில் நடராசன் தலையீடு இன்னும் அதிகமானது. விவகாரம் இன்னும் விகாரமானது. ஜெயலலிதாவும் திருநாவுக்கரசரும் வார்த்தைப் போர் நடத்த ஆரம்பித்தனர். ஆனாலும், இன்னொரு பக்கம் சமரச முயற்சிகளும் நடைபெற்று வந்தன. அந்த முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டைப் போட்டனர் சசிகலா குடும்பத்தினர். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை வைத்து அறிக்கைகளைவிட ஆரம்பித்தனர். அதில் ஒருவர்தான், ஜெயலலிதா அணியின் அமைப்புச் செயலாளர் அண்ணா நம்பி எம்.பி.

நடராசனையோ, சசிகலாவையோ யாருமே வெளிப்படையாக விமர்சிக்காத நிலையில், திருநாவுக்கரசர் திரி கொளுத்திப் போட்டது நடராசனுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. திருநாவுக்கரசருக்குப் பதிலடி கொடுக்க அண்ணா நம்பியைக் களமிறக்கினார். ‘திருநாவுக்கரசர் ஏதோ உள்நோக்கத்துடன் நடராசனைப் பற்றிப் பேசுகிறார். கட்சியைவிட்டு யார் போனாலும் சரி... ஜெயலலிதா ஆட்சி அமைவதில் மாற்றமில்லை’ எனக் காட்டமாக அறிக்கைவிட்டார் அண்ணா நம்பி. உடனே திருநாவுக்கரசர், ‘‘ஜெயலலிதாவின் அனுமதியோடுதான்  ‘பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது’ என அண்ணா நம்பி அறிவித்தார் என்றால், சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது ஒரு நாடகமா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

p26a.jpg

1988 ஜூலை 10 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், ‘‘இதுவரை கட்சிக்கு வசூலான பெரும் தொகையில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய்தான் வங்கிகளில் மீதம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். கட்சிப் பொருளாளர் என்ற முறையில் எனது பெயரில்கூட வங்கிக் கணக்குத் தொடங்கப்படவில்லை. பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் இல்லாமல், ஜெயலலிதா பெயரில் தனிப்பட்ட முறையில் தொடங்கப்பட்ட கணக்கிலும் இரண்டு லட்சம் ரூபாய்தான் இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் சேகரித்துக் கொடுத்த நிதிக்கு, ஜெயலலிதா முறையான கணக்குத் தர வேண்டும். கட்சிக்காக எவ்வளவுத் தொகை சேகரிக்கப்பட்டது என்கிற விவரத்தையும், பொருளாளர் என்ற முறையில் எனக்குத் தெரிவிக்கவில்லை. முறையான கணக்கையும் கட்சியின் வரவு செலவு விவரத்தையும் ஜெயலலிதா தெரிவிக்க வேண்டும்’’ என்றார். கூடவே, ‘‘பாதுகாப்பற்ற சூழ்நிலையில் சூழ்நிலைக் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவைக் காப்பாற்றி எம்.ஜி.ஆர் ஆட்சியை ஏற்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்’’ என்றார். கட்சி நிதியில் நடராசனின் கை இருப்பதையும், அவர் பிடியில் ஜெயலலிதா சூழ்நிலைக் கைதியாகச் சிக்கி இருக்கிறார் என்பதையும் திருநாவுக்கரசர் இப்படி சுட்டிக்காட்டினார்.

இப்படியான வார்த்தைப் பிரயோகங்களுடைக்கிடையே இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘நமது எம்.ஜி.ஆர்’ என்கிற கட்சிப் பத்திரிகையை ஜெயலலிதா தொடங்கினார். நெடுஞ்செழியனின் 69-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டமும் நடந்தது. ‘நமது எம்.ஜி.ஆர்’ வெளியிட்டு நிகழ்ச்சியும், நெடுஞ்செழியனின் பிறந்தநாள் விழாவும் ஜூலை 11-ம் தேதி ஒரே நாளில் தனித்தனியாக நடைபெற்றன.

ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ‘நமது எம்.ஜி.ஆர்’ வெளியீட்டு விழாவுக்கு,  நெடுஞ்செழியன் ஆதரவாளர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பவில்லை. ஆனால், விழாவில் நெடுஞ்செழியனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தைச் சொன்னார் ஜெயலலிதா. ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையை ஜெயலலிதா வெளியிட, எஸ்.டி.சோமசுந்தரம் பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய ஜெயலலிதா, ‘‘இன்று சிலர் கணக்கு கேட்கிறார்கள். வருமானவரித் துறை கணக்கு உட்பட சரியான கணக்குகள் எங்களிடம் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் இதைப் பொதுக்குழுவில் வைக்கத் தயாராக இருக்கிறேன். இதையெல்லாம் பேச ஒரு இடம் இருக்கிறது. கணக்குக் கேட்பவர்களைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை. மற்றவர்களுக்குப் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. வதந்திகளைப் பரப்பி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். பல போராட்டங்களுக்கு இடையே கடன் வாங்கி இன்று ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையைத் தொடங்கியிருக்கிறோம். யார் உடன் வந்தாலும், வராவிட்டாலும், நமது லட்சியம் தொடரும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இவ்வளவு விஷயங்களும் நடராசனின் கண் அசைவில்தான் நடைபெற்றன.

தன் பிறந்தநாளையொட்டி நெடுஞ்செழியன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜனநாயக முறையில் செயல்பட்டு வந்த கட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்த ஒருவர் ‘நான், என்னுடைய கட்சி, என் திட்டம், என் ஆட்சி, என் முயற்சி, எல்லாம் என்னால்தான், உரிமைகள் அதிகாரங்கள் அனைத்தும் எனக்குத்தான்’ என்று சர்வாதிகார மரபு வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருவது சரியல்ல’’ என ஜெயலலிதாவைக் குற்றம்சாட்டியிருந்தார். இப்படி ‘நான்’ என்கிற நிலைக்கு ஜெயலலிதாவைச் சசிகலா குடும்பம் தள்ளியிருந்தது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் நெடுஞ்செழியனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமாக நடந்து முடிய... சசிகலா குடும்பம் கோபத்தில் கொதிக்க ஆரம்பித்திருந்தது.

p26.jpg

கட்சியின் நிதி பிரச்னை நடராசனோடு முடிச்சுப் போடப்பட்டிருந்த நிலையில், ‘நமது எம்.ஜி.ஆர்’ விவகாரமும் நடராசனைச் சுற்றி பின்னப்பட்டிருந்தது. 1988 ஜூலை 12-ம் தேதி நிருபர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர், ‘‘ஜெயலலிதா அளித்த விளக்கம் யாருக்கும் திருப்தி அளிக்கவில்லை. கட்சிக்குப் பல்வேறு இடங்களில் இருந்து வசூலான பணம் பற்றி பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதா சொன்னதற்கும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூறியதற்கும், நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதே நேரம், வங்கிக் கணக்குகளில் குறைவான தொகையே போடப்பட்டிருக்கிறது. திரட்டப்பட்ட நிதி முறையாக வங்கிகளில் வரவு வைக்கப்படவில்லை. இதையெல்லாம் எப்படி சகித்துக்கொள்ள முடியும்? இரும்புக் கோட்டைக்குள்ளும் இருட்டிலும் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவைக் காப்பாற்றி, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்’’ என்றார்.

ஜெயலலிதாவை இரும்புக் கோட்டையில் சிறை வைத்தவர்களைப்பற்றி மட்டுமல்ல... ‘நமது எம்.ஜி.ஆர்’ பற்றியும் திருநாவுக்கரசர் நிறைய பேசினார். ‘‘நமது எம்.ஜி.ஆர் கட்சிப் பத்திரிகை அல்ல; அது குடும்பப் பத்திரிகை. ஜெயா பப்ளிகேஷன்ஸ் என்கிற பங்குதார நிறுவனத்தில் இருப்பவர்கள்தான், பத்திரிகையின் உரிமையாளர்கள். இந்த நிறுவனத்தில் ஜெயலலிதா, நடராசனின் மனைவி சசிகலா, சசிகலாவின் தம்பி திவாகரன், சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் ஆகிய நான்கு பேர்தான் பங்குதாரர்கள். நான்கு பேரில் மூன்று பேர் நடராசன் குடும்பத்தினர். கட்சி நிதியில் இருந்து நடத்தப்படுகிற பத்திரிகைக்கு ஒரு குடும்பத்தினர் மட்டும் உரிமையாளர்கள். ‘ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்’ எனச் சொல்லும் ஜெயலலிதா, இப்போதே இப்படிச் செய்தால் எப்படி?’’ என்று கேட்டார்.

ஜூலை 21-ம் தேதி ஜெயலலிதா அணி இரண்டாக உடைந்தது. ‘நால்வர் அணி’ பிறந்தது. உபயம், நடராசன்!

(தொடரும்)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 64 - கராத்தே வீரர்களை விரட்டியடித்த பூனைப்படை!

 

 

‘நால்வர் அணி’ உதயமானதற்குப் பிறகு ஜெயலலிதா - திருநாவுக்கரசர் மோதல் உச்சகட்டத்தைத் தொட்டது. அப்போது ஜூனியர் விகடனுக்கு திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், சசிகலா குடும்பத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தார்.

‘‘ஜானகி முதல்வராவதற்கு முன், ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்க முடிவுசெய்தோம். 1987, டிசம்பர் 31-ம் தேதி ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளராக்கும் தீர்மானத்தைப் பண்ருட்டியார்தான் எழுதினார். அதில் நான், அரங்கநாயகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.. சௌந்தரராஜன் மற்றும் பலர் கையெழுத்திட்டோம். போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவுடன் முக்கியத் தலைவர்கள் பேசி, அடுத்தகட்ட   நடவடிக்கைகளை முடிவு செய்வது வழக்கம்.

அப்போது அரசு அதிகாரியும் ஜெயலலிதாவின் உதவியாளருமான நடராசனை அழைத்து, அவரையும் டிஸ்கஷனில் ஜெயலலிதா உட்கார வைப்பார். மூத்த தலைவர்கள் கருத்துச் சொல்லும்போது, உடனே ஜெயலலிதா, ‘நடராசன், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்பார். அவரும் கிரிக்கெட் சிறப்பு வர்ணனை மாதிரி ஏதாவது சொல்வார். விளையாட்டே தெரியாதவர் எப்படி வர்ணனை செய்ய முடியும்? அவர் அரசியல் கருத்துச் சொல்வது எங்களை அவமதிப்பது மாதிரி இருந்தது. எங்கள் வருத்தத்தை ஜெயலலிதாவிடம் சொன்னேன். அவர் என்மேல் கோபப்பட்டதுதான் மிச்சம். நடராசனிடமும் நாசூக்காகச் சொன்னேன். அவருக்குப் புரிந்துகொள்கிற பக்குவம் இல்லை.

p32a.jpg

ஜானகி ஆட்சி கவிழ்கிற வரையில் முக்கிய முடிவுகள் எடுப்பது, அறிக்கைகள் விடுவது என எல்லாவற்றையுமே மூத்த தலைவர்களைக் கேட்டுத்தான் ஜெயலலிதா செய்வார். ஆனால், காலப்போக்கில் அவருடைய போக்கு மாறியது. போகப் போக நடராசன் நேரடியாக அரசியலில் தலையிட ஆரம்பித்தார். எங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாப்பாக டூர் அழைத்துச் சென்றதால்,  கே.கே.எஸ்.எஸ்.ஆருக்குக் கட்சிக்காரர்களிடையே நல்ல செல்வாக்கு இருந்தது. கட்சியின் மாநில அமைப்பாளர் அல்லது எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பதவி தனக்குக் கிடைத்தால் உற்சாகமாகப் பணியாற்ற முடியும் என அவர் நினைத்தார்.

ஒருநாள் நடராசன் போனில் என்னை அழைத்து, புதுப் பொறுப்பாளர்கள் பட்டியலைப் படித்தார். அந்தப் பட்டியலில் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கவில்லை. இதை நடராசனிடம் எடுத்துச் சொன்னேன். உடனே அவர் ‘உங்கள் தகவலுக்காகத்தான் இதைப் படித்தேன். ஆலோசனைக்காக அல்ல. பட்டியல் ஏற்கெனவே பத்திரிகைகளுக்குச் சென்றுவிட்டது’ என்றார். மூத்த தலைவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து சேலம் கண்ணனுக்கு இணையாக ஓர் இணைச் செயலாளரையும் நியமித்தார்கள். ஜெயலலிதாவின் விசுவாசிகளுக்கு இதுதான் கதியா? தவறுகளை ஜெயலலிதாவிடம் சுட்டிக்காட்டினேன். என் மீது கோபப்பட்டார்.

தலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின், போயஸ் கார்டன் அருகே ஜேப்பியாரின் ஆட்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. உடனே புதுக்கோட்டையிலிருந்து ‘கராத்தே’ தெரிந்த 24 பேரை 24 மணி நேர டியூட்டியில் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்குப் போட்டிருந்தேன். அப்போது போயஸ் கார்டனில் நடராசன் ஆட்கள் கிடையாது. பிறகு கராத்தே வீரர்கள் துரத்தப்பட்டனர். போயஸ் கார்டனை நடராசனின் உறவினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். நடராசனின் ‘பூனைப்படை’யும் தயாரானது. தி.நகர் ஜெர்மன் ஹாலில் நடந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவைப் பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தார்கள். உடனே பூனைப்படையினர், துப்பாக்கியைக் காட்டித் தொண்டர்களைச் சுட்டு விடுவதாக மிரட்டினர். தொண்டர்கள் பயந்துபோய்ச் சிதறி ஓடினார்கள். பிரதமரின் பாதுகாப்புப் படையேகூட செய்யத் துணியாத இந்தச் செயலைச் செய்தார்கள்.

யார் என்ன சொன்னார்களோ... அடுத்த நாள் ஜெயலலிதா என்னிடம், ‘என் உயிருக்கு ஆபத்து வருகிறது. இந்தச் சதிக்குப் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்’ என்று ஆத்திரப்பட்டார். கட்சிக்காரர்களுக்குக் கொலைகாரப் பட்டம் கொடுத்தது அதிர்ச்சியைக் அளித்தது. தன் நிழலைகூடச் சந்தேகிக்கும் நிலைக்கு ஜெயலலிதா வந்துவிட்டார்!

p32.jpg

நடராசனின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதா இருந்தார். நடராசனின் போக்கோ, தி.மு.க.-வுக்குச் சாதகமாகவே அமைந்து வந்தது. அதனால், இதற்கு ஒரு முடிவுகட்ட நினைத்தோம். அதன் விளைவு, கட்சி பிளவுபடும் அளவுக்கு இப்போது பிரச்னை வளர்ந்துவிட்டது. நடராசன்              தி.மு.க-வின் கைக்கூலி. ஜெயலலிதாவைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார். காங்கிரஸ் கட்சியுடனான உறவை ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் கெடுத்துவிட்டன. வி.பி.சிங்கைச் சந்தித்தது, பேட்டிகளில் தாறுமாறான விமர்சனங்கள் செய்தது எல்லாமே ஜெயலலிதாவுக்கு எதிராக அமைந்தன. இதற்கு ஜெயலலிதா மட்டுமல்ல, நடராசனும் பூனைப்படையும் கூடக் காரணம். பத்திரிகைக்காரர்களைக்கூட பூனைப்படை தாக்கியது. முப்பது மைல் தூரம் ஜோதியை ஏந்தியபடி ஓடிவந்து, கொடுத்த தொண்டர்களை அவமானப்படுத்தினர். பூனைப்படையினர் ஜோதியைப் பிடுங்கியெறிந்துவிட்டு அவர்களை அடித்துத் துரத்தினார்கள்.

‘ஓஹோ’ என்று ஆரம்பித்த எங்கள் அணி, மளமளவென்று சரியத் துவங்கியது. இன்று ஜெயலலிதா மர்ம மாளிகையில், பயங்கர மனிதர்களுக்கு நடுவே சிக்கியிருக்கிறார். அவரைக் காப்பாற்ற நினைக்கிறபோது ‘பண்ருட்டியும், திருநாவுக்கரசும் காங்கிரஸுக்குப் போய்விடுவார்கள். காங்கிரஸுடன் 50/50 தொகுதி ஒதுக்கீட்டுக்கும், கூட்டணி மந்திரிசபைக்கும் ஒப்புக்கொண்டு விட்டார்கள்’ என்று நடராசன் வதந்தி பரப்பினார். நடராசன் குடும்பம் விலகாத வரை சமாதானத்துக்கு வழி இல்லை. தி.மு.க-வைத் தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் தேவை. தி.மு.க எதிர்ப்புச் சக்திகள் ஒன்றாக வேண்டும்.

தொண்டர்கள் வியர்வையும் ரத்தமும் சிந்திச் சேகரித்த நிதிக்குக் கணக்கு ஒழுங்காக வைக்கப்பட வேண்டும். தொண்டர்கள் நிதி சேர்த்தது கட்சிக்காக... நடராசன் குடும்பம் தன் வசதிகளைப் பெருக்கிக்கொள்வதற்கு அல்ல. கட்சித் தொண்டர்களின் பணத்துக்குக் கணக்குக் கேட்டால், ‘குரைக்கிற நாய்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை’ என்று கோபமாக என்னைத் திட்டினார். தொண்டர்களிடமே அன்பு பாராட்டாத ஜெயலலிதா, நாட்டு மக்களிடம் எப்படி அன்பு செலுத்துவார்? அவர் ஆட்சி அமைத்தாலும், அது ‘மக்கள் விரோத ஆட்சி’யாகவே அமையும். ஒரு சர்வாதிகாரியின் கையில் தமிழகம் சிக்கி அலங்கோலமாகக் கூடாது என்பதைச் சரியான தருணத்தில் நாங்கள் புரிந்துகொண்டோம்’’ என விரிவாகப் பேசியிருந்தார் திருநாவுக்கரசர்.

(தொடரும்)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 65 - ‘அரசியலை விட்டு விலகிவிடுவேன்!’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம்

 

‘நீங்கள் போய்விட்டால், நான் அரசியலை விட்டு விலகிவிடுவேன்’ - நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய பெர்சனல் லெட்டரில் இருந்த வாசகம் இது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில், நாவலர் நெடுஞ்செழியன் ஆதரவாளர்கள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்த போது, அவர்கள் நடராசனைத்தான் குறிவைத்தனர். ‘கட்சியில் நடராசனின் தலையீட்டைத் தடுத்து நிறுத்தினால்தான் உடன்பாடு’ எனப் போர்க்கொடி தூக்கினார்கள். அந்த நேரத்தில்தான், ‘‘எதற்காக எனக்குக் கெட்ட பெயர்? நானும் என் மனைவியும் உங்களிடமிருந்து விலகிக்கொள்கிறோம்’’ என ஜெயலலிதாவிடம் கோபமாக நடராசன் சொல்லி விட்டுக் கிளம்ப... அவரைச் சமாதானப்படுத்த ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ஜெயலலிதாவின் பெர்சனல் லெட்டர் என்கிற அந்தத் துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டுதான் நடராசன் தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். கட்சி நிதி, தேர்தல் நிதி என வசூல் வேட்டை நடத்திக்கொண்டிருந்த சசிகலா குடும்பம், அடுத்து வேட்பாளர்களைக் குறிவைத்தது. அதுவும் கட்சிக்குள் அதிர்வலைகளை உண்டாக்கியது.

p25a.jpg

கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்பவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, ஜெயலலிதாவிடம் யோசனை ஒன்றைச் சொன்னார் திருநாவுக்கரசர். ‘‘தேர்தலில் சீட் கேட்பவர்கள் கட்சி அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும். அந்தத் தொகை, வேட்புமனு தாக்கல் தேதி முடிந்த பிறகு திருப்பிக் கொடுக்கப்படும். இதனால், டிக்கெட் கிடைக்காதவர்கள் போட்டி வேட்பாளராகக் களத்தில் இறங்க மாட்டார்கள். இது எம்.ஜி.ஆரின் டெக்னிக். அதுபோல இப்போது நாமும் சீட் கேட்பவர்களிடம் 25,000 ரூபாய் டெபாசிட் வாங்கலாம்’’ என்றார் திருநாவுக்கரசர். இந்த யோசனையை முதல் நாள் ஆமோதித்த ஜெயலலிதா, அடுத்த நாள் ரிவர்ஸ் கியர் போட்டார்.
‘‘நீங்கள் சொன்ன யோசனையின் பின்னணி எனக்குத் தெரியும். தமிழகம் முழுவதும் உங்கள் ஆதரவாளர்களுக்குப் பணம் கொடுத்து சீட் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்கள். அதனால்தான் இந்த யோசனையைச் சொல்கிறீர்கள்’’ என திருநாவுக்கரசரிடம் சீறினார் ஜெயலலிதா. தன் யோசனையைக் கேள்விப்பட்ட நடராசன், முந்தைய தினம் ஜெயலலிதாவுக்கு மந்திராலோசனை செய்துவிட்டார் என்பது திருநாவுக்கரசருக்குப் புரிந்தது. ‘‘உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லையா? தமிழ்நாடு முழுவதும் வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு வசதி படைத்தவனா நான்? இருந்த கொஞ்சப் பணத்தையும் உங்களுக்குச் செலவழித்து விட்டு நிற்கிறேன்’’ என திருநாவுக்கரசர் வேதனையோடு சொல்ல... அவரை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார் ஜெயலலிதா.

‘திருநாவுக்கரசரின் யோசனையைச் செயல்படுத்தினால், வேட்பாளர் தேர்வில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சீட் கொடுக்க முடியாமல் போய்விடும்’ என்பதால், அதை முடமாக்கினார் நடராசன். இந்த விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் திருநாவுக்கரசர், ‘‘தனிப்பட்ட முறையில் நடராசனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் ‘நீங்கள் போய்விட்டால் நான் அரசியலைவிட்டு விலகிவிடுவேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தைக் கட்சிக்காரர்களிடம் நடராசன் பெருமையாகக் காட்டி, அவர்களையெல்லாம் தன் வீட்டுக்கு வரவழைத்துக் கொண்டிருந்தார். நடராசன் தயவிருந்தால்தான் தேர்தலில் சீட் கிடைக்கும் என்கிற எண்ணத்தை உருவாக்கி வந்தார்’’ என்றார்.

தேர்தல் நிதி தில்லுமுல்லுகளும் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தன. 1989 சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக நிதி திரட்டும் பணியில் கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது, ‘‘தி.மு.க தேர்தல் நிதியாக இரண்டரை கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது’’ என கருணாநிதி அறிவித்தார். உடனே ஜெயலலிதாவும், ‘‘கட்சிக்கு ஒண்ணரை கோடி ரூபாய் நிதி சேர்ந்தது” என மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். நிதி வசூலாகாமலே, நிதி பெற்றதாக அறிவித்ததால் இது பிரச்னையை உருவாக்கிவிட்டது. மதுரைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அசோகா ஹோட்டலில் தங்கியிருந்தார் ஜெயலலிதா. அங்கே நிர்வாகிகளைச் சந்தித்தவர், ‘‘மதுரை மாவட்டக் கழகத்தின் சார்பில் ஐந்து லட்ச ரூபாய் நிதியளிப்பதாக அறிவியுங்கள்’’ என்றார். ‘‘பணத்துக்கு எங்கே போவது?’’ என நிர்வாகிகள் கேட்டபோது, ‘‘ஒரு பெட்டியில் நூறு ரூபாய் நோட்டுகளை மேலே வைத்துப் பணம் இருப்பது மாதிரி காட்டுங்கள்’’ என்றார் ஜெயலலிதா. ‘‘வசூலே செய்யாமல் நிதி சேர்த்ததாக அறிவித்தால் சந்தேகம் வரும். கூட்டச் செலவு போக ஒரு லட்ச ரூபாய் தேர்தல் நிதி வசூலானதாக அறிவிக்கலாம். ஐந்து லட்சம் என்று அறிவித்தால், அந்தப் பணத்தைக் கட்சிப் பெயரில் வங்கியில் போட வேண்டும். அநாவசிய சிக்கல்கள் வரும்’’ எனச் சொன்னார்கள். ‘‘ஐந்து லட்சம் என்று அறிவியுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார் ஜெயலலிதா.

அடுத்த நாள் தஞ்சாவூர் கூட்டத்திலும் இந்த ‘நிதி வசூல் நாடகம்’ நடத்தப்பட்டது. இந்தப் பொய் நாடகத்தின் திரைக்கதையை எழுதியவர் நடராசன். இந்த நாடகத்தின் பின்னணி, இதை வைத்து மற்ற மாவட்டச் செயலாளர்களைக் கெடுபிடி செய்வதுதான். ஒரு கட்டத்தில் ‘‘தேர்தல் நிதி தந்தால்தான் கூட்டத்துக்கு வருவேன்’’ என ஜெயலலிதாவையே சொல்ல வைத்தார் நடராசன். அதனால் கட்சிக்கு நிதி சேர ஆரம்பித்தது. இப்படி சேர்ந்த நிதியை வங்கியில் செலுத்தவில்லை எனப் புகார் கிளப்பினார்கள் நாவலர் அணியினர். ‘40 லட்ச ரூபாயைத் தன் பெயரில் வங்கியில் ஜெயலலிதா போட்டுக் கொண்டார்’ எனக் குற்றச்சாட்டு படித்தார்கள். ‘‘கட்சிப் பெயரில் வங்கியில் பணத்தைப் போட்டால், ஜானகி அணியினர் ‘அது அ.தி.மு.க. பணம்’ என்று சொல்லி வங்கியிலிருந்து பணத்தை எடுக்கவிடாமல் முடக்கிவிடுவார்கள். அதோடு மூத்த தலைவர்கள்தான் பணத்தை என் சொந்தப் பெயரில் போட்டுக்கொள்ளச் சொன்னார்கள்’’ என ஜெயலலிதாவைச் சொல்ல வைத்தார் நடராசன்.

ஜெயலலிதா பங்கேற்ற மாவட்ட பொதுக் கூட்டங்களிலும் சசிகலா குடும்பத்தினரால் பிரச்னைகள் ஏற்பட்டன. ‘திருவிழாவைப் போல அலங்கார வளைவுகளும், கட் அவுட்களும், வரவேற்பு பதாகைகளும் கட்டப்பட்டு, ஊரே திருவிழாக்கோலம் பூண வேண்டும்’ என நடராசனிடம் இருந்து முன்கூட்டியே உத்தரவுகள் வரும். இதில் எது குறைந்தாலும் மாவட்டச் செயலாளர்களின் கதி அவ்வளவுதான்! தமிழகம் அதுவரை கண்டிராத மிக ‘காஸ்ட்லி’யான அரசியல் தலைவராக ஜெயலலிதாவை ஆக்கியதே நடராசன்தான். எம்.ஜி.ஆருக்கு வரும் அதே அளவு கூட்டம்தான் ஜெயலலிதாவுக்கு வருகிறது என்கிற பிம்பத்தை ஜெயலலிதாவிடம் ஏற்படுத்தியிருந்தார் நடராசன்.

p25.jpg

தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு கூத்து நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் ‘உண்டியல் ஏந்தி நிதி வசூலிக்கப் போவதாக’ அறிவித்தார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, இப்படி உண்டியல் வசூல் செய்தார். அப்போது தொண்டர்கள் நகைகளையும் உண்டியலில் போட்டார்கள். அதேபோல், ‘ஜெயலலிதாவுக்கும் மக்கள் ஆபரணங்களை அள்ளிக்கொடுத்தார்கள்’ எனப் பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதுதான் நடராசனின் விருப்பம். அதன்மூலம் ஜெயலலிதாவிடம் ஸ்கோர் செய்துகொள்ள விரும்பினார். இதற்காக நகைகளைக் கழட்டிப் போட ஆட்களை ‘செட்டப்’ செய்திருந்தார்கள் நிர்வாகிகள். ஆனால், ஏற்பாடு செய்த பெண்கள் சரியான நேரத்தில் வந்து சேரவில்லை! அந்தக் கோபத்தில் சில நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டுக் கிளம்பினார் ஜெயலலிதா.

கன்னியாகுமரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் போதிய நிதி வசூலாகாததால் கூட்டத்துக்கு ஜெயலலிதா வரவில்லை.கோபத்தில், ஹோட்டலிலிருந்து சென்னை திரும்புவதற்காகக் கிளம்பினார் ஜெயலலிதா. ‘‘என் மானத்தைக் காப்பாற்றுங்கள்’’ என ஜெயலலிதாவின் காலில் விழுந்து மாவட்டச் செயலாளர் கெஞ்சினார். அதன்பிறகே ஜெயலலிதா மேடைக்கு வந்தார்.

பொதுக்கூட்டங்களில் பேசும்போதுகூட தி.மு.க-வை விமர்சிப்பதைவிட ஜானகி அம்மையாரைத் திட்டுவதிலேயே கவனம் செலுத்தினார் ஜெயலலிதா. ஜானகி அம்மையாரின் வயதைக்கூடப் பொருட் படுத்தாமல் ‘சல்லாபம், உல்லாசம்’ என்றெல்லாம் பேசியது, மேடையிலிருந்த தலைவர்களையும் எதிரேயிருந்த தொண்டர்களையும் கூச வைத்தது.

நடராசனின் திட்டப்படி எல்லாம் அரங்கேறிக் கொண்டிருந்தன.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 66 - ஜெயலலிதாவின் அரசியல் லீவு!

 

 

நாவலர் பிரிந்து ‘நால்வர் அணி’யை உருவாக்கியதால் அப்செட்டான ஜெயலலிதா, உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலில் இருந்து கொஞ்ச காலம் லீவு எடுத்துக் கொண்டார். அரசியலில் பங்கெடுக்க ஆரம்பித்த பிறகு முதன்முறையாக ஜெயலலிதா ஓய்வு எடுத்துக் கொண்டது இப்போதுதான். ‘இரண்டு மாதம் பூரண ஓய்வு’  எனச் சொல்லி, ஜெயலலிதா அரசியல் லீவு எடுத்தது பலருக்கும் ஆச்சர்யம். இந்த யோசனையைச் சொன்னது சசிகலா குடும்பம்தான்.

ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு காங்கிரஸ் கூட்டணிக்கு முயன்றபடியே இருந்தார் ஜெயலலிதா. ஆனால், காங்கிரஸ் பிடிகொடுக்கவில்லை. எம்.ஜி.ஆர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில், தனக்கு ஆபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்காக ராஜீவ் காந்தியின் பெர்சனல் நம்பரை வாங்கி வைத்திருந்தார் ஜெயலலிதா. அந்த நம்பருக்குத் தொடர்புகொண்டபோது சரியான ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால் டெல்லிக்கே சென்று பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்துவிட முடிவுசெய்து, விமான டிக்கெட் எல்லாம் எடுத்து வைத்திருந்தார். ஆனால், ராஜீவ் காந்தியைச் சந்திக்க நேரம் தரப்படவில்லை. ராஜீவ் காந்தி பார்க்க மறுத்த இப்படியான சூழலில்தான், ‘ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, டாக்டரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் இரண்டு மாதம் ஓய்வு தேவை. துணைப் பொதுச்செயலாளர் ஹண்டே எல்லா பொறுப்புகளையும் பார்ப்பார்’ என 1988, ஜூலை 25-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

p26a.jpg

இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் ஜூலை 29-ம் தேதி நெடுஞ்செழியன் விடுத்த அறிக்கையில், ‘கழகத்தின் நிதியைத் தன் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், வங்கிகளில் தனது பலவகைப்பட்ட பெயர்களில் தானே வைத்துக்கொண்டார். அதைத் தான் விரும்பியபோதெல்லாம் செலவு செய்யவும் முடியும் என்ற வகையில் ஜெயலலிதா செயல்பட்டார். தான் நினைத்தால் கழகத்தின் எந்தக் குழுவையும் கலைக்கலாம். தான் நினைத்தால் கட்சியில் எவரையும் சேர்க்கலாம், நீக்கலாம் என்ற வகையில்தான் ஜெயலலிதா செயல்பட்டார்’ எனச் சொல்லியிருந்தார்.

ஜெயலலிதாவிடம் எப்போதும் இல்லாத அளவுக்குச் சர்வாதிகாரம் குடி புகுந்ததற்குக் காரணமே சசிகலா குடும்பம்தான். அதைப் பற்றியும் பூடகமாகச் சொன்னார் நெடுஞ்செழியன். ‘சர்வாதிகாரம் அளவுக்கு மீறிப் போகிற கட்டத்தில் அமிர்தமும் நஞ்சாகும். பூனையும் புலியாகும். கூனனும் நிமிர்வான். குருடனும் விழி பெறுவான். குமுறுகின்ற எரிமலையும் வெடிக்கும். அதேபோல செல்வியாரின் சர்வாதிகார வெறித்தனம் உச்சாணிக்கொம்பில் ஏறிக் குதியாட்டம் போடத் தொடங்கியபோது, ஜெயலலிதாவை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் உண்டானது’ எனச் சொல்லியிருந்தார்.

ஜெயலலிதாவின் ‘ஓய்வு’ என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. கட்சி நிதி, சசிகலா குடும்பம் தலையீடு எனச் சர்ச்சை எழுந்த நிலையில்,  ஓய்வு அறிவிப்பு மேலும் சர்ச்சைகளை உண்டாக்கியது. இதற்கிடையே கட்சி நிதி விவகாரத்தில் ஜெயலலிதாவும் திருநாவுக்கரசரும் பரஸ்பரம் நோட்டீஸ்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ‘நால்வர் அணி’யைச் சேர்ந்த அரங்கநாயம் பிரஸ் மீட்டைக் கூட்டினார். ‘‘கூட்டுத் தலைமை கூடாது என்கிற வாதம் எழுந்ததால்தான், சமாதானத்துக்கு வழியில்லாமல் போய்விட்டது. ஜெயலலிதாவைச் சுற்றி இருக்கும், கட்சிக்குச் சம்மந்தமில்லாத அவரது குடும்ப நண்பர்களால்தான் பிரச்னைகளும் குழப்பங்களும் ஏற்பட்டன. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கே தெரியவில்லை. கட்சிப் பணத்தை வங்கியில் போடாமல் சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தும் நிலை இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் ஏற்பட்டதில்லை’’ எனக் காட்டமாகச் சொன்னார் அரங்கநாயகம்.

சமரச முயற்சிகளின்போது மூன்று நிபந்தனைகளை, நால்வர் அணி முன் வைத்தது. ‘கிச்சன் கேபினெட்டான நடராசன் குடும்பம் வெளியேற வேண்டும்; ஜெயலலிதாவால் கலைக்கப்பட்ட அரசியல் விவகாரக் குழு புதுப்பிக்கப்பட வேண்டும்; கட்சியின் நிதி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்’ என்பவைதான் அந்த மூன்று கோரிக்கைகள். ஆனால், இதில் ஒன்றை ஏற்றுக் கொண்டாலும் தங்களுக்குச் சிக்கல் என நினைத்தது சசிகலா குடும்பம். சமரச முயற்சிகளை எடுத்தவர்களில் ஒருவரான மதுரை முன்னாள் துணை மேயர் நவநீதகிருஷ்ணன், இந்த நிபந்தனைகளை ஜெயலலிதாவிடம் சொல்ல முயன்றார். நவநீதகிருஷ்ணன், போயஸ் கார்டன் போனபோது அவரை வழிமறித்தது பூனைப் படை. அந்தப் படைக்குத் தலைவராக இருந்தவர், சசிகலாவின் சகோதரர் திவாகரன். ‘‘தலைவியைப் பார்க்க வேண்டும்’’ எனக் கெஞ்சியும் திவாகரன் அவரை அனுமதிக்கவில்லை.

p26.jpg

ஓய்வில் இருந்த ஜெயலலிதாவை யாருமே சந்திக்க முடியவில்லை. ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்ன ஒரு விஷயம் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘‘மனநோய் முற்றித் தற்கொலை முயற்சி மேற்கொண்டால் வேறு பெயரில் மருத்துவமனையில் புகுந்து சிகிச்சைப் பெற வாய்ப்பு இருக்கிறது. சான்றாக, ‘லலிதா’ என்னும் பெயர் கொண்டவர், ‘ஷீலா’ என்ற பெயரில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்’’ என்றார். அதோடு நிற்கவில்லை. ‘‘ஜெயலலிதா என்ற பொம்மையைத் தெருத் தெருவாய் அழைத்துச் சென்றோம். அதற்கு அரசியல் சொல்லிக் கொடுத்தோம். பேசக் கற்றுக் கொடுத்தோம். ஆனால், அந்தப் பொம்மை இன்று நம்மையே எதிர்க்கிறது. அது வெறும் பொம்மைதான் என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம்’’ என்றார். அந்தப் பொம்மைக்கு நடராசன் கீ கொடுத்துக் கொண்டிருந்தார்.

இப்படியான வாய்ச் சண்டைகளின் தொடர்ச்சியாக நெடுஞ்செழியன் அளித்த பேட்டியில், ‘‘ஜெயலலிதாவைப் பற்றி நாங்கள் பேசவே மாட்டோம். அவரைத் தாக்கவில்லை. அவரின் முகமூடியைத்தான் அகற்றுகிறோம். எக்ஸ்போஸ் மட்டுமே செய்கிறோம்’’ என்றார். அப்போது கட்சியின் நிதி விவகாரத்தையும் தொட்டார். ‘‘ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டன. தி.நகரில் நடந்த கூட்டத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் செலவு. இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்து மாவட்டச் செயலாளர்களால் எப்படிக் கூட்டம் போட முடியும்? பிரமாண்டமான கட் அவுட்கள் எல்லாம் எதற்கு? மதுரையில் நடந்த கூட்டத்துக்கு ஈஃபில் டவர் மின்விளக்கு ஜோடனை எதற்கு? கூரை போடாத மேடைகளில் பேசிதான் பெரியாரும் அண்ணாவும் கூட்டங்களை நடத்தினார்கள். கட்சிக் கொடியைக் கட்டக்கூட கான்ட்ராக்ட் விட்ட பிறகு கட்சி எப்படி வளரும்? எங்கிருந்து தொண்டன் வருவான்? நாங்கள் தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டுவோம். கான்ட்ராக்டர்களுக்கு அல்ல’’ என்றார்.

கான்ட்ராக்டர்களுக்கு உற்சாகம் ஊட்டியது சசிகலா குடும்பம்!

(தொடரும்)

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 67 - உதிர்ந்த ரோமங்களும் இலவச அறிவிப்பும்!

 

‘‘பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு பேடி. பேடியாக வாழ்வதைவிடச் சேலை கட்டிய கருணாநிதியாய் வாழ்வது எவ்வளவோ மேல். நம்மைவிட்டுப் போனவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். தலையில் எண்ணெய் தடவிச் சீவி அழகாக வைக்கிறோம். சீவும்போது மூன்று நான்கு முடிகள் கீழே விழுந்துவிடும். அந்த முடிகள், மீண்டும் தலைக்கு வர முடியாது. கீழே விழுந்த அந்த முடிகளுக்கு மதிப்பில்லை. அவை உதிர்ந்த முடிகள்...’’ - 1988 ஆகஸ்ட் 17-ம் தேதி தஞ்சாவூரில் ஜெயலலிதா உதிர்த்த இந்த ‘உதிர்ந்த ரோமங்கள்’ உரை, அரசியலில் மிகவும் பிரபலம்!

அரசியல் லீவுக்குப் பிறகு தஞ்சாவூர் போனார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அருகில் இருந்த ராமநாதன் ஹாலுக்கு நடந்து செல்ல முயன்றார். அவரைத் தடுத்து காரில் ஏற்றியது பூனைப்படை. இதே ஹாலில்தான் முந்தைய தினம் ‘நால்வர் அணி’யின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதற்குப் பதிலடியாக ஜெயலலிதா கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில்தான், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசர் ஆகியோர் அடங்கிய ‘நால்வர் அணி’யை ‘உதிர்ந்த ரோமங்கள்’ என விமர்சித்தார் ஜெயலலிதா. சசிகலா குடும்பத்தின் சொந்த ஊரில், இப்படி ஜெயலலிதா முழங்க யார் காரணம் என்பதை, ‘நால்வர் அணி’யினர் உணர்ந்திருந்தனர். அந்தச் செயல் வீரர்கள் கூட்டத்தில், ‘‘யார் பேச்சையும் கேட்காதீர்கள். அந்தக் கும்பலை மதிக்காதீர்கள். என்னைக் கைப்பொம்மையாக ஆட்டி வைக்கலாம் என நினைத்தார்கள். நான் வாளை சுழற்றினால் எதிரிப்படை தாங்காது’’ என ஜெயலலிதா சீறினார். ஆனால், அந்த வார்த்தைகள் சசிகலா குடும்பத்துக்குத்தான் சரியாகப் பொருந்தியிருந்தது. அந்தக் கூட்டத்தை மட்டுமல்ல கைப்பொம்மையாக ஜெயலலிதாவையும் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருந்தார் நடராசன்.

p26.jpg

ஜெயலலிதா தற்காலிக அரசியல் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் 1988 ஆகஸ்ட் 2-ம் தேதி, நெடுஞ்செழியன் உள்பட நால்வரைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். ‘‘கட்சியின் நிதியைச் சூறையாடத்தான் எங்களை நீக்கியிருக்கிறார்கள். அதை அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்கள் ‘நால்வர் அணி’யினர். அதோடு ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவை நீக்கியது ‘நால்வர் அணி’. அடுத்த நாள் ‘நால்வர் அணி’யின் அரசியல் விவகாரக் குழு கூடி வெளியிட்ட அறிவிப்பில், ‘மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வசூலித்து வைத்திருக்கும் நன்கொடைகளை ஜெயலலிதாவிடம் வழங்க வேண்டாம். பொதுக்குழு கூடி தக்க முடிவு எடுக்கும் வரையில் தங்கள் வசமே வைத்திருங்கள்’ எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

‘வசூல் வேட்டை’ நடத்தலாம் என நினைத்த சசிகலா குடும்பத்துக்கு ‘செக்’ வைக்கப்பட்ட நிலையில், இரண்டு வார ஓய்வுக்குப் பிறகு ஆகஸ்ட் 6-ம் தேதி ஜெயலலிதா அரசியல் ரீ என்ட்ரி கொடுத்தார். ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற, சட்டமன்றத் தேர்தல் நிதி வசூல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு அ.தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பி.குழந்தைவேலு நிருபர்களிடம் பேசும்போது, ‘‘கட்சிப் பணத்தை ஜெயலலிதா தனது சொந்த செலவுக்கோ அல்லது தன்னிடம் பணியாற்றுபவர்களுக்கோ பயன்படுத்தியது கிடையாது’’ என விளக்கம் கொடுத்தார்.  ஆனால், ‘‘மரங்கொத்திப் பறவையைப் போல, ஜெயலலிதா பணம் கொத்தும் பாவை; பதவி கொத்திப் பாவை; பாடுபடுவோரைக் கொத்திடும் பாவை; பண்பாளர்களைக் கொத்திடும் பாவை’’ என்றார் நெடுஞ்செழியன்.

அதன்பிறகு எதிரும் புதிருமாக வார்த்தைப் பிரயோகங்கள் நாற்றமடிக்க ஆரம்பித்தன.

 ‘‘ஜெயலலிதா என்னும் பழந்தின்னி வெளவாலுக்கு எம்.ஜி.ஆர், அரவணைப்பும் அனுமதியும் கொடுத்ததால், அது, அ.தி.மு.க தோட்டத்தில் நுழைந்து, தன் விருப்பம் போல கனிகளைக் கொத்தித் தின்று கொழுத்தது. இனி அதைக் குடியிருக்க அனுமதிப்பது தவறு. அந்தப் பழந்தின்னி வெளவாலைத் தோட்டத்தை விட்டு அடியோடு அகற்றிவிட முடிவு செய்திருக்கிறோம்’’ - நெடுஞ்செழியன்.

 ‘‘நாலாந்தரமாகப் பேசிவரும் ஜெயலலிதா, முந்தானையை இழுத்துப் போர்த்தி வருகிற நிலை மாறி, முக்காடு போடவேண்டிய சூழ்நிலை விரைவில் வரும்’’  - திருநாவுக்கரசர்.

 ‘‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க-வை ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றுவார் என நினைத்தோம். குதிரைக் குட்டிதான் என நம்பி வாங்கினோம். கழுதைக் குட்டி என்று தெரிந்து எஸ்.டி.சோமசுந்தரத்திடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டோம்’’ - பண்ருட்டி ராமச்சந்திரன்.

 ‘‘புரட்சித்தலைவருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகவே நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்’’ - ஜெயலலிதா.

‘நால்வர் அணி’ உருவாவதற்கு முன்பு சமரசப் பேச்சுவார்த்தைகளில் அதிகம் பங்கு எடுத்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அங்கும் இங்கும் ஊசலாடியவர், ஒரு கட்டத்தில் ஜெயலலிதா அணியிலேயே இருந்துவிட்டார். ஆனாலும், அவருக்கான மரியாதைகள் கிடைக்கவில்லை. ஜெயலலிதாவோடு ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில் கோபம் அடைந்து, ஊருக்குத் திரும்பினார். அதன்பின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் தனி ஆவர்த்தனம் நடத்தத் திட்டமிட்டார். இது சசிகலா குடும்பத்தினருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஏற்கெனவே தங்கள் மீது குற்றச்சாட்டு சொல்லித்தான் ‘நால்வர் அணி’ பிரிந்தது. இப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆருடன் சேர்ந்து இன்னும் சிலரும் பிரிந்து போனால், ஜெயலலிதாவின் கோபம் தங்கள் பக்கம்தான் திரும்பும் என நினைத்தார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆரைச் சமாதானம் செய்யும் நடவடிக்கையில் நடராசன் இறங்கினார். ஒரு வழியாக சமாதானமும் ஆனது. இந்தநிலையில் செப்டம்பர் மாதம் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது ஆசிட் வீசப்பட்டது. மதுரையில் அனுமதிக்கப்பட்ட அவரை ஜெயலலிதா போய்ப் பார்த்தார்.

எப்படியாவது ஜெயலலிதாவை ஆட்சியில் அமர வைத்தால்தான் தங்களுக்கு அறுவடை என நினைத்த சசிகலா குடும்பம், அதற்கான வேலைகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் இலவச அறிவிப்புகள். இலவச அறிவிப்புகளுக்கான முன்னோடியே ஜெயலலிதாதான். இந்த ஐடியாவைக் கொடுத்தவர் நடராசன். ஏழைகள் அனைவருக்கும் இலவச வீடுகள், மாணவர்களுக்கு இலவசப் பஸ் பாஸ், விவசாயிகள் அனைவருக்கும் பம்பு செட், இலவச மின்சாரம், இலவச உரம், பூச்சிக்கொல்லி மருந்து, நிலவரி ரத்து, ஒரு படி அரிசி ஒன்றேமுக்கால் ரூபாய், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 200 ரூபாய்’ என அவரின் இலவச அறிவிப்புகள் வரிசை கட்டி வந்தன. நெடுஞ்செழியன், ‘‘இலவச திட்டங்களை நாசிக்கில் அச்சடித்த நோட்டாக இருந்தால் கொடுக்க முடியாது. வேண்டுமானால் அம்மையார் சிவகாசியில் அச்சடித்து கொடுக்கலாம். வெள்ளிக் கட்டிலில் படுத்துக் கொண்டு தங்கக் கனவுகள் காண்கிறார்’’ என்றார். 

(தொடரும்)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 68 - நடராசன் ராஜினாமாவும் திருநாவுக்கரசர் பல்டியும்!

 

 

ரசு வேலைக்கு லீவு போட்டு விட்டு, போயஸ் கார்டனில் தங்கி ஜெயலலிதாவின் ‘அரசியல் ஆலோசகர்’ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார் நடராசன். ‘அரசு ஊழியர், கட்சி வேலைகளை எப்படிப் பார்க்கலாம்?’ என்கிற விமர்சனங்கள் கிளம்பின. ‘‘எனக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஜெயலலிதாவுக்குத் தோழியாக என் மனைவி சசிகலா இருக்கிறார். அவருக்கு நான் கணவன். மனைவி போகும் இடமெல்லாம் நானும் போகிறேன்’’ எனச் சொல்லி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ‘நடராசனும் சசிகலாவும் என் குடும்ப நண்பர்கள்’ என ஜெயலலிதா அறிக்கைவிட்ட நிலையில், 1988-ம் ஆண்டு இறுதியில் அரசு வேலையை ராஜினாமா செய்தார் நடராசன். ஆனால், அதற்கு முன்பே நடராசன் மீது துறைரீதியான விசாரணையை முடுக்கி விட்டிருந்தது தமிழக அரசின் செய்தித் துறை.

அரசியல் ஈடுபாடு, துறைரீதியான பிரச்னைகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் சேர்த்துதான் நடராசன் மீது விசாரணை வளையம் சுற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், தனது ராஜினாமா கடிதத்தை ஸ்பீடு போஸ்டில் அரசுக்கு அனுப்பினார். ‘நடராசன் ராஜினாமா ஏற்கப்படுமா... அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?’ என விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. கார்டனில் இருந்தபடியே நடராசன் நடத்திய லீலைகள் அனைத்தும் விசாரணை டீம் முன்பு வைக்கப்பட்டன. ஊட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் நடராசன் தரிசனம் தந்தது, மதுரை நட்சத்திர ஹோட்டலில் ஜெயலலிதா தங்கியதற்கான பில்லை செட்டில் செய்தது, ட்ரைடென்ட் ஹோட்டலில் தங்கியபடியே அரசியல் சித்து வேலைகளைக் காட்டியது என அனைத்துக்கும் ஆதாரங்கள் அள்ளிப் போடப்பட்டன. 

p32.jpg

கவர்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழகத்தில், 1989 ஜனவரியில் சட்டசபைக்குத் தேர்தல் நடப்பது உறுதியாகியிருந்தது. ஆயத்த வேலைகள், வேட்பாளர்கள் தேர்வு, பிரசாரம் எனத் தேர்தல் பணிகளை முழுவேகத்தோடு செய்ய வேண்டியிருந்ததும், நடராசனின் ராஜினாமாவுக்கு முக்கியக் காரணம். ராஜினாமா கொடுத்த பிறகு தீவிர அரசியலில் கால் பதித்தார் நடராசன். ஜெயலலிதாவோடு சேர்ந்து தேர்தல் பணிகளைத் தீவிரமாகச் செய்தார். சென்னை சாலிகிராமத்தில் ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகைக்குப் புதிதாக அலுவலகம் அமைத்தார்கள். புதிய அச்சு இயந்திரத்தின் மூலம் பத்திரிகையையும் தேர்தல் போஸ்டர்களையும் அச்சடித்து, தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டார்கள். கட்சியின் நிதி,சென்ட்ரல் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டிருந்தது.  கடனுக்காக அந்த வங்கியின் மண்டல மேலாளருடன் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தியபோது நடராசனும் உடன் இருந்தார்.

தேர்தல் வேலைகள் சூடு பிடித்தன. கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் மாவட்டந்தோறும் ஜெயலலிதா ரவுண்ட் அடித்துக் கொண்டிருந்தார். ‘காங்கிரஸ் கூட்டணிக்கு இனி வாய்ப்பே இல்லை’ எனத் தெரிந்ததும், கட்சியைப் பலப்படுத்த ஜெயலலிதாவும் நடராசனும் முயன்றார்கள். ‘நால்வர் அணி’யால் ஜெயலலிதா அணி பலவீனமாகி இருந்தது. அதனால் பிரிந்தவர்களுக்கு வலை வீசினார் நடராசன். அதில் முதலில் வீழ்ந்தவர் திருநாவுக்கரசர். முதன்முறையாக நடராசனைப் பற்றி வெளிப்படையாக விமர்சித்துப் பேசியவர் திருநாவுக்கரசர்தான். ஆனாலும், அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்துவிட முடிவு செய்தார் நடராசன். எப்படி கே.கே.எஸ்.எஸ்.ஆரை நேரில் போய் சந்தித்து சமாதானம் செய்தாரோ, அதே பாணி கடைபிடிக்கப்பட்டது.
 
அரசியலில் அந்தர் பல்டி என்பதே அடிப்படைத் தகுதி. தலைமையின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் முக்கிய நிர்வாகிகள், சில ஆண்டுகள் கழித்து அதே தலைமையிடம் சரணாகதி ஆவது அரசியலில் ‘சாதாரணமப்பா’தான். ஆனால், ஜெயலலிதாவையும் நடராசனையும் வார்த்தைகளில் வறுத்தெடுத்ததோடு, கட்சி நிதியில் முறைகேடு வரை வசை பாடிய திருநாவுக்கரசரின் வாய், ஒன்றரை மாதத்திலேயே ‘நாற வாய்’ ஆனதுதான் அந்தர் பல்டி அரசியலின் முதல் அதிசயம். ‘நால்வர் அணி’யில் இடம்பெற்றிருந்த திருநாவுக்கரசர், திடீரென ஜானகி அணியினரோடு பேச ஆரம்பித்தார். அதோடு போயஸ் கார்டனின் சிக்னலுக்கும் சமிக்ஞைகள் கொடுத்துக் கொண்டிருந்தார். ‘நால்வர் அணி’யில் இருந்துகொண்டே, ‘‘விரைவில் ஜானகி அணியுடன் இணைப்பு’’ என அறிவித்தார் திருநாவுக்கரசர். உடனே ‘நால்வர் அணி’யில் இருந்து மறுப்பு கிளம்பியது. அதன்பிறகு ‘ராமாவரம் தோட்டம் சலோ...’ எனக் கிளம்பினார். பல முறை ஜானகியைச் சந்தித்தார். இப்படி ஜானகியை அவர் சந்தித்த விஷயத்தையே, ‘நால்வர் அணி’யில் இருக்கும் மற்றவர்கள், பத்திரிகைகளைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடிந்தது. இப்படியான சூழலில்தான் நடராசன் மூலம் தூது வந்தது. ‘‘தூக்குக் கயிற்றில் தொங்குவேனே தவிர ஜெயலலிதாவிடம் சரணாகதி அடைய மாட்டேன். செத்தாலும் அங்கே போக மாட்டேன்’’ என வீராவேசம் பேசிய திருநாவுக்கரசர் என்ற மானஸ்தன், ஒரு கட்டத்தில் போயஸ் கார்டனில் போய் விழுந்தார்.

திருநாவுக்கரசருடன் ஜெயலலிதாவை போனில் பேச வைத்தார் நடராசன். ‘‘திருநாவுக்கரசர் மட்டும் வந்தால் போதாது. கூடவே, நால்வர் அணியை அழைத்து வர வேண்டும்’’ என கார்டன் கட்டளை போட்டது. உடனே, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பேசினார் திருநாவுக்கரசர். ‘‘மீண்டும் ஜெயலலிதா அணியில் இணைந்துவிடுவோம்’’ என வேண்டுகோள் வைத்தார். இப்படி 1988 நவம்பரில் மூன்று முறை பண்ருட்டியாரைப் பார்த்தார். திருநாவுக்கரசரை இழுத்து வரும் வேலையை மன்னார்குடியைச் சேர்ந்த ஜெகதீசன், ராமதாஸ் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார் நடராசன். அவர்கள்தான் பேச்சுவார்த்தையின் மீடியேட்டராக இருந்தார்கள்.

ஒரு வழியாக நவம்பர் 15-ம் தேதி போயஸ் கார்டன் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்தார் திருநாவுக்கரசர். அந்தச் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் பண்ருட்டி ராமச்சந்திரனைப் போய்ப் பார்த்தார். ஆனால், பண்ருட்டியார் பிடி கொடுக்கவில்லை. தான் மட்டும் தனியாகப் போய்ச் சேருவது சிறப்பாக இருக்காது என்பதற்காக நிர்வாகிகளை அழைத்துச் செல்ல எடுத்த முயற்சிகள் தோற்றுப் போயின. நவம்பர் 16-ம் தேதி காலை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில்    எம்.ஜி.ஆருக்குச் சிறுநீரகம் தானம் அளித்த லீலாவதியுடன் போய், ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார். ஐந்தே நிமிடங்களில் கட்சியில் சேரும் வைபவம் நடந்து முடிந்தது. மகிழ்ச்சியோடு கிளம்பிப் போனார் திருநாவுக்கரசர்.

கொஞ்ச நேரத்திலேயே பத்திரிகை அலுவலக ஃபேக்ஸ் மிஷின்களில் வந்து விழுந்தது ஜெயலலிதாவின் அறிக்கை. ‘என்னைத் தாக்கிப் பேசியதற்கெல்லாம் திருநாவுக்கரசர், நேரிலும் எழுத்து மூலமும் மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ எனச் சாதுரியம் பேசியது அறிக்கை. அந்த எழுத்துக்குப் பின்னால் நடராசனின் நடை இருந்தது.

படம்: பா.காளிமுத்து

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 69 - வேட்பாளர் செலக்‌ஷன்... கலெக்‌ஷன்!

திருநாவுக்கரசரோடு ஜெயலலிதா அணியில் சேர்ந்த எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதிக்கு அங்கே மரியாதை கிடைக்கவில்லை. ஜெயலலிதாவுக்குப் போட்டியாக அவர் வந்துவிடக் கூடாது என முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக செயல்பட்டது சசிகலா குடும்பம். லீலாவதியையும் அவரது அண்ணன் பிரபாகரனையும் கூட்டங்களில் பங்கேற்க விடாமல் தடுத்தது பூனைப்படை.

இப்படியான நிலையில், 1988 நவம்பர் 28-ம் தேதி சென்னையில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது காங்கிரஸ் கட்சி. அதை வைத்து சித்து விளையாட்டு ஒன்று அரங்கேறியது. ‘சதிச் செயலை முறியடிப்போம்; மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை அமைப்போம்; அன்னை ஜானகி அவர்களே... புரட்சிச் செல்வி ஜெயலலிதா அவர்களே... ஒன்று சேருங்கள்!’ என்ற வாக்கியங்களோடு சென்னை மாநகர சுவர்களில் பளீர் போஸ்டர்கள் திடீரென மின்னின. காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதற்காக ஜெயலலிதா அணியைச் சேர்ந்த ஹண்டே, டெல்லிக்கும் தமிழகத்துக்கும் பறந்தும் பலன் ஏதுமில்லை. கூட்டணி முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், இந்தப் போஸ்டர் ஐடியாவைக் கொடுத்தார் நடராசன். அதாவது, ‘ஜானகி அணியும் ஜெயலலிதா அணியும் ஒன்றுசேர வேண்டும்’ என்கிற விஷயத்தைக் கிளப்பி, இணைப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினால் காங்கிரஸ் மிரளும் என்பதுதான் நடராசனின் பிளான்.

p38.jpg

அந்தத் திட்டத்தை நோக்கிக் காய்கள் நகர்த்தப்பட்டன. ‘ஜெ’ அணியின் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் ‘ஜா’ அணியின் முத்துசாமியும் ரகசியமாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த நேரத்தில், திருநெல்வேலி டூரில் இருந்தார் ஜெயலலிதா. அங்கே கட்சி நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களை அழைத்து, ‘‘ ‘நீங்களும் ஜானகியும் ஒன்று சேர வேண்டும் என சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறதே...’ என்கிற கேள்வியை ஜெயலலிதாவிடம் எழுப்புங்கள்’’ எனச் சொன்னார்கள். இதற்கு ஏற்பாடு செய்ததே நடராசன்தான். நிருபர்களும் கேள்வி எழுப்ப, ‘‘இணையலாமே’’ என ஜெயலலிதாவும் பதில் சொன்னார். ஒரு கட்டத்தில் ‘இணைப்பு சாத்தியம்’ என்பதுபோல சீரியஸாக இந்த டிராமா போய்க் கொண்டிருந்த நிலையில், நடராசனின் திட்டத்தை ஆர்.எம்.வீரப்பன் மோப்பம் பிடித்தார். ‘‘காங்கிரஸை மிரட்டுவதற்காக ஜெயலலிதா போடும் நாடகம் இது’’ எனக் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் சொன்னார்.

இந்த நாடகத்தை இதற்கு மேலும் வளர்த்தால் சிக்கலாகிவிடும் என நினைத்தார்கள் சசிகலா குடும்பத்தினர். ‘ஜெயலலிதாவைத் தலைவியாகவும் முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றால்தான் இணைப்பு’ என எஸ்.டி.சோமசுந்தரம் அறிக்கை விட்டார். அதோடு திடீரென பொதுக்குழுவைக் கூட்டிய ஜெயலலிதா, ‘‘என் தலைமையில் இருக்கும் கட்சியே வலிமையானது. முதல்வர் வேட்பாளர் நான்தான். என் தலைமையை ஏற்றுக் கொள்கிறவர்களுடன்தான் கூட்டணி.’ என அறிவித்தார். உடனே காங்கிரஸ், ‘‘ஜெயலலிதா அணியுடன் கூட்டணி இல்லை.’ எனச் சொன்னது. அதுவரையில் காங்கிரஸையோ ராஜீவ் காந்தியையோ விமர்சனம் செய்யாமல் இருந்த ஜெயலலிதா, திடீரென ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி கொடுத்தார். ‘‘போஃபர்ஸ் பிரச்னை காங்கிரஸுக்குப் பாதகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தான் குற்றவாளி அல்ல என்பதை ராஜீவ் காந்தியால் நிரூபிக்க முடியவில்லை’’ எனச் சீறினார். காங்கிரஸைக் கூட்டணிக்குப் பணிய வைப்பதற்காக நடராசனால் நடத்தப்பட்ட நாடகத்தை நம்பி கே.கே.எஸ்.எஸ்.ஆர், முத்துசாமி உள்பட பலரும் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

‘காங்கிரஸுடன் கூட்டணி வேண்டும்’ என்பதுதான் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் விருப்பம். அது சாத்தியமில்லாது போனால் ஜானகி - ஜெயலலிதா அணிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என விரும்பினார். இரண்டுமே நடக்கவில்லை. ‘ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை’ என காங்கிரஸ் அறிவித்த அடுத்த நாள், போயஸ் கார்டனில் நடராசனைச் சந்தித்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ‘‘ ‘யாருடனும் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி’ என அம்மா அறிவித்த பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் எனக்கு போன் செய்து, அம்மாவைப் பாராட்டினார்கள். நாம் தனித்துப் போட்டியிடுவதால் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நம்மை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது” என்றெல்லாம் நடராசன் சொல்லிக்கொண்டே போக...  கே.கே.எஸ்.எஸ்.ஆர் சலனமே இல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ‘‘பிரைம் மினிஸ்டர் ஆபீஸில் எனக்கு கான்டாக்ட் உண்டு... என்னிடம் சிதம்பரம் பல முறை பேசியிருக்கிறார்... அம்மாவுக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வரப் போகுது... காங்கிரஸோடு உடன்பாடு ஏற்பட்டாச்சு... டெல்லியில் இருந்து அம்மாவிடம் பேசிட்டாங்க...’’ - இப்படியான நடராசனின் காது குத்தல்களைக் கேட்டுப் பழகிவிட்டதால், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் காதுகள் அப்போது செவிடாகியிருந்தன.

தேர்தல் வேலைகள் வேகமெடுக்க ஆரம்பித்தன. விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. விருப்ப மனுவுக்கு விண்ணப்பக் கட்டணம் 1,000 ரூபாய் என நிர்ணயித்திருந்தார்கள்.  1,500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்தனர். ‘போட்டியிட விரும்புகிறவர்கள் ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கட்ட வேண்டும்’ என நிபந்தனை போட்டார்கள். வேட்பாளர்கள் தேர்வில் நடராசனின் கைதான் ஓங்கியது. ‘‘பூலாவாரி சுகுமாறன் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர், பெரிய கான்ட்ராக்டர்கள் உட்பட  சர்ச்சைக்குரிய பலரும் வேட்பாளர்கள் ஆனதற்குக் காரணம் கரன்சிதான். ஆட்சிமன்றக் குழு அளித்த பட்டியலை ஓரமாக வைத்துவிட்டு நடராசன், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கினார். டெண்டர் முறையில் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. பணம் கொடுத்தவர்களே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றனர்’’ எனக் கட்சியினர் புகார்ப் பட்டியல் வாசித்தார்கள். இன்னொரு பக்கம் பணம் கொடுத்தும் சீட் கிடைக்காத பலர், கூட்டம் கூட்டமாகப் போயஸ் கார்டனுக்குப் படையெடுத்தார்கள். அவர்களைப் பூனைப்படை விரட்டியடித்தது. 

நடராசனின் அத்துமீறல்களால் வேட்பாளர்களை மாற்றச் சொல்லியும் ஆங்காங்கே பிரச்னைகள் கிளம்பின. ஓமலூரில் இருந்து வந்தவர்கள் போயஸ் கார்டனை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேசிய நடராசன், ‘‘ஆனானப்பட்ட நாவலரையே விரட்டிவிட்டேன். சேலம் கண்ணன் யார்? சேலத்துக்கே அவர் என்ன கொம்பனா? திருச்செங்கோட்டுக்கு டிக்கெட் கேட்டார். எதற்குக் கொடுக்க வேண்டும். அவருடைய நண்பர் ராஜாவுக்குக் கொடுத்தேன். திருச்சியில் ஸ்ரீரங்கத்துக்காரன் இறக்கையை வெட்டியாச்சு. மதுரையில் நவநீதகிருஷ்ணனாம். அவரையும் விரட்டியாச்சு. தேர்தலுக்குப் பிறகு பாருங்கள்... யார் யாருக்கு என்ன நடக்கும் எனத் தெரியும்’’ என்று வீராவேச முழக்கம் கொடுத்தார்.

தேனியைச் சேர்ந்த ஸ்ரீதரும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பி.டி.தனகோபாலும் பணம் கொடுத்தும், அவர்களுக்குப் பட்டை நாமம் போட்டார்கள். பணம் திரும்பி வராததால் கட்சி அலுவலகத்துக்கும் போயஸ் கார்டனுக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களால்தான் முதன்முறையாக ஜெயிலுக்குப் போனார் நடராசன். ‘அரசியலில் இருந்து விலகுகிறேன்’ என்கிற அதிரடி முடிவை ஜெயலலிதா அறிவித்ததும் அப்போதுதான்!

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 70 - ஜெயலலிதா ராஜினாமா... ஜெயிலுக்குப் போன நடராசன்!

‘அரசியலில் இருந்து ஜெயலலிதா விலகல். எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்’ - 1989 மார்ச் 19-ம் தேதி காலையில் வெளியான அத்தனை நாளிதழ்களிலும் இதுதான் தலைப்பு செய்தி!

‘‘அமைதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த என்னை, எம்.ஜி.ஆர் அரசியலில் ஈடுபடுத்தினார்.
எம்.ஜி.ஆர் மறைந்த உடனேயே அரசியலைவிட்டு விலகிட விரும்பினேன். ஆனால், என்னைச் சுற்றியிருந்த தலைவர்கள் பலர், என்னைத் தடுத்தனர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் சம்பவங்கள், எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றன. நேர்மை, நாணயம், கண்ணியம் ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தபோதிலும், அரசியலில் ஈடுபட்ட ஒரே காரணத்தினால் இதுவரை வேறு எந்தப் பெண்ணுக்கும் நேர்ந்திராத வகையில் அத்தனை கேவலமான அவமானங்களுக்கும் கீழ்த்தரமான இழிச் சொற்களுக்கும் ஆளாக்கப்பட்டுவிட்டேன். ஏழாண்டு காலப் பொதுவாழ்வில் நான் கண்ட ஒரே லாபம் இதுதான். ஆனால், ‘பரிசுத்தமான முறையில் என்னுடைய அரசியல் வாழ்வை நடத்தியிருக்கிறேன்’ என்று என் மனசாட்சியைத் தொட்டு என்னால் தலைநிமிர்ந்து தைரியமாகக் கூறமுடியும்.

1987 டிசம்பரில் இருந்தே எனது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 1988 முழுவதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெறாமல், ஓய்வும் எடுத்துக்கொள்ளாமல், தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் எனது தேக நிலை மேலும் சீர்கெட்டுவிட்டது. இனிமேல் தீவிர அரசியலில் பணியாற்ற இயலாத அளவுக்கு எனது உடல் ஆரோக்கியம் சீர்கேடு அடைந்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளுக்குரிய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாத நிலையில் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. எனவே அரசியலை விட்டு விலகுகிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எனது இதயமார்ந்த நன்றி.’’ - இப்படிக்கு ஜெயலலிதா

p26a.jpg

ஜெயலலிதாவின் இந்த முடிவுக்குப் பின்னால் அரசியல் முடிச்சுகள் பின்னப்பட்டிருந்தன. 1989 ஜனவரி 21-ம் தேதி. தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடி வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ஜானகி என நான்கு முதல்வர் வேட்பாளர்கள். ஜெயலலிதா, ஜானகி, நாவலர் என அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்து, தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொண்டது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதால் ‘இரட்டைப் புறா’ சின்னத்தில் ஜானகி அணியும் ‘சேவல்’ சின்னத்தில் ஜெயலலிதா அணியும் போட்டியிட்டன. காங்கிரஸும் தி.மு.க-வும் தனித்துக் களமிறங்கின. வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபோது தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா அணிக்கு 27 இடங்களும் ஜானகி அணிக்கு ஒரு தொகுதியும் கிடைத்தன. சட்டமன்ற முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் ஜெயலலிதா. தேர்தல் தோல்விக்குப் பிறகு ‘ஜா’, ‘ஜெ’ அணிகள் இணைந்து, ஒருங்கிணைந்த அ.தி.மு.க.-வுக்குப் பொதுச்செயலாளர் ஆகி, இரட்டை இலையும் கிடைத்துவிட்டது. ஆனாலும் ஜெயலலிதா விரக்தியில் இருந்தார்.

‘ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என நடராசன் சொன்ன நம்பிக்கை பொய்த்துப் போனது. விரக்தியில் ஜெயலலிதா கார்டனைவிட்டு வெளியே வரவில்லை. கட்சி நிதி மற்றும் தேர்தல் வசூல் பஞ்சாயத்துகள், சீட் கேட்டவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டது என எல்லா அழுத்தங்களும் ஜெயலலிதா மீது விழுந்தன. இந்தப் பிரச்னைகளுக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் எனச் சொல்லி, அவர்களை ஜெயலலிதா திட்டித் தீர்த்தார். கோபமடைந்த சசிகலா, கார்டனைவிட்டு கிளம்பி ஊருக்குப் போனார். ஜெயலலிதா தனிமையில் தவித்தார். 1989 மார்ச் 17-ம் தேதி. திடீரென ஒரு முடிவை எடுத்தார். பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் லெட்டர் பேடுகளில் ஜெயலலிதாவின் பேனா, பாய்ச்சல் காட்டுகிறது. அந்தக் கடிதங்களை கவரில் போட்டு உதவியாளர்கள் சுரேஷ், நடராஜன் ஆகியோரை அழைத்து, ‘‘இந்தக் கவரைச் சபாநாயகரிடம் கொடுத்துவிட்டு மற்ற கடிதங்களைப் பத்திரிகை அலுவலகங்களுக்குத் தந்துவிடுங்கள்’’ எனச் சொல்கிறார் ஜெயலலிதா.

p26.jpg

ஆனால், அந்த உதவியாளர்கள் சபாநாயகரிடமும் பத்திரிகை அலுவலகங்களுக்கும் செல்லாமல், ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவுக்குள் நுழைகிறார்கள். அங்கேதான் நடராசனின் வீடு இருக்கிறது. நடராசனிடம் கடிதங்களை அவர்கள் கொடுக்க... வாங்கிப் பார்த்துவிட்டு அவர் அதிர்ச்சி அடைகிறார். ‘‘நீங்கள் கார்டனுக்குப் போக வேண்டாம்’’ எனச் சொல்லி உதவியாளர்களை அனுப்பி வைக்கிறார்.

தூர்தர்ஷன் என்ற ஒரு சேனலும் ரேடியோவும் பத்திரிகைகளும்தான் அன்றைக்கு இருந்த ஊடகங்கள். தூர்தர்ஷனைப் பார்த்த ஜெயலலிதா, தன் அரசியல் விலகல் செய்தி வராததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். மாலை நாளிதழ்களிலும் செய்தி வரவில்லை. ‘ஜெயலலிதா விலகினால் தங்களுக்கு வாழ்வில்லையே’ என நினைத்து பத்திரிகை அலுவலகங்களுக்குப் போக வேண்டிய ஜெயலலிதாவின் அறிக்கையை நடராசன் கைப்பற்றி விட்டதால், பிரேக்கிங் நியூஸுக்கு பிரேக் விழுந்தது. தனக்கு வேண்டப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கு போன் போட்டு, ஜெயலலிதா விசாரித்தபோது ‘‘அறிக்கை வரவில்லை’’ எனப் பதில் வந்தது. கோபம், ஜெயலலிதா உச்சந் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.

வீட்டில் இருந்த பணியாளர்களை எல்லாம் தேடுகிறார். யாருமே அங்கு இல்லை. வேலை பார்த்தவர்கள் அத்தனை பேரும் நடராசனின் ஆட்கள். ‘நியூஸ் வராமல் போனால் ஜெயலலிதா என்ன செய்வார்’ என்பது நடராசனுக்குத் தெரிந்திருந்தது. அதனால் கார்டனைக் காலியாக்கியிருந்தார். வெளியே போவதற்கும் கார் டிரைவர்கூட இல்லை. கார்டனில் இருந்த ஒரே ஒரு பையனிடம் ஜெயலலிதா விசாரிக்க... ‘‘எல்லோரும் சார் (நடராசன்) வீட்டுக்குப் போயிட்டாங்க...” எனச் சொல்கிறான். ‘தன் ராஜினாமா கடிதத்தை மீடியாவுக்குக் கிடைக்கவிடாமல் தடுத்தது நடராசன்’ எனப் புரிகிறது. அந்தப்பையனின் கன்னத்தில் அறைந்து கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு போன் போடச் சொல்கிறார் ஜெயலலிதா. ‘‘உடனே வாருங்கள்’’ என கே.கே.எஸ்.எஸ்.ஆரை அழைத்து, அவர் காரிலேயே நடராசன் வீட்டுக்குப் போனார் ஜெயலலிதா. அங்கே இருவருக்கும் கடும் வாக்குவாதம். ‘‘மை பிராப்பர்ட்டி... கிவ் மி மை லெட்டர்ஸ்... என் கடிதங்களைப் பிடுங்கி வைக்க உனக்கு எந்த ரைட்ஸும் இல்லை’’ என ஜெயலலிதா சீற, ‘‘கடிதங்கள் என்னிடம் இல்லை. சசிகலாவிடம்தான் இருக்கிறது’’ என நடராசன் சமாளிக்கிறார். ‘‘மரியாதையா கொடு. என் கடிதங்களை எடுத்து வைத்துக்கொள்வதற்கு நீ யார்? இதற்கெல்லாம் நீ பதில் சொல்ல வேண்டி வரும்’’ என ஏரியா அதிர கத்துகிறார் ஜெயலலிதா.

p26b.jpg

‘ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர்’ என்பதால், நடராசன் வீட்டை உளவுத்துறை போலீஸ் நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. அப்படி உளவு பார்த்த போலீஸுக்கு அடிக்கிறது ஜாக்பாட். ‘‘மை பிராப்பர்ட்டி’’ என்கிற வார்த்தை மட்டும், காவலர்களுக்குக் காதில் விழ.. தகவலை பிக்பாஸுக்குத் தட்டி விடுகிறார்கள். ‘ஜெயலலிதாவின் பிராப்பர்ட்டி ஏதோ நடராசன் வீட்டில் இருக்கிறது. அது என்ன? அதைக் கைப்பற்றினால் ஏதோ கிடைக்கும்’ எனக் கணக்குப் போடுகிறது, புதிதாக ஆட்சிக்கு வந்த கருணாநிதி அரசு.  

நடராசனின் வீட்டில் சோதனை போட நாள் குறிக்கிறார்கள். அதற்குக் காரணம் வேண்டாமா? ‘தேர்தலில் சீட் தருவதற்காகப் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டு மிரட்டுகிறார்கள்’ எனத் தேனி ஸ்ரீதர் கொடுத்த புகாரைத் தூசி தட்டி எடுத்துக்கொண்டு, நடராசன் வீட்டுக்குள் 1989 மார்ச் 18-ம் தேதி நுழைகிறது போலீஸ். அங்கிருந்து எடுத்த ராஜினாமா கடிதம் சபாநாயகர் தமிழ்க்குடிமகனுக்கும் அறிக்கைகள் மீடியாவுக்கும் போகின்றன. ஜெயலலிதா செய்ய நினைத்த ராஜினாமாவை நடராசன் தடுத்தார். அவர் தடுத்ததை தி.மு.க அரசு நிறைவேற்றியது. வீட்டில் சோதனை போட்ட கையோடு, நடராசனைச் சிறையிலும் அடைக்கிறது போலீஸ்.

(தொடரும்)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்!

 

‘‘நடராசனின் பிடியில் இருந்து தப்பிக்க ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் முயன்றார். ஆனால், ஒவ்வொரு முயற்சிக்குப் பிறகும் நடராசனின் பிடிதான் இறுகியது. செயற்கையான சிக்கலை நடராசன் ஏற்படுத்துவார். ஒவ்வொரு முறையும் ஆபத்துகளைக் காட்டி, அடிமைப் பெண் ஜெயலலிதாவை நிரந்தரக் கைதியாகவே ஆக்கிவிட்டார். இப்படி நடக்கும் போராட்டத்தில் இறுதி வெற்றி நடராசனுக்குதான் கிடைக்கும்.’’ - வலம்புரி ஜானின் இந்த தீர்க்கத் தரிசனம் ஜெயலலிதாவின் அரசியல் விலகலிலும் அரங்கேறியது. அரசியல் விலகல் அறிவிப்பை, அடுத்த 24 மணி நேரத்தில் ஜெயலலிதா வாபஸ் வாங்கினார்.

p20.jpg

ஜெயலலிதாவின் அரசியல் விலகல் அறிக்கையும், எம்.எல்.ஏ ராஜினாமா கடிதமும் நடராசனால் பதுக்கப்பட்ட நிலையில், அவை எப்படி முறையே பத்திரிகை அலுவலகங்களுக்கும் சபாநாயகருக்கும் போய்ச் சேர்ந்தன? அதற்குப் பின்னால் இருக்கிறது ஜேம்ஸ்பாண்ட் கதை! ‘தேர்தலில் சீட் தருவதாகச் சொல்லிப் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்கள்’ என தேனி ஸ்ரீதர் உள்ளிட்டோர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு, நடராசன் வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ். காக்கிகளுக்கு வழக்கு முக்கியமல்ல, நடராசனை வீடு தேடிவந்து ஜெயலலிதா திட்டிவிட்டு ‘‘மை பிராப்பர்ட்டி’’ எனக் கத்தினாரே... அப்படியென்ன ஜெயலலிதாவின் ‘பிராப்பர்ட்டி’ நடராசன் வீட்டில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதுதான் முக்கியம். சர்ச் வாரன்ட்டோடு நடராசனின் ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெரு வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ் படை. வீட்டை சல்லடை போட்டபோதுதான் ஜெயலலிதாவின் அரசியல் விலகல் அறிக்கையும் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதமும் கிடைத்தது. ஜெயலலிதா சொன்ன ‘பிராப்பர்ட்டி’ இதுதான் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறது போலீஸ். ஜெயலலிதாவை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த நினைத்த தி.மு.க-வுக்கு இது முக்கியமான கடிதம். அதை அப்படியே தங்கள் எஜமானர்களான ஆட்சியாளர்கள் கையில் கொடுக்க... ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தமிழ்க்குடிமகன் ரிலீஸ் செய்கிறார். அரசியல் விலகல் அறிக்கைகளை மீடியாவுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். சோதனை நடந்தபோது நடராசனின் நண்பர் சார்லஸ் உடனிருந்தார். வீட்டைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போட்டுவிட்டு, விசாரணைக்காக நடராசனை போலீஸார் கமிஷனர் ஆபீஸ் அழைத்துச் சென்றனர்.

நடராசன் வீட்டில் நடந்த ரெய்டு தகவல் ஜெயலலிதாவுக்குத் தெரியவர... அவர் பதற்றமாகிறார். உடனே, தனது வழக்கறிஞர் கே.சுப்பிரமணியத்துக்கு போன் போட்டார். நடராசன் வீட்டுக்கு சுப்பிரமணியம் போகிறார். அங்கே ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தைப் பார்த்த கே.சுப்பிரமணியம், சார்லஸிடம், ‘‘போலீஸ் கைப்பற்றிய ஆவணங்களை சீசர் மகஜர் (சோதனைப் பட்டியல்) போட்டுத்தான் போலீஸ் எடுத்துப் போக அனுமதிக்க வேண்டும்’’ என சொன்னார். அதன்படி சார்லஸும் சொல்ல... போலீஸும் சீசர் மகஜர் போட்டுத் தருகிறது. அந்த சீசர் மகஜரில் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதமும் இடம்பெற்றுவிடுகிறது. 

p20b.jpg

இதற்கிடையே ஜெயலலிதாவின் அரசியல் விலகல் அறிக்கையும் ராஜினாமா கடிதமும் மீடியாவில் வெளியாகிறது. உடனே எஸ்.டி.சோமசுந்தரம், ஜெயலலிதாவின் அரசியல் விலகலை மறுத்தார். ‘‘சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா தனது போடிநாயக்கனூர் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என கடிதத்தை அனுப்பியிருக்கிறார்’’ என அன்றைய சபாநாயகர் தமிழ்க்குடிமகன், பத்திரிகையாளர்களிடம் சொன்னார். ‘‘ஜெயலலிதா நேரில் வந்து விலகல் கடிதத்தைக் கொடுத்தாரா?’’ என நிருபர்கள் கேட்டபோது, ‘‘ஒரு நபர் வசம் அந்தக் கடிதத்தை கொடுத்தனுப்பினார்’’ என்றார் தமிழ்க்குடிமகன்.

ஜெயலலிதா ராஜினாமா கடிதத்தின் மீது சம்பிரதாயப்படி நடவடிக்கை எடுப்பதற்காக, அந்தக் கடிதத்தை சட்டசபை செயலாளர் சி.கே.ராமசாமிக்கு அனுப்பி வைத்திருந்தார் தமிழ்க்குடிமகன். ‘‘எம்.எல்.ஏ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்தால், அந்தக் கடிதம் அவரது கைப்பட எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி எழுதப்பட்ட கடிதம் இது. மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கையை சட்டப்படியும் மரபுபடியும் சட்டசபை செயலாளர் சி.கே.ராமசாமி மேற்கொள்வார்’’ என்றார்.

(தொடரும்)


‘‘சீசர் மகஜர் போடாமல் போயிருந்தால்’’

டராசன் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது என்னதான் நடந்தது? அன்றைய நேரடி சாட்சியான கே.சுப்பிரமணியத்திடம் பேசினோம். ‘‘ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் ரோட்டில்தான் என் வீடு இருக்கிறது. ஜெயலலிதா போனில் பேசியதும், பக்கத்திலேயே இருந்த பீமண்ண கார்டன் தெருவுக்கு உடனே வந்துவிட்டேன். நடராசன் வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. வழக்கறிஞர் என்பதால் என்னை உள்ளே அனுமதித்தார்கள். சார்லஸிடம் விசாரித்தபோது, ‘சோதனைப் போட்டு இந்தப் பேடுகளை மட்டும் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள்’ என்றார். அதை எடுத்துப் பார்த்தேன். பேடில் சபாநாயகருக்கு ஜெயலலிதா எழுதிய ராஜினாமா கடிதமும், அரசியல் விலகல் அறிக்கையும் இருந்தன.

p20a.jpg

சார்லஸுக்கு சட்டம் தெரியாது. அதனால் அவரிடம், ‘சீசர் மகஜர் போடாமல் டாக்குமென்ட் எதையும் கொடுத்துவிடாதீர்கள். இந்தப் பேடில் இருக்கிற ஆவணங்கள் சீசர் மகஜரில் நிச்சயம் இடம்பெற வேண்டும். அப்படியில்லாமல் ஆவணங்களை எடுத்துப் போக அனுமதிக்காதீர்கள்’ எனச் சொல்லிவிட்டு ஜெயலலிதாவைப் பார்க்க போனேன்.

விசாரணைக்கு அழைத்துப் போன நடராசனை வீட்டுக்கு அழைத்து வந்தது போலீஸ். அப்போது நடராசனிடம் நான் வந்து போன விஷயத்தை சார்லஸ் சொல்ல... நடராசனும் ‘சீசர் மகஜர் போடாமல் நான் கைதாக மாட்டேன்’ என முரண்டுப் பிடித்தார். அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதாவின் ராஜினாமாக் கடித விவரம் தெரியாது. அவரும் சீசர் மகஜரை ரெடி செய்து தந்துவிட்டார். உடனே அது சார்லஸ் மூலமாக எனக்குக் கிடைத்தது. சீசர் மகஜர் போட்டது அன்றைய முதல்வர் கலைஞருக்கும் தெரியாது. அவர் தன்னிடம் தகவல் சொல்ல வந்த போலீஸ் உயர் அதிகாரியிடம், ‘கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துவிடுங்கள்’ என்றார். உயர் போலீஸ் அதிகாரி கருணாநிதி வீட்டுக்குப் போன நேரத்தில்தான், நான் நடராசன் வீட்டுக்குப் போனேன். சீசர் மகஜர் போட்ட விஷயம் அந்த உயர் அதிகாரிக்கும் தெரியாது. தமிழ்க்குடிமகனிடம் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை உயர் போலீஸ் அதிகாரி கொடுத்துவிடுகிறார். அதன்பிறகுதான் அது பத்திரிகைகளில் செய்தியாகிறது.
 
ஜெயலலிதாவை சந்தித்தபோது ‘ராஜினாமா கடிதம் எழுதினீர்களா?’ என கேட்டேன். ‘ஆமாம்’ என்றார். ‘அதை எடுக்கத்தான் போலீஸ், நடராசன் வீட்டுக்கு வந்திருக்கிறது’ என்று அவரிடம் சொன்னேன். சீசர் மகஜர் போடாமல் போயிருந்தால் ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தை நடராசன் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றதற்கு ஆதாரமே இல்லாமல் போயிருக்கும். சபாநாயகர் அறிவித்தது சட்டப்படி செல்லுபடி ஆகியிருக்கும். நீதிமன்றத்துக்குப் போக வேண்டிய டாக்குமென்ட்டை சபாநாயகரிடம் போலீஸ் கொடுத்ததுதான் தப்பாகிவிட்டது. அன்றைக்கு நான் தலையிடாமல் போயிருந்தால் தலையெழுத்தே மாறியிருக்கும். ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகியிருப்பார். அவருடைய எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ பதவிகள் பறி போயிருக்கும். தமிழக அரசியலில் இந்த சம்பவம் முக்கியமான திருப்பம். அதன்பின் ஜெயலலிதா மீண்டும் அரசியலுக்குத் திரும்பினார். இல்லையென்றால் அரசியலைவிட்டு போகும் நிலையில்தான் ஜெயலலிதா இருந்தார்’’ என்றார் கே.சுப்பிரமணியம்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 72 - நடராசன் கைதும் ஜெயலலிதா பல்டியும்!

 

 

ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் நடராசன் வீட்டிலிருந்து கைப்பற்றியபிறகு, ஜெயலலிதாவின் ஆலோசகர் நடராசனை 1989 மார்ச் 18-ம் தேதி சனிக்கிழமை அன்று சிறையில் அடைத்தது போலீஸ்.

‘அரசியலிலிருந்து விலகுகிறேன்’ என ஜெயலலிதா முடிவெடுக்க முக்கியக் காரணமே, கட்சியின் பண விவகாரம்தான். ‘நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டார்கள்’ என்ற நெருக்கடிதான், ராஜினாமா முடிவை நோக்கி ஜெயலலிதாவைத் தள்ளியது. ஜானகி, ஜெயலலிதா அணிகள் இணைந்த பிறகு, ‘‘கட்சிக்கு நிறைய பணமும் நிதியும் கிடைக்கும்’’ என சீனியர்கள் சிலர், ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். ஆனால், அப்படி எந்த நிதியும் வரவில்லை. பொருளாதார நெருக்கடி யோடு சீட் கேட்டவர்களிடமிருந்து வாங்கிய டெபாசிட் தொகையைத் திருப்பித் தர முடியாத அழுத்தமும் சேர்ந்துகொண்டது. சீட்டுக்காகப் பணத்தைக் கொடுத்த பலர், போலீஸில் புகார் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இப்படியான காலகட்டத்தில்தான் ‘அரசியல் விலகல்’ முடிவை எடுத்தார் ஜெயலலிதா.

கட்சியின் பண விவகாரம்தான் நடராசன் கைதுக்கு அடிப்படைக் காரணம். ‘அ.தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.தனகோபாலைத் துப்பாக்கி யைக் காட்டிக் கொலை செய்துவிடுவதாக நடராசன் மிரட்டினார்’ என்பதுதான் புகார். ஜாமீனில் வெளியில் வர முடியாத சட்டப் பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது. நடராசனின் உதவியாளர் சேகரையும் அதே வழக்குப் பிரிவுகளில் கைது செய்தார்கள்.

p26a.jpg

பி.டி.தனகோபால் கொடுத்த புகார்தான் என்ன? ‘‘சட்டசபைத் தேர்தலில் (1989) சேலம் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்குக் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தேன். ‘போட்டியிட விரும்புகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும்’ என நடராசனும் மற்ற சிலரும் சொன்னார்கள். ‘சீட் கிடைத்ததும், அந்தப் பணம் திருப்பித் தரப்படும்’ என உறுதியளித்தார்கள். அதன்படி கடந்த ஆண்டு (1988) டிசம்பர் 20-ம் தேதி 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அதற்கான ரசீதும் கொடுத்தனர். என்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்காததால் பணத்தைத் திருப்பித் தரும்படிக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எஸ்.டி.சோமசுந்தரத்திடம் கேட்டேன். ‘இதுபற்றி நடராசனிடம்தான் கேட்க வேண்டும்’ என அவர் சொன்னார். 1989 மார்ச் 1-ம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா வீட்டுக்குச் சென்றேன். சேகர் உட்பட நடராசனின் உதவியாளர்கள் என்னை நடராசனிடம் அழைத்துச் சென்றார்கள். உடனே அறைக் கதவுகளை நடராசன் மூடச் சொன்னார். அவர் பாக்கெட்டில் இருந்து கைத் துப்பாக்கியை எடுத்து என்னைச் சுட்டுவிடுவதாக மிரட்டினார். என் பாக்கெட்டில் இருந்த ரசீதையும் பிடுங்கிக் கொண்டார். உயிருக்குப் பயந்து அறையைவிட்டு நான் வெளியே ஓடி வந்துவிட்டேன்.’’

இந்தப் புகாரை பி.டி.தனகோபால் கொடுத்து பல நாள்கள் ஆகிவிட்டன. கிடப்பில் போட்டிருந்த இந்தப் புகாரைத்தான், நடராசன் வீட்டில் சோதனை போடுவதற்காகப் பயன்படுத்தினார்கள். இதுபற்றி அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த துரையிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ‘‘கட்சியின் தலைவர்களிடம் பி.டி.தனகோபால் இதுபற்றிப் பேசி எந்தப் பலனும் ஏற்படாததால்தான் கடைசியாக போலீஸில் அவர் புகார் செய்தார். அதன்பேரில்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’’ என்றார்.    

நடராசன் சிறைக்குப் போனதுமே ‘அரசியலில் இருந்தும் விலகவில்லை.

எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யவில்லை’ என ஜெயலலிதா பல்டி அடித்தார். நடராசன் கைதுக்கு அடுத்த நாளே அதிரடியாக அறிக்கை விட்டார். அப்போதெல்லாம் ஜெயலலிதாவின் அறிக்கைகள் ஃபேக்ஸ் அல்லது மெசஞ்சர் மூலம்தான் பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். வரலாற்று(!) முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை 1989 மார்ச் 19-ம் தேதி நிருபர்களை அழைத்து தனது போயஸ் கார்டன் வீட்டில் அவர் வெளியிட்டதுதான் ஆச்சர்யம்.

 ‘‘எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகிவிடுவதாக எவ்விதமான கடிதத்தையும் சபாநாயகருக்கு நான் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, உதவியாளர் மூலமாகவோ அனுப்பவில்லை. ‘அரசியலிலிருந்து ஓய்வுபெறப் போகிறேன்’ என எந்த அறிக்கையையும் செய்தித்தாள்களுக்கு அனுப்பவில்லை. என்னுடைய உடல்நிலை 1987-ம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ளும் எண்ணத்தில், இம்மாதம் (மார்ச்) 15-ம் தேதி ஓர் அறிக்கையும் சபாநாயகருக்கு ஒரு கடிதமும் தயாரித்தேன். இவை இரண்டையும் என்னுடைய குடும்ப நண்பர் நடராசனிடம் கொடுத்திருந்தேன். ஆனால், கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘இந்தக் கடிதத்தையும் அறிக்கையையும் சபாநாயகருக்கு அனுப்பவோ, செய்தித்தாளில் வெளியிடவோ வேண்டாம்’ என்று நடராசனிடம் தெரிவித்து விட்டேன். இவை யாவும் 15-ம் தேதியே முடிந்துவிட்டன. ஆனால் 18-ம் தேதியன்று நடராசன்மீது போலீஸார் பல பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர் வீட்டில் திடீர் சோதனையிட்டு, அந்த வழக்குக்குத் தொடர்பில்லாத பல ஆவணங்களைச் சட்ட விரோதமாக எடுத்துச் சென்றனர். அப்படி எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களில் 15-ம் தேதியிட்ட கடிதமும் அறிக்கையும் அடங்கும்.

p26.jpg

நடராசன் வீட்டிலிருந்து இவற்றை எடுத்துச் சென்றதற்கு போலீஸார் எழுத்துமூலமாக ஒப்புதல் ரசீது (சீசர் மகஜர்) கொடுத்துள்ளனர். அ.தி.மு.க-வின் வளர்ச்சியை மறைத்திடவும், என்னைத் தனிமைப்படுத்தி அழித்திடும் தீய நோக்கத்தோடும் போலீஸாரைக் கருணாநிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இந்தக் கடிதங்களைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளார். நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதை விளக்கி, சபாநாயகருக்குக் கடிதம் அனுப்புவேன்’’ என அறிக்கையில் விரிவாகச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

நடராசன் வீட்டில் சோதனை போட்டதற்காக போலீஸ் கொடுத்திருந்த சீசர் மகஜரின் நகலையும் நிருபர்களிடம் ஜெயலலிதா கொடுத்தார். அப்போது அவர் சோர்வுடன்தான் இருந்தார். ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லாததால் மேலும் கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம்’’ என்றார் ஜெயலலிதா. வீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தார்கள். அவர்களிடம், ‘‘நான் ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான செய்தியை நம்ப வேண்டாம். அமைதியாகக் கலைந்து செல்லுங்கள்’’ எனச் சொல்லிவிட்டு மாடிக்குக் கிளம்பினார்.

ராஜினாமா செய்தி வெளியானதும் போயஸ் கார்டனுக்குச் சென்ற எஸ்.டி.சோமசுந்தரம், திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் ஜெயலலிதாவிடம், ‘‘ராஜினாமா முடிவை வாபஸ் பெறுங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ‘‘ராஜினாமா செய்தது செய்ததுதான்!’’ என முதலில் அடித்துச்சொன்ன ஜெயலலிதாவை, பெரும் போராட்டத்துக்குப் பிறகே வாபஸ் வாங்க வைத்தார்கள். கடைசியில் ஒரு அறிக்கை ரெடி செய்து கொடுத்தார் ஜெயலலிதா. ‘‘இதை நீங்களே நிருபர்களிடம் கொடுத்தால்தான் நம்புவார்கள்’’ எனத் தலைவர்கள் கெஞ்சியபிறகுதான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அறிக்கைகளைக் கொடுத்தார்.

இதற்கு சசிகலாவும் ஒருவகையில் காரணம். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நடராசன் பறித்து வைத்துக்கொண்டார் எனத் தெரிந்து, ஆத்திரத்தில் அவர் வீட்டுக்குப் போய் சண்டை போட்டார் ஜெயலலிதா. ‘‘சசிகலாவிடம்தான் அவை இருக்கின்றன. அவள் கூத்தாநல்லூர் போயிருக்கிறாள்’’ என அந்த நேரத்தில் பொய் சொல்லிச் சமாளித்தார் நடராசன். உடனே சசிகலாவை ஜெயலலிதா தொடர்புகொண்டபோது ‘‘நான் எடுத்து வரவில்லை’’ எனச் சொல்லியிருக்கிறார். நடராசன் பொய் சொன்ன விஷயம் தெரிந்ததும் ஜெயலலிதா வுக்குக் கோபம் அதிகமானது. உடனே சசிகலாவைப் புறப்பட்டு வரச் சொன்னார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் கோபித்துக்கொண்டு ஊருக்குப் போன சசிகலா, கார்டன் திரும்பியபிறகுதான் ஜெயலலிதாவின் ‘அரசியலிலிருந்து விலகவில்லை. எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யவில்லை’ என்கிற அறிக்கை வெளியானது.

சசிகலாவிடம் ஜெயலலிதா சரணாகதி ஆவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது!

(தொடரும்...)

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 73 - ‘தனக்குத் தெரியாமலேயே...’ - ஜெயலலிதா ராஜினாமா ரகசியம்

 

ஜெயலலிதாவின் அரசியல் விலகலும் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவும் அ.தி.மு.க-வுக்குள் சலசலப்பை உண்டாக்கிய அதே நேரத்தில், ஆளும் தி.மு.க மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதா, நடராசன், பண மோசடி, சிறை, கட்சிக்குள் கொந்தளிப்பு என விவகாரம் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.

‘‘யாரையும் முறைகேடாக எம்.எல்.ஏ பதவியிலிருந்து துரத்த வேண்டும் என்ற மனப்பான்மை எனக்குக் கிடையாது’’ என அன்றைய முதல்வர் கருணாநிதி விளக்கம் கொடுத்தார். ‘‘யார் யார் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள் என்று பார்த்து, அவர்களின் கடிதங்களைக் கொண்டுப் போய் சபாநாயகரிடம் கொடுக்க வேண்டிய வேலை என்னுடையது கிடையாது. அது அவர்கள் கட்சிக்குள்ளேயே நடக்கிற தகராறு. அந்த அம்மாவே, தன் கைப்பட ராஜினாமா கடிதமும் அறிக்கையும் எழுதியது உண்மை என ஒப்புக்கொண்டிருக்கிறார். அரசியல் சட்டப்படி ஜெயலலிதாவிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டிருக்கிறார். மொழிப்போரில் ஈடுபட்டதற்காக ஒன்பது தி.மு.கழக எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறித்தார்களே... அதுபோன்ற மனப்பான்மை எனக்கு  இருந்ததில்லை’’ எனப் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருணாநிதி, முக்கியமான ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டார்.

p38a.jpg

‘‘இப்படி பதவி விலகல் கடிதத்தையும் அரசியலிலிருந்து விலகுகிறேன் என அறிக்கையும் எழுதுகிற சூழ்நிலை 15-ம் தேதியன்று ஏன் ஏற்பட்டது என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்’’ என்றார். அந்த 15-ம் தேதி என்ன நடந்தது? அதற்கு முந்தைய தினங்களில்தான் கட்சிப் பண விவகாரத்தில் சசிகலா குடும்பத்தினருடன் ஜெயலலிதா சண்டை போட்டதாகவும், அதனால் சசிகலா கோபித்துக் கொண்டு தஞ்சாவூர் கிளம்பிப் போனதாகவும் அப்போது பேச்சுகள் கிளம்பின. அதனால்தான் ‘அரசியல் விலகல்’ முடிவை ஜெயலலிதா எடுத்திருந்தார்.

‘‘நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதை விளக்கி, சபாநாயகருக்குக் கடிதம் அனுப்புவேன்’’ என ஜெயலலிதா சொல்லியிருந்தாலும், அந்த ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டால் என்னாவது? ஜெயலலிதாவைவிட அதிகம் கவலைப்பட்டது சசிகலா குடும்பம்தான். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி வரையில் இந்தப் பிரச்னையைக் கொண்டு போனார்கள். ‘சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்காக சதி நடைபெறுகிறது’ என ராஜீவ் காந்திக்குத் தந்தி அடித்தார் ஜெயலலிதா. தந்தியின் நகலை ஜனாதிபதிக்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கும் தமிழக கவர்னருக்கும் அனுப்பினார்கள். ஜெயலலிதா அனுப்பிய தந்தியின் வாசகத்தைப் படித்தாலே சிரிப்பு வரும்.

‘எம்.எல்.ஏ பதவியிலிருந்து விலகுவதாக எனக்குத் தெரியாமலேயே (!) சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செய்தித்தாள்கள் மூலம்தான் இந்த விஷயமே எனக்குத் தெரியும். நடராசன் வீட்டில் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட கடிதங்களை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டுமே தவிர, சபாநாயகரிடம் தருவதற்கு போலீஸுக்கு சட்டப்படி அதிகாரமில்லை’ எனத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார். ‘தனக்குத் தெரியா மலேயே’ என்கிற வார்த்தைப்பதத்தை உருவாக்கியதே சசிகலா குடும்பம்தான். இப்படித்தான் ‘தனக்குத் தெரியாமலே 2007 ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் ஓட்டுப் போட சென்றுவிட்டார்கள்’ என்றார் ஜெயலலிதா. 2011 சட்டசபைத் தேர்தலில் ‘தனக்குத் தெரியாமலேயே வேட்பாளர் பட்டியல் வெளியானது’ என அறிவித்தார் ஜெயலலிதா. இப்படி ‘தனக்குத் தெரியாமலேயே’ என்கிற டயலாக்கை எழுதிக் கொடுத்து அதை ஜெயலலிதா வாயாலேயே கடைசிக் காலம் வரையில் சொல்லவைத்துக் கொண்டிருந்தது சசிகலா குடும்பம்.

p38.jpg

ராஜீவ் காந்திக்குத் தந்தி அனுப்பிய கையோடு, ‘எம்.எல்.ஏ பதவியில் நீடிக்கிறேன்’ என சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா. ‘சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட விரும்புவதாக நான் நேரிலோ, உதவியாளர் மூலமோ, அஞ்சல் மூலமாகவோ கடிதம் எதுவும் அனுப்பவில்லை. நான் ராஜினாமா செய்திருப்பதாக பத்திரிகைகளில் வந்த செய்தி முற்றிலும் தவறானது’ என அதில் குறிப்பிட்டிருந்தார். பதிலுக்கு, ‘தனது சொந்த விருப்பத்தின்பேரில்தான் கடிதம் அனுப்பினாரா’ என ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தமிழ்குடிமகன் கடிதம் அனுப்பினார்.

நடராசன் கைதுக்குப் பிறகு அரசின் நடவடிக்கைகள் வேகமெடுக்க ஆரம்பித்தன. அ.தி.மு.க-வின் கட்சிப் பணத்தை முடக்க நடவடிக்கை எடுத்தது போலீஸ். ‘சட்டசபைத் தேர்தலில் (1989) அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பியவர்கள் சார்பில் குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அப்படி டெபாசிட் செய்தும் சீட் கிடைக்காதவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவில்லை எனத் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஜெயலலிதா பெயரில் இருக்கும் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும்’ என வங்கி அதிகாரிகளை போலீஸ் கேட்டுக் கொண்டது. அதன்பிறகு புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. தேனியைச் சேர்ந்த ஸ்ரீதர், ‘நகை, சொத்து ஆகியவற்றை விற்று சுமார் எட்டு லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தைத் திருப்பி தரவில்லை’ என மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

இதற்கிடையே, நடராசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக போலீஸ் அளித்த சீசர் மகஜர் பிரச்னையை உண்டாக்கியது. ‘‘எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அடங்கிய சீல் வைத்த உறையை போலீஸார் பிரித்துப் பார்த்திருக்கிறார்கள்’’ என அன்றைய அ.தி.மு.க பொருளாளர் எஸ்.மாதவன் அதிரடி கிளப்பினார். அவர் அப்படிச் சொன்னதில் ஓரளவுக்கு உண்மை உண்டு. ஜெயலலிதாவின் அறிக்கை, சபாநாயகருக்கு அவர் எழுதிய கடிதம் அடங்கிய சீல் வைத்த உறை ஆகியவை பற்றி சீசர் மகஜரில் 6 மற்றும் 7-வது பத்திகளில் போலீஸார் எழுதியிருக்கிறார்கள். 6-வது பத்தியில், ‘நீல நிற பேடில் 15.3.89 தேதியிட்ட அறிக்கைகள் 10’ எனக் கூறப்பட்டிருந்தது. ‘சபாநாயகருக்கு விலாசம் இடப்பட்ட கவரைப் பிரித்துப் பார்த்ததில், ‘ஜெ.ஜெயலலிதா எம்.எல்.ஏ தேதி 15.3.89’ என்ற கடிதம் இருந்தது’ என 7-வது பத்தியில் போலீஸாரே எழுதியிருந்தார்கள். இதில் பிரச்னையே, சீல் வைத்த கவரை போலீஸாரே பிரித்தனர் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததுதான்.

p38b.jpg

ஆனாலும், ‘‘எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக ஜெயலலிதா எழுதிய கடிதத்தைப் பத்திரிகைகளுக்கு போலீஸார்தான் கொடுத்தார்கள் என அ.தி.மு.க தலைவர்கள் சொல்வது உண்மையல்ல. ஜெயலலிதா எழுதிய இரண்டு ஆவணங்களின் போட்டோ நகல்கள் நடராசன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது உண்மைதான். ஆனால், அவற்றின் உண்மையான பிரதிகள் எங்கே இருக்கின்றன என்று எங்களுக்குத் தெரியாது’’ என போலீஸ் கமிஷனர் துரை சொன்னது முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. 

 சீல் வைத்த கவரை போலீஸ் பிரிப்பதற்கு முன்பு நடராசன் பிரித்து படித்திருந்தார் என்பது எடுபடாமல் போனது. நடராசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மற்ற பொருள்கள் பற்றியும் சீசர் மகஜரில் குறிப்பிட்டிருந்தார்கள். கோட்டையில் உள்ள சிண்டிகேட் வங்கியில் நடராசன் பெயரில் வழங்கப்பட்ட பாஸ் புத்தகம். அ.தி.மு.க தேர்தல் டெபாசிட் பணம் சம்பந்தமாக 10 தாள்களில் எழுதப்பட்ட விவரம். நடராசன் பெயரில் இருந்த பாஸ்போர்ட்... இவை அனைத்தும் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக அந்த சீசர் மகஜரில் எழுதப்பட்டிருந்தது.

(தொடரும்...)

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 74 - “நடராசன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர்!”

 

 

எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் மீடியாவுக்குக் கிடைக்க விடாமல், தடுத்துப் பறித்துக் கொண்ட நடராசனை, வீடேறிப் போய் திட்டித் தீர்த்த ஜெயலலிதாவின் கோபம் 24 மணி நேரம்கூட நீடிக்கவில்லை. அதற்குள் ஜெயலலிதா ‘அணி’ தாவினார். சசிகலா அவரை ‘தடம்’ மாற்றினார்.

‘‘நடராசன் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர். அவர் ராஜினாமா கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதி இந்த அளவுக்குக் கீழே இறங்கிச் செயல்படுவார் என்று நடராசனோ, நானோ எதிர்பார்க்கவில்லை’’ என நடராசன் மீதான கோபத்தைக் கருணாநிதி மீது மடைமாற்றினார் ஜெயலலிதா. நடராசன் மட்டும் சும்மா இருப்பாரா? ‘‘தனது ராஜினாமா பற்றிய கடிதத்தையும் அறிக்கையையும் என்னிடம் கொடுத்த பிறகு, டெலிபோன் மூலம் என்னுடன் தொடர்புகொண்டு அவற்றைக் கிழித்துப் போட்டுவிடும்படி ஜெயலலிதா கூறினார். ஆனால், அவற்றை ஜெயலலிதா மற்றும் என் மனைவி சசிகலா ஆகியோர் முன்னிலையில்தான் கிழித்துப் போட வேண்டும் என விரும்பினேன். அதனால்தான் அவற்றைப் பத்திரமாக வைத்திருந்தேன்’’ எனப் பொழிப்புரை சொன்னார் நடராசன்.

p38.jpg

இதுமட்டுமா சொன்னார். ‘‘என்னைக் கைது செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக் கொண்டு சென்றனர். அங்கு ஜெயலலிதா ராஜினாமா கடிதம் மற்றும் அரசியல் விலகல் அறிக்கை விவரங்களை வெளியிட்டால் எனக்குத் தகுந்த சன்மானம் தருவதாகவும், என்னை மீண்டும் அரசு வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தை காட்டினார்கள். என்னை மிரட்டி வெள்ளைத்தாளில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டனர்” என்றெல்லாம் கதை விட்டார் நடராசன். ஜெயலலிதாவின் கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் நடராசன் வீட்டில் போலீஸ் கைப்பற்றிவிட்ட பிறகு, நடராசனிடம் போலீஸ் ஏன் கெஞ்ச வேண்டும். அரசியலுக்காக நடராசன் அடித்த ஸ்டன்ட்டுகளில் இது அப்பர் டைவ்.
ஜெயலலிதாவும் நடராசனும் போட்ட நாடகத்தைப் பார்த்து, அன்றைக்கு அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த  ஆலடி அருணா அடித்த கமென்ட் இது. ‘‘ஜெயலலிதா எதிலும் சுயமாக முடிவெடுக்க முடியாதவர். ராஜினாமா கடிதம் எழுதியது உண்மை. ஆனால், அதை அனுப்பி வைக்கவில்லை என்று வெட்கமின்றி வாதிடுகிறார். ‘கடிதத்தை அனுப்பி வைக்கவில்லை’ என இப்போது மறுக்கிறாரே... இதுதான் கட்சிக்காரர்களின் நிர்பந்தத்தால், ஒப்பாரியால் புரிந்திடும் செயல்! உண்மையில் அவராக மனம் மாறியிருந்தால் அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டிருக்க வேண்டும் அல்லது நடராசனிடம் இருந்து திரும்பி வாங்கியிருக்க வேண்டும்.’’ என்றார். அன்றைய முதல்வர் கருணாநிதியும் தன் பாணியில் பதிலடி கொடுத்தார். ‘‘சிட்பண்ட் நடத்துகிறார்கள். பத்துப் பேரிடம் பணம் வாங்குகிறார்கள். தர வேண்டிய பணத்தை ஒழுங்காகத் தராவிட்டால், ஏமாந்தவன் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதா, இல்லையா?’’ எனக் கேட்டார்.

அரசியல் சண்டைகள் இருக்கட்டும். நடராசன் கைதுக்கு வருவோம். நடராசனைக் கைது செய்து, அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை 11-வது பெருநகர மாஜிஸ்திரேட் ராமசந்திர ராவ் முன்பு ஆஜர்படுத்தியது போலீஸ். ‘‘இந்தக் கைதில் உள்நோக்கம் உள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் மறுக்கப்பட்டால் போலீஸ் காவல் தரக் கூடாது’’ என நடராசனின் வழக்கறிஞர்கள் கே.சுப்பிரமணியம், பட்டாபிராமன், என்.டி.வானமாமலை ஆகியோர் வாதிட்டார்கள். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், ‘‘இந்த வழக்கில் ஐந்து பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நடராசனிடமும் அவரின் உதவியாளர் சேகரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள் தரும் தகவலை வைத்து மேலும் மூன்று பேரைக் கைது செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் போலீஸ் காவலுக்கு அனுமதி வேண்டும்’’ என்றார்.

‘‘குடல் புண் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடராசன், சிகிச்சை பெற வேண்டும். அதனால் அவரை ஜாமீனில் விட வேண்டும்’’ என வானமாமலை வற்புறுத்தினார். விசாரணையைத் தள்ளி வைத்த மாஜிஸ்திரேட், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் நடராசனைப் பரிசோதனை செய்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டார். மருத்துவமனை சிறப்பு வார்டில் நடராசன் தங்கி சிகிச்சை பெற வசதி செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார். ‘‘குடல்புண் நோய்க்குச் சிகிச்சை பெற்று வருகிறேன். அதனால்தான் அரசு வேலையை ராஜினாமா செய்தேன்’’ என மாஜிஸ்திரேட்டிடம் சொன்னார் நடராசன்.

இப்படி கோர்ட் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திருநாவுக்கரசர், எஸ்.டி.சோமசுந்தரம், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் நடராசனுக்கு ஆதரவாக வந்திருந்தார்கள். இந்த மூன்று பேருமே நடராசனை, அதற்கு சில காலம் முன்பு வரையில் திட்டியவர்கள். என்ன மாயமோ... என்ன மந்திரமோ..!

(தொடரும்...)
படம்: சு.குமரேசன்


நடராசன் கைதும் ரியாக்‌ஷனும்!

நடராசன் கைது செய்யப்பட்டபோது அன்றைய அரசியல் தலைகள் சொன்ன கருத்துகளின் ரீவைண்ட் இங்கே...

‘‘ராஜினாமா கடிதத்தை நடராசன் கிழித்துப் போடுவது சரியல்ல; ஜெயலலிதாதான் கிழிக்க வேண்டும். எனவே, அவரிடமே கொடுத்துவிடலாம் என்றுதான் பத்திரமாக நடராசன் வைத்திருந்தார். அதற்குள் போலீஸ் கைப்பற்றிவிட்டது.’’  - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

‘‘ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பதவி விலக முடிவு செய்தது உண்மை. ‘நான் இல்லாவிட்டால்கூட மற்றவர்களால் அ.தி.மு.க-வை வழிநடத்திச் செல்ல முடியும்’ என ஜெயலலிதா நம்பி, விலக விருப்பம் தெரிவித்திருக்கலாம்.’’ - முத்துசாமி

‘‘கே.கே.எஸ்.எஸ்.ஆர். எங்களிடம், ‘அந்த அம்மா கோவமா இருக்காங்க. ராஜினாமா செய்யப்போவதாகச் சொல்கிறார்கள்’ என்றார். உடனே நாங்கள் அவரைச் சந்தித்துப் பேசிய பிறகு ராஜினாமா முடிவை வாபஸ் வாங்கிக் கொண்டார். ஆனால், கடிதம் எழுதிய விவரம் எங்களுக்குத் தெரியாது.’’ - மாதவன்

‘‘ ‘எங்கேயோ, என்னமோ நடக்கிறது. பெல்ட்டால் அடித்துக் கொள்கிறார்கள். செருப்பால் அடிக்கிறார்கள். நமக்கென்ன வந்தது?’ என்று நாம் சாதாரண பொறுப்பிலே இருந்தால் சொல்லி விடலாம். கட்சி வைத்திருக்கிறோம்... கேட்கக் கூடாது என்றால் கட்சி வைத்திருப்பது ஏமாற்றுவதற்காகவா? ஏராளமான பணத்தைக் கட்சியினருக்குத் திருப்பித் தரவில்லை. போலீஸ் நடவடிக்கை எடுத்தால் ஏன் எரிச்சலடைகிறார்கள்?’’ - கருணாநிதி

‘‘இந்தக் கொடுமைகளைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. சிறைக் கொடுமைகளைச் சந்தித்து, எனது உயிரையே தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேன்.’’ - ஜெயலலிதா

‘‘தேர்தலில் நிதியாகவும், நன்கொடையாகவும் வாங்கப்பட்ட மொத்தத் தொகை 3 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய். இதில் 3 கோடியே 28 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது. மீதி இருப்பது 13 லட்சம் ரூபாய்தான். இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும், திருப்பிக் கொடுத்து வருகிறோம்.’’  - திருநாவுக்கரசர்

‘‘போட்டியிட விரும்பியவர்களிடம் மூன்றரை கோடி ரூபாய்வரை வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் திருப்பித் தரப்படவில்லை. செலவு செய்யப்பட்டுவிட்டது. பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிய ஜெயலலிதாவுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து மூன்றரை கோடி ரூபாய் வந்தது?’’ - ஆலடி அருணா

‘‘தமிழ்நாடு முழுவதிலும் எத்தனையோ பேரிடம் கொடுக்கல், வாங்கல் நடக்கிறது. இந்த சிவில் தகராறுகள் பற்றிப் புகார் கொடுத்தால் கமிஷனர் துரை உடனடியாகத் தீர்வு செய்து வைப்பாரா?’’ - திருநாவுக்கரசர்

‘‘ஒரு பெண் என்றுகூடப் பார்க்காமல் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள். என் வீட்டுக்குக் காய்கறி வாங்கக்கூட யாரும் வெளியே போக முடியவில்லை. வீட்டு வேலைக்காரர்களை மிரட்டி, எனக்கு எதிராக வாக்குமூலம் வாங்க போலீஸார் முயற்சி செய்கின்றனர்.’’ - ஜெயலலிதா

http://www.vikatan.com/juniorvikatan

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சசிகலா ஜாதகம் - 75 - “குடும்ப நண்பர் நடராசனை கொடுமைப்படுத்துகிறார்கள்” - ஜெயலலிதா ஜெயபேரிகை

 

 

ஜெயலலிதா ராஜினாமா முடிவின் அதிர்ச்சியிலிருந்து அ.தி.மு.க தொண்டர்கள் மீள்வதற்குள், நடராசனின் கைது அரங்கேறியது. அதுவரையில் கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்களுக்கு மட்டுமே அறிந்திருந்த நடராசனின் பெயர், முதன்முறையாக வெளியே தெரிய ஆரம்பித்தது. ‘நடராசன்’ என்கிற கேரக்டர் போயஸ் கார்டனை ஆட்டிப் படைக்கும் விஷயத்தை அப்போதுதான் தமிழகம் அறிய ஆரம்பித்திருந்தது.

‘நால்வர் அணி’ ஏற்பட காரணகர்த்தா நடராசன். அவரைப் பற்றி பகிரங்கமாகப் புகார் சொன்னவர் திருநாவுக்கரசர். ஆனால் சில நாட்களிலேயே ‘நடராசதாசன்’ ஆனார் திருநாவுக்கரசர். மோசடி வழக்கில் நடராசன் கைதாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரையில் கூடவே இருந்தவர் திருநாவுக்கரசர். நடராசனின் மீதான கறையைத் துடைக்க ஜெயலலிதாவைவிட திருநாவுக்கரசர் ரொம்பவே பாடுபட்டார்.

‘தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர்களிடம் பணத்தைத் திருப்பித் தருவதாகச் சொல்லவில்லை’ என நடராசனுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார் திருநாவுக்கரசர். அப்போது சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த அவர், பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசினார்.

p26a.jpg

‘‘அ.தி.மு.க சார்பில் நிற்க விரும்பியவர்கள் அளித்த பணத்தைத் ‘திருப்பித் தருவோம்’ என எந்த உறுதியும் அளிக்கவில்லை. அது நன்கொடையாகக்கூட கருதப்படலாம். கட்சியின் உள்விவகாரத்தில் போலீஸ் தலையிடுவது தவறு. ஜெயலலிதாவின் உதவியாளர் நடராசன் இல்லத்தில் சோதனை போட்டு, அவரைக் கைது செய்து, அவசரம் அவசரமாக வழக்குத் தொடுத்ததன் மூலம் போலீஸ் துறைக்குக் கரும்புள்ளி ஏற்பட்டுவிட்டது. வங்கியில் இருக்கும் கட்சியின் பணத்தை முடக்குவதும் போலீஸுக்குச் சம்பந்தமில்லாதது. இந்தப் பிரச்னையில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் தலையிட வேண்டும். அடக்குமுறையை போலீஸ் தொடர்ந்தால், அ.தி.மு.க போராட்டத்தில் ஈடுபடும். இதனால் சட்டம் ஒழுங்குக்கு ஊறு ஏற்படும். நடராசன் மீதான வழக்கும் அ.தி.மு.க-வினர் மீதான மிரட்டல்களும் எம்.எல்.ஏ பதவியைப் பறிக்க ஆளும் தி.மு.க மேற்கொள்ளும் அணுகுமுறையும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. தேதிகூட குறிப்பிடாமல் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸ் அவசரக் கோலத்தில் நடராசன் மீது வழக்குப் போட்டிருக்கிறது. முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமல் இந்த நடவடிக்கையை போலீஸ் எடுத்திருக்க முடியாது’’ என நடராசனை ரொம்பவே தூக்கிப் பிடித்தார் திருநாவுக்கரசர்.

ஜெயலலிதாவும் தன் பங்குக்கு நடரானுக்கு வெண்சாமரம் வீசினார். நடராசன் கைதை கவர்னர், பிரதமர் ஆகியோரின் பார்வைக்குக் கொண்டு போனார். அப்போது கவர்னராக இருந்த அலெக்ஸாண்டரை 1989 மார்ச் 20-ம் தேதி சந்தித்த ஜெயலலிதா, தனது ராஜினாமா கடிதம் லீக் ஆனது முதல் நடராசன் கைது வரையிலான விஷயங்களைத் தொகுத்து மனுவாக அளித்தார். நடந்த விஷயங்களை அலெக்ஸாண்டரிடம் விளக்கினார். ‘பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்காக ஆளும்கட்சியின் துண்டுதலில், போலீஸ் செயல்படுகிறது. ஒருதலைபட்சமான காவல் துறையின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார். குறிப்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் துரை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். ‘‘போலீஸின் அதிகார அத்துமீறல்களைப் பற்றி மத்திய அரசுக்கு அறிக்கையாக நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும்’’ எனவும் அலெக்ஸாண்டரிடம் கேட்டுக் கொண்டார். ‘‘கட்சிப் பணத்தை முடக்க போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. உட்கட்சி நிர்வாகத்திலோ கட்சியின் நிதி விவகாரத்திலோ தலையிட போலீஸுக்கு எந்தவிதமான அருகதையோ அதிகாரமோ கிடையாது’’ எனவும் தெரிவித்தார்.

கவர்னர் சந்திப்பு காலையில் நடந்தது. இரவு திடீரென பத்திரிகை யாளர்களை அழைத்தார் ஜெயலலிதா. அதற்குக் காரணமிருந்தது. ஜெயலலிதா கவர்னரைச் சந்தித்த கொஞ்ச நேரத்திலேயே போலீஸ் கமிஷனர் துரை மீடியாவிடம் பேசினார். துரையின் பத்திரிகையாளர் சந்திப்புக்கும் காரண காரியம் இருந்தது. அது ஸ்ரீதர் விவகாரம். 

தேர்தலில் சீட் கேட்டு பணம் கட்டி ஏமாந்த ஸ்ரீதர் விஷயம் வெடிக்க ஆரம்பித்தது. ‘அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டபோது, அதற்குப் பணம் தர வேண்டும் எனச் சொல்லி வாங்கினார்கள். ஆனால், அந்தப் பணத்தைத் திருப்பித் தரவில்லை. திருப்பிக் கேட்கச் சென்றபோது, நடராசனும் அவரது உதவியாளரும் என்னைத்   தாக்க முயன்றார்கள். மிரட்டி விரட்டியடித்தார்கள்’ என போலீஸில் புகார் அளித்தார் ஸ்ரீதர். இதுபற்றி சொல்லத்தான் பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் துரை.

p26.jpg

‘‘ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயலலிதா, அவரின் உதவியாளர் நடராசன் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். ஆயுதங்களைக் கொண்டு தாக்க முயற்சி செய்தல், அத்துமீறி நுழைந்து தாக்க முயற்சி செய்தல், கொலை முயற்சி, மோசடி ஆகிய குற்றங்கள் புரிந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது’’ எனச் சொன்னார் துரை. ‘‘ஜெயலலிதா கைது செய்யப்படுவாரா?’’ எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘சில வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது விசாரணைக்கு உதவுவதாக இருக்கும். சில வழக்குகளில் கைது செய்யத் தேவையில்லை’’ என்றார்.

துரையின் ரியாக்‌ஷனுக்கு உடனடியாக ஆக்‌ஷன் காட்டினார் ஜெயலலிதா. அவர் கூட்டிய அவரச பிரஸ் மீட்டில், ‘‘என் வீட்டில் வேலை பார்ப்பவர்களை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் கொடுமைப்படுத்தி, எனக்கு எதிராக வாக்குமூலம் வாங்குகிறார்கள். இதனால் நான் கைது செய்யப்படலாம்’’ என அதிர்ச்சியைக் கிளப்பினார் ஜெயலலிதா. ‘‘தனித்து வாழும் பெண் என்றுகூடப் பாராமல், கொலை செய்ய முயற்சி செய்ததாக என் மீது குற்றம்சாட்டி, அழித்துவிட நினைக்கிறார்கள். என் வீட்டில் இருக்கிறவர்கள் மீதும் வழக்குகள் போட்டு, என்னைக் கொடுமைப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். பொய் வழக்குப் போட்டு மிரட்டி, அரசியலை விட்டே என்னை விரட்டியடிக்க கருணாநிதி திட்டமிட்டு செயல்படுகிறார். 

ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் அ.தி.மு.க-வுக்கு நன்கொடை கொடுத்த பணத்தையும், தேர்தலுக்காக முன்பணமாக கொடுத்த பணத்தையும், மோசடி செய்ததாக கற்பனையான வழக்குகளை ஜோடித்து வருகிறார்கள். என் குடும்ப நண்பர் நடராசனைக் கொடுமைப்படுத்துகிறார்கள். அவரிடம் எனக்கு எதிரான வாக்குமூலங்களை வாங்க முயற்சி செய்கிறார்கள்’’ என்றார்.

நடராசன்... திருநாவுக்கரசருக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கும் அரசன் ஆனார்!

(தொடரும்)

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.