Jump to content

பாகற்காய் சமையல்


Recommended Posts

பதியப்பட்டது

பாகற்காய் தக்காளிப் புளிக்கறி

 

South Indian Gravy: Bitter gourd gravy - Cooking Recipes in Tamil

உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 250 கிராம்
தக்காளிப்பழம் - 250 கிராம்
வெங்காயம் - 5
பூண்டு - 10
வெந்தயம் - 2
மிளகாய் வத்தல் - 5
கறிவேப்பிலை - சிறிது
புளி - 25 கிராம்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
நீர் - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் பாகற்காயை கழுவி வட்ட வட்டமாக வெட்டவும். தக்காளியையும் கழுவி வெட்டவும். வெங்காயம் பூண்டு, மிளகாய் எல்லாவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். புளியை நீரில் கரைத்து அளவாக எடுத்து வைக்கவும். அதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எணணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வதங்கி பொன் நிறமாக வரும் போது பூண்டை சிறிது தட்டி அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் போட்டு நன்கு கிளறிக் கொண்டே மிளகாய்த் தூள், உப்புதூள், கரைத்த புளி இவற்றையும் சேர்த்து கறியை நன்கு கிளறி மூடி 5 நிமிடம் வேக விடவும். பின்னர் வற்றியதும் நறுக்கிய தாக்காளியையும் சேர்த்து வேக விடவும். பின்னர் ஆறவிட்டு பறிமாறலாம். சாதம், சாப்பாத்தி, தோசை இவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

 

http://www.koodal.com/women/cooking/recipes.asp?id=932&title=south-indian-gravy-bitter-gourd-gravy

Posted

சுவையான பாகற்காய் பொரியல் ரெடி!

 

A1674_07

தேவையானபொருட்கள்
பாவற்காய் – அரைக் கிலோ
வெங்காயம் – அரைக் கிலோ
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைபருப்பு
கறிவேப்பிலை
வரவிளகாய் – 7
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை
பாகற்காயில் மேல் மற்றும் கீழ் காம்புகளை நீக்கவும்.

நீரில் சுத்தம் செய்த உடனேயே உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

சிறிது நிமிட இடைவெளியில் மூடி வைத்தபடியே குலுக்கி விடவும். காய் நன்கு சுருண்டதும் நீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தப் பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் பாகற்காய் சேர்த்து சுருள சுருள வதக்கவும்.

சுவையான வெங்காய பாகற்காய் பொரியல் தயார்.

 

http://www.tamilserialtoday.net/2015/07/சுவையான-பாகற்காய்-பொரியல/

Posted

பாகற்காய் மசாலா / Bittergourd Masala

IMG_1345.jpg

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -

  1. பாகற்காய் - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. மல்லித்தழை - சிறிது 
  8. உப்பு - தேவையான அளவு 

IMG_1332.jpg

தாளிக்க -

  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. பெரிய வெங்காயம் -1
  4. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. பாகற்காய், வெங்காயம், தக்காளி மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

 

IMG_1334.jpg

  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

IMG_1335.jpg   IMG_1337.jpg

 

பிறகு அதனுடன் பாகற்காய் துண்டுகளை போட்டு ஒரு  நிமிடம் கிளறி அதோடு 1/2 தம்ளர் தண்ணீரும், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும். 

IMG_1339.jpg

  • கொதிக்க ஆரம்பித்ததும் மூடி போட்டு 10 நிமிடம் அல்லது தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.

IMG_1340.jpg

தண்ணீர் நன்கு வற்றியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான பாகற்காய் மசாலா ரெடி.

IMG_1343.jpg

http://saratharecipe.blogspot.ch/2015/10/bittergourd-masala.html

 

ஸ்பெஷல் பாகற்காய் குழம்பு!!!


அனைவரும் அம்மாவிடம் இருந்து நிறைய ரெசிபிக்களை கற்றிருப்போம். அந்த
வகையில் நான் எனது அம்மாவிடம், எனக்கு பிடித்த பாகற்காய் குழம்பை எப்படி
அருமையான சுவையில் செய்வது என்று கற்றுக் கொண்டேன். என் அம்மா சொல்லிக்
கொடுத்த, இந்த முறையில் பாகற்காயின் கசப்பே தெரியாது. அந்த அளவு என்னுடைய
அம்மா எளிதான முறையில் பாகற்காய் குழம்பு செய்வதை சொல்லிக்
கொடுத்தார்கள்.

இப்போது அந்த பாகற்காய் குழம்பின் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். அதை நீங்களும் வீட்டில் செய்து, விரும்பி சாப்பிடுங்கள்.


தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 1 1/2 கப் (நறுக்கியது)
புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு (1 கப் நீரில் ஊற வைத்தது)
வெல்லம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

மசாலாவிற்கு...

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வர மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் நறுக்கிய பாகற்காயை, மஞ்சள் கலந்து நீரில் 10 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய் மற்றும் உளுத்தம்
பருப்பு சேர்த்து 1 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கசகசாவையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பின்னர் வறுத்த பொருட்களை குளிர வைத்து, அதனை தேங்காயுடன் சேர்த்து, 1/4
கப் தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்
கொள்ள வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள பாகற்காயை, அத்துடன் சேர்த்து 10 நிமிடம் தீயை
குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின் புளியைக் கரைத்து பாகற்காய் கலவையில் ஊற்றி, தீயை குறைவிலேயே வைத்து
15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

பாகற்காயானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை
சேர்த்து, வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம்
கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான பாகற்காய் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால்
நன்றாக இருக்கும்.

https://groups.google.com/forum/#!topic/valluvanpaarvai/l167rtJBnB8

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதவன் அடுத்து பாகற்காய் சாம்பலையும் மறக்காமல் போட்டு விடவும்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, suvy said:

ஆதவன் அடுத்து பாகற்காய் சாம்பலையும் மறக்காமல் போட்டு விடவும்.....!  tw_blush:

நான் சொல்ல நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்  அண்ணை

பாவக்காயை அவித்து செய்தோம் வீட்டில் நன்றாக இருந்தது  கொஞ்சம் வித்தியாசமாக செய்தோம் நல்ல ருசி  தக்காளியும் சேர்த்து  கொஞ்சம்  மாசி ,அல்லது  கொஞ்சம்  மீன் துண்டுகளை இட்டால் செம ருசி  tw_blush:tw_blush:

Posted

பாகற்காய் சம்பல்

sampal

தேவையான பொருட்கள்:

பாகற்காய் – 1

வெங்காயம் – 1

தக்காளி – 1

மிளகாய் – 1

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

மிளகு தூள் – சிறிதளவு

உப்பு – சுவைக்கு

செய்முறை:

• பாகற்காயை நன்றாக கழுவி தண்ணீரை நன்றாக வடித்து விட்டு விரும்பியபடி வெட்டி கொள்ளவும். ஆனால் மெலிதாக வெட்ட வேண்டும்.

• வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சிறிதாக அரிந்து எடுத்துக்கொள்ளுங்க.

• கடாயில் எண்ணெயை சூடாக்கி பாகற்காயை பொரித்து எடுக்க வேண்டும்.

• ஒரு பாத்திரத்தில் பொரித்த பாகற்காய், வெங்காயம், தக்காளி, மிளகாய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

• இப்போது சுவையான பாகற்காய் சம்பல் ரெடி.

குறிப்பு:

* எலுமிச்சை சாறுக்கு பதில் தயிரும் சேர்க்கலாம்.

* சிறிதாக அரிந்த கறிவேப்பிலை சேர்க்கலாம்.

 

http://www.tamilspy.com/archives/51665

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.