Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வு முயற்சியில் அரசுடன் கைகோக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுதந்திரதின உரை மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

Featured Replies

தீர்வு முயற்சியில் அரசுடன் கைகோக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுதந்திரதின உரை மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல்களில் அரசுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

வடக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்தும், வன்முறைகளின் கீழ்த்தரமான விளைவுகளில் இருந்தும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக அரசுடன் கைகோத்துச் செயற்பட ஒன்றிணையுமாறு ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்திருக்கிறார்.

நாட்டின் 59 ஆவது சுதந்திரதினமான நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திரதின உரையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பை விடுத்தார்.

ஜனாதிபதி தனது உரையில் கூறியதாவது:

மகத்துவமிக்க இச்சுதந்திர தினத்தில் அரசின் தலைவன் என்ற வகையில் உங்கள் முன் திருப்தியோடு எழுந்து நிற்கின்றேன் என்பதை நான் உணர்வுபூர்வமாகக் குறிப்பிடுகின்றேன். தேசத்தின் மகத்துவம் அதலபாதாளத்தில் விழுந்திருந்த நேரத்திலிருந்து அதைப் பாதுகாப்பதற்காக ஏறத்தாழ ஒரு வருடத்திற்கும் மேலாக உங்களுக்கு தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொடுத்தேன் என்ற நம்பிக்கையினூடாக அந்தத் திருப்தி ஏற்பட்டுள்ளது. மனச்சாட்சியின்படி தாய்நாட்டுக்குச் சார்பான பொறுப்புகளை நிறைவேற்றியுள்ள நான், உள்ளத்திலிருந்து எழுகின்ற உணர்வுகளினால் நாட்டுக்காக சவால்களை எதிர்நோக்குவதற்கான தைரியத்தையும் திருப்தியையும் பெற்றுள்ளேன்.

அதன் பிரகாரம், இந்த மகத்துவமிக்க நாளில் நான் ஆற்றுகின்ற உரை சம்பிரதாய பூர்வமாக சுதந்திர தினத்தின் தேவைக்காக ஆற்றப்படுகின்ற ஓர் உரையல்ல என்பதையும், அதற்கு உறுதிப்பாடான அர்த்தமொன்று பெற்றுத்தரப்பட்டுள்ளது என்பதையும் நான் மிகப் பணிவுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

நண்பர்களே, கடந்த சுதந்திர தின வைபவத்தின்போது நான் உங்களிடம் விடுத்த வேண்டுகோள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இலங்கைத் தேசத்தின் உத்தமமான அபிலாஷைகளுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.

அதற்காக இந்நாட்டிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் இடையே பொதுவான இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள எமது அரசசு பாடுபட்டது. எல்லாவித பேதங்களையும் ஒதுக்கித்தள்ளி, நாட்டின் பொது நன்மைக்காகப் பாடுபடுகின்ற அரசியல் சமூகமொன்றை உருவாக்க நாம் பாடுபட்டோம். இன்று நேர்மையான உணர்வுடன் கண்பார்வையைச் சுழற்றுகையில், தோற்றம் பெறுகின்ற அந்தப் புதிய அரசியல் சமூகத்தின் முன்னறிவிப்பு எல்லாத் திசைகளிலும் உங்களுக்குத் தோன்றுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு தேசிய நிகழ்ச்சிநிரலில் தனது குடும்பத்திற்கு, இனத்திற்கு, மதத்திற்கு அல்லது கட்சிக்கு முன்னால் தாய்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு இந்த வரலாற்றுமிக்க தினத்தில் எல்லா ஜனநாயக சக்திகளிடமும் நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றேன். இதுவரை எம்முடன் கலந்துரையாடலுக்கோ அல்லது இணக்கப்பாட்டுக்கோ வராத நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் (tணச்) இம் மேடையிலிருந்து நான் அந்த வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

வடக்கின் அப்பாவித் தமிழ் மக்கள் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்தும் வன்முறைகளின் கீழ்த்தரமான விளைவுகளிலிருந்தும் மீட்டெடுப்பதற்கும், வடக்கில் விடுதலையை உதயமாக்கிக்கொள்ள முடிவதும் எம்முடன் கைகோத்து ஒன்று சேருவதன் மூலமாக மாத்திரமே முடியுமாக இருக்கும். நீங்கள் பீதியினாலும் மனவேதனையினாலும் இருப்பீர்களாயின் மானிடர் என்ற வகையில் உங்களுக்கான சுதந்திரம் இல்லையாயின், நீங்கள் கடைப்பிடிப்பதாகச் சொல்கின்ற அரசியல் கருத்துகள் எந்தளவு ஜனநாயக ரீதியாக இருந்தாலும் அவர்கள் எவரும் அடிமைகளயற்ற மனிதர்கள் அல்ல என்பதை நான் நேர்மையாக அவர்களுக்கு கூறிக்கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

திரும்பிப் பாருங்கள். இலங்கையின் கௌரவமும் மகத்துவமும் மிகவும் மோசமான நிலைக்குக் கீழிறங்கி இலங்கைச் சமூகத்தை அவப்பெயரின் எடுத்துக்காட்டாக மேற்கத்தேய உலகம் எடுத்துக்காட்டிய சந்தர்ப்பத்திலிருந்து இன்றுவரை நாம் நடந்துவந்த ஒருவருடப் பாதையை சற்றுத்திரும்பிப் பார்க்கும்படி நான் உங்களை வேண்டுகின்றேன்.

58ஆம், 59ஆம் சுதந்திரதின காலப்பகுதிக்கிடையில் முக்கியமானதும் தேசத்தின் தேவையானதுமான சமாதானத்திற்காக நாம் பலவற்றை அர்ப்பணித்தோம். மாவிலாறு அணை மூடப்பட்டு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்ட சந்தர்ப்பம்வரை எந்தவிதமான ஆத்திரமூட்டும் சம்பவங்களுக்கும் நாம் இரையாகவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். பயங்கரவாதிகள் பேச்சு மேசையைவிட்டுச் செல்லும்போதுகூட நாம் நேர்மையுடன் அங்கு அமர்ந்திருந்தோம். அது எமது கையாலாகாத தன்மையா? இல்லவே இல்லை. இவ்வாறுதான் சமாதானத்திற்கான எமது அர்ப்பணிப்பை நாம் வெளிப்படுத்தினோம்.

அப்பாவித் தமிழ் மக்களைப் பணயக் கைதிகளாகவும், மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தி தமது மிலேச்சத்தனமான கோரிக்கைகளை வெற்றிகொள்ள பயங்கரவாதிகள் நடவடிக்கை மேற்கொண்டபோது எமது பாதுகாப்புப் படையினர் பாரிய அர்ப்பணிப்புடன் அவர்களை விடுவித்தும் சமாதானத்திற்கான அர்ப்பணிப்பின் காரணமாகவே. மகத்துவமிக்க இத்தினத்தில் அதற்காக இலங்கை மக்களின் கௌரவம், எமது வீரம்மிக்க படையினருக்கு உரித்தாக வேண்டும்.

படையினருக்கு நல்லாசிகள்

எந்தவொரு அப்பாவிப் பிரஜைக்கும் பாதிப்பேற்படாத வகையில் பயங்கரவாதத்திடமிருந்து வாகரையை மீட்டெடுத்த எமது படையினருக்கு நல்லாசிகளைத் தெரிவித்துக்கொள்ளவும், அதேநேரம் தமிழ் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் மீளக்குடியமர்த்தல் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி அவதானிக்கவும் நான் நேற்று வாகரைக்குச் சென்றிருந்தேன். சம்பூருக்கும் சென்றிருந்தேன். வாகரையில் சிவில் நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் நிலையமொன்று திறக்கப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழும் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது.

59ஆவது சுதந்திர தினத்தின் உச்சபட்ச பலன்களை அடைந்து கொண்டவர்கள் மேற்குறித்த பிரதேச மக்களே என்பது எனது நம்பிக்கையாகும். அதற்கேற்ப, தெற்கின் தென்னந்தோப்புகளிலிருந்து வரும் பிள்ளைகளைப் போலவே பனந்தோப்புகளிலிருந்து வரும் பிள்ளைகளும் அடுத்த சுதந்திர தினத்தை மெருகூட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் இச்சுதந்திர தினத்தில் அதற்காகப் பிரார்த்திக்கின்றேன்.

அதேபோன்று, பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கிலுள்ள பிரதேசங்களில் ஜனநாயக நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் அவசர அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்து அவர்களுடைய பிள்ளைகளின் எதிர்கால உலகத்தை நாம் புனிதமாக்கவேண்டும்.

மொரகஹகந்த மகா சமுத்திரத்தின் ஆரம்ப வைபவத்தில் நான் குறிப்பிட்டது போன்று பயங்கரவாதத்தை எதிர்க்கக்கூடிய நம்பிக்கையான ஆயுதம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்டச்செய்வதே என்பதை மீண்டும் நான் வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன். தெற்கிலுள்ள சிங்களச் சமூகம் இதற்குத் தயாராக உள்ளது என்பதை நான் அறிவேன். எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்தின் இரத்த வெறி பிடித்த கோரிக்கைகளைப் பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இல்லை. ஆனாலும், ஆகக்குறைந்தது ஆனந்தசங்கரி அல்லது டக்ளஸ் தேவானந்தா கூறுவதைச் செவிமடுக்கக்கூடியவகையில் நேர்மையாக இருக்கவேண்டும்; நியாயமானவர்களாக இருக்கவேண்டும்.

தேசத்தின் மகத்துவத்தைப் பாதுகாக்கின்ற அடிப்படை நிபந்தனை யாதெனில், தேசத்தின் மகத்துவத்தைப் பலிகொடுக்காத கொள்கையொன்றுக்கென முன்னிற்பதே எமது அரசின் நிபந்தனையற்ற நிலைப்பாடாகும். அதை நாங்கள் அடிக்கடி நிரூபித்திருக்கின்றோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் அது உள்நாட்டிலாயினும்சரி வெளிநாட்டிலாயினும் சரி விசமச் சக்திகளுக்கு நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பலி கொடுக்காமையின் அர்த்தம் தேசத்தின் மகத்துவமே என்பதை இச்சந்தர்ப்பத்தில் நாம் உயர்ந்த குரலில் ஓங்கிச் சொல்லவேண்டும்.

நண்பர்களே,

உங்களுடைய சக்தி அளப்பரியது. அதற்கான உறுதியைத்தான் எம்மால் உட்புகுத்த முடியும். அச்சக்தியும் உறுதியையும் ஒன்றுபடுத்தும்போது தேசத்தின் சுபீட்சம் தானாகவே உருவாகும் என்பது தெட்டத்தெளிவாகும். வரலாற்றிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் பயங்கரவாத்திற்கு அவர்களால் நன்கு புரியக்கூடிய மொழியிலேயே பதிலளிக்கும் அதேவேளையில், எமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கின்ற அபிவிருத்திக் கொள்கையொன்றை நோக்கிச்செல்வதற்கும் நாம் தீர்மானித்தோம்.

எதிர்வரும் தசாப்தத்தை இந்நாட்டின் அபிவிருத்திக்கான தசாப்தமாக நாம் பிரகடனம் செய்துள்ளோம் என்பதை ஏற்கனவே நீங்கள் அறிவீர்கள். அதற்காக கடந்த ஒருவருடகாலத்தில் நாம் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டோம். நுரைச்சோலை மற்றும் மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலையங்கள் சம்பூர் அனல் மின் நிலையம் மொரகஹகந்த மகா சமுத்திரம் வீரவில புதிய விமான நிலையம் கொழும்புத் துறைமுகத்தை இருமடங்காக விசாலமாக்குதல் புதிய ரயில் பாதைகள் அதிவேகப் பாதைகள் ஆகியன இவைகளில் ஒருசில மட்டுமே. இவையனைத்தும் எதிர்கால இலங்கையின் அபிவிருத்தி அமைப்பை நிச்சயமாக மாற்றியமைக்கும்.

அது மாத்திரமா? போதைக்கு முற்றுப்புள்ளி உங்கள் பிள்ளைகளின் உலகத்தைப் பாதுகாப்பதற்கு இடப்பட்ட உறுதியான அத்திபாரமாகும். பகிரங்க இடங்களில் புகைப்பிடித்தலைத் தடைசெய்வதன் மூலமும், போதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமும் பொதுத் திறைசேரி ஆண்டொன்றுக்கு ஆறு பில்லியன் ரூபாவை இழக்கின்றது. அதாவது அறுபதாயிரம் மில்லியன் ரூபா. ஆனாலும் எமது மக்களின் சூழல், சுகாதாரம், மகிழ்ச்சி என்பவை திறைசேரியின் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதைவிட மிகவும் பெறுமதியானது என்பதை நாம் தீர்மானித்துள்ளோம். அதுதான் மஹிந்த சிந்தனையின் ஆணிவேர். இன்னொருபுறம் மக்களுடைய ரசனைக்கும் விழுமியங்களுக்கும் சில ஊடகங்கள் சவால் விடுத்த போதும், நாம் உறுதியாகவும் அதற்கு எதிராகவும் செயற்பட்டமை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். வரிக் கொள்கைகளை மாற்றியமைத்து கலையை அந்நியமயப்படுத்தலிருந்து காப்பாற்றிய விதம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இந்நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியாக அவையனைத்தையும் அவதானித்தபடி, எமக்குப் பாராட்டுத் தெரிவிப்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வுடன் நினைவுகூருகின்றேன்.

அதேபோன்று, பலவீனப்படுத்தப்பட்டு அழிக்கப்படவிருந்த அரச சேவையையும் நலனோம்பல் நடவடிக்கைகளையும் பலப்படுத்துவதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், நீண்டகாலமாக நிரந்தரமாக்கப்படாமல் பல பிரச்சினைகளுக்கு ஆளான பொலிஸ் சேவையைச் சேர்ந்த கீழ்மட்ட உத்தியோகத்தர்களுக்கும் அரச மற்றும் கூட்டுத்தாபன கீழ்மட்ட உத்தியோகத்தர்களுக்கும் எமது அரசு நிறைவேற்றிய நியாயத்தை நினைவுபடுத்துவதற்கும் இன்றைய தினம் மிகவும் பொருத்தமானது என எண்ணுகின்றேன்.

ஒரு புறத்தில் விசமம் வாய்ந்த பயங்கரவாதத்திற்கெதிராக நிபந்தனையற்ற போராட்டம் நடத்தி, மறுபுறத்தில் சிறந்ததோர் அபிவிருத்தியை நோக்கி நாட்டை இட்டுச் செல்லக்கூடிய வரலாற்றின் பாரிய திட்டங்களைச் செயற்படுத்துகையில், எமது விழுமியங்களையும் கலாசாரங்களையும் பாதுகாப்பதற்கான ஆணித்தரமான தீர்மானங்களை மேற்கொள்ளும்பொழுது, இந்நாட்டுக்குப் பழக்கப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலும் தலைதூக்குவதற்கு பார்த்துக் கொண்டிருக்கின்றதென்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, நாட்டின் நீடுறுதியான தன்மைக்கு சவால் ஏற்படக்கூடிய எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டாம் என மிகவும் பொறுப்புடன் உங்களை நான் வேண்டிக்கொள்ள விரும்புகின்றேன். இறுதிமூச்சு விடுகின்ற பயங்கரவாதத்திற்கு ஒட்சிசன் வழங்க தெரிந்தோ தெரியாமலோ செயற்பட வேண்டாமென, குறிப்பாக இந்நாட்டில் உழைக்கும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்க, இன்று இந்த மேடை மிகவும் பொருத்தமானதென நான் நம்புகின்றேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு எந்தவிதமான பங்கமும் ஏற்படாமல் பிரிவினைவாதத்தை தோல்வியைடைச் செய்து, சந்தர்ப்பவாத அரசியலை ஓய்வுபெறச் செய்து, இந்தப் புண்ணிய பூமியின் கௌரவத்தையும் சௌபாக்கியத்தையும் உறுதிப்படுத்துவதற்காக, என்னால் இயன்றவு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதை உங்கள்முன் வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எமது அரசிற்குள்ள பலம், தைரியம், துணிச்சல் என்பவற்றின் மீதுள்ள ஆகக்கூடிய நம்பிகையின் மீதே நான் இவ்வாறு குறிப்பிடுகின்றேன்.

அதேபோன்று, மஹிந்த சிந்தனையைச் செயற்படுத்துவதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது நேசச் சக்திகளிடமும், ஏனைய சத்திகளிடமும் தாய்நாட்டின் அபிமானத்திற்காகவும் சௌபாக்கியத்திற்காகவும் எம்முடன் கைகோக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். கடன்களற்ற, அடிபணியாத, எமது நாட்டுக்கே பொருத்தமான கொள்கையொன்றை முன்னெடுத்துள்ள எம்முடன் கைகோக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன், சமூக நீதிக்காகவும் வெளிப்படையான தன்மைக்காகவும் எமது அரசிடம் உங்களுடைய நியாயமான விமர்சனங்களை முன்வைக்குமாறு அனைத்துச் சக்திகளிடமும், அமைப்புகளிடமும் நான் வேண்டிக்கொள்கிறேன். பாராட்டுகின்றவர்களைவிட விமர்சனம் செய்கிறவர்களை நாம் மதிப்பதாக நான் எனது கன்னி உரையில் குறிப்பிட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

நண்பர்களே,

நியாயத்தை அடிப்படையாக வைத்தே மக்களின் எதிர்ப்புக் காட்டப்படுகின்றது என்ற உண்மையை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எனது அரசியல் வாழ்க்கையில் நான் புரிந்து வைத்துள்ளேன்.

இறுதியாக, பிரிவினைவாதத்திற்கு எதிராக தாய்நாட்டின் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமாக, சகோதர உணர்வுடன் எமக்கு உதவி வழங்குகின்ற வெளிநாட்டு நண்பர்களினதும் அரசாங்கங்களினதும் இரக்க மனப்பான்மையையும் நட்புறவையும் பாராட்டுவதற்கும், அதற்கான உயர்ந்த கௌரவத்தை வழங்குவதற்கும் பெருமை மிக்க இம்மேடையை நன்றியுணர்வுடன் நான் பயன்படுத்துகின்றேன்.

சுதந்திரம் என்பது ஒரு தேசத்தின் எதிர்கால வெற்றிப் பாதையாகும், சுதந்திரம் என்பது கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பதாகும். சுதந்திரம் எனும் பாதையிலே தேசத்தின் எதிர்கால வெற்றிகளுக்காக நாம் ஒன்றுபட்டு செயற்படுவோம்! அர்ப்பணிப்போம்! வெற்றிபெறுவோம்! எமது உத்தமமான தாய்நாட்டுக்குரிய மகத்துவத்தை நாமே பெற்றுக்கொடுப்போம்.

உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்!

-Sudaroli-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

தமிழ்க் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரோபாய நாடகம்!: சிவாஜிலிங்கம் எம்.பி.

அரச பயங்கரவாதத்தினால் தமிழ் மக்களை அச்சுறுத்திக்கொண்டு, இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தமிழ்க் கூட்டமைப்பைத் தம்மோடு சேர்ந்து ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி தமது சுதந்திரதின உரையில் அழைப்பு விடுத்திருக்கின்றமையானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற ஒரு தந்திரோபாய நாடகமே ஒழிய வேறொன்றுமில்லை. இவ்வாறு சீற்றத்துடன் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இதுதொடர்பாக நேற்றிரவு பி.பி.ஸி. தமிழோசைக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார் சிவாஜிலிங்கம். அதில் அவர் தெரிவித்தவையாவது:

இதுவரை காலமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி மாநாட்டுக்கு அழைக்காமல் தெற்கிலேயே ஒருமித்த கருத்தை உருவாக்கப் போகிறோம் எனச் சொன்னவர்கள், இதுவரை தெற்கில் ஒருமித்த கருத்தை உருவாக்காமல் இன்னமும் குழப்பமான தீவிரவாதக் கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு காலங்கடத்துகின்றனர். இந்நிலையில் காலத்தை மேலும் இழுத்தடிப்பதற்கான தந்திரோபாயமாகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான ஜனாதிபதியின் அழைப்பை நாங்கள் கருதுகின்றோம்.

இதைவிட தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் என்பதுதான் எங்களுக்கு மக்கள் வழங்கிய ஆணை. அந்த அடிப்படையில் புலிகளுடன்தான் இவர்கள் இது சம்பந்தமாகப் பேசவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஏன் இந்த விடயத்தில் காலத்தை இழுத்தடிக்க நினைக்கின்றார்கள் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

அரசின் செயற்பாடுகளில்

தமிழருக்கு அவநம்பிக்கை

அரசினுடைய கடந்தகால நடவடிக்கைகள் எங்களுக்கு மிகவும் அவநம்பிக்கையைக் கொடுத்துள்ளன. குறிப்பாக முதலாவது விடயம் இன்றைக்கு தமிழர் தாயகத்திலே வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே மக்கள் மிகப்பெரிய ஒரு மனித அவலத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இராணுவ சுற்றிவளைப்புகள், காணாமல்போதல், கடத்தல்கள், கொலைகள், விமானக் குண்டு வீச்சுக்கள் போன்ற நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன.

2006 பெப்ரவரி மாதம் ஒட்டுக்குழுக்கள் துணைப்படைகளின் ஆயுதங்களைக் கழைய அரசு இணங்கியது. ஆனால், அதனை அரசு இன்னமும் செய்யவில்லை. இதற்கு மேலதிகமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இப்போது பிரிக்கப்பட்டுள்ளன.

எமது மக்களின் அடிப்படைக் கருத்துக்கள் எவற்றையும் பரிசீலிக்காமல் தமிழ்க்கூட்டமைப்பை தம்மோடு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கேட்டிருக்கின்றமை வெளி உலகத்தை சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரசு போடும் நாடகமாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.

அரச பயங்கரவாதத்தால்

அச்சப்படுகின்றோம்

நாங்கள் இன்று அரச பயங்கரவாதத்தால் எந்த நேரமும் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தைத் தவிர எங்களுக்கு விடுதலைப் புலிகள் சம்பந்தமாக எந்தவித அச்சமும் கிடையாது. மக்களும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள்.

ஆகவே, இந்த அரசு சொல்வதைப்போல ஏதாவது நம்பிக்கை ஏற்படவேண்டுமாக இருந்தால், தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு ஒரு ஏற்பாட்டைச் செய்யவேண்டும்.

வடக்கு கிழக்கு ஒரு இயல்பு நிலையைக் கொண்டுவரவேண்டும். துணைப்படைகளின் ஆயுதங்களைக் களைந்தார்களேயானால், நிச்சயமாக அரசுடன் மீண்டும் ஒரு பேச்சுக்குச் செல்லவேண்டும் என்ற வற்புறுத்தலை தமிழர் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்களும் செய்யமுடியும்; நாங்களும் அந்த வற்புறுத்தலைக் கொடுக்கமுடியும்; இந்த வேண்டுகோளைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விடுக்க முடியும். அவர்களும் அதற்கு இணங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவற்றை அரசு செய்யாமல் எமக்கு அழைப்பு விடுப்பதை ஒரு வெளியான பிரசார உத்தியாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

அமைதியை ஏற்படுத்த

அரசுத் தலைமை தயாரா?

அரசினால் மாத்திரமே அமைதியை உடனடியாகக் கொண்டுவரமுடியும்; மக்களின் அவலத்தைப் போக்க முடியும். உடனடியாக இவர்கள் ஆயுத ஆட்கடத்தல்கள், படுகொலைகள், பிரச்சினைகள், விமானக் குண்டுவீச்சுக்கள் போன்றவற்றை நிறுத்துவார்களாக இருந்தால் அதற்குப் பின்னர் இந்தப் பிரச்சினையில் தாங்களும் படையினர் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டுமென்று விடுதலைப் புலிகளும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அதற்கான வேண்டுகோளையும் நாங்கள் நிச்சயமாக விடமுடியும் என்றார் சிவாஜிலிங்கம்.

-Sudaroli-

அவைக்கும் கயிறு குடுத்து பார்க்கிறார் போல. அவை எல்லாம் இப்ப தெளிவா இருக்கினம். ஏனென்றால் அவர்கள் இப்போ ஆயுதமில்லா போராளிகள்.

தமிழ்க் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரோபாய நாடகம்!: சிவாஜிலிங்கம் எம்.பி.

அரச பயங்கரவாதத்தினால் தமிழ் மக்களை அச்சுறுத்திக்கொண்டு, இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தமிழ்க் கூட்டமைப்பைத் தம்மோடு சேர்ந்து ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி தமது சுதந்திரதின உரையில் அழைப்பு விடுத்திருக்கின்றமையானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற ஒரு தந்திரோபாய நாடகமே ஒழிய வேறொன்றுமில்லை. இவ்வாறு சீற்றத்துடன் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இதுதொடர்பாக நேற்றிரவு பி.பி.ஸி. தமிழோசைக்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார் சிவாஜிலிங்கம். அதில் அவர் தெரிவித்தவையாவது:

இதுவரை காலமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி மாநாட்டுக்கு அழைக்காமல் தெற்கிலேயே ஒருமித்த கருத்தை உருவாக்கப் போகிறோம் எனச் சொன்னவர்கள், இதுவரை தெற்கில் ஒருமித்த கருத்தை உருவாக்காமல் இன்னமும் குழப்பமான தீவிரவாதக் கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு காலங்கடத்துகின்றனர். இந்நிலையில் காலத்தை மேலும் இழுத்தடிப்பதற்கான தந்திரோபாயமாகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான ஜனாதிபதியின் அழைப்பை நாங்கள் கருதுகின்றோம்.

இதைவிட தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் என்பதுதான் எங்களுக்கு மக்கள் வழங்கிய ஆணை. அந்த அடிப்படையில் புலிகளுடன்தான் இவர்கள் இது சம்பந்தமாகப் பேசவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஏன் இந்த விடயத்தில் காலத்தை இழுத்தடிக்க நினைக்கின்றார்கள் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

அரசின் செயற்பாடுகளில்

தமிழருக்கு அவநம்பிக்கை

அரசினுடைய கடந்தகால நடவடிக்கைகள் எங்களுக்கு மிகவும் அவநம்பிக்கையைக் கொடுத்துள்ளன. குறிப்பாக முதலாவது விடயம் இன்றைக்கு தமிழர் தாயகத்திலே வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே மக்கள் மிகப்பெரிய ஒரு மனித அவலத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் இராணுவ சுற்றிவளைப்புகள், காணாமல்போதல், கடத்தல்கள், கொலைகள், விமானக் குண்டு வீச்சுக்கள் போன்ற நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன.

2006 பெப்ரவரி மாதம் ஒட்டுக்குழுக்கள் துணைப்படைகளின் ஆயுதங்களைக் கழைய அரசு இணங்கியது. ஆனால், அதனை அரசு இன்னமும் செய்யவில்லை. இதற்கு மேலதிகமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இப்போது பிரிக்கப்பட்டுள்ளன.

எமது மக்களின் அடிப்படைக் கருத்துக்கள் எவற்றையும் பரிசீலிக்காமல் தமிழ்க்கூட்டமைப்பை தம்மோடு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கேட்டிருக்கின்றமை வெளி உலகத்தை சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு அரசு போடும் நாடகமாகத்தான் நாங்கள் கருதுகின்றோம்.

அரச பயங்கரவாதத்தால்

அச்சப்படுகின்றோம்

நாங்கள் இன்று அரச பயங்கரவாதத்தால் எந்த நேரமும் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தைத் தவிர எங்களுக்கு விடுதலைப் புலிகள் சம்பந்தமாக எந்தவித அச்சமும் கிடையாது. மக்களும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள்.

ஆகவே, இந்த அரசு சொல்வதைப்போல ஏதாவது நம்பிக்கை ஏற்படவேண்டுமாக இருந்தால், தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு ஒரு ஏற்பாட்டைச் செய்யவேண்டும்.

வடக்கு கிழக்கு ஒரு இயல்பு நிலையைக் கொண்டுவரவேண்டும். துணைப்படைகளின் ஆயுதங்களைக் களைந்தார்களேயானால், நிச்சயமாக அரசுடன் மீண்டும் ஒரு பேச்சுக்குச் செல்லவேண்டும் என்ற வற்புறுத்தலை தமிழர் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்களும் செய்யமுடியும்; நாங்களும் அந்த வற்புறுத்தலைக் கொடுக்கமுடியும்; இந்த வேண்டுகோளைத் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு விடுக்க முடியும். அவர்களும் அதற்கு இணங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவற்றை அரசு செய்யாமல் எமக்கு அழைப்பு விடுப்பதை ஒரு வெளியான பிரசார உத்தியாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம்.

அமைதியை ஏற்படுத்த

அரசுத் தலைமை தயாரா?

அரசினால் மாத்திரமே அமைதியை உடனடியாகக் கொண்டுவரமுடியும்; மக்களின் அவலத்தைப் போக்க முடியும். உடனடியாக இவர்கள் ஆயுத ஆட்கடத்தல்கள், படுகொலைகள், பிரச்சினைகள், விமானக் குண்டுவீச்சுக்கள் போன்றவற்றை நிறுத்துவார்களாக இருந்தால் அதற்குப் பின்னர் இந்தப் பிரச்சினையில் தாங்களும் படையினர் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டுமென்று விடுதலைப் புலிகளும் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அதற்கான வேண்டுகோளையும் நாங்கள் நிச்சயமாக விடமுடியும் என்றார் சிவாஜிலிங்கம்.

-Sudaroli-

சிங்களவர்களுக்கு நல்லா கழன்று தான் போய்விட்டது.

நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.

பயங்கரவாதிகளை பூண்டோடு அழிப்போம்.

தீர்வு முயற்சியில் அரசுடன் கைகோக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுதந்திரதின உரை மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

என்ன சொல்கிறார்கள் என்றே அவர்களுக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழ் கூட்டமைப்பைப் பாராட்டத்தான் வேண்டும். சிங்களப் பத்திரிகைகள் தமிழ் கூட்டமைப்பு புலிகளுக்கு பயந்து இருப்பது போலவும், அவர்களின் அறிக்கைகளை வாசிப்பது போன்றும் நக்கலும், அவமானமும் செய்து வந்தது.

மாமனிதர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் சிங்கள அரசால், அதன் ஆளுமைப் பிரதேசங்களில் வைத்து நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட போதும், தமிழ் கூட்டமைப்பு , தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. அதில் இருந்து நிச்சயமாக மகிந்தவுக்குப் புரிந்திருக்கும். அவர்கள் உணர்வோடு தான் தமிழீழத்தை ஆதரிக்கின்றார்கள் என்று.

தமிழ் கூட்டமைப்பைச் சிறுமைப்படுத்திய, பதவிக்கும், சுகத்துக்கும் ஆசைப்பட்டு, போன எலும்புநக்கிகளின் நாக்கு எப்படிச் சுழருது என்று பார்க்கத் தானே போகின்றோம்.

ஆனாலும் சிங்கள தேசத்தில் நின்று தமிழீழத்தை ஆதரித்தவர்களை சிங்களக் கொடுங்கோலர் விட்டு வைத்தில்லை. அது மாமனிதர் குமார் பொன்னம்பலம் முதல் பல வரலாறு சொல்கின்றது. தமிழ் கூட்டமைப்பினரும் சரி, பிறரும் சரி. தமிழீழத்துக்கு உந்து கொடுக்கும் அதேவேளை தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகமிக நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

வெட்ட வெட்ட, வேட்கை வளரும்!இலங்கையின் 59ஆவது சுதந்திரதினத்தை ஒட்டி காலி முகத்திடலில் இடம்பெற்ற வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முக்கிய உரை ஒன்றை ஆற்றியிருக்கிறார். வழமையாகத் தென்னிலங்கை அரசுத் தலைவர்கள் ஆற்றும் மிடுக்கான செருக்கான மமதையான ஆணவப்போக்கு உரைப்பாங் கிலிருந்து நேற்றைய உரையும் மாறுபடவில்லை.

முழு இலங்கைத் தீவையுமே உலுப்பிவரும் தேசியப் பிரச்சினையான இனச்சிக்கலை ஒட்டி அவர் அங்கு தெரிவித்த சில கருத்துகள் ஆராயப்பட வேண் டியவை.

""தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களின் மிலேச்சத்தனமான கோரிக்கைகளுக்கு நாம் அடிபணியமாட்டோம். ஆனால் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றோரின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுத்துத் தீர்த்துக்கொள்ள தென் னிலங்கை மக்கள் தயாராகவே இருக் கின்றார்கள்.'' என்ற சாரப்பட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.

தமிழீழம் கேட்டு, தமிழ் மக்களின் வாக்குப்பெற்று, நாடாளுமன்றத்தை அலங்கரித்து, பதவி சுகம் பெற்ற பின்னர், பேரினவாத எஜமானர்களுக்குத் துணை போவதற்காக தமிழ் மக்களின் அந்த ஏகோபித்த நிலைப் பாட்டைப் புறக்கணித்த காரணத்தால் புறக்கணித்த காலம் முதல் தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டு, அந்தத் தண்டனைக்காக ஆட்சியாளர்களின் "கடைக் கண் பார்வை' அருள்கடாட்சம் கிட்டியதால் இப்போது "பவிசு' ஆக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆனந்த சங்கரியையும், தமிழீழம் கேட்டு ஆயுதப் போராட்டம் நடத்த முன்வந்து, அதைக்கைவிட்டு, ஆட்சியிலிருக்கும் அரசுகளுடன் இடைவிடாது இணைந்துகொள்ளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவையும் விட்டு விடுங்கள்.

அமைதி வழியில் சாந்தநெறியில் சிறுபான் மைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்த தமிழர் தந்தை எஸ். ஜே. வி. செல்வ நாயகத்தையும், அதே வழியில் காந்தீய நெறியில் நாடாளுமன்றுக்கு முன்னால் அமைதி யாக அமர்ந் திருந்து தமிழ்களின் நீதியான அபி லாஷைகளை யும் முன்வைக்க முன்வந்த ஏனைய மிதவாதத் தமிழ்த் தலைவர்களையும் அவர்களது கருத்துகளை யும் செவிமடுக்க, இதே அதிபர் ராஜ பக்ஷ தலைமை வகிக்கின்ற கட்சியும், அவரது தென்னிலங்கை மக் களும் அப்போது தயாராக இருக்காத காரணத்தால் தான் தவறிய காரணத் தால்தான் இன்று தென் னிலங்கை திட்டித்தீர்த்து, அழுது புலம்பும் இந்தப் "பயங்கரவாதம்' இந்நாட்டில் பிறப்பெடுத்தது என்பது மறந்துவிடக்கூடிய தல்ல.

அமைதி வழியில் தமிழர்கள் தங்கள் நீதி, நியா யமான அபிலாஷைகளை வெளிப்படுத்தியபோது அதை செவிமடுக்க மறுத்து உதாசீனம் செய்து நிரா கரித்தபோதும்

தமிழர்களின் நியாயமான சாத்வீகப் போராட் டங்களை ஆயுதபலாத்காரத்தால் அடக்கும் "அரச பயங்கரவாதம்' கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் இவ்வாறுதான் எதிர்காலம் அமையும் என்று தமிழர் களின் அப்போதைய மிதவாதத் தலைமைகள் எச் சரிக்கை விடுத்து வந்தமையும் கூட மறக்கற்பால தல்ல.

அப்போது செய்யவேண்டியதை செய்யத் தவறி விட்டு இப்போது "சுடுகுது மடியைப் பிடி' என்று அலறுவதில் அர்த்தமில்லை.

அதேபோன்று, இப்போது நியாயமாகச் செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்துவிட்டு எதிர்காலத் தில் கலங்குவதும் அபத்தமானது என்பதைத் தென் னிலங்கைக்குப் புரியவைப்பது கட்டாயமாகின்றது.

சரி, ஜனாதிபதியின் வார்த்தைகளிலேயே நோக்கு வோம். ""ஆனந்தசங்கரியையும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் செவிமடுக்கத் தென்னிலங்கை தயார்'' என்று இப்போது கூறுவதும் கூட காதில் பூச் சுற்றும் வாசகங்கள்தாம்.

வடக்கும் கிழக்கும் தமிழரின் பூர்வீகத் தாயகங் கள். அவை பிரிக்கப்படக்கூடாதவை என்பதுதான் ஜனாதிபதி மஹிந்தர் இன்று மெச்சிப் போற்றும் சங் கரியினதும் அமைச்சர் டக்ளஸினதும் அண்மைக் காலம் வரையான அறிவிப்புகள், அறிக்கைகள், பேச்சு களில் வெளிப்பட்டு வந்தது. ""மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி; வடக்கும் கிழக்கும் என்றும் பிரிக்க முடியாத ஒரே அலகு'' என்பது தான் அமைச் சர் டக்ளஸ் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் செய்யும் பிரசாரம்.

ஆனால் யதார்த்தத்தில் நிலைமை என்னவாயிற்று? இந்தத் தமிழ்த் தலைவர்கள் தென்னிலங்கை அரசுக் குக் காவடி தூக்கிக் கொண்டிருக்கையிலேயே தமிழர் களின் பூர்வீகத் தாயகம் துண்டாடப்பட்டுவிட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் பிரிக்கப்படா மலிருந்த தமிழர் தாயகத்தை அதை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தி, தொடர்ந்து பேணுவதற்கான சட்டப் பலமும் வலுவும் தென்னிலங்கை அரசுக்கு இருந்தும் கூட நீதிமன்றத்தைக் காட்டி அதைத் துண்டாடி நிற்கிறது மஹிந்தரின் அரசு. செய்வதறியாது, வாய் புதைத்து, அடங்கி நிற்கின்றனர் மஹிந்தர் இன்று மெச்சிப் போற்றும் அந்தத் தமிழத் தலைவர்கள்.

ஆகவே அமைச்சர் டக்ளஸ், ஆனந்தசங்கரி போன்ற அரசின் பக்கம் நிற்கும் தமிழ்த் தலைவர்களால் கூட பேரினவாதத்தை மிஞ்சி தமிழர்களுக்கு நியாயம் பெற் றுத்தர முடியாது என்பது நிரூ பணம் ஆகியுமுள்ளது.

இறுதி மூச்சைவிடும் கட்டத்தில் "பயங்கர வாதம்' இருப்பதாகவும் ஜனாதிபதி தமது நேற்றைய உரை யில் பெருமிதம் தெரிவித்திருந்தார்.

நல்லது. அவரும், தென்னிலங்கையும் இன்று சீறிப்பாய்ந்து சித்திரிக்கும் அந்தப் "பயங்கரவாதம்' இந்த நாட்டில் முளைவிட்டு முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி யில் இருந்தபோதுதான் அது முகிழ்த்தது எனலாம். அதன் பின்னர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேம தாஸா, டி. பி. விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க என்ற வரிசையில் மஹிந்த ராஜபக்ஷ அதை இப்போது எதிர்கொள்கிறார்; எதிர்க்கிறார்.

ஜனாதிபதி மஹிந்தரும் அவரது தென்னிலங்கை அரசுத் தலைமையும் இன்று தீண்டத் தகாத நோய் என்று திட்டித்தீர்க்கும் "பயங்கரவாதம்' இந்த இலங் கைத்தீவிலிருந்து ஒழிய நீங்க வேண்டு மானால் அதற்கு ஒரே வழிதான் உண்டு.

அந்தப் "பயங்கரவாதம்' பிறப்பெடுக்கக் காரண மான அரச பயங்கரவாதம் அகற்றப்பட்டு முற்றாகக் களையப்படவேண்டும். வரலாற்று உண்மைகளை யதார்த்தங்களை உள்வாங்கி, ஈழத்தமிழர்களின் நியா யமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு நீதி செய்யும் மனப்பக்குவமும் தாராளமும் தென்னிலங் கைக்கு ஏற்படவேண்டும். தீர்வின் அடிப்படை, வாக்கு களின் எண்ணிக்கையில் அல்லாமல், நீதியின் அத்தி வாரத்தில் உருவாக்கப்படவேண்டும்.

இதற்குத் தென்னிலங்கை இணங்காவிடில் அல்லது தயாராகாவிடில், தென்னிலங்கையால் இன்று "பயங்கரவாதம்' எனச் சித்திரிக்கப்படும் தமிழரின் விடுதலைப் போராட்ட வேட்கை ஒருபோதும் தணிந்து போகும் சாத்தியம் உருவாகாது. மாறாக வெட்ட வெட்ட வளரவே செய்யும்.

- சுடர் ஒளி

இனிமேல் வெட்ட முடியாது. நிலத்தின் மேல் நெடிதுயர்து நிலத்தின் கீழ் நீண்டு வேரோடி

பெருவிருட்சமாய் நின்று கனி தரும் வேளையில் வெட்ட நினைக்கும் அந்தக் கயவனை

எமது காவற்காரன்தான் விட்டுவைப்பானா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.