Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’மக்களால் நான்... மக்களுக்காக நான்... அம்மா வழியில் பயணம்!’ - பொதுச் செயலாளர் சசிகலா உரை! (ஆடியோ)

Featured Replies

’மக்களால் நான்... மக்களுக்காக நான்... அம்மா வழியில் பயணம்!’ - பொதுச் செயலாளர் சசிகலா உரை! (ஆடியோ)

 

sasikalaaaaaaaaaaa_15150.jpg

"மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசினார் சசிகலா. அப்போது, ஜெயலலிதாவின் மறைவை குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத்தார்.

மேலும், அவரது முதல் குரலை கேட்க இந்த ஆடியோவை க்ளிக் செய்யவும்..!

 

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/76442-i-have-dedicated-myself-to-people-sasikala.art

ஆஹா, சின்னம்மாவின் குரல் யூரியூப்பில் தேனாக இனிக்கின்றது. தேன்மதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்கின்றது. பாரதி கண்ட புதுமைப்பெண் நம் சசிகலா மேடம் வாழ்க!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் எப்போதும் கசக்கும் அல்லது உறைக்கும் அதைவிட பொதுவெளியில் சிலவிடையங்களை கூறுவது சிலருக்குச் சினத்தை வரவைக்கும்.

யாழ் களம்கூட எனது கருத்தைத் தூக்கி எறியலாம்.

ஆனால் யான் யார்க்கும் குடியல்லேன்.

அரம்பகாலத்தில் ஜெயலலிதா அவர்கள் சினிமாவில் முழுநேர நடிகையாக இருந்தகாலங்களில் ஆண் ஆதிக்க வர்க்கவாதிகளால் மிகவும் சங்கடங்களுகுள்ளாகியவர் தவிர எம் ஜி ஆர் எனும் அப்போதைய தமிழ் சினிமாவின் பலம்மிக்க நடிகர் கொம் அரசியல்வாதியால் பல சங்கடங்களைச் சந்தித்தவர் தவிர நடைமிறை உலகில் அவரால் ஏனையவர்களுடன் பழக முடியாது தனிமைப்படுத்தப்பட்டவர்.

அதன் இறுதிக்காலங்களில்தான் சசிகலா அவருக்கு அறிமுகமாகிறார், அவர்களது நட்பு இறுக்குமடைந்து ஏதோ ஒரு தேடலுக்கு சசிகலாவே விடையாக இருந்து வழக்கத்துக்கு மாறானதாக கட்டுப்பெட்டிகளால் கருகப்படும் லெஸ்பியனிசத்துடன் இருவரும் ஈடுபாடடைந்து. பின்பு நிரந்தர உறவினால் போயஸ்கார்டனுடன் அதிமுக தலைமைச்செயலகமும் இப்போ சசிகலா கையில்.

இன்று சசிகலாவின் கணவர் (?) நடராஜன் அனறுவிட்டதை இன்று வட்டியும் முதலுமாகப் பிடித்துவிட்டது வேறுவிடையம்.

ஆனால் எனக்கு இது தவிந்த ஒரு சந்தேகமும் இருக்கு

பொதுவாக, லெஸ்பியன் உறவில் இருப்பவர்களில் ஒருவருக்கு எக்ஸ் குரோமோசோன் மற்றும் வை குரமொசோன் அவைகளது எண்ணிக்கை சாதாரண பெண்களைவிட வேறுபடும். 

இதுவரை நான் ஜெயலலிதா அவர்களது நடையுடைகளை அவதானித்து இருவரில் ஜெயலலிதாதான் ஆண்மைத்தன்மை அதிகமாக இருப்பார் என ஊகித்தேன்.

ஆனால் இன்று சசிகலா அவர்களது குரலை அவதானிக்கும்போதுதான் விடையம் வெளிச்சத்துக்குவந்ததது.இ

கொசுறுச்செய்தியாக

ஜெயலலிதா தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர் நேரடியாகச் சென்றது அவரது இளமைக்காலத் தோழி நடராஜனது தங்கை மாலாவிடம்தான்.ங்கு ஆணாதிக்கம் சசிகலாவிடமென.

யாழ் களம் விருப்பமென்றால் விட்டுவையுங்கோ இல்லையேல் வெட்டிவிடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

15781656_241067759638979_762097688594201

:D:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 

ஜெயராஜ் மரணமும் சசிகுமாரும்!

 
download.jpg


ஜெயராஜ் மரணத்தில் ஏன் இத்தனை மர்மங்கள்? 

அந்த மரணத்தால் மிகப்பெரிய பலனை அனுபவிப்பது சசிதான் எனும்போது எல்லோர் சந்தேகமும் சசிகுமார் மீது பாய்வது இயற்கைதானே?
 
ஜெயராஜ். ஆரம்பத்திலிருந்தே ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்து, மர்மமாகவே இறந்தும்போனார்!
 
ஜெயராஜ் ஒரு நாடகக் கலைஞருக்கு மகனாகப் பிறந்தவர்!

 
நன்றாகப் படித்து ஒரு நல்ல பதவியில் அமரவேண்டும் என்ற லட்சியம் அப்பாவின் கட்டாயத்தால் நாடகக்கொட்டகையில் முடிந்தது!

 
நடிக்கவந்த இடத்தில், தன் அழகாலும் திறமையாலும் நிலா என்ற பெயர்பெற்ற ஸ்திரீபார்ட்டோடு அதிகம்ஜோடி சேர்ந்து நடித்ததில், ஏறத்தாழ அவரது கணவராகவே மக்கள் மனதில் இடம் பெற்றார்!

 
சட்டென்று ஷோபி என்ற இன்னொரு வேற்றுமொழி நடிகையோடு மனமொத்துப்போய் நிம்மதியாகநாடகக்கொட்டகையை மறந்து வாழ்ந்துவந்தார்!

 
காலம் இப்படி ஒரு அமைதியான கதையை வேடிக்கை பார்க்காதே!

நிலா, நாடகத்தில் நடிக்கும்போதே, ஷேர் மார்க்கெட்டில் ஈடுபாடு கொண்டவர்.

 
தம்பிதுரை என்பவர் நடத்திவந்த கம்பெனியில் தயாநிதி என்பவர் இயக்குனராக இருந்தார்! தம்பிதுரைமறைவுக்குப்பின் சில உள்ளடி வேலைகள் செய்து தானே நிர்வாக இயக்குனராகி அந்த கம்பெனியை ன்வசமாக்கினார்!

 
அதில் கவுரவ இயக்குனராக இருந்த நிலா, ஒரு கட்டத்தில் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்தார்!

 
தயாநிதி, நிலா, இருவருமே, தத்தம் கம்பெனிகளை திறமையாக நிர்வகித்து, அகில இந்தியக் கம்பெனிகள்தங்களுக்குப் போட்டியாக வராமல் பார்த்துக்கொண்டார்கள்!

 
download%2B%25281%2529.jpg
 
நிலா இருக்கும்வரை, தயாநிதிக்கு எந்தஒரு மேஜர் காண்ட்ராக்ட்டும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்!

 
இந்த நிலையில்தான் ஜெயராஜ் வாழ்வில் அந்தத் திருப்பம் வந்தது!

நிலா, தன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள ஜெயராஜுக்குத் தூது அனுப்பினார்!

 
கம்பெனியிலோ, வியாபாரத்திலோ சுத்தமாக அவருக்கு ஈடுபாடே இல்லை.

ஷோபியோடு நிம்மதியாக வாழ்வதே அவர் விருப்பமாக இருந்தது!

 
ஆனால் நிலாவின் பிடிவாதம் ஊர் அறிந்தது!

சாம பேத தண்டப் பிரயோகத்தில் ஜெயராஜை இழுத்துவந்தார்.

 
விருப்பமே இல்லாது வந்த ஜெயராஜ் சீக்கிரத்திலே அதிகார சுகம் தந்த போதையில், நிலாவுக்கு எதிராகவேஉள்கட்சி அரசியல் செய்யவும் துணிந்தார்!

 
எல்லோருக்கும் வரும் மரணம் நிலாவுக்கும் வர, சிலபல சில்லறை வேலைகளோடு, அந்தக் கம்பெனிக்குநிர்வாகி ஆனார் ஜெயா!
 
தயாநிதி, ஜெயா இருவரும் மாறிமாறி தமிழக காண்ட்ராக்ட்களை அள்ள, தேசியக் கம்பெனிகள் மிக்ஸர்சாப்பிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்தன!

 
நிலாவின் மேலிருந்த ஆத்திரம் ஜெயாவை அகங்காரம், ஆணவம், அகந்தை என வேறுதளத்துக்குஇட்டுச்செல்ல,

கம்பெனியில் அனைத்து இயக்குனர்களையும் தன் காலில் விழும் அடிமைகளாகவே நடத்திவந்தார்!

 
அவர்களும் வருமானம் வரும்போது தன்மானமாவது வெங்காயமாவது என்று அடிமை வேஷத்தையேதிறம்படப் போட்டு, காண்ட்ராக்ட், கமிஷன் என்று கொடிகட்டிப் பறந்தார்கள்!

 
இந்தக் கதையில் அடுத்த திருப்பம்!

 
நிலாவால் ஜெயாவை வேவுபார்க்க அனுப்பப்பட்ட வேலைக்காரன் ட்ரைவர் சசிகுமார், சிறிது சிறிதாகஜெயாவின் தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு அவரது உடன்பிறவா சகோதரன் ஆனான்!

 
jaya%2Bsasi.gif
 
எல்லோரையும் அடிமையாய் நடத்தும் ஜெயராஜ், சசியிடம் எதனாலோ கட்டுப்பட்டுப் போனார்!

 
சசியும், அவர் உறவுக்கூட்டமும் ஜெயராஜை முழுமையாக அடிமைப்படுத்தியது!

 
சட்டவிரோத நடவடிக்கைகளில் சற்றும் தயக்கமே இல்லாமல் ஈடுபட்டு அந்தக்கும்பல் பணத்தை அள்ளியது!

 
அம்பானி, அதானிக்கே சவால்விடும் அளவில் அந்தப் பிச்சைக்கார கும்பல் தமிழகத்தைக் கூறுபோட்டுவளைத்தது!

 
ஜெயக்குமாரின் அக்கா குடும்பம் ஜெயராஜை  அண்டாமல் அந்தக் கும்பல் சாமர்த்தியமாக வேலிபோட்டுப்பிரித்தது!

 
யாருமற்ற தான் யாருக்காக சொத்து சேர்க்கிறோம் என்பதே தெரியாமல், உற்சாகமாக இந்த கும்பலோடுகொள்ளையில் ஈடுபட்டு இருமுறை சிறை சென்றபோதும், ஜெயா, தன் கம்பெனியின் கோடிக்கணக்கானபங்குதாரர்களின் நலனை எண்ணாமல், இந்தக் கும்பலின் கூடாரத்தில் சந்தோஷமாக, இயல்பாகஇணைந்துகொண்டார்!

 
கொஞ்சம் கொஞ்சமாக சசிகுமார் நியமிப்பவரே கம்பெனியின் இயக்குனர்கள், அதிகாரிகள் ஆகமுடியும்என்ற நிலைமை ஏற்பட்டபோதும், ஒரு டிரைவரின் காலை நக்கிப் பிழைக்க அந்த டைரக்டர்களும்பழகிப்போனார்கள்!

 
இந்த நிலையில், ஊழ்வினை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்காய் உருவெடுக்க, அதன் தீர்ப்பு தங்களுக்குசாதகமாக வராது என்பது வெளிப்படையானது!

 
அப்போது, யாருக்கும் புரியாத மர்மமாய் ஜெயராஜ் காய்ச்சல் என்ற பெயரில் மருத்துவமனைக்கு ஒருநள்ளிரவில் எடுத்துச் செல்லப்பட்டார்!

 
அதுதான் ஜெயராஜை உலகம் கடைசியாகப் பார்த்தது!

 
எழுபத்தைந்து நாள்!

சசியின் மொத்தக் கட்டுப்பாட்டில் ஜெயாவுக்கு மருத்துவம் நடப்பதாய் நாடகம் நடந்தது!

 
அவரது அக்கா மகனான தீபன் உட்பட யாருமே பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது!

 
கேள்வி கேட்கவேண்டிய மத்தியக் கட்டுப்பாட்டு நிறுவனமோ, சசியின் கண்ணசைவில் ஆடியது!

 
அதன் பிரதிநிதிகள் சசி சொல்வதை திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் ஆனார்கள்!

 
எழுபத்தைந்து நாள் அவகாசத்தில் ஜெயராஜின் கைரேகைகள் தேவையான அளவு  உருட்டப்பட்டன!

 
சசியின் பேரங்கள் முடிந்தபின் ஜெயராஜின் இருப்பு தேவையற்றதானது!

மேலும் ஒரு நாடகத்தில், உச்சகட்டக் காட்சி அரங்கேற, ஜெயராஜ் மாரடைப்பால்”  காலமானார்!

 
மத்தியப் பிரதிநிதி மிளகாய் நாயுடு நாள் முழுக்கக் கூட இருந்து எல்லா ஏற்பாட்டையும் சுமுகமாகமுடித்துக்கொடுக்க,

 
பிணம் அனாதையாய் மருத்துவமனையில் கிடக்க, இங்கே, கம்பெனிக்கு டைரக்டர்கள் நியமனம்அர்த்தராத்திரியில் அரங்கேறியது!

 
இந்த உலகத்தில் எங்குமே நடந்திராதவகையில் நள்ளிரவில், கொஞ்சமும் மனஉறுத்தல் இன்றிப்பிணத்தின் மேல் பதவியேற்றன அடிமைகள்!

 
அவசரம் அவசரமாக ஜெயராஜ் சசி கைகாட்டி இடத்தில் எரியூட்டப்பட, உண்மைகள் அவரோடேஎரிந்துபோயின!

 
கம்பனியை வசப்படுத்தியதோடு, ஜெயராஜின் அப்பா சம்பாதித்த சொத்து உட்பட, எல்லாவற்றையும்கேள்வி கேட்பாரின்றி தன் வசப்படுத்தியது சசியின் கொள்ளைக்கூட்டம்!

 
ஜெயராஜின் அக்கா மகன் தீபனும் பத்திரிக்கைப் பேட்டி கொடுப்பதோடு தன் கடமை முடிந்ததென்றுஒதுக்கிக்கொள்ள,

கம்பெனியின் கோடிக்கணக்கான பங்குதாரர்களை மயிருக்கு சமானமாக மதித்து, அவர்களை சசிக்குஅடிமை ஆக்கியது காலில் விழுந்து புரண்டு சுகம் கண்ட அடிமைக்கூட்டம்!

 
இழவு விழுந்து முப்பதுநாள் கூட முடியாத நிலையில், கோலாகலமாக விழா எடுத்து சசியை நிர்வாகஇயக்குனர் ஆக்கியது அடிமைக்கூட்டம்!

 
போதாக்குறைக்கு, ஜெயராஜுக்கு தொழில் கற்றுக்கொடுத்ததே அந்த ட்ரைவர்தான் என்றும்,

கம்பெனியைக் கட்டிக்காத்ததே சசிதான் என்றும்,

ஜெயா வெறும் அறிவுகெட்ட முண்டம் என்றும்

கூசாமல் ஊடகங்களுக்கு பேட்டிகொடுத்து தங்கள் விசுவாசத்தை நிரூபித்தது அடிமைக்கூட்டம்!

 
காசு மட்டுமே ஊடக அறமாகக்கொண்ட ஊடகங்களும் கல்லாவை நிரப்பிக்கொண்டு ஆமாம்சாமிபாட்டுப்பாடின!

 
கேள்வி கேட்கவேண்டிய மத்திய நிர்வாகமோ, தனக்குத் தலையாட்டும் முப்பத்துஒன்பது மற்றும்பதினோரு அடிமைகளும், கண்டைனர் கணக்கில் பணமும் போதுமென்று ஒதுங்கிக்கொண்டது!

 
நீதிமன்றமே முன்வந்து ஜெயா மரணம் குறித்து ஏன் அக்கா மகன் தீபன் வழக்குத் தொடரவில்லை என்றுஆதங்கமாய்க் கேட்டது!

சசியின் பதவியேற்புக் கோலாகலங்களில் அந்தக் கேள்வியும் காற்றில் கரைந்தது!

 
அவ்வளவுதான்!

 
சுபம்!

 
பி கு:

 
இந்தக்கதையை படித்துப்பார்த்த என் பதின்ம வயது மகன் கேட்ட கேள்விகள்!

 
1.      ஜெயா உறுதியானவர், திறமையானவர் என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயலும் உனக்கு, ஆரம்பம்முதலே, அடுத்தவர் இழுத்த இழுப்புக்குத்தானே வளைந்து கொடுத்திருக்கிறார் என்பது புரியவில்லையா?

 
2.      கோடிக்கணக்கான பங்குதாரர்கள் ஜெயராஜ் மீது உயிரையே வைத்திருப்பதாகவும், அவர் சிறைசென்றபோதே தீக்குளித்ததாகவும் கதை சொல்கிறாயே, இன்று அவர் மரணத்துக்கு அவர்கள் யாருமே ஏன்வீதியில் இறங்கிப்போராடவில்லை?

 
 
3.      தயாநிதிக்கு உண்மையில் மக்கள்மேல் அக்கறை இருந்திருக்குமானால், இந்த அவலத்தைத் தடுக்க ஏன்எந்த முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்?

 
4.      மாற்றுக்கம்பெனியை கைப்பற்றத் துடிக்கிறார் என்ற கெட்டபெயர் வரும் என்ற பயம் மட்டுமே காரணமா? இல்லை சசியோடு ஏதும் கள்ள உடன்படிக்கையா?

 
5.      ஜெயா இருக்கும்போதே ஆட்டம்போட்ட இந்தக் கொள்ளைக்கூட்டம் இனி ஆடப்போகும் ஆட்டத்தின்பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கும் கடமை அவருக்கு இல்லையா?

 
6.      தமிழக மக்களுக்கு இனி விமோசனமே இல்லையா?

 
 
 
வழக்கம்போல் காற்றில் கரைந்தன கேள்விகள்!

 
  • தொடங்கியவர்

சசிகலா தோற்றத்தில் ஜெயலலிதாவின் அடையாளங்கள்!

 

சசிகலா

ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த சசிகலா, இன்று அதிமுக-வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். எந்த நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதாவுக்கு துணையாக சசிகலா இல்லாமல் இருக்காது. ஒவ்வொரு தலைவருக்கும் சில அடையாளங்கள் இருக்கும். அதுபோல, ஜெயலலிதா என்றவுடனே, நேர்த்தியான உடை, தெளிவான குரல் உள்ளிட்ட சில அடையாளங்களாக மக்கள் மத்தியில் உள்ளன. இன்று ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்யும் சசிகலாவின் தோற்றத்தில் சில மாற்றங்களைக் காணமுடிகிறது.

* 'அடிக்கும் கலர்' என கிராமத்தில் சொல்லப்படும் டார்க் கலர்களை நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் நாகரிகம் என விரும்புவதில்லை. பூபோட்ட சேலைகளே  கிராமத்துப் பெண்களை அதிகம் கவரும். நார்மலான கலர்கள்,  பார்ப்பவர்களிடம்  தனி மரியாதையைக் கூட்டும். இதேபோல புது ஸ்டைல் என வருவதை உடனே ஏற்று, அதற்கு ஏற்றார்ப்போல மாறிக்கொள்ளவும் மாட்டார்கள். பாரம்பர்ய வழக்கம் என்பதும் கூடுதல் தகுதி. இத்தகைய வழக்கத்தையே சசிகலாவும் இதுவரை பின்பற்றி வந்தார். ஆனால் இன்று ஜெயலலிதாவைப்போல புடவையும் ஸ்டைலையும் மாற்றிவிட்டார்.

ஜெயலலிதாவின் அடையாளங்கள்:
*நெற்றிப் பொட்டுக்கு மேல் செந்தூரக் கோடு,  ஜெயலலிதாவின் முக அழகை உயர்த்திக் காட்டியது.
*பார்டர் வைத்த  பச்சை நிறச் சேலை, அனைவரும் விரும்பும்  நிறம்.
*இடது கையில் கறுப்புப் பட்டையில் வாட்ச் , செயலில் உறுதித்தன்மை .
*முடிபோட்ட கூந்தல், அம்மாவின்  எளிய  அலங்காரம் இவையெல்லாம் முன்னாள் முதவர் ஜெயலலிதாவின் அடையாளங்களாக இருந்தவை.

சசிகலா

சசிகலாவின் மாற்றங்கள்:
லைட் கலர் பூ போட்ட சேலையும் அதற்கு மேட்சாக சாதாரண ப்ளவுஸும், வட்டப்பொட்டும், ஜடை போட்ட கூந்தலும், வளையல்களுடன் ஒற்றை மூக்குத்தி, என இது நாள்வரை அணிந்து வந்த சசிகலா,    'அக்காவைப் போலவே நானும் மாறிவிட்டேன்' என்பதைச் சொவதைப் போல  தன் அடையாளங்களை மாற்றிவிட்டார்.

*காலர் வைத்த ப்ளவுஸும், ஜெயலலிதா பேசுவதைப் போலவே வார்த்தைகளைச் சுருக்கமாகவும் ஜெயலலிதா  உச்சரிப்பைப் போலவும்  பேசி, சாதாரண மக்களை மட்டுமல்லாமல், அனைவரையுமே ஆச்சர்யப்படவைத்துவிட்டார்.
''நம் அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை; ஆனால் நமக்கோ அம்மாதான் வாழ்க்கை.'' என்றது ஜெயலலிதாவை நினைவூட்டியது.
''மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில்  நாம் பயணம் மேற்கொள்வோம்.''  என்றவரின் வார்த்தைகள் நாளை, ''மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மாறலாம். மாறினால், வயது வித்தியாசம் இல்லாமல் 'அம்மா" என்று உண்மை அன்போடு அழைத்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நேர்மையான ஆட்சி அமைவதற்காகச்  சசிகலா செய்யும்  மாற்றங்களை  மக்கள் வரவேற்பார்கள்.

http://www.vikatan.com/news/politics/76490-sasikala-tries-to-match-her-appearance-with-jayalalithaa.art

  • தொடங்கியவர்

ஆடை, அலங்காரம்: ஜெயலலிதா பாணியில் சசிகலா

 
 

அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட சசிகலா, மறைந்த முதல்வரும் அவரது தோழியுமான ஜெயலலிதாவைப் போல தனது உடை மற்றும்சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார் என்பது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

 

நீளமான கையுடன் ரவிக்கை மற்றும் கொண்டை சிகை அலங்காரத்தில் சசிகலா

 நீளமான கையுடன் ரவிக்கை மற்றும் கொண்டை சிகை அலங்காரத்தில் சசிகலா

வியாழக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின், பச்சை வண்ண சேலையில் தோன்றிய சசிகலா காலர் மற்றும் கையை மறைக்கும் நீளமான ரவிக்கையில் தோன்றினார்.

 

தலைமை அலுவலகத்தில் சசிகலா

தொண்டர்களுக்கு வணக்கம்

சனிக்கிழமையன்று அதிமுகவின் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் ஜெயலலிதாவைப் போன்றே அவரது சிகை அலங்காரமும் செய்திருந்தார் என்று கருதப்படுகிறது.

ஜெயலலிதாவோடு பொது வெளியில் தோன்றிய தருணம் மற்றும் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த நேரம் வரை அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் சிகை அலங்காரத்துக்கும் தற்போதை தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எப்போதும் கொண்டை சிகை அலங்காரத்துடன் இருக்கும் ஜெயலலிதா  எப்போதும் கொண்டை சிகை அலங்காரத்துடன் இருக்கும் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, சசிகலாவின் நீளமான கச்சையுடன் சசிகலாகாலர் மற்றும் நீளமான கையுடைய ரவிக்கையுடன்

சசிகலா இது நாள் வரை அணிந்திருந்த ரவிக்கை, அரைக் கை அளவு நீளம் மற்றும் அவரது சிகை அலங்காரம் சாதாரண பின்னல் முறையில் இருந்தது. கடந்த வாரம் முதல் அவரது தோற்றத்தில் மாற்றங்கள் வெளிப்பட ஆரம்பித்தன.

ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த போது, அரை கை அளவு கச்சை மற்றும் சாதாரண பின்னல் கொண்ட வகையில் தோற்றமளிக்கும் சசிகலா  ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த போது, அரைக் கை அளவு ரவிக்கை மற்றும் சாதாரண பின்னலுடன் சசிகலா

கழுத்தை மறைக்கும் வகையில் காலர் மற்றும் நீளமான கையுடன் கூடிய ரவிக்கைக்கு மாறியுள்ளார். ஜெயலலிதாவைப் போலவே கொண்டை அலங்காரம் செய்திருக்கிறார் என்பதை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தள படங்கள் காட்டுகின்றன.

ஜெயலலிதாவுடன் பொது வெளியில் அரை கை அளவு ரவிக்கை மற்றும் சாதாரண பின்னல் கொண்ட வகையில் தோற்றமளிக்கும் சசிகலா  ஜெயலலிதாவுடன் வாக்களித்த நேரத்தில்

ஏன் இந்த மாற்றம்?

சசிகலாவின் உடை மாற்றம் மற்றும் சிகை அலங்கார மாற்றம் மக்கள் மத்தியில் சென்று சேர செய்யப்பட்ட இயல்பான மாற்றங்கள் என்கிறார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி. ''சசிகலா தற்போது ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சியின் தலைவர் என்ற ஒரு பொறுப்பை ஏற்றுள்ளார். அது மிகப் பெரிய பொறுப்பு. மக்கள் மத்தியில் தோன்றும் போது தோற்றம் மிக முக்கியம். அவர் தலைமை பொறுப்பு ஏற்கும் நிகழ்வில் அழகான தோற்றத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோற்றத்தில் வந்தார்,'' என்றார்.

ஜெயலலிதா ஆற்றிய உரைகளின் எதிரொலியாகத் தான் சசிகலாவின் பேச்சு இருந்தது என்றும் சரஸ்வதி குறிப்பிட்டார். ''ஜெயலலிதா மக்களால் நான், மக்களுக்காக நான் என்றார். அது போலவே, சசிகலாவும் அவரது உரையில், அதிமுக கழகத்தினர் கேட்டுக்கொண்டதற்காகத்தான் இந்தப் பணியை ஏற்பதாகவும், மக்களுக்காக உழைப்பதே தனது நோக்கம் என்றார். இது எங்களுக்கு மறைந்த முதல்வரைத்தான் ஞாபகப்படுத்துகிறது,'' என்றார்.

ஜெயலலிதா

 

 

புதிய தோற்றத்தில் சசிகலா

 புதிய பதவி, புதிய தோற்றம்

 

 

மக்கள் மனதைக் கவர முடியுமா?

இதற்கிடையில், சசிகலா தனது ஆடை மற்றும் சிகை அலங்காரத்தில் செய்துள்ள மாற்றங்களால் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் மனதில் இடம் பிடிப்பது சிரமம் தான் என்கிறார் எழுத்தாளர் வாஸந்தி. ''சசிகலா ஜெயலதாவின் தோழி என்று தான் இது நாள் வரை அறியப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் வீட்டில் அவருக்கு உதவியவர் என்ற தோற்றம்தான் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது. வெறும் வெளித்தோற்றம் என்பது நடிப்பு என மக்கள் எண்ணுவார்கள் ,'' என்றார்.

ஜெயலலிதாவிற்கு இருந்தது போன்ற விசுவாச தொண்டர்கள் சசிகலாவிற்கு கிடைப்பது உறுதி இல்லை என்கிறார் வாஸந்தி. ''சசிகலா அரசியல் தளத்தில்செயல்பட்டது போல ஒரு தோற்றத்தை அவரது கட்சியினர் வலிந்து ஏற்படுத்துவது தெளிவாக தெரிகிறது,'' என்கிறார்.

http://www.bbc.com/tamil/india-38477857

  • தொடங்கியவர்

தனது கன்னிப் பேச்சில் சசிகலா சொன்னதும்... சொல்லாததும்!

 

 

சசிகலா

.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், சசிகலா கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக உரை நிகழ்த்தினார். அவரது உரை, வெளியில் கூடி நின்ற தொண்டர்களுக்கும் கேட்கும் வகையில், அகன்ற எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்டது.

சசிகலா தனது உரையின்போது, "உலகமே வியக்கிற வெற்றிகளால், அ.தி.மு.க-வை வழி நடத்திய நம் அம்மா, இப்போது நம்மிடம் இல்லாத நிலையில், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், கழகம்தான் தமிழகத்தை ஆளும் என, நம் அம்மா முன் வைத்துச் சென்றிருக்கிற நம்பிக்கையைக் காப்பதற்காக கூடி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

"ஜெயலலிதாவின் வழியில் கழகப் பணியாற்றிடுவேன். ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனையோ கூட்டங்களில் அம்மாவுடன் கலந்து கொண்டேன். ஆனால் இன்று, மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது" என்று சொன்னதன் மூலம் இவர், ஜெயலலிதாவுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் மிக்கவர் என்பதை பதிவு செய்ய விழைந்துள்ளார்.

'தன்னை நம்பி வந்தவர்களை என்றுமே கைவிடாத நம் அம்மா' என்று சசிகலா கூறியது, யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவருக்கு சரியாகப் பொருந்தும்.  "அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றும் அளவுக்கு உடல் நலம் தேறிவந்த நிலையில்", என்று மீண்டும் ஒருமுறை அப்போலோ சொன்ன அதே பொய்யான தகவலை தலைமைக் கழகத்திலும் பதிவு செய்துள்ளார் சசிகலா. எவ்வளவோ முயன்றபோதிலும், இறைவன், ஜெயலலிதாவின் இதயத்துடிப்பை நிறுத்தி விட்டார் என்று குறிப்பிடுகிறார்.

"தேவதை இல்லாத அரசியல் மாடம், களை இழந்து நிற்கிறது. எனக்கோ, அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிற நிர்கதி நிலை. சில நிமிடங்கள் மட்டுமே அம்மாவை சந்தித்தவர்கள்; சில முறை மட்டுமே அம்மாவைப் பார்த்தவர்கள்; சில விநாடிகள் மட்டுமே அம்மாவிடம் பேசியவர்கள்; அவர்களே இன்று அம்மாவின் பிரிவில் துடிக்கிறார்கள் என்றால், 33 வருடங்களை அம்மாவுடன் மட்டுமே என் வாழ்நாட்களை கரைத்துவிட்ட எனக்கு எப்படி இருக்கும் என்பதை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று சூசகமாகக் குறிப்பிட்டு, தனக்குத் தான் மிகப்பெரிய இழப்பு மற்றவர்களைக் காட்டிலும், தானே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரத் தகுதியானவர் என்பதை சசிகலா சொல்லாமல் சொல்லியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அவரோடு இருந்த காலமெல்லாம், ``அக்கா, கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா; அக்கா, மதிய சாப்பாட்டிற்கு என்ன
வேண்டும்'' என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே தன் வாழ்நாட்களை செலவழித்தவள் என்று கூறும் சசிகலா, பின்னர், மக்களைப் பற்றி ஜெயலலிதா சிந்தித்தபோது, ஜெயலலிதாவைவும், கழகத்தையும் பற்றியே தான் சிந்தித்ததாக  தெரிவித்துள்ளார்.

Sasi_image_2_18413.jpgதனக்கு 62 வயதாகிறது என்றும், தனது வாழ்நாள் வரை, இந்த இயக்கத்திற்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்து, அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்."அவரை விட்டு நான் பிரிந்திருந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அதை நாட்கள் என்று சொல்வதை விட, அவருடைய கம்பீரக் குரலை நான் கேட்காத நேரம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, உங்களின் அன்புக் கட்டளை, எஞ்சி இருக்கும் காலத்தை, அம்மா கட்டிக் காத்த கழகத்திற்காகவும், கோடான கோடி கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது" என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சந்தடி சாக்கில், எதற்காக கார்டனை விட்டு, ஜெயலலிதா அவரை வெளியேற்றினார் என்பதை தனக்கு சாதகமாக மறைத்து விட்டார். கட்சியை விட்டு நீக்கியது, சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் ஜெயலலிதா இருந்தவரை கார்டனில் நுழைய அனுமதிக்காதது போன்ற தகவல்களை கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களும், தமிழக மக்களும் மறந்து விடுவார்கள் என்று கருதிவிட்டார் போலும்.

இடையிடையே தழுதழுத்த குரலில் பேசி, ஜெயலலிதாவின் மறைவு, தனக்கு மிகவும் வருத்தம் என்பதை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பதிய வைக்க எத்தனித்துள்ளார் சசிகலா. ஆனால், அனைத்தையும் மக்கள் அங்குலம், அங்குலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் அறிவாரா?

தமிழக மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசை தொடர்ந்து நிறைவேறும் என்றும் கூறும் அதே வேளையில், தனது குடும்ப உறுப்பினர்கள், ஆட்சி அதிகாரத்தில் தலையிட மாட்டார்கள் என்பதை தெரிவிக்க மறந்தது ஏன்? 

ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில், இந்திராவுக்குப் பின்னர், தனி ஒரு ஆளாக நின்று போராடி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த, ஜெயலலிதாவின் வழியில், தானும் அ.தி.மு.க-வின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று தெரிவித்ததன் மூலம், ஜெயலலிதாவுக்கு உள்ள துணிவு தனக்கும் உள்ளது என்று கூறுகிறார்.

பெரியாரின் தன்மானம், அண்ணாவின் இனமானம், எம்.ஜி.ஆரின் பொன்மனம், இவை யாவும் ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவின் போர்க் குணத்திற்கு ஈடு இணை ஆகிட ஒருவராலும் முடியாது என்றாலும், அவரது பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றி, இந்த இயக்கத்தை, மக்களின் அரசாக, அவர் காட்டிய வழியில் செயல்படும் என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா வழிநடத்திய ராணுவ கட்டுப்பாட்டோடு, இயக்கத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வு அளித்து அழகு பார்க்க, எந்த
அளவுகோலை அவர்  கொண்டிருந்தாரோ அதேபோல், இம்மி கூட விலகாமல் இந்த இயக்கத்தை கொண்டு செலுத்துவோம் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த தொண்டனை தான் ஜெயலலலிதா உடல் அருகே கூட விடாமல், அரண் அமைத்து நின்றது மன்னார்குடி குடும்பம்!

ஜெயலலிதாவின் விருப்பப்படி, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அ.தி.மு.க சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். ஒன்றரை கோடி பிள்ளைகளை (தொண்டர்களை) ஜெயலலிதா தன்னிடத்தில் ஒப்படைத்திருப்பதாகவும், அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்திருப்பதாகவே உணர்கிறேன் என சசிகலா பேசியது, ஜெயலலிதாவுக்குப் பின்னர், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, தயாராக இருந்தது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எப்படியோ, மருத்துவமனையில் 75 நாட்கள் என்ன நடந்தது? என்றே தெரியாத நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கும், குறிப்பிட்ட சிலருக்குமே உண்மை தெரிந்திருந்த நிலையில், அதேபோன்று, பொதுக்குழு, பொறுப்பேற்பு, சசிகலாவின் முதல் உரை என அனைத்துமே அரங்கேறியுள்ளது. 

http://www.vikatan.com/news/coverstory/76486-what-sasikala-said-and-failed-to-say-in-her-first-speech-as-admk-general-secretary.art

  • தொடங்கியவர்

கன்னி உரைக்கு எப்படித் தயாரானார் சசிகலா?! -கார்டன் ஒத்திகையின் 'கலகல' பின்னணி

 

sasi_speech_16478.jpg

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, சசிகலா நிகழ்த்திய முதல் உரையை ஆச்சரியத்தோடு கவனிக்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். ' பொதுக்குழுவில் பேச வேண்டிய பேச்சை, தலைமைக் கழகத்தில் பேசினார். அவரது பேச்சு இந்தளவுக்கு வெற்றி பெறுவதற்குக் காரணமே ம.நடராசன்தான்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், தலைமைப் பதவிக்கு சசிகலா பெயரை முன்மொழிந்தனர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள். இதையடுத்து, இன்று நண்பகல் 12.20 மணியளவில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டு, விரிவான உரை நிகழ்த்தினார் சசிகலா. 'தலைமைக்கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டச் செயலாளர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளே, அனைத்து உடன் பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி' என உரையைத் தொடங்கினார். முதல்வர் உடல்நலனில் ஏற்பட்ட பாதிப்புகள்; காப்பாற்ற முடியாமல் போனது; அவருடன் 33 ஆண்டுகளாக வலம் வந்தது; கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டது என அனைத்தையும் உருக்கமாகவும் கண்ணீர் வடியும் கண்களுடன் பேசி முடித்தார் சசிகலா. இதுவரையில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்தவர், மைக் முன்  உரையாற்றியது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

natrajan_16036.jpg"பொதுக்குழுவில் பேசுவதற்காக தயாரித்திருந்த குறிப்புகளைத்தான் தலைமைக் கழகத்தில் பேசினார் சசிகலா. ஆனால், அவருக்காக உருவான முழு உரையை அவர் வாசிக்கவில்லை. அந்த உரையின் இறுதி வரிகளில், ' அம்மா இல்லாத இந்தக் காலகட்டத்தில், நம்மைச் சுற்றி எப்படிப்பட்ட சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கிறது என்பதை கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்' என முடிப்பதாகத்தான் இருந்தது. பா.ஜ.க மற்றும் தி.மு.கவை குறிவைக்கும் வகையில் இந்த வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இவற்றை கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டார் சசிகலா" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

"தொண்டர்கள் மத்தியில் அம்மா இல்லாத குறையைப் போக்கும் வகையில் பேசுவது என முடிவு செய்யப்பட்ட பிறகு, பேச்சுக்கான குறிப்புகளை தயாரிக்கும் பணிகள் துவங்கின. நடராசன் வழிகாட்ட மூன்று பேர் கொண்ட குழுதான் பேச்சுக்கான உரையைத் தயாரித்தது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படிக் கட்டிக் காப்பாற்றினார் என்பதில் தொடங்கி, என்ன செய்யப் போகிறோம் என்பது வரையில் குறிப்புகள் தயாரானது. இதன்பின்னர், கார்டனில் ஓர் அறையில் சிறிய மைக் ஒன்றை அமைத்து, பேசிப் பார்த்தார். பேச்சின் ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன் சொல்லிக் கொடுத்தார். எந்த இடத்தில் எந்த மாதிரிப் பேச வேண்டும் என்பதை விளக்கினார். இதில் திருப்தியடைந்த பிறகு, உடை விஷயத்தில் கவனம் செலுத்தினார். இதுவரையில், கோவில்களுக்குச் செல்லும்போது மட்டும் பட்டுச் சேலை உடுத்திக் கொண்டு செல்வார். வேறு எந்த ஆடம்பரங்களும் இருக்காது. ஆனால், கட்சித் தலைவர் என்ற தோற்றத்தைக் கொண்டு வருவதற்காக, கறுப்பு கலர் வாட்ச், தேர்ந்த உடை என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தார் தினகரனின் மனைவி அனுராதா. திட்டமிட்டபடியே பொதுச் செயலாளராக உருவாகிவிட்டார் சசிகலா. இந்த உரையில் மிஸ்ஸான ஒரே விஷயம், ஜெயலலிதாவைப் போலச் சொல்வதற்கு ஒரு குட்டிக் கதையைத் தயாரித்து வைத்திருந்தார். கடைசி நேரத்தில் கதைக்கு கத்திரி போட்டுவிட்டார்கள்" என விவரித்து முடித்தார். 

'எனக்கு அம்மா தான் எல்லாம். அம்மாவின் கழகமே எனது உலகம். கோடான கோடி கழக கண்மணிக்களுக்காகவும் நான் மீதம் உள்ள வாழ்வை கழிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்மை விமர்சிப்பவர்கள் கூட நம்மை பின்பற்றும் அளவுக்கு கழகத்தை வழிநடத்துவோம்' என அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்தே கருத்தைச் சொல்லிவிட்டு, கார்டனுக்கு விரைந்தார் சசிகலா. 

பொதுவாக, நிழல்கள் எப்போதுமே பேசுவதில்லை. அவைகள் பேச ஆரம்பித்தால் ராஜ்ஜியங்கள் நடுங்கும் என்பார்கள். தற்போது அண்ணா தி.மு.கவின் ராஜ்ஜியத்திற்குள் நிழலாக இருந்த சசிகலா நிஜத்திற்குள் வந்திருக்கிறார். கட்சி மற்றும் ஆட்சியின் எதிர்காலத்தை போகப் போக பார்ப்போம்!

http://www.vikatan.com/news/tamilnadu/76469-how-sasikala-prepared-for-her-first-public-speech.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கலைஞன் said:

ஆஹா, சின்னம்மாவின் குரல் யூரியூப்பில் தேனாக இனிக்கின்றது. தேன்மதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்கின்றது. பாரதி கண்ட புதுமைப்பெண் நம் சசிகலா மேடம் வாழ்க!

எனக்கு சின்னம்மாவுக்கு பின்னாலை நிக்கிற சின்னம்மாவிலை ஒரு கண்.....
மூக்கும் முளியுமாய்.....:grin:

 

FL14JAYA2_2175167g.jpg

  • தொடங்கியவர்

15822635_758285954321745_751672408548914

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டின் தலைநகர் டாக்காவில் இருந்து வெளிவரும் 'Daily Observer' என்ற நாளிதழ், அதனுடைய முதல் பக்கத்தில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்கிறார் என்ற செய்திக்கு, தவறாக அக்கட்சி ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பாவின் படத்தை பேப்பரை அச்சிட்டுவிட்டது. இதையடுத்து இந்தப் படத்தை வைத்து நெட்டிஸன்கள் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

15780626_1047195668760666_42265698766927

:D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.