Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ஆக்கிரமிப்புக்களும் அவற்றின் நோக்கமும்''

Featured Replies

''ஆக்கிரமிப்புக்களும் அவற்றின் நோக்கமும்''

நா.யோகேந்திரநாதன்

புத்தரின் சிலையை அல்லது படத்தை சேதப்படுத்துவதோ, முறையற்ற விதத்தில் கையாள்வதோ தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு அதற்கான தண்டனையாக இரண்டு லட்ச ரூபா அபராதம் விதிக்கப்படும். அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு சிறீலங்கா பாராளுமன்றத்தில் புதிய சட்டமொன்று விரைவில் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எந்தவொரு மதத்தையோ, மதச்சின்னங்களையோ, சேதப்படுத்துதல், அழித்தல் என்பது சம்பந்தப்பட்ட மதத்தவரின் மதச்சுதந்திரத்தையும், மதவழிபாட்டு சுதந்திரத்தையும் மீறும் செயலாக கருதப்படுகின்றது. இப்படியான செயல்கள் மதங்களுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கிடையேயும் விரிசல்களையும், விரோதங்களையும் தோற்றுவித்துவிடும்.

மதம் என்பது மனித வாழ்வை நெறிப்படுத்தவும், மானிட ஆன்மீக ஈடேற்றத்திற்குமான வழிகாட்டியாகவும், காணப்படுகிறது. மேலும் அது ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் இனங்களாலும் இனக்குழுக்களாலும் பேணப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் பாரம்பரிய சடங்குகள் யாவும் மதம் சார்ந்தவையாகவோ, மதத்துடன் தொடர்புபட்டவையாகவோ விளங்குகின்றன.

இவ்வகையில் ஒரு மதம் மதச்சின்னங்கள் அழிக்கப்படுவதோ சேதப்படுத்தப்படுவதோ பாரதூரமான ஒரு உரிமைமீறல் தான். அதே நேரம் அம்மதம் சார்ந்தவர்களின் உணர்வுகளை மிக மோசமாக புண்படுத்தும் செயலுமாகும். இவ்வாறான நிலையில் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள சட்டம் நியாயமான தொன்றாகவெ தென்படும்.

ஆனால் பல சமயங்களில் மதம் என்பது அதன் வாழ்வியல் நெறிமுறை, ஆன்மீக ஈடேற்றம், பண்பாட்டு அடையாளம் என்கிற எல்லைகளுக்கப்பால் விரிவடையும் போது இப்படியான சட்டங்களின் நியாயத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. அதாவது சில சமயங்களில் மதம் என்பது இன்னொரு மதத்தின், இனத்தின் உரிமைகளை நசுக்கும் ஆயுதமாக மாற்றப்படும் போது ஒரு ஆக்கரமிப்பின் தேவைக்காக பயன்படுத்துப்படும் கருவியாக்கப்படும் போது மதம் அதன் நல்லியல்புகளை இழந்து விடுகிறது.

மத நம்பிக்கை, மதப்பற்று என்பன மதவெறியாகவும், மத ஆக்கரமிப்பாகவும் மாற்றப்படுகின்றன. அங்கே மதங்களின் போதனைகள் கூட காலில் போட்டு மிதிக்கப்படுகின்ற செல்லாக் காசாகிவிட மதத்தின் பெயர் மட்டும் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய மதக்கோசங்களுக்குப் பின்னால் தங்களை அறியாமலேயே அம்மதத்தை சார்ந்த மக்களும் மேலாதிக்க சக்திகளின் கருவிகளாக பயன்படும் அளவிற்கு கீழிறங்கி விடுகின்றனர். இது உலக வரலாறு முழுவதிலும் காணப்படுகின்ற விரும்பத்தகாத துன்பியலாகும்.

இலங்கைத்தீவை முதன்முதலாக ஆக்கிரமித்த ஐரோப்பியர்களான போர்த்துகீசர் தங்கள் ஆக்கிரமிப்பிற்கான தளத்தை அமைப்பதற்கு மதத்தை ஒரு கருவியாக பாவித்தமையும் ஆக்கிரமித்த பின்பு தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த தமது மத நிறவனங்களையும், வழிபாட்டுத் தளங்களையும் அமைத்து மதத்தைப் பரப்பியதும், இங்கு நினைவு கூருதல் பொருத்தமானது. அது மட்டுமன்றி இங்கு பாரம்பரியமாக நிலவி வந்த பிற மதங்களை அழிப்பதிலும் மதவழிபாட்டுத் தளங்களை அழிப்பதிலும், அவர்கள் கூடிய அக்கறை செலுத்தினர். அதே வேளையில் போர்த்துக்கேயரின் ஆக்கரமிப்பிற்கெதிராக போராடிய தமிழ் மன்னன் சங்கிலி செகராசசேகரன் கூட மன்னார் படையெடுப்பின் போது மதம் மாறிய இருநூறு பேர்களை கொன்றமைக் கூட ஆக்கிரமிப்பிலும் ஆக்கிரமப்பிற்கு எதிரான போரிலும் மதம் வகித்த பாத்திரத்தை தெளிவு படுத்துகிறது.

அண்மைக்கல வரலாற்றில் கூட இந்தியாவின் இந்துத்துவம் இந்து வெறியாக மாற்றப்பட்டு அயோத்தியில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டமையும் இந்திய இந்துமத வரலாற்றில் கறைபடிந்த ஒரு அத்தியாயமாக விளங்குகிறது. அது மட்டுமன்றி அங்கு இந்து முஸ்லிம் உறவில் ஆழான விரிசலை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் மதப்பற்று என்பது மதவெறியாக மாற்றப்படும் போது பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன.

இலங்கைத்தீவு பிரிட்டிஸ் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் பௌத்தமதம் என்பது ஒரு ஆதிக்க சக்தியாகவும், ஆக்கிரமிப்பின் ஆயுதமாகவும் இன்று வரை பயன்படுத்தப்பட்டுவருகிறது.

1956-ம் ஆண்டிற்கு முற்பட்ட காலங்களில் தமிழர் நிர்வாகப்பகுதிகளில் பல புத்தவிகாரைகள், புதிதாக அமைக்கப்பட்டன. படிப்படியாக அவற்றை அடிப்படையாக வைத்து சிங்கள பாடசாலைகளும் அமைக்கப்பட்டன. இதன் மூலம் தமிழ்மக்கள் மத்தியில் சிங்கள மதம் பரப்பபட்டதுடன் சிங்கள மொழி மூலம் தமிழ் மக்கள் தங்கள் கல்வியைத் தொடரும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் 1956: 1977 ஆண்டு காலங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்களால் தமிழ்பகுதிகளில் பல விகாரைகள் இயங்காத நிலையும் சிங்களப் பாடசாலைகள் இல்லாமற் போன நிலையும் ஏற்பட்டது.

ஆனால் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் இந்நிலை மிக வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கின. கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் மூலம் அம்பாறை ஒருபுறம் சிங்கள மயப்படுத்தப்பட இந்து முஸ்லிம் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகள் இடம் பெற்றன. அதில் தீகவாபி என்ற மலையில் ஒரு விகாரை அமைக்கப்பட்டு, அந்த விகாரையின் மணி ஒலி கேட்கப்படும் இடமெங்கும் புனிதப் பிரதேசமாக்கப்பட வேண்டும் என பௌத்த மேலாண்மையாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன் காணமாக அப்பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழ், முஸ்லிம் மக்கள் அவ்விடங்களை விட்டு வெளியெற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படியான ஆக்கிரமிப்பின் மூலம் 4500 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள அம்பாறை மாவட்டத்தில் 2500 ச. கி.மீ. நிலப்பரப்பு சிங்கள மயமாக்கப்பட்டது.

இங்கு தீகவாபி போன்ற பல புத்த ஆலயங்கள் மூலம் மதம் ஒரு ஆக்கிரமிப்பு ஆயுதமாக பாவிக்கப்படடு வருகின்றது.

இவ்வாறே திருகோணமலை மாவட்டத்தில் அரசமரம் இருந்த இடங்களெல்லாம் விகாரைகள் உருவாக்கப்பட்டன. விகாரைகளைச்சுற்றி சிங்களவர்கள் குடியேற்றப்பட்டார்கள். கிளிவெட்டியில் ஒரு அரசமரத்தின் கீழ் விகாரை அமைக்க முயன்றதும் அப்பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்கள் இரவோடிரவாக அந்த அரசமரத்தையே வெட்டி விகாரை அமைக்கப்படுவதை தடுத்ததும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

மணலாற்றிலும் கொக்குத்தொடுவாய், மண்கிண்டி போன்ற பகுதிகளிலும் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு அவற்றைச் சுற்றிலும் சிங்கள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டன. அண்மையில் மூதூர் கிழக்கு, வாகரைப் பகுதிகள் சிங்களப்பகுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டவுடனேயே வெருகலில் சமுத்திரகிரிய என்ற ஒரு புராதன விகாரை இருந்ததாகவும், அது அழிக்கப்பட்டு அந்த இடத்தில் இந்துக்கோவில் அமைக்கப்பட்டு விட்டதாகவும் பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பரப்புரை தெளிவுபடுத்தும் விடயம் என்னவெனில் ஏற்கனவே சிறிலங்காப்படைகளின் எறிகணை வீச்சுக்கள் மூலம் சேதமாக்கப்பட்ட வெருகல் சித்திர வேலாயுதர் ஆலயம் இருந்த இடத்தில் ஒரு பௌத்த விகாரை அமைக்கப்படப் போகிறது என்பதாகும். இதனைச்சுற்றி சிங்களக்குடியேற்றங்கள் அமைக்கப்படலாம் என்பதிலும் சந்தேகமில்லை.

இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் பொளத்த சின்னங்களை அழிப்பது, சிதைப்பது தொடர்பான சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

எந்தவொரு மதத்தின் சின்னமோ அடையாளமோ அழிக்கப்படுவது தண்டனைக்குரிய குற்றம் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் அது நியாயமானதே. ஆனால் அப்படியொரு சட்டம் கொண்டுவரும் போது முதல் குற்றவாளியாக சிறிலங்கா அரசுத்தலைவர்களும், பௌத்த வெறியர்களுமே கூண்டிலேற்றப்பட வேண்டியவர்களாவர்.

தமிழர் தாயகத்தில் ஏராளமான இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் விமானக் குண்டு வீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் அழிக்கப்பட்டன. தென்னிலங்கையில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று பௌத்த வெறியர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. பல முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டன. இவை தொடர்பாக எந்தவொரு நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலைமையில் பௌத்த சின்னங்களை மட்டும் பாதுகாப்பதற்கு சட்டம் கொண்டு வரப்பட்டால் அதன் அர்த்தம் சிறிலங்கா அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளும் அவற்றினையொட்டி சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்படப் போகின்றன என்பதாகும். அதாவது ஒரு மதம் ஆக்கிரமிப்பின் ஆயதமாக பாவிக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கவுள்ளது என்பது மிகத்தெளிவான விடயமாகும்.

சிறிலங்காவின் அரசியல் யாப்புச்சட்டம் என்றாலும் சரி, அதை அடிப்படையாகக் கொண்டு சிறிலங்கா பாராளுமன்றத்தால் கொண்டு வரப்படும் இனம் மதம் தொடர்பான எந்தவொரு சட்டம் என்றாலும் சரி இன ஒடுக்குமுறையை நோக்கமாக கொண்டவையாகவே அவை அமையும்.

சிறிலங்காவில் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும், அச்சட்டங்களைத் துரிதமாக நிறைவெற்றும் முறைகளும் தமிழ் மக்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றுதான். தமிழ் மக்கள் சட்டபூர்வாகவோ, சமாதான வழியிலோ உரிமைகளை சிங்களவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது என்பது தான் அது.

நன்றி

ஈழமுரசு

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் பெருமான் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்

:) அவன் என்ன செய்யிரான் ஏன் செய்யிரான் என்பது அவன் இலங்கையை ஒரு புத்தமத நாடாக மாற்றப்போறான். அதற்கு தமிழரை நசுக்கி மண்புழுக்களாக நிலத்தில் தவழ விட எத்தனிக்கின்றான். ஆனால் தெய்வ குற்றம் என்று தெரிந்து கொண்டு அவன் தன் புத்த கோவிலில் புலி உறுப்பினர்களின் உடல்களை காட்சிக்காக வைக்கவில்லயே. அப்படியெல்லாம் நாம் தெரிந்தோ தெரியாமலோ நடந்திருக்கின்றோம். அது எத்தனையோ தமிழ் இதயங்களை ஈட்டிபோல தாக்கி காயப்படுத்தியிருக்கிறது.

அந்த காலதில யாழ்பாணத்தில நூல்நிலையத்தின் முன்னால் சென்ரல் பாடசாலை மைதான ஓரமாக வயது போனவர்கள் வருவார்கள். ஒரு ஆள் ஒரு புதிய விடயத்தை எடுத்து விடுவார் அதற்கு பக்க வாத்தியாமாக சுற்றியிருப்போர் எதிர்க்கருத்தினை வைப்பர். ஒரே அமர்களம் நாம் கிறிகட் அடிப்பதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் அளவுக்கு அப்படி வாக்குவாதம். சிலர் கோவிச்சுக்கொண்டு சைக்கிளில குதிச்சு ஏறி போவீனம். பிறகு அடுத்த நாள் வருவீனம். பிறகு போவீனம்.

இப்படித்தான் இந்த யாழ் இணயதளமும் போகுது எண்டது மட்டும் எனக்கு விளங்குது. இப்படியே என்ற டீடைம், ல்ஞ்ச் எல்லாம் பறக்குகுது. நான் உண்மையாய் நினைச்சன் ஏதாவது உறுப்படியா தமிழீழ மக்களுக்கும் இங்குள்ள மக்களுக்கும் ஏதாவது செய்வம் எண்டு. ஆனால் ஒரு தம்பி வாய் துறக்கேல. கார் செய்வம் எண்டா கனக்க கதைத்த சனம் இலவசமாக செய்து கூலியை அவையளா பார்த்து தமிழீழத்திற்கு கொடுப்பீனம் எண்டு செய்தா துண்டைக்காணோம் துணியைக்கானோம் என்று ஓடீட்டினம். அப்ப எனக்கேன் இங்க வேலை. இருந்து பாருங்கள் தட்டந்தனியனா நான் செய்து காட்டுரன். பாவம் தமிழீழ சன்ம்.நம்பியிருங்கோ. நான் புலி வாலில்லாமலே செய்து காட்டுரன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார் செய்வம் எண்டா கனக்க கதைத்த சனம் இலவசமாக செய்து கூலியை அவையளா பார்த்து தமிழீழத்திற்கு கொடுப்பீனம் எண்டு செய்தா துண்டைக்காணோம் துணியைக்கானோம் என்று ஓடீட்டினம். அப்ப எனக்கேன் இங்க வேலை. இருந்து பாருங்கள் தட்டந்தனியனா நான் செய்து காட்டுரன். பாவம் தமிழீழ சன்ம்.நம்பியிருங்கோ. நான் புலி வாலில்லாமலே செய்து காட்டுரன்.

தம்பி லக்சுமன், உமக்கென்ன ஏதும் joint கழண்டுபோச்சே மூளைக்குள்ளை? கார் செய்யப்போறீரோ?

நீர் என்ன காரைச்சொல்லுறீர்? பபாக்கள் விளையாடுற காரே?

உமக்கு எண்டாலும் குசும்பு கூடிப்போய்ச்சுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.