Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் போராட்டம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல - தமிழ் மக்கள் பேரவை

Featured Replies

எழுக தமிழ் போராட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல அது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம் என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்தவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(05) மாலை மட்டக்களப்பு கூட்டுறவு நிலையகட்டிடத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உயர்பிட உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதன்போது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா தெரிவிக்கையில்,

எதிர்வரும் பங்குனி மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையில் தமது பிரச்சினைகளில் காட்டப்படுகின்ற அக்கறை நீர்த்துப்போகாமலும் அதனுடைய கூர்மை மழுங்கிப்போகாமலும் இருப்பதற்காக குரல் எழுப்பவேண்டியது தங்களது கடமையென வடக்கு கிழக்கு மக்கள் கருதுகின்றார்கள்.

இதன் அடிப்படையில் தான் கடந்த புரட்டாதி மாதம் 24ஆம் திகதி வடக்கில் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்பட்டது.

அந்த நிகழ்வில் ஏறக்குறைய 25.000 பொதுமக்கள் கலந்துக்கொண்ட தங்களது அபிலாசைகளை உலகுக்கு உரத்துக்கூறினர்.

கடந்த காலத்தில் தங்களது பிரச்சினைகளை மற்றும் அபிலாசைகளை தங்களது தலைவர்கள்தான் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச்சொல்லவேண்டும் என்றும் அவை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் மக்கள் எதிர்பாத்திருந்தனர்.

ஆனால் அந்த நிலை இன்று மாறிவருகின்றது. மக்கள் தலைவர்களை முந்திக்கொண்டு தீர்மானம் எடுக்கவும் செயற்படவும் முற்படுகின்றனர். தலைவர்களுடைய செயற்பாடுகளும் தீர்மானங்களும் தடுமாற்றம் நிறைந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

இதுவரை காலமும் தலைவர்களுக்கு பின்னாலேயே மக்கள் சென்றுகொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது மக்கள் முன்னேபோக தலைவர்கள் பின்னே செல்லவேண்டிய நிலையேற்பட்டு வருகின்றது.

தலைவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு பார்த்துக்கொண்டிருக்க மக்கள் இப்போது தயாராக இல்லை. தலைவர்களால் மட்டும் பொறுப்புகளை சுமக்கமுடியாது என்பதை மக்கள் உணரத்தலைப்பட்டுவிட்டனர்.

எனவே தான் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பினை செய்யவேண்டும் என மக்கள் முன்வரத்துவங்கியுள்ளனர்.

இதன்வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தோற்றம்பெற்றதுடன் எழுக தமிழ் நிகழ்வும் நடைபெற்றுவருகின்றது.

வடகிழக்கு இணைப்பு, தங்களை தாங்களே நிர்வகிக்கும் வகையிலான சமஸ்டி தீவு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படல்,போர்குற்ற விசாரணை பொறிமுறை ஒன்றினூடாக மேற்கொள்ளப்படல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட 11 கோரிக்கைகளை முன்வைத்து இந்த எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்படுகின்றது.

அதன் கீழ் எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் இனமத கட்சி வேறுபாடுகள் இன்றி வடகிழக்கை சேர்ந்த அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியில்லை. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் பேரவை எந்த தேர்தலிலும் போட்டியிடாது.அதனை காலப்போக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொள்ளும்.

வடக்கில் எழுக தமிழுக்கு வழங்கிய ஆதரவுபோல் கிழக்கு மாகாணத்திலும் எழுக தமிழுக்கு தமிழ் மக்கள் ஆதரவினை தருவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.

அத்துடன், இன்று பௌத்த மயமாக்கல் என்ற பெரிய அலை இரண்டு சிறுபான்மை மக்களையும் அடித்துச்செல்லும் நிலையுள்ளதன் காரணமாக இந்தவேளையில் தனித்து நின்று பலமிழந்து அழிந்துபோகாத ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எமது அயல்வீடான முஸ்லிம் சகோதரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றோம்.

மேலும் வடகிழக்கு இணைந்திருக்கவேண்டும் என்று பல முஸ்லிம் சகோதரர்கள் விரும்புகின்றார்கள். நாங்கள் சில அரசியல் தலைவர்களை சந்தித்துள்ளோம். இணைந்திருப்பதே எதிர்காலத்தில் இரண்டு இனங்களுக்கும் நல்லது என பலர் கருகின்றனர் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/130642?ref=home

  • தொடங்கியவர்
உரிமை கேட்பது இனவாதமல்ல; அதனை மறுப்பதே இனவாதம்! கிழக்கில் "எழுக தமிழ்'' ஆயத்த முழக்கம்
 
12961.jpg
 
எமது உரிமையை கேட்பது இனவாதமல்ல. அதனை மறுப்பதே இனவாதம். எமது உரிமையை நாமே உரத்துச்சொல்ல எழுக தமிழ் மூலம் ஒன்றிணைவோம் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா அழைப்பு விடுத்துள்ளார். 
 
எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள  எழுக தமிழ் மக்கள் எழுச்சிபேரணி நிகழ்வு  தொடர்பாக மட்டக்களப்பு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 
 
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பு, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் அவர்களது நலன்களுக்காகவும் ஜனநாயக ரீதியாக பாடுபடுவது அதனுடைய முக்கிய பணியாகும்.
எழுக தமிழ் ஊடாக வட கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை இந்நாட்டு அரசுக்கும் சர்வதேசத் துக்கும்  குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் உரத்துச் சொல்ல முடியும் என்பது தமிழ் மக்கள் பேரவையின் திடமான நம்பிக்கை.
 
இப்போது தலைவர்களை முந் திக்கொண்டு தீர்மானம் எடுக்கவும் செயற்படவும் மக்கள் முற்படுகின்றனர். ஏனெனில் தலைவர்களுடைய தீர்மானங்களும் செயற்பாடுகளும் தடுமாற்றம் நிறைந்து இருப்பதாக மக்கள் எண்ணுகின்றார்கள் .
 
எனவே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பைக் செய்ய வேண்டும் என மக்கள் முன்வரத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் பேரவையின் தோற்ற மும் எழுக தமிழ் பேரணி நிகழ்வும்.
 
கேட்காமல் எதுவும் கிடைப்பதில்லை, கேட்பது நமது தலையாய கடமை. எங்களுக்கு எது தேவை என்பதை நாம்தான் சொல்லியாக வேண்டும் .அதையும் உரத்துச் சொல்லுதல் வேண்டும் .இதற்கான அரிய சந்தர்ப்பம் ஒன்றுதான் கிழக்கில் மட்டக்களப்பிலே நடை பெறவுள்ள எழுக தமிழ் பேரணி நிகழ்வு.
 
எனவே அந்த பேரணி நிகழ்வில் இன, மத, கட்சி  வேறுபாடுகளை விடுத்து வடக்கு கிழக்கை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
  • தொடங்கியவர்
கிழக்குத் தமிழ் உறவுகள் எழுக தமிழில் திரண்டால் ...

13019.jpg

 

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி நடைபெறவுள்ளது.
 
எனவே, எழுக தமிழ் எழுச்சிப் பேரணி வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்றது. எவரும் எதிர்பாராத வகையில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியின் வெற்றி, உலகத் தமிழ் உறவுகளுக்கு எங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது. 
 
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அலை கடலெனத் திரண்ட மக்கள் கூட்டம் கண்டு நெக்குருகாதவர் இல்லை எனலாம்.
 
தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பில் யாழ்பபாணத்தில் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியால் தென்பகுதி அதிர்ந்துபோனது. வடக்கின் முதலமைச்சர் மீது சீறிப்பாயுமளவில் பொது எதிரணியினர் கடுப்படைந்தனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தரப்பும் வடக்கின் முதல்வர் மீது கடுப்படைந்து கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.
 
இருந்தும் தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் அமைப்பு. எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தேவையான ஒன்று என முதலமைச்சர் விக்னேஸ்வரன் இறுமாப்புடன் பதிலளித்தார். 
 
வடக்கின் முதலமைச்சர் அதிர்ந்துபோவார் என்று நினைத்த பேரினவாத சக்திகளுக்கு முதலமைச்சரின் துணிச்சல் தங்களின் கண்டனங்கள், ஊர்வலங்கள் எதுவும் பயனற்றது என நினைத்தபோது அவர்கள் மெளனமாகிப்போனர்.இந்த உண்மையை எங்கள் கிழக்கு மாகாணத்தின் தமிழ் உறவுகள் அறியாததல்ல.
 
எனவே, கிழக்கு மாகாணத்தில் நடக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கிழக்கின் தமிழ் உறவுகள் ஒன்று சேர்ந்து ஓரணியாக பேரணியாகி எங்கள் தாயகம், வடக்கும் கிழக்கும் எனக்கோசம் எழுப்பி வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டி முறையிலான தீர்வை வலியுறுத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
 
வடக்கும் கிழக்கும் இணைவதாயின் அதற்காக கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்துதல் என்ற நிபந்தனைகளின் கீழ் கிழக்கும் வடக்கும் இணைவதற்கு கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்; பூரண ஆதரவு என்பதை நிரூபிப்பதற்கான ஒரு பேரணியாக எழுக தமிழ் எழுச்சிப் பேரணி அமையும் என நம்பலாம்.
 
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி எங்கள் சிங்கள சகோதரர்களுக்கோ, முஸ்லிம் சகோதரர்களுக்கோ எதிரானது என்றுயாரும் கருதிவிடக்கூடாது.இவ் எழுச்சிப் பேரணி இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்துவது.
 
இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறாக அமைந்தால், இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படும்என்பதை எடுத்துக்கூறுவது.
 
ஆனால் இன ஒற்றுமையை, இன சமத்துவத்தை நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதை அடிப்படையாகக்கொண்ட இவ் எழுச்சிப் பேரணியில் சிங்கள முஸ்லிம் சகோதரர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவிப்பார்கள் ஆயின் அதன் கனதி பன்மடங்காகும்.
 
அதே நேரம் நாட்டின் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவும் பெரும்பான்மை, சிறுபான்மை என்றில்லாமல் மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவருக்கும் அனைத்துரிமைகளும்  சமமாக இருத்தல் வேண்டும் என்பதை அரசுக்குக் கூறுவதாகவும் அமையும். 
 
எனவே கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் எழுச்சிப் பேரணி என்றும் இல்லாத பேரணியாக, மக்களின் பேராதரவுடன் நடக்குமாயின் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் இதன் தாக்கம் செல்வாக்கு செலுத்தும் எனலாம்.
 
ஆகவே கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள் தமது வரலாற்றுக் கடமையாக எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை உலகம் அதிசயிக்கும் வண்ணமாக திரண்டெழுந்து ஜெனனாயக ரீதியில் - அகிம்சை வழியில் வெளிக்காட்ட வேண்டும் இது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமானதாகும்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=13019&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.