Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! 'அதிமுகவில் தொடர்வேன்' என பேட்டி

Featured Replies

சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! 'அதிமுகவில் தொடர்வேன்' என பேட்டி

sampat_11442.jpg

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை இன்று நாஞ்சில் சம்பத் திடீரென சந்தித்து பேசினார். அதிமுகவில் இருந்து விலகுவதாக வந்த தகவலையடுத்து, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அதிமுக செய்தித் தொடர்பாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைதியாகவே இருந்தார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அமைச்சர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை வாழ்த்து தெரிவித்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பரிசாக கொடுத்த இனோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். அப்போது, தேர்தல் பிரசாரம் எதுவும் இல்லாததால் காரை ஒப்படைத்ததாக விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து  அதிமுகவில் அவர் விலகப் போவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், 'அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன். சசிகலாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/77158-nanjil-sampath-meets-sasikala.art

  • தொடங்கியவர்

சசிகலாவுடன் சமரசம் ஆன நாஞ்சில் சம்பத்! - மடக்கிய மன்னார்குடி லாபி

sampath_madurai_11587.jpg

'சசிகலா தலைமையை ஏற்க முடியாது' என பகிரங்கமாகப் பேட்டியளித்த அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தற்போது சசிகலாவை சந்திக்கக் காத்திருக்கிறார். 'தொடக்கத்தில் எங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. நிலைமையைப் புரிய வைத்ததும், கழகத்திற்காக பணியாற்ற சம்மதித்தார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அ.தி.மு.க.வின் சீனியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரை வரவேற்றபோதும், வாழ்த்துச் சொல்வதற்கு நாஞ்சில் சம்பத் செல்லவில்லை. ' தி.மு.க.வில் இணைவதற்காக சேகர்பாபு எம்.எல்.ஏ மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார்' என்ற தகவல் வெளியானது. அடுத்ததாக, 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம்; ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை அமர்வதைப் பார்க்க முடியவில்லை' என்றெல்லாம் பேசி வந்தார். கூடவே, ஜெயலலிதா கொடுத்த இனோவா காரையும் ஒப்படைத்தார். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், இன்று சசிகலாவை சந்திப்பதற்காக போயஸ் கார்டனுக்கு வந்திருக்கிறார் நாஞ்சில் சம்பத். "சசிகலாவின் ஆணைகளை தமிழகம் முழுவதும் பரப்புவதற்காக சுற்றுப்பயணம் செய்வேன். தொய்வின்றி பணியாற்றுவேன்" எனப் பேசியிருக்கிறார். 

sasikala_apollo_11229.jpg'எப்படி நடந்தது இந்த மாற்றம்?' என அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணையப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததுமே, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ' தி.மு.க.வில் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களிலேயே திருச்சி சிவாவை பேசவிடுவதில்லை. நீங்கள் அங்கு சென்றால் இன்னும் மோசமாக நடத்துவார்கள். அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு, உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. உங்களுக்கு உடல்நலமில்லாதபோது மருத்துவச் செலவையும் கழகம் ஏற்றுக் கொண்டது. உங்கள் மகனுக்கு மருத்துவ சீட்டும் ஏற்பாடு செய்தார் அம்மா. இப்படியொரு இக்கட்டான நேரத்தில், தி.மு.க.வுக்குப் போகலாமா?' என விவரித்தோம். தொடக்கத்தில் எங்கள் பேச்சுவார்த்தைக்கு அவர் பிடிகொடுக்கவில்லை. இதையடுத்து, மன்னார்குடி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ சிவராஜ மாணிக்கம், சம்பத்திடம் பேசினார். 'உங்கள் சூழல்களை நான் அறிவேன். இலக்கியவாதியான உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்' என உறுதி கொடுத்தார். இனோவா காருக்கு டீசல் போடுவதற்குக்கூட வழியில்லாத காரணத்தால்தான், மிகுந்த கொதிப்பில் இருந்தார் சம்பத். கூடவே, அவருடைய மகனுக்கு மருத்துவப் படிப்புக்குக் கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். ' இதுவெல்லாம் ஒரு பிரச்னையா? எழுதப் படிக்கத் தெரியாதவன்கூட இந்தக் கட்சியில் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறான். இனி உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது' என மன்னார்குடி உறவு கொடுத்த தைரியம்தான், மீண்டும் கார்டனுக்குள் சம்பத்தை நுழைய வைத்தது. இனி வழக்கம்போல இனோவா காரில் பயணிப்பார் நாஞ்சில் சம்பத்" என்றார் விரிவாக. 

"இப்படியொரு முடிவை அவர் எடுக்கலாம் என்பதும் எங்களுக்குத் தெரியும். தி.மு.க தலைமைக்கு வேண்டப்பட்ட பலருடனும் அவர் ஆலோசித்துக் கொண்டிருந்தார். ' பேசுவது இருக்கட்டும். வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என கட்சித் தலைமை தெரிவித்துவிட்டது. அவருக்கு எந்தவித வாக்குறுதியும் தி.மு.க.வில் வழங்கப்படவில்லை. அ.தி.மு.க.வில் வாக்குறுதி கொடுக்கப்பட்டதும் அங்கு சென்றுவிட்டார். இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். தி.மு.க.வுக்கு வருகிறேன் என அவர் சொல்வது, இது மூன்றாவது முறை. இனி அவர் வருவேன் என்று சொன்னாலும், தி.மு.க.வினர் நம்ப மாட்டார்கள்" என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர். 

இதுகுறித்து, நாஞ்சில் சம்பத்திடம் பேசுவதற்காக தொடர்பு கொண்டோம். போனை எடுத்த அவரது மகள் மதிவதனி, "அப்பா சென்னையில் இருக்கிறார். உங்களிடம் பேசச் சொல்கிறேன்" என்றார். 

'இனோவா சம்பத் என்ற பழிச்சொல்லோடு இனியும் அலைய விரும்பவில்லை' என சுயமரியாதைக் குரல் எழுப்பிய சம்பத்துக்கு, அதே இனோவா வந்துவிட்டது. அரசியல் என்பதே சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதுதானே! 

http://www.vikatan.com/news/tamilnadu/77161-nanjil-sampath-makes-peace-with-sasikala-reverses-his-decisions-about-quiting-admk.art

  • தொடங்கியவர்

வெற்று ‘கதறல்க’ளாக மாறிப்போன இடிமுழக்கம்..! நாஞ்சில் சம்பத் கடந்து வந்த பாதை

c11_14045.jpg

பேச்சு தான் திராவிட கட்சிகளின் மூலதனம். திராவிட கட்சிகள் தமிழகத்தில் காலூன்றவும், 50 ஆண்டுகாலம் தங்களை ஆட்சி பீடத்தில் தக்க வைத்துக்கொள்ளவும் மிக முக்கிய காரணமாக இருந்தது திராவிட இயக்க பேச்சாளர்களின் நாவன்மையே. பேரறிஞர் அண்ணாவில் துவங்கி, கலைஞர், நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், அன்பழகன், வைகோ, நாஞ்சில் சம்பத் என நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

எல்லா பேச்சாளர்களும் பேச்சுத் தமிழில் பேசிய போது, திராவிட தலைவர்களும், பேச்சாளர்களும் செந்தமிழில் பேசினார்கள். கல்வியறிவு இல்லாத பாமர மக்களையிடையே பேசும் போது செந்தமிழ் எதற்கு என கேள்வி எழுந்தது. ஆனால் அது தான் வெற்றி பெற்றது. காரணம் தமிழின் பெருமைகளை கொண்டு சேர்க்க, தமிழ் பண்பாட்டை சொல்லி விளக்க செந்தமிழில் தான் பேச வேண்டியிருந்தது. அதுவே அவசியப்பட்டது.

c13_14451.jpg

சொல் மாறாமல் பேசுபவர்...

நிகழ்வுகளை அடுக்கி, அதில் மக்களின் சந்தேகங்களை போக்கி.. தாங்கள் சொல்ல வந்ததை மக்களிடம், தங்களின் நாவன்மையால் கொண்டு சேர்த்து விடுவார்கள் இந்த பேச்சாளர்கள். அவர்களில் ஒருவர் தான் நாஞ்சில் சம்பத்

குற்றால அருவியாக கொட்டும் பேச்சாற்றல், பிசிறு தட்டாத வார்த்தை ஜாலம், குறிப்புகள் ஏதும் இன்றி உலக நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளுடன் எடுத்துரைக்கும் பாங்கு என எல்லா ஆற்றலும் கொண்ட நாஞ்சில் சம்பத்தின் நாவில் இருந்து நர்த்தனம் ஆடிய வார்த்தைகளுக்கு ஆயிரமாயிரம் பேர் அடிமைகளாக இருந்துள்ளனர். நாக்கு பிறழாமல், ஒரு சொல் கூட மாறாமல், சொற்களை செதுக்கும் வல்லமை வாய்ந்தவராய் இருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் இப்போது அவர் அப்படியில்லை என்பது உண்மை.

c6_14007.jpg

தேன் கசந்து போனது...

நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்த போது வைகோவின் போர்வாள் என புகழப்பட்டவர். கட்சியில் வைகோவுக்கு அடுத்தபடியாக அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர். ம.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் பலர் வெளியேறிய நெருக்கடியான காலகட்டத்தில், "கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது.  ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டு போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது"  எனப்பேசி வலம் வந்தார்.

ஒரு கட்டத்தில் ம.தி.மு.க.வில் இருந்த சம்பத்துக்கும் வைகோவுக்கும் இடையே உரசல் என செய்திகள் வெளியாக அதை மறுத்தார். இது தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசிய நாஞ்சில் சம்பத், ‘‘ராமாயணத்தில் வரும் அனுமன் தனது நெஞ்சில் ராமன் இருப்பதை பிளந்து காட்டியது போல, எனது ஒரே தலைவன் வைகோ தான். அவரை தவிர என் நெஞ்சில் யாரும் இல்லை என மார்பை பிளந்து காட்டவும் தயாராகவும் இருக்கிறேன்’’ என உணர்ச்சி மிகுதியில் பேசினார்.

c2_14119.jpg

சர்ச்சையை ஏற்படுத்திய அந்த பேச்சு...

ஆனால் அடுத்த ஒரு வாரத்தில், பதவியும், பகட்டான காரையும் பெற்றுக்கொண்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமானார் நாஞ்சில் சம்பத். அரசியல் பற்றி பேசும்போது பிழைகள் கூடாது என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிழைகளுடன் பேசவே அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு உதாரணமாக மாறிப்போனார் நாஞ்சில் சம்பத். எந்த பேச்சால் விரும்பப்பட்டாரோ, அதே பேச்சால் ஓரங்கட்டப்பட்டார்.

2015 டிசம்பரில் சென்னையில் கொட்டி தீர்த்த மழையை எட்டி பார்க்க கூட முடியாத ஆட்சியாளர்களின் செயலை நியாப்படுத்தும் விதத்தில் பேசி மக்களை கோப்படுத்தினார். வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, "ஒரு வீட்டில் இழவு விழுந்து விட்டது என்பதற்காக, இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்காமல் இருக்குமா?" என்றும், "யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் சாகத்தான் செய்யும்" என்றும் இவர் பேசிய எதுகை மோனை பேச்சை மக்கள் ரசிக்கவில்லை.

இந்த பேச்சு மக்களை மட்டுமல்லாது, ஆட்சி செய்த ஜெயலலிதாவையும் கோபப்படுத்தியது. அதனாலே மேடைகள் கொடுக்காமல் ஓரங்கட்டியது தலைமை. மீண்டும் தேர்தல் வர பிரச்சாரத்துக்கு ஆள் வேண்டுமே என்பதற்காக மீண்டும் சேர்க்கப்பட்டார் நாஞ்சில் சம்பத். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஒதுக்கி வைக்கப்பட்டார்.

c14_14549.jpg

முதலில் எதிர்ப்பும், பின்னர் ஆதரவும்...

இந்த நேரத்தில்தான் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாய் எழுந்த கருத்தை நாஞ்சில் சம்பத்தும் ஆமோதித்திருந்தார். ‘‘தொண்டர்கள் நினைப்பது சரிதான். தொண்டர்களின் சந்தேகத்தை  அ.தி.மு.க தலைமை தீர்த்து வைக்க வேண்டும்" "சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச் செயலாளர் ஆகும் தகுதி இருக்கிறது என்றால் அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளும் தகுதி எனக்கில்லை’’ என அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா தனக்கு கொடுத்த காரை அ.தி.மு.க. தலைமையிடம் திருப்பிக்கொடுத்தார் நாஞ்சில் சம்பத். அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சொன்னார். பொதுமேடையில் அரசியல் பேசுவதை தவிர்த்தார்.

ஆனால் இந்த செய்திகளின் தாக்கம் மறைவதற்குள், யாரை எதிர்த்து பேசினாரோ, யாருக்கு தகுதி இல்லை என்று மறைமுகமாக சாடினாரோ, அதே சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்று, மீண்டும் அ.தி.மு.க.வின் பேச்சாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

பெரும்பாலும் கட்சி விட்டு கட்சி மாறும் பேச்சாளர்கள்,  தங்கள் சுயத்தை இழந்து விடுகிறார்கள். ஏற்கனவே இரு முறை கட்சி மாறி, இப்போது மாறிய தலைமையை ஏற்றுள்ள நாஞ்சில் சம்பத் நிலையும் இது தான். எந்த பேச்சால் பெரும்பாலானோரை கவர்ந்தாரோ, அதே பேச்சால் இப்போது அவமானப்பட்டு நிற்கிறார் நாஞ்சில் சம்பத்.

போதையில் இருப்பவர் பேச்சு நிலையாக இருக்காது என்பார்கள். நாஞ்சில் சம்பத்தும் போதையில் தான் இருக்கிறார். அது அரசியல் போதையா? பதவி போதையா? என தெரியவில்லை. அதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

http://www.vikatan.com/news/coverstory/77175-political-journey-of-star-speaker-nanjil-sampath.art

  • கருத்துக்கள உறவுகள்

தக்கன பிழைத்துக் கொள்ளும்....!காலநிலைக்கேற்றவாறு பயிரிட வேண்டும், அறுவடைதான் மிகவும் முக்கியம்....!இது பரவாயில்லை, அவர் தி.மு.க. வுக்கு போனாலும் சரியான சமயம் பார்த்து இடறிவிடப் படுவார். எனக்கே புரியும்போது சம்பத்துக்கு புரியாமலா இருக்கும்....! எங்கிருந்தாலும் சம்பத் சம்பத்தோடு வாழட்டும்....!! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! 'அதிமுகவில் தொடர்வேன்' என பேட்டி

பேய்க்காய்...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

தக்கன பிழைத்துக் கொள்ளும்....!காலநிலைக்கேற்றவாறு பயிரிட வேண்டும், அறுவடைதான் மிகவும் முக்கியம்....!இது பரவாயில்லை, அவர் தி.மு.க. வுக்கு போனாலும் சரியான சமயம் பார்த்து இடறிவிடப் படுவார். எனக்கே புரியும்போது சம்பத்துக்கு புரியாமலா இருக்கும்....! எங்கிருந்தாலும் சம்பத் சம்பத்தோடு வாழட்டும்....!! tw_blush:

 
 
 

 

6 hours ago, குமாரசாமி said:

பேய்க்காய்...tw_blush:

இன்று நேற்று அல்ல, 33 வருட திட்டமிடல்... ஜெயலலிதாவுக்கு தெரிந்தோ, தெரியாமலோ,  மன்னார் குடி கும்பல் சேர்த்து வைத்த பணம் இப்போது பாதாளம் வரை பாய்கிறது.

இவருக்கு ஒரு கோடியாவது தேறி இருக்கும்.

இப்போது, ரொம்பவே திமிறுபவர், தீபா. அவரிடம் கட்சி நடாத்த பணம் இல்லை என்பதும், அரசியல் அனுபவம் இல்லை என்பதும் மன்னார் குடிக்கு நல்லாக தெரியும். அவரை ஆதரிக்க வேண்டிய அவசியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. அதிமுக வை வீழ்த்த, மக்கள் ஆதரவு இல்லாத சசிகலா வருவதே அவர்களை பொறுத்தவரை விரும்புவர். 

ஒரு 50, 100 கோடிகள் தேறும் வரை அவரும் கத்தி அடங்குவார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை ஏய்த்து பிழைப்பவனுக்கு 
எங்கள் ஆதரவு ..........
என்று குத்துக்கடடையாய் மக்கள் நின்றால்.
அவர்கள் என்ன செய்வார்கள் ? 

ஏய்த்து பிழைப்பவர்கள் மேல் ஏதும் குற்றம் இருப்பதுபோல் 
தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.