Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு -சுமந்திரன் நம்பிக்கை

Featured Replies

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு -சுமந்திரன் நம்பிக்கை
 
 
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு -சுமந்திரன் நம்பிக்கை
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக கடந்த 70 வருடமாக புரையோடியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியுடன் உள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
 
புதிய அரசியலமைப்பினை தயாரிப்பதற்கு இதுவரை காலமும் ஒத்துழைப்பு வழங்கியது போன்று அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
 
இந்த கலந்துரையாடலில் புதிய அரசியல் அமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பாக ஆறு நாடாளுமன்ற உப குழுக்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/22416

  • தொடங்கியவர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஆலோசனை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள்

 

 கூட்டத்துக்கு வந்த எம்.பி.க்கள்

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்ட உருவாக்கம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிறுக்கிழமை காலை முதல் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, அனைத்து நாசாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38549784?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு -சுமந்திரன் நம்பிக்கை
 

எப்ப எண்டதுதான் இண்டையான் கேள்வி?????

  • தொடங்கியவர்
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை‘துரிதமாக்க வேண்டும்’
 
09-01-2017 09:26 AM
Comments - 0       Views - 16

article_1483934286-Sumanthiran.jpgபேரின்பராஜா திபான்

“புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமாக, 70 வருடகாலமாகப் புரையோடியிருக்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது“ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நேற்று (08) தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளுடன் ஆராயும் முழுநாள் கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம், நேற்று மாலை நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,  

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் சம்பந்தமாக நாள் முழுவதும் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தோம்.  

அதில் விசேடமாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கின்ற உப குழுக்களுடைய அறிக்கைகள், அத்தோடு வெளியிடப்படவிருந்த நடவடிக்கைக் குழுவினுடைய இடைக்கால அறிக்கை, அது தாமதமாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பிலும் கூடிப் பேசியிருந்தோம். 

இந்த முயற்சி, புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும். புதிய அரசியமைப்பு உருவாக்கத்தின் மூலமாக, 70 வருடகாலமாகப் புரையோடியிருக்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது. 

அதன் காரணமாக, எங்களுடைய முழுமையான பங்களிப்பையும் இதுவரைகாலமும் இந்த முயற்சிக்கு நாங்கள் செலுத்திக்கொண்டிருக்கிறோம். அரசாங்கமும் மற்றைய கட்சிகளும் கூட பூரணமாக இதுவரை காலமும் ஒத்துழைத்தது போல, தொடர்ச்சியாக ஒத்துழைத்து, காலதாமதம் இல்லாமல் இடைக்கால அறிக்கையையும் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கான வரைவையும் அரசியலமைப்புப் பேரவைக்கு முன்பாக கொண்டுவர வேண்டும் என நம்பியிருக்கிறோம்.” என்றார். 

இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சோனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் எம்.பியுமான தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எஸ். வியாழேந்திரன், எஸ். யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/189449/ப-த-ய-அரச-யலம-ப-ப-உர-வ-க-கத-த-த-ர-தம-க-க-வ-ண-ட-ம-#sthash.rebDIjyX.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.