Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் மும்முனை நகர்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-சி.இதயச்சந்திரன்-

அரசு என்கிற கட்டுமானத்திலிருந்து வெளித்தள்ளப்பட்ட, அரசியலின் ஆளுமைக்குட்படாது சமூக வெளிப்பாடுகளும் தத்துவங்களும் இல்லையென்பதை அறுதியிட்டும் கூறலாம். அதில் நேரடித் தலையீட்டை மேற்கொள்ளாத மக்கள் கூட்டம் பற்றி பேசலாமென எண்ணுகிறேன்.

அரசியலில் ஊடுருவாத எந்தவொரு சமூகத்தினரும் இல்லையென்பதே யதார்த்தமானதாகும்.

வாக்களிக்கும் போதும், அதன் பின்னரும் அரசியல்வாதிகள் கூறுவதை கேட்டபடி இருப்பவர்களே வெகுஜன மக்களாவர்.

அதிகாரத்தை இயக்குவதில் பங்குகொள்ளாத இக்கூட்டம், அந்நியராக வாழ்வதே நாடாளுமன்ற ஜனநாயகம் இவர்களுக்கு கொடுத்த உரிமையாகும்.

அந்நியராக வாழும் உரிமைகூட முதலாளித்துவ அரசியலில் மட்டுமே காணப்படுகிறது.

மதத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யலாம். இனத்தைப் பாதுகாக்க காவியுடை தரித்தும் அரசியல் நடத்தலாம். சொத்துக்களைப் பாதுகாக்கவும் அரசியலில் இறங்கலாம்.

உத்தியோக உயர்விலும், இடமாற்றங்களிலும், வாழும் இடங்களைத் தெரிவு செய்வதிலும், உண்ணும் உணவிலும், வழிபடும் ஆலயங்களிலும், அரசியல் இரண்டறக் கலந்தே இருக்கிறது.

அரசின் பார்வையற்ற தளங்கள் அதன் இறையாண்மைக்குள் இல்லை. அரசியல் தனக்கும் பிடிக்காதென்று கூறுபவர்களும் அதன் பிடிக்குள் அகப்பட்டிருப்பதை புரிய மறுக்கின்றார்கள்.

குழந்தை ஜனனித்ததும், அது பிறந்ததிற்கான பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை அரசு வழங்குகிறது. அந்தச் சான்றிதழ் இல்லாவிடில், அதன் வாழ்வியக்கம் அசைவற்றுப் போகும்.

குழந்தை வளர்ந்து பெரியவராகி திருமண பந்தத்தினுள் தன்னை உட்படுத்தும்போது கல்யாண அத்தாட்சிப் பத்திரமொன்று அரசால் ஒப்படைக்கப்படுகிறது. அதன் இறப்பை அத்தாட்சிப்படுத்தவும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பிறப்பிலிருந்து இறப்பு வரையான காலம் முழுவதும் அரச அதிகாரத்தின் ஊடுருவல் அற்ற மனிதனைக் காண முடியாது. கண்ணிற்கும் புலப்படாத கடவுளிடம் தமது துன்பச் சுமைகளையும், சுகவாழ்விற்கான ஏக்கங்களையும் ஒப்படைக்க மக்களிற்கு அதிகாரமளிக்கும் இந்த அரசுகள், மதத்தை முன்னிலைப்படுத்தியவாறு தனது அதிகாரத்தையும் தக்கவைக்கும்.

தமக்கும் மக்களிற்குமான வரையறைகளை மிகத்தெளிவாகவே அரசியலமைப்புச் சட்டத்தினுள் உள்ளடக்கியிருக்கும். அரச இயந்திரத்தினைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இராணுவம் மற்றும் காவல்துறையினை மக்களினதும் நாட்டு இறைமையினதும் பாதுகாவலனாக வெளிப்படுத்தும் வகையில் தேசியப்பற்றென்ற புதுவிளக்கமும் கொடுக்கும். மக்களதிகாரமற்ற அரசு, மக்களாட்சி என்கிற உயர்ந்த பண்பு நிலைகொண்ட ஜனநாயக ஆட்சியாகத் தன்னை வெளிப்படுத்த, மட்டுப்படுத்தப்பட்ட பேச்சுரிமை, எழுத்துரிமையினை வழங்குகிறது.

தமது நாட்டு மக்களின் அரசியல், ஜனநாயக உரிமைகளை அதிகார வரம்பிற்கு அப்பால் நிறுத்தி வைத்திருப்பவர்கள், மக்கள் தொகையில் சிறுபான்மையாகவிருக்கும் தேசிய இனங்களை மிகவும் கடைநிலையிலேயே வைத்திருக்க முனைவார்கள்.

உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு வடிவத்துள் முன்னெடுக்கப்படும் தேசிய இனங்களின் ஜனநாயக வழிப்போராட்டங்களை நடத்த சிறிதளவு கட்சியை அனுமதித்தாலும், அதிகார மையப் பொறிமுறை மாறுதலை நோக்கி அது நகர்ந்தால் ஆட்சியதிகாரம் அதனைப் படைவலு கொண்டு எதிர்கொள்ளும்.

நவீன புதிய உலக ஒழுங்குக் கோட்பாட்டில், சர்வதேச மயமாதல் (புடழடியடளையவழைn) என்கிற பொருளியல் சார்ந்த ஆக்கிரமிப்பில், தேசிய இனங்களின் தனித்துவமென்பது கரைந்து விடுகிறது.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் குறித்த தமது பார்வையினை உலக மயமாக்கிகள் எவ்வாறாக விரிய விட்டுள்ளார்களென்பதை மூன்றாம் உலக நாட்டு அரசுகளின் செயற்பாடுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

தேசிய இனப்போராட்டங்கள் போடும் தடைகளை நீக்க, அதன் அரசுகளுக்கு உதவும் சர்வதேச ஏகாதிபத்தியங்கள், இரு தரப்பிற்குமிடையே படைவலுச் சமநிலை ஏற்படுகையில், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்கிற கோட்பாட்டை முன்வைப்பார்கள்.

பேச்சுவார்த்தையானது நீடித்தால் தேசிய விடுதலைப் போராட்டச் சக்திகள் மீது தடை விதித்து அரசியல் அழுத்தம் கொடுப்பார்கள். அவ் அழுத்தமும் உடன்பாட்டினை நோக்கி நகரமறுத்தால், மறுபடியும் அரசிற்கு சகல படை வளங்களையும் ஆலோசனைகளையும் அள்ளி வீசுவார்கள்.

சர்வதேசத்தின் அரசு சார்பு நிலையினை உணர்ந்து கொள்ளும் அரசானது ஒப்பந்தத்தினை எழுத்தில் வைத்தவாறே விடுதலைப் போராட்ட சக்தியின் மீது போர் தொடுக்கும். அப்போர் முயற்சியினை சர்வதேசம் கண்டும் காணாதது போலிருக்கும்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சர்வதேச உலக மயமாக்கலின் மூல உத்தியைப் புரிந்து கொள்ளும் அரசு, அவர்கள் விரும்பும் பிரதேசங்களை, போராட்ட சக்தியிடமிருந்து மீட்டெடுத்து, முதலீடு செய்யும்படி வருந்தி அழைக்கிறது.

இங்கு மூன்று விதமான அரசியல் நகர்வுகளை சர்வதேசம் பிரயோகிக்கிறது.

இராணுவத் தீர்வற்ற பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென ஒரு நகர்வினையும், அரசைத் தக்கவைக்க இராணுவ உதவிகளை வழங்கியவாறு இன்னுமொரு நகர்வினையும், மூன்றாவதாக போராட்ட சக்தியினை பலவீனப்படுத்தும் அரசின் இராணுவ முன்னெடுப்புகளை மறைமுகமாக அங்கீகரித்தவாறு பிறிதொரு நகர்வினையும் மேற்கொள்கிறது.

ஆயினும் பேச்சுவார்த்தையூடாக தீர்வினை எட்டுதல் என்பதானது அரசுக்கும் எதிர்தரப்பு போராட்டச் சக்திகளுக்குமிடையே படைவலுச் சமநிலை தோன்றும்போது முன்வைக்கப்படும். போரின் நீட்சி அரசைப் பலவீனமாக்குமென்பதன் அடிப்படையிலேயே யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஊடாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல் என்கிற அரசியல் உத்தியைச் சர்வதேசம் கையாள்கிறது.

அடுத்ததாக அரசைப் பலப்படுத்துவதற்கான இராணுவ வளங்களில் சர்வதேச நாடுகளிடையே பிராந்திய ஆதிக்கப் போட்டியும் நிலவுகிறது. இறுதியாக, தீர்வுகளற்ற பேச்சுவார்த்தை நீண்டு சென்றால், படைவலுச் சமநிலையை அரசின் பக்கம் அதிகரிக்க சகல முயற்சிகளையும் சர்வதேசம் மேற்கொள்கிறது.

அரசினால் முன்னெடுக்கப்படும் வலிந்த இராணுவ படையெடுப்புக்களை பயங்கரவாதத்திற்கெதிரான போராகப் பரப்புரை மேற்கொண்டு, அதனால் உருவாகும் மனித அவலங்கள் அம்மனிதர்களுக்கான விடுதலைப் படிக்கல்லாக மாற்றமடையுமென வியாக்கியானம் கூறுவார்கள்.

இந்த சர்வதேசவாதிகளின் குணவியல்புகளை ஸ்ரீலங்கா அரசு எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றதென்பதை இனி பார்ப்போம்.

1) யுத்தமற்ற, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தொல்லைக்கு உட்படாத கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் சர்வதேசத்திற்கு தேவை.

2) அந்நாடுகள் ஒரு பெரிய பிராந்தியத்தின் தலைவாசலில் அமைந்திருந்தால் அதிகபட்ச நன்மை உண்டாகும்.

3) அப்பிராந்தியத்தில் இல்லாத கனிப்பொருள், எண்ணெய் வளங்கள் இரு நாடுகளில் கிடைத்தால் இரட்டிப்பு இலாபமாகும்.

4) அந்நாட்டில் இயற்கையான துறைமுகம், தமது பாரிய போர் கப்பல்களைத் தாக்கக்கூடிய வசதிகள் இசைவாகவிருந்தால் அப்பிராந்தியத்தைக் கண்காணிக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.

5) எதிர்காலத்தில் தம்மை இராணுவ, பொருளாதார ரீதியில் விளங்கக்கூடிய பிராந்திய வல்லரசு நாடுகளிற்கு அண்மித்து இந்நாடுகள் அமைந்தால், எதிர்காலத்தில் பெரும் வரப்பிரசாதமாகவே அமையும்.

இவையனைத்தும் ஸ்ரீலங்காவிற்கு இயற்கையாக அமைந்திருப்பதனை சர்வதேசம் தெளிவாக உணர்ந்துள்ளதை அரசின் ஆட்சியாளர்கள் புரிந்துள்ளார்கள். அப்புரிதலின் அடிப்படையிலேயே திருமலைத் துறைமுகத்தைப் பாதுகாப்பதாகப் பரப்புரை மேற்கொண்டு சம்பூரை ஆக்கிரமித்தார்கள்.

மன்னார் வளைகுடாவில் எண்ணெய்வள அகழ்வாராய்ச்சிக்கு இந்தியா, சீனாவின் உதவியை நாடுகிறார்கள்.

திருமலை நகர் மற்றும் சுற்றுப்புறச் சுற்றாடலில் வசிக்கும் தமிழர்களை வெளியேற்றி, அங்கு வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கப் போவதாக அறிவித்தலையும் விடுக்கிறார்கள்.

சர்வதேசத்திற்காகப் போடும் தூண்டிலில் மன்னாரையும், திருமலையையும் கொழுவி, மட்டக்களப்பு, அம்பாறையைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர அரசு திட்டம் போடுகிறது.

அதேவேளை, இந்திய அரசியல் ஆய்வாளரான அஜீத்குமார் சிங் போன்றோர் புலிகள் போரிடும் பலத்தினை இழந்து விட்டார்களென்று ஆரூடம் கூறியுள்ளார்கள்.

அதாவது சகல நகர்வுகளையும் போர் நிறுத்த ஒப்பந்த நாளிலிருந்து பிரயோகித்து வந்த சர்வதேசமானது, ஜனாதிபதிக்கு இறுதிச் சந்தர்ப்பமொன்று வழங்கியுள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுதாக நிராகரிக்காமலும் தனது பங்களிப்பை அகற்றாமலும் புலிகள் மீதான போரினை ஜனாதிபதி மஹிந்த நடத்த வேண்டுமென சர்வதேசம் விரும்புகிறது.

இப்போரில் எத்தரப்பு இராணுவ வெற்றிகளை பெறுமென்பதை இன்னமும் ஊகித்தறிய முடியாதுள்ளது சர்வதேசம்.

வடக்கு கிழக்கை விடுதலைப் புலிகள், அரசின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தால் அந்நிலப்பரப்பானது சர்வதேசத்தின் முன்னுரிமைப் பிரதேசமாக அமைவதோடு, வலியோன் பக்கம் அது திரும்பும் வேடிக்கையும் நிகழும்.

அதாவது சர்வதேசம் வழங்கும் இறுதிச் சந்தர்ப்பத்தினை ஜனாதிபதி மஹிந்த தனது கையிலெடுத்துள்ளார்.

'கிழக்கிலிருந்து வடக்கை நோக்கி" என்கிற சூத்திரம் சரிவர அமைய வாய்ப்பில்லை. சர்வதேசத்தை உள்ளிழுத்து, தனது இன மேலாதிக்கத்தை நிலைநாட்ட சிங்களம் வரையும் உத்திகளே, அவர்களிற்கான வீழ்ச்சியையும் நிர்ணயிக்கப் போகிறது

  • கருத்துக்கள உறவுகள்

-சி.இதயச்சந்திரன்-

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுதாக நிராகரிக்காமலும் தனது பங்களிப்பை அகற்றாமலும் புலிகள் மீதான போரினை ஜனாதிபதி மஹிந்த நடத்த வேண்டுமென சர்வதேசம் விரும்புகிறது.

உண்மைதான். சர்வதேசம் பற்றி சரியாக இவ்வாசிரியர் குறியுள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.