Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அவுஸ்திரேலியா

Featured Replies

கிழக்கின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அவுஸ்திரேலியா

15977717_735185406660322_455168356952883

கிழக்கின் சுற்றுலாத்துறையை   அபிவிருத்தி செய்யும்   நோக்கில் அவுஸ்திரேலிய  அரசாங்கத்தின்  நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும்  திட்டத்தின் அங்குரார்ப்பண  நிகழ்வவு இன்றையதினம் நடைபெற்றது.

அவுஸ்திரேலிய  உயர்ஸ்தானிகரின்   உத்தயோகபூர்வ இல்லத்தில்  இடம்பெற்ற  இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட் ,  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரயிஸ் ஹட்செசன் மற்றும் திறன்  அபிவிருத்தி,தொழிற் பயிற்சி  அமைச்சர் மஹிந்த  சமரசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.

கிழக்கு மற்றும்  வட மத்திய  மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்தில் கிழக்கின்  அம்பாறை ,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை  ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு இளைஞர்கள்,மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமையளித்து  பல அபிவிருத்திட்டங்கள்  முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்  இந்த  திட்டத்தில்  கிழக்கு மாகாணத்தின்  பிரதான பிரச்சினையாக  காணப்படும்    வேலையில்லாப் பிரச்சினையை  முற்றாக ஒழிக்கும் ஒரு திட்டத்தில் ஒரு கட்டமாக இந்த திட்டம் கிழக்கு மாகாணத்தில்  முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15977048_735185499993646_181464393928607

இதில் சுற்றுலாத்துறையின் பெறுமானம்கொண்ட  சகல பிரிவுகளும்  நன்மையடையவுள்ளதுடன் இதில்  உணவுப்  பொருள்  விநியோகத்தர்கள்,கலைஞர்கள்,விருந்துபசார பயிற்சியாளர்கள்,வதிவிட வழங்குநர்கள்,வாடகை  வாகன சாரதிகள் ,மாவட்ட   திட்டமிடலாளர்கள்,பூங்கா  காப்பாளர்கள்,கைத்தொழில் ஒருங்கிணைப்பாளர்கள் வர்த்தக சம்மேளனத்தினர்   ஆகியோர்  இதன்  மூலம்  பாரிய நன்மையடைவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ்  நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின்  ஒளிமயமான  எதிர்காலத்திற்கு  அவுஸ்திரேலிய முழுமையான  ஒத்துழைப்பை  வழங்கவுள்ளதுடன் கிழக்கின் வேலையில்லாப் பிரச்சினையை  தீர்ப்பதற்கு முழுமையான  ஒத்துழைப்பை  வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய  உயர்ஸ்தானிகர் பிரயிஸ் ஹட்செசன் கிழக்கு முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/13464

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.