Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வரின் சமூகம் சார்ந்த சந்திப்புகள்

Featured Replies

வடமாகாண முதல்வரின் தாயக மக்களின் மேம்பாட்டை கருத்திற் கொண்டு பல்வேறு மட்டங்களில் சமூகம்சார் சந்திப்புகளை நிகழ்த்தவுள்ளார்.

தமிழ் வணிக சமூகத்துடனான சந்திப்பு:

புலம்பெயர்ந்த தமிழர் வாழும் நாடுகள் தோறும் தமிழர் வணிகத்துறைகளில் மேம்பட்ட வரகின்றனர். தன்னினத்துக்குள்ளான வணிகத்திலிருந்து விரிந்து நாடு சர்வதேசம் தழுவிய வணிகத்துறைகளில் தமிழர் முயற்சித்து வருகின்றனர். இவர்களில் கணிசமானோர் தாயகத்திலும் முதலீடு செய்யவும் தாயகத்தின்மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவவும் விரும்புகின்றனர்.

அவ்வாறான சமூகநலன் மீதும் அக்கறை கொண்ட தமிழ் வணிகர் பலரையும் முதல்வர் சந்திக்கவுள்ளார். தாயகம் தொடர்பில் வணிகர்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற வினாவுக்கு விடையாக இச்சந்திப்பு அமையும்.

பெண்களுடனான சந்திப்பு:

நடைபெற்ற போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. சிறுமியராகவும் இளம் மனைவியராகவும் தாயாகவும் பெண்கள் படும் துன்பம் மிகப் பெரியது. அவர்களுடைய வாழ்வில் நிரந்தரமான மீட்சியைக் கொண்டுவரவேண்டும் என முதல்வர் விரும்புகிறார். பெண்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை ஆழமாகப் பேசுவதற்காக இச்சந்திப்பு ஏறபாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அமைப்புக்களைச் சார்ந்தோரும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இளையோர் சந்திப்பு

தமிழர் குடியேறிய நாடுகளில் அடுத்த தலைமுறையாக வலுவோடு வளர்ந்து வரகின்ற இளைளோரைச் சந்திப்பதுவும் முதலிவரின் இலக்குகளில் ஒன்றாக இருக்கின்றது. தாயக மக்கள் மீது இளையோர் கொள்ளும் தொடர்பு நீண்ட காலத்திற்குப் பயன் தரவல்லது என்பதால் முதல்வர் வரகையில் இயையோர் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட இளைய சமூகம் தாயகத்தில் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றது. கல்வியும் அடிப்படைவ hழ்வாதாரமும் இன்றி பல இளையோர் தம் வாழ்வைத் தொலைத்து வருகின்றனர். அவர்களை மேம்படுத்துவது தொடர்பாகப் பல விடயங்கள் இளையோர் சந்திப்பில் இடம் பெறும்.

சமூக அமைப்புக்களோடான சந்திப்பு

கனடாவில் தாயக ஊர் சார்ந்த சங்கங்கள் உட்படப் பல சமூக அமைப்புக்கள் உள்ளன. அவற்றின் பிரதி நிதிகளைச் சந்தித்துத் தாயக மேம்பாடு பற்றிப் பேசுவதற்கு இச்சந்திப்பு ஒழுங் செய்யப்பட்டுள்ளது.

சனவரி 08 ஞாயிற்றுக்கிழமை - முதல்வருடன் ஒரு மாலைப் பொழுது.

முதல்வர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் உதவிப்பாலம் என்ற திட்டத்திற்கமைய தாயக மக்களுக்கு உதவும் நோக்கோடு நிதிசேர் நகழ்வாக இது அமைகிறது.

சனவரி 10 செவ்வாய்க் கிழமை - பிரம்டன் மாநகர சபையுடன் சந்திப்பு

எதிர்காலத்தில் தாயக மேம்பாடு சார்ந்த பல பணிகளைப் பிரம்டன் மாநகரசபையோடும் இணைந்து முன்னெடுக்கப்படக்கூடிய வாய்ப்புகள் தோன்றியுள்ளன. அதனை வலுப்படுத்தும் சந்திப்பாக இது அமையும்.

சனவரி 14 சனிக்கிழமை - இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்து

முதல்வர் வருகையில் முதன்மைபெற்ற நிகழ்வாக இது அமையும். மார்க்கம் மாநகரசபை மேயர அவர்களும் வடமாகாண முதல்வர் சி.வி. விக்கினேசுவரன் அவர்களும் இதில் கையெழுத்திடுவர்.

சனவரி 15 ஞாயிற்றுக்கிழமை - மார்க்கம் பொங்கல் விழா

மார்க்கம் மாநகரசபையின் அனுசரணையுடன் நடத்தப்படும் பொங்கல் விழாவில் முதல்வர் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

சனவரி 15 ஞாயிற்றுக்கிழமை - மாபெரும் பொதுக் கூட்டம்.

பல்லாயிரம் மக்கள் கூடும் பிரமாண்டமான அரங்கில் முதல்வரின் பேருரை இடம் பெறும்

http://www.canadamirror.com/canada/78043.html

  • தொடங்கியவர்

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்

ஒன்ராறியோ பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

Kathleen Wynne, hosted C.V. Wigneswaran (1)

 

கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று, ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் அம்மையாரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஒன்ராறியோ பிரதமரின் குயீன்ஸ் பார்க் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்று ஒன்ராறியோ பிரதமர் செயலகம் கூறியுள்ளது.

ஒன்ராறியோ மற்றும் வடக்கு  மாகாணங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு விரும்புவதாக ஒன்ராறியோ பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

Kathleen Wynne, hosted C.V. Wigneswaran (1)Kathleen Wynne, hosted C.V. Wigneswaran (2)

http://www.puthinappalakai.net/2017/01/14/news/20653

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.