Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் 2020இல் இல்லை

Featured Replies


ஜனாதிபதித் தேர்தல் 2020இல் இல்லை
 
 

article_1484195008-1.jpg-ஜே.ஏ.ஜோர்ஜ், ப.பிறின்சியா டிக்சி

“புதிய அரசியலமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து விட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, ஜனாதிபதித் தேர்தல் 2020ஆம் ஆண்டு நடைபெறாது” என, சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோது, அதில் பங்கேற்றிருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தே புதிய அரசாங்கம், ஆட்சிக்கு வந்தது. அதிகாரத்தை ஒழிப்பதாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துப் பலமிக்க நாடாளுமன்ற ஆட்சியை உருவாக்குவோம் என்றும் அவர் கூறினார்.    

ஜனாதிபதி முறைமை இல்லாமற் செய்யப்பட்டே புதிய அரசியலமைப்பும் உருவாக்கப்படுகிறது. தாங்கள் ஜனாதிபதியானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகவே முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கூறினார். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை.  

ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகத் தெரிவித்து சந்திரிகா, 1994 இல் ஆட்சிக்கு வந்தார். 2000 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதனையே சொன்னார் ஆனால் செய்யவில்லை.  

2005ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகத் தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதனையே கூறி வாக்குகளைப் பெற்று ஆட்சியை கைப்பற்றினார். ஆனால், முறைமையை ஒழிக்கவே இல்லை.  

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக சந்திரிகா மற்றும் மஹிந்த கூறினாலும், நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத சூழ்நிலை மற்றும் சர்வதேச விவகாரங்கள் காரணமாக அதனை செய்வது கடினமானதாக இருந்ததால், அதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை.   

2011ஆம் ஆண்டுவரை, இந்த நிலை மஹிந்தவுக்கும் இருந்தது. எனினும், அதன் பின்னர் அதனை செய்ய மஹிந்தவுக்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பலமும் இருக்கவில்லை என்பது வேறு விடயமாகும். எனினும், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கான அவசியம் இருக்கவில்லை.   

எனினும், நாம் சொன்னதும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே காணப்படுகின்றது. அதனை நிச்சயமாக நாம் செய்வோம்” என்றார்.  

“இதேவேளை, அரசாங்கத்தில் முக்கிய அங்கமாகவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறையையே தொடரத் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றதே?” என ஊடகவியலாளர்கள் கேட்டதுக்கு பதிலளித்த ராஜித,  

“அது ஒரு சிலரின் நிலைப்பாடு, அவர்களின் இந்த முடிவுக்கு காரணம் என்னவென்று இன்று (நேற்று) காலை அவர்களிடம் நான் பேசினேன். அக்கூட்டத்தில் ஜனாதிபதி இருக்கும் போது இவ்வாறான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.  

நாம் அவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடுவோம். மக்களின் பலம் எமக்கு உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. இதனை நிச்சயம் நாம் செய்து காட்டுவோம்” என்றார்.  

“2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?” என ஊடகவியலாளர்கள் கேட்டதுக்கு, “2020இல் தான் ஜனாதிபதி தேர்தலே நடைபெறாது. அப்போது அவர் எப்படி போட்டியிடுவார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் முடிவில் எவ்வித பயனும் இல்லை.

எவ்வளவு தீர்மானங்களை அவர்கள் எடுத்துள்ளார்கள். சந்திரிகா காலத்தில் கூட்டாட்சி ( பெடரல்) என்றனர். மஹிந்த காலத்தில் ஒற்றையாட்சி என்றார்கள். எதுவுமே நடக்கவில்லை. எனினும், இந்த ஆட்சியில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நிச்சயமாக ஒழிக்கப்படும்” என்றார்.  

அதன்போது, “ஐக்கிய தேசியக் கட்சியும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் உறுதியாக உள்ளது” என இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா கூறினார். 

- See more at: http://www.tamilmirror.lk/189660/ஜன-த-பத-த-த-ர-தல-இல-இல-ல-#sthash.yrbeQJsC.dpuf
  • தொடங்கியவர்

2020இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது

Sp12-3a429ff9eb6b211095fe7b7cd6379a2809373474.jpg

 

புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தே தீருவோம் என்கிறது அரசாங்கம்
(ரொபட் அன்­டனி)

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முழு­மை­யாக நீக்­கப்­படும். இதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது. அந்­த­வ­கையில் 2020 ஆம் ஆண்டில் நாட்டில் மற்­று­மொரு ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­றாது என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

சுதந்­திரக்கட்சி என்ன நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்­தாலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும். தேர்­தலில் வழங்­கிய வாக்­கு­று­தியை அர­சாங்கம் நிறை­வேற்­றியே தீரும் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக் கும் செய்­தி­யாளர் மாநாட்டில்

ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

கேள்வி:- புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டாது என்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டாது என்றும் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே போட்­டி­யி­டுவார் என்றும் சுதந்­தி­ரக்­கட்சி தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன?

பதில்:- நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யா­னது முழு­மை­யாக நீக்­கப்­படும் என்றே நாம் கடந்த தேர்­தலில் வாக்­கு­று­தி­ய­ளித்தோம். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முழு­மை­யாக நீக்­கப்­படும். இதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது.

கேள்வி:- சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழு இதனை எதிர்த்­தி­ருக்­கி­றதே?

பதில்:- சுதந்­தி­ரக்­கட்சி அவ்­வாறு கூறி­யி­ருந்தால் நாம் அவர்­க­ளுடன் பேசலாம். ஆனால் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ர­வேண்டும் என்­பதில் ஜனா­தி­பதி உறு­தி­யாக இருக்­கின்றார். இதில் ஜனா­தி­பதி எவ்­வ­ளவு தீவி­ர­மாக இருக்­கின்றார் என்­பது எங்­க­ளுக்குத் தெரியும்.

கேள்வி:- 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட வேண்­டு­மென சுதந்­தி­ரக்­கட்சி கூறி­யுள்­ளதே?

பதில்:- 2020 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்தல் நடந்தால் தானே மைத்­தி­ரி­பால போட்­டி­யி­டலாம். தேர்தல் நடக்­காது. அதற்­கி­டையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்றி புதிய அர­சி­ய­ல­மைப்பை நாங்கள் கொண்­ட­வ­ருவோம்.

கேள்வி:- எனினும் சுதந்­தி­ரக்­கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு ஜனா­தி­பதி எதிர்ப்பு தெரி­விக்­க­வில்­லை­யெனக் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- ஜனா­தி­பதி அதற்கு ஆத­ரவும் தெரி­விக்­க­வில்­லை­தானே.. இந்த முறைமை நீடிப்­பதை ஜனா­தி­பதி ஒரு­போதும் விரும்­ப­வில்லை. அவர் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­த­படி நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்றி புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுப்பார்.

கேள்வி:- சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு ஆணை கிடைக்­க­வில்­லை­யென சுதந்­தி­ரக்­கட்சி கூறி­யுள்­ளதே?

பதில்:- அதற்­கான ஆணை கிடைக்­கும்­போது அவர்கள் எங்கள் பக்கம் இருக்­க­வில்லை. 1994 ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்த நாட்டில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­ற­வேண்டும் என்ற கோரிக்கை வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 94 ஆம் ஆண்டு இதனைக் கூறிக்­கொண்டே சந்­தி­ரிக்கா பத­விக்கு வந்தார்.

 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­ப­க்ஷவும் இதனைக் கூறிக்கொண்டே பதவிக்கு வந்தார். ஆனால் அக்காலத்தில் யுத்தம் இடம்பெற்றதன் காரணமாக இந்த விடயத்தில் உரிய முடிவு எடுக்கப்படவில்லை. எனினும் 2010 ஆம் ஆண்டு பின்னர் இந்த முறைமையை மாற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அனைவரும் இதனைக் கூறி வாக்குகளைப் பெற்றனரே தவிர அதனை மாற்றியமைக்கவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி அதனை மாற்றியமைத்தே தீருவார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.