Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழின் பல்வேறு பகுதிகளிலும் களைகட்ட ஆரம்பித்துள்ள தைப்பொங்கல் வியாபாரம்

Featured Replies

யாழ் குடாநாட்டில் தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று(12) அதிகாலை 5 மணி முதல் பல்வேறு பகுதிகளிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைகட்ட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். நகர் மற்றும் அதனை அண்டியுள்ள வியாபார நிலையங்கள், குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், சுன்னாகம், மருதனார் மடம், சங்கானை பொதுச் சந்தைகள் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து மிகவும் ஆர்வத்துடன் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கலுக்குத் தேவையான பானைகள், அகப்பைகள், அரிசி, கரும்பு, பழ வகைகள், புத்தாடைகள், வெடி பொருட்கள் மற்றும் இதர பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
 
மேலும் பொங்கல் வியாபாரம் ஆரம்பித்து தற்போது முதல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தைப்பொங்கல் திருநாளுக்கு முதல் நாளான நாளைய தினம் மேலும் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ் குடாநாட்டிலுள்ள பொதுச் சந்தைகள் மற்றும் வியாபார நிலையங்களில் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் பொங்கல் வியாபாரம் ஆரம்பித்து மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/131491?ref=home

  • தொடங்கியவர்

சற்று முன் வெள்ளவத்தை பகுதியில் ஒன்றுகூடிய மக்கள்!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் சற்றுமுன்னர் அதிகமான மக்கள் குவிந்தமையினால் சில மணி நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பிரதான சந்தைக்கு அருகில் உள்ள வீதி வழியில் பொங்கல் பண்டிகைக்குரிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் இந்த இடத்தில் அதிக மக்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக காலி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

நாளை தமிழர்களின் பாரம்பரிய தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற இருப்பதால், இன்று அதற்காக தமிழ் மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த இடத்தில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றமையினால் அங்கு பல கடைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வேறு இடங்களில் இருந்து வருகின்ற தமிழ் மக்களும் அங்கு பொருட்களை கொள்வனவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/131644?ref=home

  • தொடங்கியவர்

தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்

சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை “தைப் பொங்கலாகும்”.மக்கள் வீட்டில் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள்.

தைப் பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. "உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

தைப் பொங்கல் நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. அந்தவகையில் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மலையகத்தில் இன்று வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இவர்கள் கொள்வனவு செய்யும் பூஜை பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை, நடைபாதை வியாபாரிகள் ஊடாகவும் கடை தொகுதிகள் ஊடாகவும் கொள்வனவு செய்தனர்.

மேலும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இதனால் குறித்த பகுதிகளில் இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/community/01/131580?ref=home

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் களைகட்டிய தைப்பொங்கல் வியாபாரம்: கோடைப் பூவுக்கு ஏற்பட்டுள்ள அதிக கிராக்கி

மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் தைத்திருநாளை முன்னிட்டு வியாபாரம் இன்று(13) காலையில் இருந்து மட்டக்களப்பு நகர், செங்கலடி, வாழைச்சேனை போன்ற பகுதிகளில் தைத்திருநாளுக்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தந்து கொள்வனவில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வந்த போதும் இவ்வருடத்திற்கான காலநிலை சற்று வித்தியாசமான முறையில் அமைந்திருந்தமையினால் மக்கள் சிரமமின்றி பொருட்களை கொள்வனவு செய்தனர்.

தமிழர்களின் தைத்திருநாளுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் நகர்ப் பகுதிகளில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நாளில் அதிகமான பொது மக்கள் தமிழ் பிரதேசங்களில் மண் பானை, கரும்பு, கோடைப் பூ, அகப்பை, தேங்காய் மற்றும் புடவை ஆகியவை வாங்குவதற்காக ஒவ்வொரு கடைகளிலும் நிரம்பி வழிந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு நகரில் பல வீதியோர விற்பனை நிலையங்கள் அமைத்து இன்றைய நாளுக்குரிய வியாபாரம் களைகட்டியது. நாளை பிறக்கவிருக்கும் தைத்திருநாளை வரவேற்கும் முகமாக வீடுகளை துப்பரவு செய்து சுத்தப்படுத்தும் பணிகளிலும் மக்கள் ஈடுபட்டத்தை அவதானிக்க முடிந்தது.

உழவர் திருநாளாம் தைப் பொங்கலுக்கு அதிகளவான கோடைப் பூ மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விற்பனை செய்யப்படும். கிராமப் புறங்களில் மக்கள் கோடைப் பூக்களை கொய்து வந்து தைப் பொங்கல் பூசையில் வைத்து வழிபடுவது ஒரு மரபாக இருந்து வருகின்ற வேளையில் இம்முறை மழைப் பெயர்ச்சி இல்லாத காரணத்தினால் கோடைப் பூவுக்கு அதிகளவான கிராக்கி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
 
625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
 
625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/131609?ref=youmaylike3

  • தொடங்கியவர்

வவுனியாவில் களைகட்டிய தைப் பொங்கல் வியாபாரம்

வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு வியாபாரம் களைகட்டியதையடுத்து நகரின் மத்திய பகுதியில் பொங்கல் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக பொலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தைப்பொங்கல் திருநாள் நாளைய தினம் (14) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதுடன் தைத்திருநாளுக்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக பெருந்திரளான மக்கள் வருகை தந்து கொள்வனவில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/community/01/131623?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.