Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள்- லண்டனில் அமைச்சர் மங்கள

Featured Replies

சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள்- லண்டனில் அமைச்சர் மங்கள
 
 
சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள்- லண்டனில்  அமைச்சர் மங்கள
உள்ளூர் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் பங்கு குறித்து அரசிற்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதாகத் நேற்றிரவு லண்டனில் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
பிரிட்டனிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள  வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற  முக்கிய கலந்துரையாடல் ஒன்றிலேயே  இதனைத் தெரிவித்திருக்கிறார்.
 
பிரிட்டனில் பிரதமர் திரேசா மே பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் முதல் முறையாக உத்தியோகபூர்வ விஜயமொ ன்றினை மேற்கொண்டுள்ள வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சனை நேற்றுமுன்தினம் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்தார்.
 
நேற்றிரவு லண்டன் சத்தம் ஹவுசில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் சர்வதேச இராஜதந்திரிகள், ஊடகவி யலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் மத்தியில் உரையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவது போல், நூற்றுக்கு நூறுவீதம் இல்லாவிட்டாலும், அரசாங்கம் மனித உரிமை நிலைமைகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவித்தார்.
 
ஜெனீவாவில் ஐ.நா தீர்மானத்திற்கு இலங்கை இணையனுசரணை வழங்கியமைக்கு, கடந்த காலத்தில் இடம்பெற்ற விடய ங்களை மீள்பார்வை செய்து, தவறுகளைக் களைந்து, இனங்களுக்களுக்கிடையே உண்மையான நல்லிண க்கத்தையும், சமாதானத்தையும் கொண்டுவரவேண்டும் என்ற அரசின் இதயசுத்தியான நிலைப்பாடே காரணம் என்று கூறினார்.
 
ஆனாலும், ஐ.நா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய சரத்தான, வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளார்கள் போன்றோரை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்கி அதனூடாக போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றவிடயத்தில் அரசிற்குள்ளேயே முரண்பாடுகள் இருப்பதனை அவர் தனது உரையின் போது ஏற்றுக்கொண்டார்.
 
ஆனாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதுபோல், கடந்த காலத்தில் இடம்பெற்ற மோசமான உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து காத்திரமான, சுயாதீன உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்ற விடயத்தில் சகல அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஒருமைப்பாடு தோன்றியிருப்பதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
 
ஜே.வி.பி போன்ற கட்சிகளே இதனை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறிய, அவர், சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு எந்த ளவில், எந்த மட்டத்தில் இருக்கவேண்டும் என்பது குறித்தே தற்போது அரசாங்கம் சகல தரப்புடனும் தீவிர கலந்துரை யாடலில் ஈடுபட்டுவருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு பொறிமுறை விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர அங்கு தெரிவித்தார்.
 
ஐரோப்பிய கமிஷனினால்,  மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவேண்டுமெனத் தீர்மானித்திருப்பதனை வரவேற்ற அவர், இலங்கை சரியான பாதையில் பயணிப்பதனை ஏற்றுக்கொள்ளும் ஒரு குறிகாட்டியாகவே இதனைப் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/22603

  • தொடங்கியவர்

முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தியில் நம்­ப­க­ர­மான, சுயா­தீன உள்ளக பொறி­மு­றையை உருவாக்குவதில் அரசு அக்கறை

Sp24-5d99cbdd520b924dd0e4050326812fb7ae516a38.jpg

 

லண்­டனில் அமைச்சர் மங்­கள உறுதி; நல்­லி­ணக்க செய­ல­ணியின் பரிந்­துரை நிபு­ணர்­க­ளினால் ஆரா­யப்­ப­டு­கின்­றது என்­கிறார்

(நமது விசேட நிருபர்)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமு­ல்ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது. அதன்­படி கடந்த கால விட­யங்­களை நேர்­மை­யா­கவும் உண்­மை­யா­கவும் ஆராய்ந்து அவற்றை ஏற்­றுக்­கொள்­வ­தற்கும் புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் இலங்கை அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்புத் தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே வித்­தி­யா­ச­மான கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்த முரண்­பா­டான கருத்­துக்­க­ளுக்கு அப்பால் மிகவும் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையை அமைக்க வேண்­டிய தேவை அர­சாங்­கத்­துக்கு காணப்­ப­டு­கி­றது என்றும் அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்­றினை மேற்­கொண்டு பிரிட்­ட­னுக்குச் சென்­றுள்ள வெ ளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர லண்­ட­னி­லுள்ள சர்­வ­தேச விவ­கா­ரங்­க­ளுக்­கான றோயல் நிறு­வ­னத்தில் சிறப்­பு­ரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அமைச்சர் மங்­கள சம­ர­வீர அங்கு மேலும் கூறி­யுள்­ள­தா­வது,

இலங்கை அர­சாங்­க­மா­னது கடந்த காலங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் கவ­லைகள் குறித்து கவனம் செலுத்­து­கி­றது. அத்­துடன் உண்­மையைக் கண்­ட­றிதல், நீதி வழங்­குதல், நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள் நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­துதல் ஆகிய நான்கு விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அர­சாங்கம் கடந்த கால நிகழ்­வு­களை ஆராய்ந்து வரு­கி­றது.

இதன் முத­லா­வது கட்­ட­மாக இலங்கை அர­சாங்­க­மா­னது காணா­மற்­போனோர் குறித்து ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றி­யது.

அத்­துடன் நல்­லி­ணக்க பொறுப்­புக்­கூறல் பொறி­முறை தொடர்­பாக மக்­களின் கருத்­துக்­களைப் பெற்ற செய­ல­ணி­யா­னது தனது அறிக்­கையை அர­சாங்­கத்­துக்கு கைய­ளித்­துள்­ளது.

இந்த அறிக்­கையை அர­சாங்­கத்தின் நிபு­ணர்கள் மிக விரி­வாக ஆராய்ந்து வரு­கின்­றனர். இதனை முழு­மை­யாக ஆராய்ந்து விட்டு உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவும் நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­ல­கமும் எவ்­வாறு அமைக்­கப்­படும் என்ற வடி­வ­மைப்புத் தயா­ரிக்­கப்­படும்.

பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களின் பங்­கேற்புத் தொடர்பில் அர­சாங்­கத்­துக்­குள்­ளேயே வித்­தி­யா­ச­மான கருத்­துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இந்த முரண்­பா­டான கருத்­துக்­க­ளுக்கு அப்பால் மிகவும் நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான விசா­ரணைப் பொறி­மு­றையை அமைக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இறை­மை­யுள்ள ஜன­நா­யக நாடு என்­ற­வ­கையில் இலங்­கை­யா­னது இவ்­வ­கை­யான பொறி­முறை ஒன்றை தயா­ரிக்கும் நோக்கில் அனைத்து தரப்­பி­ன­ரி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்தும். இதே­வேளை புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக அதி­க­மான செயற்­பா­டுகள் தற்­போது நிறை­வ­டைந்­துள்­ளன.

இம்­முறை இலங்கை வரலாற்றில் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக விரிவான மற்றும் பரந்துபட்ட ஆலோசனைகளும் மக்கள் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. இது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆறு உப குழுக்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ள நிலையில் அரசியலமைப்பின் இறுதி வரைபு தற்போது தயாராகி வருகிறது.

அரசிலயமைப்பு வரைபு தொடர்பான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.