Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் கடும் எச்சரிக்கை!

Featured Replies

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் கடும் எச்சரிக்கை!
 
 
யாழ்.  பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில்  குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் கடும் எச்சரிக்கை!
யாழ்.  பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கோரப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய குற்றப்புல னாய்வுப்  பிரிவினருக்கு   யாழ். நீதவான்  சதீஸ்கரன்   கடும்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி யாழ் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் நள்ளிரவு 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணி த்த மாணவர்கள் இருவர்  சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். 
 
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையாதாக சந்தேகிக்கப்படும் யாழ் பொலிஸார் ஐவரும் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த வழக்கு மீண்டும் யாழ் நீதவான்  நீதிமன்றில் இன்று   விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கடந்த தவணையில் நீதவானால் கோரப்பட்ட அறிக்கைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில சமர்ப்பிக்கப்படவில்லை.
 
குறித்த வழக்கில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விபத்து என பொலிஸார் ஆரம்பத்தில் கூறியது தொடர்பான அறிக்கை மற்றும் யாழ் பொலிஸ் நிலைய ஆயுதக் களஞ்சிய பொறுப்பதிகாரியின் அறிக்கை என்பனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்றையதினம் சமர்ப்பிக்கப்படவில்லை.
 
இது தொடர்பில் சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தி யட்சகர் பேசியது தொடர்பிலான  அறிக்கை நீதவானால் கோரப்பட்டிருந்த நிலையில் அவ்வறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்பட வில்லை.
 
இந் நிலையில்  நீதவான், குற்றப்புலனாய்வு துறையினரை எச்சரித்ததுடன்  மன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் யாவும் உடனடி யாக அடுத்த தவணையில் சமர்ப்பிக்கும் படியும் முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அழைப்பாணை விடுத்த துடன் மன்றில் ஆஜராக தவறும் பட்சத்தில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தார். 
 
அத்துடன்   சந்தேக நபர்களான ஐவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

http://www.onlineuthayan.com/news/22629

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.