Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டப்போட்டி...

Featured Replies

பட்டப்போட்டி...
 
 

article_1484460114-2.jpg

-எம்.றொசாந்த்

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும்போட்டி சனிக்கிழமை  இடம்பெற்றது.
article_1484460129-3.jpg

article_1484460141-4.jpg

article_1484460154-5.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/189718/பட-டப-ப-ட-ட-#sthash.3dgRAmvf.dpuf
  • தொடங்கியவர்
சிறப்புற நடைபெற்ற வல்வை பட்டத்திருவிழா 2017
சிறப்புற நடைபெற்ற   வல்வை  பட்டத்திருவிழா 2017

வல்வை  பட்டத்திருவிழா 2017  நேற்றையதினம் வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற்கரையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்,வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற செயலாளார் பிரசாந்த், கௌரவ விருந்தினராக பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன் ஆகியோருடன் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

15936542_1445778645485585_8650117494136710798_o.jpg15585124_1445791282150988_4280511379653022291_o.jpg15936603_1445781455485304_8189985380651902693_o.jpg15936625_1445786658818117_4825510826070101632_o.jpg15936591_1445784852151631_4428641289270034715_o.jpg15936751_1445790885484361_3027079804577254553_o.jpg16107151_1445786005484849_3675413008761712324_o.jpg15977792_1445779662152150_8396403144113746456_n.jpg15977370_1445792975484152_4381900785409080719_n.jpg15975137_1445792158817567_2506267954299472814_o.jpg16113370_1445779915485458_957466779450754925_o.jpg16113017_1445791562150960_5252006854848060735_o.jpg15994518_1445779255485524_872597024857999606_o.jpg16113327_1445783218818461_5721872359981969963_o.jpg16113301_1445792215484228_6552968372816725648_o.jpg16112602_1445789132151203_7379299317407849051_o.jpg15975019_1445783818818401_6610516208029513763_o.jpg

 

http://onlineuthayan.com/news/22681

  • தொடங்கியவர்

பிரபாகரனின் பிறந்த ஊரில் பறந்து வென்ற ராட்சத ஓணான்!

 பட்டம்

மிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரான இலங்கை வல்வெட்டித்துறையில் உள்ள வல்வை உதயசூரியன் கடற்கரையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா நடைபெற்றது.
  
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் பட்டத் திருவிழாவில், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரனும், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்த விழாவில், இளைஞர்களால் நேர்த்தியுடன் உருவாக்கப்பட்ட பல்வேறு ராட்சத வடிவங்களிலான பாய்மரப் படகு, மாட்டு வண்டி, இயந்திர மனிதன், ராட்சத ஓணான், ஆள்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம், நாக பாம்பின் தலை என 80-க்கும் மேற்பட்ட அழகிய பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இவற்றை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

பட்டப்போட்டி பிரபாகரன் சொந்த ஊர்

2017-ம் ஆண்டின் ராட்சத பட்டத்துக்கான பரிசு, சுமார் 40 அடி நீளமான ராட்சத ஓணான் பட்டத்துக்குக் கிடைத்தது. இதை, தீருவிலை மகேந்திரன் என்பவர் வடிவமைத்து இருந்தார்.  போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பிரமாண்ட பட்டப் போட்டியை கண்டுகளிக்க இலங்கையின் பல்வேறு பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். 

ஆரம்ப காலங்களில் இருந்தே கடலோடிகளாக விளங்கிய வல்வெட்டித்துறை மக்கள், பல்வேறு கீழைத்தேச, மேலைத்தேச நாடுகளுக்கு பாய்மரப் படகுகளில் சென்று பட்டம் கட்டும் தொழிநுட்பங்களைக் கற்று வந்துள்ளனர். 

collagerrr_12003.jpg

இந்த விழாவில் ஆண்டுதோறும் பிரமாண்டமான உருவங்களையெல்லாம் வண்ணக் காகிதங்கள் மூலம் பட்டங்களாகச் செய்து காற்றில் பறக்கவிடுவர்.   பிரபாகரன் பிறந்த மண்ணை அடையாளப்படுத்தும் விதமாக போர் விமானம், யுத்த டாங்கி போன்ற பட்டங்களும் பறக்கவிடப்பட்டன. பட்டத் திருவிழா நிறைவுபெற்றதும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

http://www.vikatan.com/news/world/77960-kite-festival-at-ltte-president-prabhakarans-native-place.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.