Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் முட்பாதை

Featured Replies

மைத்­தி­ரியின் முட்பாதை

Page-01-image-d2af0be12b890197e58970f234140861cda1479c.jpg

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பத­விக்­கா­லத்தின் முற்­ப­கு­தியைக் கடந்து, நடுப்­ப­கு­திக்குள் நகர்ந்­தி­ருக்­கி றார். ஆறு ஆண்­டு­களைக் கொண்ட அவ­ ரது பத­விக்­காலம், 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆரம்­ப­மா­கி­யது. 2017 ஜன ­வரி 08ஆம் திக­தி­யுடன், அவ­ரது முதல் இரண்டு ஆண்டு பத­விக்­காலம் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது.

கடந்­த­போன இரண்டு ஆண்­டு­களும், வர­வி­ருக்கும் நான்கு ஆண்­டு­களும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைப் பொறுத்­த­வ­ரையில் சாதா­ர­ண­மா­ன­வை­யல்ல.

சவால்­க­ளுக்கும், சர்ச்­சை­க­ளுக்கும் நடு வில் தான், எஞ்­சி­யுள்ள நான்கு ஆண்­டு ­க­ளையும் கூட அவர் எதிர்­கொள்ளப் போகிறார். ஏனென்றால், இதற்கு முந்­திய கால சீரான அர­சியல் ஓட்டம் ஒன்றில் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தி­யாக அவர் இருக்­க­வில்லை.

இதற்கு முன்னர் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­திகள் அனை­வ­ருமே, இரு­பெரும் பிர­தான கட்­சி­களில் ஒன்றின் மூலமே தெரிவு செய்­யப்­பட்­டனர்.

ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ் ­வாறு வந்­த­வ­ரில்லை. பலம்­வாய்ந்த ஒரு கட்­சிக்குள் இருந்து பொது­வேட்­பா­ள­ராக வெளியே வந்­தவர் தான் அவர்.

அதுவும் அசைக்க முடி­யாத ஒருவர் என்று நம்­பப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்தில் இருந்த போதே, அவ­ருக்கு எதி­ராகப் போட்­டி­யிட முன்­வந்­தி­ருந்தார்.

பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன, எதிர்­பா­ராத ஒரு நிகழ்­வாக வெற்­றியைப் பெற்றுக் கொண்டார். அதற்குப் பின்னர், சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராகப் பத­வியை ஏற்றுக் கொண்­டாலும், மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஒரு அணி அதற்குள் முரண்­பட்டு நிற்­கி­றது.

சுதந்­திரக் கட்­சிக்குள் ஒரு எதிர்க்­கட்­சி­யாக மஹிந்த அணி இருக்­கின்ற நிலை­யிலும், ஐ.தே.க.வும், சுதந்­திரக் கட்­சியும் கூட்­டணி ஆட்­சியை அமைத்­தி­ருக்­கின்ற நிலை­யிலும், கட்சி ரீதி­யான மிக வலு­வான அடித்­தளம் இன்­னமும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இல்லை என்றே கூறலாம்.

எனவே, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஒரு ஜனா­தி­ப­தி­யாக இருந்­தா லும், மஹிந்த ராஜபக் ஷவின் அச்­சு­றுத்­தல்கள், ஐ.தே.க.வின் அழுத்­தங்கள் ஆகி­ய­வற்றைக் கருத்தில் கொண்டே முடி­வு­களை எடுக்க முடியும்.

இதற்கு முன்னர் இருந்த ஜனா­தி­ப­தி­க­ளுக்கு இத்­த­கை­ய­தொரு நெருக்­கடி இருக்­க­வில்லை. ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தொடக்கம் மஹிந்த ராஜபக் ஷ வரை­யான அவர்கள் அனை­வரும், தமது கட்­சியின் கட்­டுப்­பாட்­டையும் உறு­தி­யாக வைத்­தி­ருந்­தனர். எதிர்க்­கட்­சியின் தயவும் அவர்­க­ளுக்குத் தேவைப்­ப­ட­வில்லை.

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இந்த சிக்கல் இருப்­பதால் தான், கடந்த இரண்டு ஆண்­டு­களில் கடு­மை­யான சவால்­களைச் சந்­திக்க நேரிட்­டது. இனி­மேலும் அவர் அந்த சவால்­க­ளுக்கு முகம் கொடுத்தே ஆக வேண்­டி­யி­ருக்கும்.

ஏனென்றால், ஒரே அர­சுக்குள் நீடிக் கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும், ஐ.தே. க.வுக்கும் ஏற்­க­னவே இழு­பறி யுத்தம் தொடங்கி விட்­டது. எப்­போது தனித்து ஆட்­சி­ய­மைக்­கலாம் என்று இரு கட்­சி­க­ளுமே கனவு காணத் தொடங்­கி­விட்­டன.

ஒன்­றை­யொன்று குறை­சொல்­வதும், காலை வாரி விடு­வதும் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இந்த இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் சம­நிலை ஒன்றை உரு­வாக்கி பய­ணிக்க வேண்­டி­யது ஜனா­தி­ப­தி­யி­னது முக்­கி­ய­மான சவால்.

அதே­வேளை மஹிந்த ராஜபக் ஷவும் பகி­ரங்­க­மா­கவே இந்த ஆண்டில் ஆட்­சியைக் கவிழ்ப்பேன் என்ற சூளு­ரை­யுடன் கிளம்பி விட்டார். அவரால் ஏற்­ப­டுத்­தப்­படக் கூடிய அச்­சு­றுத்­தல்­க­ளையும் புற­மொ­துக்­கி­விட முடி­யாத சிக்­கலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இருக்­கி­றது.

இந்த இரண்டும் தான் அவர் எதிர்­கொள்­கின்ற சவால்கள் என்று கூற முடி­யாது. இவை­யெல்­லா­வற்­றையும் தாண்டி, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்னர், கொடுத்த வாக்­கு­று­தி­க­ளையும் காப்­பாற்ற வேண்­டிய அவ­சியம் அவ­ருக்கு இருக்­கி­றது.

அவ­ரது வெற்­றிக்கு கணி­ச­மான பங்கை அளித்த தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்­துள்ள வாக்­கு­று­திகள் மிகவும் சிக்­க­லா­னவை.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு, அதி­காரப் பகிர்வு, காணி கள் விடு­விப்பு, அர­சியல் கைதி­களின் விடு­தலை என்று தமிழ் மக்­களின் பிரச்­சி­ னை­களை தீர்ப்­ப­தற்கு எடுக்­கப்­பட வேண் ­டிய நட­வ­டிக்­கைகள் ஏரா­ள­மாக இருக்­கின்­றன. ஆட்சி மாற்­றத்தின் பின்னர், தமிழ் மக்கள் நிம்­மதிப் பெரு­மூச்சு விடு­கின்ற ஒரு நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் அது நிரந்­த­ர­மா­ன­தல்ல.

பல தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர், தமிழ் மக்கள் ஓர­ள­வுக்கு ஜன­நா­யக சூழலை அனு­ப­விக்­கின்ற வாய்ப்புக் கிட்­டி­யி­ருக்­கி­றது. இதனை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருப்­பது மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் தான்.

இந்த ஜன­நா­யக வெளி நிரந்­த­ர­மா­னது அல்­லது நிலை­யா­னது என்றும் உறு­தி­யாக கூற முடி­யாது. ஆனாலும், ஒரு தற்­கா­லிக ஆறு­த­லை­யா­வது கொடுக்­கின்ற வகையில் அமைந்­தி­ருக்­கி­றது.

இன்­னமும் தீர்க்­கப்­ப­டா­துள்ள பிரச்­சி­னை­களைத் தீர்த்து,வைத்தால் தான், தமிழ் மக்­க­ளுக்கு நிம்­ம­தி­யான சூழல் ஒன்று உரு­வாகும்.

அத்­த­கைய சூழலை உரு­வாக்கும் பொறுப்பு ஜனா­தி­ப­தி­யிடம் இருக்­கி­றது. அத்­த­கை­ய­தொரு சூழலை ஏற்­ப­டுத்தித் தரு­வ­தான வாக்­கு­று­தி­யையும் அவர் தமிழ் மக்­க­ளுக்கு அளித்­தி­ருக்­கிறார்.

இந்த வாக்­கு­று­தியை ஜனா­தி­பதி தனது பத­விக்­கா­லத்தில் முதல் பகு­திக்குள் நிறை­வேற்றத் தவ­றி­யி­ருக்­கிறார். அர­சாங்­கத்­துக்குள் இருக்­கின்ற இழு­ப­றிகள், நெருக்­க­டி­க­ளாலும், புற­நிலை சூழல்­க­ளாலும் இதனை அவரால் செய்ய முடி­யாமல் போனது. 

ஆனாலும், அடுத்து வரும் நான்கு ஆண்­டு­க­ளுக்குள் இந்த வாக்­கு­று­தி­க­ளையும், கடப்­பா­டு­க­ளையும் அவரால் நிறை­வேற்­றாமல் இருக்க முடி­யாது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கின்ற மற்றும் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­கின்ற விட­யத்தில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்­த­ள­வுக்கு அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கிறார் என்ற சந்­தேகம் ஏற்­க­னவே தமிழ் மக்­க­ளிடம் எழுந்­தி­ருக்­கி­றது.

காணிகள் விடு­விப்பு, மீள்­கு­டி­யேற்றம், அர­சியல் கைதிகள் விடு­தலை, அர­சியல் தீர்வு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வில்லை என்ற பர­வ­லான கருத்து தமிழ் மக்­க­ளிடம் இருக்­கி­றது.

தமிழர் தரப்பில் உள்ள தீவிரக் கருத்துக் கொண்ட சிலர், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கமும் தமிழ் மக்­களை ஏமாற்ற முனை­கி­றது என்று வலு­வாக நம்­பு­கின்­றனர். அவ்­வாறே பிர­சா­ரமும் செய்­கின்­றனர்.

தமிழ் மக்­க­ளிடம் இப்­போது ஏற்­பட்­டுள்ள அவ­நம்­பிக்கை மற்றும் அதி­ருப்­திகள் அடுத்த கட்­டத்­துக்கு செல்­லாமல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்தும் பொறுப்பு ஜனா­தி­ப­தியின் கையில் தான் இருக்­கி­றது.

தாம் ஏமாற்­றப்­பட்டு விட்டோம், அல்­லது ஏமாற்­றப்­ப­டு­கிறோம் என்று தமிழ் மக்கள் உண­ரு­கின்ற ஒரு கட்டம் உரு­வாகி விட்டால், கடந்த கால ஜனா­தி­ப­தி­க­ளான ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, பிரே­ம­தாச, டி.பி.விஜே­துங்க, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ போன்­ற­வர்கள் பற்றி எத்­த­கைய நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ளார்­களோ அந்த வரி­சையில் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இடம்­பி­டிக்க நேரிடும்.

மேற்­கூ­றப்­பட்ட அனைத்து ஜனா­தி­ப­தி­களும், தமிழ் மக்­களின் பேரா­த­ரவைப் பெற்­ற­வர்­களோ, அவர்­களின் வாக்­கு­க­ளினால் ஆட்­சிக்கு வந்­த­வர்­களோ அல்ல.

ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன மாத்­திரம் இவர்­களின் மத்­தியில் வேறு­பட்­டவர். தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன், அவர்­களின் வாக்­குகள் மூலம் தெரிவு செய்­யப்­பட்­டவர்.

தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன் ஆட்­சியில் அமர்ந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஏனைய ஜனா­தி­ப­தி­களைப் போன்றே தமிழ் மக்­களால் கரு­தப்­ப­டு­கின்ற நிலை ஏற்பட்டுமானால் அது அவமானத்தையே ஏற்படுத்தும்.

அதுவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலி லும், மைத்திரிபால சிறிசேனவையே முன்னிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகிறது. மைத்திரிபால சிறி சேனவுக்கு சிறுபான்மையின மக்களிடம் உள்ள ஆதரவைக் கருத்தில் கொண்டே அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன.

தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றாமல், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி பால சிறிசேன நிற்பாரேயானால், அவரது வெற்றியை உறுதிப்படுத்த முடியாது போகும்.

ஏமாற்றப்பட்டதாக உணரும் தமிழ் மக்கள் மீண்டும் அதே தவறைச் செய்யத் துணியமாட்டார்கள். அப்படியொரு சூழலுக்குள் தமிழ் மக்கள் தள்ளப்படுவார்களா அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வரும் நான்கு ஆண்டுகளுக்குள் நிறை வேற்றப்படுமா?

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.