Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக அபிவிருத்திக்கு தொடர்ந்தும் நடவடிக்கை

Featured Replies

மலையக அபிவிருத்திக்கு தொடர்ந்தும் நடவடிக்கை

Ranil2000-76101e9c6cde41d8314393d2d68fb033a8df188d.jpg

 

தேசிய பொங்கல் விழாவில் ரணில்  : சமூக கலாசார ரீதியாகவும் மக்களை முன்னேற்றுவது குறித்து சிந்திக்கின்றோம்
(நுவ­ரெ­லியா,மஸ்கெலியா நிருபர்கள்)

நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக உழைத்த பெருந்­தோட்ட வர்க்கம், கடந்த  காலங்­களில் ஒரு துண்டு காணி இல்­லாமல் உரிமை இல்­லாமல் இருந்த  ஒரு சமூ­க­மாக வாழ்ந்ததை நாம் மறந்­து­விட முடி­யாது. ஆனால் நாம் இன்று அந்த மக்­க­ளுக்கு ஏழு பேச்சஸ் காணி வழங்கி அவர்­க­ளுக்கு வீட்டு உரி­மையை பெற்றுக் கொடுத்­துள்ளோம்.

எனவே எதிர்­கா­லத்தில் இந்த மக்­களின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக அவர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்கின்றவர்களுக்கு அமைச்சு பதவிகளையும் வழங்கியுள்ளோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்தார். 

மலையகத்தில் இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புக்களுக்காக கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படும். அதேபோல் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசியல் ரீதியாக மட்டுமின்றி

 சமூக காலாசார ரீதியாகவும் மலையக மக்களின் முன்னேற்றம் தொடர்பாக சிந்தித்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய பொங்கல் விழா நேற்று நுவ­ரெ­லியா சினி­சிட்டா விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­றது.இதில் பிர­தம அதி­தி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்து கலா­சார சிறைச்­சா­லைகள் புன­ர­மைப்பு மீள் குடி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன்,தேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்சர் மனோ­க­ணேசன்,புதிய கிரா­மங்கள் சமூக அபி­வி­ருத்தி உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் பழனி திகாம்­பரம்,பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் நவீன் திசா­நா­யக்க கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஸ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மயில்­வா­கனம் தில­கராஜ், அ.அர­விந்­த­குமார், மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்கள் உட்­பட பெருந்­தி­ர­ளான பொது மக்­களும் கலந்து கொண்­டனர்.

விழாவை முன்­னிட்டு காலையில் பெருந்­தோட்ட மனித வள அபி­வி­ருத்து பொறுப்பு நிதி­யத்தின் தலை­வரும் முன்னால் பிரதி அமைச்­ச­ரு­மான வடிவேல் புத்­தி­ர­சி­கா­மணி தலை­மையில் பொங்கல் வைக்கும் நிகழ்வும் விசேட பொங்கல் பூஜை­களும் நடை­பெற்­றன. இதனை தொடர்ந்து பிர­தம அதி­தியின் வரு­கையும் குத்­து­வி­ளக்­கேற்­றலும் விசேட நிகழ்­வாக அமைச்சர் பழனி திகாம்­ப­ரத்தின் பிறந்த தினத்தை முன்­னிட்டு தரம் ஜந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் மாவட்­டத்தில் அதி கூடிய புள்­ளி­களை பெற்றுக் கொண்ட மாண­வர்­க­ளுக்கு பரி­சி­ல்­களும் பிர­த­மரால் வழங்கி வைக்­கப்­பட்­டது.

விழாவின் வர­வேற்று உரையை கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஸ்­ணனும் தொடர்ந்து அமைச்­சர்­களின் உரை­களும் இடம்­பெற்­றன.

தொடர்ந்து அங்கு உரை­யாற்­றிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,

தேசிய பொங்கல் விழா­வா­னது இன்று நுவ­ரெ­லி­யாவில் நடை­பெ­று­வதன் மூலம் இன்று தமிழ் மக்­களும் இந்த நாட்டில் அனைத்து சமூ­கங்­க­ளுக்கும் கிடைக்­கின்ற அனைத்து சலு­கை­க­ளுடன் வாழு­கின்ற ஒரு நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இலங்­கையில் இருக்­கின்ற தமி­ழர்கள் தேசிய இன­மாக ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள். இந்த பொங்கல் விழா­வா­னது கடந்த காலங்­களில் யாழ்ப்­பாணம், கொழும்பு போன்ற நக­ரங்­களில் நடை­பெற்­றது.இன்று மலை­ய­கத்தில் இது நடை­பெ­று­கின்­றது.

இந்து மக்­களின் பொது­வான ஒரு உற்­ச­வ­மாக இது இல்­லாமல் அனை­வ­ருக்கும் பொது­வான ஒரு விழா­வாக இது மாற்­ற­ம­டைந்­துள்­ளது.இந்த நாட்டில் அனைத்து மக்­களும் இந்த விழாவை கொண்­டாடும் ஒரு நிலை எற்­பட்­டுள்­ளது.

நுவ­ரெ­லியா, ஹட்டன், பண்­டா­ர­வளை, பதுளை ஆகிய நக­ரங்­களில் சுற்­றுலா துறையின் அபி­வி­ருத்தி தொடர்­பாக தற்­பொ­ழுது கலந்­து­ரை­யாடல் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.மிக விரைவில் இந்த திட்­டத்தை நடை­மு­றை­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம்.நான் இந்த அமைச்­சர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய பொழுது இங்­குள்ள இளைஞர், யுவ­தி­களின் வேலை­வாய்ப்­பற்றி என்­னிடம் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

எமது புதிய வேலைத்­திட்­டத்­திற்கு அமைய நாம் அனைத்து பகு­தி­க­ளிலும் தற்­பொ­ழுது தொழில் பேட்­டை­களை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம்.அதன் மூல­மாக இவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கின்ற நிலைமை ஏற்­படும்.அர­சியல் ரீதி­யாக மட்டுமின்றி நாம் சமூக கலாச்­சார ரீதி­யா­கவும் இந்த மக்­களின் முன்­னேற்றம் தொடர்­பாக சிந்­தித்து வரு­கின்றோம்.

இன்று இங்­குள்ள மாண­வர்­களின் கல்வி தொடர்­பாக விசேட கவனம் செலுத்தி வரு­கின்றோம்.அவர்­கள் 13 வரு­டங்கள் பாட­சாலை கல்­வியை பெற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் கரு­து­கின்றோம்.இந்த மாண­வர்கள் இறு­தி­யாக கல்வி கற்கும் இரண்டு வரு­டத்தில் இவர்­க­ளுக்கு 'டெப்' வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுக்க தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம்.தமி­ழர்கள், சிங்­க­ள­வர்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்­த­வர்கள் என அனைத்து மாண­வர்­க­ளையும் ஒரு கண்­ணோட்­டத்தில் பார்க்­கின்றோம்.

எதிர்­கா­லத்தில் தொழில் வாய்ப்­பு­களை பெற்றுக் கொள்­கின்ற பொழுது பயிற்­றப்­பட்ட சிறந்த விட­யங்கள் தெரிந்து தொழி­லா­ளர்­களை உரு­வாக்க வேண்டும்.அதற்­காக விசே­ட­மாக பாட­சா­லைகள் அமைக்­கப்­பட வேண்டும். அதேபோல மார்ச் மாதம் முதல் மத்­திய வங்­கியின் ஊடாக சுவ சக்தி எனும் ஒரு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்து சிறு கைத்­தொழில் செய்­கின்­ற­வர்­க­ளுக்கு கடன் வச­தி­களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

இந்த வேலைத்திட்டங்களை எல்லாம் வெற்றிகரமாக நடைமுறைபடுத்த வேண்டுமானால் இங்கிருக்கின்ற உங்களுடைய அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் உட்பட இவர்களுடைய குழுவினருக்கு உங்களுடைய முழுமையான ஆதரவை பெற்றுக் கொடுங்கள். உங்களின் தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் இன்று ஒரு பாரிய போராட்டத்தை முன்னெடுக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.