Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய இந்திய தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பார்.!

Featured Replies

புதிய இந்திய தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பார்.!

 

 

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரான டரன்ஜித் சிங் சந்து இவ்வாரம் இறுதியில் கொழும்பில் கடமைகள பொறுப்பேற்க உள்ளார். இந்திய குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அதற்கு முன்னர் இலங்கைக்கான இந்திய இராஜதந்திர சேவைகளை ஆரம்பிக்க உள்ளார்.

Taranjit-Singh-Sandhu.jpg

வொஷிங்டனில் இந்தியாவிற்கான துணை தூதுவராக கடமையை முன்னெடுத்து வந்த டரன்ஜித் சிங் சந்து 2000 தொடக்கம் 2004 ஆம் ஆண்டு  காலப்பகுதி வரையில் இலங்கையில் இந்திய தூதரகத்தின் அரசியல் துறை செயலராக பதவி வகித்தார். இலங்கையின் அரசியல் மற்றும் தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பூரண தெளிவை கொண்ட அவர் மீண்டும் இலங்கையில் இந்திய இராஜதந்திர சேவைகளை முன்னெடுக்க உள்ளார்.

தற்போது விமர்சனங்களை தோற்றுவித்துள்ள இந்தியாவுடன் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் மற்றும் இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு மீள பெற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் கலந்துரையாட உள்ளார்.

இலங்கை உள்ளிட்ட முக்கிய நாடுகளில் இந்தியாவை பிரதிநித்துவம் செய்து இராஜதந்திர சேவையில் ஈடுப்பட்ட டரன்ஜித் சிங் சந்து மீண்டும் இலங்கையில் கடமைகளை முன்னெடுக்க உள்ளார். உள்நாட்டு போரின் போதைய குறுகிய கால கடமை நிமித்தம் அனுபவத்தை கொண்ட டரன்ஜித் சிங் சந்து, தற்போது இலங்கையின் அமைதி சூழலில் பணிப்புரிய உள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய இலங்கையின் பயணத்தில் இந்தியாவின் ஒத்துழைப்புக்களை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.