Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக் ஷவை ஏன் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்பதை ஜனாதிபதி உணரவேண்டும்

Featured Replies

மஹிந்த ராஜபக் ஷவை ஏன் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்பதை ஜனாதிபதி உணரவேண்டும்

 

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே மக்கள் ஆணை என்கிறது ஜே.வி.பி.
(ப.பன்­னீர்­செல்வம்)

நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மக்கள் ஆணையை வழங்­கி­னார்கள் எனத் தெரி­விக்கும் ஜே.வி.பி., நிறை­வேற்று அதி­கா­ரத்தை தொடர முயற்­சித்­ததன் கார­ண­மா­கவே மஹிந்த ராஜபக் ஷவை மக்கள் வீட்­டுக்கு அனுப்பி வைத்­தனர் என்­பதை இன்­றைய ஜனா­தி­பதி உணர வேண்­டு­மென்றும் தெரி­வித்­தது.

இது தொடர்­பாக ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்டர் நளின் த ஜெய­திஸ்ஸ மேலும் தெரி­விக்­கையில்;

இலங்­கையின் 62 இலட்சம் மக்கள் தமது ஆத­ரவை வழங்­கியே மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக்­கி­னார்கள்.

இத் தேர்­தலில் போட்­டி­யிடும் போது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை ஒழிக்­கப்­படும் என மைத்­தி­ரி­பால சிறி­சேன உறுதி வழங்­கி­ய­தோடு, அவர் ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பொது செய­லா­ள­ரா­கவோ, அல்­லது அக்­கட்­சியின் பிர­தி­நி­தி­யா­கவோ போட்­டி­யி­ட­வில்லை. மாறாக பொது வேட்­பா­ள­ரா­கவே ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

எனவே நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்­கவே மக்கள் ஆணை வழங்­கி­னார்­க­ளே­யொ­ழிய அதனை தொடர்­வ­தற்­காக அல்ல என்­ப­தனை ஜனா­தி­பதி உணர வேண்டும்.

அத்­தோடு பொது வேட்­பா­ள­ரா­கவே வெற்றி பெற்றார். சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ள­ரா­கவோ தலை­வ­ரா­கவோ வெற்றி பெற­வில்லை.

இன்று சுதந்­திரக் கட்­சியின் சார்பில் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட்டு தோல்வி கண்­ட­வர்கள் பலர் தேசியப் பட்­டி­யலில் பாரா­ளு­மன்றம் வந்­துள்­ளார்கள். இவ்­வா­றா­ன­வர்­களும் பத­வி­களை பெற்றுக் கொண்ட சில சுதந்­திரக் கட்­சிக்­கா­ரர்­களும் உறுதி மொழி­களை மறந்து நிறை­வேற்று அதி­காரம் நீடிக்­கப்­பட வேண்­டு­மென வாதி­டு­கின்­றனர்.

இதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது. மக்கள் ஆணையை மீறு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. 18 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்றி சர்­வா­தி­காரம் பொருந்­திய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக தொடர்ந்து பதவி வகிக்­கவே மஹிந்த ராஜ­பக் ஷ ஆசைப்­பட்டார்.

ஆனால் மக்கள் மஹிந்த ராஜ­ப­க்ஷவை நிரா­க­ரித்து வீட்­டுக்கு அனுப்­பி­னார்கள். மாறாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்றி பெறச் செய்­தனர்.

எனவே இன்­றைய ஜனா­தி­பதி, தான் பொது வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கியே வெற்றி பெற்றார் என்­ப­தையும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை ஒழிக்­கப்­படும் என தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உறுதி வழங்­கி­ய­தா­லேயே 62 இலட்சம் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கி இந்நாட்டின் ஜனாதிபதியாக்கினார்கள் என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த உண்மையை உணர்ந்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-16#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.