Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாட்டி வதைக்கும் வறட்சி : குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.!

Featured Replies

வாட்டி வதைக்கும் வறட்சி : குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை 117 இலக்கத்துக்கு தெரிவியுங்கள்.!

 

 

நாட்டில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு தொடர்பான முறைப்பாடுகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

phone.jpg

தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 9 மாவட்டங்களைச் சேர்ந்த  சுமார் ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/15464

  • தொடங்கியவர்

வடக்கு மக்களை வாட்டி வதைக்கும் வரட்­சி­

 

நாடுமுழு­வதும் 150,000 பேர் அவதி, வடக்கில் 35,000 குடும்­பங்கள் பாதிப்பு  
(எம்.எம்.மின்ஹாஜ்,பா.ருத்­ர­குமார்)

நாட்டில் அனைத்துப் பாகங்­க­ளிலும்  ஏற்­பட்­டுள்ள வரட்சி நிலை கார­ண­மாக 45,440 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 50 ஆயி­ரத்­திற்கு அதி­க­மானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது 

வடக்கு மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம், மன்னார் மாவட்­டங்­களே அதி­க­ள­வி­லான பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன.அத்­துடன், வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக அனைத்து நீர்­த்

தேக்­கங்­க­ளிலும் நீர்­மட்­டங்கள் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்­துள்­ளன.

நீர்­த்தேக்­கங்­களில் 27 சத­வீதம் அள­வி­லேயே நீர் இருப்­ப­தாக நீர்ப்­பா­சன

திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

மேலும் நாட்டில் வடக்கு, வட மத்­திய மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில்

கடு­மை­யான குடிநீர்த் தட்­டுப்­பாடு நில

­வு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வரட்­சி­யுடன் கூடிய கால­நிலை கார­ண­மாக யாழ்ப்­பா­ணத்தில்

மாத்­திரம் 24,324 குடும்­பங்­களை சேர்ந்த 85ஆயி­ரத்து 500 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதனை தொடர்ந்து மன்னார் மாவட்­டத்தில் 10,235 குடும்­பங்­களை சேர்ந்த 35 ஆயிரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் அம்­பாந்­தோட்டை மற்றும் மொன­ரா­கலை மாவட்­டங்­க­ளிலும் அதி­க­ள­வி­லான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. வரட்­சி­யினால் யாழ்ப்­பா­ணத்தில் பாதிக்­கப்­பட்­டோரின் எண்­ணிக்கை ஒரு இலட்சம் வரைக்கும் நீடிக்­கலாம் என்று எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

மாலை முதல் இரவு நேரங்­களில் குளி­ரான கால­நிலை நில­வு­வ­துடன் பகல் பொழுதில் கடு­மை­யான வெப்­ப­மான நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் நேற்று விடுத்த அறிக்­கையின் பிர­காரம் வரட்­சி­யான கால­நிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்­ப­துடன் கடும் குளி­ரான போக்கு தொடரும் என்று அறி­வித்­துள்­ளது. அத்­துடன் எதிர்­வரும் 20 ஆம் திக­திக்கு பின்னர் தற்­கா­லிக மாற்றம் ஏற்­படும் வாய்ப்பு ஏற்­படும் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

நாட்டில் சுமார் ஒரு­வா­ர­மாக மாலை முதல் அதி­காலை வரை­யான காலப்­ப­கு­தியில் கடும் குளி­ரான கால­நி­லையும் காலை முதல் மாலை வரையில் கடு­மை­யான வெப்­ப­நி­லையும் காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக யாழ்ப்­பாணம், மன்னார், திரு­கோ­ண­மலை மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, பொலன்­ன­றுவை, அநு­ரா­த­புரம், கம்­பஹா, கண்டி, புத்­தளம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்­டங்­களில் இவ்­வா­றான நிலை நில­வு­கின்­றது. தென் மாகா­ணத்தை பொறுத்­த­வ­ரையில் அம்­பாந்­தோட்டை மற்றும் மொன­ரா­கலை மாவட்­டத்தில் மாத்­தி­ரமே அதி­க­மான வரட்சி நில­வு­கின்­றது.

வரட்­சி­யான கால நிலை கார­ண­மாக விவ­சா­யத்­திற்கு பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. வட­மத்­திய , வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் காணப்­படும் குளங்­க­ளிலும் நீர் வற்­றி­யுள்­ளது. இதன்­கா­ர­ண­மாக விவ­சாய நிலங்கள் கடும் மோச­மான நிலை­மைக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

மேலும் குடிநீர் தட்­டுப்­பாடு நில­வு­வ­தினால் வடக்கு , வட­மத்­திய மாகா­ணங்­களில் மக்கள் நிலைமை பெரும் அவல நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்­தினால் அனுப்­ப­படும் குடிநீர் பவு­சர்கள் உரிய முறையில் எமக்கு வரு­வ­தில்லை என்று தட்­டுப்­பாடு நிலவும் பிர­தேச வாழ் மக்கள் விச­னங்­களை தெரி­வித்த வண்­ண­முள்­ளனர். பல இடங்­களில் கிணற்று நீரையே மக்கள் பாவ­னைக்கு எடுத்து வரு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

யாழில் அதிக பாதிப்பு

நாட­ளா­விய ரீதியில் அதி­க­ள­வி­லான வரட்சி யாழ்ப்­பா­ணத்­தி­லேயே பதி­வா­கி­யுள்­ளது. இதன்­படி யாழில் 24 ஆயி­ரத்து 324 குடும்­பங்­களை சேர்ந்த 85,500 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­ளனர். மன்னார் மாவட்­டத்தில் 10 ஆயி­ரத்து 235 குடும்­பங்­களை சேர்ந்த 35 ஆயிரம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அம்­பாந்­தோட்­டையில் 3578 குடும்­பங்­களை சேர்ந்த 14 ஆயி­ரத்து 334 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதன்­பி­ர­காரம் வடக்கு மாகா­ணத்­தி­லேயே அதி­க­ள­வி­லான பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. மேலும் கண்டி, கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­க­ளிலும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன. யாழ் மாவட்ட பாதிப்­பு­களின் எண்­ணிக்கை ஒரு இலட்சம் வரைக்கும் அதி­க­ரிக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அனர்த்த முகா­மைத்து மத்­திய நிலைய ஊடக பொறுப்­ப­தி­காரி பிரதீப் கொடிப்­பிலி கேச­ரிக்கு குறிப்­பிட்டார்.

நாட்டின் அதிக வெப்­ப­மான கால­நி­லையின் காரணமாக நாச்சான்துவ, ஹூறுலுவ, சேனாநாயக்க சமுத்திரம்,இராஜாங்கனை, திஸ்ஸ வெவ, லுனுகம் வெகர நீர்தேக்கங்களும் மத்திய மாகாண நீர் தேக்கங்களான லக்ஷபான , விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக நிர்பாசன திணைக்களம் தெரிவித்தது.

அதுமாத்திரமின்றி நீர்பாசன திணைக்களத்தின் தகவலின் பிரகாரம் வடமத்திய மாகாண நீர்தேக்கங்களில் 27 சதவீதம்அளவிலேயே நீர் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-17#page-1

  • தொடங்கியவர்

ஆறு இலட்சம் மக்கள் நீரின்றி கடும் தவிப்பு

 

நீர்த் தேக்­கங்­களில் தொடர்ந்தும் குறை­வ­டை­கி­றது நீர்­மட்டம்  
 (எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் நிலவும் வரட்­சி­யுடன் கூடிய கால­நி­லை­ யா­னது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை வாட்டி வதைத்­து­வ­ரு­கின்­றது. வரட்சி நிலை கார­ண­மாக நாடு­பூ­ரா­கவும் 1 இலட்­சத்து 22 ஆயி­ரத்து 156 குடும்­பங்­களை சேர்ந்த 6 இலட்­சத்து 44 ஆயி­ரத்து 377 பேர் வரட்­சி­யில் சிக்கி தவித்து வரு­வ­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது.

நாடு­பூ­ரா­கவும் வரட்சி கார­ண­மாக குடிநீர் தட்­டுப்­பாடும்  விவ­சா­யத் ­து­றையில் பெரும் பாதிப்­பு­களும் ஏற்­பட்­டுள்­ளன. இந்த மோச­மான கால­நி­லை­யினால் கிழக்கு மாகா­ணமே அதிக பாதிப்­பு­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளது. மட்­டக்­க­ளப்பில் மாத்­திரம் 60,401 குடும்­பங்­களை சேர்ந்த 3 இலட்­சத்து 2 ஆயி­ரத்து 5 பேர் அதி­யுச்ச வெப்­பத்­துக்கு முகங்­கொ­டுக்க முடி­யாமல் சிக்கித் தவித்து வரு­கின்­றனர். அத்­துடன் 

 யாழ்ப்­பா­ணத்தில் 27 ,162 குடும்­பங்­களை சேர்ந்த 95 ஆயிரம் பேர் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று களுத்­துறை மாவட்­டத்­திலும் 1 இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். நாட்டில் நிலவும் வரட்சி கார­ண­மாக பொது மக்கள் தமது அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு போது­மான அள­விற்கு நீரை பெற முடி­யாமல் தவித்து வரு­கின்­றனர். குறிப்­பாக வடக்கு,கிழக்கு, வட­மத்­திய, வடமேல், மேல் மாகா­ணங்­களில் பல பிர­தே­சங்­களில் குடிநீர் தட்­டுப்­பாடு நிலவி வரு­கின்­றது.

வடக்கு, கிழக்கு

அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் தக­வல்­களின் பிர­காரம் வரட்­சி­யினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களே அதி­க­ளவில் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளன. இதன்­பி­ர­காரம் வடக்கு மாகா­ணத்தை பொறுத்­த­வ­ரையில் யாழ்ப்­பா­ணத்­தி­லேயே பெரு­ம­ள­வி­லான மக்கள் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்­கி­ணங்க யாழ்ப்­பா­ணத்தில் 27,162 குடும்­பங்­களை சேர்ந்த 93 ஆயி­ரத்து 917 பேர் குடிநீர் இன்­றியும் விவ­சாயம் செய்­ய­மு­டி­யா­மலும் வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு மன்னார் மாவட்­டத்தில் 16,348 குடும்­பங்­களை சேர்ந்த 55 ஆயி­ரத்து 245 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் வவு­னியா, முல்­லை­தீவு, கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­க­ளிலும் வரட்சி நிலவி வரு­கின்­றது.

அதே­போன்று நாட்டில் நிலவும் வரட்­சி­யினால் கிழக்கு மாகா­ணத்­திலும் பாரிய பாதிப்பு நிலை­மைகள் பதி­வா­கி­யுள்­ளன. இதன்­பி­ர­காரம் கிழக்கில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமே வரட்­சியின் கோர பிடியில் சிக்கி தவிக்­கின்­றது. மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 60,401 குடும்­பங்­களை சேர்ந்த 3 இலட்­சத்து 2ஆயி­ரத்து ஐந்து பேர் வரட்­சி­யினால் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். அதே­போன்று திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை மாவட்­டத்­திலும் பாதிப்­புகள் ஏற்­பட்ட வண்­ண­முள்­ளன.

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களில் பெரு­ம­ள­வி­லான பகு­தி­களில் காணப்­படும் வீடு­களின் கட்­ட­மைப்­பினை பார்க்கும் போது அதி­யுச்ச வெப்­ப­நி­லையை சமா­ளிக்க முடி­யாமல் மக்கள் தவித்து வரு­கின்­ற­மையை அறிய முடி­கின்­றது. குடிநீர் வச­திகள் இல்­லாமல் நிலைமை மோச­மாக காணப்­ப­டு­கின்­றது.

ஏனை­ய­மா­வட்­ட­நி­லைமை

அத்­தோடு வரட்­சி­யினால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை தவிர வட­மத்­திய மாகா­ணத்தின் பொலன்­ன­றுவை , அநூ­ர­தா­புரம் மாவட்­டங்­களில் குளங்கள் வற்­றிப்­போ­யுள்­ளன. மேல் மாகா­ணத்தில் களுத்­துறை மாவட்­டத்தில் 1 இலட்­சத்து 18 ஆயி­ரத்து 200 பேர் அவ­தி­யுற்று வரு­கின்­றனர். அதே­போன்று கொழும்பு, கம்­பஹா, அம்­பாந்­தோட்டை, மாத்­தறை, காலி,புத்­தளம், குரு­நாகல் ஆகிய மாவட்­டங்­க­ளிலும் அதி­யுச்ச வெப்­ப­நிலை நில­வு­கின்­றது.

குடி­நீர்­தட்­டுப்­பாடு

வரட்­சி­யான கால­நி­லை­யினால் வட­மத்­திய , மத்­திய மாகா­ணங்­க­ளி­லுள்ள இரா­ஜாங்­கனை, திஸ்ஸ வெவ, சேனா­நா­யக்க சமுத்­திரம், பராக்­கி­ரம சமுத்­திரம், நச்­சான்­துவ,ஹூறு­லு­வெவ,லுனுகம் வெகர, ல­க்ஷ­பான, விம­ல­சு­ரேந்­திர ஆகிய நீர்­தேக்­கங்­களில் பெரு­ம­ளவில் நீர் மட்டம் குறை­வ­டைந்­துள்­ளது. அதே­போன்று குளங்­களும் வரட்­சி­யினால் வற்­றிப்­போ­யுள்­ளன. இதன்­கா­ர­ண­மாக எதிர்­வரும் காலங்­களில் பெரு­ம­ளவில் குடிநீர் தட்­டுப்­பாடு நிலவும் என்று நீர்ப்­பா­சன திணைக்­களம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

மலை­யகம்

இதே­வேளை ஒரு­புறம் அதி­யுச்ச வெப்­பத்­தினால் வரட்சி ஏற்­பட்­டுள்­ள­துடன், மலை­ய­கத்தில் அதி­யுச்ச குளிர் ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக நுவ­ரே­லியா, பதுளை, மாத்­தளை, கண்டி ,கேகாலை மற்றும் இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்­களில் குளி­ரான கால­நிலை நில­வு­கின்­றது. இதனால் மக்கள் பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. அது­மாத்­தி­ர­மின்றி மலை­ய­கத்தின் சில பிர­தே­சங்­களில் பனி பொழியும் என்றும் எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.

கால­நிலை

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை எதிர்வரும் 20 ஆம் திகதி நிறைவுக்கு வரும் என்றும் அதன்பின்னர் போதுமான அளவிற்கு மழைவீழச்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை தொடர்பான விசேட நிபுணர் வர்ணசூரிய கேசரிக்கு தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை தாம் உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.