Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி சார்பானவர்களே புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்றனர் ;ரத்ன தேரர்

Featured Replies

புலி சார்­பா­ன­வர்­களே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கின்­றனர் ;ரத்ன தேரர்

 

 

நல்­லாட்சி அர­சாங்கம் சொல் தவ­றி­விட்­டது. அர­சியல் அமைப்பு மூல­மா­கவும் பொரு­ளா­தாரம் மூல­மா­கவும்  நாட்டை துண்­டாடும் பாதையில் அர­சாங்கம் பய­ணிக்­கின்­றது. அர­சாங்­கத்தை சரி­யான பாதைக்கு கொண்­டு­வர  ஒரு தேசிய சபையை உரு­வாக்­குவேன் என தூய்­மை­யான 

நாளைக்­கான அமைப்பின் தலை­வரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். 

ஆட்­சியை கவிழ்க்க முயற்­சிக்­க­வில்லை. ஆனால் அர­சாங்­கத்தின் பயணம் மோச­மாயின் சரி­யான சந்­தர்ப்­பத்தில் மாற்­ற­வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.அத்து­ர­லியே ரத்ன தேரரின் விசேட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் நடை­பெற்­றது. இதில் கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், 

அர­சாங்கம் மக்­க­ளுக்கு என்ன வாக்­கு­று­தி­களை கொடுத்­ததோ அதை சரி­யாக முன்­னெ­டுக்க வில்லை. மிகவும் மோச­மான பாதை­யினை தெரிவு செய்து பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. குறிப்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் தனது ஆட்சிக் காலத்தில்  செய்­வ­தாக கூறிய வாக்­கு­று­தி­களை மீறி மக்­களின் அதி­ருப்­தியை சம்­பா­திக்கும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றது. குறிப்­பாக  நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கு­வது தொடர்பில் எமக்கு  பிரச்­சினை இல்லை. ஆனால் இப்­போது இருக்கும் சூழ்­நி­லையில் அர­சியல் குழப்­பங்கள் மற்றும் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வது இல­கு­வான காரியம் அல்ல. 

 

குறிப்­பாக இந்த தேர்­தலை எடுத்­துக்­கொண்டால் பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்கும் தனி அர­சாங்கம் உரு­வாக்க மக்கள் ஆத­ரவு கிடைக்­க­வில்லை. நாட்­டுக்கு தேவை­யான சட்­ட­மூ­லங்­களை அல்­லது உறு­தி­யான தீர்­மா­னங்­களை எடுப்­பதில் பாரிய சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. இன்று  ஸ்திர­மற்ற அர­சாங்கம் இல்­லாது முழு நாடும் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்­துள்­ளது. இந்­நி­லையில் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்க  முன்னர் பிர­தா­ன­மாக மூன்று கார­ணி­களை நாம் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். 

அதி­காரப் பகிர்வின் மோச­மான நகர்­வுகள் அதி­காரப் பகிர்வு என்­பதை நாம் கருத்தில் கொண்டு செயப்­பட வேண்டும்.    இலங்கை இந்­திய ஒப்­பந்தம் மூலம் இலங்­கைக்கு இந்­தி­யா­வினால் திணிக்­கப்­பட்ட  13ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்பில் சக­ல­ருக்கும் தெரிந்­தி­ருக்கும்.  மாகாண அதி­கா­ரங்­களை பலப்­ப­டுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்ட போது அப்­போதே நாட்டில் மிகப்­பெ­ரிய கிளர்ச்சி உரு­வாக்­கப்­பட்­டது. அர­சியல் ரீதி­யிலும் ஆயுதம் ஏந்­தியும் பாரிய புரட்சி வெடித்­தது. மக்கள் விடு­தலை முன்­னணி எடுத்த இந்த முயற்­சியின் விளை­வாக இந்த நாட்டில் 65ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர்.  யுத்­தத்தில் பொது­மக்கள் கொல்­லப்­ப­டுவர்.  அதை தடுக்க முடி­யாது. ஆனால் இவ்­வா­றான நிலை­மை­களை தடுத்து உயிர் இழப்­பு­களை தடுத்­தி­ருக்க முடியும் .ஆனால் இலங்கை இந்­திய ஒப்­பந்­ததின் விளை­வாக நாம்  65 ஆயுரம் உயிர்­களை இழந்­த­மையே எமக்கு கிடைத்த பல­னாகும். 

அதேபோல் பாரிய   இழப்பு களுக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. அதன் பின்­னரே இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தை ஏற்­றுக்­கொண்டோம். அப்­போது 13ஆம் திருத்­தத்தை  கொண்­டு­வர சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­யமா அல்­லது பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்ற முடி­யுமா என சர்ச்சை ஏற்­பட்ட நிலையில் இந்த  விவ­கா­ரங்கள் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை அடிப்­ப­டை­யாக கொண்டு தீர்­மா­னிக்­கப்­பட்­டன.  நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையில் தான்  நாட்டின் ஐக்­கியம் தங்­கி­யுள்­ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி   முறைமை நீக்­கப்­பட்டால் நாட்டின் ஐக்­கியம் இல்­லாது போய்­விடும் என அப்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்க இட­ம­ளியோம் எனினும் நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் சர்­வா­தி­காரம் குறைக்­கப்­பட வேண்டும். அநா­வ­சிய அதி­கா­ரங்­களை வழங்கி ஜனா­தி­ப­தியை சர்­வா­தி­கா­ரி­யாக மாற்றும் முறைமை அவ­சியம் இல்லை என நாம் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தெரி­வித்தோம். ஆனால் முழு­மை­யாக ஜனா­தி­பதி முறை­மையை நீக்க வேண்டும் என நாம் தெரி­விக்­க­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூட அவர் நிறை­வேறு ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தாக தெரி­விக்­க­வில்லை. மும்­மொ­ழி­க­ளிலும் அதை தெளி­வாக தெரி­வித்­துள்ளார். நிறை­வேற்று  ஜனா­தி­ப­திக்கு உள்ள பொறுப்பு இன்றும் அவ­ருக்கு உள்­ளது. அதன் மூலம் தான் நாட்டின் ஐக்­கி­யத்தை காப்­பாற்ற முடியும். 

புலி­களை ஆத­ரிப்­ப­வர்­களே அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­கின்­றனர் மேலும் அர­சி­ய­ல­மைப்பை  உரு­வாக்கி நாட்டை முழு­மை­யாக சீர­ழிக்க வேண்டும் என நாம் ஒரு­போதும் குறிப்­பி­ட­வில்லை. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு இல்­லாது புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க மாட்டோம் என ஜனா­தி­பதி தெளி­வாக தெரி­வித்­துள்ளார். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு  எனும்­போது நாட்டின் தேசிய கீதம்,தேசியக் கொடி மற்றும் ஐக்­கிய இலங்கை என்ற வார்த்­தைகள் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே அது தொடர்பில்  அப்­போதே ஜனா­தி­பதி தெளி­வாகத் தெரி­வித்­துள்ளார். இப்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் நிய­மிக்­கப்­பட்ட உப குழுக்கள் மூலம் சட்­ட­மூலம் ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சட்­ட­மூ­லத்தில் முழு­மை­யாக ஐக்­கிய இலங்கை என்ற பதம் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நகர்­வுக்கு நாம் முழு­மை­யாக எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­கின்றோம்.  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு மாறாக எந்த அர­சியல் அமைப்­பையும் கொண்­டு­வர ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு எந்த அதி­கா­ரமும் இல்லை .  

இந்த அர­சி­ய­ல­மைப்பின் மூலம் ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது நாட்டின் ஐக்­கி­யத்தை இல்­லா­தொ­ழிக்கும் நகர்­வாகும்.    கடந்த காலத்தில் புலி­க­ளுக்கு துணை­போன, பயங்­க­ர­வா­தத்தை பலப்­ப­டுத்­திய, பயங்­க­ர­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என கூறி­ய­வர்கள் தான் இன்று புதிய அர­சி­ய­ல­மைப்­பையும் உரு­வாக்­கு­கின்­றனர். ஒரு சிறிய குழு­வி­னரே இந்த அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு மக்­களின் கருத்து அவ­சியம் இல்லை. நாட்டின் நிலை­மைகள் அவ­சியம் இல்லை. இவ்­வா­றான ஒரு அர­சி­ய­ல­மைப்பு இப்­போது கொண்­டு­வ­ரப்­ப­டு­வது நாட்டில் அனா­வ­சிய பிரச்­சி­னை­களை உரு­வாக்க வாய்ப்­பாக அமையும். இப்­போது ஏதோ ஒரு வகையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முன்­னெ­டுத்து செல்­லப்­படும் நகர்­வு­களை கூட அழிக்கும் வகையில் இந்த நகர்­வுகள் அமைந்­து­விடும். பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க எவ்­வாறு நாம் முன்­வந்­தோமோ அதேபோல் நாட்டின்  ஸ்திரத் தன்­மையை இல்­லா­தொ­ழிக்கும் இந்த புதிய அர­சியல் அமைப்பை நிறை­வேற்ற நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.  

தேர்தல் முறைமை நீக்­கு­வ­தாக பொய்­களை கூறு­கின்­றனர் தேர்தல் முறை­மையை இல்­லா­தொ­ழித்து மீண்டும் பழைய நிலை­மைக்கு எம்மால் போக முடி­யாது. பழைய முறை­மையில் நல்ல நகர்­வு­களும் இருந்­தன.  அதை­வி­டவும் மோச­மான நிலை­மைகள் காணப்­பட்­டன. ஆகவே  சரி­யான தேர்தல் முறைமை  ஒன்றை உரு­வாக்கி அதன் மூலம் ஆரோக்­கி­ய­மான அர­சியல் நக­வு­களை மேற்­கொள்ள வேண்டும் என தெரி­வித்தோம். கடந்த காலத்தில் தேர்தல் முறைமை மூலம் நடை­பெற்ற ஊழல் மற்றும் சட்­ட­வி­ரோத நகர்­வுகள் அனைத்­தையும் நாம் கவ­னித்தோம். அவற்றை மாற்­று­வ­தாக கூறி­னார்கள்.  ஆனால் இன்­று­வரை  அது தொடர்பில் எந்த முனேற்­றமும் இல்லை. புதிய தேர்தல் முறைமை உரு­வாக்­கப்­பட வேண்டும் என கூறி  அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும்  முன்­னெ­டுத்து  இப்­போது பழைய முறையில் தேர்­தலை நடத்த வேண்டும் என கூறு­கின்­றனர். ஆகவே அதை கார­ண­மாகக் கொண்டு    இப்­போது உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­தவும் காலத்தை கடத்­து­கின்­றனர். ஆகவே புதிய முறையில் உட­ன­டி­யாக தேர்­தலை நடத்த வேண்டும். ஜனா­தி­பதி உட­ன­டி­யாக கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்டும். 

வாக்­கு­று­திகள் நிறை­வேற்றப் பட­வில்லை நாட்டு மக்­க­ளுக்கு என்ன வாக்­கு­று­தி­களை கொடுத்­தோமோ அதை நிறை­வேற்ற வேண்டும். சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை உரு­வாக்க வேண்டும் என கூறினோம். அதில் ஒரு­சில ஆணைக்­கு­ழுக்கள்   உரு­வாக்­கப்­பட்­டன.ஆனால் சில முக்­கி­ய­மான ஆணைக்­கு­ழுக்கள் இன்னும் உரு­வாக்­க­பப்­ப­ட­வில்லை. குறிப்­பாக கணக்­காய்­வாளர் ஆணைக்­குழு போன்­றவை அவ­சியம். 19ஆம் திருத்தம்    முழு­மை­யாக நிறை­வேற்ற வேண்டும். அர­சியல் அமைப்பு தொடர்பில் எதிர்க்­கட்­சி­யினர்    உள்­ளிட்ட பலர் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர். மத சார்­பற்ற இராச்­சி­ய­மாக உரு­வாக்­கப்­பட வேண்டும் என கூறு­கின்­றனர்.உண்­மையில் நாம் மத சார்­பான  நாடு அல்ல.எனினும் பௌத்தம் சுட்­டிக்­காட்டப் பட்­டுள்­ளது. ஆனால் நாம் மத சார்பு   நாடு அல்ல. இங்கு சகல மதத்­தி­னரும் சம உரி­மை­யுடன் வாழ­வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பௌத்தம் என சுட்­டிக்­கட்­டப்­பட்­டுள்­ளதால் அது பெரிய முக்­கி­யத்­துவம் இல்லை. அது அவ­சி­யமும் இல்லை. ஆனால் இப்­போது கொண்­டு­வரும் அர­சியல் அமைப்பில் அது சுட்­டிக்­காட்­டப்­பட்டு குழப்­பங்­களை உரு­வாக்­கும்­வ­கையில் அமைந்­துள்­ளது. ஆகவே இவ்­வா­றான மோச­மான உறுப்­பு­ரை­களை உள்­ள­டக்கி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த நாம் இட­ம­ளிக்க மாட்டோம். மாகாண அதி­கா­ரங்கள் பற்றி பேசு­கின்­றனர். 

காணி அதி­காரம் உண்­மையில் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வது அவ­சி­ய­மில்லை. வடக்கு தமக்­கான காணி  அதி­கா­ரத்தை கோரு­கின்­றது. ஆனால் அது வழங்­கப்­பட்டால் அது நாட்டில் வேறு சிக்­கல்­களை உரு­வாக்­கி­விடும். வடக்கை போன்றே மத்­திய மாகாணம் முரண்­பட்டால் வட மாகா­ணத்­திற்கு தண்ணீர் கிடைக்­காது போய்­விடும். மத்­திய மாகாணம் நாட்டின்  இரு­தயம். இவ்­வாறு முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தி குழப்­பங்­களை கொண்­டு­வந்தால் இறு­தியில் மக்­க­ளுக்கு குடிக்­கவே தண்ணீர் கிடைக்­காது போய்­விடும். ஆகவே மாகாண முதல்­வர்­க­ளுக்கு ஏற்ற வகையில் மத்­திய அர­சாங்கம் செயற்­பட முடி­யாது. மத்­திய அர­சாங்­கமே காணி அதி­கா­ரங்­களை வைத்­து­கொள்ள வேண்டும். அதேபோல் அனைத்து மக்­களும் சகல பகு­தி­க­ளிலும் வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்க வேண்டும். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொரு­ளா­தார கொள்கை மோச­மா­னது தேசிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­ய­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் இணைந்து பல­மான பொரு­ளா­தார கொள்­கையை உரு­வாக்­கு­வார்கள் என நினைத்தோம். ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொரு­ளா­தார நகர்­வுகள் மோச­மா­ன­தாக அமைந்­து­வ­ரு­கின்­றன . இன்று நாடு முழு­மை­யாக சர்­வ­தேச நாடு­க­ளுக்கு விற்­கப்­ப­டு­கின்­றது. எமது நிலத்தை சர்­வ­தேச நாடு­க­ளுக்கு விற்க அர­சாங்­கத்­துக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை.  எமது மக்­களின் நிலங்­களில்  எமது மக்கள் வாழும் பகு­தி­களில் சர்­வ­தேச நாடு­களின் நிறு­வ­னங்­களை உரு­வாக்­கு­வது எம்­மையே பாதிக்கும். அர­சாங்கம் செய்யும் இந்த நகர்­வுகள் மோச­மா­ன­வை­யாகும்.  .அதேபோல் துறை­முக திட்­டங்­களை எடுத்­துக்­கொண்டால் அதிலும் சட்­ட­வி­ரோ­த­மாக அர­சாங்கம் நடந்­து­கொள்­கின்­றது. 

99 வருட குத்­த­கைக்கு துறை­மு­கத்தை வழங்­கு­வது முழு­மை­யாக தடுக்­கப்­பட வேண்டும். அர­சாங்கம் அவ்­வாறு வழங்­கு­மாயின் முழு நாட்டு மக்­க­ளையும் இணைத்து இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக போராட நாம் முன்­வ­ருவோம்.  நாட்டை விற்றும் தனியார் மயப்­ப­டுத்­தியும் தவ­றான பொரு­ளா­தார கொள்­கையை முன்­னெ­டுத்து செல்­கின்­றனர். ஒரு சிலர் நாட்டை விற்கும் பொரு­ளா­தார தீர்­மா­னங்­களை எடுக்­கின்­றனர். இது முழு­மை­யாக எதிர்க்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.  சீனாவும் இந்­தி­யாவும் எமக்கு அவ­சியம்.  அதற்­காக சீனா­விற்கும் இந்­தி­யா­விற்கும் நாட்டை விற்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அர­சாங்கம் அவ்­வாறு செய்யும் நிலையை அதை தடுக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். 

 

தேசிய சபை அவ­சியம் தேசிய சபை ஒன்றை நாம் உரு­வாக்­க­வுள்ளோம். இந்த சபையில் பொரு­ளா­தார வர்த்­தக நிபு­ணர்கள், கல்­வி­யா­ளர்கள், விவ­சா­யிகள்,சட்­டத்­த­ர­ணிகள், ஆசி­ரி­யர்கள் ஆகிய அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து தேசிய வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்க வேண்டும். இது ஒரு மாற்று பாரா­ளு­மன்­ற­மாக செயற்­படும் என என்னால் உறு­தி­யாக குறிப்­பிட முடியும். நாம் எந்தக் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அனைத்து கட்சிகளையும் இணைத்து இந்த நாட்டை முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் . அதேபோல் சிவில் அமைப்புகள் மக்களின் பிரதிநிதிகளை இணைத்து ஆனால் அரசியல் சாயம் பூசாத ஒரு தேசிய சபையை உருவாக்க வேண்டும்.

Athuraliye-Rathana-himi.jpg

இப்போது அரசாங்கத்தை வீழ்த்த அவசியம் இல்லை  அதன் மூலம் அரசாங்கத்தை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என எதிபார்க்கின்றேன். அதற்காக நாம் எதிர்க்கட்சி பக்கம் சாயவில்லை. இவர்களின் கொள்கைகள் என்னவென்பது எனக்கு நன்றாகவே தெரியும். மஹிந்த ராஜபக் ஷவை ஆட்சிக்கு கொண்டுவரவோ அல்லது அரசாங்கத்தை வீழ்த்தவோ நான் முயற்சிக்கவில்லை. அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கின்றது. அதை சரியான பாதையதில் திருப்ப வேண்டுன். 

அரசாங்கம் பயணிக்கும் பாதை தவறானது ஆனால் இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மோசமாக  பயணிக்கும் நிலையில் ஆட்சி மற்றம் ஒன்று தேவைப்படும்  நிலை ஏற்பட்டால்  அதையும் செய்ய நாம் முன்வருவோம். ஆனால் இப்போது அதற்கான அவசியம் இல்லை. அரசாங்கத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.  இந்த அரசாங்கத்தை வீழ்த்த ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது அது குறித்து  சிந்திக்கலாம். இப்போது அதற்கான அவசியம் இல்லை. ஆனால் அரசாங்கத்தை நிவர்த்திசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது. 

http://www.virakesari.lk/article/15469

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.