Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட.,கிழக்குக்கு மட்டும் எதிர்க்கட்சி தலைவராக செயற்படும் சம்பந்தன்

Featured Replies

வட.,கிழக்­குக்கு மட்டும் எதிர்க்­கட்சி தலை­வ­ராக செயற்படும் சம்­பந்தன்

03-acc0e42a55d904eb23bdca150a6889df19012040.jpg

 

நாமே சர்­வ­தேச விசா­ர­ணையை கோரு­வதா? அத்­து­ர­லியே தேரர் கேள்வி
(ஆர்.யசி )

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்  தலைவர் சம்­பந்தன் எதிர்க்கட்சி தலை­வ­ராக இருந்­தாலும் அவர் வடக்கு, கிழக்கு பகுதி­க­ளுக்கு மட்­டுமே எதிர்க்கட்சித் தலை­வ­ராக செயற்பட்டு வரு­கின்றார். தமிழர் ஒருவர்  

எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்கும் நிலை யில் நாட்டின் தேசிய நல்­லி­ணக்க நகர்­வு­க­ளுக்கு பல­மாக அமையும் என்ற எண்­ணத்­தி­லேயே ஆத­ரவு வழங்­கினோம். ஆனால், அவர் முழு நாட்

­டிற்கும் எதிர்க்­கட்சித் தலைவர் என்­பது அவ­ருக்கு இன்னும் புரி­ய­வில்லை என தூய்­மையான நாளை அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார்.

சர்­வ­தேசம் எம்மை புரிந்­து­கொள்ள தயா­ராக உள்ள நிலையில் நாமே சர்­வ­தேச விசா­ர­ணை­களை கோரி நிற்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அது­ர­லியே ரதன தேரரின் விசேட செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று இலங்கை மன்றக் கலூ­ரியில் நடை­பெற்­றது. அதில் கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் பய­ணத்தில் வடக்கு கிழக்கு பிரச்­சி­னைகள் முக்­கிய கார­ணி­க­ளாக சுட்­டிக்­கட்­டப்­பட்­டுள்­ளன. உண்­மையில் அன்று யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் வடக்கில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த கிடைத்த சந்­தர்ப்­பத்தை நாம் தவ­ற­விட்­டு­விட்டோம். அபி­வி­ருத்தி முன்­னெ­டுக்­கப்­பட்­டது உண்­மை­யே­யாகும். ஆனால் அதனால் மக்­களின் மனங்­களை வெல்ல எம்மால் இய­லாது போன­மையே உண்­மை­யாகும். வடக்கை அபி­வி­ருத்தி செய்ய வடக்கு மக்­களை பயன்­ப­டுத்தி அவர்­க­ளைக்­கொண்டு முத­லீ­டு­களை செய்து அவர்கள் மூல­மாக அந்த பிர­தே­சத்தை கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்க வேண்டும்.

ஆனால் கொழும்பில் இருந்து ஆட்­களை கொண்டு சேர்த்து அங்­குள்ள மக்­களை மேலும் அடி­மை­க­ளாக்கி அவர்­களின் ஆசை, எதிர்­பார்ப்­பு­களை நிரா­க­ரித்து அபி­வி­ருத்தி செய்­தனர். இன்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அந்தக் குறை­களை சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர். பொருத்து வீடு­களை சர்­வ­தேச நாடு­க­ளிடம் இருந்து பெற்று வடக்கில் பொருத்தி அவர்­களை திருப்­திப்­ப­டுத்த முடி­யாது.அவர்­க­ளுக்­கான நிதியை வழங்கி அவர்­க­ளுக்கு ஏற்ற வகையில் வீடு­களை நிர்­மா­ணிக்க அனு­ம­திக்க வேண்டும்.

இன்று அவர்கள் பிரி­வினை கொள்­கையில் செயற்­பட ஆரம்­பித்­துள்­ளனர். அதை மாற்­றி­ய­மைக்க வேண்டும். மொழி கலா­சார ரீதியில் ஒன்­றி­ணைக்க வேண்டும். இந்த நாட்டின் அடி­மைகள் அல்ல அவர்­களும் இலங்­கைக்கு உரித்­த­னான மக்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்டும். அவர்­களின் நியா­யங்­களை ஏற்­று­கொள்ள வேண்டும். அங்கும் கல்வி அவ­சியம், விவ­சாயம் அவ­சியம், மனித உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அர­சாங்கம் அவற்றை கவ­னத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்­களின் மனங்­களை வென்று அவர்­களை பூர­ண­மாக அங்­கீ­க­ரிக்க வேண்டும். அன்று தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பேச்­சு­வா­ர­தைக்கு செல்­கையில் புலி­க­ளையே நாட­வேண்டி இருந்­தது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களை அழைத்து பேச்­சு­வா­ரத்தை நடத்த அனு­ம­திக்­க­வில்லை. புலி­களின் பிர­தி­நி­திகள் தான் வந்­தனர். இப்­போது நிலைமை அவ்­வாறு இல்லை. ஆகவே தமிழர் தரப்­புடன் பேச்­சு­வா­ரத்தை நடத்தி தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்டும்.

அதே­போன்று இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தான எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட்டு வரு­கின்­றது. ஆனால் சம்­மந்தன் இன்று வடக்கு கிழக்கு பகு­தி­க­ளுக்கு மட்­டுமே எதிர்க்­கட்சி தலை­வ­ர­காக செயற்­பட்டு வரு­கின்றார். எதிர்க்­கட்சி தலைவர் என்ற வகையில் நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­களில் முழு நாட்­டையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் செயற்­பட வேண்டும். ஆனால் அவர் வடக்கு கிழக்­குக்கு மட்­டுமே எதிர்க்­கட்சி தலைவர் என்ற ரீதியில் செயற்­பட்டு வரு­கின்றார். அவர் முழு நாட்­டிற்கும் எதிர்க்­கட்சி தலைவர் என்­பது அவ­ருக்கு இன்னும் புரி­ய­வில்லை. அவரை எதிர்­கட்சி தலை­வ­ராக நிய­மிக்க தீர்­மா­னித்த போது சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. ஆனால் அவர் எதிர்க்­கட்சி தலை­வ­ராக வரும் நிலையில் நாட்டின் தேசிய நல்­லி­ணக்க நகர்­வு­க­ளுக்கு பல­மாக அமையும் என்ற எண்­ணத்தில் தான் நாம் ஆத­ரவு வழங்­கினோம்.

  தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு ஜன­நா­யக ரீதியில் அர­சியல் முன்­னெ­டுக்கும் கட்­சி­யாகும். ஆகவே அவர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி தமிழ்­மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும். இலங்­கையில் இன பிரச்­சினை உள்­ளது என்றும் சர்­வ­தேச விசா­ர­ணைகள் வேண்டும் என்றும் எமது தரப்­பி­னரே கருத்­துக்­களை பரப்­பு­கின்­றனர். இதை நாம் செய்யக் கூடாது. யுத்தம் முடிந்­து­விட்­டது. கடந்த காலம் முடிந்­து­விட்­டது. இப்­போது அந்த கார­ணி­களை வைத்­து­கொண்டு அர­சியல் செய்யக் கூடாது. சர்­வ­தேச விசா­ரணை நடக்­கா­விடின் எமக்கு சர்­வ­தேச முத­லீ­டுகள் கிடைக்­காது என கூறு­கின்­றனர்.

அவ்­வாறு கிடக்க வேண்டும் என்றால் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க வேண்டும் என கூறு­கின்­றனர். எமது இரா­ணு­வத்தை தண்­டித்து தான் சர்­வ­தேச உத­வி­களை நாம் பெற்­றுக்­கொள்ள வேண்­டுமா? உண்­மையில் சர­வ­தேச நாடுகள் எமக்கு உத­வவும் எம்மை புரிந்­து­கொள்­ளவும் தயாராகவே உள்ளன . எனினும் எமது தரப்பினரே புலம்பெயர் அமைப்புகளையும் ஒருசில சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் குழப்பி எமக்கு எதிராக தூண்டிவிட விரும்புகின்றனர். நாம் யாரையம் பழிவாங்கவில்லை. நல்லிணக்கத்தை உருவாக்க நாம் தயாராக உள்ளோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் நாமே தண்டனைகளை வழங்க கோரிக்கை விடுக்கின்றோம். இந்த நிலைமைகளை மாற்றி நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல அனைத்து தரப்புகளும் முன்வர வேண்டும் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.