Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்க நம் புத்திஜீவிகள் தயாரா?

Featured Replies

13078.jpg

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ வன்னி பெருநிலப்பரப்பில் போர் நடத்தி தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து நடத்திய அட்டூழியம் முதல் போருக்குப் பின்பாக தென்பகுதி மக்களை வடபுலத்திற்கு சுற்றுலா என்ற பெயரில் அனுப்பி வைத்து; வடக்கில் அவர்களை குடியமரச்செய்து; வடபுலம் எங்கும் புத்தர் சிலைகளை அமைப்பித்து; வெசாக் பண்டிகையை தமிழர் தாயகத்தில் பெருமெடு ப்பில் கொண்டாடி தென்பகுதி ஆதிக்கத்தை வடக்கு கிழக்கு முழுமையிலும் விஸ்தரித்ததன் பின்னணியில் சிங்களப் புத்திஜீவிகள் அமைப்பாக செயற்பட்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.
 
சுருங்கக்கூறின் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்பதை வேரறுப்பதற்காக மகிந்த ராஜபக்ச­விற்கு வியூகம் அமைத்து கொடுத்தவர்கள் சிங்களப் புத்திஜீவிகள். 
 
வன்னி யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது, சிங்களப் புத்திஜீவிகள் எவரும் இஃது அநியாயம் என்று கூறிலர்.மாறாக தமிழ் மக்களை அடக்கவேண்டும் தனிநாடு என்ற நினைப்பை அவர்களின் மனங்களில் இருந்து பிடுங்கவேண்டும் என திட்டம் தீட்டியவர்கள் சிங்களப் புத்திஜீவிகள் என்பதே உண்மை. எனினும் அவர்கள் மிகவும் அமைதியாக - இரகசியமாக இருந்து தம் பணியைச் செய்தனர்.
 
ஆனால், தமிழ் மக்களிடம் இத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்பதோடு அதற்கான ஓர் அவசியப் பாட்டை நம் அரசியல் தலைமையும் ஏற்படுத்தவில்லை.
 
போருக்குப்பின்பாக தமிழ் மக்களின் மீள் எழுகை பெற்று உரிமை பெறுவதற்கும் கல்வி, மருத்துவம் தொடர்பில் நம் அரசியல் தலைமைக்கு கரிசனை இருந்திருக்குமாயின், தமிழ்ப் புத்திஜீவிகளை உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒன்றிணைத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அரசியல் ரீதியில் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருப்பர்.
 
ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. மாறாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேரினவாத ஆட்சிக்கு ஆதரவான, வெளிநாடுகளில் இருக்கக் கூடிய தமிழர் சிலரே, தமிழ் அரசியல் தலைமைக்கு ஆலோசனை வழங்கத் தலைப்பட்டனர். இதன் விளைவு இன்று எவ்வாறாக உள்ளது என்பதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
 
இவை சிங்களப் புத்திஜீவிகளுக்கும் தமிழ் புத்திஜீ விகளுக்குமான ஒரு சிறு உதாரண ஒப்பிடுகை.
இவற்றை ஒருபுறமாக வைத்துக்கொள்ளலாம்.
 
இப்போது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் வெளிவர இருக்கின்றது. இந்த அரசியல் சீர்திருத்தம் வெளிவந்த பின்பு அதில் எங்களுக்கு தீர்வு இல்லை, எங்களுக்கு பிரயோசனம் இல்லை என்றெல்லாம் கூறுவது பெரி தான தாக்கத்தை ஏற்படுத்தமாட்டாது.
 
எனவே வரும் முன்னர் நாம் விழிப்படைய வேண்டும். எங்கள் விழிப்பு முதலில் எங்கள் அரசியல் தலை மையை விழிப்படையசெய்வதாக அமைவதே அவசியம். இதனுடாக அரசாங்கத்தை விழிப்படைய வைக்க வேண்டும்.
 
இதைச் செய்வதற்காகவாவது தமிழ்ப் புத்திஜீவிகள் ஒன்றாக ஓரணியில் இணைய வேண்டும். இந்த அணிதிரளல் உள் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் புத்திஜீவிகளின் இணைவாக இருப்பதும் கட்டாயம். இந்த இணைவு தமிழ்மக்களுக்கான ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்குவது என்பதாக இருக்கும். 
 
தமிழ் மக்களுக்காக - தமிழ் இனத்திற்காக - தமிழ் மண்ணிற்காக தங்களை அர்ப்பணிக்கக்கூடிய நேர்மையான திறமையான, அபார அறிவுடைய தமிழ் சகோதரர்களைக் கொண்ட அரசியல் தலைமை தலைமையாக அமையும் போது இப்போது இருக்கின்ற தமிழ் அரசியல் தலைமை தன்னிலை குறித்து விழிப்படையும்.
 
இதைச் செய்யத்தவறும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் தமிழர்கள் தமிழ் அரசியல் தலைமையால் ஏமாற்றப் படுவது நடந்து கொண்டே இருக்கும்.
 
ஆகையால், தமிழ் புத்திஜீவிகள் இனியேனும் ஒன்று சேர்ந்து அன்னைத் தமிழைக் காப்பாற்றட்டும்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=13078&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.