Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு முதலமைச்சரின் காணி நடமாடும் சேவை : அம்பலமாகும் உண்மைகள்

Featured Replies

செங்கலடி பிரதேச சபையில் இடம்பெற்ற செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காணி பிரச்சினைக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை தொடர்பான பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன.

குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடமாடும் சேவை நேற்று நடைப்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட கிழக்கு மாகாண காணி அமைச்சர், விவசாய அமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.சிப்பிலி பாறூக் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குறித்த காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு அழையா விருந்தினராக கலந்து கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அழையா விருந்தினராக வருகை தந்த கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான இந்திரகுமார் நித்தியானந்தம், இ.துரைரெட்ணம் பொது மக்களின் அழைப்பின்பேரில் குறித்த இடத்திற்கு வருகைதந்துள்ளார்கள்.

செங்கலடி பிரதேச செயலகத்திற்குப்பட்ட பகுதியானது தமிழ் மக்கள் அதிகமாகவுள்ள பகுதி என்பதுடன் நேற்றைய தினத்தில் இடம்பெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வருகைதந்திருந்தமை அனைவரினதும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மட்டக்களப்பில் காணி தொடர்பான பிரச்சினையானது தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மத்தியில் தற்பொழுது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலையில் காணி நடமாடும் சேவை எவ்வாறு அவசர அவசரமாக கூட்டப்பட்டது.

மாகாண சபைக்களுக்குரிய காணி அதிகாரங்கள் வழங்கப்படுவதில் அரசு இதுவரைக்கும் எந்தவொரு சட்டவாக்க அரசியல் கொள்கைகளையும் ஏற்படுத்தவில்லை.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இருந்தும் மத்திய அரசினால் தீர்த்து வைக்க முடியாத பல மேச்சல்தரை காணி தொடர்பான பிரச்சினைகளையும் செங்கலடி பிரதேசத்தில் நடைபெற்ற நடமாடும் சேவைக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வருகைதந்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவிக்கையில்,

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

சட்டத்தின் வரையறைக்குளிருந்து அப்பால் சென்று தான் காணிப் பிரச்சினையை தீர்க்க முடியும், சட்டத்தை வைத்துக் கொண்டு காணிப் பிரச்சினையை தீர்க்க முடியாது என தெரிவித்தார்.

இன்றைய நிலையில் ஒரு சில அரசியல் அதிகாரத்தைக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் காணிகளைப் பிடிப்பதாக தமிழ் மக்கள் தெரிவித்தாலும், அதற்கு எதிராக முஸ்லிம்கள் தங்களை முன்னைய காலங்களில் இருந்த தீய சக்திகள் தங்களின் காணிகளை பிடித்தார்கள் என தெரிவிக்கின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தமிழ் மக்களின் காணிகளை கபலிகரம் செய்ய எவரும் முற்படக்கூடாது என பேச்சளவில் மாத்திரம் வைத்துள்ள நிலையில் முஸ்லிம்கள் தமிழ் மக்களின் எல்லைக் கிராமங்களிலுள்ள காணிகளை கபலிகரம் செய்கின்றார்கள்.

இரு இன மக்களும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சரின் தனிப்பட்ட ஆசையில் ஒன்றாக நேற்றைய தின உரையில் குறிப்பிட்டார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

1974 ஆம் ஆண்டுக்கு முன் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் செங்கலடி பிரதேச செயலாளர் பகுதிகளில் எவ்வாறு இருந்தார்களோ அந்த நிலையை உருவாக வேண்டும்.

கொண்டுவருவேன், அதனை உருவாக்குவோம் என தெரிவித்த நிலையில் காணிக்கு இரு சமூகமும் சண்டைபோட்டுக் கொண்டிருக்கம் நிலையில் அரசியல் அதகாரத்தைப் பயன்படுத்தி காணிகளை கபலிகரம் செய்ய முற்படும் நிலையில் எவ்வாறு முதலமைச்சரின் கூற்று சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம் தனக்கு முக்கிய நிகழ்வு ஒன்று இருந்ததாகவும் அதனை விடுத்த நிலையில் குறித்த காணி தொடர்பான நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இங்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சருக்கும் குறித்த காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததா? அல்லது அழையா விருந்தினராக அமைச்சரும் உள்நுளைந்தாரா? என்ற சந்தேகம் பலரின் மத்தியில் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி தொடர்பான பல பிரச்சினைகள் அரச அதிகாரிகளை ஆட்டம் காண வைக்கும் நிலையில், கிழக்கு மாகாண சபையினால் மாத்திரம் அவசர அவசரமாக எவ்வாறு குறித்த காணி தொடர்பான நடமாடும் சேவையை செங்கலடியில் யாரின் தேவையை பூர்த்தி செய்ய நடத்தினார்கள் என்ற சந்தேகம் நடமாடும் சேவைக்கு வருகை தந்த பொதுமக்களின் வாக்குமூலத்தில் இருந்து உண்மைகள் அம்பலமாகியுள்ளது.

செங்கலடி பிரதேச சபை கட்டிடம் என்பது நேற்றைய நடமாடும் சேவைக்கு மிகவும் பொருத்தமில்லாமலும், இடவசதி அற்ற நிலையிலும் ஏன் இவ்வாறன ஒழுங்குபடுத்தலை கிழக்கு முதலமைச்சர் உட்பட காணி அமைச்சர் ஆகியோர் மேற்கொண்டார்கள்? பொது மக்களுக்கு பேய்க்காட்டவா! என நடமாடும் சேவையைக்கு வருகைதந்த பொதுமக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதேவேளை குறித்த நடமாடும் சேவையினால் செங்கலடி பிரதேச சபை முற்றுமுழுதாக ஸ்தம்பிதம் அடைந்திருந்த நிலையில் பிரதேசசபை சேவையைப் பெற்றுக்கொள்ள வருகைதந்த பொதுமக்கள் வெறுமனமே ஏமாற்றத்துடன் சென்றதை அவதானிக்க முடிந்தது.

நேற்று காலை சுமார் 9.00 மணியளவில் ஆரம்பமாக இருந்த நடமாடும் சேவை நிகழ்வுக்கு பொது மக்கள் முன்கூட்டியே முண்டியடித்துக் கொண்டு நிறையில் காத்துக்கிடந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

வருகைதந்த பொது மக்களின் நலன் கருதி வெளியில் ஒரு சிறியளவிலான கூடாரம் மாத்திரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் சேவையைப் பெறுவதற்காக வருகைதந்த பொது மக்கள் வீதியோரங்களில் அமர்ந்திருந்ததை அவதானிக் கூடியதாகயிருந்தது.

அதிதிகள் அழைக்கப்பட்டனர், பிரதேசபை கேட்போர் கூட கட்டிடத்தில் 100 பேருக்கு மத்தியில் உரையாற்றினார்கள், பின்னர் கலைந்து சென்றனர், 1900க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கேட்போர் கூட ஆரம்ப நிகழ்வில் என்ன நடத்தேறியது என்பதுகூட புரியாத நிலையில் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் காத்துக்கிடந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

நடைபெற்ற காணி நடமாடும் சேவையானது நேற்றைய தினம் பிற்பகல் 4.30 மணிக்கு முடிவடைந்தாலும் கார்த்திருந்து வருகை தந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் சென்றனர்.

சுமார் 2000க்கு மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன், காணி பெறுவதற்குரிய விண்ணப்பப்படிவம் பெறப்பட்டதுடன், ஒப்பக் காணி தொடர்பான படிவங்கள் பார்வையிடப்பட்டதுடன், பதிவுகளும் இடம்பெற்றது.

குறித்த காணி நடமாடும்சேவையில் இடம்பெற்றதாக தெரிவித்தனர்.

அத்துடன் காணி தொடர்பான நடமாடும் சேவைக்கு முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், வலது குறைந்தவர்கள், கை குழந்தைகளுடன் வருகைதந்தவர்களுக்குரிய எவ்வித ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் கூட இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/132078?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.