Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது

Featured Replies

நிறை­வேற்ற முடி­யாத நிபந்­த­னை­களை அர­சாங்கம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளாது

02-fcb415785072d5c0f47763f114c908849721604f.jpg

 

ஜி.எஸ்.பி. பிளஸ் நிபந்­த­னை­களில் சாத்­தி­ய­மற்ற விட­யங்கள் உள்­ளன என்­கி­றது அர­சாங்கம்
(க.கம­ல­நாதன்)

ஜி.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்­றுக்­கொள்ள எமக்கு விதிக்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னை­களில் எம்மால் முடி­யாத விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த மாட்டோம் என ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கு அறி­விப்போம் என்று நிதி இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார்.

ஆகவே, எமது நாட்டின் மீது விதிக்­கப்­படும் நிபந்­த­னை­களில் எவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­துவோம் என்­பதை அர­சாங்­கமே தீர்­மா­னிக்கும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நிதி இரா­ஜாங்க அமைச்­சரின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு

உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை இலங்­கைக்கு பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. ஆனால் ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லுகை ஏன் கிடைத்­தது என்று சிந்­திக்க வேண்டும். சிலர் இதனை குறைத்து மதிப்­பிட முற்­ப­டு­கின்­றனர்.

அது அர­சியல் கருத்­தாக இருக்க முடியும் அதனால் இந்த அர­சாங்­கத்­தினால் பெற்­றுக்­கொள்ள முடிந்த ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை நாமும் பெற்­றுக்­கொண்­டி­ருக்க முடியும். இந்த அர­சாங்கம் பெற்­றுக்­கொள்ளும் நிபந்­த­னை­க­ளுக்கு இணங்கி பெற்­றுக்­கொள்ள நாம் தயா­ரில்லை என்றும் விமர்­சிக்­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் இந்த வரிச்­ச­லுகை கிடைத்த பின்னர் 1.5 பில்­லியன் வரு­மான அதி­க­ரிப்பு ஏற்­படும். இதற்­கான சிறந்த உதா­ர­ண­மான நாடு பங்­க­ளாதேஷ் ஆகும். அதன் சடு­தி­யான பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கும் காரணம் வரிச் சலு­கை­யினை அந்­நாடு பெற்­றுக்­கொண்­ட­மையே ஆகும்.

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லுகை கிடைத்­ததன் பின்னர் பங்­க­ளா­தேஷின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி 5 மடங்­களில் அதி­க­ரித்­தது. இன்று ஆசிய நாடுகள் பல இந்த சலு­கை­யினை பெற்­றுக்­கொண்­டுள்­ளன. எமது நாட்­டிற்கு சுனாமி தாக்கம் ஏற்­பட்ட பின்னர் கிடைத்த இந்த வரிச்­ச­லுகை 2010 ஆம் ஆண்டில் ரத்துச் செய்­யப்­பட்­டது.

மனித உரிமை மீறல்கள் தொடர்­பிலும் அதனை கட்­டுப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் குறித்தும் அவ­தானம் செலுத்­தாமல் இருந்­த­மையே இந்த வரிச்­ச­லு­கையை எமது நாடு இழக்க பிர­தான கார­ண­மாக அமைந்­தது. ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலு­கையை பெற்ற பின்னர் 564 மில்­லியன் யூரோக்­க­ளாக இருந்த பங்­க­ளா­தேஷின் வரு­மானம் 15,145 பில்­லி­யன்கள் வரையில் மூன்று மடங்கு பெரு­கி­யது.

7 வரு­டங்­க­ளுக்குள் இந்த பொரு­ளா­தார அபி­வி­ருத்தி இலக்­கினை அவர்­களால் அடைந்­துக்­கொள்ள முடிந்­தது. அதனால் எமக்கும் 100 வீத­மான பொரு­ளா­தார அபி­வி­ருத்தி தேவை­யாக இருக்­கின்ற போது இந்த ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லுகை மிக அவ­சி­ய­மா­னது. சிலர் இதனை வேறு வித­மாக அர்த்­தப்­ப­டுத்த முயற்­சித்­தாலும் எமக்கு நாட்டின் தற்­போ­தைய நிலை­மை­யினை பொறுத்­த­வ­ரையில் இந்த சலுகை மிக அவ­சி­ய­மாகும்.

தற்­போது பொரு­ளா­தார இலக்­கு­களை அடை­வ­தற்கு எமக்கு ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லுகை மிக முக்­கி­ய­மா­னது. இந்த வரிச்­ச­லுகை எமது நாட்­டிற்கு கிடைத்தால் சிறந்த எதி்­ர­கா­லத்­தினை இலக்­கு­வைத்து நகர முடியும். தற்­போது ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலு­கை­யினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. இதனை சிலர் வேறு வித­மாக அர்த்­தப்­ப­டுத்­து­கின்­றனர்.

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நிபந்­த­னை­களை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக கூறு­கின்­றனர். அவ்­வா­றான நிபந்­த­னைகள் தொடர்பில் நாம் தற்­போது ஆலோ­சித்து மாத்­தி­ரமே வரு­கின்றோம். மாறாக ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக எமக்கு வழங்­கப்­பட்­டுள்ள செயற்­பாட்டு திட்­டத்­தினை மாத்­தி­ரமே நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்றோம்.

இந்த செயற்­பாட்டு திட்­டத்­திலும் திருத்தம் செய்து வரு­கின்றோம். இதில் ஒன்­றி­லி­ருந்து 6 வரையில் இலக்­க­மி­டப்­பட்ட விட­யங்கள் முற்­றாக நீக்­கப்­பட்­டுள்­ளன. அதனை தற்­போது அமைச்சர் பைசர் முஸ்­தபா தொடர்­பி­லான குழு ஆராய்ந்து வரு­கின்­றது. ஜனா­தி­ப­தியின் பனிப்­பு­ரையின் பேரில் இந்த செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்­றுக்­கொள்ளும் போது எமக்­கான நிபந்­த­னைகள் விதிக்­கப்­டு­வது தவ­றா­ன­தல்ல இருப்­பினும் அவ­சர சட்­டங்­க­ளுக்க தடை­யா­கவும் ஜனா­தி­பதி தீர்­மா­னங்­களை எடுக்க தடை­யா­கவும் அமையும் விட­யங்­களை நாம் ஏற்­றுக்­கொள்ள போவ­தில்லை. அதனால் ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்­றுக்­கொள்ளும் போது மனித உரி­மைகள் பாது­காப்­பிற்­காக நாம் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­திலும் பார்க்க பல செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆனாலும் எவ்­வா­றான விட­யங்­களை நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று அர­சாங்­கமே தீர்­மா­னிக்கும் என்ற நிலைப்­பாட்டில் மாற்றம் இல்லை. தற்­போது நாட்டில் இரு தரப்­புக்கள் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளன அத­னுள்ளே சிக்­கல்கள் இருக்க முடியும்.

இருப்­பினும் கூட்டு அர­சாங்­கத்­திற்குள் வாத பிர­தி­வா­தங்கள் இருந்­தாலும் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலு­கையை பெற்­றுக்­கொள்ள வழங்­கப்­பட்­டுள்ள நிபந்­த­னை­களில் சில ஐரோப்­பி­னாலும் நடை­மு­றை­ப­டுத்த முடி­யாத விட­யங்­க­ளாகும். அதனால் நாட்­டிற்கு பொருத்­த­மான விட­யங்கள் குறித்து மாத்­திரம் அவ­தானம் எடுத்து செயற்­ப­டுவோம்.

அதே­நேரம் தற்­போது நாட்டில் உள்ள சில ஆடை ஏற்­று­மதி நிறு­வ­னங்கள் நஷ்­டத்தில் இயங்­கு­கின்­றன. அவற்­றினை லாப­மீட்டும் நிறு­வ­னங்­க­ளாக மாற்­றவும் ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லுகை உதவும். அதனால் இது ஒரு வெற்றி என்று நாம் கருத வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இலங்­கையின் ஏற்­று­ம­தியும் அதி­க­ரிக்கும்.

 நாட்டில் எந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டாலும் அது முதலில் பாரா­ளு­மன்­றத்­திற்கு வர வேண்டும். அதனால் பாரா­ளு­மன்றம் வரு­கின்ற போது மக்­க­ளுக்கு பாதிப்­பா­ன­தாக அமை­யு­மாயின் அந்த திட்­டங்­களை நாம் புறக்­க­ணிப்போம். எனவே ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்­றுக்­கொள்ள மனித உரி­மைகள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­கி­ளி­லி­ருந்து விடு­பட முய்­சிக்­கின்றோம். நிலை­யான அபி­வி­ருத்தி திட்­டங்­களை வகுத்­துள்ளோம். இவற்றை நாட்­டிற்கு பொருந்தாத விடயங்கள் என்று கூற முடியுமா? இவ்வாறான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவோம்.

எம்மால் செய்ய முடியாத நிபந்தனைகளை முடியாது என்று நாம் அவர்களுக்கு அறிவிப்போம். குறிப்பாக சமபாலின உறவு குறித்த விடயங்கள் செயற்பாட்டு திட்டமிடலில் குறிப்பிட்டபட்டுள்ளன. எமது நாட்டு கலாசாரத்தினை தாண்டிச் செல்ல முடியாது என்பதால் அந்த விடயத்தினை முழுமையாக செயற்பாட்டு திட்டமிடலிலிருந்து நீக்கியுள்ளோம்.

எம்மால் 100 வருடங்களின் பின்னால் அவ்வாறான தீர்மானங்கள் அவசியப்படும் என்று அனுமானித்தால் அதனை அந்த சமயத்தில் அரசியல் செய்பவர்கள் தீர்மானிப்பர். அவற்றை நாம் செய்ய முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.