Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் பிரச்சாரத்திற்கு உதவும் ரி.வி.ஐ( T V i )

Featured Replies

சிங்கள இராணுவத்திற்காக பிரச்சாரம் செய்யும் வேலையில் கனடாவில் ஒளிபரப்பாகும் ரி.வி.ஐ தொலைக்காட்சி இறங்கி விட்டது போலும்.

வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பாகிய அதன் செய்தியில் மகிந்தவிற்கு மாலை அணிவித்த கோவில் பூசகரின் படுகொலைக்கு இலங்கை இராணுவம் கண்டனம் முதற்செய்தியாக சொல்லப்பட்டது.

அத்துடன் அக்கொலைக்கு புலிகளே பொறுப்பொன சிங்கள காவல்துறையினர் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கள இராணுவம் குறித்த பூசகரின் விருப்பிற்கு மாறாக கட்டாயப்படுத்தி வாகரைக்குக் கொண்டு சென்று மகிந்தவிற்கு ஆசிர்வாதம் வழங்க வைத்து விட்டு பின்னர் தனது புலிகளிற்கெதிரான பிரச்சாரத்திற்காக அந்த பூசகரையே போட்டு தள்ளியுள்ளது. ஆனால் இச்சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையுடன் இயங்கும் ஆயுததாரிகளே காரணமென தமிழ்நெட்டும், படையினருக்கு இதில் தொடர்பிருக்கலாமென சங்கதியும் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் தமிழ் தேசிய ஊடகமாக காட்டிக்கொண்டு கனடாவில் இயங்கி வரும் ரி.வி.ஐ தொலைக்காட்சி சிங்களம் மேற்கொண்ட படுகொலையின் உண்மைநிலையை வெளிக்காட்டுவதை விடுத்து, அதன் பரப்புரைக்கு துணை போயுள்ளது.

வழமையாக தமிழ்நெட், புதினம், சங்கதி ஆகியவற்றின் செய்திகளை எடுத்து தமது செய்தியில் இணைப்பவர்களிற்கு இந்த படுகொலை பற்றி தமிழ்நெட், சங்கதி வெளியிட்ட செய்திகள் ஏன் கண்ணில் படவில்லை?

இந்த செய்தியறிக்கையின் ஆசிரியரும் வாசிப்பாளருமான மதியழகன் தான் முன்னர்போன்று ரூபவாஹினியில் செய்தி வாசிக்கப்போவதாக நினைத்து இராணுவத்தின் கண்டனச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு விட்டாரா?

கடந்த இரு நாட்களாக முல்லைத்தீவில் மீனவர்கள் வாழ்விடங்கள் மீது வான்படை நடத்திவரும் குண்டு வீச்சு, தென்பகுதியில் பல தமிழர்கள் கைது, யாழில், வவுனியாவில் கடத்தல்கள் மக்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல்களென பல செய்திகள் இருக்கும்போது அவற்றையெல்லாம் நிராகரித்து விட்டு, தானே படுகொலை செய்து விட்டு புலிகள் மீது பழிசுமத்தி இராணுவம் வெளியிட்ட கண்டனத்தை பிரதான செய்தியாக்கி ரி.வி.ஐ ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன?

விடுதலைப் போரிற்கான ஊடகப் பங்களிப்பை செய்ய வேண்டிய புலத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் அதற்கெதிரான போக்கிலேயே செல்கின்றன. ஒரு புறத்தே தமது பெருத்த அரசியல் இராணுவ அறிவுஞானத்தைப் பயன்படுத்தி இந்த ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய நிலையை உருவாக்கியதுடன், மறுபுறத்தே எதிரியின் பரப்புரைக்கு உதவி செய்து மக்களைச் சினம் கொள்ள வைக்கின்றன.

Edited by மின்னல்

எடுத்த எடுப்பில் இவ்வாறு கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி மீது பழி போடுவது அபாண்டமானது. மற்றும் தனிப்பட்ட நபர்களின் பழைய சரித்திரத்தை ஆராய்ந்து அதற்கு கண், மூக்கு, வாய் வைத்து தற்போதுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிட்டு திரிவுபடுத்திக் கருத்துக் கூறுவது அநாகரிகமானது.

எனக்கு தமிழ் விசன் தொலைக்காட்சியைப் பற்றி விபரமாக ஒன்றும் தெரியாது. ஆனால் இத்தொலைக்காட்சி கனேடியத் தமிழர்களிற்கு மிகச் சிறந்த சேவையை ஆற்றி வருவதாக அறிந்துள்ளேன். உங்கள் செய்தியை வைத்துப் பார்த்தால், நீங்கள் விரும்பும் பார்வையில் நோக்கினால் தமிழ் ஊடகங்களே உலகில் இயங்க முடியாது. தன்னிச்சையாக இயங்குவதற்கு ஊடகங்கள் ஒன்றும் காற்றில் சுதந்திரமாகப் பறக்கும் பலூன்கள் அல்ல. அவற்றிற்கு பல தார்மீகக் கடமைகள் உள்ளது. அரசாங்கக் கட்டுப்பாடுகள் உள்ளது. இதைவிட சிங்களக் குண்டர்கள், ஒட்டுண்ணிகள் கொடுக்கக்கூடிய உபத்திரவங்களும் உள்ளது. இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் அவர்கள் உங்களிற்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும்.

சிங்கள் அரசு சொல்வதைச் செய்தியில் கூறினால் அவர்களை தமிழின விரோதிகள் என்று கூறுவீர்கள். புலிகள் சொல்வதைக் கூறினால் அவர்கள் புலிகளிற்கு வால் பிடிப்பதாய் கூறுவீர்கள். நீங்கள் ஊடகங்களை விமர்சிக்கவென்று தீர்மானத்துடன் வெளிக்கிட்டால் உங்களைத் தடுக்க ஒருவராலும் முடியாது. நீங்களாக ஒதுங்கிக் கொண்டால் சரி. ஆனால் உங்களிற்காக ஊடகங்கள் வளைந்து கொடுக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

இப்படி அபாண்டமாகப் பழி சுமத்துவதை விடுத்து ஊடகங்களை தொலைபேசியில் அல்லது நேரடியாகச் சந்தித்து உங்கள் விமர்சனக்களை, கருத்துக்களை தெரிவிக்கலாமே? அவ்வாறு செய்தால் அவர்களும் தங்களை திருத்தி எதிர்காலத்தில் இன்னும் சிறந்த சேவைகளை தமிழ் மக்களிற்கு வழங்குவதற்கு உதவியாக இருக்கும்!

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புதினத்தில் கூடத்தான் முதன் முதலில் இனம் தெரியாத நபர்களினால் என்று செய்தி வந்தது, பின்புதான் சிங்கள படை புலனாய்வினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று செய்திவந்தது. நான் நினைக்கிறேன் செய்தியை ரிவிஐ நிறுவனம் சுட சுட கொடுக்கனும் எண்டதற்காக இணணயத்தளத்திற்கு சென்று தேனி.org என்பதற்கு பதிலா தேனி.கொம் எண்டு அடிச்சுட்டாங்களோ என்னமோ? தேனி.கொம் தானே செய்திகளை கண் மண் தெரியாமல் ஒட்டுறவங்களாயிச்சே (தங்கள் ரசிகர்கள் சிரித்து சிரித்து நீடுழி வாழ வேண்டும் என்ற ஆசையில்). :icon_idea:

மு.கு: ஆ.. அப்புறம் குறூக்ஸ்/நெடுக்ஸ் நாங்களே இந்த செய்தியை அட்ஜஸ் பன்னீட்டம். தேவையில்லாமல் A4 பக்கத்தை வீணடிக்காமல் வேற ரொபிக்கை கவனிப்பம் வாங்க.. :icon_idea: இல்லை மின்னலை பழிவாங்கனும் எண்டு நினைச்சிங்க எண்டால்..... உங்க இஸ்ரம்.:D

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் இப்படியும் செய்தி விடுகுதுங்கோ.. நாங்கள் மட்டும் மூடி மூடி மறைக்க நிக்கிறம்...

Hindu priest killed in Sri Lanka

_42549283_garland2afp203.jpg

A Hindu priest who blessed Sri Lankan President Mahinda Rajapakse at the weekend has been shot dead.

Selliah Parameswar was killed near his house in eastern Batticaloa district on Wednesday evening while his wife and children were having dinner inside.

The authorities have blamed Tamil Tiger rebels, who deny killing him.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6342511.stm

............................அவர்களும் தங்களை திருத்தி எதிர்காலத்தில் இன்னும் சிறந்த சேவைகளை தமிழ் மக்களிற்கு வழங்குவதற்கு உதவியாக இருக்கும்!

20 வருசமாய் போச்சு........ மாப்புக்கு இன்னும் மப்பு கலையேல்லை........ :D:icon_idea::D:lol::blink::blink::lol:

  • தொடங்கியவர்

அந்த கோவிலின் பூசகர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் கூட பிரதான செய்தியாகச் சொல்லாமல் இராணுவம் வெளியிட்ட கண்டனத்தை மட்டும் ஏன் அவர்கள் பெரிது படுத்த வேண்டும்???

இதுவே எனது கேள்வி

அந்த கோவிலின் பூசகர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் கூட பிரதான செய்தியாகச் சொல்லாமல் இராணுவம் வெளியிட்ட கண்டனத்தை மட்டும் ஏன் அவர்கள் பெரிது படுத்த வேண்டும்???

இதுவே எனது கேள்வி

ஏதேனும் இராசதந்திர நகர்வாய் இருக்கும்......... :icon_idea::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதேனும் இராசதந்திர நகர்வாய் இருக்கும்......... :icon_idea::lol::lol:

நிச்சயமாக இது இராசதந்திர நகர்வு தான்.அது சரி இராசதந்திர நகர்வு என்றால் என்ன?

:D:D

நிச்சயமாக இது இராசதந்திர நகர்வு தான்.அது சரி இராசதந்திர நகர்வு என்றால் என்ன?

:D:D

உந்த கேள்விக்கு கடுவன் தான் வரவேணும்.......... :icon_idea::lol::lol:

ஓம்........பதிலோடை.............. :blink::blink::D:D

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கேள்விக்கு கடுவன் தான் வரவேணும்.......... :icon_idea::lol::lol:

ஓம்........பதிலோடை.............. :D:D:blink::blink:

அது சரி எங்கே நீர் கடுவன கண்டனீர்,அவர் இமயமலைக்கு போயிட்டார் என்று ஒரு இணைய தளத்தில் பார்த்தனான் எதற்கும் அவர் வந்த பிறகு கேட்டு பார்ப்போம்

:D:D:D

அது சரி எங்கே நீர் கடுவன கண்டனீர்,அவர் இமயமலைக்கு போயிட்டார் என்று ஒரு இணைய தளத்தில் பார்த்தனான் எதற்கும் அவர் வந்த பிறகு கேட்டு பார்ப்போம்

:icon_idea::lol::lol:

கடுவன் .......... மலைக்கு எங்கை போறது. உங்கை மூலைக்குள்ளை முணுகிக்கொண்டு கிடக்குது.

:D:D:blink::blink::D

  • கருத்துக்கள உறவுகள்

கடுவன் .......... மலைக்கு எங்கை போறது. உங்கை மூலைக்குள்ளை முணுகிக்கொண்டு கிடக்குது.

:icon_idea::lol::lol::D:D

நானும் இமயமலைக்கு போயிட்டு என்ற துணிவில அறம்புறமா எழுதிட்டன் இப்ப வந்து என்ன செய்ய போகுதோ தெறியாது,இது தனி நபர் தாக்குதல் இல்லை இது தனி மிருக தாக்குதல்

:blink::blink::D

இந்தத் தெருநாய் கடுவனிடம் வெறொரு இடத்தில் கடிவாங்கிவிட்டு இங்கு வந்து குலைக்கிறது.

கடுவன் வரும்வரை காத்திருக்குமா ?

இதுவும் தனிநபர் பற்றியதல்ல, நான் பார்த்த நாய்ச்சண்டை. :icon_idea:

  • தொடங்கியவர்

எடுத்த எடுப்பில் இவ்வாறு கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி மீது பழி போடுவது அபாண்டமானது. மற்றும் தனிப்பட்ட நபர்களின் பழைய சரித்திரத்தை ஆராய்ந்து அதற்கு கண், மூக்கு, வாய் வைத்து தற்போதுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிட்டு திரிவுபடுத்திக் கருத்துக் கூறுவது அநாகரிகமானது.

ஊடகங்கள் எமது விடுதலைக்கான தமது தார்மீகக் கடமையை ஆற்றவேண்டும்.பூசகரின் கொலையை வைத்து புலிகளிற்கெதிரான பிரச்சாரத்தை சிறிலங்கா அரசு முடக்கி விட்டுள்ளது. அதற்கு ஒத்துதுவது போல ரி.வி.ஐ செய்தி அமைந்திருந்தது. இது ஆபாண்டமான பழியல்ல அவர்கள் விட்ட தவறு. அந்த செய்திக்கு அதன் செய்தியாசிரியர் கொடுத்த முக்கியத்துவமே அவரின் கடந்த கால சரித்திரத்தை நினைவூட்ட வைத்து விட்டது.

எனக்கு தமிழ் விசன் தொலைக்காட்சியைப் பற்றி விபரமாக ஒன்றும் தெரியாது. ஆனால் இத்தொலைக்காட்சி கனேடியத் தமிழர்களிற்கு மிகச் சிறந்த சேவையை ஆற்றி வருவதாக அறிந்துள்ளேன்.

சரி மாப்பிளை ரி.வி.ஐ கனேடியத் தமிழர்களிற்கு ஆற்றிவரும் நீங்கள் அறிந்த அந்த மிகச்சிறந்த சேவைகள் எவையென கொஞ்சம் சொல்லுங்கள். (எனக்குத் தெரிந்தது ஒன்றுதான். பாலா அண்ணையின் இறுதி நிகழ்வை நேரஞ்சல் செய்தமை)

எடுத்த எடுப்பில் இவ்வாறு கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி மீது பழி போடுவது அபாண்டமானது. மற்றும் தனிப்பட்ட உங்கள் செய்தியை வைத்துப் பார்த்தால், நீங்கள் விரும்பும் பார்வையில் நோக்கினால் தமிழ் ஊடகங்களே உலகில் இயங்க முடியாது. தன்னிச்சையாக இயங்குவதற்கு ஊடகங்கள் ஒன்றும் காற்றில் சுதந்திரமாகப் பறக்கும் பலூன்கள்

நாம் ஊடகங்களிடமிருந்து எதிர்பார்ப்பது(தமிழ் ஊடகங்கள் செய்யவேண்டியது) எமது விடுதலைப் போராட்டத்திற்கெதிரான கருத்துக்களை. எதிரியின் பரப்புரைகளை முறியடிக்க வேண்டுமென்பதே. ஆனால் அவை அதற்கு எதிராக எதிரியின் பரப்புரைக்கு வலுச்சேர்ப்பதை எப்படி நீங்கள் நியாப்படுத்துகிறீர்கள்?

அரசாங்கக் கட்டுப்பாடுகள் உள்ளது.

யாழில் உதயன் பத்திரிகைக்கு இராணுவத்தின் செய்திகளிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென யாழ். படைத்தலைமை மிரட்டல் விடுத்தது போன்று கனேடிய அரசு ரி.வி.ஐ தொலைக்காட்சிக்கு சொல்லியுள்ளதா அல்லது போராட்டத்திற்கு விரோதமான செய்திகளை வெளியிடவேண்மேன வலியுறுத்தியுள்ளதா?

அவற்றிற்கு பல தார்மீகக் கடமைகள் உள்ளது. அரசாங்கக் கட்டுப்பாடுகள் உள்ளது. இதைவிட சிங்களக் குண்டர்கள், ஒட்டுண்ணிகள் கொடுக்கக்கூடிய உபத்திரவங்களும் உள்ளது. இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் அவர்கள் உங்களிற்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடியும்.

சிங்களக் குண்டர்கள் மற்றும் தேசவிரோதிகளின் உபத்திரங்களிற்குப் பயந்து போராட்டத்திற்கெதிரான செய்திகளை தமிழ் ஊடங்கள் வெளியிட்டால் மேற்கண்டவர்களின் மிரட்டலால்தான் இப்படி வெளியிடுகின்றன என ஏற்றுக்கொள்வீர்களா?

விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதை தவிர்ந்து நீங்கள் கூறும் ஊடகங்களின் தார்மீகக் கடமை எது?

சிங்கள் அரசு சொல்வதைச் செய்தியில் கூறினால் அவர்களை தமிழின விரோதிகள் என்று கூறுவீர்கள். புலிகள் சொல்வதைக் கூறினால் அவர்கள் புலிகளிற்கு வால் பிடிப்பதாய் கூறுவீர்கள். நீங்கள் ஊடகங்களை விமர்சிக்கவென்று தீர்மானத்துடன் வெளிக்கிட்டால் உங்களைத் தடுக்க ஒருவராலும் முடியாது. நீங்களாக ஒதுங்கிக் கொண்டால் சரி. ஆனால் உங்களிற்காக ஊடகங்கள் வளைந்து கொடுக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அதற்கெதிராக செயற்படாதீர்கள். அவ்வாறு ஊடங்கள் முறை தவறுவைத்தான் சொல்கிறோம். இது ஊடங்கள் மீதான அபாண்ட (அல்லது) தேவையில்லாத விமர்சனமல்ல. எனது பார்வைக்கு ஊடகங்களை வளைந்து கொடுக்கச் சொல்லவில்லை போராட்டத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடாதீர்கள் என்பதே.

தமிழ்நெட் இணையம் சிங்கள அரசின் பரப்புரைகளை முறியடிக்கும் விதமான தனது செய்திகளை வெளியிடுகிறது.. (குறித்த இந்த படுகொலை தொடர்பான செய்தியில் பூசகர் வலுக்கட்டாயமாக வாகரைக்கு கொண்டு செல்லப்பட்டு மகிந்தவிற்கு ஆசிர்வாதம் வழங்கியது, இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்திருப்பவர்களே இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டியருப்பதாக சுட்டிக்காட்டியது. - ரி.வி.ஐ அரச தரப்புச் சொன்ன செய்தியை மட்டுமல்லவான சொன்னது.)

இப்படி அபாண்டமாகப் பழி சுமத்துவதை விடுத்து ஊடகங்களை தொலைபேசியில் அல்லது நேரடியாகச் சந்தித்து உங்கள் விமர்சனக்களை, கருத்துக்களை தெரிவிக்கலாமே? அவ்வாறு செய்தால் அவர்களும் தங்களை திருத்தி எதிர்காலத்தில் இன்னும் சிறந்த சேவைகளை தமிழ் மக்களிற்கு வழங்குவதற்கு உதவியாக இருக்கும்!

(இராணுவத்தின் பரப்புரைக்கு ரி.வி.ஐ கொடுத்த முக்கியம் அபாண்டப்பழியா?) செஞ்சோலைப் படுகொலை உள்ளிட்ட சில துயர் சம்பவங்கள் தாயகத்தில் நடைபெற்ற போது இவர்களும், இவர்களது சகோதர வானொலியும் தமது வழமையன கேளிக்கை நிகழ்வுகளிற்கே முக்கியத்துவம் கொடுத்தன. அப்போது தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு ஏன் இப்படிச் செய்கிறீர்களெனக் கேட்டபோது சொல்லியதுதான் தாமதம் தொலைபேசி அடித்து வைக்கப்பட்டது.

தொலைபேசியூடாகத் தெரிவிப்பதை வழமைபோன்று கவனிக்காது விடுவார்களோ என எண்ணி இங்கே இந்த விடயத்தை இணைத்துள்ளேன். அத்துடன் அவர்கள் இதனைப் பார்க்க வேண்டுமென்பதற்கான இதற்கான இணைப்பை அவர்களின் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

  • தொடங்கியவர்

ஏன் புதினத்தில் கூடத்தான் முதன் முதலில் இனம் தெரியாத நபர்களினால் என்று செய்தி வந்தது, பின்புதான் சிங்கள படை புலனாய்வினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று செய்திவந்தது.

அப்படிச் சொன்னாலும் பரவாயில்லையே. ரி.வி.ஐயின் செய்தி இரு தலைப்புச் செய்திகள் வாசிக்கப்பட்ட பின்னரே வரும் அவ்வாறு வந்த இரண்டில் முதலாவதாக வந்தது இதுதான். 'மகிந்த ராஜபக்சவிற்கு மாலை அணிவித்த கோயில் பூசகரின் படுகொலைக்கு இராணுவம் கண்டனம்". அதனைக் கேட்டபோது வந்த கோபமே இங்கே எழுதத்தூண்டியது.

மு.கு: ஆ.. அப்புறம் குறூக்ஸ்/நெடுக்ஸ் நாங்களே இந்த செய்தியை அட்ஜஸ் பன்னீட்டம். தேவையில்லாமல் A4 பக்கத்தை வீணடிக்காமல் வேற ரொபிக்கை கவனிப்பம் வாங்க.. :icon_idea: இல்லை மின்னலை பழிவாங்கனும் எண்டு நினைச்சிங்க எண்டால்..... உங்க இஸ்ரம்.:lol:

எனது கருத்துக்கு மாப்பிளை பதில் எழுதினார் அதற்கு இப்போது நானும் பதில் கொடுத்து விட்டேன். இதிலை மின்னலைப் பழி வாங்க என்ன இருக்கு.

நிதர்சனம் இணையத்தளம் இன்றிலிருந்து இயங்குவது போல் தெரிகிறதே, யாராவது கவனித்தீர்களா?

நிதர்சனம் இணையத்தளம் இன்றிலிருந்து இயங்குவது போல் தெரிகிறதே, யாராவது கவனித்தீர்களா?

அப்ப உமக்கு டபிள் சிவ்ற்... :icon_idea: : இரண்டிடத்தில அடிக்கிறீர் .......... :lol: கலக்கு மாப்பு........ :lol: கலக்கு

அப்ப உமக்கு டபிள் சிவ்ற்... :lol: : இரண்டிடத்தில அடிக்கிறீர் .......... :lol: கலக்கு மாப்பு........ :D கலக்கு

அடேங்கப்பா யாழ் களத்தில சும்மா அப்பாவித்தனமா எதையாவது கேட்டுவிட்டாலும் கூட நமது கோவணத்தை உருவி எடுத்துப் புடுவாங்கள் போல இருக்கு. ஐயா ஸ்ரீட் டோக் எனக்கு டபில் ரேஸ் ஓடி பழக்கமில்லை! :icon_idea:

அடேங்கப்பா யாழ் களத்தில சும்மா அப்பாவித்தனமா எதையாவது கேட்டுவிட்டாலும் கூட நமது கோவணத்தை உருவி எடுத்துப் புடுவாங்கள் போல இருக்கு. ஐயா ஸ்ரீட் டோக் எனக்கு டபில் ரேஸ் ஓடி பழக்கமில்லை! :D

புது பேரு........ புது சைட்..........புது நீயூஸ்

கலக்கிறா.... சந்துரு :icon_idea::lol::lol:

புது பேரு........ புது சைட்..........புது நீயூஸ்

கலக்கிறா.... சந்துரு :icon_idea::lol::lol:

யாரையா அந்த சந்துரு? :D

யாரையா அந்த சந்துரு? :icon_idea:

கேள்வின் நாயகம்தான்..........மாப்பு :lol::D:lol:

கேள்வின் நாயகம்தான்..........மாப்பு :unsure::blink::unsure:

:unsure::unsure::unsure::o

சரி மாப்பிளை ரி.வி.ஐ கனேடியத் தமிழர்களிற்கு ஆற்றிவரும் நீங்கள் அறிந்த அந்த மிகச்சிறந்த சேவைகள் எவையென கொஞ்சம் சொல்லுங்கள். (எனக்குத் தெரிந்தது ஒன்றுதான். பாலா அண்ணையின் இறுதி நிகழ்வை நேரஞ்சல் செய்தமை)

ரீ.வீ.ஐ இணையத் தளத்திற்கு சென்று அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை மேலோட்டமாகப் பார்த்தேன். ஒரு சில தாயகம் சம்மந்தமான நிகழ்ச்சிகளைத் தவிர கூடுதலாக இந்திய சினிமா, சின்னத்திரை காட்சிகளே தொலைக்காட்சியெங்கனும் வியாபித்துள்ளது. நீங்கள் கூறும் கருத்திலும் நியாயம் உள்ளது போல் இருக்கின்றது!

Edited by மாப்பிளை

ஒரு தொலைகாட்சியை மாத்திரம் இங்கு விமர்சனம் செய்வது பொருத்தமாக இருக்காது. தமிழ் விசனுக்கு எதிர்புறமாக கடை போட்டிருக்கும் கனடா நாட்டிலுள்ள தமிழ் வன் எனப்படும் தொலைக் காட்சி இணையத்தினுள்ளும் சென்று அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை மேலோட்டமாகப் பார்த்தேன். நம்மட ஆட்கள் எல்லாம் ஒரே அச்சில் வார்த்த சிலைகள் போலத்தான் உள்ளார்கள்.

ஒரு தொலைகாட்சியை மாத்திரம் இங்கு விமர்சனம் செய்வது பொருத்தமாக இருக்காது. தமிழ் விசனுக்கும், தமிழ் வன்னிற்கும் எதிர்புறமாக கடை போட்டிருக்கும் கனடா நாட்டிலுள்ள ஏ.ரி.என் - ஜெயா ரீ.வி எனப்படும் தொலைக் காட்சி இணையத்தினுள்ளும் சென்று அவர்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை மேலோட்டமாகப் பார்த்தேன். இங்கு கழிவுகள் தமிழ் மக்களின் தலையில் இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகவே கொட்டப்படுகின்றன. யப்பா! இணையத்திற்கூடாக இதுகளை பார்க்கும் போதே நமக்கு தலையைச் சுத்துது. நம்மட சனங்கள் கனடா நாட்டில இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி வாழுதுகளோ தெரியாது! கடவுள் காக்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.