Jump to content

ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6


Recommended Posts

பதியப்பட்டது

ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6

 

எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 
ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6
 
பீஜிங்:
 
எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் இன்று துவங்கிய முதல் பிளாஷ் விற்பனையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு நிமிடத்திலேயே விற்று தீர்ந்தது. முழுமையாக எத்தனை சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் வழங்கப்படவில்லை. எனினும் நோக்கியா 6 ஸ்மார்ட்போனினை வாங்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். 
 
நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D கொரில்லா கிளாஸ்,  குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 
 
6000 சீரிஸ் அலுமினியம் யுனிபாடி வடிவமைப்பு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டனுடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/19214525/1063123/Nokia-6-sold-out-in-a-minute-on-launch-day.vpf

  • 2 weeks later...
Posted

விற்பனையில் அசத்தும் நோக்கியா 6... நிறை குறைகள் என்னென்ன? #GadgetScan #Nokia6

நோக்கியா 6

ந்திரன் - 2, பாகுபலி - 2...இந்த ரெண்டுல, எதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கு எனக் கேட்டால்,  நோக்கியா - 2 மேலதான் என்கிறார்கள் டெக்கீஸ். அப்படி ஒரு ரீ-என்ட்ரி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் நோக்கியா ரசிகர்கள். அவர்களை இந்த முறை ஏமாற்றவில்லை நோக்கியா. பிப்ரவரியில் நடைபெறவிருந்த MWC 2017- ல் மீண்டும் மொபைல் சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி இப்பொழுதே ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது. நோக்கியா தனது, நோக்கியா 6 என்ற ஸ்மார்ட்போனை கடந்த 13- ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்தது.

முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 5 லட்சத்தை தொட்ட முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, அடுத்த சில நாட்களில் 1 மில்லியனை தாண்டியது.19- ம் தேதி முதல் விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்தில், அனைத்து போன்களும் விற்றுத் தீர்ந்தன..ஒரு நிமிடத்தில் 1 லட்சம் போன்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது இந்த போன். 

நோக்கியா 6

இந்த வாரம் பிலிப்பைன்ஸில் விற்பனையைத் தொடங்கிய நோக்கியா விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும். நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், நீண்ட காலத்திற்கு பிறகு வெளியாகும் நோக்கியா மொபைல் என இதற்கு பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது தவிர வேறு வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன? நோக்கியா 6-ன் நிறை குறைகள் என்ன?

1. 5.5 இன்ஞ்  IPS FHD (1080 x 1920)  டிஸ்ப்ளே.

2. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.

3. 64 - பிட் ஸ்நாப்டிராகன் 430 MSM8937 ஆக்டாகோர் பிராஸசர்.

4. 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி இன்டர்னல் மெமரி.

5. மெமரி கார்டு மூலமாக மெமரியை 128 ஜி.பி வரை அதிகரித்து கொள்ளும் வசதி.

6. 16 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்புற கேமராவைக் கொண்டுள்ளது.

நோக்கியா

7. டூயல் சிம் மற்றும் 4G LTE வசதி இருக்கிறது.

8. ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்.

9. 3,000 mAh திறன் கொண்ட பேட்டரி.

10. ஆனால் USB 3.0 TYPE C ,NFC, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் மிஸ்ஸிங்.

11. நோக்கியாவின் அடையாளமான "இணைந்த கைகளை" சிறிய மாற்றத்தோடு அப்படியே இதிலும் பயன்படுத்துகிறது.

12. பழைய நோக்கியா ரிங்டோன் மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

நோக்கியா

13. நோக்கியாவின் கட்டுமான தரம் இதிலும் அப்படியே இருக்கிறது. வால்நட்களை நோக்கியா 6 போன் மூலம் உடைத்து சாப்பிடும் வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரல்.

இதன் இந்திய விலையை இன்னும் நோக்கியா அறிவிக்கவில்லை. ரூ 15000-18000 இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது,

முதல் போன் என்றாலும், ரசிகர்களை ஏமாற்றவில்லை நோக்கியா. தனது மொபைல் சந்தையை மீண்டும் பிடிக்க, முழு உத்வேகத்துடனேயே களம் இறங்கியுள்ளது. அடுத்த மாதம் 26- ம் தேதி பல ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது நோக்கியா.. அதில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான ஒரு மொபைலும் அடக்கம். அதிக நிறைகள் இருந்து, சில குறைகள் இருந்தாலும் இப்பொழுது அனைவரும் கூறுவது ஒன்றுதான் "வெல்கம் பேக் நோக்கியா".

 

http://www.vikatan.com/news/information-technology/79224-nokia-6-review.art

  • 4 weeks later...
Posted

நோக்கியா அதிரடி ஆரம்பம்: நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 அறிமுகம்

பதிவு: பிப்ரவரி 26, 2017 23:32

 
 

அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக நோக்கியா நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்ரோன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 
 
 
 
நோக்கியா அதிரடி ஆரம்பம்: நோக்கியா 3310, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 அறிமுகம்
 
பார்சிலோனா:
 
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நாளை முதல் துவங்க இருந்தாலும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இன்றே அறிமுக விழாக்களை நடத்த துவங்கியுள்ளன. பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா அறிமுக விழா ஏற்கனவே அறிவித்ததை போன்று நடத்தப்பட்டது. 
 
நீண்ட இடைவெளிக்கு பின் தொழில்நுட்ப சந்தையில் கால் பதிக்கும் நோக்கியாவின் ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. பின்லாந்தை சேர்ந்த எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
நோக்கியா 3310:
 
909C9B39-BD01-4BD3-90CF-6B277933AF77_L_s
 
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஏற்கனவே சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நோக்கியா 3310 பீச்சர்போனினையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்படுத்தல்களுடன் காட்சியளிக்கும் நோக்கியா 3310 நான்கு கவர்ச்சிகர நிறங்களில் கிடைக்கிறது. ஒரு மாத கால பேட்டரி ஸ்டான்ட்பை, பழைய கிளாசிக் ஸ்நேக் கேம்  உள்ளிட்டவை கொண்டுள்ள புதிய நோக்கியா 3310 EUR49 அதாவது இந்திய மதிப்பில் ரூ.3448.62 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
புதிய மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பில் 2.4 இன்ச் வளைந்த திரை, சூரிய வெளிச்சத்திலும் திரையை துல்லியமாக பார்த்து இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய புஷ் பட்டன்கள், 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
 
இத்துடன் 2ஜி கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 16 எம்பி இன்டெர்னல் மெமரிஸ மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 3310 சிங்கில் சிம் மற்றும் டூயல் சிம் என இரண்டு வித மெமரிக்களில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
நோக்கியா 3310 உடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. அந்த வகையில் மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுவரவான நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். 
 
நோக்கியா 3:
 
7245D9BF-F534-49E8-865F-3F52D55DECE2_L_s
 
5.0 இன்ச் 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. 
 
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளே பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 2560 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நான்கு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 
 
நோக்கியா 5:
 
3B01C8BC-D566-48FD-9DAB-D9536B78F294_L_s
 
5.2 இன்ச் 1280 x 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 2ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 
 
நோக்கியா 6:
 
1FFEA1F9-E635-4665-90E3-F0A5048D0884_L_s
 
5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், மற்ற நிறங்கள் கொண்ட மாடல்களில் 3 ஜிபி ரேமும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், ஆர்ட் பிளாக் நிறம் கொண்ட மாடலில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து நிறம் கொண்ட மாடல்களிலும் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ யுஎஸ்பி, யுஎஸ்பி ஓடிஜி, ப்ளூடூத், வைபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கூகுள் டிரைவ் வசதி கொண்டுள்ள நோக்கியா 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/26233211/1070612/Nokia-3310-Reboot-Nokia-3-Nokia-5-Nokia-6-Art-Black.vpf

Posted

நோக்கியா 3310 ஸ்மார்ட்ஃபோன் விலை என்ன தெரியுமா? #Nokia3310

Nokia 3310

2017-ம் ஆண்டுக்கான மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் பார்சிலானோவில் தொடங்கியது. இந்த விழாவில் சாம்சங் நிறுவனம் எஸ் 8 மாடல் மொபைலை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நோக்கியா நிறுவனம் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3. நோக்கியா 3310  ஆகிய மாடல்களை அறிமுகம் செய்தது. இந்திய மதிப்பில்  நோக்கியா 6 விலை தோராயமாக ரூ 16,100,  நோக்கியா 5-ன் விலை ரூ 13,300 , நோக்கியா 3 மாடலின் விலை ரூ9,700, நோக்கியா 3310 மாடலின் விலை ரூ 3,400 என நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.

http://www.vikatan.com/news/information-technology/82102-nokia-introduces-3310-smartphone-at-mobile-world-congress.html

Posted

நோக்கியாவின் கிளாஸிக் 3310 இஸ் பேக்... ஸ்னேக் விளையாட தயாரா!? #Nokia3310

நோக்கியா

உலகம் முழுவதும் உள்ள மொபைல் போன் பிரியர்கள், குறிப்பாக நோக்கியாவின் பல்லாண்டுகால ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு மொபைல்கள், நோக்கியா 3, 5 மற்றும் 6 ஆகிய மூன்றும் 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகம்செய்யப்பட்டு, விற்பனையில் சாதனைபடைத்த நோக்கியா 3310-ன் மேம்படுத்தப்பட்ட மொபைல், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

பொதுவாக கிரிக்கெட் மேட்சுகளையும், சில சமயங்களில் டென்னிஸ், பாட்மின்டன் போன்ற மற்ற சில விளையாட்டுகளின் நேரலைகளையும்  மட்டுமே பார்க்கும் பலர், நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற 'மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்' என்னும் வருடாந்திர தொழில்நுட்பக் கண்காட்சியின் நேரலையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு ஒரே காரணம், நோக்கியா! ஆம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் திணறி, தனது மொபைல் பிரிவை மைக்ரோசாஃப்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்ற அதே நோக்கியா, HMD Global என்னும் நிறுவனத்தின் மூலம் மீண்டும் மொபைல் போன் சந்தைக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாம் பெரிதும் எதிர்பார்த்துவந்த நோக்கியா 3310 மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் நோக்கியா 3, 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய 4 புதிய மொபைல்கள், நேற்று அறிமுகம்செய்யப்பட்டன. 

நோக்கியா 6

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தி 23 நொடிகளில் விற்றுத்தீர்ந்த அதே நோக்கியா 6-ன் சர்வதேச மாடல், நேற்று வெளியிடப்பட்டது. 5.5 இன்ச் முழு HD திரையுடன்கூடிய கொரில்லா கிளாஸ், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரோமையும் இது கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 8  மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. இந்த மொபைலில், இரண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறந்த ஒலியைக் கேட்க முடியும். மேலும், இதன் ஒலிபெருக்கிகள் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், 3டி ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும்.  மேட் ப்ளாக், சில்வேர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 16,000 ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.

 

நோக்கியா 5

நோக்கியா 5, 5.2இன்ச் HD IPS திரையையும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் முறையே 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் பின்புற மற்றும் முன்புற கேமெராக்களைக்கொண்டுள்ளது. கூகுளின் பிரத்யேக அசிஸ்டன்ட் இதில் இயங்கும் என்பது சிறப்பு. மேட் ப்ளாக், சில்வர், டேம்பேர்ட் ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 13,000 ரூபாய் இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

 

 

நோக்கியா 3

நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல்களிலேயே குறைத்த திறன்கொண்ட மொபைல் இதுதான். பாலிகார்போனேட் மற்றும் அலுமினியத்திலான கட்டமைப்புடன்கூடிய  5இன்ச் திரையையும் மீடியாடேக் 6737 ப்ராசசர் உடன் 2ஜிபி ரேம், 16ஜிபி ரோம் மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற மற்றும் பின்புற  கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் விலை, தோராயமாக 9,500 ரூபாய்  இருக்குமென்று கருதப்படுகிறது.

 

 

நோக்கியா 3310

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த, 16 வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகி கோடிக்கணக்காக எண்ணிக்கையில் விற்பனையான, உலகின் பிரபலமான மொபைல் நோக்கியா 3310 மீண்டும் பல்வேறு புதிய வசதிகளுடன் 22 மணிநேர டாக்டைம் மற்றும் ஒரு மாதத்துக்கு ஸ்டாண்ட்-பையில் இருக்கும் பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. 2.4இன்ச் வண்ணத் திரையுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இது, 16 MB நினைவகத்தையும் மற்றும் 2MP கேமெராவையும் கொண்டுள்ளது. மேலும் பழைய நோக்கியா ரிங்டோனும், ஸ்னேக் கேமும் இதில் உள்ளன. வார்ம் ரெட், எல்லோ, டார்க் ப்ளூ மற்றும் கிரே ஆகிய நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இதன் விலை, தோராயமாக 3,500 ரூபாய்  இருக்குமென்று கருதப்படுகிறது.

 

 

நோக்கியா 6,5 மற்றும் 3 ஆகிய மூன்று மொபைல்களும் சமீபத்திய ஆண்ட்ராய்டு பதிப்பான 7.1.1 நௌகட்டில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. நோக்கியா 6 மற்றும் 5,  3000 mAh பாட்டரியையும், நோக்கியா 3,  2650 mAh பாட்டரியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த நான்கு மொபைல்களும் இரண்டாவது காலாண்டில் அதாவது ஏப்ரல்-ஜூன் மாதத்துக்குள் உலகம் முழுவதும் விற்பனைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய நிகழ்ச்சியில்... நோக்கியா, தான் உருவாக்கிய உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தின் முன்னோட்டத்தையும் அதன் வருங்கால இலக்குகளையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/information-technology/82122-nokia-is-back-with-classic-3310-model.html

  • 2 weeks later...
Posted

நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

 

 
 

நோக்கியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் தகவல்களும் கசிந்துள்ளது.

 
 
 
 
நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்
 
எல்சிங்கி:
 
அனைவரும் எதிர்பார்த்தை போன்று எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகம் செய்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் நோக்கியாவின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பீச்சர் போனான 3310 மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 
 
பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா பீச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதே விழாவில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. 
 
EDEE00F6-A1DE-43CF-85C3-0DE68C4E58CE_L_s
 
இந்நிலையில் தற்சமயம் கிடைத்துள்ள புதிய தகவல்களில் இரண்டு வித அளவுகளில் நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.   
 
சீனாவில் இருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்களில் 4ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என இரு வித மெமரி கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இவை ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இவற்றில் யுனிபாடி மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும் இதன் டிஸ்ப்ளே அளவு குறித்து எவ்வித தகவலும் இல்லை.
 
புகைப்படங்களை எடுக்க 23 எம்பி பிரைமரி கேமராவும், இரு மாடல்களில் ஒன்றில் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை சிறிய மாடல் CNY 4000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,600, பெரிய மாடல் CNY 4500 அதாவது இந்திய மதிப்பில் ரூ.43,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/08183443/1072591/Nokia-Flagship-Smartphone-With-Snapdragon-835-SoC.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.